04/10/2018

மாதுளையின் மகத்துவம்...


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...

விடுதலைப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் இருவரின் பிறந்த தினம் இன்று...



மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)...


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1) மூட்டழற்சி (osteo arthritis) : இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2) முடக்குவாதம் (rheumatoid arthritis) :  இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.

பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:

வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்...

திராவிடம் - 9...


அன்றைய மதராச மாகாணத்தில் 1916ல் முதல் திராவிடக் கட்சியான 'நீதிக்கட்சி' பிறந்ததும் அதோடு சேர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் பிறந்தன..

தமிழ்- திராவிடம்
தெலுங்கு- ஆந்திர பிரகாசிகா
ஆங்கிலம்- ஜஸ்டிஸ்

இதில் தெலுங்கில் திராவிடப் பெயர் பயன் படுத்தப்படவில்லை என்பதை கூர்ந்து நோக்குக..

அதாவது தமிழரை திராவிடர் என்று ஏமாற்றிவிட்டு, ஆந்திரருக்கு முன் அவர்கள் இனத்திற்கான கட்சியாகவே ஜஸ்டிஸ் கட்சி காட்டிக் கொண்டது புலனாகும்..

இக்கட்சியை இனி 'ஐஸ்டிஸ்' கட்சி என்றே அழைப்போம்..

இந்த கட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்திய அழகைப் பார்ப்போம்..

இக்கட்சி ஆண்ட 1916 முதல் 1936 வரையான காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர்களைப் பார்ப்போம்..

திரு.ஏ.சுப்புராயலு ரெட்டி
(7-12-20 முதல் 11-77-21)
பனகல் அரசர்
(19-12-23 முதல் 3-12-26)
திரு.பி.முனுசாமி நாயுடு
(27-10-30முதல் 4-11-32)
பொப்பிலி அரசர்
(5-11-32 முதல் 1-4-37)
சர்.கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
(1-4-37 முதல் 14-7-37)

இவர்களில் எவரும் தமிழர்  இல்லை.

எப்படி இருப்பர் ?

திராவிடம் என்பதே தமிழ்ப் பிராமணரை (அதாவது தமிழரை) பின்னுக்குத் தள்ளப் பிறந்ததாயிற்றே..

நன்கு கவனிக்க இவர்கள் அனைவரும் ஆதிக்கவர்த்தினர் ஆவர்.

அதற்காக அக்கட்சியில் தமிழர் குறைவென்று நினைக்க வேண்டாம். தமிழ் வாக்காளர் குறைவென்றும் நினைக்க வேண்டாம்..

சரி.நிறையபேர் தாழ்த்தப்பட்டோர்க்கு உரிமை பெற்றுத் தருவதே திராவிடம் என்று முழங்குகின்றனர்..

கிடையவே கிடையாது..

வந்தேறிய பிராமணரிடம் குவிந்து இருக்கும் அதிகாரத்தை மண்ணின் மைந்தருக்கு (அதாவது அவர்கள் பார்வையில் திராவிடருக்கு) பெற்றுத் தருவதாகக் கூறிக் கொண்டு தாழ்த்தப்பட்ட, பிராமணரல்லாத தமிழர் வாக்குகளைப் பெற்றபிறகு, அவ்வாக்குறுதியை ஒருநாளும்  நிறைவேற்றியதில்லை..

அக்கட்சியில் திரு.ரெட்டைமலை சீனிவாசன், திரு.எம்.சி.ராசா, திரு.வி.ஐ.முனுசாமி, திரு.என்.சிவராஜ் ஆகியப் பட்டதாரி தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் முன்னனியிலிருந்தனர்..

இவர்களில் எவரும் ஒருமுறைகூட அமைச்சராகவிட்டதில்லை..

திராவிடம் என்பது பிராமணரின் அதிகாரத்தை மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் பிடுங்கிக் கொள்ள உருவாக்கப்பட்டது.

அதாவது தமிழ்நாட்டில் மட்டும்.

அந்தக் காலத்திலும் சரி இந்தக்காலத்திலும் சரி
இனி எந்தக்காலமானாலும் சரி
ஆந்திர-கேரள-கன்னட மக்கள்  தம் இனத்தைக் கூறுபோடும் திராவிடத்தைத் துளியும் ஏற்றுக் கொள்வதில்லை..

தமிழகத்தில் கட்சிப் பெயர்களில் திராவிடம், தாழ்த்தப்பட்டோரைக் குறிக்க ஆதிதிராவிடர் எனும் சொற்றொடர் எல்லாம் திட்டமிட்டே புகுத்தப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டத் தெலுங்கு மக்கள் ஆதிதெலுங்கர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

தமிழகம் தவிர மற்ற எந்த இடத்திலும் திராவிடம் என்கிற பெயரோ, இயக்கமோ, கட்சியோ, நாளிதழோ எதுவும் இன்றுவரை வழக்கில் இல்லை.

'திராவிடம்' என்பது தமிழரை ஏமாற்றி தமிழகத்தை வேற்றினத்தவரின் கல்வி, வேலை மற்றும் தொழில் வேட்டைக்களமாக மாற்றித்தருவதே ஆகும்.

1936 ல் நடந்ததைப் பற்றி இப்போதென்ன கவலை என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம்; இன்றும் தமிழர் தமது அத்தனையையும் வேற்றினத்தவருக்கு 'மொய்' எழுதி வருகின்றனர்..

மற்ற இனத்தவரிடம் பரப்புரை செய்யாமலேயே இயல்பாக இருந்த இனவுணர்வு அவர்களைக் கொடிய திராவிடத்திலிருந்து காத்தது.

ஆனால் அன்றையத் தமிழுணர்வாளர் கரடியாய்க் கத்தியும் கூடத் தமிழருக்கு அதெல்லாம் 'செவிடன் காதில் ஊதிய சங்காகிப்' போனது.

அந்தத்தவறை இன்று நாமும் செய்யக்கூடாது.

திராவிடத்தின் பிறவி குணத்தைத் தெரிந்து கொண்டோம்.

மேலும் அலசலாம் தான்..

ஆனால் இது ஒரு குறிப்பிட்டக் கட்சியை விமர்சிப்பதாகிவிடும்.

1930க்குப் பிறகு திராவிடத்தின் அசுரப்பாய்ச்சல் பற்றியும், திராவிடம்  புதுவடிவம் எடுத்ததாகவும் தவறுகள் களையப்பட்டதாகவும் திராவிடவாதிகள் கூறலாம்.

அதையும் அலசத்தானே போகிறோம்...

அம்பத்தூர் அருகே ரயில் தடம் புரண்டு கண்டெய்னர் விழுந்ததில் முதியவர் பலி...


தமிழரும் மதங்களும்...


தமிழர்கள் இசுலாமியர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர்கள் கிறித்துவர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இன்னும் பல மதங்களுக்கு மாற்றப்பட்டதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இந்துவாக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறது.

காரணம் அதில் இருக்கும் வழிபாட்டு/பண்பாட்டு முறைகள்.

ஒன்றை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் மதங்களில் இனங்களில் மொழிகளில் எல்லாவற்றிலும் தமிழ்/தமிழர் தாக்கம் இருக்கும். காரணம் தமிழ் தான் முதன் மொழி தமிழர் தான் மூத்த மாந்த இனம்.

இசுலாம் கிறித்து இன்னும் பிற மதங்கள் வேறு நிலப்பரப்பில் இருந்து தமிழர் நிலப்பரப்பினுள் நுழைந்து தமிழரை மதமாற்றம் செய்தது.

ஆனால் இந்து என்று இன்று அழைக்கப்படும் ஆரிய கோட்பாட்டின் கருத்தியல் மதம், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, மொழி, கலை போன்றவற்றை நம் நிலப்பரப்பில் இருந்துகொண்டே, அதை களவாடி(திருடி) பின் திரித்து(ஆரிய கோட்பாடை கலந்து) நம்மிடம் திணிக்கப்பட்டது.

எனவேதான் தமிழர் நாம் இயல்பாகவே தொன்றுதொட்டே நம்மை இந்துக்கள் என்று எண்ணி ஏமாந்து வாழ்கிறோம்.

இதையெல்லாம் அறிந்து தெளிந்து எடுத்துரைத்தால், தமிழர்களே அதற்கு எதிராக நிற்பது, 1800 ஆண்டுக்கும் மேல் அடிமைபட்டு, அடிமைக்கும் அடிமையாகிப் போன நிலை தந்த அறியாமையே.

என் பாட்டன் சொன்னார் என் அப்பன் சொன்னார் என்று நான் மாற மாட்டேன் நான் இப்படித்தான் வாழ்வேன் என்னும் சில வாதங்கள் வேதனைக்குரிய ஒன்று.

நம் பாட்டனும் அப்பனும் அறியாத வரலாற்றை நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து தெளி என் தமிழினமே.

தொன்றுதொட்டு வந்ததை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று மடமையில் விழுந்து உன் இனம் அழிய நீயே வழிகாட்டாதே.

மலேசிய வரலாறுபடி 200 ஆண்டுக்கு முன் அடிமையாய் இந்த நாட்டுக்கு வந்தோம் என்கிறான். எனவே நான் அடிமையாய் வந்தேன் அடிமையாய் தான் இருப்பேன் என்றால் அது சரியா?

200 ஆண்டுதானா உன் வரலாறு?
உன் பாண்டிய சேர சோழன் காலத்தில் நீ உலகை ஆண்டவனா அடிமையா?

2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன்.

6000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த காப்பியன்.

இவர்கள் தமிழரா இந்துவா?

இதற்கு பதிலுண்டா உன்னிடம். புரிந்துகொள், நீ 50,000 ஆண்டுக்கும் மூத்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட மாபெரும் தமிழர் எனும் தேசிய இனம்.

இனியும் நீ எழாவிட்டால்..

எழு.. மதத்தை தூரப்போடு
குலத்தில் ஏற்றதாழ்வை தூக்கிப்போடு.

இனம் மீள விடுதலை வெல்ல.

உன் களப்பணியை
செய்.... அல்லது செத்துமடி..

தமிழர் வெல்வது உறுதி...

தமிழகத்தில் அடித்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...


தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர்...


சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது.

ஆன்மீகத்திலும், அறிவியல் சாதனைகளிலும் முழுமை பெற்ற நிலை தான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர்.

தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர் என்பார் திருமூலர்.

சித்தர்களை “அறிவன்” என்றும் “நிறைமொழி மாந்தர்” என்றும் குறிப்பிடும் தொல்காப்பியம்.

”அவிர்சடை முனிவர்”என்கிறது புறநானூறு.

அழியக்கூடிய உடம்பின் அசுத்தமான மூலகங்களை இரசவாதத்தின் மூலம் தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள் சித்தர்கள்.பொருளை சக்தியாக்குகிற வித்தை. அதன் மூலம் சுத்த தேகம் பெற்றனர். மீண்டும் அதனை மாற்றி பிரணவ தேகம் ஆக்கினர். அதனுடைய அடுத்த கட்டம் உருமாற்றும் ஞான வடிவு.

சித்தர்களின் தேகம் நுட்பத்திலும் அதி நுட்பம், கடினத்துவத்திலும் அப்படித்தான். அவர்கள் தங்கள் மனம் போல் உருமாறுவர். நோய்களூக்கும் மரணத்திற்கும் அப்பாற்பட்டது அவர்களுடைய அமைப்பு.மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.

சித்தர்களிடம் அனுபவம்,ஆற்றல் எல்லாவற்றுக்கும் மேலாக இறையருள் இருந்தது.உயர்ந்த சிந்தனை உடையவர்கள் அவர்கள். எளிய வாழ்க்கை முறை அவர்களுடையது. அதனால் தான் அவர்களூடைய வாக்கு பலித்தது. காரிய சித்தியில் அவர்களால் பெரும் புகழ் பெற முடிந்தது.

சித்தர்களின் வலிமை தூய்மையின் வலிமை. அவர்களின் மன உறுதி ஒருமுகப்பட்டது. வார்த்தைகள் சக்தி மிக்கவை. சித்தர்கள் இன்றும் நம்மிடையே இல்லாமல் இல்லை. நாம்தான் அவர்களை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். பார்த்தால பிச்சைகாரர்கள் போலவும் பித்தர்கள் போலவும் தோற்றமளித்தாலும்-அவர்கள் தேகத்தில் தனி தேஜஸ் கண்களில் சக்தி(காந்தம்) ஒளி தெரியும். தேகத்தில் நறுமண வாடை மிதக்கும். அவர்களை உணர்ந்து கொள்ள இறையருள் வேண்டும். அவர்களை தரிசிக்கவும், உணரவும் பாக்கியம் செய்திருந்தால் தான் அது வாய்க்கும்...

ஸ்டெர்லைட்டுக்கு லண்டனில் ஆப்பு வைத்த தமிழர்கள்...


உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில்...


தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

பளிங்குக் கல்லில் தாஜ்மஹால் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்…. வழி…. என்று இழுத்ததும், அந்த பேரில் இங்க எந்த கோயிலும் இல்லீங்களே..

ராமசாமி கோயில் தான் ஒன்னு இருக்கு, அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர்..

பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது.

உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.

பட்டீஸ்வரம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம்.

இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான “பழையாறை” செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்...

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த பஞ்சவன் மாதேவி..

தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற ராஜேந்திர சோழன்.

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை காரணம் அது பாசத்திற்காக உருவானதில்லை...

ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியுமா?

பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?

வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின் அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் “சோழன் மாளிகை”. கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

தற்போது இந்த கோயிலை படத்தில் இருக்கும் இந்த பெரியவரும் அவரின் பேத்தியும் தான் பார்த்துக் கொள்கிறார்கள்..

இங்கு யாருமே வராததால் வெளியே இந்த கோயிலின் சிறப்பு குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

உலகில் பெரிய ஆட்கள் கூட யாரும் இதை சென்று பார்க்க வேண்டாம், உள்ளூரில் உள்ள நாமேனும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு அங்கு ஒரு விளக்கேற்றி வைத்து விட்டு வரலாமே...

பதிவு - நண்பர்

திராவிடம் - 8...


1900களில் பிராமண ஆதிக்கத்தையும் அதைப் பிடுங்கிக்கொள்ள ஆதிக்க சாதியர் பிராமணருடன் போட்டியிட்டதையும்,  திராவிடப் பரப்புரை முடுக்கி விடப்பட்டதையும் பார்த்தோம்..

முதலாம் உலகப்போர் 1914 தொடங்கி 1918 ல் முடிந்தபிறகு ஆங்கிலேய அரசின் பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டம் வீறிட்டெழுந்தது.

அப்போது நாடு முழுவதும் காங்கிரசை விட செல்வாக்காக இருந்தது 'அன்னிபெசண்ட்' அம்மையாரின் 'அகில இந்திய ஹோம்ரூல் லீக்'.

இதன் சென்னைக்கிளை தமிழ்ப்பிராமணர் கட்டுப்பாட்டில் இருந்தது..

(உண்மையாகவே விடுதலையை நோக்கமாகக் கொண்ட தமிழ்ப்பிராமணர்).

இந்நேரத்தில் இந்திய சட்டசபை உறுப்பினர் 19 பேர் கையொப்பமிட்ட கூட்டறிக்கை ' பூரண சுயாட்சி'  கோரியது..

ஏதேது ஆங்கிலேயர் சுயாட்சி வழங்கினால் அது ஹோம்ரூல் மூலமாக தமிழ்ப் பிராமணருக்குப் போய்விடுமோ என்று வேற்றுமொழி ஆதிக்க சாதியினர் பதற்றமடைந்தனர்..

இந்நிலையில் தான் அவர்கள் தமக்கென்று ஒரு கட்சியை தொடங்குவது என்று தீர்மானித்தனர்..

இவ்வாறு அவர்கள் தோற்றுவித்த முதல் திராவிடக் கட்சியான 'நீதிக் கட்சியின்' முகத்திரையை சற்று  விலக்கிப் பார்ப்போம்..

இக்கட்சியை தொடங்கிய இருவரில் முதலில் டாக்டர்.டி.எம்.நாயர் பற்றி அறிவோமாக..

மலையாளியான இவர் முதலில் காங்கிரசில் இருந்தார்..

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தமிழ்ப்பிராமண வாக்காளர் நிறைந்த திருவல்லிக்கேணித் தொகுதியில் நான்குமுறை வெற்றிபெற்றவர்..

பிறகு ஒருமுறை தொல்வியைத் தழுவினார்..

தமிழ்ப்பிராமணர் மீது வந்ததே கோபம், உடனே தமிழரல்லாத இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தார்..

அப்போது சென்னை மாநில கவர்னராக இருந்த 'வெல்லிங்டன் பிரபுவை' சந்தித்தார்..

'தமிழரல்லாத இயக்கத்தை  பிராமணரல்லாத இயக்கம் என்கிற பெயருடன் தொடங்குவாயாக ' என்று கவர்னர் ஆசிவழங்கினார்.

இவரை சகமலையாள ஆதிக்க வர்க்கத்தினர் தூண்டினர்..

இரண்டாமவர் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராயர்.
இவர் தனிப்பட்ட முறையில் பண்பான மனிதராகவே பலருக்கும் தோன்றியவர்.

இவர் நீதிக்கட்சியான 'ஜஸ்டிஸ் கட்சி'யைத் தோற்றுவித்து அதன் தலைவராக தனது கட்சியின் கொள்கைப்பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்..

இந்த முதல் அறிக்கையே தமது கட்சிக்கு வித்தூன்றிய சர்.அலெக்சாண்டர் கார்ட்யூவுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு,
இந்தியர்கள் ஒரேடியாக ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரம் கோரக்கூடாதென்று கூறியது..

அதேபோல 19 டெல்லி சட்டசபை உறுப்பினர் ஒப்பமிட்டு சுயாட்சி கோரியதையும் வன்மையாகக் கண்டித்தது.

தவிர நாட்டில் வாழும் பல்வேறு மக்களுக்கு இடையே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கக் கூடியவர் ஆங்கிலேயரே என்று கொஞ்சமும் ஒளிவு மறைவின்றி அப்பட்டமான தமது ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டியது..

ஆங்கிலேய ஆளுகையில் ஒட்டு மொத்த நாடே அடிமைப்பட்டுக் கிடக்கும் போதே தமது நலனில் மட்டும் அக்கறை கொண்ட புண்ணியவான்களின் பாசறைதான் திராவிடக் கூடாரம் என்பதை இதைவிடத் தெளிவாக கூற வேண்டியதில்லை..

திராவிடவாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயரை எதிர்த்ததே கிடையாது..

எப்படி எதிர்ப்பர்?

ஆங்கில வல்லாதிக்கத்தின் நீட்சிதானே திராவிட ஆதிக்கம்..

அப்படி இருந்தும் இந்தக் கட்சி 1936வரை ஆட்சியும் செலுத்தி தமிழர் எவரையும் ஆளவிடாமல் தாழ்த்தப்பட்டவரையும் மேலே வரவிடாமல் சாதனைமேல் சாதனை புரிந்ததை பார்க்கத்தானே போகிறோம்...

ஒரு சிலரால் தான் நம் பாரம்பரியம் இன்றும் காக்கப்படுகிறது... வாழ்த்துகள் மாணவர்களே...


மனிதநேயம்..


மனிதனிடத்திலும் மனிதநேயத்தை காண்பதே அதிசயமாய் மாறிவிட்ட இக்காலத்தில்....

பார்வையற்ற இவர்களுக்கு ஒரு குரங்கு உதவி செய்வதை பார்க்கும் போது இறைவன் இன்னமும் ஏதோ ஒரு உருவத்தில் உலகில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று தோன்றுகிறது..

மனிதநேயத்தை பரப்புவோம்.. அனைத்து உயிரிடத்திலும் அன்பை செலுத்துவோம்..

தமிழகத்தை அழிக்கும் பாஜக - அதிமுக...


வள்ளலார் கூறும் பாவப் பட்டியல்...


பாவ புண்ணியக் கணக்குகள் மறந்து போய், சுயநலமும் அலட்சியமுமே பிரதானமாய் மாறி விட்ட இந்தக் காலத்தில் துக்கமும், நிம்மதி இன்மையும் தான் எல்லா இடங்களிலும் கோலோச்சுகிறது. 

அதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் வள்ளலார் போல் தங்களையே கேட்டுக் கொண்டு, திருத்தியும் கொண்டால் ஒழிய நிம்மதிக்கு வாய்ப்பில்லை.

இதோ வள்ளலாரின் பாவப் பட்டியல்..

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
வேலையிட்டுக் கூலிலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
கோள்சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ...

பாஜக மோடியின் சாதனைகள்...


பாஜக மோடியின் ஹைட்ரோகார்பன் திட்டம்...


தடையில்லா எண்ணெய் எரிவாயு ஆய்வுக்கான கொள்கையின் படி (OALP) ஹைட்ரோ கார்பன் மண்டலங்களை ஏலம் எடுத்தவர்களின் பட்டியல்...

காவிரிப்படுகையில் நிலப்பகுதியில் ஓ.என்.ஜி.சியும் கடற்கரையோரப் பகுதியில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஏலத்தில் உரிமம் பெற்று 1.10.2018 அன்று பெட்ரோலியத்துறையுடன் ஓப்பந்தமிட்டுள்ளன....

சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளிகளும்... சட்டமும்...


திராவிடம் - 7...


திராவிடம் - இந்தச் சொல்லை நூறு வருடங்களுக்கு முன் ஒரு தமிழரிடம் கூறினால் அவர் புரியாமல் விழித்திருப்பார்.

ஆனால் இன்று அந்த சொல்தான் தமிழரை ஆண்டு வருகிறது. இந்த அதிசயம் எப்படி நடந்தது?

சரி இந்த 'திராவிடம்',என்கிற சொல் வேதங்களிலோ இலக்கியங்களிலோ காணப்படுவதில்லை.

பிறகு எங்கிருந்து இந்த வார்த்தை முளைத்தது.அதற்கான விடையைத் தேடுவோம்.

திராவிடம் என்பது ஒரு தெலுங்குச் சொல்..

என்ன வியப்பாக இருக்கிறதா?

தெலுங்கு மக்கள் தமிழரைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர்..

இதற்கான விளக்கத்தை முனைவர்.எஸ்.செல்லப்பா  அவர்கள் கொடுத்துள்ளார்.

தமிழ் உணர்வாளரான இவர் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவதில் வல்லவர், தெலுங்கு மக்கள் மத்தியில் பலகாலம் வாழ்ந்தவர்..

இவரது நீண்ட விளக்கமாவது,

A BRIEF NOTE ON THE WORD 'DRAVIDIAN'

A few years ago I made an in-depthstudy of certain root words in Tamil language.
One of the words is ‘Dravidian’.
I couldnot publish that work due to myadministrative pre-occupations.

Traditionally Tamil scholars is of the viewthat this term “Dravidian”is of Sanskrit Origin.
They consider that the term Dravidian isderived from the word“Dramilam”.
If that be so, what, then, is theroot of Dramilam?
Thisled me to ponder over the root word for‘Dravidian’.
Thereafter Istarted reading a few original Telugu workssystematically and alsoconsidered the speaking language of theAndhras.

‘Aravam’, ‘Tamilamu’and ‘Dravida Basha’ are the three words usedby the Andhras to referto Tamil language.
Aravamu is used in thesense well-defined.
‘Dravida Basha’ is used only to connote toTamil language.

It was Robert Caldwell who extended thelinguistic area of ‘Dravidian’to include Malayalam, Kannadam, Telugu,Tulu, Brahmi etc. 
Otherwise,the Telugus used the term Dravidam to meanonly Tamil language.
For example, Sri Krishna Devaraya, belongingto 15th Century A.D.wrote the great literary work“Amuktamalyada” in Telugu, uses the word“Dravida Kutumbi” (I:64) to refer to Tamil families
Gurram Joshuva, another very renowned poet of 20th Centuryuses the term “Dravidia inhis famous poem “Gabbilam” to refer toTamil only.
Similarly P.Gopalreddy who did elaborate study on the Geo-physical concept of villagenames also uses the term Dravida basha torefer to Tamil.
At present, I am translating Gabbilam intoTamil language.
Joshuvauses “Dravida Bhumi” to refer to the Tamilland.

My curiosity did not stop here.
Is there anyconnection between
Dravida and Tamil?
After so much research,
I came to the conclusionthat Dravidam and Tamilam mean one andthe same.
Or Dravidam perhapsis a Telugu derivative of Tamilam and it isnot of Sanskrit origin,
assome Tamil scholars think.
Now we shall split the word Tamil into threeparts:
Tatmizh.
Incertain Telugu words ‘ta’ becomes “tra”.
1. Thadu > Thradu (rope)
2. Thova > Throva (way)

Hence the ‘ta’ in Tamil becomes “tra”, whichin turn becomes “Dra”,
which is quite common in Telugu language.

In Telugu language ‘ma’ becomes ‘va’ incertain words.
1. Mamidi > Mavidi (mango)
2. mama > mava (uncle)
3. bhumi > bhuvi (earth)

Hence the ‘mi’ in Tamil becomes ‘vi’ inTelugu.

Similarly Tamil ‘Zha’ becomes ‘da’ in Telugulanguage.
This is anaccepted linguistic rule.
Example:
1) Chozha > Choda (The Cholas)
2) Kozhi > Kodi (a hen)
3) Pazh > padu (waste, useless)
4) Keezh > Keedu  (harm)
5) Appozhudu > Appudu (then)
6)Ippozhudu > Ippudu (now)

To conclude, the term Dravidian is purely aTelugu word to refer toTamil language only.
This is in vogue even to-day amongst Teluguscholars.

As mentioned earlier, it was Robert Caldwell, who expanded the scope of the term Dravidian to includeother southern languages ina linguistic sense. 
There is another soundreason for Caldwell to usethe term “Dravidian” to connote otherSouthern languages of India.

For Tamil was the only language amongSouthern languages with a long history of literature, grammar and originalityof its own.
Dr. S. Chellappa IAS .

சரி இப்போது விட்ட இடத்துக்கு வருவோம்.

ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த திராவிடக் கருத்தியலை சிறிது திருத்தங்களுடன் பரப்புரை செய்த ஆங்கிலேயர்.

அதற்கான ஆதரவு நன்கு பெருகியதும் சரியான நேரம் பார்த்து திராவிடத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

சர்.அலெக்சாண்டர் கார்டியூ இவர் 1916-ல் 'கவர்னர் நிர்வாக கவுன்சில்' உறுப்பினராக இருந்தவர்.

இவர் 1913- ல் 'இந்திய நிர்வாகக் கவுன்சில'  முன்பு சாட்சியமளித்தார்.

அதில் தமிழ்ப் பிராமண ஆதிக்கம் பற்றி விபரமாகக் கூறினார்.

அப்புள்ளி விபரம் பின்வருமாறு:

இந்தியன் சிவில் சர்வீசுக்கென இந்தியாவிலும் இங்கிலாந்திலும் தேர்வுகள் வைக்கப்படுகின்றன.

இதில் பிராமணர்களே முழுவதும் தேர்ச்சியடைந்து வருகின்றனர்.

1892 முதல் 1904 வரை நடைபெற்ற தேர்வுகளில் 16 ல் 15 பிராமணர் ஆவர். இது 95% ஆகும்.

சென்னை மாகாணத்தில் 'உதவிப்பொறியாளர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்ட போது 20 ஆண்டுகளில் பிராமணர் 17 பேரும் பிராமணரல்லாதோர் 4 பேரும் எடுக்கப்பட்டுள்ளனர்..

கணக்குத் தணிக்கைத் துறைத் தேர்வுகளிலும் இதேநிலை இருந்து வருகிறது.

சென்னைமாகாண 'உதவி கலெக்டர்' பதவிக்கான 140 இடங்களில் பிராமணருக்கு 77 இடங்கள்; பிராமணரல்லாதோருக்கு 30 இடங்கள்;

ஏனைய கிறித்துவர், முகம்மதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ- இந்தியருக்குக் கிடைத்தன.

1913 ல் மாவட்ட நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களில் பிராமணர் 93 இடங்களுக்கும், பிராமணரல்லாதோர் 25 இடங்களுக்கும், இந்திய கிறித்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ-இந்தியர் ஆகியோர் எஞ்சிய இடங்களுக்கும் நியமிக்கப்பட்டனர்..

இத்தகவல்கள் உண்மையானவையே. இதைப் பார்க்கும் போது பிராமணர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது தெளிவாகிறது.

இதில் கூறப்பட்டுள்ள விபரங்களில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி கலெக்டர் பற்றி இருக்கிறதே தவிர தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமை கலெக்டர் பற்றி எதுவும் இல்லையென்பதை நொக்குக.

இவை அக்காலத்தில் இந்தியருக்கு ஒதுக்கப்படவில்லை,
முழுதும் ஆங்கிலேயரே இருந்தனர்.

'ஆங்கிலேயர் என்னதான் இந்தியருக்கு உரிமைகளை அளித்தாலும் அதில் குறிப்பிட்ட வகுப்பினரே ஆதிக்கம் செலுத்துவர்..

அதனால் ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்டு இருப்பதே அனைத்து வகுப்பினருக்கும் நல்லது' என்று மறைமுகமான அறிவித்தல் இது.

தவிர பிராமண ஆதிக்கம் குறைந்திருந்த புள்ளிவிபரங்கள் மறைக்கப்பட்டன.

இதன் மூலம் பிராமணரல்லாத மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதாகக் காட்டிக்கொண்டனர்.

அதாவது கிறித்துவரும் முகம்மதியரும் தனி ஒதுக்கீடு பெற்றிருக்க பிராமணரல்லாத இந்துக்களை பிராமணர் ஒடுக்குவதாகக் காட்டி அதன்மூலம் பிராமணரல்லாத இந்துக்கள் அமைப்பை உருவாக்கி தமக்கு ஆதரவாக தமது நிழலில் வைத்துக் கொள்ளத் திட்டமிட்டனர்.

ஆம்; கடைசியில் அதுதான் நடந்தது.

1916 ல் ஆங்கிலேயரின் செல்லக்குழந்தையாக முதல் திராவிடக்கட்சியான  'நீதி(?)க்கட்சி' பிறந்தது.

இதைத் தொடங்கியவர் மலையாளியான டாக்டர்.டி.எம்.நாயர், மற்றும் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராச செட்டியார்..

இவர்கள் இருவருக்கும் அக்கட்சியைத் தொடங்க என்ன அவசியம் இருந்தது?

இவர்களின் பின்புலம் என்ன?

திராவிடம்  தமிழருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பிறமதத்தினருக்கும் ஏதாவது ஒரு  நன்மையாவது செய்ததா.?

சம நீதி...


சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக் கொள்ளும்படி இயற்றலாமே..

மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது..

அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால் தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகும்..

இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும் தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...

அதைப் போல் பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே.

தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

பாஜக மோடி கலாட்டா...


இங்கு உதவி என்பது ஒரு மனிதன் தன்னால் முடிந்ததை, அடுத்தவர்களுக்கு சரியான நேரத்தில் உதவுவது, அதுதான் இயல்பு...


ஆனால் இங்கு இல்லாதவனுக்கு உதவி செய்வது தான் பெரிய மாண்பு என தவறான மனநிலை உருவாக்கப்படுகிறது..

இல்லாதவன் ஏன்..? இன்னும் அப்படியே இருக்கிறான் என கேள்வியை கேளுங்கள்..


உலகம் அனைவருக்கும் சமமாகவே அனைத்தையும் கொடுத்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது நினைவில் கொள்ளுங்கள்..

வெகுசன மக்களின் ஒ௫வன்...

நேருவின் குடும்ப வரலாறு...


படிக்கிற காலத்துல "பண்டிட் நேரு", "பண்டிட் நேரு"ன்னு சொன்னாங்க. பிறகுதான் தெரிந்தது அது படித்து  வாங்கின பட்டமல்ல, "காசுமீர பண்டிதர்' அப்படி என்றால் பிராமண குலமென்று.

இந்த குழப்பதிருக்கு காரணம். விருதாக பெற்ற பட்டங்களை பெயருக்கு முன்பும் ஜாதியின் பெயர்களை பெயருக்கு பின்பும் போடுகிற முறை இருந்ததுதான்.

ஆனால் எப்படியெல்லாமோ போட்டு அசத்திவிட்டார். 


இவர் மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் சிகரெட்டு பற்றவைத்து கொடுத்துவிட்டு, ஒரு சமத்துவதிற்காக தானும் உடன் சேர்ந்து புகைப்பது உலகப் பிரபலமடைந்த திருத்தப்படாத புகைப்படமாகும்.

இவர்களது உறவு மரணம் வரை நீடித்ததாக வரலாறு கூறுகிறது.

மௌன்ட்பாட்டனின் மனைவியை விமான நிலையம் சென்று வழியனுப்பிய படம்...

இராமாயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்...


இராவணன் ஆய கலைகளின் நாயகன். அதிலும் பூத கனங்களுக்கேல்லாம் இருக்கும் பக்தியை விட மகேஸ்வரனின் மேல் இராவணுக்கு பக்தி அதிகம்..

அனுமன் நெஞ்சை பிளந்து தான் தனது உள்ளத்தில் சிதாஇராமன் இருப்பதை காண்பித்தார்.

ஆனால் தனது மூச்சில் கூட மகேஸ்வரன் வாசம் என்பதை வசிஸ்டரின் வஞ்சனையை எரித்ததில் இருந்தே காணலாம்.

சரி கதைக்கு வருவோம்.

பக்த பித்தனான இராவணனுக்கு ஏதாவது தரவேண்டும் என அன்னை மகேஸ்வரனிடம் கேட்க அவனுக்கேன்று ஒரு உலகம் தாருங்கள் என அன்னையின் வேண்டுகோள்.

மகேஸ்வரனின் மறுபதில் அவனுக்கேன்று ஒரு உலகம் தந்தால் எங்கும் சிவ சந்நிதானம் அமைத்து தனக்கேன்று இருக்க இடமின்றி சுற்றிவருவான் என்றதும், அன்னை புன்னகைத்து ஒரு திட்டத்தை கூறினார்.

இராவணனை அழைத்து மகேஸ்வரர் இராவனா நீதான் ஆயகலைகளிலும் அற்புதன் ஆயிற்றே உனது அன்னைக்கேன்று ஓர் உலகம் செய் என்றார்.

சிவனாரின் வேண்டுகோள் அல்லவா அதுவும் தனது அன்னைக்கு என ஒரு தாய்க்கு மகன் ஆற்றும் கடமை அத்தனையும் உருக்கொண்டு வந்து அமைத்து முடித்தான்.

முடிந்த உடன் அன்னையை அதைக்காண அழைக்க அதன் அழகைகண்டு வியந்து போனார்கள்.

திட்டப்படி மகேஸ்வரன் இராவணனிடன் இராவணா இவ்வளவு அழகான நகரை படைத்த உணக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.

அதற்கு இராவணனோ ஐயனே தாய் தந்தை இருக்கும் இக்கயிலையை விட்டு எங்கும் பிரியாவரம் வேண்டும் என கேட்க அதற்கு எம் இருப்பிடம் உனக்கு என்றும் உண்டு. அதே நேரத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடு நாங்கள் கொடுக்கும் எதையும் நீ மறுக்க கூடாது என்பது தான்.

உத்தரவிற்கு இணங்கி வாக்கு கொடுத்தான் இராவணன். இதோ இங்கு உன்னால் அன்னைக்கு ப‌டைக்க‌ப‌ட்ட‌ நாடு உன‌க்காகுக‌ உன‌க்கு த‌ர‌வே அன்னையின் நாட‌க‌ம் என‌ மீன்டும் இராவ‌ணுக்கே அந்த‌ ந‌கரை த‌ந்து உன‌து ச‌ந்த‌தில் இந்ந‌க‌ரில் இருந்து பெருகி உல‌கெங்கும் ப‌ர‌வி உன்னை போல‌வே ப‌ல‌ க‌லைக‌ளில் புக‌ழ்பெற்று விள‌ங்க‌ட்டும் என‌ ஆசீக‌ள் த‌ந்து இல‌ங்கேஸ்வ‌ர‌ன் என்ற‌ பெய‌ரும் இட்டு அனுப்ப‌.

இல‌ங்கேஸ்வ‌ர‌னுக்கு அழ‌கான‌ பெண் குழ‌ந்தை பிற‌க்க இந்த பெண் குழந்தைக்கு அன்பை காட்டும் போது த‌ன‌து அன்னைக்கு காட்டும் அன்பில் குறைவ‌ந்து விடுமே என‌ அஞ்சி அக்குழ‌ந்தையை பூமாதேவிக்கு வார்த்து விட்டார்.

பூமாதேவியும் அக்குழ‌ந்ததையை ச‌ன‌க‌னிட‌ம் (இன்றைய‌ நேபாள‌த்தின் அன்றைய‌ இராஜா) சேர்க்க‌ அங்கு வ‌ளர்ந்த‌ குழ‌ந்தை இராம‌ண‌னை ம‌ண‌முடிக்க‌ பிற‌கு புத்திர‌கண்ட‌ம் வ‌ந்த‌ த‌ய‌ர‌த‌ன் வாக்குப‌டி இராம‌ன் வ‌ன‌ம் செல்ல‌ த‌னது குழ‌ந்தை காட்டில் ம‌ழையிலும் குளிரிலும் வாடுகிற‌தே என்ற‌ ஏக்க‌த்தில் இல‌ங்கை கொண்டு செல்கிறான்.

இந்த‌ நிக‌ழ்ச்சிதான் வில்ல‌ன் யாரை போடுவோம் என‌ நினைத்த‌ வால்மிகிக்கு கிடைத்தான் இல‌ங்கேஸ்வ‌ர‌ன் பாவ‌ம்.

த‌ந்தைக்கும் ம‌க‌ளுக்கும் உள்ள‌ உற‌வையே கொடூர‌ப‌டுத்தி விட்டான்..

இந்த‌ செய‌லால் தான் வால்மிகி த‌ன‌து வாழ்வின் க‌டைசி நாட்க‌ளில் குஸ்ட‌ ரோக‌ம் வ‌ந்து இற‌ந்தான் என‌ புரான‌ங்க‌ள் சொல்கிற‌து...

இனி தமிழகத்தில் திருட்டு திராவிடத்திற்கு ஊஊஊ....


தமிழா சிந்தித்து விழித்தெழு...


1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது..

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்..

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்..

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்..

சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்..

உலகில் வாழும் பதிமூன்று கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

கேரளாவில் பொதுக்கழிப்பறை அதிகமாக இல்லை - பாஜக யோகி...


எல்லா வீட்டிலும் கழிப்பறை உள்ளது, உங்களபோல பொதுவெளிய கழிப்பறையாக்கும் அவலம் எங்களுக்கிலை - பினராய்...

சாராயக் கடவுள்...


சாராய ஆலை.. சாராய வியாபாரி.. என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம்
அதென்ன சாராயக் கடவுள் ..

கிரேக்கத்தில் மக்கள் தொகை போல, கடவுளின் தொகையும் அதிகம்..

ஏறக்குறைய 30,000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடவுள்கள் உள்ளனராம்..

சாப்பாட்டுக்கு ஒரு கடவுள்..
தண்ணீருக்கு கூட கடவுள் உண்டு..

இதெல்லாம் விட கொடுமையானது தான் சாராயக் கடவுள்..

ஒரு கடவுளின் பெயர் டைனோசயிஸ்..

இவருடைய டிபார்ட்மெண்ட் விவசாயம்..

ஆம் விவசாயத்துக்கு இவர் கடவுளாம்..

ஆனால் இவரு தான் திராட்சை பழத்தில் இருந்து முதல் முறையாக ஒயினை தயாரித்தாராம்..

அதனால் இவருக்கு (god of wine) ஒயினுடைய கடவுள்..

என்ற பெயரும் உண்டு...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் இனிமே இப்படித் தான்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


எகிப்திய விஞ்ஞானிகள் மனித இனங்களின் டிஎன்ஏ பற்றிய ஆராய்ச்சியில், நமது படைப்பு, பாதுகாக்க, டிஎன்ஏ அகியவைகள்.
வேற்றுகிரக அதிக சக்திவாய்ந்த, வேற்றுகிரகவாசிகளால் வடிவமைக்கப்பட்டது என்று நம்புகிறேன்.

அல் ஃபராபி கசாக் நேஷனல் யுனிவெர்சிட்டி ஆஃப் ஃபெஸென்ஸ்கோவ் அஸ்ட்ரோபிசிகல் இன்ஸ்டிட்யூட்டின் மாக்சிம் ஏ. மாகுகோவ் மற்றும் 13 வயதான மனித ஜீனோம் திட்டத்திற்காக பணிபுரிந்த விளாடிமிர் ஐ. ஷெர்பாக் ஆகியோர் மனித டி.என்.ஏவைக் தோற்றம் கண்டுபிடிப்பதாக நம்புகின்றனர்.

மனிதர்கள் டிஎன்ஏ வடிவமைப்பு ஒரு உயர்ந்த சக்தியால் வடிவமைக்கப்பட்டது, "டி.என்.ஏக்குள் குறியாக்கப்பட்ட" எண்கணித முறைகள் மற்றும் சித்தாந்த குறியீட்டு மொழி "ஆகியவற்றைக் கொண்டது.

மனித டி.என்.ஏவில் 97%  குறியீட்டு வரிசைகள் வேற்றுகிரக வாழ்க்கை வடிவங்களிலிருந்து மரபணு குறியீடாக இருக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள்.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் படி,  வேற்றுகிரக படைப்பாளிகள்
"புதிய உயிரினங்களை உருவாக்கி, பல்வேறு கிரகங்களில் நடவு செய்வதில் இன்னும் மேம்பட்ட  நாகரிகம் ஈடுபட்டுள்ளது என்பது அவர்களின் கருதுகோள் ஆகும். பூமி அவற்றில் ஒன்றாகும்.

எங்கள் டி.என்.ஏவில் நாம் காணும் இரண்டு நிரல்கள், ஒரு மாபெரும் கட்டமைக்கப்பட்ட குறியீடு மற்றும் ஒரு எளிய அல்லது அடிப்படைக் குறியீடு கொண்ட ஒரு திட்டம் ஆகும்.

பூமியின் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியில் திடீரென ஏற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் நம்பமுடியாது,

மேலும் விஞ்ஞானிகள் கூறுவது...

விரைவில் அல்லது பின்னர்... நம் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்கள் வாழ்க்கை வேற்றுகிரக உறவுகள் மரபணு பற்றிய குறியீடுயை தான் சொல்லும் என்கிறார்கள்..

அவர்கள் கூறுவதாவது: "இந்த மனித டிஎன்ஏ நிலையான குறியீடு அண்டவியல் காலங்களில் மாறாமல் இருக்கக்கூடும்; உண்மையில், இது மிகவும் நீடித்த கட்டுமானம்.

ஆகையால் இது ஒரு புத்திசாலி வேற்றுகிரக இனத்தின் கையொப்பத்திற்கான விதிவிலக்காக நம்பகமான சேமிப்பாக பிரதிபலிக்கிறது என்கிறார்கள்...

இதை நான் எளிய நடையில் இவ்வாறு தான் கூறமுடியும.

என் குழந்தை என் ரத்தம், என் உணர்வு என்கிற நிலையில் தன்னுள் சுரக்கும் உணவை தன் ஜீவனுக்கு ஊட்டி உயிர்த்தெழச் செய்பவள்தானே தாய்.

அதுபோல அவர்கள் வழங்கிய உயிர், நம் உடலுக்குள் முழுமையாய் பொருத்திக் கொள்ளும் போது, நம் உடலமைப்பிற்குள் ஓர் இடத்தையும் அந்த உயிர் நிரப்பிவிடும் அவர்களின் படைப்பே நாம்....

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


சித்திரை மாதத்தின் சூட்சுமம்...


சித்திரை மாதம் பிறந்த குழந்தை சிரழியும் என்கிற சொல் வழக்கம் கிராமங்களில் உண்டு. அறிவியல் ரீதியாக பார்த்தோமேயானால், சித்திரை மாதம் கடும் அக்கினி / வெயில் காரணமாக குழந்தைக்கு ஒவ்வாமை, சூட்டுக் கட்டிகள், கொப்புளங்கள் மற்றும் அம்மை போன்ற நோய்கள் உண்டாகும் எனக் கூறுவர்.

ஜோதிட ரீதியாகப் பார்த்தோமேயானால், "மேஷம்" எனக் கூறப்படும் சித்திரை மாதத்தில் "சூரியன்" உச்சமாக இருப்பார். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெறுவது அவ்வளவு சிறப்பல்ல. காரணம், தனித்துவமாக இருக்க விரும்பும் அவர்களுக்கு "உலகத்தோடு ஒத்துவாழ்" என்கிற கூற்று மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், எப்போதுமே தர்க்கம் செய்யும் குணநலம் கொண்ட அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் கருத்துக்கு செவி சாய்க்கமாட்டார்கள். மேலும், தன் கருத்தே சரி என்கிற அதிமேதாவித்தனம் மற்றவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.

மேலும், சூரியன் உச்சம் பெற்றவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் இல்லத்தாரிடம் கூட தரம் தாழ்ந்து இருப்பதை விரும்பமாட்டார்கள். மரியாதையை கேட்டு வாங்கும் தன்மை கொண்ட அவர்கள், எப்போதுமே அடுத்தவர்களை ஆளுமை செய்வதும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கிற தோணியில்தான் அவர்களின் பேச்சே இருக்கும், தவிர அடுத்தவர்களின் மனநிலை அவர்களுக்கு ஒருபோதும் புரியாது, புரிந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் அவர்களுக்கு துளியும் இருக்காது. அதனால், அவர்கள் சமுதாயத்திலிருத்து பிரித்துப் பார்க்கப்படுவார்கள் அல்லது வெறுக்கப்படுவார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் சித்திரை மாதம் குழந்தை பிறப்பு ஆகாது என்றனர்.

இதில், சூரியன் #அஸ்வினியில் நின்றால் கட்டுக்கடங்காத தன்மையும், #பரணியில் நின்றால் கடுமை சற்று குறைந்தும், #கார்த்திகையில் நின்றால் சரிசம அளவிலும் இருக்கும், தவிர மேஷத்தில் சூரியனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்தால், அக்கிரகத்தின் காரகத்துவத்தையும் சேர்த்து பிரதிபலிக்கும்..

குறிப்பு: மேஷத்தில் சூரியனுக்கு வீடு கொடுக்கும் செவ்வாய் கடகத்தில் நீசமானால் மேற்கூறிய சில பலன்கள் பொய்க்கும்...

பாமக அன்புமணி ராமதாஸ் அவர்கள் தாத்தா ஆனார்...


பாஜக வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்...


வாஜ்பாய் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றி பெற்றதாக கூறப்படுவது பொய்.

ஒரு தமிழரான அப்துல் கலாம் இதைச் சாதித்தது பெருமை என்றும் கூறப்படுகிறது.

அப்துல் கலாம் என்ற ஒரு ராக்கெட் விஞ்ஞானியை தலைவராக வைத்துக் கொண்டு அணு விஞ்ஞானத்தில் எப்படி வாஜ்பாய் சாதித்தார் என்பது விடை வராத கேள்வி.

அந்த ப்ராஜெக்ட்டில் அப்துல் கலாமுக்கு அடுத்த தலைவர் டாக்டர்.டி.சிதம்பரம்.
இவரும் ஒரு தமிழர்தான்.

அதற்கு அடுத்தநிலை தலைவரான கே.சந்தானம் என்பவரும் தமிழர்.

இந்த சந்தானம் துணிச்சலாக வெளியே கூறிவிட்டார்.

நாங்கள் செய்த பொக்ரான் அணுகுண்டு சோதனை தோல்வியில் முடிந்தது என்று.

போர் வந்தால் இந்தியா அணுகுண்டு போடும் என்று எண்ணும் அப்பாவிகள் உண்மை அறிக.

http://m.oneindia. in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive. inneram. com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia. indiatimes. com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt