22/04/2017

ஒரு வெவஸ்த்தை வேண்டாமா... அறிவுரை சொல்ல தகுதி இருக்கான்னு யோசிக்க வேண்டாமா...


பாஜக மோடியும் கையாளாகாத தனமும்...


ட்ரோபா வட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்...


சீன தொல்பொருள் ஆராய்சியாளர் ச்சூ-பு-அய் (Chu Pu Tei ) இந்த வட்ட (Dropa Stones) கல்தட்டுகளை 1937 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு குகையில் கண்டுபிடித்தார்.

மேற்படி, குகை சீன-திபெத் எல்லையில் உள்ள பயன்கரஉலா (BayanKara-Ula) என்ற சிகரத்தில் உள்ளது.

அந்த குகையில் பல சவக்குழிகள் இருந்தன. ஒவ்வொரு சவக்குழியிலும் மூன்றடி உயரமே உள்ள எழும்புக்கூடுகள் இருந்தன.

ஒவ்வொன்றின் மேலும் ஒரு அடையாளம் போல் இந்த வட்ட கல் தட்டுகள் இருந்தன.

http://goo.gl/i2O87B வட்ட தட்டில் சீரான வட்டத்துளை மையத்தில், மையத்தில் இருந்து சுழற் சுற்று கோடுகள் இருந்தன.

(பழைய இசைத் தட்டுகள் போல.)

பார்பதற்கே அவை கோடுகள் போல இருந்தன ஆனால் அவை (மைக்ரோ) மிக நுண்ணிய புரியாத குறியீட்டு எழுத்துக்கள்.

http://goo.gl/sz98Z9 இவருக்கு பின், பெய்ஜிங் தொல்லியல் அகாடமியை சேர்ந்த பேராசிரியர் சும்-உம்-நூய் (Professor Tsum Um Nui, of the Beijing Academy for Ancient Studies ) இதுபற்றிய சில விளங்கங்களை கொடுத்தார்.


இந்த எலும்பு கூடுகள் வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் பெரிய தலைகளை கொண்ட குள்ளமான அசிங்கமான தோற்றத்தினர்.

மேலும் அந்த வேற்றுகிரக வாசிகளை ட்ரோபா மலைவாழ்மக்கள் தங்கள் மூதாதையர் என நம்பியதாகவும் தெரிகிறது.

அதனாலேயே இந்த வட்டக்கல் தட்டுகள் ட்ரோபா கற்கள் என பெயரிடப்பட்டது.

ஏதோ விபத்து அல்லது ஏதேனும் காரணத்தினால் இறந்து போயிருக்கலாம் என்றும் சொன்னார்.

http://goo.gl/BdOdw4 ஆரம்பத்தில் இந்த மண்டை ஓடுகள் மனிதக் குரங்கினுடையது (ஏப் வகை) என்றே நினைத்தனர்.

http://goo.gl/SOFdqH

பின்னர், இந்த தட்டுகளின் காலங்கள் 10000 முதல் 12000 வருடங்களுக்குள் இருக்குமென கணிக்கப்பட்டது.

http://goo.gl/ikli6W

அந்த குகைசுவர்களில் பூமி, உதய சூரியன்,நிலா,நட்சத்திரங்கள் இன்னும் ஏதேதோ புரியாத குறியீடுகள் இருக்கிறதாம், ஒரு வரைபடம் போல.


வேற்று கிரக வாசிகள் பூமியில் இறங்கி இருக்க வேண்டும் என்றும் அப்போது அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டது.

இந்த வேற்று கிரக வாசிகள் இக்குகைகளில் இருந்த பழங்குடிகளை கொன்று விட்டார்கள் அதோடு அவர்கள் திரும்பி போக வாகனம் இல்லாமல் இறந்து போயிருக்கலாம்.

சுற்றியிருந்த மலைவாழ்மக்கள் அவர்களை ட்ரோப்பாக்கள் என்கின்றனர் ( கர்ண பரம்பரைக் கதைகளும் உண்டு ).

1965 ல் மேலும் 716 வட்டத்தட்டுகள் இந்த குகையில் கிடைத்ததாம்.

தட்டுகளில் கோபால்ட் மற்றும் பல உலோக கூறுகள் உள்ளன.

மின்சாரம் செலுத்தப்பட்டால், இதனுடாக கடத்தப்படுகிறது. வெவ்வேறு குறியீடுகள் ஒவ்வொரு தட்டிலும் இருப்பதால் இது ஏதேனும் சர்க்யூட்டாக இருக்குமோ ? என்ற சந்தேகமும் உள்ளது.
http://goo.gl/1yvNBt (oscillograph) ஆசிலோகிராப் கொண்டு சோதனை செய்யப்பட்டதில் ஹம்  என்ற ரிதம் மட்டுமே உணரப்பட்டது.

1965 உடன் இதைப்பற்றிய ஆராய்சிகள் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

படத்தில் காணப்படும் இந்த கற்கள் இப்போது இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அப்போதைய கால கட்டத்தில் (1938ல்) இவை அனைத்தும் ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன் பின் என்ன ஆயிற்று ? தெரியவில்லை ஆனால் இந்த நிழற்படங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

http://goo.gl/xooeaL இரும்புத்திரை நாடும், பெருஞ்சுவர் நாடும் இரகசியம் காத்தன. விடை தெரியாத மர்மங்களில் இதுவும் ஒன்று...

இலுமினாட்டி இரகசியம்...


உலக ஊடகமும் உள்ளோர் ஊடகமும் உங்களிடம் இருந்து திட்டமிட்டு மறைக்கும் உண்மைகள்...

சித்தராவது எப்படி - 30...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஆறு...

விழிப்பு நிலையின் விரிவு விளக்கம்
சுவாச ஒழுங்கிலே பெற்ற ஆற்றலை முறை படுத்துவதின் மூலம் பிடரி ஆதாரத்தில் ஆசைகளின் ஏக்கங்களின் தாக்கங்களை தணித்த அல்லது நீக்கிய நிலையில் மேலும் அந்த ஆற்றலை தலையின் உச்சி வழியாக புருவமத்தியை அடையும் போது என்ன பிரமாண்டமான மாற்றங்கள் வருகின்றன என்பதை கவனிப்போம்..

சிவனாரின் மூன்றாவது கண்ணாக கருதப்படும் இந்த புருவ மத்தி ஆதாரம் அக்னியால் ஆனது..

முதலில் விழிப்பை பற்றி சற்று ஆழமாகப் பார்ப்போம்..

புத்தி என்பது தோன்றா நிலையாகிய பேரண்ட பேரறிவிலிருந்து உதிப்பது..

மனமோ தோன்றும் நிலையாகிய தேகத்தில் இருப்பது..

புத்தி காற்றின் அம்சமாகிய 'வ' என்ற பூதம்.. மனம் நெருப்பின் அம்சமாகிய 'சி' என்ற பூதம்...

இந்த புத்தியும் அறிவும் சேர்ந்த நிலைதான் விழிப்பு நிலையான சிவ நிலை..

ஆதாவது 'சி' யும் 'வ' வும் சேர்ந்த நிலை..

இந்த சிவநிலையான விழிப்பு நிலையில் மட்டுமே ஆற்றலும் ஆக்கமும் ஒருங்கே இணைந்து சீர் நிலைக்கு அதாவது சீரான முறையான பழுது இல்லாத நிலைக்கு எதையும் அழைத்துச் செல்லும்..

வ என்ற காற்று பூதம் அறிவையும், ஆற்றலையும் வழிகாட்டும் அக குருவான ஒரு இயக்கசக்தி.. சி என்பது செயல் பட பயன் படும், மனம் என்ற ஒரு இயங்கும் சக்தி..

இயக்கும் ஒன்றும் இயங்கும் ஒன்றும் இணைந்தால் தான் எது ஒன்று செயல் படும்.. இயக்குவது இயங்க முடியாது... இயங்குவது இயக்க முடியாது..

இது தான் எல்லா சிக்கல்களுக்கும் காரணம்.. 'ச்' வும் 'வ்' வும் இணைந்தால் மட்டுமே எல்லாம் சீர் ஆகும்..

சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்றார் திருமூலர்..

புத்தியும் மனமும் இணைந்தால் மட்டுமே சீர் கெட்ட செயல்கள் தொலையும், அதாவது தீவினை மாளும் என்றார். பின்னர் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் என்றார் திருமூலர்..

ஆம் புத்தியும் மனமும் இணையும் போது நம் உயிரும் சீர் பட தொடங்கி தேவர் நிலைக்கு உயர்த்தபடுவர் என்றார்..

சரி.. இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது எதுவென்றால், புத்தியாகிய விழிப்பு நிலை தான்.. மனிதனுக்கு இயல்பாய் இருப்பது மனம்.. பெற வேண்டியது புத்திதான்.. அதனால் தான் புத்தி முக்கியமாயிற்று...

அந்த விழிப்புநிலை இல்லையேல் நெருக்கடி நிறைந்த சாலையில் சில அடி தூரம் கூட வாகனத்தை ஓட்டி செல்ல முடியாது...

புத்தியின் முக்கியத்துவத்தை கருதியே வாசி யோகப் பயிற்சி முக்கியமாக விழிப்பு நிலையை பெருக்கக் கூடிய முறையில் வடிவமைக்கப் பட்டது...

புத்தி பெருக்கத்தில் உணர்வும் பெருகி உணர்வின் கூர்மையால் எதையும் முன் கூட்டியே அறியும் திறமையால் எந்த பிரச்சனையும் முளையிலே கிள்ளி எறியக் கூடிய அறிவும் பெறுகிறோம்..

நுண் உணர்வால் நுண் அறிவு.. நுண் அறிவால் பிரச்சனையும் நுட்பமாக இருக்கும் போதே எளிதாக அதற்கு தீர்வு காணப் படுவதால் பிரச்சனையே இல்லாதது போல் தோற்றம் ஏற்படுகிறது..

எந்த செயலோடும் விழிப்பு நிலையும் தொடரவில்லையென்றால் அந்த செயல் நிலைக்காது..

தெய்வ தரிசனம் கண்ட பக்தர்கள், கடவுளை கண்டேன் கண்டேன் என்று புலம்புவார்களே தவிர, கண்டு கொண்டே இருக்கிறேன் என்று ஒருவரும் சொல்வார் இல்லை..

இதற்கு காரணம் சிவ கலப்பில் இல்லாததே காரணம்..

விழிப்பு நிலையை தொலைத்து விட்டதாலும் அதை தக்க வைக்க முடியாததாலும், இறை தரிசனமும் இழந்து விடுகிறார்கள்..

சொர்க்கத்தையும் பெற்று இழந்து விடுகிறார்கள்..

பேர் ஆற்றலையும் பெற்று பின் இழந்து மரணம் அடைந்து தானே போய் விட்டார்கள்..

விழிப்பு நிலை இல்லை என்றால் சித்தர் நிலையையும் இழந்துதான் போய் ஆக வேண்டும்...

விழிப்பு நிலை தொலைந்தால் சிவகலப்பும் பிரிந்து உடைந்து விடும்.. பின் சவம் தான்.. அதாவது அநித்தியம் தான்...

இப்படியான உயிருக்கு நாடியாக திகழும் விழிப்பு நிலை எப்படி சுழிமுனையில் மிகுந்த பெருக்கம் அடைந்து உயிர் ஆற்றல் விரிவடைகிறது என்பதை வரும் பகுதியில் பார்ப்போம்...

தமிழ்நாட்டில் உத்தமன் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டும் 12000 ஏக்கர் நிலம் உள்ளது...


டெல்லி ஜந்தர் மந்தரில் 40வது நாளாக தொடர்கிறது தமிழக விவசாயிகளின் போராட்டம்...


மனித கழிவுக்களை குடிக்கும் நூதன போராட்டத்தில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டனர்...

பணத்தை பற்றி கவலை படாததால் தான் உங்க அண்ணனை பண மோசடி வழக்கில் பணி நீக்கம் செய்தார்களோ எச்ச ராசா அவர்களே...?


மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன இயந்திரத்தை கண்டு பிடிச்சதும் அண்ணன் தான்...


மோடி ஜி... இதர் ஆவோ... சைனா கால் யூ..


நஹி... நான் பாகிஸ்த்தான்னா மட்டும் தான் பாயுவேன் வாயால. .. சைனா அது வேற டிபார்ட்மெண்ட்...

இது வேற அப்பப்ப குறுக்க வந்துகிட்டு...


நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சிறுவர்கள் குட்டிக்கர்ணம் அடித்து போராட்டம்...



விளையாட்டு பொருள் கேட்டு அடம்பிடிக்க வேண்டிய சின்னஞ்சிறு வயதில் ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என அடம்பிடித்து சிறுவர்கள் போராடும் நிலையை உருவாக்கியுள்ளது அரசு என்பது நெடுவாசல் கிராம மக்களின் குற்றச்சாட்டு...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 30...


தியானத்தால் மேம்பாடு...

ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல ஒரு எளிய பயிற்சியைப் பார்த்தோம். படிக்கும் போது மிக எளிதாகத் தோன்றினாலும் அதைச் செய்து பார்த்த பலருக்கு அது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்காது. மனம் அரைமணி நேரத்திற்காவது அமைதியாக இருப்பது பெரும்பாடாக இருந்திருக்கலாம்.

எண்ணங்களுக்கும் மூச்சிற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவ பூர்வமாக அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால் பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பல கவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும். அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம்.

அப்படியில்லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.

நாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும்.

எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

மனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும் என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.

தியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச் சாராதவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள்.

தியானப்பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும், அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள். முறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை, மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம், அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள், கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன. தியானம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப்பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.

1996 ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கை Hypertension ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார். அதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

1989 ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது) மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும், இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ, ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.

மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation. அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப் பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும் எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது.

ஆழ்மன சக்திகளுக்கு ஏற்ற அலைவரிசைகளில் நம்மை இருத்தச் செய்வதுடன் மற்றபல மன நலம் மற்றும் உடல் நலமும் தியானத்தால் மேம்படுவதால் முக்கியமான சில தியானங்கள் பற்றி அறிந்து கொள்வோமா?

மேலும் பயணிப்போம்.....

பாஜக உமாபாரதி, கல்யாண் சிங் பதவி விலக வேண்டும் - CPIM வலியுறுத்தல்...


டாஸ்மாக் கடையை திறக்க சொல்லி திருவாரூர் மாவட்ட பாஜக போராட்டம்...


தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்களின் கோபத்தை கண்ட தமிழக பாஜக என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்பதாக  ஆர்பாட்டம் ஒன்றை அறிவித்தது.

அதன்படி 18-ந்தேதி (18.04.2017) காலை 10:00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிராதான மதுக்கடைகள் முன்பாக பா.ஜ.கட்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி சார்பற்று மதுவை எதிர்ப்பவர்கள் என அத்தனை பேரையும் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய ஆர்ப்பாட்டதை நடத்தும் என்று அறச்சீற்றம் கொண்டு தமிழிசை அறிக்கை வெளியிட்டார்.

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் என்றால் கடையை சுற்றி இரும்பு தடுப்புகள்  போடப்பட்டு, காக்கிகள் குவிக்கப்பட்டு பொது மக்களை பீதியூட்டுவது போன்றவை  சமீபத்திய நடைமுறையாகும்.

ஆனால் ஏப்ரல் 18 அன்று பாஜக போராட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் அப்படிபட்ட பதட்டம் எதுவும் இல்லை.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வெள்ளக்குளம் அருகில்  உள்ள டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் வித்தியாசமான நூதனப்போராட்டமாக இருந்தது.

பாஜக -வின் மாவட்டம், ஒன்றியம் என அனைத்தும் டாஸ்மாக் கடையை நோக்கி வந்து முழக்கமிட்டனர்.

இதில் சிலர் பாரத் மாதாக்கீ ஜே என்று அவ்வபோது ஈனஸ்வரத்தில் ஊளையிட்டனர். மாவட்டம், வட்டம், சதுரம், முக்கோணங்களின் சவடால்கள் கேட்கவே நாராசமாக இருந்தது.

முற்றுகைப் போராட்டம் இருப்பதால் கடை திறக்க வேண்டாம் முற்றுகை முடிந்த பின்னால் திறந்து கொள்ளலாம் என்று கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததனால் 12:00 மணி கடந்தும் கடை திறக்கப்படவில்லை.

கடையை திறந்தால் தான் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்வோம், இல்லையேல் போராட்டம் நீடிக்கும் என காவிப்படை வானரத் தளபதிகள் கூறியதும் குடிமகன்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

அதாவது திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினால்தான் பாஜக-வினர் அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பிலும், தலைமைக்கும் அனுப்பி தமது இருப்பை பதிவு செய்ய முடியுமாம். என்ன இருந்தாலும் செல்ஃபி நாயகனைத் தலைவனாக கொண்ட கட்சியல்லவா...

இந்த அறிவிப்பு  காவல்பணிக்கு வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை  உருவாக்கிவிட்டது.

டாஸ்மாக்கிற்கு எதிரான மக்களின் மனநிலையை உணர்ந்தவர்கள் ஏடாகூடமாக ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று அச்சப்பட்டு யோசித்து தயங்கியபடி நின்றனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து கடை திறக்கப்பட்டது. குடிமகன்களின் கூட்டம் வரிசை கட்ட ஆரம்பித்தது. முற்றுகை போராட்டமும் முடித்துக் கொள்ளப்பட்டது.

இனிமேல் எந்த மதுக்கடையும் திறக்க முடியாத அளவிற்கு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்தும் என்ற தமிழிசையின் பேச்சைக்கேட்டு, பா.ஜ.க-வை நம்பி போராட்டத்துக்கு வந்த மக்கள், பெண்கள் முகம் சுழித்தபடியே செய்வதறியாமல் கலைந்து சென்று கொண்டிருந்தனர்...

இந்த உலகம் பிரபஞ்சம் ஒரு முப்பரிமான கனவுலகமா ? மூளை என்னும் சிறையில் ஆடைக்கப்பட்டு உள்ளோமா ?


புரிந்து கொள்ள சிறிது கடினமாக இருக்கலாம் இந்த கோட்பாடு..

நாம், நம்மை சுற்றி உள்ள அனைத்தும் உண்மையா இல்லை நமது மூளை கற்பனை செய்து கொள்ளும் உணர்வா ?

மனிதன் தனது புலன்கள் அனைத்தையும் இழந்துவிட்டன என்று வைத்து கொள்ளுங்கள்..

புரியவில்லையா கற்பனை செய்து கொள்ளுங்கள் ஒரு மனிதனுக்கு பார்வை திறன், கேட்க்கும் திறன் , தோடு உணர்ச்சி ,நுகர்வு உணர்ச்சி போன்ற உணர்ச்சிகளை இழந்து விட்டான் என்று வைத்து கொள்ளுங்கள் ?

என்ன நிகழும் ? அவனுக்கு எதுவுமே உண்மை கிடையாது இந்த அண்டம், அசைவு, ஓசை அனைத்தும்..

இது அனைத்தும் உண்மையில் உள்ளதா அல்லது இல்லாத ஒன்றை முப்பரிமான வடிவில் நமது மூளையே உருவாக்கி காட்டுகிறதா..

யோசித்து பாருங்கள் பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் இருந்து நம் அனைவரின் மூளையையும் கட்டுபடுத்தி நமது புலன்களுக்கு இல்லாத ஒன்றை உணர வைக்க முடியும் அல்லவா ?

உளறாதே என்று கூறாதீர்கள் .. பெரும் அறிவியல் வல்லுநர் Nicole Tesla அடிக்கடி எனது மூளைக்கு இந்த பிரபச்ச்தின் எதோ ஒரு மூலையில் இருந்து தகவல்கள் வருகின்றன அதன் படியே நான் செயல் படுகிறேன் என்று கூறு உள்ளார்..

இவர்தான் X RAY  AC current போன்றவற்றை கண்டு பிடித்தவர் .

ஒரு முறை ஐசக் நியூட்டன் னிடம் இந்த உலகின் மிக பெரிய அறிவாளியாக உள்ளிர்கள் அதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அதை என் என்னிடம் கேட்கிறீர்கள் NIcole Tesla விடம் கேளுங்கள் என்று கூறினார் .

நாம் வாழ்வது வெறும் மாயையா ? ஒரு சிறு கற்பனை..

உங்களால் ஒரு சிறு பந்தை கற்பனை செய்து அதை மூளையில் நிறுத்தி கண்களால் ஒரு இடத்தில் இருப்பது போல் பார்க்க முயற்சி செயுங்கள்..

உங்கள் அருகிலோ தரையிலோ ஒரு பந்து இருப்பது போல் கற்பனை செய்து அதை உங்களால் உங்கள் மூலையில் நிறுத்தினால் பார்க்க முடியும் அல்லவா ?

இப்பொழுது அதே பொருளை உங்கள் தோடு உணர்ச்சியால் தொடுவது போல் உங்கள் மூளைக்கு கட்டளை இட்டு அந்த உணர்ச்சியை அடைந்தால் .நீங்கள் உண்மையில் ஒரு பொருளை உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம்..

ஆம் ஒரு பந்து இருக்கிறது என்றால் அது உண்மை அல்ல அது எப்பொழுது உண்மை ஆகிறது என்றால்.. உங்கள் கண்கள் அதை கண்டு உணரும் பொழுது அதை உங்கள் தோடு உணர்ச்சியால் உணரும் பொழுதும் தான்..

இப்பொழுது ஒரு கற்பனையான பந்தை நீங்கள்பார்த்து அதை தோடு உணர்ச்சியால் உணர்ந்தால் அது நிஜமாகி விடும்.

இது எப்படி சாத்தியம் ? கற்பனை சாத்தியமாகுமா ?

கண்டிப்பாக மூளை நமது முழு கட்டுபாட்டில் இருந்தால் இது நிச்சயமாக சாத்தியமே..

அனைத்தும் மாயையே இந்த மாயையை உறுப்புகளால் உணரும் பொழுது நிஜம் ஆகிறது..

உண்மையில் பார்வை ,கேட்டும் திரன், தொடுதிரன் இது மட்டும் தான் உணர்ச்சிகளா ?

இன்னும் நம்மை சுற்றி உள்ள பல மாயைகளை உணர கூடிய உறுப்பு நம்மிடம் இல்லை என்று கூறலாம்..

உதாரனத்திற்க்கு ஒரு புல்லிற்கு மிருகம், மனிதன் போன்ற உயிர்கள் அது வாழும் அதே உலகத்தில் வாழ்வது தெரியாது ஏன் ? அதை உணரும் உறுப்புகள் அந்த புல்லிடம் இல்லை..

அதே போல் தான் நாமும் நம் அருகிலேயே ஒரு உயிரினம் வாழலாம் ஆனால் அதை உணரும் உறுப்பு நம்மிடம் இல்லாமல் போகலாம்..

Pineal Gland கூட ஒரு உணரும் உறுப்பு தான் ஆனால் அது இன்றைய நிலையில் செல்பாடு மிகவும் குறைவு..

இனி யாரையும் பைத்தியம் என்று கூறாதீர்கள் அவர்கள் மூளை அவர்களுக்கு காட்டும் பரிணாமத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்..

மூளையை பற்றியே நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை.. பல இடங்கள் மூலையில் எதற்காக உள்ளது என்பே நமக்கு தெரியாது..

பொதுவாக நமது மூளையின்
Consious memory யை மட்டுமே நாம் பயன் படுத்தி வருகிறோம்..

Subconsious Memory பகுதியில் தான் மனிதனுக்கு sublingual முறையில் எண்ணங்களை பல Corporate நிறுவனங்கள் மற்றும் நிழல் உலக அரசர்கள் விதை கிறார்கள்..

Superconsious Memory இது Astral travel, காலங்களை கடப்பது , ஆன்மாவை அடைவது சம்பந்த பட்ட பகுதியாகும்.

புலன்கள் மற்றும் பரிணாமத்தை பற்றி இன்னும் நிறைய இருக்கின்றன மனிதன் உணராதவை...

சென்னையில் கன்னட பட காட்சிகள் ரத்து...


ஷுத்தி படத்திற்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ரத்து பற்றி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது  மாயாஜால்...

ஆமா ஆமா சரியா இருக்காது... அதை உத்தமர் சொன்னால் சரியா இருக்கும்...


மனமும் குடும்பமும்...


இந்த பிரபஞ்சத்தின் அங்கமான நாம் பஞ்சபூத தத்துவமான உடலை எடுத்துள்ளோம். அதன் பாதுகாவலனாக மனம் என்கிற தன்முனைப்பு இயக்கம் செயல்படுகிறது.

இந்த மனம் பல்வேறு பிறவிகளாக பரிணிமித்து ஒரு குடும்பமாக சேர்ந்து வாழ விரும்பியுள்ளது. எனவே நாம் கடந்த பிறவிகளின் உறவுகளோடே மறுபிறப்பு எடுக்கிறோம்.

ஆனால் அதே உறவு முறையில் பிறப்பதில்லை. கடந்த பிறவியில் எனக்கு அண்ணனாக இருந்தவர் தற்போது தந்தையாகவோ மகனாவோ நண்பனாகவோ இருக்கலாம்.

கடந்த பிறவியில் அவரை நான் எப்படி பாவித்தேன் என்பதில்தான் இன்றைய உறவு முறையே அமையும். நான் யாரை எப்படி பாவித்தேனோ அப்படி.

சமீத்தில் நடைப்பெற்ற முற்பிறவி பற்றிய ஆய்வில் நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஒரே சமூகமாகவோ பிறப்பெடுக்கிறோம் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பிறவியில் நாம் சந்திக்கும் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் கடந்த பிறவியில் பரிச்சயமானவர்களே. மனதின் செயல்பாடு அவ்வாறே அமைந்துள்ளது.

உங்கள் தற்போதைய குடும்ப உறுப்பினர்கள் கடந்த பிறவியில் நீங்கள் ஆசைப்பட்டதால் கிடைத்தவர்களே. ஆம் உங்கள் தாயாகட்டும் தந்தையாகட்டும் மகனாகட்டும் சகோதரராகட்டும் அனைவரும் உங்கள் ஆசையால் உண்டானவர்களே.

இப்பேற்பட்ட இந்த அற்புதமான உறவுகளை நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்று நினைக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தயவுசெய்து உறவுகளை நேசியுங்கள். நீங்கள் உதாசீனப் படுத்தினால் அடுத்த பிறப்பில் இவர்கள் வேறு எங்கோ பிறக்க நேரிடும். இந்த புனிதமான உறவு இயற்கை அருளிய வரம்.

யார் என்ன தவறுகளை செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து மறந்து அன்போடு பழக கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்கை என்பது எல்லையில்லா பேரறிவால் வழங்கப்பட்ட ஓர் மாபெரும் வரம். இது உங்கள் குடும்பம். தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள்...

வெட்கித்தலை குனிய வேண்டும் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்...


அமெரிக்காவின் பஹாமாஸ் தீவில் நாளை நடக்க இருக்கிற உலக தடகள போட்டியில் முதல் முறையாக கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

இந்தியா சார்பில் ஆறு வீரர்கள், ஆறு வீராங்கனைகள், இரண்டு பயிற்சியாளர்கள் உள்பட 15 பேர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் யாருமே இன்று வரை செல்லவில்லை.

என்ன காரணம் தெரியுமா?

இந்திய தடகள சங்கம் அமெரிக்க தூதரகத்தை விசாவுக்காக அணுகியது கடந்தவாரம் சனிக்கிழமைதான். ஒருவாரத்திற்குள் விசா தரமுடியாது என்று அமெரிக்க தூதரகம் கைவிரித்து விட்டது. அமெரிக்க விசா ஒரு வாரத்திற்குள் கிடைக்காது என்ற அடிப்படை அறிவு கூட நம் இந்திய தடகள சங்கத்திற்கு இல்லை.

போட்டிக்கு அனுப்பப்பட்டு தோற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளலாம்..

போட்டிக்கே அனுப்பபடாமல் தோற்றுப் போவதை என்னவென்று சொல்ல?

இது தான்  இவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் முக்கியத்துவம் பிராமண கார்ப்பரேட் கம்பெனிகளின் விளையாட்டான கிரிக்கெட்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற எந்த விளையாட்டு போட்டிகளுக்கும் கொடுக்கபடுவதில்லை என்பதே உண்மை..

இந்த லச்சனத்தில் இந்தியா  ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கும் என்பதெல்லாம் கானல் நீர் மட்டுமே இதற்கு  இந்திய விளையாட்டு துறையின் செயற்பாடே சாட்சி...

பாஜக மோடியின் உலக சாதனை பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...


திராவிடம் என்றால் என்ன?


ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்?

ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை?

திராவிட கழகம் கண்டவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள்?

ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?

இதற்க்கு தரவிடர்களின், திராவிடன்களின் , திராவிடச்சிகளின் , திராவிட சோம்பு தூக்கும் தமிழர்களின் பதில் என்ன?

எவனுமே கூறமாட்டான், ஏன்னா அவனுக்கு பணமும் பதவியும் தான் அவசியம்.

தமிழரை திராவிடர் என்று கூறுபவர்கள் , நம்மை ஆண்டு சுகம் கண்டு, நம்மை அழிக்க நினைக்கும் பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம்.

அடுத்து தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தும் துரோக கும்பல்.

ஈ.வே.ராமசாமி ஒரு கன்னடர், அவர் கன்னடர் என்பதால் தான் தமிழ் கட்சி என்றோ, தமிழ் கழகம் என்றோ ஆரம்பிக்க வில்லை.

மேற்க்கத்தேயர் தற்போதைய இந்தியாவின் பூர்வ குடி மக்களை குறிக்க பயன் படுத்திய திராவிடம் என்பதை பயன் படுத்தினார், தன் மொழி பற்றை மறக்காத ராமசாமி. இதுவே தமிழின அழிவிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

திராவிடம் பேசுபவன் எல்லாம் பிறப்பால் தமினாக இருக்க முடியாது, கன்னடன், தெலுங்கன் ஆகத்தான் அதிகமாக இருக்கிறது, இதன் உண்மை அறியா தமிழ் உறவுகளும் இதற்குள் சிக்கி விட்டன் .

திராவிடத்தை அழித்து, தமிழர் தமிழரை அளும் நிலையை உருவாக்கக உறுதி கொள்வோம் தமிழ் உறவுகளே...

சமையல் மந்திரம் டாக்டர்கிட்ட பேசுறீங்களா பாஜக எச்ச. ராசா?


ஆகாயத்தில் ஒரு ஒளி - 30...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனம் 30-ம் பகுதியாகும். அதாவது 30-வது தீர்க்க தரிசனம் ஆகும்.

உலக வரலாற்றில் இறைவனின் அற்புதம் நிறைந்த ஒரு பகுதி எதுவென்றால் அது இந்திய தேசமே என்று இந்த 30-ம் தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது. இதுவரை எல்லைப் பிரச்சனைகளை கண்ணுற்று வந்த நமது இந்திய அரசு அதற்கான நிரந்தர தீர்வை திடீரென்று எடுக்க உள்ளது. இந்த முடிவானது சில நாடுகளுக்கு பாதகமாக காணப்பட்டாலும், அது இந்திய தேசத்தைப் பொறுத்தவரை சரியான ஒரு முடிவாக இருக்கும் என 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

கடல் தாண்டிய எல்லைப் பிரச்சினைகளிலும் இந்திய தேசம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் அளவிற்கு இந்திய அரசு தனது கடமைகளை முழுவீச்சில் செய்ய ஆரம்பிக்கும் என்றும், அச்சமயத்தில் சீனாவின் அத்துமீறல் செயல்கள் தலைவிரித்தாடும் என்றும், இச்சமயத்தில் இறைவனின் அற்புதமான செயல் ஒன்றால் சீனா தனது எல்லை தாண்டும் பிரச்சனையிலிருந்து பின்வாங்கும் என்றும், இது யாருமே எதிர்பாராத ஒரு அதிசயமாக நிகழ உள்ளதாக 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.


30-ம் தீர்க்க தரிசனத்தின்படி இந்திய எல்லை பிரச்சனைகளுக்கான தீர்வை இந்திய அரசு துரிதமாக முடிவெடுக்கும் என்றும், இதனால் மக்களிடையே நிம்மதியும், பாதுகாப்புதிறனும் மேலோங்கும் என்று அது மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

இந்திய தேசத்தின் வடமாநில எல்லைகளில் நிலவும் தீவிரவாத எதிர்ப்புகள் அனைத்தும் ஓய்வு நிலைக்கு திரும்பும் என்றும், அதற்கு காரணம் இயற்கையின் கோர தாண்டவத்தால் அவர்களால் நிலைகொள்ள முடியாமல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சூழல் உருவாகும் என்றும், இதுவே 30-ம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்காண முன் அடையாளங்கள் என்று 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில விளக்கங்களை தருகிறது.

காத்மண்டு நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய இடம் என்றும், அங்குள்ள பிரசித்திப் பெற்ற சிவாலயத்தில் மாபெரும் அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், இது இந்திய-நேபாள் உறவுக்கு மிகப்பெரிய பாலமாக அமைய உள்ளதாக 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

புத்த மடாலயம் ஒன்றில் மிகப்பெரிய அழிவுச்சம்பவம் ஒன்று நடைபெறும் என்றும், இது கடவுளின் விதிக்கு உட்பட்ட செயலாக நடந்து முடியும் என்றும்,  இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும், இதுவே அந்நாட்டு மக்களுக்கு இது போதாத காலமாக அமைய உள்ளதற்கான முக்கிய காரணமாக (அறிகுறி) இருக்கும் என்று 30-ம் தீர்க்க தரிசனம் மிக அருகில் நடக்கும் நிகழ்வைப்பற்றி குறிப்பை தருகின்றது.


தென் கைலாயத்திலிருந்து ஒரு அதிசயம் நிகழ உள்ளதாகவும் இந்திய தேசம் இதனால் இறையாண்மையில் ஒருபடி மேலோங்கி நிற்கும் என்றும் 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

வடசென்னை, மயிலாப்பூர், சென்ட்ரல், மூவேந்தர் நினைவிடம், கத்திப்பாரா, மத்திய சென்னை, மகாபலிபுரம், தண்டையார் பேட்டை, முள்ளுக்குறிச்சி, வட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அமராவதி, புன்னை நல்லூர், சீர்காழி இவைகள் மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சில சம்பவங்களும், அரிய நிகழ்வுகளும் நடக்கும் என 30-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய நிகழ்வைப்பற்றி மறைமுகமாக தெரிவிக்கின்றது.

கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி, தெற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி இச்சம்பவங்கள் நிகழும் என்று 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

தமிழகத்தில் உள்ள சில ஆன்மீக அமைப்புகளுக்கு இது போதாத காலம் என்றும், இது இறைவன் எடுத்த முடிவாக இருக்கும் என்றும் இதனால் ஆன்மீக உலகில் திடீரென்று சில மறுமலர்ச்சிகள் உருவாகிட சூழ்நிலைகள் உருவாகும் என்று 30-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


காலத்தின் சூழலை மாற்றியமைக்கும் பணிகள் யாவும் இந்திய தேசத்தின் மையப்பகுதியிலிருந்து உருவாகும் என்றும், இது இறைவனின் அற்புதத்திற்கு ஒரு சான்றாக அமைய உள்ளதாக 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

புனிதர் ஒருவரின் வருகை இந்திய தேசத்தில் நடக்க உள்ளதாகவும், இந்த நிகழ்வு 30-ம் தீர்க்க தரிசனம் நிகழ்விற்கு முன் நிகழும் ஒரு அரிய நிகழ்வாக இருக்கும் என்று 30-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை அவைகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விழிப்போடு காத்துள்ளன என்று 30-ம் தீர்க்க தரிசனம் தீர்க்க தரிசனத்தின் முக்கியத்துவத்தை இங்கு நமக்கு சுட்டிக் காட்டுகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

சங்க இலக்கியத்தில் புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாறுபடும்...


சங்க இலக்கியம் என்பது தொல் தமிழ்க்குடி வரலாற்றின் வாழ்வியல் பெட்டகமாக விளங்குகிறது. சங்க கால மாந்தர்கள் எல்லா வகையிலும் மேம்பட்டு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி வந்துள்ளதை அவர்தம் செவ்வியல் பாடல்கள் வழி உய்த்துணர இயலும்.

மேலும், அகமும் புறமும் ஆன அவர்களின் வாழ்வு இயற்கையுடன் இயைந்து வாழ்க்கை நெறிமுறைகளுள் வெறும் வீரமும் காதலும் மட்டுமல்லாது அவர்களது அறிவியல் தொலைநோக்குச் சிந்தனைகள் ஆய்விற்குரியனவாகக் காணப்படுகின்றன.

அத்தகைய பேரறிவு கொண்ட தமிழினம் உலகத்தோருக்கு வழங்கியுள்ள செய்திகள் ஏராளம். அத்தனையும் அறிவியல் திறம் படைத்தவை. அன்று அவர் கண்ட பகற்கனவுகளும் மிகைக் கற்பனைகளுமே இன்று பலஅறிவியல் கண்டுபிடிப்புகளாக மலர்ந்துள்ளன. ஆதலால் எளிதாக இக்கருத்துக்களை எல்லாம் புறம்தள்ளிவிட முடியாது.

பண்டைத் தமிழன் நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்திக் கோலோச்சி வாழ்ந்திருந்தான். அக்காலக் கட்டத்தில், தான் வாழ்ந்திருந்த நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் கூர்ந்து உற்று நோக்கி இலக்கணம் வழுவாது படைப்பாக வெளிப்படுத்துதலை தம் சமூகக் கடமையாகக் கொண்டிருந்ததன் விளைவே பாட்டும் தொகையும் ஆகும்.

குறிப்பாக, இவற்றுள் பயின்று வரும் பாலை நிலக்காட்சிகள் நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல் வாதத்தோடு ஒப்பு நோக்கத் தக்கவையாகத் திகழ்கின்றன. தவிர, இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவி வெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுத்தொட்டே அறிவுறுத்தப்பட்டுள்ளதை இப்போது அறிவோம்.

கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம் - (அகம் ‍164 : 1-3).

என்னும் பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினையெல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால் இப்பரந்த உலகம் வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையும்.

மேலும், இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்து போகுமாறு கடுமையாகப் பொசுக்குவதால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல அகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெப்பக்காற்றினால் உதிர்ந்து போகும். அதன்பின் அம்மரத்தின் நீண்ட கிளைகளும் வறுமையுற்றவரைப்போல வளமற்று விளங்கும் என்பதை,

கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு - (அகம் - 143 : 1 - 5).

என்ற பாடல் விளக்குகிறது. தவிர,

பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் - (அகம் - 185 : 8-10).

என்பதில் பசுமையற்றுப் போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும். அதனால் உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வான் உலந்து மழையானது பெய்யும் இடத்தை விட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,

உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில் - (அகம் - 141 : 5 -6).

என்று உழவுத் தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று எடுத்துரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தொழில்களுள் தலையாயது உழவுத் தொழிலாகும். அந்த உழவுத் தொழிலுக்கு அடிப்படையானது மழை.

அம்மழை புவிவெப்பம் காரணமாகவே விட்டு வேறிடம் செல்கிறது. மேலும் பருவம் மாறி பொழிகிறது. ஆக, புவி வெப்பமடைதலும் அதனூடாக நிகழும் பருவகால மாற்றமும் இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் உண்டாகின்றன. அன்று இயற்கை மனிதனுக்கு சவாலாக விளங்கியது.

இன்று மனிதன் இயற்கைக்கு பெரும் சவாலாகக் காணப்படுகின்றான். இவ்விரண்டினாலும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது மனித இனம் என்பது தான் பெரும் சோகம். இன்றைய நவீன மனிதனிடம் காணப்படும் அதி நுகர்வுத் தன்மை, அறியாமைப் போக்கு, வருங்காலம் குறித்த அக்கறையின்மை முதலியன அக்கால மாந்தர்களிடத்து நிலவாது இருந்தமைக்குச் சான்றே சங்க இலக்கியமாகும். சான்றாக, காதல் பூண்ட மாந்தரிடையே இப்பருவகால மாற்றம் விளைவித்து விடும் துன்பம் அளப்பரியது என்பதை,

வம்பும் பெய்யுமார் மழையே வம்புஅன்று
கார்இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே - (குறுந் 382 : 4-6).

என்னும் பாடல்வழி உணர முடியும். இவையனைத்தும் நிகழ்கால வாழ்வியல் கூறுகளுடன் ஒப்பிட்டு அறியத்தக்கவை. ஆகவே, மேற்சுட்டிய பாடல்கள் மூலமாக அவற்றின் காட்சி மற்றும் கருத்தின்பத்தை மட்டும் துய்க்காமல் உள்ளீடாக இலங்கும் அறிவு புகட்டுதலையும் உணர்வோமேயானால் உலகத்தைப் பேரழிவிலிருந்துக் காத்துக் கொள்ள இயலும்.

புவி வெப்பம் மற்றும் பருவகால மாற்றம் குறித்த பழம்சிந்தனையில் பெருமளவு உழல்பவர்களாக இன்று நாம் உள்ளோம். இதற்கு மெத்தப் படித்த மேதாவித்தனத்தால் எழுந்த அசட்டையே காரணமாகும். இல்லாவிடில், ஆழ்கடலுக்குள்ளும் மலையுச்சியின் மீதும் உலகின் கவனத்தை ஈர்க்கும் நாடாளும் பேரவைக் கூட்டம் நடத்துவதற்கான அவசியமே எழுந்திருக்காது.

தவிர, இந்தத் துயரம் மூத்தோர் அறிவை நுனிப்புல் மேய்ந்ததால் உண்டான விளைவாகும். உலகத்தாரிடையே பொதுப்புத்தி இல்லாததாலேயே டென்மார்க்கில் புவி வெப்பமடைதல் மாநாடு தோல்வியில் முடிந்தது.

புரிந்த வினைக்கும் பிராயச்சித்தம் பண்டைய இலக்கியங்களிலேயே நிச்சயம் காணப்படும். தேடுதல் தானே வாழ்க்கை. அவ்வாழ்க்கையை செம்மைப்படுத்துவது இலக்கியம் அல்லவா? ஏனெனில் இலக்கியத்தைப் படைத்தவர்கள் நம்மைப் போன்ற புலனின்பப் பிரியர்கள் அல்லர்; முன்னறிவிப்போர்கள். இது வெறும் பொய்யுரையோ புகழுரையோ அல்ல...

எகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு கருவிகள்...


தொல்லியல் ஆய்வில் கண்டு பிடிப்பு...

திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் கிராமம், பழங்காலத் தில் இரும்பு கருவிகள் உற்பத்தி மையமாக இருந்துள்ளதை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இங்கிருந்து, எகிப்து பிரமிடுகளுக்கு இரும்புக் கருவிகள் கொண்டு சென்றதற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன.

கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறை சார்பில், திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவில், மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டது. இதில், பழங்கால வரலாற்று சான்றுகள், பொருட்கள் கிடைத்து உள்ளன. இக்கிராமத்தின் ஒரு பகுதி, 'கருமண் பள்ளம்' என, அழைக்கப்படுகிறது.

நாணயங்கள்: இங்கு இரும்பு தாதுக்கள் அதிகளவு இருந்ததும், வெட்டி எடுக்கப்பட்டதும், தெரியவந்துள்ளது. 'கொல்லன் தோட்டம்' என்ற பகுதியில், இரும்பு கழிவு அதிக அளவில் உள்ளது. இரும்பைக் கொண்டு, போர் மற்றும் வேளாண் கருவிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இங்கு கிடைத்துள்ள மண்பாண்ட சிதறல்கள், சிவப்பு வண்ண மண்கல பண்பாடு இருந்துள்ளதை காட்டுகிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலை புதுப்பித்த போது, மருந்து சாத்துவதற்காக, மூலவர் சிலை அகற்றப்பட்டது. சிலையின் அடியில், பழங்கால பொற்காசுகள், நான்கு நவரத்தின கற்கள், இரு செப்பு நாணயங்கள், 16 பிரிட்டிஷ் நாணயங்கள், நவரத்தின கற்கள், யந்திர செப்பு தகடு ஆகியவை இருந்தன. இவை, 17ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகவும், விஜய நகர பேரரசு ஆண்ட காலத்திய நாணயங்கள், 'வீரராய பொற்காசு' என, அழைக்கப்பட்டதாகவும், ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அபூர்வமானது: இதுகுறித்து, ஆய்வாளர் ரவி கூறியதாவது: இடுவாய் நகரம், தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாட்டில் சிறந்து விளங்கியதும், மிகச்சிறந்த வணிக மையமாக திகழ்ந்ததும், ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது. கொங்கு பெருவழியில், கிளை வழி ஒன்று உள்ளதும், போக்குவரத்து அதிகம் இருந்ததால், வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, கிணறு அமைக்கப்பட்டிருந்தது. இது, ராணி மங்கம்மா ஆண்ட காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. குப்தர்களின் தாக்கமும் இதில் உள்ளது. அதேபோல், 3000 ஆண்டு களுக்கு முந்தைய, சாம்பல் மேடு பகுதியும், 15 ஏக்கர் பரப்பளவில் காணப்படுவது, அபூர்வமான ஒன்று. பழங்காலத்தில், ஆயிரக்கணக்கான மாடுகளின் சாணங்களை ஒரே இடத்தில் குவித்து, அவற்றை தீ மூட்டி, மாடுகளை அதன் மேல் நடக்கவிட்டு உள்ளனர். கால்நடைகளை, நோய்கள் தாக்காமல் இருக்க, இது மருத்துவ முறையாக கடைபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது, குண்டம் திருவிழா, அதன் அடிப்படையிலேயே நடக்கிறது. இரும்பு, எக்கு கருவிகள் தயாரிப்பில், சிறந்த தொழில் நுட்பம் இங்கிருந்துள்ளது. எகிப்து பிரமிடுகளுக்கு, இங்கிருந்து இரும்பு கொண்டு சென்றதாக, வரலாற்று தகவல் உள்ளது. இங்கு கிடைத்துள்ள இரும்பு கசடு, இரும்பு கால பண்பாட்டை நினைவுபடுத்துகின்றது. பொதுமக்களின் வழங்காற்று பாடலில், ஒளி நகரம் என்ற பெயர் வழக்கில் இருந்தது அறியப்படுகிறது.

உலைப்பட்டறைகளில் இருந்து வரும் ஒளி வீச்சைக்கொண்டும், இரும்பு உருக்கும் தொழில், இரவு பகலாக நடந்ததால், சம்மட்டியில் ஒலி, இடி முழக்கத்தை போல் இருந்ததால், 'இடிவாய்' என்ற பெயர் மருவி, இடுவாய் என, காரணப்பெயர் உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்...

முட்டா பய பூரா நம்ம ஊர்ல தான் இருக்கான்...


இங்குள்ள அரசியல் களமே தவறானது...


இக்கேள்விகளுக்கு அரசியல் கட்சியில் உள்ள ஏதேனும் ஒருவர் பதில் கூற முடியுமா?

அரசியல் கட்சிகள் பொதுகூட்டங்களை நடத்தி கொண்டிருக்கின்றன; மக்கள் அனைவரும் மந்திரித்துவிட்ட பைதியக்காரர்களை போல் நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு நின்று கேட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா. தன்னிச்சையாக சிந்தித்து செயல்படும் பகுத்தறிவு இல்லாத இழிவான இனமாக நமது தமிழினம் ஆனது வேதனைக்குரியது.

தமிழர் தேசத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஏழைகளாக இருக்கின்றனர். இவர்களின் நிலையை உயர்த்த இதுவரை உள்ள அரசியல் கட்சிகள் என்ன செய்தன ஒன்றுமில்லை.

இந்த அரசியல் கட்சியில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் நல்லது செய்ய முடியுமா என்ன?

நன்மைகளை செய்ய பணமிருந்தால் மட்டும் போதாதா?

நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருக்க வேண்டும்.

இவர்கள் பொதுக்கூட்டம் போடும் செலவில், தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிக்கலாமே?

பொதுவுடைமை பேசும் கட்சிகள் நலிவடைதோரின் வாழ்க்கையை மேம்படுத்தலாமே?

மக்கள் பணத்தை சொரண்டும் அடிவருடிகள் ஏன் அரசியலை விடுத்து, உழைத்து பிழைக்க கூடாது? வியர்வை வருமோ?

தாய்மொழி கல்வியே கண்டு புடிப்புகளை உருவாக்கும...


தமிழினத்திலே பிறந்து தமிழ் மழலையில் நினைந்து, தாயைவிட அதிக நேரம் தமிழ்மொழியுடன் பகிர்ந்து வளர்ந்த நாம் ஏன் நம்மை அடிமை படுத்திய ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டுள்ளோம்?

என்று ஒரு குழந்தை தனது தாய் மொழியை விடுத்தது வேறு ஒரு மொழியில் கல்வி கற்க தொடங்குகிறதோ, அன்றே அதன் சுயசிந்தனை திறன் மழுங்கடிக்கப்படுகிறது. அவன் தெரிந்ததை செய்து கொண்டு ஒரு சிறந்த அடிமையாக வாழ்வானே தவிற, ஒரு போதும் சிறந்த தலைவனாக மாட்டான்.

இதுவரை அடிமைகளாக இருந்தது போதும், இனியாவது தமிழர்களாய் நிமிர்வோம்.

தாய்மொழியில் கற்ப்போம்,
இழந்ததை மீட்ப்போம்,
இருப்பதை காப்போம்.

நாளைய விடியல் நம்மோடு,
நிச்சியம் உண்டு போராடு.

தமிழில் படித்தோர்க்கு வேலையளிக்க வேண்டும்...

இந்தி தமிழகத்தில் கட்டாயம் இல்லை...


குலதெய்வங்கள் என்றால் என்ன.. அவர்களின் பெருமை என்ன...?


குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்து போகின்றது...?

நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும்
பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு
தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக் கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது..

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை..


எனவே தான் அந்த தெய்வங்கள்..  குல தெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன..

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை..

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி
பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்... அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை... இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய்
நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை
கட்டியிருக்கலாம்...

இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..

நாம் அங்கே போய் நின்று... அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23
க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோ சோமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி
வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன.

அதனால் அவன் மூலம் வம்சம்
மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்,

முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன்
எனத்தொடர்ந்து... இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு... தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...
பெண் குழந்தைகளை  குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது..

அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குல தெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம்,
யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.. வாழ்க வளமுடன்...

தமிழர்களே.. வந்தேறிகளின் திரைப்படங்களை புறக்கணிப்போம்...


தமிழக அரசு இப்படி இருந்தால் எப்படி தமிழகம் வளம் பெரும்...


வைகை அணை நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோலால் மூடிய அமைச்சர் செல்லூர் ராஜூன் முயற்சி...



அட்டைகள் கரை ஒதுங்கியதால் தோல்வி.. உன் அறிவுல தீயவைக்க...


10 லட்சம் ஆட்டைய போட்டாச்சி....

சித்தராவது எப்படி - 29...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஐந்து..

சுவாச ஒழுங்கின் மூலம் மூலாதாரம் மற்றும் பிடரிக்கான பாதையானது மனக்கண்ணால் (பாவனை /கற்பனை) தானே உருவாக்கப்படுகிறது.?

உப்பை நிஜமாகவே சற்று வாயில் போட்டு ருசி பார்க்கிறோம்... மிகவும் கரிக்கிறது.. அந்த கரிப்பினை தாங்க முடியாமல் துப்பி விடுகிறோம்.. இது முதல் அனுபவமான நிஜ அனுபவம்..

பின் மனதால் உப்பினை வாயில் போடுவதாக நினைத்துப் பார்க்கின்றோம்... உப்பு போடாமலேயே நாக்கில் நீர் சுரக்கிறது.. ஏதோ பழைய அனுபவ தாக்கத்தால் அப்படி அனுபவப் படுவது இரண்டாம் வகை அனுபவம்.. இது நிழல் அனுபவம்...

உப்பு போல கரிக்கின்ற வேறு ஒரு பொருளின் சுவைத்த அனுபவித்த ஒன்றை நினைக்க வைத்து உப்புவின் தன்மையை உணர்த்தும் போதும் நாக்கில் சிறிது நீர் ஊறலாம்... இது மாயா அனுபவம்..

இந்த மூன்று நிலைகளிலும் உப்புவின் சுவைக்கு நாக்கில் ஓரு உணர்வால் நீர் ஊறுகிறது...

உள் நகைத்தல் மூலம் குண்டலினி உள் மூச்சில் சக்தி கீழிலிருந்து மேலும் வெளி மூச்சில் மேலிருந்து கீழும் ஒரு உறுத்தலான உணர்வு உணர கண்டோம், அது ஒரு அடையாளம் காண ஒரு மாயா அனுபவத்தை தோற்றுவிக்கப் பட்டு சற்று உணரப் பட்டது..

ஆனால் அது நிஜ அனுபவமாகாது.. ஆனால் அது போல ஒன்று.. பலத்தில் மிக மிக குறைவான ஒன்று....

சுவாச ஒழுங்கில் தலையிலும் உடலிலும் பெறப் படும் தேங்கிய உணர்வும், தேடும் உணர்வும் ( spot feeling and moving or seeking feeling ) ஏற்படுவது நிஜ அனுபவமான முதல் வகை அனுபவம்..

தேங்கிய உணர்வு என்பது பெறப்பட்ட ஆற்றல் ஒரு இடத்தில் சேர்ந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தேங்கிய நிலையில் இருப்பது..

தேடும் உணர்வு என்பது தேங்கிய உணர்வு ஏதாவது ஒரு இடத்திற்கு குறிக்கோள் அற்று நகர்ந்து செல்வது..

அப்படி பட்ட தேடும் உணர்வைதான் முறையாகப் பயன் படுத்தி மூலாதாரத்திலிருந்து பிடறி நோக்கி பயணப் பட வைப்பதால் மிகுந்த பலனை பெற முடிகிறது..

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் அதிகப்பட்ட ஆற்றலால் பிடறிக்கும் மூலாதாரத்திற்கும் இடையே நடை பெறுவது நிஜ அனுபவம்..

அது சுவாச ஒழுங்கோடு இணைந்தே நடைபெறும்.. சுவாச ஒழுங்கோடு உடன் இருக்கும் விழிப்பு நிலையே. அந்த குண்டலினி சக்தியை நடத்தும்.. அது நிஜ அனுபவ உணர்வாக இருக்கும்..

சுவாச ஒழுங்கு கெட்ட நிலையில் ஒழுங்கின்மை நிலையில் அது மனதால் நடத்தப் பட்டு அது நிழல் அனுபவமாக இரண்டாம் வகை அனுபவமாக இருக்கும்..

எந்த சுவாச ஒழுங்கு பயிற்சியை போதுமான அளவு செய்யாமல், படித்ததையும் கேட்டதையும் வைத்து கற்பனையிலும், மனோபாவத்திலும் செய்தால் அது மாயா அனுபவமான மூன்றாம் வகை சேர்ந்ததாகும்..

அதனால் மிகுந்த அளவு ஏற்படும் கால விரையத்தால், சலிப்பு அடைந்த மனதால் பயிற்சி துண்டிக்கப்படும்..

இந்த குண்டலினி பயணத்தை பயணிப்பவர்கள் தாங்கள் உணர்வது நிஜ அனுபவமா அல்லது நிழல் அனுபவமா அல்லது மாயா அனுபவமா என்பதை தங்கள் விழிப்பு நிலையால் மட்டுமே அறிந்து எச்சரிக்கையுடன் பயிற்சியை மேற் கொள்ளுமாறு வேண்டுகிறேன்..

சுவாச ஒழுங்கின் மூலமாகவே மட்டும் பெறப் படும் நிஜ அனுபவம் தடை படுமானால் மீண்டும் விழிப்பு நிலையால் சுவாச ஒழுங்கிற்கு வந்து பின் குண்டலினி பயிற்சி பயில வேண்டும்..

அப்படி பயில வில்லை என்றால் விரக்தி ஏற்பட்டு பயிற்சியில் நிரந்தர பிளவு அல்லது தொடர்பு அறுந்த நிலை உருவாகும்.. பின் மீண்டும் ஒட்டவே ஒட்டாது...

மனம் அதற்கு ஆயிரம் காரணங்களை கூறி வாழ் நாள் முழுமைக்கும் தடை விதித்து கொண்டே இருக்கும்..

விழிப்பு நிலையான அக குருவின் துணை நீங்கிய சமயம் அனைத்தும் பாழாகி விடும்..

இந்த பகுதியில் அனைத்து இடைஞ்சலுக்கான தீர்வு கூறப்பட்டு உள்ளது...

உபி மாநிலத்தில், விற்பனை வரி (Sales Tax) கூடுதல் ஆணையர் Keshav Lal வீட்டில் ரூ 18 கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பறிமுதல்...


அந்த வரி இந்த வரின்னு வசூலிக்கும் பணம் அதிகாரிகளின் வீட்டில் தான் உள்ளதா ?  அல்லது ரைடு பயம் காட்டி பணக்காரர்களிடமிருந்து பெற்றதா ? 18 கோடி புதிய நோட்டுக்கள் அரசு அதிகாரி வீட்டில் எப்படி வந்தது ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

தாமிரபரணியிலிருந்து நீர் எடுக்க தடை...


தாமிரபரணி ஆற்றிலிருந்து கோக், பெப்சி உட்பட 8 நிறுவனங்கள்  நீர் எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை...

மே 1ம் தேதி முதல் நீர் எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது...

இல்லுமினாட்டி களின் கூடாரமான தமிழகம்...


உலக முழுவதும் தங்கள் ஆதிகத்தை செலுத்திய இல்லுமினாட்டி  உலகின் பன்மையான நாகரிகம் வரலாறு கொண்ட தமிழகத்தை கைப்பற்ற துடியாய் துடிக்குறார்கள்..

முதலில் வணிகத்தில் புகுந்த அவர்கள் பின் சினிமா மற்றும் ஊடகம் துறையில் புகுந்து மக்களின் எண்ணங்களை மாற்ற முயலுகிறார்கள்..

தற்போது வெளியாகிய குற்றம் 23, சிங்கம் 3, போகன்  திரைப்படங்கள் அவர்களின் படைப்புகளே..

குற்றம் 23 படத்தில் இல்லுமினாட்டி சின்னம் பிரமிடு போன்ற பொருளை paper weight போன்று காட்டுவதும் இடைவேளை காட்சியில் கதாநாயகன் ஒற்றை கண்ணை கட்டுவதுமாக அவர்களின் அடையாளம் இருக்கும்..

சிங்கம் மூன்று பாகங்களும் விறு விறுப்பாக இருந்தாலும் முக்கியமாக குடும்ப மற்றும் சிறுவர்களை கவரும் வண்ணமாகவே அமையும்.

சிங்கம் 2 மற்றும் 3 பாகங்களில் போதை பொருள் மற்றும்  வெளிநாட்டு மின்னணு குப்பைகளை எரிப்பதல் ஏற்படும் பாதிப்பு கதைகலமாக இருக்கும்.

சிங்கம் 3 பாகத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பயன்படுத்தி தொலைபேசி எண்களின் தகவலை மாற்றி அமைப்பதுபோல் கதை நகரும் அவர்களால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லவே இது போன்ற காட்சிகள் அமைக்க படுகிறது.

இந்தியாவில் மறைமுகமாக வெளிநாட்டின் ரசாயன கழிவுகள் கொட்ட படுகிறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.

அவர்களின் மிக பெரிய ஆயுதமான வணிக துறை ஆதிக்கம் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

MNC ( Multi National Cooperate company)  உதவிகள் இல்லாமல் ஒரு செயல் கூட செய்ய முடியாது என்ற நிலைமை இன்று ஏற்பட்டு உள்ளது...

விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைபடுத்தி கார்டுன் வெளியிட்டு இருக்கும் விஜயபாரதம் காவி பத்திரிக்கை...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 29...


ஆல்ஃபா அலைகளும் எளிய பயிற்சியும்..

எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும் அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார். முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ்
ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டு பிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்கள் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள்.

அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்திற்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில்.

பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை ரிலாக்ஸ் (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள்.

இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள்.

உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள்.

நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

இந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்..

மேலும் பயணிப்போம்.....

சென்னை வருமான வரி அலுவலகம் முன்பு மே 17 இயக்கத்தினர் போராட்டம்...









விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்காத அரசிற்கு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் ?