26/05/2018

வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்...


அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில்  சேர்த்துக் கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.

இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அதே போல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து,  செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில்  எரிச்சல் குறைந்து விடும்.

அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை  மற்றும் வழுவழுப்பு தன்மை  குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது...

தேடப்படும் குற்றவாளி பாஜக எஸ்.வி. சேகரை பாதுகாக்கும் காவல்துறை...


மாவீரன் காடுவெட்டி குரு மறைவு - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் செய்தி...


நான் பெற்றெடுக்காத பிள்ளை மாவீரன் குரு மறைந்தான்... என் வாழ்வின் பெருஞ்சோகம்...

நான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையும், வன்னியர் சங்கத்தின் தலைவருமான மாவீரன் குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் மாவீரன் குருவின் மறைவு தான்.

எனக்கும், மாவீரன் குருவுக்கும் இடையிலான உறவுக்கு வயது 35 ஆண்டுகளுக்கும் அதிகமாகும்.   சமூக நீதிப் போராட்டத்தில் எனக்கு துணை நின்ற தளபதிகளில் முக்கியமானவர் மாவீரன் குரு. அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை செய்து விட்டு தான் அடுத்த பணிக்கு செய்வார். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் மாவீரன் குரு. அதேபோல் மாவீரன் குரு மீது நான் கொண்டிருந்த அன்பும், அக்கறையும் ஒருநாளும் குறைந்ததில்லை. குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும் விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது.

 மாவீரன் குருவின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக களமிறங்கி போராடுவது என பல்வேறு சாதனைகளுக்கு மாவீரன் குரு சொந்தக்காரர் ஆவார். அவரது பெருமைகளை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதற்கான தெம்பும், மனநிலையும் எனக்கு இல்லை. நான் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன்.

மாவீரன் குருவுக்கு கடந்த 4 ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களாக அவர் ‘நுரையீரல் காற்றுப்பை திசுக்கள் பாதிப்பு நோயால்’ (Interstitial Lung Disease)பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 46 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட அவை உடனடியாக சரி செய்யப்பட்டன. மாவீரன் குருவுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிப்பதற்காக நானும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகளை பெற்று, அதன் அடிப்படையில் மாவீரன் குருவுக்கு தொடர்ந்து தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

மாவீரன் குருவுக்கு தொடர்ந்து மருத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் தீவிர மருத்துவம் அளித்து மாவீரன் குருவைக் காப்பாற்றினார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் இன்று இரவு 7.45 மணி அளவில்  மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர மருத்துவம் அளித்தனர். ஆனாலும் பயனின்றி இன்று இரவு 8.25 மணிக்கு  மாவீரன் குரு காலமானார். எனது வாழ்வில் இன்று வரை சந்திக்காத, தாங்க முடியாத மிகப்பெரிய துயரத்தை நான் இப்போது சந்தித்திருக்கிறேன்.

மிகப்பெரிய அதிர்ச்சி, வேதனை, துயரம் ஆகியவற்றால் தாக்கப்பட்டு, என்னை நானே தேற்றிக் கொள்ளவும் சமாதானப்படுத்திக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் போது மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்பது தெரியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

தூத்துக்குடி மக்களை பயமுறுத்தும் மக்கள் விரோத துறை எனும் காவல்துறை...


தமிழக மக்களின் முதல் விரோதியே காவல்துறை தான்...


தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டங்கள் வலுப்பெறும் போதும் அது காவல்துறை அடக்குமுறையால் மிகவும் கொடூரமாக அடக்கப்படுகிறது...

மக்களை தொடர்ந்து காவல்துறை பயத்தில் வைத்திருக்கவே விரும்புகிறது. ஆனால் காவல்துறையை கண்டு பயப்படவேண்டிய ஊழல்வாதிகள் எந்த பயமும் இல்லாமல் சுற்றுகிறார்கள். ஆனால் அதற்காக நாம் நம்பிக்கை இழந்து விட முடியுமா?

மக்களின் பாதுகாப்புக்காக மக்களின் வரிப்பணத்தில் இயங்குவது தான் காவல்துறை. நமக்காக வேலை செய்யும் காவல்துறை பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும். காவல்துறை எவ்வாறு செயல்படுகிறது. காவல்துறையில் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? இவற்றை எல்லாம் மிகவும் எளிதாக மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் அறப்போர் இயக்கம் ஈடுபட்டு வருகிறது. நீங்களும் இதை அறிந்து கொள்ள விரும்பினால் வருகிற சனிக்கிழமை மே 26 அன்று மாலை 5 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் MSV Hall, 30 பாப்பாத்தி அம்மாள் தெருவில் நடைபெற இருக்கும் Know Your Rights நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். சாமியார் மடம் என்ற இடத்தின் அருகே இந்த அரங்கம் அமைந்துள்ளது. விவரங்களுக்கு 7200020099 அழைக்கவும்.

Join us to learn about Tamilnadu police and how to approach them as public.
KYR | Kodambakkam | May 26th | Saturday | 5 PM Contact - 72000 20099

அனுமதி இலவசம்
நன்றி அறப்போர் இயக்கம்...

அணு ஆயுதக் கூடத்தை வெடி வைத்து தகர்த்த வடகொரியா...


பாஜக - அதிமுக - காவல்துறை இனைந்து திட்டமிட்டு செய்யும் தமிழினப் படுகொலை - தமிழ்தாசன்...


காலையில் நாம் சொன்னது தான் நமக்கு வேறு வீடியோவை பார்க்க வைத்து விட்டு இவர்கள் தனியாக நரவேட்டை ஆடியிருக்கிறார்கள்...


போராட்டத்தின் போது, முன்னனி தோழர்கள் ஒவ்வொருவரையும் தேடிப் போய் அருகில் இருந்து காவல்த்துறை திட்டமிட்டு பட்டியலிட்டு சுட்டத் தள்ளி இருக்கிறது. ஆனால் எந்த தனிநபரையும் குறிவைக்காமல், கூட்டத்தை நோக்கி தன்னிச்சையாக சுட்டதை போன்றும், அதில் விபத்தாக தமிழரசன், ஜெயராமன், வினிதா உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க மஞ்சு டீசார்ட் போட்டவர் சுட்டார் என ஆளும் வர்க்கம் ஊடகத்தின் மூலம் பரப்புகிறது. உண்மை என்னவெனில் போராட்டத்தை முன்னின்று அறவழியில் ஒருக்கிணைத்த ஒவ்வொருவரையும் தேடிப் போய், திட்டமிட்டு அருகில் நின்று சுட்டு கொன்று இருக்கிறது கார்பரேட் அரசின் காவல்துறை. கொல்லபட்ட தோழர்கள் ஏதோ கூட்டத்தை கலைக்க நடந்த துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை. இது பச்சை படுகொலை என்பதற்கான ஒளிப்பட ஆதார்ங்களை பாரீர்...

சமூக விரோதி இபிஎஸ் - ஓபிஎஸ்...


பத்தாவது பரீட்சை எழுதின புள்ள சமூக விரோதியா?

ஊடுருவின சமூக விரோதில ஒருத்தன காட்டு பாப்போம்?

உன்னைய விட பெரிய சமூக விரோதி இனிமே பொறந்துதான் வரணும்...

எப்போதும் போல் துரோகத்தால் நாம் வீழ்த்தப்படுகிறோம் என்பது மட்டுமே உண்மை...


சென்னையின் உண்மையான வாழ்வாதாரங்கள் என்றைக்கோ அழிக்கப்பட்டு, பொய்யான சொகுசான வாழ்வாதாரம் கட்டமைக்கப்பட்டு விட்டது..


சென்னையில் சிலர் போராடினாலும், மீதி பலரை வைத்து அந்த சிலரின் முயற்சியை தோற்கடித்து விடுவார்கள்..

சென்னை ஒருபோதும் யோசிக்க கூடாது என்பதில் அதிகார வர்க்கம் தெளிவாக இருக்கிறது..

ஏனெனில் ஒருமுறை சல்லிக்கட்டில் யோசித்ததுக்கே, அதிகார வர்க்கம் அடைந்த இழப்புகள் மிகப்பெரியது..

அது இன்னொரு முறை நிகழவிட மாட்டார்கள்..

கடைசிவரை சென்னை நவீனகால அடிமைகளின் கூட்டமாக தான் இருக்கும்..

இந்த கருத்து இன்றைக்கு புரியாது, தூத்துக்குடி போன்று வாழ்வாதார பிரச்சனை சென்னையின் கடைகோடி விழுப்புரத்தில் நடக்கும் போது சென்னை மக்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...

மக்கள் விரோத காவல்துறையை ஆதரிக்கப் போகிறீர்களா.. அல்லது அவர்களை குடும்பத்தோடு தனிமைப் படுத்தப் போகிறீர்களா...?


தேசப்பற்று கொண்ட இந்தியர்களை...


உலக அரங்கில் இந்தியா ரூபாயின் மதிப்பையும், இந்திய பொருளாதாரத்தையும் உங்கள் ஹிந்திய அரசாங்கம் சீரழித்துக்கொண்டு இருக்கிறது..

இதற்கு உங்கள் பதில் என்ன

Uncle-Indians..?

புரியவில்லையா..?

மாமா-ஹிந்தியர்களை...

ஸ்டெர்லைட் மூடல் என்பது கண்துடைப்பே...


பல்லவதேசத்து வானிலையில் மாற்றம்...


I found unusual cloud layer in the madras sky.. தென்மேற்குபருவமழை துவங்குவதின் அறிகுறிகள்...

ஆகவே வெயிலை பார்த்து அலரும் சென்னை சுகவாசிகளே, இந்த வருடம் அந்த அளவிற்கு வெயில் இல்லை..

24 மணிநேரத்தில் அல்லது சில நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு தெரிகிறது

தயவுசெய்து சனி ஞாயிறில் முடங்காமல் நம் உறவுகள் படுகொலை செய்யபடுவதை தடுத்து நிறுத்த பொது இடங்களில் நண்பர்களுடன் ஆங்கங்கே கூடுங்கள் அமைதியாக...

மறதி தேசிய வியாதி...


மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டி....


சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்...

மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டியை சங்ககாலத்தில் குழந்தைகள் நடைபயில பயன்படுத்தினர்.

'நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,

பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும் '
(பட்டினப் பாலை 20-25)

தச்சச் சிறார் நச்சப் புனைந்த
ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர்
(பெரும்பாணாற்றுப்படை -248-249)

என்ற பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. மரத்தை மூலப்பொருளாகக் கொண்டு கைவினைப்பொருட்கள் தயாரிப்பவர்களின் பிள்ளைகளும் விரும்பும்படியாக செய்யப்பட்ட நல்ல சிறுதேர்களை உருட்டித் திரிந்தனர்.

இப்படியான நடைவண்டிகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலுள்ள தமிழ்மக்களின் குழந்தைகள் நடைபயிலும் போது பாவிபத்ததை நானா பார்த்திருக்கின்றேன்.

இப்போது தமிழ்மக்களின் பாவனையிலிருந்து அருகிவருவதாகவே தோன்றுகின்றது. இந்நடை வண்டியானது சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டது.

இதனையே மக்கள் மீளவும் பாவித்தால் ஒருசிலருக்கு தொழிலாகவும், நாம்வாழும் பூமி சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்பட்த்தாது குழந்தைகளுக்கு கொடுத்து அழகுபாருங்கள்...

டிடிவி. தினகரனை நம்பி ஒரு கூட்டம்...


எடப்பாடியும், பன்னீர்செல்வம் எல்லாம் ஜோக்கர்கள் இல்லை...


இனத்தை அழிக்க வந்த இன துரோகிகள். தண்டனை இல்லாமல் இந்த மண்ணில் வாழ அனுமதிக்க கூடாது. கொள்ளையடித்தது அனைத்தும் பிடுங்கி எடுக்க வேண்டும்..

இவர்கள் ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் சவப்பெட்டிற்கு ஆணி அடிக்கப்படும்...

இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் இறுதி பகுதி...


இப்படி மாற்றப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பும் அதற்கான பொருளுதவியும் மார்க்சுக்கு அளிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வேலையில் மார்க்சுக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர் அடிமை வியாபாரம் செய்து பெரும் புள்ளியான Jean Lafitte-Laflinne.

இந்த கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் செய்ததெல்லாம் நவீன இலுமினாட்டி குழுவைத் தோற்றுவித்த Adam Weishaupt மற்றும் Clinton Roosevelt ஆகியோருடைய புதிய உலக அதிகாரத்திற்கான திட்டத்தை பாட்டாளி வர்க போராட்டம் என்கிற போர்வையில் விரிவுப்படுத்தியது தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வகையில் இலுமினாட்டியின் கொள்கையான புதிய உலக அதிகாரத்தை அடிப்படையாக கொண்ட சோசலிசக் கொள்கையை வளர்த்தெடுத்த Francois Noel Babeuf (1760-1797) - யின் கொள்கைகளையும் தன்னுடைய அறிக்கையில் மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார்.

இதுவே கம்யூனிசமும் சோசலிசமும் இலுமினாட்டிகளின் மறைமுக குறியீடுகளாகப் மாற்றப்பட்ட விதம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கு அடுத்து வருவது மார்க்ஸ் குறித்த தனிப்பட்ட விவரிப்புகள்.

இவைகளை நிச்சயமாக எந்த ஒரு கம்யூனிஸ்ட் தோழரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

அதிலும் தமிழர்களைப் போன்ற தலைமை பிம்ப வழிபாடு கொண்ட தோழர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்..

இருந்தாலும் மாற்று கருத்தையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே அவருடைய இரகசிய மறுபக்கம் என்று குற்றம் சாட்டப்படும் விசயத்தைப் பார்க்கப் போகிறோம்.

இனி நீங்கள் படிக்கப்போவது உங்களுக்கு சிரிப்பைக் கூட வரவழைக்கலாம்..

மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்த எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது.

மார்க்சு குறித்த அனைத்து வாழ்க்கை வரலாற்று புத்தகங்களும் அடிப்படையாக சொல்லும் விசயம் அவர் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தார் என்பதும் அவருடைய குடும்ப பொருளாதார தேவைகளை அவருடைய நெருங்கிய நண்பர் ஏங்கல்சே கவனித்துக் கொண்டார் என்பதும்.

ஆனால் இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள் அது திட்டமிட்டே கட்டமைக்கப்பட்ட பொய் என்கின்றன..

மார்க்சுக்கு எந்த வகையிலும் பொருளாதார இக்கட்டு ஏற்படாமல் இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால் அவர் ஆடம்பரமாக வாழ்வதற்கு பொருளாதார உதவிகள் செய்தது Nathan Rothschild (ஜெர்மனியின் பாகாசுர வங்கி குழுமத்தின் தலைவர்) என்று குற்றம் சாட்டுகிறார் மார்க்சின் நெருங்கிய சகாவாக இருந்து பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்ற Mikhail Bakunin தன்னுடைய புத்தகமான Polemique contre les Juifs (Polemic Against the Jews)-ல். சாத்தானிய வழிபாட்டு கூறுகளான கட்டுக்கடங்காத குடியும், ‘இன்னப்பிர’ சமாச்சாரங்களும் அவரிடம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மார்க்சின் கம்யூனிச காம்ரேட் சகாக்களில் ஒருவரும் சாத்தானிய வழிபாட்டாளருமான Giuseppe Mazzini அவரைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார்…..

"His heart bursts rather with hatred than with love towards men……. a destructive spirit.”

இந்தவரிசையில் அடுத்து வருபவர் அவருடைய உதவியாளர் Karl Heinzen.

(சந்தேகம், சாப்பாட்டிற்கே மார்க்சுக்கு எப்படி உதவியாளரை வைத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுப்படியானது)

Karl Heinzen தன்னுடைய புத்தகத்தில் மார்க்ஸ் கர்வம் பிடித்தவர் என்றும் தன்னுடைய பேச்சின் மூலம் பிறரிடம் காரியம் சாதித்துக் கொள்ளக் கூடியவர் என்றும் பிறர்தன் மேல் வைக்கும் நம்பிக்கையை வெகு அலட்சியப்படுத்துவார் என்றும் தனக்கு ஆகாதவர்களை ‘அழித்து விடுவேன்’ என்று மிரட்டும் வழக்கம் உடையவர் என்றும் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளவே மாட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

அவருடைய ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகள் குறித்து அவருடைய சர்வாதிகார போக்கு குறித்தும் யார் விமர்சனம் வைத்தாலும் அவர்களை தன்னுடைய எழுத்துக்களில் வகை தொகையின்றி தாக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளானவர்களில் முக்கியமானவர்களாக காட்டப்படுவது Dr Ludwig Kugelmann மற்றும் Bakunin.

மக்கள் சுரண்டப்படுவதை எதிர்த்த அவரே அவரை சுற்றி இருந்தவர்களை தன்னுடைய பேச்சாற்றளால் சுரண்டினார் என்றும் சொல்லப்படுகிறது.

போதுமடா சாமி என்று நிருத்திவிட்டேன்.

இவைகள் முதலாளித்துவத்தின் சதி வேலையா அல்லது யூத எதிர்ப்பு உள் குத்தா..

கம்யூனிசத்தின் இறுதி வெற்றிகளும் சொல்லி வைத்தார் போல சர்வாதிகாரத்தின் படிகளையே காட்டும் வரலாற்றின் உதாரணங்களையும் உதாசீணப் படுத்துவதற்கில்லை என்பது மட்டுமே இப்போதைக்கு எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் சமாதானம்...

தற்போதைய நிலவரம் தூத்துக்குடி...


தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழப்பு...

போராட்டத்தில் 19 பேர் படுகாயம், 83 பேர் லேசான காயமடைந்துள்ளனர்...

நம்ப முடியாத உண்மைகள்...


டெஸ்லா என்ற அறிவியலாளரின் மறைக்கப்பட்ட பக்கத்தை Nolanன் The PRESTIGE படத்தில் பாருங்கள் தெரியும்...

சீத்தாப்பழம்...


சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது..

சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும்.

இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்..

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


1960ல் சோமாலியா மிகப்பெரிய விவசாய நாடு என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


விவசாய அழிவை வேடிக்கை பார்த்ததின் விளைவை இன்று எதிர்கொள்கிறது.

மீத்தேன் திட்டத்தை நாம் அனுமத்தோம் என்றால் நமக்கு சோறு போடும் விவசாயம் அழிந்து விடும்.

நாளை நம் பிள்ளைகளின் நிலை
இப்படி இருக்க வேண்டுமா?

விவசாயம் காப்போம்.. மீத்தேன் திட்டத்தை விரட்டி அடிப்போம்...

நம்ப முடியாத உண்மைகள்...


சென்னை தலைமை அலுவலகத்தில் மக்கள் பாதை அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம் ஸ்டெர்லைட் ஆலை மூடவேண்டியும் துணை இராணுவம் விலகவேண்டும்...


காரணகுரு, காரியகுரு...


'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.

காரியகுரு...

காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)..

காரணகுரு...

எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.

அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.

காலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும் போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ள வேண்டும்...

இது முழுமையான தற்சார்பு இல்லை...


ஆனால் அத்தியாவசியமான அடிப்படையான தற்சார்பு..

இதன்மூலம் அதிகார வர்க்கம் நம் மீது செலுத்தும் அடக்குமுறையை ஓரளவு கட்டுப்படுத்தலாம்...

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 14...

சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனம் 14-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 14-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் மிக, மிக முக்கியத்துவம் பெற்றவை.


14-ம் தீர்க்க தரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள இருப்பது “வரும் ஜுன் மாதம்“ மிகவும் முக்கியத்துவம் பெற்ற மாதம் என்றும், அந்த மாதத்தில் தமிழகத்தில் பல மழை வெள்ளங்கள் தொடர்ச்சியாக உருவாகி பலத்த சேதங்களை ஏற்படுத்த உள்ளன என்றும், தமிழகத்தின் நிலை வெள்ளக்காடாக மாறப் போவதாக 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.


தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றும் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும் 2018 ஜுன் மாதம் முதல் 2018 டிசம்பர் மாதம் வரை பல அழிவுச் சம்பவங்கள் உலக நாடுகள் முழுவதும் நடைபெற உள்ளதாக 14-ம் தீர்க்க தரிசனம் இங்கே தனது குறிப்பை பதிவு செய்கிறது.

இந்த காலக் கட்டத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டு உள்ள “ஆகாயத்தில் ஒரு ஒளி“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெற்ற 32-ம் தீர்க்க தரிசனத்தில் இடம்பெற்ற பல்வேறு குறிப்புகள் நிகழும் காலமாக இக்காலக் கட்டம் இருக்கும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.



குரங்கணி மலை தீவிபத்து பற்றிய ஒரு செய்தி தற்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், இதே போன்ற மற்றொரு விபத்து நடக்க இருப்பதாக 14-ம் தீர்க்கதரிசனம் இங்கே எச்சரிக்கை ஒன்றை பதிவு செய்கிறது. பசுமை நிறைந்த ஒரு மலையில் இச்சம்பவம் நடக்க இருப்பதாகவும், இதனை மக்கள் தவிர்க்க முடியும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது. அந்த பசுமையான மலையில் பல உயிர்வாழ் கொடிய விலங்குகள் இடம் பெற்றிருக்கும் என்பதே அதன் குறிப்பாகும்.

மாங்கனி நகரமான சேலம் தனது இறையாண்மை தன்மைகளை மக்களிடையே வெளிப்படுத்திட காத்து உள்ளதாகவும், இனி சேலம் மாநகரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார கிராமங்கள் தோறும் இறை அதிசயங்கள் அதிகமாக நடக்க இருப்பதாக 14-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.




இமயமலையின் தென்பகுதி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கே பூமி சார்ந்த புவி அதிர்வுகள் அதிகம் நடைபெற இருப்பதாகவும், இதனால் இந்தியாவின் வட மாநிலங்களுக்கு இது போதாத காலமாக இருக்கும் என 14-ம் தீர்க்கதரிசனம் இங்கே புவி சார்ந்த ஒரு குறிப்பை பதிவு செய்கிறது.


தென் கைலாயம் என்று அழைக்கப்படுகின்ற சதுரகிரியில் ஒரு மகா சோகச் சம்பவம் ஒன்று நடைபெற போவதாக 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்தியினை இங்கே பதிவு செய்கிறது. மழைக் காலத்தில் மக்கள் பாதுகாப்பான பயணங்களை திட்டமிட்டபடி உரிய ஆட்கள் உதவியுடன் மட்டுமே செல்ல வேண்டும் என ஒரு குறிப்பை 14-ம் தீர்க்கதரிசனம் மெய்பட எடுத்துக் கூறுகிறது.


மத்திய சென்னை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்பது மிக, மிக முக்கியத்துவம் பெற்ற செய்தி குறிப்பு என்றும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்பட வேண்டும் என 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்தியினை இங்கே பதிவு செய்கிறது.


நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காவேரிபட்டணம், முட்டம் போன்ற பகுதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதிகளாகும். இங்கே பல சோகச் சம்பவங்கள் நடக்க இருப்பதாக 14-ம் தீர்க்கதரிசனம் எச்சரிக்கை செய்கிறது.


பார் போற்றும் மாதவனின் அற்புத செயல் ஒன்று இப்பூமியின் மீது இறங்கிட உள்ளது என்றும், இறைவனின் வருகையை உறுதி செய்வதாக இச்சம்பவம்  அமையும் என்றும், இது நடக்கும் தினம் ஒரு அமாவாசை தினம் என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

உலகில் கடல் கடந்த தேசங்களில் மனித குலத்தின் பொக்கிஷங்களான கலைகளை இந்த உலகின் கடைகோடிக்கும் கொண்டுச் சென்ற மக்கள் தமிழர்களே ஆவார்கள். அந்த வகையில் இந்திய தேசத்தில் ஒரு தொல்பொருள் ஆய்வில் இதன் உண்மை தெரிய வர உள்ளதாக 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை மெய்பட எடுத்துக் கூறுகிறது.

இறைவன் இடம்பெறும் அந்த இறுதி சபையை இனி உலக மக்கள் தேடப் போகிறார்கள் என்றும், அவ்வாறு தேடி வரும் உலக மக்களின் கைகளில் இறைவன் இடம் பெறும் அந்த இறுதி சபையை பற்றிய பல்வேறு குறிப்புகளை வைத்திருப்பார்கள் என்று 14-ம் தீர்க்கதரிசனம் இங்கே மெய்பட எடுத்துக் கூறுகிறது.


தமிழக அரசியல் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளதாகவும், அதனை நிருபிக்கும் வகையில் தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் இருக்கும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது. அரசியல் பிண்னணி  இல்லாத ஒருவரின் ஆவேசப் பேச்சு அச்சமயத்தில் மேடை தோறும் ஒரு எழுச்சியை உண்டு பண்ணும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற ஒருவரின் வரிகள் இனி வரலாற்று வரிகளாகவும், நினைவுகளாகவும் தமிழகத்தில் மாறிடப் போவதாக 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி.யின் பிறந்த ஊரிலிருந்து ஒருவன் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து, அது சாதிக் கட்சியாக கொண்டு செல்வான் என்றும், அந்த கட்சி சில நாட்கள் தமிழகத்தில் பல கலவரங்களை ஏற்படுத்தும் என்றும், இதற்கு நடிகர் ஒருவர் துணை போவார் என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே ஆழமாக பதிவுச் செய்கிறது.



மன்னார் வளைகுடா புயல் தற்போது உருவாகும் சூழல் ஏற்பட்டு விட்டது என்றும் இதன் கடும் தாக்குதல் பல சேதங்களை ஏற்படுத்த உள்ளதாக 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

உண்மைகள் உறங்குவதில்லை என்கிற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்ற 3,4,5-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்ற பல குறிப்புகள் தற்போது நடைபெறும் காலமாக இக்காலம் இருக்கும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


இறைவனின் இறுதிசபையின் “திருநாமம்“ இன்னும் சில நாட்களில் உலக மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றும், இச்சபையின் காரண கர்த்தாவாகிய ஒருவனின் ஆன்மாவை இனி உலக மக்கள் தமது கனவுகளிலும், தியானத்திலும், புறக்கண்களிலும் காண்பார்கள் என 14-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

இந்த உலகத்தை மறு சீரமைப்பதற்கு கொண்டு செல்ல இறைவன் ஆயத்தமாகிவிட்டார் என்றும், அவரின் திருத்தாண்டவத்தை காண தேவர்களும், சித்தர்களும் தயாராகி விட்டனர் என்றும், இதுவே இவ்வுலகம் காண உள்ள “ஊழிக்காலம்“ என்று உலக மக்கள் அறிய வேண்டும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


செல்லாத்தா, மாரியாத்தா என்று மக்களால் அழைக்கப்படுகின்ற “ஸ்ரீசமயபுர மாரியம்மனின்“ அற்புதங்களை இனி தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்களும் அறியும் காலம் இப்பொழுது என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

உலக மக்கள் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும், பண்பாளர்களாகவும், நல்லவர்களாகவும், தர்ம சிந்தனை உள்ளவர்களாகவும் அவர்கள் வாழ வேண்டுமெனில் அவர்களுக்குள் பெரும் மாற்றங்கள் வர வேண்டும். அவ்வித மாற்றங்களை மக்கள் பெற வேண்டுமெனில் “சத்திய யுகத்தினை“ பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். சத்தியம், தர்மம், நீதி இவைகளின் பெரும்பங்கு சத்திய யுகத்தில் இடம் பெறும் பிராஜாதிபதிகளையே சேரும். அத்தகைய பிரஜாதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கால கட்டமாக வரும் காலக் கட்டம் அமைய உள்ளதாக 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே ஆழமாக பதிவு செய்கிறது.


உண்மைகளின் வெளிச்சம் இந்த உலகம் முழுவதும் பரவ தொடங்கி விட்டது என்றும், அதன் தீவிரக் காலக்கட்டம் தற்போது என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

இறைவனின் வருகையானது இப்பூமியின் மீது என்பது முழுமை பெற்ற ஒரு வரலாறாக மாறிவிட்டது என்றும், அந்த வரலாற்றினை அறியும் காலமாக இக்காலம் உள்ளது என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே தெரிவிக்கின்றது.

இறைவனை காணும் முன்பு அவரின் அற்புதங்களை உணர ஆரம்பித்து விடுவோம் என்ற கூற்று மெய்பட உள்ளதாகவும், அதனை உணர்ந்து அறிய நாம் காத்திருப்போமாக.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

 இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

விழித்துக்கொள் தமிழினமே...


யார் தீவிரவாதி?


தீவிரவாதி என்பதற்கு இந்தியாவின் வரையறை என்னவென்றால்..

ஆதிக்க / ஆளும் சக்திகளின் வாதங்களை விவாதிக்காமல்.. ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்...

குறிப்பாக பார்ப்பனிய - பனியா கும்பலின் கருத்தியலுக்கு எதிராக.. இல்லாத இந்திய தேசியத்திற்கு - இந்தி(ய) இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்... தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்படுவார்.

இதில் வேடிக்கை - உண்மை என்னவென்றால்....

மக்களுக்கு எதிராக தீமை செய்பவர்கள் எல்லாம் 'போராளிகள்' என்றும்....

தம்மின மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் 'தீவிரவாதிகள்' என்றும் வகைப்படுத்தப்படுவது தான்...

சரி.... நம்மின மக்களுக்கு நல்லது செய்வது என்பது,

இந்திய அரசின் 'தீவிரவாதி' பட்டத்தை சுமந்தால் தான் முடியும் என்றால்....

இது நல்ல பேரும் பெருமையும் மிக்கது தானே...

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே..

யார் எல்லாம் தீவிரவாதி?

நான் ஒரு தீவிரவாதி...