தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டங்கள் வலுப்பெறும் போதும் அது காவல்துறை அடக்குமுறையால் மிகவும் கொடூரமாக அடக்கப்படுகிறது...
மக்களை தொடர்ந்து காவல்துறை பயத்தில் வைத்திருக்கவே விரும்புகிறது. ஆனால் காவல்துறையை கண்டு பயப்படவேண்டிய ஊழல்வாதிகள் எந்த பயமும் இல்லாமல் சுற்றுகிறார்கள். ஆனால் அதற்காக நாம் நம்பிக்கை இழந்து விட முடியுமா?
மக்களின் பாதுகாப்புக்காக மக்களின் வரிப்பணத்தில் இயங்குவது தான் காவல்துறை. நமக்காக வேலை செய்யும் காவல்துறை பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும். காவல்துறை எவ்வாறு செயல்படுகிறது. காவல்துறையில் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? இவற்றை எல்லாம் மிகவும் எளிதாக மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் அறப்போர் இயக்கம் ஈடுபட்டு வருகிறது. நீங்களும் இதை அறிந்து கொள்ள விரும்பினால் வருகிற சனிக்கிழமை மே 26 அன்று மாலை 5 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் MSV Hall, 30 பாப்பாத்தி அம்மாள் தெருவில் நடைபெற இருக்கும் Know Your Rights நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். சாமியார் மடம் என்ற இடத்தின் அருகே இந்த அரங்கம் அமைந்துள்ளது. விவரங்களுக்கு 7200020099 அழைக்கவும்.
Join us to learn about Tamilnadu police and how to approach them as public.
KYR | Kodambakkam | May 26th | Saturday | 5 PM Contact - 72000 20099
அனுமதி இலவசம்
நன்றி அறப்போர் இயக்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.