25/09/2018

நம்ம கிட்ட டியூசன் படிச்சவனா இருப்பானோ...


பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்...


1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.

3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை.

6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.

7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).

8.மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.

9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.

10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.

11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.

15.ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.

16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.

18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.

19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.

20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.

21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.

22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.

23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.

24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.

25.சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.

26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.

27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.

28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.

29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.

30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை).

31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.

32.முகம் அழகுபெற திராட்சை பழம்.

33.அஜீரணத்தை போக்கும் புதினா.

34.பிளட் சுகரை விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.

35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.

36.மஞ்சள் காமாலை விரட்டும் கீழாநெல்லி.

37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் வாழைத்தண்டு.

38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்...

பாஜக மோடியின் விளம்பர செலவு...


தமிழகத்தில் அடிமைப் பெண்கள் ஏற்றுமதி - சொல்லப்படாத வரலாறு...


திராவிடர் ஆட்சிக் காலம், தமிழக பெண்களுக்கு இருண்ட காலமாக அமைந்தது. அதுவரை பெண்கள் அனுபவித்து வந்த உரிமைகள் மறுக்கப்பட்டன.

அக் காலப் பெண்கள் நிலை குறித்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம்.

ஆண்கள் வரதட்சிணை வாங்கும் வழக்கம் திராவிடர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.

வரதட்சிணை -திராவிடர் வழக்கமே..

சோழர்காலம் வரை, மணமகளுக்கு மணமகன் பரிசம் போட்டுத் திருமணம் செய்யும் முறையே இருந்தது.இது குறித்து வராற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.

பெண் வீட்டார் மணமகனைத் தேடிச் செல்லுதல் பழந்தமிழர் பண்பாட்டுக்கு முரணாகும். மணமகன் வீட்டார் பெண்ணை நாடி மணமகள் வீட்டுக்கு வரவேண்டும். மணமகன் பெண்ணுக்குப் ’பரியம்’ (ஸ்பரிசம்) அல்லது தொடுவிலை போட வேண்டும். பெண் வீட்டார் மணமகனுக்கு வரதட்சிணை வழங்குதல் தமிழரின் மரபு அன்று.

ஆனால், பெண்களுக்கு நிலங்களைச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் அந்நாளிலும் உண்டு. தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. விக்கிரமசோழன் காலத்தில் மங்கை நல்லூரில் வாழ்ந்திருந்த அகளங்கராயன் என்பான் ஒருவன் தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவிட்டு விட்டதற்காக, அவளுக்குச் சிறு நிலங்களை ஈடாகக் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.

எந்தக் காரணத்தாலோ, சில பிராமண குலங்களில் பெண்ணுக்குப் பரியம் கொடுக்கும் பழக்கம் நுழைந்து விட்டதெனத் தெரிகிறது. அதைக் கண்டித்து ஒரு கிராமத்துப் பிராமணருள் கன்னடியர், தமிழர், தெலுங்கர், இலாடர் ஆகியவர்கள் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதன்படி, கன்னியாதானமாகவே தம் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றும், மணமகளின் தந்தைக்குப் பரியப் பணம் கொடுக்கும் மாப்பிள்ளையும், பரியம் பெற்றுக் கொள்ளும் மணமகளின் தந்தையும் குலத்தினின்றும் தள்ளி வைக்கப்படுவர் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. (தமிழர் வரலாறும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை).

ஆக, வரதட்சிணை முறை தமிழர் முறை அன்று என்பதும், அம்முறையை அறிமுகப்படுத்தினோரே, திராவிடர்களாகிய தென்னிந்திய பிராமணர்தான் என்பதும் தெளிவாகிறது. இந்த திராவிடர்களாகிய தென்னக பிராமணர்கள் தமக்கான ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆணாதிக்கக் கூத்துகளில் சிலவற்றைக் காண்போம்.

பொதுவாக பெற்றோர்கள் தங்களின் மகள்களைப் பாரமாகவே கருதினர். அவர்களுக்கு விரைவில் மணமுடிக்க விரும்பினர்.

பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

மனுதர்ம அடிப்படையில் நடந்துகொள்ள பெண்கள் வலியுறுத்தப்பட்டனர்.

பொதுமகளிர் எனப்பட்ட விபசாரிகள் முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.

உடன்கட்டை ஏறும் வழக்கமிருந்தது.

அரசர்கள் இறந்தால் அவர்களுடைய மனைவியர், காமக்கிழத்தியர் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயில் விழுந்து மாண்டனர்.

உடன்கட்டை ஏறாத பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்கள் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். ஆபரணங்களைக் களைந்து வெள்ளை நிற ஆடை அணிந்தனர்.

உணவுப்பழக்கமும் மாற்றப்பட்டது.பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி/ சரசுவதிமகால் வெளியீடு 2007/ பக் – 106, 107, 108).

மேற்கண்ட பெண்ணடிமைத்தன வழக்கங்கள் குறித்து திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த 100 ஆண்டுகளாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

ஆனால், அவர்கள் பேச்சின் சாரமாக, தமிழர்கள் ஆணாதிக்கவாதிகள் என்ற கருத்து இருக்கும். இதற்காக, கண்ணகியின் வீரத்தைக் கொச்சைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. ’திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோர் ஆணாதிக்கவாதிகள்’ என்ற அடாத பழியைப் போடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஆனால், விஜயநகர, நாயக்கர் காலத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய சான்றுகளை அவர்கள் முன் வைப்பதே இல்லை.

திராவிடர் ஆட்சியில் தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத களங்கமான போக்கும் உருவாக்கப்பட்டது. அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி செய்யும் வணிகம்தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76).

பெண்களை அடிமைகளாக்கும் விதிகளை உருவாக்கியது மனுநீதி. பெண்களைப் பண்டங்களாக்கி ஏற்றுமதியும் செய்த மனிதகுல விரோத ஆட்சிதான் திராவிடராகிய தென்னிந்திய பிராமணர்ஆட்சி என்பதை உணர வேண்டும். பெண்கள் வணிகம் என்பது ஒரு குறியீடுதான். பெண்கள் ஏற்றுமதியே செய்யப்பட்டார்கள் என்றால், சமூகத்தில் பெண்கள் நிலை எந்தளவு மோசமாக இருந்திருக்கும் எனக் கற்பனை செய்தால் வேதனையே மிஞ்சும்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சமூகநிலையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஆட்சி முறை திராவிட அரசர்கள் காலத்தில் உருவானது.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை அல்லவா...

பாஜக மோடியும் வங்கி ஊழலும்...


அரசு பணியிடங்களில் பிராமணர்களின் ஆதிக்கம்...


1 . ஜனாதிபதி செயலகத்தில் மொத்த இடுகைகள் 49

பிராமணர்கள் 39
SC & ST 4
OBC 6

 2. துணை ஜனாதிபதி செயலகம்

மொத்த இடங்கள் 7

பிராமணர்கள் 7

SC ST OBC. 0

3.  கேபினட் செயலர் பதவிகள்

மொத்த இடங்கள் 20

பிராமணர்கள் 17
SC ST 1
OBC 2

4. பிரதமர் அலுவலக இடங்கள் 35

பிராமணர்கள் 31
SC ST 2
OBC 2

5. விவசாய அமைச்சகம் 274
பிராமணர்கள் 259
SC ST 5
OBC 10

6. பெட்ரோலிய அமைச்சக இடங்கள் 121
பிராமணர்கள் 99
SC ST 0
OBC 22

7.  சமூக நல சுகாதார அமைச்சகம் 209
பிராமணர்கள் 132

8. நிதி அமைச்சகம் 1008

பிராமணர்கள் 942
SC ST 20
OBC 46

9. பிளானட் அமைச்சகம் 409

பிராமணர்கள் 327
SC ST 19
OBC 63

10. தொழில் அமைச்சகம் 74
பிராமணர்கள் 59
SC ST 4
OBC 9

11. கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் 27

பிராமணர்கள் 25
SC ST 0
OBC 2

12. வெளிநாட்டில் வாழும் தூதுவர் 140
பிராமணர்கள் 140
SC ST 0
OBC 0

13. மத்திய அரசு பல்கலை துணைவேந்தர் 108
பிராமணர்கள் 100
SC ST 3
OBC 5

14. மத்திய பொது செயலாளர் 26
பிராமணர்கள் 18
SC ST 1
OBC 7

15. உயர் நீதிமன்ற நீதிபதி 330
பிராமணர்கள் 306
SC ST 4
OBC 20

16. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 26
பிராமணர்கள் 23
SC ST 1
OBC 2

17. மொத்த IAS அதிகாரிகள் 3600
பிராமணர்கள் 2750
SC ST 300
OBC 350

இந்த தகவல்கள் எல்லாம் யங் இந்தியா என்ற அமைப்பின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2018 ல் பெறப்பட்டது

இப்ப தெரியுதா ஏன் எச்ச ராஜா, எச்ச சேகர் எல்லாம் ஏன் இவ்வளவு திமிரா பேசுறாங்க னு?

3%க்கும் குறைவான பிராமணர்கள் 90% உயர் பதவிகளைப் பிடித்தது எப்படி என்று சிந்தியுங்கள் தோழர்களே...

1579ஆம் ஆண்டில் தமிழ் அச்சு...


இந்திய பாதுகாப்பு துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் பாஜக மோடியின் ரஃபேல் ஒப்பந்தம் - உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குற்றச்சாட்டு...


இந்திய பாதுகாப்பு துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ரஃபேல் ஒப்பந்தம் என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக இந்திய சட்ட விதிகள் எதுவும் பின்பற்றபடவில்லை என்றார். பிரதமர் மோடிக்கு ஏதோ ஒரு வகையில் அனில் அம்பானி சேவை செய்து வருவதாகவும், அதனால் தான் இந்த ஒப்பந்தம் அவரது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானியின் நிறுவனம் 20 ஆயிரம் கோடி லாபம் பெறும் என்று அவர் கூறினார். ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரசாந்த் பூஷன், இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்...

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்...


ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவையல்‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம்.

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..

தேவையான பொருள்கள் :

தூதுவளை இலை - 2 கப்
புதினா - 1 கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1/2 துண்டு
சிறிய வெங்காயம் - 10
சிவப்பு மிளகாய் - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்
புளி - கோலிக்குண்டு அளவு
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை :

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும்.

கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.

சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி.

புதினா, தூதுவளை இலையை சிறிது வதக்கினால் மட்டும் போதும்...

மாண்டியாவும் தமிழும் மாலியமும்...


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள செல்லப்பிள்ளை கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்று வரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்து கொண்டு பிறகு சிந்திக்கவும்..

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி, செல்லப்பிள்ளை செலுவ நாராயணா ஆகி, சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்த பெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்..

அவர்கள் இன்றும் தமிழராகத் தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது..

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின. ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்..

நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்..

அதாவது வைணவ பார்ப்பனர்கள்.

அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்..

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே..

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது..

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப்போராடியது..

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

TISA இந்தியா மறைக்கும் இரகசியம்...


திராவிடமும் தெலுங்கு சாதி வெறியும்...


இசை வேளாளர் என்று இதுவரை இல்லாத ஒரு சாதியை, தனக்குத்தானே ஒரு சாதியை உருவாக்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது தெலுங்கு அரசியல் ஆதிக்கமே..

அதே போல் தான் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை ஆதித்தமிழர் என்றும்..

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆதி திராவிடர் என்றும்.. மாற்றும் வல்லமையை தெலுங்கு அரசியல் ஆதிக்கத்தால் வந்த ஆதிக்க மனப்பான்மையே..

தெலுங்கர்களை தமிழர்களாகவும்
தமிழர்களை திராவிடர்களாகவும்
சித்தரித்து தமிழனை அழிக்க கருணாநிதி (திராவிடக் கட்சிகள்)  செய்த சூழ்ச்சியே..

அரசியல் ஆதிக்கம் இல்லாத தமிழர்களால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதனை உடைத்தெறிய தமிழர்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ஒன்றே வழி..

தமிழர்களாய் ஒன்றிணைவோம்..

ஆரசியல் அதிகாரத்தை திராவிடத்திடம் இருந்து தட்டிப் பறிப்போம்...

கன்னட ஈ.வே.ரா வின் திராவிட புரட்சி பெண் பார்த்துக்கோங்க...


வடுகர்களின் அறிவிக்கப்படாத போர்...


வடுகர்களின் பூர்வீகம் தெரியாவிட்டாலும் வேங்கட மலைக்கு அப்பால் ஆண்ட தமிழ் மன்னர்கள் காட்டுமிராண்டிகளான வடுகர்களை கூலிப்படையாக வைத்திருந்தனர் என்பது மட்டும் தெரிகிறது.

(தமிழர்களான) நன்னர்களுக்கு அடங்கி விசுவாசமாக நடந்துவந்த (வடுகர்களான) கோசர்களுக்கு நன்னன் செய்த ஒரு வன்கொடுமையே, வடுகர்கள் தமிழர் மீது பகைகொண்ட தொடக்கப்புள்ளி.

ஆனால் வடுகர்கள் நேரடியாக அல்லாது மறைமுகமாக குறுக்கு வழியில் உறவாடிக் கெடுத்து தலைமுறை தலைமுறையாக தமிழினத்தின் மீது அறிவிக்கப்படாத போர் புரிந்து அதில் முக்கால்வாசி வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அந்த தொடக்கப்புள்ளி ஒரு பெண்கொலை.

நன்னனின் காவல்மரத்தின் (மாமரம்) ஒரு பழம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது.

அதை விபரம் தெரியாத ஒரு வடுகர் பெண் எடுத்து தின்றுவிடுகிறாள்.

இதற்கு மரணதண்டனை அளிக்கிறான் கொடுங்கோலனான நன்னன். வடுகர்கள் அவளது எடைக்கு எடை தங்கமும் அதோடு 81 யானைகளும் தருவதாகக் கூறி அவளை விடுதலை செய்யுமாறு கெஞ்சுகின்றனர்.

ஆனாலும் மனமிரங்காத அந்த கொடிய மன்னன் அந்த அப்பாவி பெண்ணைக் கொலை செய்கிறான்.

(புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் _பரணர், குறுந்தொகை 292)

அதன்பிறகு வடுகர்கள் ஒற்றுமையாகி சூழ்ச்சி மூலம் நன்னனை வீழ்த்தி அவனது காவல்மரத்தை வெட்டியெறிந்தனர்.
(நன்னன் நறுமா கொன்று
நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சி
_ குறுந்தொகை 73)

ஆனாலும் வடுகர் நெஞ்சில் இந்த கொலை ஆறாத வடுவாக பல தலைமுறைகள் படிந்திருந்தது.

நன்னர்களை வீழ்த்திய வடுகர்களைத்தான்..

நந்தர்களை வீழ்த்திய மோரியர் என்று வரலாறு பதிவு செய்கிறது.

பெரும் வல்லரசாக எழுந்த வடக்கு வடுகரான மோரியர் தென்வடுகர் உதவியுடன் தமிழர் மீது போர் தொடுத்தனர். ஆனால் மூவேந்தரின் கூட்டணிப்படையிடம் படுதோல்வி அடைந்தனர்.

அதன்பிறகு தமிழர்களை சுற்றிவளைத்து தோற்கடிக்க தென்னிலங்கைக்கு படையனுப்பி புத்தமதத்தைப் பரப்பி அங்கே சிங்களவரோடு கலந்து தமிழர்களுக்கு எதிராக சிங்களவரைத் தூண்டியபடி இருந்தனர்.

வடவடுகர் ஏற்படுத்திய மோரிய பேரரசு வீழ்ந்ததும் தென்வடுகரான களப்பிர காட்டுமிராண்டிகள் தமிழர் மீது படையெடுத்து வென்றனர். (இதுவே இருண்டகாலம் என்று கூறப்படுகிறது) களப்பிரர்க்கு அடங்கி சிற்றரசாக இருந்த பாண்டியர் கடுங்கோன் காலத்தில் கிளர்ச்சி செய்து வடுகர்களை தோற்கடித்து ஒழித்தனர்.

அதே நேரத்தில் வட இலங்கையில் இருந்து ஆண்ட பாண்டியர் மீது ஆண்டுகளாக பலமுறை போர்தொடுத்து போர்தொடுத்து இறுதியில் தாதுசேனன் என்ற மோரிய குடிவழி மன்னன் குறுக்கு வழியில் பாண்டிய மன்னர் இருவரைக் கொன்றதன் மூலம் தமிழர்களை 700 ஆண்டுகள் கழித்து ஈழத்தில் வீழ்த்தினான்.

ஆனாலும் சோழ அரசின் பேரெழுச்சி அனைவரையும் அடக்கி தமிழர் பேரரசாக எழுந்தது.

வடக்கே வடுகர்களை துவம்சம் செய்தது.
இலங்கையிலும் வடுகர்களை ஒழித்தது.

இராசராசனை எதிர்த்து தோல்வியடைந்த வடுகன் அம்மன்னனின் பிறந்தநாளில் விடுதலை அடைந்து அரசவையில் பாட்டுப்பாடி சோழ இளவரசியை பரிசாகப் பெற்று அவள் மூலம் பெற்ற மகனை (அநாபய சாளுக்கியன் அல்லது குலோத்துங்க சோழனை) சூழ்ச்சி மூலம் சோழ அரியணையில் அமர்த்தினான்.
கலப்பினமாயினர் சோழர். இலங்கையை சிங்களவர் மீண்டும் பிடித்தனர்.

பாண்டியநாடு தவிர தமிழ்மண் முழுதும் வடுகரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

அப்போது பாண்டிய பேரரசு மீண்டும் எழுந்தது.

வடுக படைத்தளபதியுடன் வந்த சேரனை முறியடித்து அரைவடுகரான சோழரை அடக்கி வடமேற்கு தமிழகத்தில் நுழைந்திருந்த வடுக ஒய்சளரை விரட்டியடித்து பல்லவ வம்சாவழி காடவரையும் தெலுங்கு சோழரையும் ஒழித்துஈழத்தையும் மீட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

முழுமையாக தமிழ்மண் ஒற்றையாட்சியில் மீண்டும் வந்தது.

ஆனால் வாரிசுரிமைப் போர்களால் பாண்டிய அரசு வலுகுன்றியது.
இதைப் பயன்படுத்தி வடக்கே ஆண்ட துருக்கிய மங்கோலிய சுல்தான்கள் தமிழகத்தில் பாதியை வென்றனர்.
அவர்களுக்குள்ளேயே உட்கலகம் நடந்தபோது வடுகர்கள் மீண்டும் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசாக நுழைந்தனர்.

துருக்கியரை வென்று பாண்டியரை அடக்கி தமிழகத்தை மீண்டும் கைப்பற்றினர்.

கண்டி சிங்களவருக்கு பெண்கொடுத்து அவர்களை மேலும் கலப்பினமாக்கி மீண்டும் தமிழருக்கு எதிராகத் தூண்டினர்.

(அதாவது மோரியர் காலத்தில் செய்ததை அப்படியே மீண்டும் செய்தனர்).

ஆங்கிலேயர் இங்கே நுழைந்ததும் அவர்களுக்கு அடிபணிந்து சிற்றரசாகத் தொடர்ந்த வடுக நாயக்கர்கள் அவர்கள் அகன்றதும் அவர்கள் உருவாக்கித்தந்த திராவிடம் எனும் பெயரால் மீண்டும் தமிழகத்தை ஆளத்தொடங்கினர். ஈழத்தில் சிங்கள பௌத்தம் எனும் பெயரால் தமிழர்களை ஒழிக்கத் தொடங்கினர்.

1958 ல் ஈழத்தில் வன்முறை தொடங்கியது.

1956 ல் தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் விழுங்கப்பட்டன.

2009 ல் இனப்படுகொலை நடந்து இலங்கை முழுதும் விழுங்கப்பட்டு விட்டது.

2015 ல் இங்கே மண்ணோடு சேர்த்து தமிழினத்தை அழிக்க அணுவுலை மீத்தேன் ஹைட்ரோகார்பன் என நாசகாரத் திட்டங்கள் வடுகரால் தலைமேல் சுமந்து அழைத்து வரப்பட்டு தமிழ்மண் மீது  சுமத்தப்பட்டுள்ளன.

முதலில் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழர் கூட்டணி அமைத்து மோரியரை விரட்டினான்.

அடுத்து கடுங்கோன் பாண்டியன் களப்பிரரை விரட்டியடித்தான்(அதன் பிறகு சோழர் எழுந்தனர்).

அடுத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் நிலத்தை மீட்டான்.

தற்போது மீண்டும் வடுகம் ஹிந்தியரின் உதவியோடு தமிழர் மண்ணை சுற்றிவளைத்துள்ளது. விரைவில் வீழ்த்தவுள்ளது

இப்போது அதை முறியடிக்கப்போகும் தமிழர் தலைவன் யார்?

குளிர்பானம் உண்மைகள்...


பாஜக மோடியின் ரஃபேல் விமான ஊழல்...


ரஃபேல் ஒப்பந்த ஊழலின் வழியாக 2Gயில் நடந்தது போன்றதொரு கார்ப்பரேட் யுத்தம் தொடங்குகிறது. காங்கிரஸ் வெளிப்படையாக இறங்கி வந்து அடிக்கிறது. மோடியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது...

சென்ற 2G விவகாரத்தில், “கூட்டணிக் கட்சிகள்தானே மாட்டுகின்றன” என்று கார்ப்பரேட்டுகள் இழுத்த இழுப்புக்குப் போய் மக்களிடம் அந்நியப்பட்டு காவிகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், இன்று அதே விளையாட்டின் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயல்கிறது.

எந்த சந்தேகமும் இல்லாமல் இதில் மோடி சிக்குகிறார் என்பதும், இந்த தேர்தலில் இது மிகப்பெரிய விவகாரமாக இது உருவெடுக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதில் மோடி செய்திருக்கும் ஊழல் என்ன?

எந்த முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸின் அனில் அம்பானி இந்த ஒப்பந்தத்தின் இந்திய ஒப்பந்தத்தை வெல்வதற்கு உதவினார் என்பதுதான் மோடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.

அது என்ன இந்திய ஒப்பந்தம்?

கிட்டத்தட்ட 1,50,000 கோடி ரூபாய் நிகர மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில், உத்தேசமாக 50,000 கோடி ரூபாய்களுக்கு மேலான  தளவாட உற்பத்தி மற்றும் அது சார்ந்த வேலைகளை இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செய்யவேண்டும் என்பது  இந்த ஒப்பந்தத்தின் ஒரு நிபந்தனை.

மேலும் தொழில் நுட்பத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவேண்டும் என்பதும் கூடுதல் நிபந்தனை. இவ்வளவு பணம் கொடுத்து 126 போர் விமானங்களை வாங்கப் போகிறோம் என்கிறபோது, எந்த நாடுமே இத்தகைய நிபந்தனைகளை விதிக்கவே செய்யும். இந்தியாவும் செய்தது. நமது Hindustan Aeronautics Limited நிறுவனம் ரஃபேலுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்குகிறது. அப்போதுதான் ஆட்சி மாற்றம் நடக்கிறது. (நான் குறிப்பிடும் ஒப்பந்த மதிப்புகள் இறுதியானவை அல்ல. இன்னும் கூடுதல்)

மோடியின் பிரான்ஸ் விஜயம் நடக்கிறது. அந்தப் பேச்சு வார்த்தையில்தான் மோடி நேரடியாகத் தலையிட்டு ரஃபேலின் இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் கம்பெனியை சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார். Hindustan Aeronautics Limited அதிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த இடத்தில் முக்கியமான ஒன்றைக் கவனிக்கவேண்டும்.

இந்த ஒப்பந்தத்தைப் பொருத்தவரை இந்திய அரசு, அதாவது மோடிதான் உரிமையாளர். Client. இந்தியாவின் நிபந்தனையை -அதாவது மோடியின் நிபந்தனையை- ஏற்றுக்கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வேறு காரணங்களைச் சொல்லி, மறு டெண்டருக்கு இந்தியா போகமுடியும். ரிலையன்சை ஒத்துக்கொள்ளும் வேறு கம்பெனிக்கு ஒப்பந்தத்தை வழங்க முடியும்.

மேலும் ஒரு ஒப்பந்தத்தின் உரிமையாளர் “இந்த கம்பெனியை உங்களது இந்திய பங்குதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னால், அதை ஃபிரான்ஸ் வரவேற்கவே செய்யும். ஏனெனில் இந்த ஒப்பந்த்தத்தை நிறைவேற்றுவதன் சுமையை வேறு விதமாக இந்தியாவும் பகிர்ந்துகொள்ளும் நிலை ஏற்படும் என்பதே அதற்குக் காரணம்.

இந்த இடத்தில்தான் ஃபிரான்ஸ் அரசாங்கம், தந்திரமாக மற்ற எந்த அரசையும் போல, தனது இந்திய பார்ட்னரை தெரிவு செய்துகொள்வது ரஃபேலின் உரிமை என்றும் அந்த அடிப்படையில் தான் அது ரிலையன்ஸை தேர்ந்தெடுத்தது என்றும் சொல்கிறது. ஆனால் ஒப்பந்த ஷரத்துக்கள் முழுமையாக வெளிவரும் பட்சத்தில் – அதாவது கசியும் பட்சத்தில் – அவர்கள் மோடியின் கோரிக்கைக்குப் பணிந்தது தெரியவரும். அது எப்படி?

ரிலையன்ஸுக்கு இந்தத் துறையில் எந்த முன் அனுபவமும் கிடையாது. கட்டமைப்பும் கிடையாது என்பதெல்லாம் அந்த ஒப்பந்த ஷரத்துகளை ஒப்பிடும் போது தெரிந்துவிடும். பிஜேபி, இராணுவ ரகசியம், தேச பாதுகாப்பு என்று பம்மாத்து பண்ணுவது அதனால்தான். ஆனால் காங்கிரஸ் நினைத்தால் அதைக் கசியவைக்க முடியும். அதைச் செய்வார்கள் என்றும் நினைக்கிறேன்.

சொந்த ஆட்சியிலேயே தேவைப்பட்ட நேரத்தில் தகவல்களைக் கசியச் செய்பவர்கள் அவர்கள். நீரா ராடியா நினைவிருக்கிறதுதானே. அதனால்தான் நிர்மலா உள்ளிட்டவர்கள் கட்டுப்பாட்டுடன் பொய் சொல்கிறார்கள். அம்பலப்பட்டுவிடுவோம் என்கிற அச்சம்.

ஆக இப்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து விவாதமான பிறகு, “எங்களுக்கு மாற்று வாய்ப்புகள் இந்தியாவால் வழங்கப்படவில்லை”, “இந்த ஒப்பந்தத்தின் இந்தியப் பங்காளியாக ரிலையன்ஸ் தேர்வு என்பது இந்தியாவின் தேர்வு” என்று அதன் முன்னால் அதிபர் சொல்கிறார். தற்போது ஆட்சியில் இருக்கும் பிரான்ஸ் அரசாங்கமோ முன்னால் அதிபரைப் போல உடைத்து சொல்லாமல் இதே கருத்தை வேறு வேறு வடிவங்களில் மழுப்பலாக சொல்கிறது.

இதில் மோடி புரிந்திருக்கும் குற்றம் என்ன?

இந்த ஒப்பந்தம் Hindustan Aeronautics Limited க்கு கிடைத்திருந்தால், அதன் பலன் இந்திய பொதுத் துறை நிறுவனத்துக்கு வந்திருக்கும். அந்த நிறுவனம் தனது தொழில் நுட்பத்திறனை வளர்த்துக்கொள்ள இந்த ஒப்பந்தம் பெருவாய்ப்பாக அமைந்திருக்கும். வரும் காலங்களின் நாமே சொந்தமாக இத்தகைய விமானங்களைத் தயாரிக்கும் நிலைக்கு நாம் நகர சிறந்த வாய்ப்பு உருவாகியிருக்கும். அதைத் தடுத்த வகையில் மோடி இந்தியாவுக்கு செய்திருப்பது துரோகம். மிகப்பெரிய குற்றம்.

மேலும் எந்த கட்டமைப்பும் இல்லாத ரிலையன்ஸ், Hindustan Aeronautics Limited, BHEL போன்ற நிறுவங்களின் கட்டமைப்பைப் பயன்படுத்தியே இந்த விமானங்களைச் செய்து முடிக்க முடியும். அவர்கள் அப்படித்தான் தொலைத்தொடர்புத் துறையில் காலூன்றினார்கள். BSNL ன் எல்லா திறன்களும் அவர்களுக்கு திறந்து விடப்பட்டன. பிறகு அவர்கள் பெரிதாக வளர்ந்து மற்ற நிறுவனங்களை ஒடுக்கும் நிலைக்கு வந்தார்கள். இங்கு மோடி செய்ய விரும்புவது அதைத்தான்.

அவர்கள் வழியாக ஒரு நிழல் அரசை நிறுவுவது. Defence Deal என்பது பொன்முட்டையிடும் வாத்து. மேலும் கட்டற்ற அதிகாரம். எது குறித்து கேட்டாலும், இராணுவ ரகசியம், தேச பாதுகாப்பு என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். 2G யில் நடந்தது போன்ற விசாரணைகள் சாத்தியமே இல்லை.

நேரடியாக இந்தியப் பொதுத்துறை நிறுவனத்துக்கு கொடுக்காவிட்டாலும் கூட, ரிலையன்ஸ் மற்றும் Hindustan Aeronautics Limited உள்ளடக்கிய ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கி அதை ரஃபேலது இந்தியக் கூட்டாளியாக்கியிருந்தால் மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்று ஒத்துக்கொள்ளலாம். ஏனெனில் லகான் பொதுத்துறை நிறுவனங்களின் வாயிலாக நம்மிடம் இருக்கும். அதாவது இந்திய அரசிடம். இப்போது நடந்திருப்பது வேறு.

ரஃபேலும் ரிலையன்ஸும் கைகோர்த்துக்கொண்டு, நமது பொதுத் துறை நிறுவனங்களுடன் துணை ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டு பணிகளைச் செய்வார்கள். அதாவது ஆர்டர்களைக் கொடுத்து வாங்குவார்கள். பங்குதாரராக இருந்திருக்கவேண்டிய நமது பொதுத்துறை நிறுவனம் வெறும் சப்ளையராக சுருங்கிப் போகும். சுருக்கமாகச் சொன்னால், நமது பணத்துக்கு அம்பானி முதலாளி. அதுவும் எந்த பணம்? இந்த ஒப்பந்தப் பேப்பரை மட்டும் வைத்துக்கொண்டு நமது பொதுத் துறை நிறுவனமான வங்கிகளிடம் ரிலையன்ஸ் கடன் வாங்கும். இந்த சுழல் பாதை புரிகிறதா இப்போது?

இதன் வழியாக பிஜேபி அடையும் பலன்கள் என்ன?

ரிலையன்ஸ் + பிஜேபி கூட்டு. அவர்களது நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதி இது. பண மதிப்பிழப்பு காலத்தில் ரிலையன்ஸின் வழியாக பிஜேபி பலனடைந்தது என்பது போன்ற விவாதங்கள் அமித்ஷாவை தொடர்புபடுத்தி கிசுகிசுக்கப்படுகின்றன. தேர்தல் என்பது பணம் என்று ஆகியிருக்கும் காலத்தில், இந்தியா முழுமைக்கும் தனது நிறுவனக் கட்டமைப்பை வைத்திருக்கும் ரிலையன்ஸ், நமது கற்பனைக்கு எட்டாத வகையில் பிஜேபிக்கு உதவ முடியும். அதுவும், திவாலாகும் நிலையில் இருக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுத் தந்திருப்பதன் வழியாக, என்ன பிஜேபிக்கும் அனிலுக்கும் என்ன உள் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று அனுமானிக்கமுடியவில்லை.

ஆனால் காங்கிரஸ் தனது முழு ஆயுதங்களுடன் வெளி வந்திருப்பத்தைக் காண்கையில் இது எளிதில் ஓயப்போவதில்லை என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் என்றால் ஊழல், பிஜேபி என்றால் மதவாதம் என்று உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் பிம்பம் முழுதாக உடைபடுவதற்கும், பிஜேபி என்றால் மதவாதம் பிளஸ் ஊழல் என்று நிறுவவும் இதுவொரு வாய்ப்பு. காங்கிரஸ் அதைப் பயன்படுத்தும் என்றே நினைக்கிறேன். இது வெறும் போர் விமான ஒப்பந்த விவகாரம் மாத்திரம் அல்ல. அதையும் தாண்டி பிரம்மாண்டமானது. அரசியலில் முக்கியமானது...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை....


பாஜக மோடியின் ரஃபேல் ஊழல் : எளிய விளக்கம்...


முன்கதை...

இந்தியா கடைசியாக வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை.

உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) இதற்கிடையில் மிக்21 ரக போர்விமானங்களின் ஆயுள் காலம் முடிந்து வந்த்தால், புதிய போர் விமானங்களின் தேவை உணரப்பட்டது.

2007இல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பிரான்சின் தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், ரஷ்யாவின் மிக்-25, ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் F-16, Boeing F/A-18, Eurofighter Typhoon ஆகியவை பங்கேற்றன. இவற்றில் டைஃபூன், ரபேல் மட்டுமே தகுதி பெற்றன.

பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல்தான் உகந்தது என முடிவானது. 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் தொழில்நுட்பத்தை வழங்க, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை.

HAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.

2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது.

புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்பட்டு அறிவார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றார்.

பின் கதை...

2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார்.

126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் மனோகர் பரிக்கர்.

பிரான்ஸ் அதிபர் ஹாலந்த் 2016 ஜனவரியில் தில்லி வருகிறார். 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ரபேல் விமானங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இதில் ஊழல் எங்கிருந்து வந்தது ? விவரமாகப் பார்க்கலாம்.

1. விலை
— முந்தைய காங்கிரஸ் அரசு வாங்க இருந்தது சுமார் 600 கோடி ரூபாய் விலையில்.
— மோடி அரசு வாங்குவது சுமார் 1400 கோடி ரூபாய் விலையில்!

2. உற்பத்தி
— முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
— மோடி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும். மேக் இன் இந்தியா எல்லாம் பிம்பிலிக்கி பிலாப்பி!

3. தொழில்நுட்பம்
— காங்கிரஸ் கால ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும்
— மோடி அரசு ஒப்பந்தப்படி, “சிலதனியார் நிறுவனங்களுக்கும்” தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் ரிலையன்ஸ்.

4. தனியாருக்கு?
— காங்கிரஸ் கால ஒப்பந்தப்படி, தஸால்ட் உடன் எச்ஏஎல் என்னும் பொதுத்துறை நிறுவனம்தான் கூட்டாளி.
— மோடி அரசு ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ்தான் கூட்டாளி!

5. அனுபவம்
— எச்ஏஎல் விமானத்துறையில் அனுபவம் உள்ள நிறுவனம். ஏற்கெனவே போர் விமானங்களை தயாரித்துக்கொண்டும் உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எச்ஏஎல்-தான் உற்பத்தி செய்யும் என்று சொன்னது.
— மோடி அரசில் முடிவு செய்யப்பட்ட ரிலையன்சுக்கு விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லை.

6. மோடியின் ஊழல்
— 2015இல் பிரான்சுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இதுபோன்ற பல்லாயிரம்கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது.

— பாதுகாப்புத் துறை அமைச்சரும்கூட உடன் அழைத்துச்செல்லப்படவில்லை.

— ரஃபேல் விமானங்கள் சரியான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுக்கப்படவில்லை என்றார் விமானப்படைத் தளபதி தனோவா.  ஆயினும் ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை என்றும் சொன்னார் அதே பேட்டியில் அதே தளபதி தனோவா! விமானப்படைத் தளபதிக்கே தெரியாமல் போர் விமானங்கள் வாங்கப்படுவது மோடி அரசில் மட்டுமே சாத்தியம்.

— இதுபோன்ற விஷயங்களில் போர்விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலை ரகசியமாக வைக்கத் தேவையில்லை. ஆனால் மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது. முந்தைய காங்கிரஸ் அரசு விலையை ரகசியமாக வைக்கவில்லை.

— ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்சுக்கும் தஸால்டுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸால்ட் தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வு செய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று இத்தனை காலம் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மோடியும் அவரது ஊழல் கூட்டாளிகளும்

— ஆனால் “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று முன்னாள் பிரான்ஸ் அதிபரே சொல்லி விட்டார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்.

— மக்கள் பணத்தில் உருவான, இந்திய அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை நிறுவனம் எச்ஏஎல் எப்படிப் போனால் என்ன, ரிலையன்ஸ்தான் தனக்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் மோடி.

— 2015இல் தடாலடியாக அறிவிக்கும்போது இது ஜி2ஜி (கவர்மென்ட்-டு-கவர்மென்ட்) ஒப்பந்தம் என்று சொன்னார்கள். ஜி2ஜி என்றால் ரிலையன்ஸ் எப்படி வர முடியும்? எச்ஏஎல்தானே இருந்திருக்க வேண்டும்?

— எச்ஏஎல் நிறுவனத்துக்கு தகுதி கிடையாது, அது சீரழிந்து விட்டது என்று திருவாய் மலர்ந்தார் நிர்மலா சீதாராமன். அதே எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து விமானப்படைக்கு அளித்தபோது பிரதமர் வாழ்த்தியது இப்படி - Induction of indigenously made Tejas fighter jet into the Air Force fills our hearts with unparalleled pride and happiness. I laud HAL & ADA on the induction of Tejas fighter jet. This illustrates our skills & strengths to enhance indigenous defence manufacturing. (1 July 2016)

— 2016இல் சிறப்பாக செயல்பட்ட எச்ஏஎல் 2018இல் சீரழிந்து விட்டதா? அப்படியானால் அதற்குக் காரணம் இதே சர்க்கார்தான் என்கிறாரா நிர்மலா சீதாராமன்?

— இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் எப்போது உருவானது?  மோடி பிரான்ஸ் செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக திடீரென உருவானதுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ். முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். கம்பெனி ரெஜிஸ்டிராரிடம் பதிவு செய்த விவரம் கீழே படத்தில் உள்ளது.

— வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நேற்று முளைத்த ஒரு கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர் விமானங்களின் பணி தரப்படுவது மோடி சர்க்காரில் மட்டுமே சாத்தியம்.

— கடைசியாக முக்கியமான ஒரு விஷயம் : 2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியே கிடையாது. ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி. அதாவது, பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி.

வழக்கு மொழியில் சொன்னால், இந்தியாவுக்காக அல்ல, ரிலையன்சுக்கு புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார்...

பாஜக மோடியின் ரஃபேல் ஊழல்...


2015 இல் மோடி பாரிசுக்குச் சென்றபோது அவருடன் அனில் அம்பானியும் அதானியும் இருந்தனர் என்பதை இந்திய அரசு ஏதோ ஒரு காரணத்துக்காக மறைத்தது.

அப்போது தான் ரfஏல் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது.

மோடியுடன் சென்ற தொழிலதிபர்களின் பட்டியலை பிரான்சு நாட்டு அரசாங்கத்திடம் தான் பெற்றதாக அந்த நிகழ்வினை நேரடியாக ரிப்போர்ட் செய்த என் டி டி வி நிருபர் நூபூர் கூறுகிறார். பட்டியலையும் இணைத்திருக்கிறார்...

தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை - கன்னட ஈ.வே. ராமசாமி...


நீ ஒரு தெலுங்கு கன்னடியன்,
நீ எப்படி தமிழர்களுக்கு தலைவனாக இருக்க முடியும் என்று என்னை கேட்டார்கள்.?

தமிழன் எவனுக்கும் இந்த தகுதி இல்லையப்பா என்று நான் கூறினேன்..

- ஈ.வே.ரா  - 1.6.1954 - விடுதலை...

அனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செடி துளசி...


1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி.

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்).

3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family).

4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்.

1. உண்ட விஷத்தை முறிக்க.
2. விஷஜுரம்குணமாக.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5. காது குத்துவலி குணமாக.
6. காது வலி குணமாக.
7. தலைசுற்றுகுணமாக.
8. பிரசவ வலி குறைய.
9. அம்மை அதிகரிக்காதிருக்க.
10. மூத்திரத் துவாரவலி குணமாக.
11. வண்டுகடி குணமாக.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16. அஜீரணம் குணமாக.
17. கெட்டரத்தம் சுத்தமாக.
18. குஷ்ட நோய் குணமாக.
19. குளிர் காச்சல் குணமாக.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23. காக்காய்வலிப்புக் குணமாக.
24 .ஜலதோசம் குணமாக.
25. ஜீரண சக்தி உண்டாக.
26. தாதுவைக் கட்ட.
27. சொப்பன ஸ்கலிதம் குணமாக.
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள் கொட்டு குணமாக.
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
32. வாதரோகம் குணமாக.
33. காச்சலின் போது தாகம் தணிய.
34. பித்தம் குணமாக.
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக.
38. மாலைக்கண் குணமாக.
39. எலிக்கடி விஷம் நீங்க.
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
41. இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.
42. வாந்தியை நிறுத்த.
43. தனுர்வாதம் கணமாக.
44. வாதவீக்கம் குணமாக.
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக.
46. வாய்வுப் பிடிப்பு குணமாக.
47. இருமல் குணமாக.
48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.
50. இளைப்பு குணமாக.
51. பற்று, படர்தாமரை குணமாக.
52. சிரங்கு குணமாக.
53. கோழை, கபக்கட்டு நீங்க...

நீதித்துறையும் காவல்துறையும் சாமானிய மக்களுக்கு எதிரியே...


திராவிடம் Vs தமிழ் தேசியம்...


வந்தேறிகளின் ஒற்றுமை..

சன்சூ என்ற போர்க்கலை நிபுணர் கூறுகிறார்.

எதிரி நாட்டுக்குள்ளே நம் படையினர் முன்னேற முன்னேற அவர்களிடையேயான ஒற்றுமையும் நம்பகத்தன்மையும் அதிகரிக்குமாம்.

நம் நாட்டு வந்தேறிகள் ஒற்றுமையுடன் நம்மை விட வேகமாகவும் துடிப்பாகவும் இருக்க இதுதான் காரணம்.

அவர்களுக்கு இது உயிரைக்காக்க ஓடும் ஒரு முயலின் போராட்டம்.

நமக்கு இது உணவுக்காக அதைத் துரத்தும் புலியின் போராட்டம்.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

எனவே விழித்துக் கொள்ளுங்கள்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


சித்தர் ஆவது எப்படி - 3...


சித்தத்தை சீர் செய்யும் முதல் படி-கனல் தன்மை அறிதல்..

சித்தத்தை சீர் செய்தல் மூலம் சித்தர் ஆவது எளிமையாகிறது.. மற்ற பூதங்கள் திறன் பட செயல் பட மாறுபட்ட முரண் பாடுகளை உடைய சித்தத்தை சீர் செய்ய அவசியமாகிறது.. சித்தத்தை சீர் செய்வதின் மூலம் ஆன்மீகம் முன்னேற்றம் மிக எளிதாகிறது..

சித்தத்தை சீர் செய்வது என்பது ஆன்மீக பணியில் 100 ல் 95 பங்கு செய்து முடித்தது போல... அதனால் தான் சித்தத்தை சீர் செய்து ஆன்மீகத்தில் உச்சத்திற்கு சென்றவர்களை சித்தர்கள் என்கிறோம்...

இப்பொழுது சித்தத்தை சீர் செய்யும் வழியினை ஆராய்வோம்..

இயல்பாக சித்தம், எண்ணக் குவியலால் ஆனது என்று முன்பே அறிந்தோம்....

பல ஜென்மங்களின் அனுபவங்கள் சூட்சும பதிவுகளாக சித்தத்தில் புதைந்துள்ளன... அதற்கு முன்னால் அனுபவம் என்னவென்று பார்ப்பது அவசியமாகிறது..

ஓர் அனுபவம் என்பது பஞ்சபூதங்களால் கூட்டாக அனுபவப் படுவது..

இதில் நிலம் நீர் பூதங்கள் உருவமாக திடமாக இருப்பதால், அவைகள் வெளிச்சத்தின் உதவியால் இயங்குவதால் அனுபவபடும் பொருளின் உருவ தோற்றத்தை நுகருகிறது..

காற்றும் ஆகாயமும் அருவமாக உருவமற்ற நிலையில் இருப்பதால் அவற்றை உணர்வாக நுகருகிறது...

மனம் என்ற பூதம், சித்தத்திலிருந்து தன்னை வந்து அடைந்த எண்ணத்தை நுகரும் போது அதை வெளிச்சமாகவும் உணர்வாகவும் பிரித்து வெளிச்சத்தை நீர் மண் பூதத்திற்கும், உணர்வை காற்று ஆகாய பூதத்திற்கும் அனுப்புகிறது...

ஆகையால் தான் மனம் என்ற பூதத்தை நெருப்பின் அம்சமாக கூறுகின்றனர்..

அதாவது நெருப்பிற்கு வெளிச்சத்தை தரும் சுடரும், சூடு என்ற உணர்வை தரும் கனலும்,இருப்பதால், மனத்திற்கு நெருப்பை உதாரணமாக வைத்தார்கள்...

முக்கியமாக அறிய வேண்டியது என்ன வென்றால் பிரபஞ்ச பேராற்றல் வருகின்ற பொழுது, அந்த ஆற்றலை உணர்வாக எடுத்துக் கொண்டால், அது தேக ஆற்றலாக மாறிக்கொள்கிறது..

அதே வெளிச்சமாக மாறும் பொழுது பொறி புலங்கள் வழியாக உலக தொடர்பு கொண்டு விரையமாகிறது..

ஆனால் எண்ணம் பெரும்பாலும் வெளிச்சமாகவும், குறைந்த அளவாய் உணர்வாகவும் இருக்கும்.. அதனால் தான் எண்ணங்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்..

ஆனால் காமம் கோபம் இரண்டில் உள்ள எண்ணங்களில் உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அது வெளிச்சத்தை விட குறைவாகவே இருக்கும்...

சித்தத்தில் வெளிவரும் எண்ணங்கள் மனதை சாரும் போது, வெளிச்சமாகவும் கனலாகவும் பிரிக்கின்ற ஒரு செயலை பார்த்தோம்.. அதே நேரத்தில் கனலானது வெளிச்சமாகி மாறி வெளி சார்புகளை நோக்கி சென்று விரமாகக் கூடிய செயலும் நடக்கிறது...

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் நம்முடைய தேக அமைப்பில் உள்ள பொறி புலன்கள் வெளியே உள்ள சார்புகளில் பொருள்களில் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வெளிச்சமாகி மாறி விடுகிறது..

இதன் காரணமாக தான் பகல் நேரங்களில் பொறி புலன்கள் அதிகமாக வேலை செய்து தேக கனல் பெரும்பாலும் வெளிச்சமாக மாறி நம் ஆற்றல் குறைய தொடங்குகிறது...

ஆற்றல் குறைவால் உறக்கம் வர தொடங்குகிறது.. உறக்கத்தில் பொறி புலன்கள் செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளதால், கனல் பெருகி தேகம் புத்துணர்ச்சி பெறுகிறது...

இந்த கனலை பற்றி சற்று அறிந்து கொள்வோம்..

எப்படி சூரிய ஒளி அலைவரிசை பூமியில் பட்டு பூமி சூட்டை, வெப்பத்தை பெறுகிறதோ அதே போல் பேரண்ட பேராற்றலின் அலைவரிசை தான், உயிர் ஆற்றல் பெறுவதற்கு மூல ஆதாரமாக உள்ளது.. இதை சில யோகிகள் காந்த அலை சக்தி என்று சொல்லிகிறார்கள்....

அதைதான் தேக கனலாக இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்.. தேகத்தில் இந்த கனல் ஒரு குறிபிட்ட அளவிற்கு கீழே குறைந்தால் தேகம் வலு இழந்து மரணம் அடைகிறது..

சித்தர்களிடம் இந்த கனலை தேகம் பூரணமாக பெற்றக் கொண்டபின் அந்த கனலை சூட்சம, நுண்ணிய தேகமாக மாறுகிறது.. அந்த சூட்சம தேகம் அளவற்ற கனலை பெறக்கூடிய ஆற்றல் உள்ளது..

ஆனால் சூட்சும தேகத்தை பழகி கொண்ட மனிதன் அளவற்ற ஆற்றல் அடைவதற்கு எல்லையே இல்லை.. ஒரு குறிபிட்ட ஆற்றலை பெறும் தகுதி உடைய தூல தேகத்தில் வாழும் மனிதன் தன் சூட்சும தேகத்தின் மூலம் அளவற்ற பிரபஞ்ச ஆற்றலான கனலை பெறும் தகுதி உடையவன் ஆகிறான்..

இந்த தூல தேகம் தன் சூட்சும தேகத்தின் உதவியால் பல பிரமிக்க வைக்கும் செயல்களை செய்யும் திறனை பெறுகிறது...

இந்த ஒரு இரகசியத்திலே சித்தர் ஆகும் பாதையில் இந்த பிரபஞ்ச கனல் மிக முக்கியமாக உள்ளதால், நம் தேக கனலை தக்க வைக்கவும் தேக கனலை பெருக்கவும் உகந்த உளவுகளை இனி வரும் பகுதிகளில் பார்ப்போமாக....

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு - லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவிப்பு...


காலம்தாழ்த்தி நாம் கண் விழிக்கின்றோம்...


மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம்..

பெயருக்கொரு தமிழ்நாடு..

ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை..

தமிழனின் மானத்தை மறைக்க உதவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகம் இன்னொரு பாசுனியவாகக் கூடிய கேடு நம்மைப் பேரிருளாய்ச் சூழ்ந்துவருகிறது...

நடிகை நிக்கி கல்ராணியை பார்க்க அலைமோதிய ரசிகர்கள்.. போலீசார் தடியடி...


திருப்பூர் குமரன் சாலையில் புதிதாக செல்போன் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. நிக்கி கல்ராணி பங்கேற்று கடையை திறந்து வைத்தார். முன்னதாக இது தொடர்பாக மீடியாக்களில் தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.

 999 ரூபாய் செல்போன் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்க்கும், முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு 200 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்று கவர்ச்சிகர திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கவர்ச்சி மழை கவர்ச்சிகர திட்ட பலனுடன், கவர்ச்சி நடிகை நிக்கி கல்ராணியையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் கூட்டம் முற்றுகையிட்டது. நிக்கி கல்ராணி உடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ரசிகர்கள் மட்டுமின்றி கடை ஊழியர்களும் ஆர்வம் காட்டினர். தடியடி இதையடுத்து அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை கட்டு மீறிப் போனதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன்பிறகு செல்போன் ஷோரூமை நிக்கி கல்ராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

கோவை இதன் பிறகு கோவையிலும் அதே செல்போன் ஷோரூமின் மற்றொரு கிளையையும் நிக்கி கல்ராணி துவக்கி வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடி மறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சியோ அல்லது ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் மற்றும் தலித் கட்சிகள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா சப்போட்டா...


100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையுடையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.

தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்...

கருணாஸ்க்கும் எச்.ராஜாவுக்கும் மொரட்டதுத்தனமாக முட்டுக் கொடுக்காமல் ஆகவேண்டிய காரியங்களை பாருங்கள்...


சைவமும் - அசைவமும்...


புலால் உண்பதில் ஏற்படும் நன்மைகள்..

உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.

30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஆதிகால மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் முதற்கொண்டு இதை உண்டே ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

மனித நாகரீகம் தோன்றியது முதல் அசைவமே பிரதான உணவாக இருந்து வந்தது.

நாள் முழுவதும் வேட்டையாட போதுமான சத்துக்களை அவர்களுக்கு அசைவமே கொடுத்தது. மானிறைச்சி தின்றதல்ல அன்றும் இன்றும் வேதியர், மானுரித்த தோலல்லோ மார்புநூல் அணிவது.....

புலால் உண்பதால் ஏற்படும் தீமைகள்..

மனிதாபிமான அடிப்படையிலும் கர்மாவின்படியும் பார்க்கும்போது இது ஓர் உயிர்கொலை.

அசைவ உணவை உண்டபின் அதன் சாராம்சம் இரத்தத்தில் கலந்து ஆக்ரோஷ எண்ணங்களையே தூண்டுகிறது.

மனதை கட்டுப்படுத்த நினைக்கும் எவருக்கும் அசைவ உணவு எதிரியே...

நீதித்துறையும் காவல்துறையும் சாமானிய மக்களுக்கு எதிரானதே...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஒரு முறை கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சி (ganzfeld experiment). இம்முறை ஓல்ஃப்காங்க் மெட்ஸ்கர் என்ற ஜெர்மானியரால் 1930களில் வேறொரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 1970 ஆம் ஆண்டிற்கு மேல் மிகப் பிரபலமாகி பல ஆழ்மன ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் தகவலைப் பெறுபவர் ஒரு தனியறையில் தனித்து விடப்படுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி ஓய்வாக அமர்த்தப்படும் அவருடைய மூடிய கண்களின் மீது பாதியாக வெட்டப்பட்ட பிங்பாங்க் பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். காதுகளில் ஹெட்போன்கள் வைக்கப்பட்டு ஒரேமாதிரியான இசை தொடர்ந்து கேட்கும். முகத்தில் சிவப்பு விளக்கொளி விழும்படி வைக்கப்பட்டிருக்கும். தகவல் அனுப்புபவர் வெளியே இருந்து ஏதாவது ஒரு பொருளை மனதில் நினைத்து அந்தத் தகவலை உள்ளே உள்ளவருக்கு அனுப்புபவர். அரை மணி நேரம் நீளும் இந்த ஆராய்ச்சியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பவர் தன் மனதில் தோன்றுவதை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதை டேப் செய்தோ, கையால் எழுதியோ குறித்துக் கொள்வார்கள்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் டீட் ரேடின், டேரில் ஜே.பெம், சார்லஸ் ஹொனொர்டன் ஆகியோர் இந்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிமுறையில் ஆழ்மன சக்திகள் நன்றாகச் செயல்புரிகின்றன என்று தங்கள் அனுபவங்கள் மூலம் கூறினாலும் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ப்ளாக்மோர், ரே ஹைமன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளில் பல குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சார்லஸ் ஹொனொர்டன் செய்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகளில் சிலவற்றில் அந்த அரை மணி நேரம் தகவல் பெறுபவர் சொல்லிக் கொண்டு வரும் வர்ணனைகள் தகவல் அனுப்புபவர் இருக்கும் சூழ்நிலைகளையும் தெளிவாக விவரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சி முறையைப் பார்க்கும் போது அது ஒருவரைத் தியான மனநிலைக்கு அழைத்துச் செல்லத் துணை புரிகிறது என்றே தோன்றுகிறது. நம் கவனத்தைச் சிதற வைக்கும் புலன்களில் முக்கியமானவை கண்களும் காதுகளும் தான். அவற்றை அடைத்து, தொடர்ச்சியாக ஒரே போன்ற இசை கேட்டுக் கொண்டிருக்கையில் தியான நிலைக்கு அது உதவுகிறது. அதைத் தான் கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சியில் செய்கிறார்கள்.

ஏறத்தாழ அதே கால கட்டத்தில் (1970 களில்) தான் கலிபோர்னியாவில் உள்ள SRI என்றழைக்கப்படும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிறுவனம் (Stanford Research Institute) பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை இன்கோ ஸ்வான், மற்றும் பேட் ப்ரைஸ் (Pat Price) என்ற முக்கியமான ஆழ்மனசக்தி வல்லுனர்களை வைத்து நடத்தியது.

அவர்களில் ஸ்வான் பற்றி முன்பே (ஆழ்மன சக்திகள் 12ல்) சிறிது குறிப்பிட்டு இருந்தோம். புகழ்பெற்ற விஞ்ஞானியான ரஸ்ஸல் டார்க் ஒரு ஆராய்ச்சியில் ஒரு காகிதத்தில் '49\'b020'S, 70\'b014'E' என்பதை மட்டும் எழுதி ஸ்வானிடம் தந்து அவருக்கு அதைப் பார்த்ததும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சொல்லச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடியிருந்த ஸ்வான் கண்களைத் திறக்காமல் தான் கண்டவைகளை சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு இது ஒரு தீவு போலத் தோன்றுகிறது. நிறைய பாறைகள் உள்ளன. மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. ஒரு ரேடார் ஆண்டெனாவும், ரவுண்ட் டிஸ்கும் தெரிகிறது. வடமேற்கில் ஒரு விமானத் திட்டு தெரிகிறது.....” என்று சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே அந்த எண்கள் குறிக்கும் அட்சரேகை தீர்க்கரேகை உடைய, தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள, கெர்க்யூலன் என்ற சிறிய பிரெஞ்சுத் தீவில் எல்லாம் சரியாக அப்படியே இருந்தன.

SRI நடத்திய ஆராய்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் பேட் ப்ரைஸ். ஒரு போலீஸ் அதிகாரியான அவர் தன் ஆழ்மன சக்தியால் பல குற்றவாளிகளை பெரிய சிரமமில்லாது கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்தார். அது SRI ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அவரை வைத்து அவர்கள் செய்த ஆரம்ப ஆராய்ச்சிகள் கற்பனையையும் மிஞ்சும்படி இருந்தன.

அமெரிக்க CIA அதிகாரி ரிச்சர்டு கென்னட் என்பவர் செய்த ஆராய்ச்சியில் பேட் ப்ரைஸ் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய சுரங்க முகாம் ஒன்றை மிக நுணுக்கமானத் தகவல்களுடன் விவரித்தார். National Security Agency (NSA)ன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிக மிக ரகசியமான தகவல்களை ஆழ்மன ஆராய்ச்சிகளால் தர முடியும் என்று நம்ப முடியாத அரசாங்கம் அவரை ரஷிய உளவாளியாக இருக்கக்கூடும் என்று கூட சந்தேகித்தது. அவர்கள் சந்தேகத்தைப் போக்க பேட் ப்ரைஸ் ரஷிய ரகசிய தளவாடங்களையும் கண்டறிந்து சொல்வதாகக் கூறினார். ரஷியாவில் வட யூரல் மலைகளில் ஒன்றான நரோட்னைனா என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ரகசிய தளவாடத்தைப் பற்றியும், அங்கு அதிகமாக இருந்த பெண் ஊழியர்களைப் பற்றியும், ரேடார் டிஷ்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். பின்பே அமெரிக்க அரசாங்கத்தின் சந்தேகம் நீங்கியது. இது போல பல ராணுவ ரகசியத் தளவாடங்கள், உயர் கருவிகள் பலவற்றை நுண்ணிய விவரங்களுடன் பேட் ப்ரைஸிடம் இருந்து பெற்றார்கள். (ஸ்டாலின் காலத்தில் வாசிலிவ் என்ற ஆழ்மன சக்தியாளரை வைத்து அவர்களும் அமெரிக்க ரகசியங்களைப் பெற்றார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் முன்பு கூறியது நினைவிருக்கலாம்).

SRI பாரடே கூண்டில் பேட் ப்ரைஸை அமர வைத்துப் பல ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக 1975 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பேட் ப்ரைஸ் இறந்து போனது ஆழ்மன ஆராய்ச்சிகளுக்குப் பெருத்த நஷ்டம் என்று CIA யின் உயர் அதிகாரிகளும், ஆழ்மன ஆராய்ச்சியாளர்களும் கருதினார்கள். அவருடைய மரணம் ரஷிய உளவாளிகளால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற வதந்தி அக்காலத்தில் நிலவியது. அவர் மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தங்கள் அனைத்து ராணுவ ரகசியங்களும் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் ரஷியா அவரைக் கொல்லும் முயற்சிகளை எடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகள், SRI நடத்திய ஆராய்ச்சிகள், மற்றும் ஃபாரடே கூண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவைகளையும், வெளிப்படும் அலைகளையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளையொத்த அலைகள் பற்றி அவர்கள் அறிய நேரிட்டது.

Bioelectromagnetics என்ற விஞ்ஞானத் துறையின் கீழ் அந்த ஆழ்மன சக்தி அலைகளும் ஆராயப்பட்டன. அந்த அலைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததை நாமும் காண்போமா?

மேலும் பயணிப்போம்....

ஒரு பறவையின் வேதனை...


மரணப் படுக்கையில் ஒரு தமிழ் எழுத்து...


தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் ஐ என்ற எழுத்து ஒரு காலத்தில் ஐ என்ற சொல்லாகத் தனித்து நின்று பெரியவர்கள் அண்ணன் தெய்வங்கள் தலைவன் போன்ற போன்ற பொருட்களைத் தந்திருக்கின்றது.

ஆனால் இன்றைய தமிழில் அது ஒரு எழுத்தாக மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது. அதற்குத் தனிப்பட்ட பொருள் இன்று கிடையாது. அது வேற்றுமை உருபு ஆவது வேறு செய்தி.

முதல் நாள் போரிலே அண்ணனை இழந்து மறுநாள் போரிலே கணவனை இழந்த பெண்ணொருத்தி மீண்டும் இன்று போர்ப்பறை கேட்க மகிழ்ந்து தன் மகனையும் வேல் கொடுத்துக் களத்துக்கு அனுப்பிய கதையைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

அதிலே மேனாள் உற்ற செருவில் இவள் தன் ஐ யானை எறிந்து களத்து ஒழிந்தனனே (புறநானூறு 297) என்ற அடிகள் வரும்... முன்பு நடந்த போரிலே யானையை வேலால் எறிந்து கொன்று விட்டு தானும் இறந்து போனான் இவள் அண்ணன் என்பது இந்தச் சங்கச் செய்யுள் அடிகளின் பொருளாகும். இங்கே  என்பது அண்ணன் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கின்றது.

திருக்குறள் படைச் செருக்கு அதிகாரத்திலே..

என் ஐ முன் நில்லன்மின் பகைவீர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்

என்று ஒரு குறள் காணப்படுகின்றது.

முன்பு என் தலைவன் முன்னே போர் செய்யவந்து இறந்து இன்று கல்லறையில் கிடப்பவர் பலர். அதனால் பகைவர்களே என் தலைவன் முன் நிற்காமல் அகன்று விடுங்கள் என்பது இதன் பொருள். இங்கே ஐ என்பது தலைவன் என்ற பொருளில் வள்ளுவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பட்டினத்தார் தனக்கு நஞ்சு கலந்த சோறு தரப்பட்டபோது முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்று பாடினார். முன் ஐ இட்ட தீ முப்புரத்திலே என்றால் முன்பு இறைவன் வைத்த நெருப்பு மூன்று புரங்களை எரிப்பதற்காக என்று பொருளாகும்.

பாற்கடலைக் கடைந்த போது முதலில் தோன்றியவள் மூதேவி. அவளின் பின்பு தோன்றியவள் இலக்குமி. அவள் சீதையாகப் பிறந்து இராவணனால் சிறையெடுக்கப்பட்ட போது அவளைத் தேடிப் போன அநுமனின் வாலிலே தீ வைத்தான் இராவணன். அந்தத் தீயைக் கொண்டு அநுமன் இலங்கை முழுவதும் பாய்ந்து தீ மூட்டினான் என்று சொல்லும் கம்பராமாயணம். அது அநுமன் வைத்த நெருப்பு அல்ல அவன் மூலமாக திருமகள் ஆகிய சீதை வைத்த கற்பின் நெருப்பு என்பான் விபீடனன்.

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?

(கம்பராமாயணம் - யுத்த காண்ணடம் - மந்திரப்படலம்).

அண்ணா! ஒரு குரங்கினால் இலங்கைக்குத் தீவைக்க முடியுமா? வைத்தாலும் தீ பிடிக்குமா? பிடித்தாலும் எரிந்து இவ்வளவு நாசம் வருமா? சானகியின் கற்பினால் வெந்து போன எங்கள் நாட்டைத் திரும்பத் திரும்ப குரங்கு சுட்டது என்று சொல்லிக் கொண்டிருக்காதே என்பது இதன் பொருளாகும்.

அதனால் தான் பட்டினத்தார் பின் ஐ இட்ட தீ தென் இலங்கையில் என்றார். இதை உணராத ஒரு பகுதித் தமிழுலகம் இன்றும் பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்ற தொடருக்கு பின்னொரு காலத்திலே வைக்கப்பட்ட தீ தெற்கு இலங்கையில் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இங்கே ஐ என்பது தெய்வங்களைக் குறிக்கும் சொல்லாக வந்து விடுகின்றது.

இனித் தொல்காப்பியர் ஐ என்ற எழுத்தை பெரியவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளதைப் பார்ப்போம். சங்க கால காதல் ஒழுக்கங்களிலே தவறுகள் தலைகாட்ட முற்பட்ட போது பெரியவர்கள் அதைச் சீர் செய்வதற்காக சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள் என்று சொல்ல வந்த தொல்காப்பியர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

(தொல்காப்பியம் - பொருளதிகாரம் - கற்பியல்).

என்று சொல்லிவிட்டுப் போனார். இதைக் கூட காதல் வாழ்விலே பிரச்சனைகள் ஏற்பட்ட போது பிராமணக் குருக்கள்மார் திருமணச் சடங்குகளை உருவாக்கினர் என்று தொல்காப்பியர் சொன்னதாக அடம்பிடிக்கும் தமிழ் அறிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர்த்து நோக்கினால் காதலித்து நெருங்கிப் பழகியவர்கள் தாம் அப்படிச் செய்யவில்லை என்று மறுத்து சில இன்னல்களை ஒருவருக்கொருவர் செய்து பொய்யும் தவறுமாக நடக்க முயன்ற போது அதை மாற்றியமைக்க பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வகுத்தனர் என்ற கொள்வதே பொருத்தமாகும்.

எனவே ஐ என்ற எழுத்து ஐ என்ற சொல்லாகிப் பயன்பட்ட காலம் போய் வெறும் எழுத்தாக மட்டுமே இன்று பயன்படுத்தப்படுகின்றது. வருங்காலத்தில் எழுத்தாகவாவது நிலைக்குமா என்பது தெரியவில்லை.

கணணி விசைப் பலகையில் ஐ என்பதை அய் என்று எழுதினால் என்ன என்று சிந்திக்கின்றார்கள். ஆம், சிந்தித்துக் கொண்டே இருக்கின்றார்கள்...

வழிப்பறி திமுக ஒழிக...


NGO போராளி மே17 திருமுருகன் யார்? ராவுக்கும் NIBக்கும் இவருக்கும் என்ன உறவு?


1) சில பல மாதங்களுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயில் என்ஜினை யாரோ ஒருவர் ஓட்டிக் கொண்டு சென்றார் என்ற செய்தி உங்களுக்கு நினைவு வருகிறதா?

2) அந்தக் குற்றவாளியைப் பிடித்து விட்டார்களா? இல்லை. இனிமேலாவது பிடிப்பார்களா? மாட்டார்கள். ஏன்?
அந்த ரயில் என்ஜினை ஓட்டிச் சென்றவர் ஒரு ரா (RAW) அதிகாரி. ரயில்வே போலீஸ், அந்த வழக்கின் கோப்பை (FILE) மூடிவிட்டது என்ற உண்மை மக்கள் அறியாதது. இவையெல்லாம் ராவின் ரகசிய நடவடிக்கைகள். மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

3) NGO புரட்சியாளர் திருமுருகன் காந்தி இரண்டு உளவு அமைப்புகளுக்கு நெருக்கமானவர். ஒன்று ரா. இது இந்திய உளவு அமைப்பு. இன்னொன்று NIB. இது இலங்கையின் உளவு அமைப்பு. (NIB = National Intelligence Bureau).

4) இவ்விரு உளவு அமைப்புகளின் ஈழம் குறித்த செயல்திட்டத்தை நிறைவேற்றித் தருவதே திருமுருகன் காந்தியின் அரசியல். இவ்விரு உளவு அமைப்புகளின் முகவர் மற்றும் சேவகரே திருமுருகன்.

5) ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போதெல்லாம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் (UNHRC) கண்டனங்கள் எழும். மனித உரிமை கவுன்சில் இலங்கை அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும். அப்போதெல்லாம் ராஜபக்சே ஆதரவு
சிங்கள புத்த பிக்குகள் UNHRC அறிக்கையை தீ வைத்துக் கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார்கள். மறுநாள் அதே போராட்டத்தை (UNHRC அறிக்கை எரிப்பு) திருமுருகன் தமிழ்நாட்டில் நடத்துவார். இது சர்வதேசப் பத்திரிகைகளில் UNHRC அறிக்கைக்கு இந்தியா இலங்கையில் எதிர்ப்பு என்று செய்தியாக வெளிவரும். (விரிவான விளக்கம் தனிக் கட்டுரையில்).

6) ஈழ அரசியல் அறிந்தோர் வெளிநாட்டில் வாழும் நெடியவனை அறிவார்கள். மே 17 இயக்கத்திற்கு தேவையான நிதியை வழங்கியது ஆரம்பத்தில் நெடியவனே.

7) லண்டனில் உள்ள TTC மற்றும் BTF அமைப்புகளுடன் நெருங்கிய உறவு கொண்டவர் திருமுருகன். BTF அமைப்பு
(BTF = British Tamil Forum) ராஜபக்சேவுடன் சமரசம் செய்து கொண்டதை அடுத்து அதன் மீதான தடையை ராஜபக்சே அரசு நீக்கியது.

இந்த அமைப்பு தற்போது சிங்கள இனவெறி ராஜபக்சே/மைத்திரிபால அரசின் அரவணைப்பைப் பெற்ற அமைப்பு. திருமுருகனின் மே 17 இயக்கமும் BTF அமைப்பும் சிங்கள இனவெறி அரசுக்குச் சாதகமாக ஈழப் பிரச்சினையைக் கையாளும் அமைப்புகள்.

8) தோழர் உமர் அவர்களை உங்களில் எவருக்கேனும் நினைவு இருக்கிறதா? மே 17 இயக்கத்தில் திருமுருகன் காந்தியுடன் இணைந்து செயலாற்றியவர் தோழர் உமர்.

திருமுருகனின் பித்தலாட்டங்களை அறிந்ததும் அவர் கடுமையாகச் சண்டையிட்டார். விளைவு: மே 17இல்
இருந்து வெளியேற்றப் பட்டார். அவர் திருமுருகனின் சிங்கள ஆதரவு மற்றும் நிதி மோசடிக் குற்றங்களை விளக்கி 450 பக்க அளவிலான ஒரு ஆவணத்தை
வெளியிட்டார். இந்த ஆவணம் அவரின் வலைப்பூவில் (blog) இப்போதும் உள்ளது. வாசகர்கள் அருள்கூர்ந்து அந்த ஆவணத்தைப் படிக்கவும்.

9) இன்னும் திருமுருகனின் பித்தலாட்டங்கள் குறித்து நிறையவே சொல்ல வேண்டும். ஒரே கட்டுரையில் எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது. தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட செங்கொடி என்னும் இளம் பெண்ணின் இறுதிச் சடங்கின்போது, திருமுருகன் எவ்வளவு அட்டூழியமாக நடந்து கொண்டார் என்பதை ஈழ ஆதரவாளர்கள் அறிவார்கள். அது பற்றி அடுத்துப் பார்ப்போம்.

10) மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், எழுத்தாளர் பாமரன், நடிகர் சிவகுமார் ஆகியோர் பல்வேறு காலக்கட்டங்களில் திருமுருகனின் மோசடிகளை அம்பலப் படுத்தியும், வன்மையாகக் கண்டித்தும் மேடைகளில் பேசி உள்ளனர்.அவற்றையும் அடுத்துக்
காண்போம்...

பதிவு Ilango Pichandy
Kasi Krishna Raja
Canthrasekar M

உ.பி. குழந்தைகள் மரணமும் உண்மைகளும்...


நேற்று கைது... இன்று நெஞ்சுவலி... மருத்துவமனையில் பிஷப் பிராங்கோ முல்லக்கல்...


2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பேராயர் ஃபிராங்கோ முலக்கல் மீது கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். பேராயரை கைது செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைக்காக முலக்கல் திருப்புனித்துராவில் உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் நேற்று முன் தினம் பேராயர் ஃபிராங்கோ முலக்கல் ஆஜரானார். கடந்த இரண்டு நாட்களில் 15 மணிநேரம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பேராயர் அளித்த தகவல்களின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். 3-வது நாளாக இன்றும் நீடித்த விசாரணையின் இறுதியில் பேராயர் ஃபிராங்கோ முலக்கல்லை காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

இந்நிலையில், எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் பொறுப்பில் இருந்து ஃபிராங்கோ முலக்கலை நேற்று போப் தற்காலிகமாக நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது...

தந்திர - குண்டலினி யோகம்...


தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய
உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.

பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.

ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.

சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.

மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும்,
பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.

பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.

தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.

பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.

பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.

மனித உயிர்களின் மீது, சக்தியின்
பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.

குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட
ஆற்றலை மேலே எழுப்பச்செய்து
முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள்
எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.

பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ற தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.

இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.

நாடிகள் -  நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர்
நாடியாகும்.

சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக
குறிப்பிடுகின்றன. அவற்றில்
இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை
என்பவை மிகவும் முக்கியமானதாக
கருதப்படுகின்றது.

பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது
நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை,
சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...

கார்பரேட் கைகூலி பாஜக மோடி ஓழிக... பாசிச பாஜக ஓழிக...


நரேந்திர மோடி வந்தால் நாடு சுபிட்சமாயிரும்னு  சொன்னவன் எல்லாம் இன்று வெறுங்காலால் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்..

பெட்ரோல்  விலையைக் கேட்டாலே மக்கள் வயிறு பற்றி எரிகிறது. அடிமனம் கலங்குகிறது.

அடக்கவிலை 40 விற்பனை விலை 100 என்றால் எப்படி தாங்கமுடியும் ?

எப்போது ஆட்சியை விட்டு ஒழிவான் இந்த படுபாவி என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

எரிவாயு விலையும் நாள்தோறும் ஏறிக்கொண்டு இருக்கிறது. மக்களை நட்டாற்றில்  விட்டுவிட்டார்கள் மத்திய ஆட்சியாளர்கள்...

பாஜக அனுமதியுடன்... இந்திய குழந்தைகளை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கேட்ஸ் பவுண்டேசன்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நேபுகாத்நேச்சாரின் கீழ் பாபிலோனியர்கள் யூதாவின் ராஜ்யத்தை முடித்துவிட்டு, எருசலேமின் தலைநகரான இசுரயேல் நகரத்தை விட்டு வெளியேறி, அதை அழிக்கும் முன்பு ஆலயத்தை கொள்ளையிட்டனர். எகிப்தியர்கள் எருசலேமைத் தாக்கி, பாபிலோனியர்களுக்கு முன்பாகவே தங்கள் சொந்தக் காலத்திலேயே பேழையை கொள்ளையடித்தார்களா? என்பது தெரியவில்லை. இது உடன்படிக்கைப் பேழையை எகிப்திற்கு எடுத்துச்செல்லும் சாத்தியத்தை எழுப்புகிறது.

சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவின் சிங்காசனத்தில் ஐந்தாம் வருஷம் இருந்தான்; தேவனும் அவனுடைய குடிமக்களும் விக்கிரகாராதனைகளினிமித்தமும், அக்கிரமங்களினிமித்தமும், அருவருப்புகளினிமித்தமும் அவர்களைத் தண்டிக்கும்படி வைத்தபோது, எகிப்திய மன்னன் சீஷாக் தண்டனையைத் தேர்ந்தெடுத்தார். எகிப்திய கொள்ளை பற்றிய பைபிளின் பதிவு 1 கிங்ஸ் 14: 25-26:

எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்துவிட்டான் என்று ரெகொபெயாமின் ராஜாவின் ஐந்தாம் வருஷத்தில் நடந்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டான்; அவர் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டார். சாலொமோன் செய்த எல்லா பொன் ஆபரணங்களையும் எடுத்துக்கொண்டு போனான். இந்த வசன விளக்கம் மூலமாக பேழை ஏகிப்தியர் வசம் வந்திருக்கலாம்..

பழங்கால எகிப்தின் கிசா பெரிய பிரமிடு ஒரு கல்லறையாக பயன்படுத்தப்படவில்லை.
"ஸ்கேன் பிரமிடுகள்" என்று அழைக்கப்படும் ஒரு புராஜெக்டில், நவீன உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட கருவிகளுடன் பகுப்பாய்வு செய்த போது, ஆராய்ச்சியாளர்கள் பெரிய பிரமிடுக்குள் வெப்ப முரண்பாடுகளை கண்டுபிடித்தனர். பிரமிடு உள்ளே வெப்பநிலை எப்போதும் நிலையான மற்றும் பூமியின் சராசரி வெப்பநிலை, 20 டிகிரி செல்சியஸ் (68 டிகிரி பாரன்ஹீட்) சமம் என்று நம்பப்பட்டது இருந்து பெரிய பிரமிடு உள்ளே வெப்ப முரண்பாடுகள் உள்ளது என்பது ஒரு புதிராக உள்ளது.

ஒருவேளை பேழையில் வெளிப்படும் ஆற்றலை அவர்கள் கண்டு பிடித்திருக்கலாம்.

இந்த விண்ணை நோக்கி பாயும் வெப்ப சிக்னல் யாருக்கானது என்பதும் மர்மமாக உள்ளது..

எகிப்திய பெயரான ஷெஷோன்கின் எபிரெய பதிப்பில் ஷிஷாக் என்ற பெயரை வரலாற்று அறிஞர்கள் நமக்கு கூறுகிறார்கள். எகிப்தில் 22 வது வம்சத்தை ஷெஷோனாக் நிறுவினார், 945 பி.சி. 924 பி.சி. வரை, மற்றும் எகிப்தின் தலைநகராக டான்ஸ் நிறுவப்பட்டது.

இந்த டான்ஸ் என்ற பெயரை கேட்டவுடன் எனக்கு "இண்டியனா ஜோன்ஸ் ரெய்டர்ஸ் லாஸ்ட் ஆர்க்" 
(Raiders of the Lost Ark 1981)
என்ற படம் தான் என் நினைவில் வருகிறது.ஒருவேளை படத்தில் வருவதுபோல் நாசிகள் உடன்படிக்கை பேழையை கைபற்றியிருக்கலாம். இல்லை ஏரியா51 ல் இருக்கலாம்...