2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பேராயர் ஃபிராங்கோ முலக்கல் மீது கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். பேராயரை கைது செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைக்காக முலக்கல் திருப்புனித்துராவில் உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் நேற்று முன் தினம் பேராயர் ஃபிராங்கோ முலக்கல் ஆஜரானார். கடந்த இரண்டு நாட்களில் 15 மணிநேரம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பேராயர் அளித்த தகவல்களின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். 3-வது நாளாக இன்றும் நீடித்த விசாரணையின் இறுதியில் பேராயர் ஃபிராங்கோ முலக்கல்லை காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.
இந்நிலையில், எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் பொறுப்பில் இருந்து ஃபிராங்கோ முலக்கலை நேற்று போப் தற்காலிகமாக நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.