04/10/2018

இராமாயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்...


இராவணன் ஆய கலைகளின் நாயகன். அதிலும் பூத கனங்களுக்கேல்லாம் இருக்கும் பக்தியை விட மகேஸ்வரனின் மேல் இராவணுக்கு பக்தி அதிகம்..

அனுமன் நெஞ்சை பிளந்து தான் தனது உள்ளத்தில் சிதாஇராமன் இருப்பதை காண்பித்தார்.

ஆனால் தனது மூச்சில் கூட மகேஸ்வரன் வாசம் என்பதை வசிஸ்டரின் வஞ்சனையை எரித்ததில் இருந்தே காணலாம்.

சரி கதைக்கு வருவோம்.

பக்த பித்தனான இராவணனுக்கு ஏதாவது தரவேண்டும் என அன்னை மகேஸ்வரனிடம் கேட்க அவனுக்கேன்று ஒரு உலகம் தாருங்கள் என அன்னையின் வேண்டுகோள்.

மகேஸ்வரனின் மறுபதில் அவனுக்கேன்று ஒரு உலகம் தந்தால் எங்கும் சிவ சந்நிதானம் அமைத்து தனக்கேன்று இருக்க இடமின்றி சுற்றிவருவான் என்றதும், அன்னை புன்னகைத்து ஒரு திட்டத்தை கூறினார்.

இராவணனை அழைத்து மகேஸ்வரர் இராவனா நீதான் ஆயகலைகளிலும் அற்புதன் ஆயிற்றே உனது அன்னைக்கேன்று ஓர் உலகம் செய் என்றார்.

சிவனாரின் வேண்டுகோள் அல்லவா அதுவும் தனது அன்னைக்கு என ஒரு தாய்க்கு மகன் ஆற்றும் கடமை அத்தனையும் உருக்கொண்டு வந்து அமைத்து முடித்தான்.

முடிந்த உடன் அன்னையை அதைக்காண அழைக்க அதன் அழகைகண்டு வியந்து போனார்கள்.

திட்டப்படி மகேஸ்வரன் இராவணனிடன் இராவணா இவ்வளவு அழகான நகரை படைத்த உணக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.

அதற்கு இராவணனோ ஐயனே தாய் தந்தை இருக்கும் இக்கயிலையை விட்டு எங்கும் பிரியாவரம் வேண்டும் என கேட்க அதற்கு எம் இருப்பிடம் உனக்கு என்றும் உண்டு. அதே நேரத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடு நாங்கள் கொடுக்கும் எதையும் நீ மறுக்க கூடாது என்பது தான்.

உத்தரவிற்கு இணங்கி வாக்கு கொடுத்தான் இராவணன். இதோ இங்கு உன்னால் அன்னைக்கு ப‌டைக்க‌ப‌ட்ட‌ நாடு உன‌க்காகுக‌ உன‌க்கு த‌ர‌வே அன்னையின் நாட‌க‌ம் என‌ மீன்டும் இராவ‌ணுக்கே அந்த‌ ந‌கரை த‌ந்து உன‌து ச‌ந்த‌தில் இந்ந‌க‌ரில் இருந்து பெருகி உல‌கெங்கும் ப‌ர‌வி உன்னை போல‌வே ப‌ல‌ க‌லைக‌ளில் புக‌ழ்பெற்று விள‌ங்க‌ட்டும் என‌ ஆசீக‌ள் த‌ந்து இல‌ங்கேஸ்வ‌ர‌ன் என்ற‌ பெய‌ரும் இட்டு அனுப்ப‌.

இல‌ங்கேஸ்வ‌ர‌னுக்கு அழ‌கான‌ பெண் குழ‌ந்தை பிற‌க்க இந்த பெண் குழந்தைக்கு அன்பை காட்டும் போது த‌ன‌து அன்னைக்கு காட்டும் அன்பில் குறைவ‌ந்து விடுமே என‌ அஞ்சி அக்குழ‌ந்தையை பூமாதேவிக்கு வார்த்து விட்டார்.

பூமாதேவியும் அக்குழ‌ந்ததையை ச‌ன‌க‌னிட‌ம் (இன்றைய‌ நேபாள‌த்தின் அன்றைய‌ இராஜா) சேர்க்க‌ அங்கு வ‌ளர்ந்த‌ குழ‌ந்தை இராம‌ண‌னை ம‌ண‌முடிக்க‌ பிற‌கு புத்திர‌கண்ட‌ம் வ‌ந்த‌ த‌ய‌ர‌த‌ன் வாக்குப‌டி இராம‌ன் வ‌ன‌ம் செல்ல‌ த‌னது குழ‌ந்தை காட்டில் ம‌ழையிலும் குளிரிலும் வாடுகிற‌தே என்ற‌ ஏக்க‌த்தில் இல‌ங்கை கொண்டு செல்கிறான்.

இந்த‌ நிக‌ழ்ச்சிதான் வில்ல‌ன் யாரை போடுவோம் என‌ நினைத்த‌ வால்மிகிக்கு கிடைத்தான் இல‌ங்கேஸ்வ‌ர‌ன் பாவ‌ம்.

த‌ந்தைக்கும் ம‌க‌ளுக்கும் உள்ள‌ உற‌வையே கொடூர‌ப‌டுத்தி விட்டான்..

இந்த‌ செய‌லால் தான் வால்மிகி த‌ன‌து வாழ்வின் க‌டைசி நாட்க‌ளில் குஸ்ட‌ ரோக‌ம் வ‌ந்து இற‌ந்தான் என‌ புரான‌ங்க‌ள் சொல்கிற‌து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.