30/08/2017

பாஜக மோடியும் இந்திய நீதித்துறையும்...


அரியானா தேர்தலில் ஆதரவு கொடுத்தால் ரேப் வழக்கை திரும்பப் பெறுகிறோம் என்று பாஜக டீலிங் வாக்குறுதி அளித்திருந்ததாம்...

பாஜக வின் சகுனி ஆட்டம் தொடர்கிறது...


டிடிவி அணி எம்.எல்.ஏ க்கள் பதவியை ராஜினாமா செய்வார்களா.?

பாஜக யோகியின் கொலைகள் தொடர்கிறது...


விவசாயத்தில் சாதிக்கும் மாணவர்கள் வாழ்த்துக்கள்...


பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், மாணவ மாணவியரே, காய்கறித் தோட்டம் அமைத்து, காய்கறிகள் மற்றும் கீரைகளை, சத்துணவுக்கு வழங்கி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ளது, கொத்தவாசல் கிராமம். இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 151 மாணவ மாணவியர் படிக்கும் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. காய்கறி சாகுபடிபள்ளி வளாகத்தில்,5 சென்ட் நிலத்தில், மாணவ மாணவியரால், காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் இளங்கோவன், பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் இளவழகன் மற்றும் மாணவ மாணவியரின் கூட்டு முயற்சியால், முள்ளங்கி, கத்திரி, தக்காளி, வெண்டை, கொத்தவரங்காய் போன்றவை சாகுபடி செய்து, வாரத்திற்கு, 10 கிலோ அறுவடை செய்யப்படுகிறது.

வாரம், இரண்டு நாட்கள் மட்டுமே சாம்பார் சாதம் போடுவதால், தலா, 5 கிலோ காய்கறிகளை, ஒரு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இது மட்டுமல்லாமல் அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட கீரை வகைகளும் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. எஞ்சிய காய்கறிகளை விற்பனை செய்து, சாகுபடி செலவுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டையும், மாணவர்கள் விரைவில் செய்ய உள்ளனர்...

அரசியல் சதுரங்கம்...


அதிமுக அம்மா அணியின் அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியை நியமித்து தினகரன் அறிவிப்பு...


உலகில் மிகக்கொடூரமாக வேட்டையாடபடும் இனம் மியன்மார் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்...


மனித இனம் வேட்டையாடப்படும்
கொடுப்புலிகளும் , ஓநாய்களும் வாழும் தேசமாக மாறியுள்ளதை மியன்மார் படுகொலைகள் பறை சாட்டுகின்றன.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள்  என பாரபட்சம் இல்லாமல் கொடூர கொலைகள்.


அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய ஆன்சுங்கின் அரச பயங்கரவாத ராணுவ பயங்கரவாதிகளும் புத்த தீவிரவாதிகளும் சேர்ந்து  இந்த  இனப்படுகொலையை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

உலக நாடுகள் மௌனம் காத்து வருகிறது வேதனை...


ஐ.நா மன்றம் தற்போது வாயே திறக்காது.. காரணம் இவை அனைத்தும் அவர்களின் முதலாளிகளான இலுமினாட்டிகள் விளையாட்டு இது...

விவசாயிகளை திரட்டி விதை விவசாய கூட்டமைப்பை உருவாக்கி 400 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டிருக்கிறது மே.வங்க அரசு. இங்கே?


அழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்...


தமிழகத்தில் குன்றிமணி மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தொன்மையான மரங்களில் ஒன்றான குன்றிமணி மரங்கள் பற்றிய குறிப்புகள், திருக்குறளில் 277-வது பாடலில் காணப்படுகின்றன.

‘புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து’ -திருக்குறள் 277.

இதன் பொருள்: புறத்தில் குன்றிமணி போல செம்மையான வராய் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்கு போல கருத்திருப்பவர் உலகில் உண்டு என்பதாகும்.

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் பரவ லாகக் காணப்பட்ட குன்றிமணி மரங்கள் வேகமாக அழிந்து வருவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி தரணி முருகேசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

குன்றிமணி மரங்கள் இரண்டு வகைப்படும். இதில் ஆனைக் குன்றி மணி அடிநாந்திரா பவோனினா (Adenanthera pavonnina) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மகரந்தத் தண்டில் உள்ள சுரப்பி யைக் குறிக்கும் சொல்லே அடிநாந் திரா என்பது. பவோனினா என்றால் இலத்தீன் மொழியில் மயிலிறகைப் போன்றது என்று பொருள். பவள நிறமுடைய இதன் விதைகளால், ஆங்கிலத்தில் கோரல் வுட் (coral wood) என்ற பெயர் உண்டானது.

ஆனைக் குன்றிமணி மரங்கள் 18 மீட்டர் உயரம் வரை உயர்ந்து வளரக்கூடியது. கிளைகள் விரிந்து 10 மீட்டர் அளவில் பரந்திருக்கும். இதனடியில், உதிர்ந்திருக்கும் சிவப்பு நிற ஆனைக் குன்றிமணி களைக் கொண்டே, இம்மரத்தை எளிதாக அடையாளம் கண்டு கொள் ளலாம். இதன் இலைகள் வாகை இலைகளைப் போன்று இரட்டைக் கூட்டிலை அமைப்புடையது. ஜன வரியில் இருந்து மார்ச் மாதங் களில் பூக்கள் பூக்கும். பூங்கொத் துகள் அதிகபட்சம் 20 செ.மீ. அள வில் இருக்கும். சோயா மொச் சையைப் போன்று இதன் விதை கள் இருபக்கமும் குவிந்த அமைப் புடையது. கறுப்புத் திட்டு இதில் இருக்காது.

இதன் இலையைக் கஷாயம் செய்து நாட்பட்ட வலி நோய்களுக் கும், கீல் பிடிப்புகளுக்கும், விதை களை அரைத்து கட்டிகளுக்கு பற்றிடவும் ஆயுர்வேத மருத்து வர்கள் பயன்படுத்துகின்றனர்.

குறளில் காணப்படும் ஒரே விதை..

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி மட்டுமே ஆகும். மேலும் ‘குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கருக்காது’ என்ற பழமொழியும் இதற்கு உண்டு.

ஆனைக் குன்றிமணியின் விதை முழுவதுமாக சிகப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், குன்றிமணியின் விதையில் சிவப்பாகவும் சிறிது திட்டாகக் கருப்பு நிறமும் இருக்கும்.

பண்டைய காலத்தில் தங்கம் மற்றும் வைரங்களின் அளவு அறிய குன்றிமணியின் விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. மேலும் ஆபரணங்கள் செய்வதற் கும், சிறுவர்கள் பல்லாங்குழி விளை யாடுவதற்கும் பயன்படுவதுண்டு.

இதன் இலைகள் மற்றும் வேர் கள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலியைப் போக்க வும், வேர்களைக் கொண்டு வெண் குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்கவும் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட குன்றிமணி மரங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளரும் தன்மைக் கொண்டது.

தமிழகத்தில் அரிதாகிக் கொண்டுவரும் குன்றி மணி மரங்களை பாதுகாக்க அரசு புதிதாக மரங்களை நட்டும், இருக் கிற மரங்களை பாதுகாக்கவும் வேண்டும்...

தமிழக அரசின் நூதன கொள்ளை...


வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்...

தொலைந்தால் தானே மீண்டும் ஓட்டுநர் உரிமம் எடுப்பீர்கள்.. அரசுக்கு வருமானம்...

தெலுங்கர்கள் தங்கள் இனத்தையும், சாதியையும் மறந்து.. தமிழகத்தில் தமிழராக வாழும் போது...


பாஜக மோடியின் சாதனை...


பாஜக தமிழிசை: நல்ல கேள்வி அடுத்த கேள்வி...


சீனா ஹார்பின் ஆஸ்பத்திரியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் தன்னை இனி பணம் காப்பாற்றாது என்று அறிந்து அங்கேயே வீசிச் சென்றார்...


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


உலகை ஆளும் இரகசிய குழு... Skulls and Bones...

பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள்...


பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ?

அது மட்டுமின்றி, பர்மாவின் புகழ் உலகமெங்கும் கோடிகட்டி பறந்த காலமும் இருந்தது.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், உலக சமாதானமும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் ஒங்கவேண்டும் என்பதற்காக ஐம்பெரும் தலைவர்கள் செயலாற்றினார்.

இந்திய உபகண்டத்தின் பண்டித நேரு, சீனத்து சூயேன்லாய் இவர்களுக்கு இணையாகப் பணியாற்றிய பர்மிய நாட்டு தலைவரும் ஒருவர்.

ஆசிய ஆபிரிக்க மாநாடு பாண்டாங் மாநாடு என 20 ஆம் நுற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த வியக்கத்தக்க உலக சாமாதான செயல்பாடுகளாகும்.

1975 இல் இயற்கை அடைந்த ஏந்தல் ஊத்தான் எனும் பெருமகன் உலக நடுகல் மன்றத்தின் பொதுச் செயலாளாராக இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் தன்னுடைய அறிவாற்றலைக் கொண்டு போரிலிருந்து உலகை மீட்டவர்களை குறிப்பிடத்தக்கவர் இவர் என்பதை உலகம் அறியும்.

இரண்டாம் உலக போரின் கொடூரம் ஆசியாவை உலுக்கி எடுத்ததை யாரும் இன்று வரை மறந்திருக்க முடியாது.

நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லிக் கொள்வதில் பயனில்லை என்பது எங்களுக்கு படுகிறது.

அதன் வழியில் 50 ஆண்டுகள் பின்தள்ளப்பட்ட இடத்தில் தள்ளாடித் தள்ளாடி எங்கள் வலுவுடன் எழுந்து நிற்கின்றோம் முன்னேற்றம் காண வேண்டும் என்ற  உணர்வோடு கால்நூற்றண்டுகளுக்கு மேலாக பர்மிய நாட்டு தமிழர்கள் புத்துணர்வுபெற வேண்டும் என்பதற்காக கடும் நெருக்கடிக்கிடையிலும் கட்சி பேதங்கள் காட்டாது சமய வெறி கொள்ளாது.

தன்மான உணர்வுடன் சுயமரியாதை வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக முற்போக்காளர்கள் அணிதிரண்டு செயலற்றியதன் விளைவால் இன்று பல பிரிவில் தமிழுணர்வும் தன்மான எழுச்சியும் பெற்று வருவது குறிப்பிடதக்கதாக இருந்தாலும் முழு மன நிறைவு கொள்ள இயலாது தவிப்புடன் இருப்பதை காண முடிகிறது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது முற்போக்கு அணியினரின் நம்பிக்கை சுடராகும். 1962 ஆம் ஆண்டிற்குப்பின் பர்மா தமிழர் வெளி உலகில் இருந்து ஒதுங்கி விட்டனர் எனபத? ஒதுக்கி வைக்கபட்டு விட்டனர் என்பதா? எதுவும் விளங்க வில்லை இருப்பினும் உலகெங்கும் பறந்து வாழும் தமிழர்களுக்கு இணையாக இருக்க முடியாது போனாலும் பர்மாவில் தமிழர்கள் தமிழர்களாகவே கலை கலாச்சாரம் பண்பாடு குன்றாது வாழ்ந்து வருகின்றனர் பர்ம தமிழர்கள் கலை கலாச்சாரம் பண்பாடுகள் மாறாமல் வாழ்த்து வருகிறார்கள் என்று உலகமும் தமிழ் சமூகமும் அறிய வேண்டும். உலக மயமாக்கல் மத்தியிலும் இந்த சமுதாய சீரழிவுகள் மத்தியிலும் பர்மா தமிழர்கள் தமிழர்களாகவே வாழ்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
       
இந்திய விடுதலைக்கு நேதாஜியின் தலைமையில் ஆயுதம்தாங்கிய போராட்டத்தில் உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈந்து விடுதலைப் போராட்டத்தில் குழுப் பங்கு கொண்ட தியாகத்தின் சிகரங்களாக தமிழர்கள் இருந்தபடியால்தான் எனக்கு மறுபிறவி இருக்குமானால் அப் பிறவியில் நான் ஒரு தமிழனாக பிறக்கவேண்டுமென நேதாஜி கூறினார் என்றால் தமிழரின் விடுதலை வேட்கையும் நாட்டு பற்றும இனப்பாசம் இவைகளையும் குறைத்து மதிப்பீடு செய்து விட முடியாது. இப்படி நேரு உரையில் குறி இருப்பதுடன் ஈழத்து இனப்படுகொலை நடைபெற்றதையும்.
     
தமிழ் உள்ளத்தோடு தொலை நோக்கிறோம் பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ? மொரீசியஸ்,பிஜிதீவுகள், ஆபிரிக்க, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா (தமிழ் நாடு) என தமிழர்கள் தத்தம் சிறப்புகளை அடையாளப்படுத்தும் பொழுது எங்களுக்கு (பர்மா தமிழர்கள்) சின்ன இடம் கூட கிடைக்க வில்லையே என்பது எங்கள் மனதை வாட்டி எடுக்கிறது.

தமிழைப் பேசி தமிழை வளர்ப்போம் என்று பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம் என முழங்கி வருவதுடன் கோவில்களிலும் தமிழ் போதிகப் பட முயற்சிகள் மேற்கொள்கிறோம்.

இத்தனை காரியங்கள் தொடர்ந்து செய்தாலும் எங்களை அடையாளம் காணப்படாது போய்கொண்டு இருப்பது ஊமைகள் பேசுவதாக பார்கிறார்கள் என்றோ தோன்றுகிறது ஊமைகள் பேசுவது ஒருநாள் உலகுக்கு கேட்கும் என்பதே உறுதி..

செய்தி - பர்மா நண்பர்

அந்த அம்புகளையே இந்திய ராணுவத்துக்கு கொடுத்து விட்டால் என்ன... ராணுவத்துக்கு செலவு மிச்சம்...


மகாராஷ்டிராவில் நாக்பூர்-மும்பை இடையே செல்லும் துரந்தோ விரைவு ரயில் திதிவாலாவிற்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது...


நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரயிலின் 5 பெட்டிகள் நடைமேடை மீது மோதியது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும், பலர் மோசமான நிலைமையில் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மீட்புப் படையினர் தற்போது கல்யாணிலிருந்து விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்...

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய் விடுமாம்...


பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.

இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும்.

கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.

எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.

நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

1 : அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

2: உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

3: உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

4: தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

5: தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

6: சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

7 : உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

8: 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.

இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்...

கருப்பு கலர்ல மோடி கோட் போட்டா வரும்...


பான்பராக் வாயனுங்க எல்லாம் தமிழ்நாட்டுக்காரன்னு போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து நீட் தேர்வுல தேர்வாகியிருக்கானுங்க...


பாமக அன்புமணியின் முயற்சிக்கு வெற்றி...


முதன்முறை இந்த மோசடியை வெளிப்படுத்தியது அவரே...

இந்தியை நிராகரிக்கும் வட இந்திய மாணவர்கள்… அதிர்ச்சியில் பாஜக மோடி அரசு...


இந்தியா முழுவதும் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்தி பேசும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் பொறியியல் படிப்பை இந்தியில் படிக்க முடியாது என நிராகரித்திருக்கிறார்கள்.

இச்சம்பவம் பாஜக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ’அடல்பிகாரி வாஜ்பாயி இந்தி பல்கலைக்கழகம்’  தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு முதல் இந்தி மூலம் பொறியியல் பட்டப்படிப்புகள் கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி  மூன்று பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 180 பட்டப்படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் இங்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமே நான்கு பேர் மட்டுமே சேர்ந்து பயின்றனர். ஆனால் கல்லுரி நிர்வாகமோ இது முதல் ஆண்டுதானே, அடுத்த ஆண்டு முழு அளவில் மாணவர்கள் வந்து விடுவார்கள் என நிர்வாகம் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டில் அதுவும் இல்லை! பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்த 11 பேர் மட்டும், நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். ஆனால் பி.இ. முதலாம் ஆண்டில் ஒருவர்கூட சேரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் இந்தி வழி பொறியியல் படிப்பை தொடர்வதா, இழுத்து மூடுவதா ? என்ற குழப்பமான நிலைக்கு சென்றிருக்கிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசதத்தின் தொழில்கல்வித் துறை அமைச்சர் தீபக் ஜோசி, அடல் பிகார் வாஜ்பாயி பல்கலைக்கழகமானது தன்னாட்சி அந்தஸ்து உடையது என்பதால், அதன் நிர்வாகமே இதில் முடிவு செய்யலாம் என கைவிரித்து விட்டது.

இதனால் கூடிய விரைவில் இந்தி வழி பொறியியல் படிப்புக்கள் இழுத்து மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

பாஜக விற்கு.. தமிழர்களின் சார்பாக பாமக வின் பதிலடி...


சட்டம் எல்லாம் ஏழைகளுக்கு மட்டும் தான்...


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


இவர்களே உலகை மறைமுகமாக ஆளும் ரகசிய அமைப்புகள்.. இந்த ரகசிய சமூகங்களின் முத்திரைகள் (SECRET SOCIETY SYMBOLS )....

நம்ப முடியாத தமிழர் உண்மைகள்...


மூளை வளர்ச்சிக்கு பலாப்பழம்...


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.

இப்பழத்தில் விட்டமின் A மற்றும் விட்டமின் C அதிகமாக உள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளது.

பலாக் கொட்டைகளில் விட்டமின் B-1, விட்டமின் B-2 உள்ளன.

மருத்துவ பயன்கள் :

பலாப்பழம் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுக்க பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழத்தில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி மூலம் ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் பலாப்பழத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது புற்றுநோயினைத் தடுக்க சிறந்த மருந்தாக உள்ளது.

பலாப்பழத்தில் உள்ள சத்துகள் தோல் சுருக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதால் வயது முதிர்வினைத் தள்ளிப் போடுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்துடன் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடைவதுடன் நரம்புகளும் வலுவடையும் ஆற்றல் கொண்டுள்ளது.

பலாப்பழத்துடன் சிறிது நாட்டு சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் வல்லமையை பெற்றுள்ளது.

பலாப்பழத்தில் விட்டமின் A உள்ளதால் கண் பார்வைக்கு ஏற்றதாக உள்ளது.

பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றை பலாப்பழம் குணப்படுத்துகிறது.

பலாப்பழம் உடல் சூட்டை தனிக்கும் ஆற்றல் பெற்றது.

ஆஸ்த்துமா, தைராய்டு, அல்சர் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு பலாப்பழச் சாற்றை கலந்துக் குடித்தால் விரைவில் குணமாகும்...

மன்னர்கள் கொடுத்த கொடைகள்...


வள்ளல்கள் என்று வரலாறு பலரைக் குறித்திருந்தாலும், பெரும்பாலான மன்னர்கள் பல்வேறு கொடைகளைச் செய்திருக்கின்றனர்.

பண்டைய வரலாறு,  அவர்கள் அளித்த கொடைகளைப் பொறித்து வைத்த கல்வெட்டுகளினாலும் செப்பேடுகளினாலுமே தெரிய வந்தது என்று பார்த்தோம்.

அவர்கள்  அளித்த முக்கியமான தானம் நிலங்களை இறையிலி நலமாக கோவில்களுக்கும் சில சில தனிப்பட்ட மனிதர்களுக்கும் அளித்திருக்கிறார்கள்.

இதில் தேவதானம் என்பது  சிவன் கோவிலுக்கு அளிக்கப்படும் தானம்.

திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்கும் பள்ளிச் சந்தம் என்பது சமண பள்ளிகளுக்கும் வழங்கப்படும் தானம்.

நம் தமிழ் மன்னர்கள் எல்லா சமயத்தையும் போற்றி வந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.

இது தவிர பிராமணர்களுக்கு கொடுக்கப்படும் தானத்தை பிரம்ம தேயம் என்றும் சோதிடர்களுக்கு வழங்கப்படுவதை கணி முற்றுட்டம் என்றும் அழைத்திருக்கிறார்கள்.

தானம் செய்யப் போகிற நிலத்தின் எல்லையை வகுக்க மன்னர்கள் கையாண்ட முறை விசித்திரமானது.

ஒரு பெண் யானையை குறிப்பிட்ட இடத்திலிருந்து நான்கு திசையும் நடக்கச் செய்து, அது நடந்த எல்லைகளைக் குறித்துக்கொண்டு, அதற்கு உட்பட்ட இடத்தைத் தானமாக வழங்குவது அக்காலத்தின் வழக்கமாக இருந்திருக்கிறது...

கோயில் வெண்ணி...


தஞ்சை திருவாரூர் சாலையில் நீடாமங்கலத்துக்கு சற்று முன்னே இருக்கின்ற சிற்றூர் கோயில் வெண்ணி.

சங்க காலத்தில் தமிழ் சரித்திரம் அறிந்த முதற்போர் (அக்காலத்தில்  வெண்ணிப் பரந்தலை என்று அழைக்கப்பட்ட) இங்கு தான் நடைபெற்றது.

கரிகால் பெருவளத்தான் என்று அறியப்படும் திருமாவளவனுக்கும் அவனுடைய தாயாதியருக்கும் இடையில் நடந்த இந்தப் போரைப் பற்றி பல்வேறு சங்கப்பாடல்களில் காணப்படுகிறது. முக்கியமாக பட்டினப்பாலை...

பல்ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர்
மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மாத்தானை மற மொய்ப்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாயக்...

என்று இருங்கோவேளையும் அவனுக்கு துணை வந்த பாண்டியனையும் எவ்வாறு திருமாவளவன் வெற்றி கொண்டான் என்று விவரிக்கிறது.

ஒரு பெரும் படையை இளமையிலேயே பெரு வெற்றி கொண்டான் கரிகாலன் என்று போற்றுகின்றனர் சங்க காலப் புலவர்கள்...

நாகரிகம் என்ற ஒரு சொல் இன்று நம்மை எங்கே கொண்டு சென்றுள்ளது என புரிகிறதா?


நம்ப முடியாத உண்மைகள்...


சோழர்களின் செயலாளர்கள்...


நாட்டின் மத்திய / மாநில அமைச்சர்களுக்கும் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் செயலர்கள் இருப்பது நமக்கெல்லாம் தெரியும்.

முக்கியமாக நமது பிரதமருக்கு முதன்மைச் செயலர், தனிச்செயலர் என்று செயலர் குழுவே இருக்கும்.

இது போன்றே, பண்டைய மன்னர்களுக்கும் செயலாளர்கள் இருந்தனர்.

குறிப்பாக சோழர்களின் செயலர்களின் பதவிகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

அரசர்தரும் ஆணைகளை குறிப்பெடுக்கவும் ஓலைகளில் பதியவும் ‘திருமந்திர ஓலை’ என்ற அதிகாரிகள் இருந்தனர். (இன்றைய ஸ்டெனோகிராபர்கள் போல்).

அவர்கள் எடுத்த குறிப்புகள் சரிதானா, ஓலையில் ஒழுங்காகப் பதியப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க ‘திருமந்திர ஓலைநாயகம்’ என்ற அதிகாரிகள் இருந்தனர்.

அவ்வோலைகளில் கையொப்பம் இடுவதும் அவர்கள்தான்.

மன்னர்களின் தினப்படி நாளில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை ஒழுங்குபடுத்துவது,  திட்டமிட்டபடி அவர்களின் நடவடிக்கைகள் நடக்கிறதா என்று சரிபார்ப்பது போன்ற வேலைகளையும் திருமந்திர ஓலை நாயகங்கள் செய்தனர்.

(தற்போதைய எக்ஸிக்யூட்டிவ் அஸிஸ்டண்ட் / முதன்மை செயலர்களின் வேலைகள்).

விடையில் அதிகாரி என்பவர்கள் அரசன் இடும் ஆணைகளை ஓலைகளின் மூலம் உரியவர்க்கு அளித்தல், அரசர்களுக்கு வரும் ஓலைகளுக்கு பதில் அளித்தல் போன்ற வேலைகளைச் செய்தனர்.

இப்படி ஒரு முறைப்படுத்தப் பட்ட ஆட்சி முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்படுத்திய சோழர்கள் நிர்வாகவியல் நிபுணர்கள் தான்...