29/12/2018

காஃப் சிரப் எதற்கு...? கஷாயம் இருக்க.....?


குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

சில துளசி இலைகளை அலசி வைத்துக் கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக் கொள்ளவும். சீரகத்தை சிறிது எடுத்துக் கொள்ளவும்.

600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சீரகத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும்.

பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்...

அதிமுக எனும் ஊழல் அரசு...


போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட கார்பரெட் அரசியலும்...


வைக்கோல் பார்த்திருக்கியா ?

வயக்காடு பார்த்திருக்கியா ?

மாடு கன்னு,பார்த்திருக்கியா ?

மஞ்ச நாத்து பார்த்திருக்கியா ?

நாத்து நடவு பார்த்திருக்கியா ?

சின்ன குருவி பார்த்திருக்கியா ?

சேட்டை பண்ணும் தேனீ
பார்த்திருக்கியா ?

மரங்கள் பார்த்திருக்கியா ?

அதில் பழங்கள் பார்த்திருக்கியா ?

கோல மயில் பார்த்திருக்கியா ?

கொஞ்சும் கிளி பார்த்திருக்கியா ?

அழகு புறா பார்த்திருக்கியா ?

காடுகள் பார்த்திருக்கியா ?

காட்டு விலங்குகள் பார்த்திருக்கியா?

காய்கறிகள் பார்த்திருக்கியா?

கனி தின்னும் வெவ்வால் பார்த்திருக்கியா?

வயல் தோறும் இருக்கும் "நாரை" பார்த்திருக்கியா?

தாத்தா பாட்டி பார்த்திருக்கியா?

தாய், தந்தை அன்பை நாள் முழுதும் பெற்றிருக்கிறாயா?

சகோதர சகோதரிகள் பார்த்திருக்கிறாயா?

இல்லை இல்லை இல்லை...

மரங்கள் இல்லை..
பறவைகள் இல்லை..
விலங்குகள் இல்லை..
வயக்காடும் இல்லை..
உழவனும் இல்லை..
அக்கம் பக்கம் பிள்ளைகளும் இல்லை..

இருப்பதெல்லாம்..

அரசியலும், அதிகாரமும்..
லஞ்சமும், ஊழலும்..
பாக்கெட் தண்ணீரும், டாஸ்மாக்கும்..
அவசர உணவுகளும்..

பார்வைக்கு....
கணினியும், தொலைக்காட்சியும் மட்டுமே...

இந்திய இலுமினாட்டி களின் மருத்துவ மாப்பியா...


2011ஆம் ஆண்டு இந்திய அரசு இந்த மருந்தினை தடை செய்தது. மீண்டும் உச்ச நீதி மன்றம் தடையை விளக்கியது...

வெள்ளைச்சீனி பற்றி நாம் அறிந்திடாத பல திடுக்கிடும் தகவல்கள்...


வெள்ளைச்சீனியும் அதன் நச்சுத் தன்மையும்...

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டைக் கொலரொல் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதுகப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளைச் சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது...

சாகர்மாலா திட்டம் தொடங்கும் வரை தான்...


இதை படித்து விட்டு கடந்து செல்பவர்கள அதிகம் இங்கு, இதை பற்றி பரவும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சாகர்மாலா திட்டம் தொடங்கும் வரை தான்.

வார விடுமுறை நாட்களில் தொ(ல்)லைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் உன்னை சிந்திக்கவிடாமல் இருக்க ஆரம்பிக்கப்பட்டவை தான்...

கூவத்தூரில் முட்டிபோட்டு முதலமைச்சர் ஆனவர் துரோகத்தை பற்றி பேசுவதா ? - செந்தில் பாலாஜி...


பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகி விடுகின்றேன் கரூரில் செந்தில் பாலாஜி பேச்சு...

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை...


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள்...

கார்ப்பரெட் (இலுமினாட்டி) வியாபாரத்தை புரிந்துக் கொள்ளுங்கள்...


முன்னேறிய நாடுகளில் வாக்குச்சீட்டு தான்...


உலகில் முன்னேறிய நாடுகள் என்றால் அவை அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்றவை...

மேற்கண்ட நாடுகள் 1995 க்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டுமுறை தேர்தல் வந்தபோது  மின்னணு வாக்குப் பதிவினை முயற்சித்து பார்த்து பெரும்பாலும்  2010க்குள் கைவிட்டுவிட்டன.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கனடா எப்போதும் வாக்குச்சீட்டே பயன்படுத்துகிறது..

பின்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி தவறு நடந்ததாக கண்டுபிடித்து) மின்னணு வாக்குப்பதிவை 2008ல் தடை செய்து வாக்குச்சீட்டு மூலம் மறுதேர்தல் நடத்தியது.

ஜெர்மனி (ஒருமுறை பயன்படுத்திப் பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவை தடை செய்தது.

அயர்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவு நம்பிக்கைக்குரிய வகையில் இல்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து அவற்றை அழித்து விட உத்தரவிட்டது.

நெதர்லாந்து (ஒரு முறை முயற்சித்து பார்த்து) 2007 ல் பாதுகாப்பற்றது என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்தது.

நார்வே 2013ல் (இருமுறை முயன்ற பிறகு) மின்னணு வாக்குப்பதிவு செய்து பார்த்து கைவிட்டது.

இங்கிலாந்து தேர்தல் ஆணையம் 2008 ல் மின்னணு வாக்குப்பதிவை கைவிட்டது.

இத்தாலி வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது. சீட்டின் வண்ணம் தேர்தலின் வகையைப் பொறுத்து இருக்கும்.

ஸ்காட்லாந்து வாக்குச்சீட்டை பதிவெடுத்து மின்னணு தரவாக மாற்றும் இயந்திரத்தை பயன்படுத்துகிறது.
(இதிலும் தவறு நடத்ததாக கண்டு பிடித்துள்ளது).

பெல்ஜியம் மின்னணு வாக்கு அட்டையை பயன்படுத்துகிறது.
(நேரடியாக இயந்திரத்தில் வாக்கினை பதிவு செய்வதில்லை).

அமெரிக்காவில் பாதி மாகாணங்கள் வாக்குச்சீட்டையும் பாதி மாகாணங்கள் மின்னணு முறையையும் பயன்படுத்துகின்றன.

ஜப்பான் வாக்குச்சீட்டில் வேட்பாளர் அல்லது கட்சியின் பெயரை எழுதி போடும் முறையை பின்பற்றுகிறது.
(தேர்தலுக்கு முன்பே வாக்களிக்கலாம்).

ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. வாக்குச்சீட்டு தான் பயன்படுத்துகின்றனர்.

ரஷ்யா வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது. சீட்டை மடிக்காமல் போட வேண்டும்.

ஆக வளர்ந்த நாடுகளே பயன்படுத்தி பார்த்து தோல்வியடைந்தது என பத்தாண்டுகள் முன்பே கைவிட்ட ஒரு தொழில் நுட்பத்தைத் தான் இந்தியா பிடித்துக் கொண்டு தொங்குகிறது.

இதைச் சொன்னால் நம்மை கோமாளி, பிற்போக்குவாதி, கற்கால மனிதன் என்கின்றனர் நவீன முட்டாள்கள்...

நல்ல முயற்சி.. எல்லா கடைகளிலும் பின்பற்றலாம்...


பழைய சோற்றில் இருக்கு சத்து...


எரிவாயு அடுப்பும், சமையல் பாத்திரம் (cooker) சோறும் வந்தபின்னர் பழைய சோறு சாப்பிடுவதே நமக்க மறந்துவிட்டது. குழந்தைகளுக்க பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சென்று அங்க குடியேறிய நம்மவர்கள் சிலர். தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகள் கண்டறிந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது.

அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆசாய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது முதல் நாள் சோற்றில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது.

உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் பாக்டீரியாக்கள் (Trillions Of Bacteria) (கவனியுங்கள் மில்லியன் அல்ல ட்ரில்லியன்) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன எந்தக்காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடல் இலகுவாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் (bacteria) அதில் உருவாகின்றன.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருந்து நார்ச்சத்து,மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில் கூட வராது. இப்போதைய நிலையில் புழுங்கல் அரிசி(Raw rice)என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சோர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் போதும். ஆராய்ச்சியில் சொன்ன பலன்களை அனுபவிக்க முடியும்...

உலகின் மிகப் பெரிய அணை...


எது அரசியல் ?


உங்களின் தலைவன் மட்டும் வாழ்ந்தால் போதுமா?

உங்களின் கருத்தியல் மட்டும் போதுமா?

உங்களின் இனம் வாழ்ந்தால் மட்டும் போதுமா?

உங்களின் நாடு வாழ்ந்தால் மட்டும் போதுமா?

உங்களின் ஒற்றுமை மட்டும் போதுமா?

உங்களின் ஊர்காரன் வாழ்ந்தால் மட்டும் போதுமா?

உங்களின் ஜாதிகாரன் வாழ்ந்தால் போதுமா?

உங்களின் குடும்பம் வாழ்ந்தால் மட்டும் போதுமா?

உங்களின் தலைமுறை மட்டும் வாழ்ந்தால் போதுமா?

உங்களின் ஆசை தீர்ந்தால் மட்டும் போதுமா?

உங்களின் வீரம் வெற்றி பெற்றால் மட்டும் போதுமா?

உங்களின் சுயதேவை மட்டும் போதுமா?

உங்களின் நகர வாழ்க்கை மட்டும் போதுமா?

இன்னும் பல கேள்விகளை தூக்கி கொண்டு செல்கிறேன் முடிவில்லா பாதையை நோக்கி கண்ணீருடன்..

என்று இந்த பூமியில் மகிழ்வும், அன்பும் பொங்கி எழுகிறதோ, அன்று உயிர்களுக்கான வாழ்க்கை பயணம்  தொடரும்..

காலங்கள் மாறாட்டம் காட்சிகள் மாறட்டும் பாதை தெரியும்...

3ம் உலகப் போருக்கு தயார் - ரஷ்யா...


நாங்கள் எதற்கும் தயார் என்பது போல தன் நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகனையினை சோதித்து உலகை அதிர வைத்திருக்கின்றது ரஷ்யா...

ஏவுகனை என்பது ஹிட்லரின் கனவு, வான் பிரவுண் தலமையில் ஒரு குழுவினையும் இன்னொரு விஞ்ஞானி தலமையில் இன்னொரு குழுவினையும் வைத்து தன் ஏவுகனை திட்டங்களை செய்தார் ஹிட்லர்.

பறக்கும் குண்டு என சிலவற்றை செய்து லண்டனை தாக்கி மிரட்டினார், அதற்குள் காலம் முடிந்தது.!தலைமறைவு ஆனார்.

நாசிக்களை வீழ்த்துகின்றோம் என உள்ளே புகுந்த ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆளாளுக்கு ஒரு குழுவினை தன்வசம் இழுத்து சென்றன‌.

அடுத்து என்ன.?

இருவரும் ஏவுகனைகளாக செய்தார்கள், ராக்கெட்டாக செய்து வானுக்கும் சென்றார்கள், ஹிட்லரின் நுட்பத்தை திருடி இருவருமே ஏவுகனை , ராக்கெட் நுட்பத்தில் சமபலத்தில் இருந்தார்கள்.

அமெரிக்கா வான் பிரவுனால் ஏவுகனை பலம் பெற்றது, ரஷ்யா அதை சொல்லவில்லை எல்லோரும் தோழர்கள் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருந்தது.

அமெரிக்காவின் ஏவுகனை பலம் அபாரமானது ஆனால் ரஷ்யா பக்கம் கொஞ்சம் கூடுதல் பலம்.

ஆம் ஹிட்லரின் எந்த கும்பலை ரஷ்யா தன் வசம் கொண்டு சென்றார்களோ அவர்கள்  ஏவுகனை , ராக்கெட் விவகாரங்களில் மேதாவிகள்.

குருயீஸ், பாலிஸ்டிக், டார்பிடோ, சூப்பர்சானிக் என பல ஏவுகனை வகைகளில் அமெரிக்கா சரிக்கு சரி நின்றாலும் இன்றைய செய்தி அதிர வைக்கின்றது.

இன்றைய நிலையில் மகா வேக ஏவுகனை இதுதான், ஏவுகனை எதிர்ப்பு சிஸ்டம் இதனை தடுப்பது சுலபமல்ல‌.

காரணம் இந்த வேகத்தில் எதிர்ப்பு ஏவுகனை வந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால், இது இன்று மிகபெரும் ஆயுதமாகின்றது..

அதையும் மீறி வரும் எதிர்ப்பு ஏவுகனைகளை திசைமாற்றிவிடும் நுட்பமும் இருக்கின்றது என்கின்றது ரஷ்யா..

ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது...

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி...


1) மூலிகையின் பெயர் - இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் - காஸ்டஸ் பிக்டஸ் (Kastas piktas).

3) தமிழ் பெயர் - கோசுட்(ஷ்)டம் (Kostam).

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லி..

4) PLANT FAMILY: Costaceae.

5) BOTANICAL NAME: Costus இக்நேஉசு(ஸ்).

6) பயன் தரும் பாகம் : இலை.

7) வளரியல்பு.

இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோசுட்(ஸ்)டா ரிகா (Costa Rica) நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர்.

கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நாற்றங்கால்(nursery) உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம்.

இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும்.

ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

8 ) மருத்துவப் பயன்கள்...

சர்க்கரை நோயாளிகளுக்கு காசு(ஸ்)டசு(ஸ்) பிக்டசு(ஸ்) என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது.

காசுடசு பிக்டசு  என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை.

இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும்.

ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காசுடசு பிக்டசு அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வுக் கட்டுரை - Pharmacology Study...

தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. ANTI Diabetic herb.

பல்லாண்டு பயிரான காசுடசு பிக்டசு தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்...

பழக்கத்தின் வலிமை...


தனியாக வாழ்வது.. மிக மிக கடினம்.

அதுவும் இந்த உலகத்தோடு ஒட்டாமல் பழக வேண்டும்.

இது முதலில் சாத்திய மற்றதாகவே தோன்றும்.

ஆனால், யாருக்காவது சூழ்நிலையின் காரணமாக தனியாக இருக்க நேர்ந்தால்.

ஆரம்பித்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பாா்.

பிறகு நாட்கள் ஆக, ஆக அதுவே பழகி போயிருக்கும்.

நீங்கள் அவா்கிட்ட போய் கேட்டீங்க என்றால்.

என்ன செய்வது, இதுதான் எனக்கு அமைந்தது, இதுவே பழகி போச்சு.
என்று தானே சொல்வாா்.

இது தான் பழக்கத்தின் வலிமை.

முதலில் கட்டாயமாக்க வேண்டும்.
மனம் எதிா்க்கும்.

பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அதை பொறுத்து கொள்வீா்கள்.

கடைசியில், மனம் உங்கள் வழிக்கு வந்து விடும்.

இது தான் பழக்கத்தின் பயிற்சி.

எதை திரும்ப திரும்ப செய்கிறீா்களோ
அதுவாகவே நீங்கள் ஆகிவிடுகிறீா்கள்...

சத்துணவு மையங்கள் மூடல்: அரசு ஆரம்ப பள்ளிகளை ஒழித்துக்கட்ட அரசு துடிக்கிறதா? பாமக அறிக்கை...


தமிழ்நாட்டில் 25-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை உடனே மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையிட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணியிடம் குறைப்பு, செலவுக் குறைப்பு ஆகிய நோக்கங்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு அபத்தமானது. தமிழகத்தின் கல்விச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

தமிழக அரசின் சமூகநலத்துறை ஆணையர் அமுதவல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவுள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடி, அவற்றில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களை, காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தையும் திசம்பர் 28-ஆம் தேதிக்குள் முடித்து, அதுகுறித்த அறிக்கையை தமக்கு அனுப்பி வைக்கும்படி கூறியிருக்கிறார். அதன்படி குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகளின் சத்துணவு மையங்கள் அதிரடியாக மூடப்பட்டு வருகின்றன.

சமூக நலத்துறை அறிவித்துள்ள திட்டத்தின்படி, ஒரு பள்ளியில் சத்துணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை 25-க்கும் குறைவாக இருந்தால், அங்குள்ள சத்துணவு மையங்களில் உணவு சமைக்கப்படாது. மாறாக, அந்த பள்ளியில் ஒரு சமையல் உதவியாளர் மட்டும் இருப்பார். அருகிலுள்ள மற்றொரு பள்ளியில் சமைத்துக் கொண்டு வரப்படும் உணவை வாங்கி மாணவர்களுக்கு அவர் வழங்குவாராம். மலைப்பகுதிகளாக இருந்தால் சத்துணவு அமைப்பாளர் இல்லாமல், சமையலர் மட்டும் இருந்து உணவு சமைத்து வழங்குவாராம்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு பள்ளிக்கான சத்துணவு மையம் மூடப்பட்டாலும், அப்பள்ளிக்கு இன்னொரு பள்ளியிலிருந்து உணவு வந்து விடுகிறதல்லவா? இதிலென்ன பாதிப்பு? என்று எண்ணத் தோன்றும். ஆனால், இதில் இருவகையான பாதிப்புகள் உள்ளன. முதலாவது  வேலைவாய்ப்பு சார்ந்தது. இரண்டாவது கல்வி சார்ந்தது. தமிழகத்தில் 25க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட சத்துணவு மையங்களின் எண்ணிக்கை 8,000 ஆகும்.  ஒரு மையத்துக்கு ஓர் அமைப்பாளர்,  ஒரு சமையலர், ஒரு சமையல் உதவியாளர் இருப்பார்கள். இவர்களில் சமையல் உதவியாளர் தவிர்த்த  மீதமுள்ள இரு பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்பதால், 16,000 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு விடும். சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகிய பணியிடங்கள் ஆதரவற்ற பெண்களுக்கும், கைம்பெண்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இப்பணியிடங்கள் ஒழிக்கப்படுவதால் ஆதரவற்ற மற்றும்  கைம்பெண்கள் 16 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

ஒரு பள்ளியில் சமைத்து இன்னொரு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. 25-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சத்துணவு மையங்களில் 99% தொடக்கப் பள்ளிகள் தான். அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகள் பெரும்பாலும் உயர்நிலைப்பள்ளிகளாகவோ, மேல்நிலைப் பள்ளிகளாகவோ தான் இருக்கும். தொடக்கப் பள்ளிகளுக்கான உணவு இடைவேளையும் சற்று முன்பாகவும், மற்ற பள்ளிகளின் உணவு இடைவேளை சற்று தாமதமாகவும் தொடங்கும். அதுமட்டுமின்றி, ஒரு பள்ளிக்கும் மற்றொரு பள்ளிக்கும் இடையிலான தொலைவு குறைந்தது 2 முதல் 3 கிலோ மீட்டர் இருக்கும். அதனால், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு வந்த பிறகு தான், தொடக்கப் பள்ளி குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்றால், அவர்கள் வழக்கமான நேரத்தை விட அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்  வரை தாமதமாகும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை உணவுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதை விட கொடுமையான மனித உரிமை மீறல் இந்த உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது.

அதுமட்டுமின்றி, ஓரிடத்தில் தயாரிக்கப்பட்ட உணவை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில்  சுகாதாரம், தூய்மை சார்ந்த பல சிக்கல்கள் உள்ளன. இத்தகைய காரணங்களால் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்கா விட்டாலோ, உணவில் சுகாதாரக் குறைபாடு இருந்தாலோ, அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் ஆபத்து இருக்கிறது. இடைநிற்றலைத் தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், இடைநிற்றலை ஊக்குவித்து விடக்கூடாது. ஒருவேளை மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் இருந்து விலக வேண்டும்; அதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்பதற்காகவே அரசு இவ்வாறு செய்கிறதா? என்பது தெரியவில்லை.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும்,  இடை நிற்றலைத் தடுக்கவும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே உணவு தயாரித்து வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்...

மத்திய பாஜக அரசின் மானியம் குறைந்ததால் 8000 சத்துணவு மையங்கள் மூடப்படுகிறது...


தொடரும் அரசு மருத்துவமனையின் அலட்சியம் - என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?


முறையாக சுகாதாரம் பராமரிக்கப்படாதது முதல் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனத் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.

சாத்தூர் அரசு மருத்துவமனையில், அங்குள்ள ஊழியர்களின் அலட்சியத்தால் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ``அரசு மருத்துவமனையை இனியும் நம்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார். தமிழகம் மிகச்சிறந்த மருத்துவர்களுடன், ஏழை எளியவர்களுக்கும் மிகச்சிறந்த மருத்துவ வசதி கிடைக்க ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பல்நோக்கு மருத்துவமனை வரை இலவச மருத்துவ சேவையை வழங்கிவருகிறது. ஆனால், அரசு மருத்துவமனையில் முறையாகச் சுகாதாரம் பராமரிக்கப்படாதது முதல் முறையான சிகிச்சை அளிக்கப்படாததுவரை எனத் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.

இந்த நிலையில்தான், ரத்த வங்கிமூலம் ரத்தம் பெற்று, அதை முறையாகப் பரிசோதிக்காமல் வேறு ஒருவருக்கு ஏற்றியதால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். இதுபோல இந்த ஒரு வருடத்தில் அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

சம்பவம் 1:

கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என்றும், உள்நோயாளிகளைக் கவனிக்கச் செவிலியர்களும் இல்லை என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தினமும் ஆயிரம் பேருக்கு மேல் வெளிநோயாளிகளாகச் சிகிச்சைக்கு வரும் அரசு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர்தான் வருகிறார். மேலும் ஊசிபோட இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நோயாளிகள் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

சம்பவம் 2:

இந்த ஆண்டு ஜனவரியில், திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக காரில் வந்திருக்கிறார், தனலட்சுமி. பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த தனலட்சுமியை, மருத்துவமனையில் அனுமதிக்காமல் காலந்தாழ்த்தி வந்துள்ளனர். மருத்துவமனைத் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த தனலட்சுமிக்கு காரிலேயே குழந்தை பிறந்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் காரிலேயே குழந்தை பிறந்ததையடுத்து பதறிப்போன மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக தனலட்சுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைகயளித்தனர்.

சம்பவம் 3:

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சசிகலா. கர்ப்பமாக இருந்தபோது, உடல்நலக் குறைவு காரணமாகக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, ஊசிமூலமாக மருந்து செலுத்தப்பட்டது. அலட்சியமாகச் செலுத்தப்பட்டதால், ஊசியின் பாதிமுனை உடைந்து சசிகலாவின் கையின் உள்ளே சென்றுவிட்டது. நாளடைவில் அவருக்கு வலி ஏற்பட, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, உடைந்த ஊசி உள்ளே இருப்பது தெரியவந்தது. இதன்பிறகு, அவர்களை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர். ஊசியும் அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறி, ``இனிமேல் எந்தப் பிரச்னையும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது சசிகலா மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் அவருக்குத் திடீரென நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர். சசிகலாவுக்கு, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அவரது நெஞ்சுப் பகுதியில் உடைந்த ஊசி இருப்பது தெரியவந்தது.

இந்த வரிசையில்தான் சாத்தூர் மருத்துவமனையும் இணைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தம் குறைவாக இருப்பதால், அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த 20 நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், 4 நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, அரசு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ரத்தம் செலுத்தப்பட்டதில்தான் பிரச்னை என்று தெரிந்ததும், அந்த ரத்தம் யாருடையது என்று விசாரிக்கப்பட்டது. அப்போதுதான் ரத்தம் கொடுத்தவர் இருமுறை ரத்ததானம் செய்துள்ளார் என்பதே தெரியவந்தது. இதையடுத்து, எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு தற்போது மதுரையில் சிறப்புச் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் இருக்கச் சிறப்புக் கவனம் எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டமானது. இவர்களுக்கு வேண்டிய வாழ்வாதார உதவிகள் செய்யப்படும். எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல், அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். குழந்தைக்கு எச்.ஐ.வி வராமல் தடுக்கச் சிகிச்சை அளிக்கப்படும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்...

பித்தத்தைப் போக்கும் கிராம்பு...


கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.

பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்...

பாஜக மோடி கலாட்டா...


சாலையின் ஓரத்தில் தன்னை பார்க்க நின்றிருந்த சிறுவனை அழைத்து தனது காரில் அமர வைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பாம அன்புமணி ராமதாஸ்...


நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க, இன்று நெய்வேலி சென்ற பொழுது சாலையின் ஓரத்தில் நின்றிருந்த சிறுவன் பேன்ஸ் காரை பார்த்து வியக்க, அவனை அழைத்து காரில் அமரவைத்து பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது...

மனிதர்க்குள் ஏற்படும் மாற்றாங்களே இந்த பூமியிலும் பிரபஞ்சத்திலும் ஏற்படுகிறது...


மனிதர்கள்  மாற்றங்களே இந்த இயற்க்கையின் மாற்றம்..

இயற்கையின் மாற்றமே பூமியின் மாற்றம்..

பூமியின் மாற்றமே பிரபஞ்சத்தின் மாற்றம்..

மனிதர்களை  கொண்டே அனைத்து மாற்றங்களும் இயங்குகிறது..

ஆதி முதல் இன்று வரை
மையம் மனிதர்கள்...

பாஜக - காங்கிரஸ் இரண்டுமே கார்ப்பரேட் கைகூலிகளே...


தேங்காயின் மருத்துவக் குணங்கள்...


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.

இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.

விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.

இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது...

கார்பரேட் ( இலுமினாட்டி ) வியாபாரத்தை புரிந்துக் கொள்ளுங்கள்...


தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்....


இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும், ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிட பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்..

வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.

பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.

தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை..

கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன் தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.

அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின்.

இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவனின் போராட்டம்...

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கையளித்தது.

அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. அதற்கு தலைவனாக அந்த மன்னனை அமர்த்தியது துணைக்கு தன் பெரும் இராணுவத்தை அனுப்பியது. குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் கெரில்லா போராளிகளாக மாறினர்.

பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமேரிக்க இராணுவத்தோடு போரிட்டால். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர்.

[போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகம்.

அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது ].

அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான் யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக்கொண்டிருக்கிற) அமெரிகக படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது.

தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்த சிறுவனின் பெயரை எடுத்துக்கொண்டது வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது...

Kinder joy உண்மைகள்...


நாம் படித்தும் முட்டாள்களாகவே இருக்கிறோம்/வளர்கிறோம், ஆனால் அதை வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்று கூறி கொண்டே அந்நிய மோகத்தை விதைக்கிறோம் என்பதே நிதர்சனம்.

அதற்கு நாம் வைக்கும் பெயர் நாகரிகம்...

டைனோசர் உண்மைகள்...


தொடக்கத்தில் டைனோசர்கள் ஒருமுறை பூமியில் வாழ்ந்ததாக ஆதாரங்களாக புதைப்படிவங்கள் உள்ளன. ஆனால் எகிப்தியர்கள் தங்கள் ஹைரேகிளிஃப்ஸில் பதிவு செய்த இந்த நீண்ட கழுத்துடைய டைனோசர்கள், தற்போதைய புதைப்படிவத்தி காணப்படும் டைனோசர்களின் மாதிரி போலவே உள்ளது.

இந்த ஹைரேகிளிஃப்ஸில், டைனோசர்களுடன் மனிதர்கள் இருப்பது போன்ற காட்சிகள், அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்ததையே காட்டுகிறது. எகிப்தில் மட்டுமல்ல, இவர்களுக்கு முந்தைய சுமேரிய நாகரீகத்திலும், அவர்களின் களிமண் பட்டையங்களிலும் இந்த நீண்ட கழுத்துடைய டைனோசர் உயிரினங்களை பதிவுசெய்துள்ளனர்.

பண்டைய வரலாறுகள் என்று நாம் நம்பிக்கொண்டிருப்பவைகள், நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது...

எங்கே அந்த மானங்கெட்ட மாதர் சங்கம்.?


விரல்களும் மருத்துவமும்...


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்...