கடந்த காலங்கலில் மிகப்பிரபலமாகப் பேசப்பட்ட விக்கிலீக்ஸ் (Wikileaks) இன் யூலியன் அஸ்ஸாஞ்சை (Julian Assange) உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சமீபத்தில் முடக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படி முடக்கப்பட்டதற்கு காரணமே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதுவுமல்ல, வேறு மிக முக்கியமான ஒன்று தான் அதற்குக் காரணம் என தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
‘கேபிள்கேட்’ (Cablegate) என்னும் பெயரால், 250000 அமெரிக்காவின் ராஜதந்திர அறிக்கைகளை அஸ்ஸாஞ் கணணி மூலம் கடத்தி வெளியிட்டார். அந்த அறிக்கைகளில் முக்கியமானதாக கருதப்பட்டது என்ன தெரியுமா? அயல் கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுகள் (ufo) பூமிக்கு வந்திறங்கியது என்ற செய்திகள்தான். அத்துடன் இதவற்றை நாஸாவின் மூலம் ஆதாரத்துடன் அறிந்து கொண்ட அமெரிக்க அரசாங்கம், திட்டமிட்டு அனைத்தையும் மறைத்திருக்கிறது.
கடந்த வருடங்களில் மட்டுமே 400க்கும் அதிகமான சம்பவங்கள் பறக்கும் தட்டுகள் பூமியில் வந்திறங்கியது சம்மந்தமான ஆதாரங்கள் அஸ்ஸாஞ் வெளியிட்ட அறிக்கைகளில் இருக்கின்றது. அதுவும் குறிப்பாக பிரிட்டனில் பறக்கும் தட்டுகள் வந்திறங்கியது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்களை அமெரிக்க ‘கார்டியன்’ (The Guardian) பத்திரிக்கைக்கு சாட் (Chat) மூலம் அஸ்ஸாஞ் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திகளை ஐரோப்பாவின் மிகமுக்கிய பத்திரிக்கைகள் எல்லாமே தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன.
பறக்கும் தட்டுகள் பற்றி எப்போது அஸ்ஸாஞ் சொல்ல ஆரம்பித்தாரோ, அப்போதே அவரை நோக்கி பாலியல் குற்றச்சாட்டுகளும் பறக்கும் தட்டுகள் போல பறந்துவரத் தொடங்கின. அரசுகள் அனைத்தும் அவருக்கு எதிராகின. அரசுகள் அனைத்துக்கும் மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்று அடைவதில் தயக்கம் இருக்கின்றது. அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மக்களுக்கு அதியுயர் ஸ்தானத்தில் இருப்பவை அரசுகள்தான். அவற்றையும் விட சக்தி வாய்ந்த மனிதர்கள் வேற்று உலகில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால், அவர்கள் அரசுகளை மதிக்கமாட்டார்கள், கட்டுப்பட மாட்டார்கள். இதனால் நாடுகளின் சமநிலைகள் குளம்பிவிடலாம்.
எனவே அரசுகள் இப்படிப்பட்ட செய்திகள் அனைத்தையும் மக்களுக்கு சென்றடையாமல் இரகசியமாகவே பாதுகாக்கின்றன. அப்படிப் பாதுகாப்பதில் மிக முக்கியமாக இந்த இருக்கும் ஸ்தாபனங்களில் ஒன்றுதான் நாஸா.
நாஸா மறைத்த மிக முக்கியமான வேறு பல விசயங்களும் உண்டு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.