காலையில் நாம் சொன்னது தான் நமக்கு வேறு வீடியோவை பார்க்க வைத்து விட்டு இவர்கள் தனியாக நரவேட்டை ஆடியிருக்கிறார்கள்...
போராட்டத்தின் போது, முன்னனி தோழர்கள் ஒவ்வொருவரையும் தேடிப் போய் அருகில் இருந்து காவல்த்துறை திட்டமிட்டு பட்டியலிட்டு சுட்டத் தள்ளி இருக்கிறது. ஆனால் எந்த தனிநபரையும் குறிவைக்காமல், கூட்டத்தை நோக்கி தன்னிச்சையாக சுட்டதை போன்றும், அதில் விபத்தாக தமிழரசன், ஜெயராமன், வினிதா உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க மஞ்சு டீசார்ட் போட்டவர் சுட்டார் என ஆளும் வர்க்கம் ஊடகத்தின் மூலம் பரப்புகிறது. உண்மை என்னவெனில் போராட்டத்தை முன்னின்று அறவழியில் ஒருக்கிணைத்த ஒவ்வொருவரையும் தேடிப் போய், திட்டமிட்டு அருகில் நின்று சுட்டு கொன்று இருக்கிறது கார்பரேட் அரசின் காவல்துறை. கொல்லபட்ட தோழர்கள் ஏதோ கூட்டத்தை கலைக்க நடந்த துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை. இது பச்சை படுகொலை என்பதற்கான ஒளிப்பட ஆதார்ங்களை பாரீர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.