10/12/2020

தமிழரறிவு - அரைஞாண் கயிற்றின் மருத்துவ ரகசியம்...


அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க.. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை. அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது.

ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறு கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.

நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...

கார்ப்பரேட் கைகூலி பாஜக மோடியும்... அடிமை அதிமுக எடப்பாடியும்...

கொஞ்சம் பேரு ஊட்டி மலை ரயில் தனியாருக்கு விற்கலைனு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அது உண்மைனா மாமி எதுக்கு இதை பற்றி பேசணும்?

மாமி Air India விமானத்தையே கூவி கூவி விற்கும் இது வெறும் ரயில் தான எம்மாத்திரம் 😡

மராட்டிய ரஜினிக்கு மானம் இல்லை...

 


அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல்...

 


நமது விவசாயிகள் மட்டுமின்றி, உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள்..?

 


எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?

அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..?

கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும்.

மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?

விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?

PDS system  என்னாவது ..?

Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?

கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா.?

ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில் ஒரு சட்டமா அல்லது திட்டமிட்ட சதியா ..??

மேலும் பல கேள்விகள் எழுகின்றன..

சிலர் ஆதாயத்திற்காகவோ அல்லது ஒரு சார்பு நிலை எடுத்துவிட்டதாலோ உழவர்களை கிண்டலடிக்கலாம்..

ஒரு அரசு கடும் குளிரில் அமர்ந்து போராடும் லட்சக்கணக்கணக்கான உழவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஐந்து நாட்கள் குளிரில் அவதிப்படுங்கள், நாங்கள் எங்களுக்குள் வசதியாக அமர்ந்து பேசி மீண்டும் உங்களுடன் பேசுவோம் என்பது எந்த விதத்தில் நியாயம் என்பதனையும் எண்ணிப் பார்க்கவேண்டும்..

இந்த வலிகள் ஏதோ ஒரு சந்தர்பவசமாக பல மாநிலங்களில்  ஆட்சியில் அமர்பவர்களுக்கோ புரியாது..

புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள்..

ஆனால், உழவுக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இதன் பெரும் கேடு தெளிவாகப் புரியும்..

உழவுக்கு தலை வணங்குவோம்..

உழவரைப் போற்றுவோம்..

உழவர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்..

சூட்சும உலகங்கள்...

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.

தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),

வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),

தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),

மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)

ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?

ஒரு தொழிலாளி { மோடி } தன்னுடைய முதலாளி { அதானி & அம்பானி } க்கு விஸ்வசமாக இருப்பது என்ன தவறு.. இதை ஏன் மக்கள் புரிந்து கொள்ளவில்லை...

 


வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்...

 


கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் : 50

“விட்ட மதனை விரைவா யிரட்டித்து

மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்

ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்

தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்...

விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r

(விட்டம் = 2r ); மட்டு நாண் மாதவனில்

மாறியே = 4 ஆல் பெருக்கு; எட்டதனில்

ஏற்றியே = 8 ஆல் பெருக்கு; செப்பியடி =

20 ஆல் வகு.

வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r = 2 ( 16/5) r = 2 π r

இங்கு π = 16 / 5 = 3.2

( இது ஓரளவுக்குத் துல்லியமான

தோராயமே ) இன்று நாம் பயன்படுத்தும்

வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற

சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல

நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...

நமக்கு சோற்றை விட பொழுதுபோக்கு முக்கியம் ஆகிவிட்டது...

 


வேசி ஊடகத்தை வைத்து உளவியல் ரீதியாக மக்களை இப்படி தான் கட்டுப்படுத்துகிறார்கள்...

பாஜக மோடி போட்டுள்ள காட் ஒப்பந்தம் தான் காரணம்...

 


இதன் மூலம் செயற்கை உணவு பஞ்சம் உருவாக்கி... இந்தியா வை அம்பானி & அதானி தலைமையில் கொண்டு வருவார்கள்...

தமிழர்கள் தான் உலகின் தொல்குடி நண்பர்களே...

 


தமிழர்கள்தான் இந்தியாவில் அல்ல, ஆசியாவில் அல்ல, உலகின் தொல்குடி என்பதற்க்கான ஆதாரம் கீழே....

நேஷ்னல் ஜியோகிரபிக் மற்றும் மரபனு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர் வெல்ஸ் மற்றும் திரு.பிச்சப்பன் என்பவரும் இனைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபனுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அதில் நம் மதுரை அருகிலுள்ள ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் குடும்பத்தில் 13 நபர்களுக்கு ஒரே வகையான M130 என்னும் மரபனுவை கண்டறிந்துள்ளனர்.

இம்மரபனு 70,000 வருடங்கள் பழமையானது இதன் தொடர்ச்சிகள் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆப்ரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக ஆஸ்த்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழன் தன் இந்தியாவின் தொல்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித நாகரீகம் தோன்றுவதற்க்கு முன்னமே தோன்றியவன் தமிழன் ஆனால் இன்று நம் நிலை.....

உலகமே நம்மில் ஆரம்பித்தது இன்று நாம் அடி வாங்காத இடமே இல்லை எனும்நிலை , இலங்கையிலிருந்து, மலேசியா, மும்பை, கர்நடகா, ஆந்திரா, கேரளா, இந்தியா, ஏன் தமிழகத்திலேயே தமிழக அரசு நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது. காரணம் நம் வரலாறு நம்மிடம் மறைக்கப்பட்டது தான்.....

தமிழனுக்கு தான் யார் என்பதை உனர்த்த வேண்டிய தருனம் இது...

ஒன்றினைவோம் வரலாற்றை மீட்போம்....

Source : http://zeitlerweb.com/about-2/dna-shows-70000-year-link/

http://www.livemint.com/2010/01/01150352/Who-went-where-when-On-the-t.html

http://www.indianexpress.com/news/journeyofaman/6685/0

http://www.youtube.com/watch?v=lAOBorWQct8

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட, மத்திய ஆய்வுக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்ற வேலுார் ரிசர்வ் போலீஸ் டி.எஸ்.பி. விநாயகத்தை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக துரைமுருகன் ஆதரவாளர்கள்...

 


மக்கள் விரோதிகள் பாஜக பிராடுகள்...

 


உங்களுக்கு தெரியாத அதிசய பல்லி...

 


பல்லிகளை நீங்கள் சாதாரணமாக அறிவீர்கள். ஆனால் நாம் இங்கு அறிமுகப்படுத்தப் போகின்ற பல்லி இனம் நீங்கள் காண்கின்ற பல்லிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டது.

ஆர்மடில்லோ பல்லி என்பது இதன் பெயர்.

தென்னாபிரிக்க பாலைவனங்களில் வாழ்கின்றது. சுற்றி வளைக்க கூடிய வாலை உடையது.

ஆர்மடில்லோ பல்லி குஞ்சுகள் 6 முதல் 8.5 அங்குலம் வரை இருக்கும். இவ்வகை பல்லிகளின் நடத்தைகள் மிகவும் வித்தியாசமானவை.

உதாரணமாக கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் 60 பல்லிகள் வரை இருக்கும். பெண் பல்லிகள் குஞ்சு ஈனும். முட்டை இடாமல் குஞ்சு ஈனுகின்ற ஒரே ஒரு பல்லி இனம் இது தான்.

ஆனால் இப்பல்லி இனத்தின் தற்காப்பு நடவடிக்கைதான் விசித்திரமான நடத்தைகளில் குறிப்பிடத்தக்கது.

ஏதேனும் ஒரு ஆபத்து நேர இருக்கின்றது என உணர்கின்றபோது வாலை வளைத்து வாய்க்குள் கொண்டு வந்து பந்து போல சுருண்டு விடும்.

வாலில் உள்ள செதில்கள், கூர்முனைகள் எதிரியிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். பாதுகாப்பு கவசம் மாதிரியான ஏற்பாடு...

சமக தலைவர் நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...

 


மர்ம நோயாம்... தொழிற்சாலையால் உருவாகும் நோய் என்று சொல்லுங்கடா...

 


எது அதிசயம் ?



உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது...

இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது.

இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது.

இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372).

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை.

சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ?

அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ?

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம்...

திருட்டு பயங்கிரவாத மக்கள் விரோத பாஜக எப்போதும் தமிழின எதிரிகளே...

 




தேசியவாதம் பற்றி தோழர் மாவோ...

 


மாவோ தேசியவாதம் பற்றி கூறியது...

தேசியத்தன்மை உடைய ஒரு போராட்டத்தில் வர்க்கப்போராட்டம், தேசியப் போராட்டம் என்ற வடிவத்தை மேற்கொள்கிறது.

இது தேசியப் போராட்டம் வர்க்கப் போராட்டம் இரண்டுக்கும் உள்ள ஒத்த தன்மையை மெய்ப்பிக்கிறது. (மா.தொ.நூ.2; பக்கம் 215).

அதாவது தேசிய போராட்டமும் வர்க்கப் போராட்டமும் ஒத்ததன்மையது என்கிறார்.

தோழர்.தமிழரசன் பெண்ணாடம் மாநாடு (1984) அறிக்கையிலிருந்து...

அரசு கேபிள் டி.வி. கட்டணம் குறைப்பு...

 


திருட்டு தெலுங்கு திமுக...

 


தமிழ் மணி...

 


தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி.

இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.

இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் ஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.

இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது...

Mதிமுக - அதிமுக ஆட்சியால் மண்ணின் மைந்தர்களின் நிலை புரிகிறதா..?

 


அதிமுக அரசின் லட்சணம்...

 


இந்தியாவில் செயற்கை உணவு பஞ்சம் உருவாக்கி அம்பானி & அதானி கீழ் கொண்டு வருவதற்காக பாஜக மோடியின் சதி தான் வேளாண் சட்டம்...



வேளாண் சட்டம் நல்லது ன்னு சொல்லும் சங்கியாக உருமாற்றம் பெற்ற எனதருமை சொந்தங்களின் கவனத்திற்கு...

விவசாயியாக வாழ்வது தவறில்லை, முட்டாள் விவசாயியாக வாழ்வது தான் தவறே, கூடவே சங்கி நட்பு மிகவும் கொடியது...

குறிப்பு : சிறிது நாள் முன்பு ஐ.நா வின் அறிக்கை.. விரைவில் உணவு பஞ்சம் ஏற்பட போகிறது என்று...

நீலகிரியில் திமுக கொடியில் காரில் வலம் வரும் திமுகவினர், அப்பாவி பொதுமக்களின் கடைகளில் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்...

 


சிங்கு செருப்ப சாணில மூக்கி எடுத்து பாஜக சங்கிகள அடிக்குறாணுங்க...

 


கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்...

 


கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார்.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது...

சன் டிவி காரன்.. 8 வழிச் சாலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவு என்று செய்தி போடுகிறான்... எது உண்மை..?

 


இது தான் இந்தியா... துரோகத்தால் உருவானதே இந்திய ஒன்றியம்...

 


BLACK TIGER - Ravindra Kaushik இந்தியா கைவிட்ட வீரர்..

RAVINDRA KAUSHIK இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட (RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்...

1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் , அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு SPY ஆக செல்லுமாறு கேட்டனர். RAW வில் சேர்ந்து 2 வருட கடின பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார்.அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார்.PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் . 1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்.. அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் வைக்கபட்ட பெயர் BLACK TIGER...

26 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து PAKISTAN ல் பல சூழ்நிலைகளில் இருந்தார். INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.அவர் கொடுத்த தகவலால் RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார். இந்தியா , எதுவும் தெரியாதது போல காட்டிகொண்டது. 1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தனைக்கு மனகஷ்டத்திற்கு பிறகும் , அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில்...

"Is this the reward a person gets for sacrificing his life for India? "

என்று எழுதி இருக்கிறார். பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK இறந்தார்...

புதிதாக தமிழகத்திற்கு எதிராக என்ன சதி செய்கிறது பாஜக...

 


குறிப்பு : எப்போதும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் இந்தியம்.. ஒரு தமிழக வீரரை அணியில் விளையாட வாய்ப்பு கொடுத்து ஊடகத்தில் தொடர்ந்து காட்டுகிறது..

இதில் எதேனும் தொடர்பு இருக்குமா ?

உங்கள் சிந்தனைக்கே?

5g யின் பேராபத்தை எப்போது உணர போகிறீர்கள் மக்களே ?