26/05/2018

மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டி....


சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்...

மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டியை சங்ககாலத்தில் குழந்தைகள் நடைபயில பயன்படுத்தினர்.

'நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,

பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும் '
(பட்டினப் பாலை 20-25)

தச்சச் சிறார் நச்சப் புனைந்த
ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர்
(பெரும்பாணாற்றுப்படை -248-249)

என்ற பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. மரத்தை மூலப்பொருளாகக் கொண்டு கைவினைப்பொருட்கள் தயாரிப்பவர்களின் பிள்ளைகளும் விரும்பும்படியாக செய்யப்பட்ட நல்ல சிறுதேர்களை உருட்டித் திரிந்தனர்.

இப்படியான நடைவண்டிகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலுள்ள தமிழ்மக்களின் குழந்தைகள் நடைபயிலும் போது பாவிபத்ததை நானா பார்த்திருக்கின்றேன்.

இப்போது தமிழ்மக்களின் பாவனையிலிருந்து அருகிவருவதாகவே தோன்றுகின்றது. இந்நடை வண்டியானது சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டது.

இதனையே மக்கள் மீளவும் பாவித்தால் ஒருசிலருக்கு தொழிலாகவும், நாம்வாழும் பூமி சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்பட்த்தாது குழந்தைகளுக்கு கொடுத்து அழகுபாருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.