04/10/2018

தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர்...


சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது.

ஆன்மீகத்திலும், அறிவியல் சாதனைகளிலும் முழுமை பெற்ற நிலை தான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர்.

தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர் என்பார் திருமூலர்.

சித்தர்களை “அறிவன்” என்றும் “நிறைமொழி மாந்தர்” என்றும் குறிப்பிடும் தொல்காப்பியம்.

”அவிர்சடை முனிவர்”என்கிறது புறநானூறு.

அழியக்கூடிய உடம்பின் அசுத்தமான மூலகங்களை இரசவாதத்தின் மூலம் தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள் சித்தர்கள்.பொருளை சக்தியாக்குகிற வித்தை. அதன் மூலம் சுத்த தேகம் பெற்றனர். மீண்டும் அதனை மாற்றி பிரணவ தேகம் ஆக்கினர். அதனுடைய அடுத்த கட்டம் உருமாற்றும் ஞான வடிவு.

சித்தர்களின் தேகம் நுட்பத்திலும் அதி நுட்பம், கடினத்துவத்திலும் அப்படித்தான். அவர்கள் தங்கள் மனம் போல் உருமாறுவர். நோய்களூக்கும் மரணத்திற்கும் அப்பாற்பட்டது அவர்களுடைய அமைப்பு.மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.

சித்தர்களிடம் அனுபவம்,ஆற்றல் எல்லாவற்றுக்கும் மேலாக இறையருள் இருந்தது.உயர்ந்த சிந்தனை உடையவர்கள் அவர்கள். எளிய வாழ்க்கை முறை அவர்களுடையது. அதனால் தான் அவர்களூடைய வாக்கு பலித்தது. காரிய சித்தியில் அவர்களால் பெரும் புகழ் பெற முடிந்தது.

சித்தர்களின் வலிமை தூய்மையின் வலிமை. அவர்களின் மன உறுதி ஒருமுகப்பட்டது. வார்த்தைகள் சக்தி மிக்கவை. சித்தர்கள் இன்றும் நம்மிடையே இல்லாமல் இல்லை. நாம்தான் அவர்களை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். பார்த்தால பிச்சைகாரர்கள் போலவும் பித்தர்கள் போலவும் தோற்றமளித்தாலும்-அவர்கள் தேகத்தில் தனி தேஜஸ் கண்களில் சக்தி(காந்தம்) ஒளி தெரியும். தேகத்தில் நறுமண வாடை மிதக்கும். அவர்களை உணர்ந்து கொள்ள இறையருள் வேண்டும். அவர்களை தரிசிக்கவும், உணரவும் பாக்கியம் செய்திருந்தால் தான் அது வாய்க்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.