10/06/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 16...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மனிதனுடைய வாழ்க்கையில் பலவித சம்பவங்கள் நடப்பதுண்டு. அதைப் போன்றுதான் இந்த பிரபஞ்சத்திலும் தினசரி பல சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவைகளை மனித சமூகம் அறிய முடியாமல் இருந்து வந்துள்ளனர் என்பதே உண்மை.


இனி நிகழ்கால உண்மைகளாக, இந்த பிரபஞ்சத்தில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் உலகத்தில் உள்ள மனித சமூகம் காணப் போகின்றது என்று நமது “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தின் 16-ம் பகுதி ஒரு உண்மையை மெய்பட கூறுகின்றது.



மனிதன் இதுவரை கண்டிராத பல அழிவுச் சம்பவங்களையும், பல அதிசயங்களையும் காணப் போகின்றான் என 16-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது.


உண்மைக்கு புறம்பாக இவ்வுலகில் இனி பிரபஞ்சத்தில் எவ்வித நிகழ்வுகளும் நடக்க முடியாது என்றும், அவ்வாறு நிகழுமாயின் அது மனிதகுலத்தின் வரம்பு மீறிய செயலாகத்தான் இருக்கும் என்றும், அதற்கு நீயாயத் தீர்ப்பாக அந்த மனித குலத்தின் மீதே இறைவனின் தண்டனைகள் “மரணமாக“ இறங்கிட இருப்பதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


நமது “சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனங்கள் மூன்று பிரிவுகளாக பிரித்து கடந்த 2015 முதல் தற்போது 2018 வரை நாம் வெளியிட்டு வந்துள்ளோம். அவைகள் அனைத்தும் துவங்கி நடக்கும் நிகழ்கால காலமாக தற்போது அமையும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இதுவே கடைசி தீர்க்கதரிசனப் பகுதி என்றும், இது வெளியிட்ட நாளிலிருந்து நாம் ஏற்கனவே வெளியிட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் நிச்சயமாக நடந்து முடியும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



மலேசியா நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு புயல்மழை பலத்த சேதங்களை அந்நாட்டில் தற்போது ஏற்படுத்த உள்ளது என்றும், அந்த நாட்டு விமானம் ஒன்று மீண்டும் காணாமல் போகப் போகிறது என்றும், ஏற்கனவே காணாமல் போன விமானம் ஒன்று கடலில் தென்படும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இறை மார்க்கங்கள் யாவும் உயிர்பெறும் காலம் இதுவென்றும் “ஸ்ரீ கல்கி பகவானின்“ அவதாரம் இப்பூமியில் உடனே நிகழ உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இந்த பரந்த உலகத்தை ஆளவரும் அந்த ஆத்மா இவ்வுலகில் ஏற்கனவே அவதரித்துவிட்டது என்றும், அந்த ஆத்மாவின் உலகப் பிரவேசம் இன்னும் சில நாட்களில் துவங்கிவிடும் என்றும், அந்த ஆத்மாவின் ஸ்தூல சரீரத்தின் அடையாளம் இனி உலக மக்களுக்கு காட்டப்பட உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. காலத்தால் அழிக்க முடியாத “ஆதிசக்தியின்“ காவியத்தை அந்த ஆத்மாவே இயற்றும் என்றும், இனி உலக வரலாற்றில் அந்த ஆத்மாவே பெரும் பங்கு வகிக்கும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட உரைக்கின்றது.



புனிதர் ஒருவரின் வருகை உடனே நடக்க உள்ளது என்றும், அது தமிழகத்தில் உடனே நடக்க உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. இதே சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள 9,10,11-ம் தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு ஒரு உண்மையை சுட்டிக் காட்டுகின்றது.

வளர்ந்த பெரும் நாடுகள் முழுவதிலும் இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் உடனே இறங்கிட உள்ளதாகவும் இதன் காலக் கட்டம்  JUNE 16 2018 முதல் JUNE 16 2021 வரை இருக்கும் என 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.



இனி கடல்களில் “சுனாமி“ பேரலைகள் உருவாகி மக்களை அழிக்க உள்ளது என்றும், இதற்கு பூமியின் அடிதட்டு அதிர்வானது 8.8 முதல் 9.8 வரை இருக்கும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



மன்னார் வளைகுடா புயல் மீண்டும் இங்கே நினைவூட்டப்படுகிறது என்றும், இதுவே மிக, மிக அருகாமையில் நடக்க உள்ள புயல் பாதிப்புகள் என்றும், இதனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் இன்னும் அறியவில்லை என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



புத்தனின் கல்லறை ஒன்று கண்டறியப்படும் என்றும், புத்தர் வாழ்ந்த உடல் எரிக்கப்படவில்லை என்றும், அது சித்தர்களின் ஜீவ சமாதி போன்று வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், அந்த கல்லறை இந்தியாவின் தொன்மையான ஒரு மாநிலத்தில் கண்டறியப்பட உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

காலம் சென்ற நடிகர் ஒருவரின் வாரிசு தற்போது அரசியல் களத்தில் குதிக்க உள்ளதாகவும், இதனால் தமிழக அரசியலில் பல குழப்பங்களும், பேச்சுக்களும் ஏற்பட இருப்பதாக 16-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை பதிவு செய்கிறது.


இந்திய அரசியல் அமைப்பின் முக்கிய சாசனம் ஒன்று மாற்றி வரையறுக்கப்பட உள்ளது என்றும், இது பெண்கள் சமூகத்திற்கு தகுந்த நீதியும், பாதுகாப்பையும் பெற்றுத் தரும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.




அமெரிக்கா உளவு நிறுவனம் ஒன்று பல நாடுகளில் தனது உளவு வேலையை வெற்றிகரமாக முடித்து ஒரு அறிக்கையை வெளியிடும் என்றும், அந்த அறிக்கையில் அடுத்த வல்லரசு நாடு இந்தியா என்றும், இந்தியாவை ஒரு மிகச்சிறந்த பெண்மணி ஆட்சி செய்வாள் என்றும், உலகை ஆளும் அந்த இளைஞன் தற்போது இந்தியாவில் உள்ளான் என்றும், தனது அறிக்கையை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும், அச்சமயத்தில் அமெரிக்காவின் “NASA“ உலகம் வியக்கும்விதமாக ஒரு செய்தியை வெளியிடும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளின் நட்புறவு பெரிதும் பாதிக்கும் என்றும், ஆனால் ரஷ்யா, இந்தியா இரு நாடுகளின் நட்பு வளரும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் இங்கே ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

காலம் சென்ற “சமூக சிந்தனையாளர்“ ஒருவரின் வாரிசு தமிழக அரசியல் களத்தில் இறங்கி மக்களை விழிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் காட்சிகளை தமிழக மக்கள் காண உள்ளார்கள் என்றும், இது நடக்கும் சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டு உள்ள “ஆகாயத்தில் ஒரு ஒளி“ எனும் நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் உள்ள 36-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள பல குறிப்புகள் நடக்கும் காலம் இதுவென்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


வழக்கத்திற்கு மாறாக “சந்திரனில்“ ஒரு மாற்றம், வரும் மாதமொன்றில் நடக்க உள்ளது என்றும், இது இறைவனின் எச்சரிக்கையாக உலக மக்கள் கருத வேண்டும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


வேற்றுகிரகவாசிகள் பூமியின் எல்லையில் புகுந்துவிட்டனர் என்றும், அவர்களை காணும் காலமாக இக்காலம் இருக்கும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. அவர்களை மக்கள் காணும் அக்கால கட்டத்தில் எகிப்தின் பிரமீடு ஒன்று பூமியிலிருந்து வெளிவந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இறைவனின் சேனைகள் இப்பூமியின் மீது இறங்கிட ஆயத்தமாகி விட்டன என்றும், இது சத்திய யுகத்திற்கான படைகள் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. இந்த சேனைப் படைகள் பூமியில் இறங்கும் சமயத்தில் “உலக அளவில்“ பிரசித்திப் பெற்ற ஒரு “சிவாலயம்“ மண்ணுக்குள் புதையுண்டுப் போகும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


உலகத்தின் பெரும் மாற்றத்திற்கு இதுவே முன் அடையாளமாக உலக மக்கள் கருத வேண்டும் என 16-ம் தீர்க்கதரிசனம் எச்சரிக்கை செய்கிறது.

பல அரசியல் தலைவர்கள், பல மூத்த ஆன்மீகவாதிகள் இறக்கும் காலக் கட்டம் இதுவாக இருக்கும் என 16-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை பதிவு செய்கிறது. 2019-க்கு பிறகு எந்த ஒரு அரசியல்வாதியின் வாரிசுகளும் இந்த நாட்டை ஆள முடியாது என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


தமிழகத்தில் மீண்டும் கலவரங்களும், போராட்டங்களும் அதிகமாக நடக்கும் என்றும், காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்களை கையாள வேண்டும் என 16-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை பதிவு செய்கிறது.

இறைவனின் இறுதிசபையில் இடம் பெறும் அனைவரும் தேர்வாகி விட்டனர் என்றும், அவர்களின் பெயர்களை முன்னறிவிக்கும் நிகழ்வு ஒன்று விரைந்து நடக்க உள்ளதாகவும், அது சேலத்தில் நடக்க உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.




இறைவன், இறைவி இருவரின் கலவையாக அன்னை “ஆதிசக்தி“ இப்பூமியில் இறைவனாக கால்ஊன்றும் நேரம் வந்துவிட்டது என்றும், அவரை வரவேற்க மக்களாகிய நாம் மிகுந்த ஆவலுடன் காத்திருப்போமாக.

-- முற்றும்--

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

பிராண்டிங் என்னும் உளவியல் தாக்குதல் சினிமாவின் மூலம் திணிக்கப்படுவதும் அதனால் அரங்கேற்றப்படும் சுரண்டல் வணிகமும்...








இது தான் சினிமா சூழ்ச்சி...






நாசா மறைத்த உண்மைகள்...


கடந்த காலங்கலில் மிகப்பிரபலமாகப் பேசப்பட்ட விக்கிலீக்ஸ் (Wikileaks) இன் யூலியன் அஸ்ஸாஞ்சை (Julian Assange) உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சமீபத்தில் முடக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படி முடக்கப்பட்டதற்கு காரணமே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதுவுமல்ல, வேறு மிக முக்கியமான ஒன்று தான் அதற்குக் காரணம் என தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

‘கேபிள்கேட்’ (Cablegate) என்னும் பெயரால், 250000 அமெரிக்காவின் ராஜதந்திர அறிக்கைகளை அஸ்ஸாஞ் கணணி மூலம் கடத்தி வெளியிட்டார். அந்த அறிக்கைகளில் முக்கியமானதாக கருதப்பட்டது என்ன தெரியுமா? அயல் கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுகள் (ufo) பூமிக்கு வந்திறங்கியது என்ற செய்திகள்தான். அத்துடன் இதவற்றை நாஸாவின் மூலம் ஆதாரத்துடன் அறிந்து கொண்ட அமெரிக்க அரசாங்கம், திட்டமிட்டு அனைத்தையும் மறைத்திருக்கிறது.

கடந்த வருடங்களில் மட்டுமே 400க்கும் அதிகமான சம்பவங்கள் பறக்கும் தட்டுகள் பூமியில் வந்திறங்கியது சம்மந்தமான ஆதாரங்கள் அஸ்ஸாஞ் வெளியிட்ட அறிக்கைகளில் இருக்கின்றது. அதுவும் குறிப்பாக பிரிட்டனில் பறக்கும் தட்டுகள் வந்திறங்கியது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்களை அமெரிக்க ‘கார்டியன்’ (The Guardian) பத்திரிக்கைக்கு சாட் (Chat) மூலம் அஸ்ஸாஞ் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திகளை ஐரோப்பாவின் மிகமுக்கிய பத்திரிக்கைகள் எல்லாமே தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன.

பறக்கும் தட்டுகள் பற்றி எப்போது அஸ்ஸாஞ் சொல்ல ஆரம்பித்தாரோ, அப்போதே அவரை நோக்கி பாலியல் குற்றச்சாட்டுகளும் பறக்கும் தட்டுகள் போல பறந்துவரத் தொடங்கின. அரசுகள் அனைத்தும் அவருக்கு எதிராகின. அரசுகள் அனைத்துக்கும் மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்று அடைவதில் தயக்கம் இருக்கின்றது. அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மக்களுக்கு அதியுயர் ஸ்தானத்தில் இருப்பவை அரசுகள்தான். அவற்றையும் விட சக்தி வாய்ந்த மனிதர்கள் வேற்று உலகில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால், அவர்கள் அரசுகளை மதிக்கமாட்டார்கள், கட்டுப்பட மாட்டார்கள். இதனால் நாடுகளின் சமநிலைகள் குளம்பிவிடலாம்.

எனவே அரசுகள் இப்படிப்பட்ட செய்திகள் அனைத்தையும் மக்களுக்கு சென்றடையாமல் இரகசியமாகவே பாதுகாக்கின்றன. அப்படிப் பாதுகாப்பதில் மிக முக்கியமாக இந்த இருக்கும் ஸ்தாபனங்களில் ஒன்றுதான் நாஸா.

நாஸா மறைத்த மிக முக்கியமான வேறு பல விசயங்களும் உண்டு...

முத்த மொழி...


தலைபிற்குள் செல்வதற்கு முன்...

இத 18+ சொல்லுறவங்களுகாக வைரமுத்தின் வரிகள் (பாசம் பேசும் மொழியை ஆபாசம் என்பது தவறு
இதற்கோர் தணிக்கை எதற்கு இது அன்பின் மாநாடு)..

முத்தம் அன்பை பரிமாறிக் கொள்ள பயன் படும் மற்றொரு மொழி..

நமது உடல் முழுக்க மின்னோட்டங்கள் ஓடிகொண்டே இருக்கு அதுவே காந்தம் போன்று செயல்படும்.

அதே போல இப்போ வேறு ஒரு காந்தம் வந்தால் இரண்டும் ஒன்றை ஒன்று ஈர்க்கும்...

அந்த மின்னோட்டகள் மூலம் உங்கள் எண்ணங்களை புரிந்துகொள்ள முடியும்.

இதில் உன்னிப்பாக பார்க்க வேண்டியது என்னவென்றால் நாம் நமது துனைவியிடம் தான் முழு அன்பை காட்டுவோம்.

காரணம் உடல் ரீதியான அன்பு பரிமாற்றம் கலவி மூலமாக நடக்கும்.

இதே போல தான் முத்தம் அதுவும் ஒருவரின் எண்ணங்களை மற்றொரு உணரமுடியும் அவர்கள் அந்த நேரத்தில் என்ன யோசிக்குறாங்கனு..

இது போன்ற செயல்களால் தான் கணவன் மனைவிக்குள்ள ஒரு புரிதல் இருக்கும் துனைவி/துனைவன் அடுத்து என்ன செய்வானு சொல்லிருவாங்க/புரிஞ்சு அதற்கு ஏற்ப இருவரும் நடந்துப்பாங்க (bonding)..

இது நம்ம அம்மா கிட்டையும் நடக்கும். அவளின் ரத்தம் நமக்குள் ஓடுவதனால் உன் மன எண்ணங்களை சுலபமாக உணர்வாள் அப்பாவும் அதே போல தான்.

ஆனால் எதிர் பாலினத்தின் மீது தான் ஈர்பு இருக்கும்.. (காந்ததுல எதிர் எதிர் திசை சேராது).

அடுத்து குழந்தைகளுக்கு நாம் தரும் முத்ததமும் அப்படி தான் எண்ணங்களை பரிமாற்றி கொள்ளும் நாம் அந்த குழந்தையின் மீது வைத்திருக்கும் அன்பை சொல்லும் புரியவில்லை என்றாலும் உணர முடியும்.

இதற்கு ஒரே ரத்தம் என்பது மேலும் வலுசேர்க்கும்..

இதுக்கு மேல பொது இடத்துல சொல்ல முடியாது..

அன்பை போற்றுவோம்...

அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள்...


கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரத் தளபாடங்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சிலரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் கொக்கைத்தடிகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கைத்தடிகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு கொக்கைத்தடிகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக் காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக் கூடும்...

அனைத்திலும் உண்மைத் தன்மையை ஆராயுங்கள்...


சினிமாவில் சம்பாதித்ததை மக்களுக்காகச் செலவழித்துவிட்டு, சாதாரண வீட்டில் வாழும் ரியல் காலா இவர் தான்...


தமிழ்படத்தில் ஏழைகளுக்கு உதவும் ஹீரோவாக நடித்துவிட்டால் போதும், நேராக தமிழக முதல்வராக ஆகிவிடலாம் என கனவு காணும் தமிழ்பட ஹீரோக்களேதெரிந்து கொள்ளுங்கள்"தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...! " இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல! இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்! ஆமாம் காலா படத்தில் மார்க் ஆண்டனிக்கு டப் கொடுக்கும் நடிப்பை வெளிபடுத்திய கொடூரமான வில்லனான நானே படேகரின்ரியல் லைஃப் என்னன்னு தெரியுமா?

நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்! அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல!

இந்தி நடிகர் நானா படேகர் தா..

தனது சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ! வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ராவின் மராத்வாடா மாவட்டம். கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்க தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி. இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும்.

இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில், அந்த பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர். சையிரட்டுக்கு முன் நம்மிடம் அறிமுகமான மராத்திய நடிகர். திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும்தான் நானாவின் பிழைப்பு. தினச்சம்பளம் 35 ரூபாய். சொற்ப சம்பளத்தில் தாயும் மகனும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். மராத்தி நாடகங்களில் நடித்து, ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு, வருமானம் கொட்டியது.

மூன்றே மாதங்களில் முழு சினிமாவை முடித்து விடும் இன்றைய காலத்தில், 'பிரகார் ' என்ற படத்தில் நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற, சற்றே வித்தியாச நடிகர் நானா.மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை. அரசாலும் தடுக்கமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை.

நடிகர் என்பதையும் தாண்டி, சொந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது நானாவை என்னவோ செய்தது. குறிப்பாக மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தார் நானா. சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு. 2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.

நன்கொடை பணம் முழுவதும் விவசாயிகளுக்கு முழுமையாக சேர வேண்டும் என்பது நானாவின் அடுத்த இலக்கு. இந்த விஷயத்தில் நானா படேகர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது. வேறு ஏதாவது அமைப்பு வழியாக வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை. மூன்றாவது அமைப்பின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை. எந்த அமைப்பையும் அணுகவில்லை. அவரே நேரடியாக களத்தில் குதித்தார்.

மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நானாவே நேரடியாக சந்தித்தார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கு நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மகாராஷ்ட்ராவில், இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.

திரையில் ஆன்டி ஹீரோவாக நடிக்கும் நானாதான், மராத்வாடா மக்களின் நிஜ ஹீரோ. கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும், மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா. ''சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே'' என்றால் , 'இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில் வருகிறது.

'தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...' நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது... காலா வில்லனின் ரியல் வாழ்க்கை இதுதான்...

புறக்கணிப்பின் வெற்றி...