19/10/2021

சித்தராவது எப்படி - 25...

 


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஒன்று...

சுவாச ஒழுங்கு பயிற்சி செய்யும் அன்பர்கள் தங்கள் தேகம் பெற்றுக் கொண்ட ஆற்றலை சூட்சம தேக பயிற்சியின் மூலம் சேர்த்து வைக்கும் பயிற்சியை கற்று தரப் பட்டது..

ஆனால் மோன நிலையில் அதை மறந்து போகும் தருவாயில் அதிகமாக கிடைக்கப் பெற்ற ஆற்றல் சூட்சம தேகத்தின் மிக முக்கியமான பகுதிகளின் வழியாக ஓட துவங்கும்..

அப்படி ஓட துவங்கும் அந்த ஆற்றல் ஒரு முறையில்லாமல் அதன் பயணப்பாதையில் எங்கோ ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கி எங்கே முடிவது எங்கே துவங்குவது என்று தடுமாறி கொண்டு இருக்கும்..

ஆகவே சூட்சம தேகத்தில் ஓடும் பாதையை, அதற்கு அடையாளம் காண்பித்து முறையான ஒரு ஓட்டத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்...

இப்படி முறையான ஓட்டத்தின் மூலம் ஆற்றல் செல்லும் போது அது தேகத்தில் மையம் கொண்டுள்ள பஞ்ச பூத நிலைகளை, செம்மைப் படுத்தி முடிவாக பிரபஞ்ச ஆற்றலோடு கலக்க உதவி செய்யும்...

அப்படி ஒரு முறையான பாதையை அடையாளம் காணவே சில பகுதிகளை வெளியிட வேண்டிய அவசியம் ஆகிறது...

முதலில் அடையாளம் காட்டி சற்று பயிற்சி செய்தால் சுவாச ஒழுங்கு மூலம் பெறப்படும் ஆற்றல் அதன் வழியாக பாயத் தொடங்கும்..

அதன் வழியாக பாயும் போது என்னென்ன மாற்றங்கள் நம் பஞ்ச பூத நிலைகளில் ஏற்படும் என்பதையும் காணலாம்..

எச்சரிக்கை : சுவாச ஒழுங்கிலே பயின்று பக்குவப் படாதவர்களுக்கு இது பயன் படாது.. அதில் அதிகப் படியான ஆற்றலை பெறாதவர்களுக்கும் பயன் படாது..

பெற்ற ஆற்றலால் உடம்பில் முக்கியமாக தலையில் சில ஊரல்கள் உணர்வுகள் தோன்றியவர்களுக்கு மிகவும் பயன்படும்...

ஆறு ஆதார மையங்களில் முறையான முறையில் பயணப் படும் இந்த ஆற்றல் பத்து பயணப் பாதைகளை தேர்ந்தெடுத்து அதில் முறையாகப் பயணப் பட்டால் மட்டுமே மேன்மை அடைய முடியும்..

அந்த பத்துப் பயணப் பாதைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்..

முதல் மையமான மூல ஆதாரம் என்பது ஜல மல துவாரங்களுக்கு இடையில் உள்ளது..

இரண்டாவது மையம் தலையின் பின் பகுதியில் புருவ மத்திக்கு நேரே பிடரி என்ற இடத்தில் உள்ளது...

முதலில் இந்த இரண்டுக்குமான பயணப் பாதையை பயிற்சியின் மூலம் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும்..

உள்நகைத்தல் என்ற பயிற்சியை சில வகுப்புகளில் கற்று தரப் பட்டது.. அதில் ஜீவ சக்தி மூல ஆதாரத்திலிருந்து தலைக்கு பயணப் படுவதை பெரும்பாலோர் உணர்ந்தனர்..

இப்பொழுது அந்த பயணம் மூல ஆதாரத்திலிருந்து பிடரியை நோக்கி நகர்ந்து பிடரியை தொட வேண்டும்..

சுவாச ஒழுங்கில் சூரிய கலையாகிய வெளி மூச்சில் பிடரியிலிருந்து மூலாதாரத்தை நோக்கிய பயணமாக ஆற்றலின் உணர்வு இருக்கும்...

சந்திர கலையாகிய உள்வாங்கும் மூச்சில் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கிய பயணமாக ஆற்றலின் உணர்வு இருக்கும்..

இதை ஒரு நாளும் மறக்கக் கூடாது.. இது சுவாசத்திற்கு மிகவும் இயல்பானது.. மாற்றி செய்தால் பெரும் சிக்கல் ஆகி விடும்..

இது பத்து பயணப் பாதைகளில் முதல் பயணப் பாதை.. இதில் பூர்த்தி செய்த பின்பு தான் இரண்டாவது பயணப் பதையில் கால் எடுத்து வைக்க முடியும்...

இந்த மூலாதாரம், பிடரி என்பது என்ன வென்று பார்ப்போம்...

சுவாசம் சூரிய கலையில் தோன்றா நிலையில் இருக்கும் போது இந்த மூலாதார மையம் தான் பிரபஞ்ச ஆற்றலோடு இசைந்து இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெறுகிறது.. வேறு எந்த ஆதாரத்திற்கும் அந்த சக்தி கிடையாது..

புருவ மத்திக்கு அறவே கிடையாது.. புருவ மத்தியில் மூலாதார தொடர்பை துண்டித்து அளவிற்கு அதிகமான நேரம் பயிலும் பொழுது தேகத்தில் அதிக சோர்வு உண்டாகிறது..

சில குருமார்களின் பயிற்சிகளில் இந்த சோர்வு நிலைதான் உருவாகிறது.. இதனால் தேகம் மிக விரைவாக பழுது அடைகிறது..

உடலில் சூடு என்பது தேகத்தில் ஆற்றலின் குறைபாடே என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்...

முறையற்ற பயிற்சியில் சூடு சம்பந்தப் பட்ட வியாதிகளீல் அவதி படுவது எதனால் என்றால் பயிற்சியில் சுவாசத்தின் மூலமாக தோன்றா நிலை ஏற்படாமல் அதனால் நமது மூலதார மையம் அதனோடு இசைந்து பிரபஞ்ச ஆற்றலை ஒழுங்காக பெற முடியாமல் போவதால் தான்..

இந்த சாதாரண அதிமுக்கிய இரகசியத்தை ஒரு போதும் மறக்காமல் இருந்து பயின்றால் மட்டுமே அதிகப் படியான ஆற்றல் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கி நகரும்..

இந்த பிடரி என்பது நினைவகம்.. நான் யார் என்ற கேள்விக்கான பதிலை பல ஜென்மங்களின் அனுபவங்கள் வழியே ஊடுருவி பாய்ந்து பாய்ந்து அந்த பதிலுக்க்கான விளக்கங்களை விரித்துக் கொண்டே போகும்..

இந்த பிடரியை அடையாத ஆற்றல் இருந்தால் இரமணர் சொன்னது போல் நான் யார் என்ற கேள்விக்கான பதிலை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அறிந்து கொள்ள முடியாது...

பிடரி என்ற மையத்தை ஆற்றல் பூரணமாக அடையும் போது அந்த பதிலும் பூரணமாக கிடைக்கப் பெற்று பலம் வாய்ந்த இருப்பு தன்மையால் நாம் யார் என்ற கேள்விக்கான பதிலும் பூரணமாக கிடைக்கும்...

இந்த முதல் பயணப் பாதையில் இடைப்பட்ட சக்கரங்களை ஒன்று சேர செம்மை படுத்தப் படுவதால் தேகமும் முழுமையாக நலம் பெறுகிறது..

அந்த சக்கரங்களில் நாம் அதிகம் நாட்டம் கொள்ள தேவை இல்லை...

எந்த பயிற்சியாக இருந்தாலும் அது சுவாச ஒழுங்கின் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும்.. இல்லையேல் எதுவும் பலனற்று போய் விடும்...

சித்தர் நிலை நோக்கி பயணிப்போமாக...

காவல்துறை செய்யும் உதவி...

 


மனைவிய உக்கார வச்சி ஓட்டிட்டு போனா ஏன் போலிஸ் வண்டிய நிறுத்தமாட்றாங்க தெரியுமா...

ஏற்கனவே பிரச்சினைய கூட கூட்டிட்டு போறான் நாம வேற எதுக்கு கூடுதலா பிரச்சினை கொடுக்கனும்னுதான் விடுறாங்க..

🤣🤣🤣🤣

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


சித்தராவது எப்படி - 24...

முன் நின்று சாதித்தல், உடன் இருந்து சாதித்தல்...

இதுவரை முன் நின்று சாதிக்கும் முயற்சியில் அனைத்து மதங்களும் முயன்று முயன்று தோற்றுப் போய் விட்டன..

இதுவரை எந்த பலனையும் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும் பெறமுடியவில்லை..

முன் நின்று சாதிக்கும் முயற்சியில் தோற்றுப்போய் சோர்ந்து விழுந்து விட்டு பின் தன்னை அறியாமல் தானே உடன் இருக்கும் முறைக்கு மாறியதால் பெருத்த பலனை அடைந்தார்கள்..

மதங்கள் எல்லாம் உச்சத்திற்கு ஒரு மிக பெரிய தோல்வி நிலைக்கு அழைத்து சென்று, அங்கு மனதை ஒடுக்கி பின் மனம் தாண்டிய நிலைக்கு அழைத்து செல்லப் படுவதால், அங்கு எண்ணியது கிடைத்தாலும், கிடைத்ததை செயல் படுத்த மனம் வலுவற்ற நிலையில், கிடைத்ததை பயன் படுத்த முடியாமல் போகிறது...

இதுவும் மிக பெரிய தோல்வியே ஆகும்.. கை எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்..

ஆனால் உடன் இருந்து சாதிக்கும் ஒரு அற்புத வித்தையை மனிதன் கற்றுக் கொள்ளவும் இல்லை.. அவனுக்கு கற்றுக் கொடுக்கப் படுவதும் இல்லை..

ஒவ்வொரு மனிதனும் தோல்வியின் உச்சத்திலே மட்டுமே அடையும் அந்த வித்தையை அவன் மனித குலத்திற்கு சொல்லி கொடுக்க நினைத்தாலும், அது மற்றவர்களை துளியும் கவருவதில்லை..

அவன் மிக மோசமான நிலையை ஏற்கனவே அடைந்த காரணத்தால் அவன் தோல்வி நிலையை மையப் படுத்தப் படுவதால் கவர்ச்சியை விரும்பும் மனிதர்கள் அவனுடைய சொல்லை மதிப்பதில்லை..

அது சரி அது என்ன முன் நின்று சாதித்தல் உடன் இருந்து சாதித்தல் ?

இறைவன் முன் நின்று போராடி அழுது புலம்பி கெஞ்சி கொஞ்சி கதறி முறையிட்டு தனக்கு வேண்டியதை சாதிக்கும் பக்தனை போல உலகத்தவர் ஒரு பக்கம்..

இறைநிலை என்னவென்று அறிந்து அந்த நிலையோடு உடன் பட்டு இசைந்து வாழ்ந்து, அந்த இசையால் இறை ஆற்றலை தன்னுள் உள்வாங்கி கொண்டு வல்லவன் ஆகும் மற்றொரு முறை..

இந்த உடன் இருத்தலில் அந்த இறை ஆற்றலோடு இசையும் நிலைக்கு இருப்பதால் எந்த வித பயிற்சியும் இல்லாமல் இசைதல் என்ற உன்னத நிலை மூலம் இறை ஆற்றலையெல்லாம் பெற்று இறைநிலைக்கு நிகராக தன்னை ஆக்கி கொள்வதாகும்.. சும்மா இருக்கும் சுகம் என்பது இதுவே ஆகும்..

அப்படி சும்மா இருத்தலின் மூலம் இறை நிலைக்கு இசைந்து வாழ சூழ்நிலை ஏற்படுகிறது..

சும்மா இருத்தலின் மூலம் இசைந்து இருக்க தெரிந்து இருக்க வேண்டும்..

அப்படி இசைந்து இருக்க தெரியவில்லை என்றால் பல ஆண்டுகள் சும்மா இருந்தாலும் பலன் ஒன்றும் இல்லை..

இப்படி சும்மா இருப்பதின் மூலம் மட்டுமே இசைந்து இருக்க முடியும் என்பதும் மிக தவறான கருத்து..

நெருப்பில் நடக்கும் போதும் கூட இசைந்து இருக்க முடியும்.. இதை நாம் மறக்கக் கூடாது...

செயல் பாட்டிலும் சும்மா இருக்கும் நிலையும் சாத்தியப் படும்.. இது ஒன்று தான் நம்மவர்களுக்கு புரியாததாக உள்ளது.. அதை பின்பு பார்த்துக் கொள்ளலாம்...

இப்படி இசைந்து இருக்கும் நிலையை பெருக்குவது எது என்றால் சுவாச ஒழுங்கு மட்டுமே..

எந்த வேலை செய்தாலும் சுவாச ஒழுங்கில் இருக்கும் போது சும்மா இருக்கும் சூழ்நிலை போன்ற அமைதியும், இசைந்து இருக்கும் உன்னத நிலையும் கிடைக்கிறது...

சரி அப்படி இசைந்து இருக்க, இசைப்பது ஒன்று இருந்தால் தானே அதற்கு நாம் இசைந்து இருக்க முடியும்.. வேறு எந்த பயிற்சியிலும் இசைக்கும் ஒன்றை காணவே முடியாது..

அந்த இசைக்கும் ஒன்று உருவானால் அதை வலுவுள்ள மனம் உடனே நீக்கி விடும்.. அதற்கு முன் சுவாச ஒழுங்கில் நம்மை இசைக்க வைப்பது எது..

எது ஒன்று சுவாசத்தை இசைக்க வைக்கிறதோ அதற்கு தானே நாம் சுவாச ஒழுங்கில் இசைகின்றோம்..

சுவாச ஒழுங்கில் நாம் இசைவது சுவாசத்தை இயக்கும் இறை சக்தியின் அம்சமான உயிர் சக்தி அல்லவா ? இதை யாராலும் நீக்க முடியாது..

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது சுவாச ஒழுங்குடன் இருப்பது இறை ஆற்றலுக்கு இயங்கி, இசைந்து, உடன் இருத்தலுக்கு இணையானது...

அதனால் முன் நின்று சாதிக்கும் வழக்கமான மிக கடினமான முறையை விட்டு விலகி உடன் இருந்து பயன் அடையும் ஒரு உன்னத ஆன்ம லாபம் தரும் நிலைக்கு வருகிறோம்..

முன் நின்று சாதிக்கும் நிலையில் பல கோடி சமயவாதிகள் ஏதோ கடவுள் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் ஒரு மாயை தோற்றத்தில், கடவுளை விட்டு விலகியே இருக்கிறார்கள்..

ஆனால் உடன் இருக்கும் நிலையில் ஒரு சித்தன் கடவுளை பற்றி அதிகம் பேசாமல் கடவுளை மறந்தவன் போல் இருந்தாலும், கடவுளோடு உடன் இருக்கும் உன்னத நிலையில் இருக்கிறான்..

கடவுளுடன் இணைந்து இருக்கும் போது, கடவுளை விட்டு விலகி முன் நிற்கும் அவல நிலையை சித்தர் போன்ற மகான்கள் போவதில்லை...

சத்தியமான உண்மை இதுதான்.. கடவுள் யாரையும் காப்பாற்றுவதில்லை.. துளியும் காப்பாற்றுவதில்லை..

ஆனால் வல்லமை வாய்ந்த இசைக்கப் படும் இறை ஆற்றலுக்கு இசைந்து வாழும் உயிர்களே பல் வேறு உயிர் தோற்றங்களை பெற்று வாழ முடிகிறது.. இசைந்து வாழ்வதில் குறை ஏற்படும் பொழுது மரணத்தை தழுவுகிறது...

இறை ஆற்றலுக்கு இசைவதாலே மட்டுமே அனைத்தும் நடக்கிறது.. இந்த உண்மையால் மட்டுமே உண்மையான ஆன்மீகம் வெளிப்படும்..

ஆகவே சுவாச ஒழுங்கினை இறுகப் பற்றி விரைவில் சித்தராக முனைவோமாக...

அதிமுக குட்கா விஜயபாஸ்கர் கலாட்டா...

 


பிராடு பாஜக மோடி அரசு கலாட்டா...

 


ஆதி தென்னிந்திய மரபணு - ANCIENT SOUTH INDIAN DNA...

 


மனிதர்களுக்கு வணக்கம் ! தலைப்பை பார்த்தவுடன் புரிந்திருக்கும் இது மரபணு சம்பந்தப்பட்ட மிக முக்கியமான தகவல் ! 

ஆம் தென்னிந்தியாவில் இருக்கும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்தான் ! கடைசி வரை படியுங்கள் ! இதன் முடிவில் உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கும் !

சரி விஷயத்திற்கு வருவோம் ! 

முதலில் உலக அளவில் மனித இனத்தை உருவத்தைக் கொண்டு இனம் பிரிப்போம் !

மரபியல் ஆராய்ச்சிகள் தேடுதல்கள் வலுப்பெற்ற 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் மனித இனங்களின் உருவ அமைப்பை வைத்து சில பிரிவுகளை ஏற்படுத்தினார்கள். இந்தப் பிரிவுகளுக்குள்ளேயே உலகின் மொத்த மனித பிரிவுகளையும் உள்ளடக்கினர். அவை 

1.வெள்ளை காகேசியன்

2.மஞ்சள் நிற ஆசிய மங்கோலாய்ட்

3.நீக்ராய்டு கறுப்பு

முதலில் இந்த மூன்று பிரிவுகள் தான் இருந்தன !

தென்னிந்தியாவில் பழங்குடிகளும் சாதியும் என்ற நூலை எழுதிய மரபியல் ஆராய்ச்சியாளர் எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியர்களை நீக்ராய்டு கறுப்பு என்ற மூன்றாவது இனத்தில் சேர்த்தார்.

ஆனால் தென்னிந்தியர்களுக்கு நீக்ரோ இன மக்களைப் போன்ற சுருட்டை முடியும் தடித்த உதடுகளும் இல்லை என்பதைத் தாமதமாகக் கண்டு கொண்டவர் பின் புதிய பிரிவொன்றினை நீக்ராய்டு பிரிவின் உட்பிரிவாக்க உருவாக்கினார் அதன் பெயர் ஆஸ்ட்ராலய்டு !

ஆஸ்ட்ராலாய்டு என்ற புதிய பிரிவை நீக்ராய்டு பிரிவின் உட்பிரிவாக்கி அதில் தென்னிந்தியத்களைச் சேர்த்தார். பின்னர் ஆஸ்திரேலியப் பழங்குடிகளையும் இதில் இணைத்தனர் !

இப்போது தென்னிந்தியர்கள் எல்லாம் நீக்ராய்டு உட்பிரிவை சேர்ந்த ஆண்ட்ராலய்டு என்று நினைப்பீர்கள் ! அதுதான் இல்லை 1889 ல் ஒரு திருப்பம் ஏற்ப்பட்டது ! 

1.1889 இல் ரெட்ரிச் வாசல் என்ற ஆய்வாளர் இதை ஏற்க மறுத்து தென்னிந்தியர்கள் திபெத்திய மக்களின் உருவமைப்பைக் கொண்டுள்ளதால் அவர்கள் மங்கோலாய்டு பிரிவினர் என்றார்.

2.ஜோசப் கெனின் என்ற மரபியல் ஆராய்ச்சியாளர், இதையும் ஏற்க மறுத்தார். தென்னிந்தியர்கள் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் ஆகிய மூன்று பிரிவினரும் மற்ற உலக இனங்களை விட தனித்தன்மையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளதால் அவர்களை நீக்ராய்டு பிரிவில் வேறு ஒரு உட்பிரிவு ஏற்படுத்தி இணைக்க வேண்டும் என்றார். அதை

அ.சுருள் முடியுடைய நீக்ராய்டுகள்

ஆ.சுருள் முடி இல்லாத நீக்ராய்டுகள்

என வகைப்படுத்தி அதில் தென்னிந்தியர்களை சேர்த்தாலும், தமிழினத்தை சேர்க்க முடியவில்லை.

3.டார்ல்டன் ஸ்டூன் என்ற ஆய்வாளர் தென்னிந்தியர்கள் காகேசியர்கள் என்ற பிரிவில்தான் அடக்கப்பட வேண்டும் என்றார்.

இப்படி ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடிய தென்னிந்திய மரபணு குழப்பத்திலேயே இருந்தது ! இது மட்டுமா அடுத்து இன்னுமொன்று உள்ளது ! அதையும் பார்த்துவிடுவோம் !

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஆதரித்ததற்காக "டார்வின் புல்டாக்" என்று அழைக்கப்பட்ட தாமஸ் கக்சி 1976 இல் ஜந்தோக்ராய்டு என்ற புதிய பிரிவை உருவாக்கி உலக மக்களை நான்காக வகைப்படுத்தினார்.

1.ஜந்தோக்ராய்டு

2.வெள்ளை காகேசியன்

3.மஞ்சள் நிற ஆசிய மங்கோலாய்ட்

4.நீக்ராய்டு கறுப்பு

ஜந்தோக்ராய்டு உட்பிரிவுகள் :

அதிக வெள்ளை நிறம் கொண்டவர்கள் (fair white) அதிக கறுப்பு நிறம் கொண்டவர்கள் (dark white) என்று பிரித்து இந்த கருப்பு வெள்ளை பிரிவுக்கு மெலனோ கிராய்க் என்று பெயரிட்டார்.

இவரது இறப்புக்குப் பின் இவரது ஆராய்ச்சிகளைத் தீவிரமாகத் தொடர்ந்த வில்லியம் ரிப்ளி, Fair white பிரிவினரை நார்டிக் பிரிவு (Nordic race) என்றும் Dark white பிரிவினரை மத்தியதரைக்கடல் பிரிவு (Mediterranean race) என்றும் வகைப்படுத்தினார்.

இந்த மத்தியதரைக்கடல் பிரிவில்தான் தென் இந்தியர்களோடு சேர்த்து இத்தாலியர்கள் ஸ்பானியர்கள், ஜெர்மானியர்கள், ஈரானியர்கள், லெபனான், இரான், கிரேக்கர்கள் தென்பகுதி ஸ்லாப் மக்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஜார்ஜியா மக்கள் எகிப்தியர்கள் அரேபியர்கள் ஆகியோர் வகைப்படுத்தப்பட்டனர்.

தற்போது இறுதியாக வில்லியம் ரிப்ளி அவர்களின் மரபியல் பிரிவு கோட்பாடு தான் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு வழியா மத்திய தரைக்கடல் பகுதியில் தென்னிந்தியர்களை சேர்த்துவிட்டார்கள் ! அப்பாடா என நீங்கள் பெருமூச்சு விடுவது தெரிகிறது ! பொறுங்கள் அடுத்து ஒன்று இருக்கிறது ! 

Herbert Hope Risley என்ற பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேய மரபியல் ஆராய்ச்சியாளர், இந்திய இனங்களை பின்வருமாறு பிரித்தார் !

1.துருக்கி இரானியர் (The Turk-Iranian)

2.இந்தோ ஆரியர்(Indo-Aryan)

3.சைத்தோ திராவிடன் (Scytho-Dravidian)

4.ஆரிய திராவிடர்(Aryo-Dravidian)

5.மங்கோலிய திராவிடர்

(TheMongol-Dravidian)

6.மங்கோலாய்ட்(The Mongoloid)

7.திராவிடர் (The Dravidian)

8.The Negrito

இதுவும் சற்று குழப்பான மரபணு வகைப்பாடு போல் தெரிந்தது.

இந்திய வரலாற்றில் புரட்சிகரமான ஒரு முடிவாக இத்தனை காலம் ஐரோப்பிய அமெரிக்கர்கள் மட்டுமே இந்திய இனங்களை ஆய்வு செய்துவந்த நிலையில் 2009 இல் இந்திய அரசே இந்தியர்களின் மரபணுவை ஆராய்ந்து வகைப்படுத்த திட்டமிட்டது.

ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அரசுக்கு சொந்தமான Centre for Cellular and Molecular Biology ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக இந்தப் பெரும் ஆராய்ச்சியைத் தொடங்கியது. 

திராவிட ஆரிய சார்பு ஆய்வாளர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதில் இந்த மையத்தின் தலைவரான " Father of Indian DNA fingerprinting" என்று புகழப்பட்ட லால்ஜி சிங் மிக உறுதியாக இருந்தார். இவர்தான் ஆராய்ச்சியை தலைமையேறறார் !

அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, ஒரியா, ஹிந்தி என பல்வேறு மொழி பேசும் நடுநிலையான கொள்கை சார்பு இல்லாத ஆராய்ச்சியாளர்களை கவனமாக தேர்ந்தெடுத்து குழுவை உருவாக்கினார். தொழில்நுட்ப மற்றும் மரபியல் உதவிகளுக்காக இந்தவகை ஆராய்ச்சிகளில் புகழ்பெற்று விளங்கும் அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களையும் இந்திய அரசின் அனுமதியுடன் இணைத்துக் கொண்டது. அவை..

1.Harvard medical school

2.Harvard school of public health

3.Board institute of Harvard

4.Massachusetts institute of technology

லால்ஜி சிங் தலைமையில் குமாரசாமி தங்கராஜ் என்ற தமிழரின் வழிகாட்டுதலில் ஆராய்ச்சி தொடங்கியது.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்தியாவில் இரண்டு தனித்தன்மை உடைய மரபணு வகைகள் கண்டறியப்பட்டன.

1.ஆதி வட இந்தியா (ancestral North India)

2.ஆதி தென்னிந்தியா(ancestral South India)

இதில் ஆதி தென்னிந்திய மரபணு காலத்தால் முற்பட்டது என்ற முடிவு கிடைத்தது ! அனைத்து இந்திய குடிமக்களையும் இந்த இரண்டு பிரிவில் வகைப்படுத்தினர்!

கலப்பினம்...

1.ஆதி வட இந்திய மரபணுவில் ஆதி தென்னிந்திய மரபணு மூலக்கூறு குறைவாக இருந்தது.

2.அதேபோல் ஆதி தென்னிந்திய மரபணுவில் ஆதி வட இந்திய மரபணு மூலக்கூறு குறைவாகவே இருந்தது.

அவர்களின் ஆய்வின் முடிவின்படி ஆதி வட இந்திய கூறு ஆசியாவின் மேற்குப் பகுதியிலும் ஐரோப்பியாவில் பரவலான மக்களிடமும் காணப்படுகிறது.

அந்தமான் நிக்கோபாரிலும் கூட மரபணுக்கள் பெறப்பட்டது. அந்தமான் மக்கள் தென்னிந்திய மரபணுவோடு நெருங்கியிருந்தனர்.

சரி இந்த இந்த ஆதி தென்னிந்திய மூலக்கூறு உலகில் யாரோடு தான் ஒத்துப் போகிறது ! இதன் மூலக்கூறு எங்குதான் உலகில் உள்ளது !? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால் நீங்கள் உண்மையை உணர வேண்டிய நேரம் இது ஆம் , ஆதி தென்னிந்திய மரபணு மூலக்கூறு உலகில் எங்குமே காணப்படவில்லை அது தனித்து நின்றது என ஆராய்ச்சி முடிவுகள் வந்ததன !

இப்போது கூறுங்கள் தென்னிந்திய மூலக்கூறு யார் !? உங்கள் மரபணுக்களை உலகளாவிய வல்லாதிக்க சக்திகள் குறிவைக்க காரணம் என்ன!? உங்களை ஏன் அனைத்து மரபணு பிரிவும் சொந்தம் கொண்டாடின !? ஏன் நீங்கள் தனித்த மூலக்கூறு என சொல்ல தயங்கின !?யூனியன் ஆஃப் சவுத் இந்தியாவுடன் ஐரோப்பிய இணைப்பு என்ற அரச குடும்ப திட்டம் ஏன் உங்களோடு சொந்தம் கொண்டாட இப்படியான கட்டமைப்பை அமைக்கின்றன!? இந்த உறவாடி கெடுத்தல் என்பது ஏன் !?

தனித்து நின்ற மூலக்கூறு யார் கொடுத்தது !? எங்கிருந்து வந்தோம் !?

(மீண்டும் சொல்கிறோம் பெரும்பாலன ஒத்த மரபணு உட்பிரிவை கொண்ட மனிதர்களுக்கும் தனித்து நின்ற மரபணுவை சேர்ந்தவர்கள் மனிதர்களுக்கு வணக்கம் என சொல்லுவது ஏன்!? என்ன தொடர்பு !? ) யார் நீங்கள் !?

சிந்தனை ஓட்டத்தை தட்டி விடுங்கள்...

சிங்கிள்ஸ் வாழ்க்கை தான் நிம்மதியானது, பாதுகாப்பானதும் 😁

 


2022 (tsunami) 2009ல் இந்த படம் வெளியிட்டுள்ளார்கள்...

 


2022 செயற்கை சுனாமி உருவாக்கி விட்டுவிடுவானுங்களோ...

ஒரே கன்பூஸ்சா இருக்கே.. 😳

அய்யோக்கிய பிராடு பயலுங்களின் கார்ப்பரேட் அரசியல்...