30/08/2017

சோழர்களின் செயலாளர்கள்...


நாட்டின் மத்திய / மாநில அமைச்சர்களுக்கும் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் செயலர்கள் இருப்பது நமக்கெல்லாம் தெரியும்.

முக்கியமாக நமது பிரதமருக்கு முதன்மைச் செயலர், தனிச்செயலர் என்று செயலர் குழுவே இருக்கும்.

இது போன்றே, பண்டைய மன்னர்களுக்கும் செயலாளர்கள் இருந்தனர்.

குறிப்பாக சோழர்களின் செயலர்களின் பதவிகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

அரசர்தரும் ஆணைகளை குறிப்பெடுக்கவும் ஓலைகளில் பதியவும் ‘திருமந்திர ஓலை’ என்ற அதிகாரிகள் இருந்தனர். (இன்றைய ஸ்டெனோகிராபர்கள் போல்).

அவர்கள் எடுத்த குறிப்புகள் சரிதானா, ஓலையில் ஒழுங்காகப் பதியப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க ‘திருமந்திர ஓலைநாயகம்’ என்ற அதிகாரிகள் இருந்தனர்.

அவ்வோலைகளில் கையொப்பம் இடுவதும் அவர்கள்தான்.

மன்னர்களின் தினப்படி நாளில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை ஒழுங்குபடுத்துவது,  திட்டமிட்டபடி அவர்களின் நடவடிக்கைகள் நடக்கிறதா என்று சரிபார்ப்பது போன்ற வேலைகளையும் திருமந்திர ஓலை நாயகங்கள் செய்தனர்.

(தற்போதைய எக்ஸிக்யூட்டிவ் அஸிஸ்டண்ட் / முதன்மை செயலர்களின் வேலைகள்).

விடையில் அதிகாரி என்பவர்கள் அரசன் இடும் ஆணைகளை ஓலைகளின் மூலம் உரியவர்க்கு அளித்தல், அரசர்களுக்கு வரும் ஓலைகளுக்கு பதில் அளித்தல் போன்ற வேலைகளைச் செய்தனர்.

இப்படி ஒரு முறைப்படுத்தப் பட்ட ஆட்சி முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்படுத்திய சோழர்கள் நிர்வாகவியல் நிபுணர்கள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.