24/12/2018

வல்லாரை கிரையின் உடல்நல நன்மைகள்...


இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப்ப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

வளரியல்பு : ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும்.

வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து 1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் -: உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும்.
ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்...

பாஜக மோடி கலாட்டா...


நாசாவுக்கும் ரஸ்யாவுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பிய வேற்றுக் கிரக வாசிகள்...


 பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன. அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஸ்ய நாட்டைச் சேர்ந்த விண் வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புககுக்கும் தான் வேற்றுக் கிரக உயிரனங்கள் அனுப்பிய தகவல்கள் முதலாவதாகக் கிடைத்துள்ளன. கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். தகவல்கள் வெளிப்படுத்தும் செய்திகள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து தங்களுடைய ரேடியோவுக்கு சிக்னல் கிடைத்ததை அறிந்த விஞ்ஞானிகள் மிகவும் சந்தோசம் அடைந்தனர். இந்த சிக்னல் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் ஒன்றிலிருந்து வந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நட்சத்திரத்தை HD 164595 என்னும் பெயரால் அடையாளப்படுத்துகின்றனர். இந்த அடையாளம் மிகச் சரியானதுதானா என்று சொல்ல முடியவில்லை. இருந்தாலும் பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து தகவல் பரிமாற்றத்திற்கான சிக்னல் கிடைத்திருப்பதுதான் இங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த விண்மீன் ஹெர்குலஸ் என்னும் நட்சத்திரக் கூட்டத்திலிருந்து சுமார் 95 ஒளி ஆண்டுகள் (light years ) தொலைவில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இயற்கையான நிகழ்வுதான்...

இது ஒரு இயற்கையான நிகழ்வுதான், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நாசாவுக்கும், ரஸ்ய விண்வெளி அமைப்பிற்கும் வேற்றுக் கிரகத்திலிருந்து தகவல்கள் கிடைப்பது இது முதல் முறை அல்ல எனவும் சில விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.

நாசா...

நாசாவும் ரஸ்யாவும் விண்வெளியிலிருந்து வந்த மர்மான தகவலைப் பெற்றுள்ளனர் என்று, இனம் காண முடியாத வகையில் வானில் பறக்கும் ஊர்திகளைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் (UFO researchers) உறுதியாகக் கூறுகின்றனர். பூமி அல்லாத வேறு கிரகத்தில் மனிதர்களைப் போல அறிவுத்திறன் படைத்த உயிரினங்கள் உள்ளனவா என்பதை SETI என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் மூலமாக இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தகவல் தொடர்புக்கான சிக்னல்...

கடந்த 29.08.2016 அன்று விண்வெளியில் உள்ள சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்திலிருந்து சிக்னல் வந்தததை இவர்கள் கவனித்துள்ளனர். அது பூமியிலிருந்து வரும் தகவல் தொடர்புக்கான சிக்னல் போலவே இருந்திருக்கிறது. இந்த நிகழ்வு, வேற்றுகிரகத்தில் பூமியில் உள்ளதைப் போன்ற அறிவு மிகுந்த மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தி உள்ளன.

வட்ட வடிவமான தோற்றங்கள்...

உலகில் சில இடங்களில் பரந்த விளை நிலங்களில் திடீரென அதிசயிக்கத்தக்க வகையில் வட்ட வடிவமான தோற்றங்கள் உண்டாகியிருக்கின்றன. இவை எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்கான தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை. வேற்றுக்கிரக உயிரினங்களின் வான ஊர்திகள் வந்து இறங்கிய தடங்களாக அவை இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லாததால் இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பூமியைக் கைப்பற்ற புறப்பட்டு விட்டோம்...

வேற்றுக் கிரக உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்துத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. பூமியிலிருக்கும் உயிரினங்களுக்கு வேற்றுக் கிரக வாசிகள் அனுப்பிய 'ஹலோ ! எப்படி இருக்கீங்க?' என்கின்ற நல விசாரிப்பாக இருக்கலாம். அல்லது 'உங்கள் பூமியைக் கைப்பற்ற புறப்பட்டு விட்டோம்!' என்கின்ற எச்சரிக்கைச் செய்தியாகவும் அது இருக்கலாம். இது தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும், வரும் காலத்தில் நடக்கவிருக்கின்ற ஆய்வுகள்தான் பதில் சொல்லும்...

தண்ணீர் எல்லோருக்கும் உயிர்நீர் என்பதை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்...



இயற்கையின் கொடையான தண்ணீரை அளவோடு பயன்படுத்தி வருங்கால சந்ததிக்கு பாதுகாத்து சுற்றுசூழலை மேம்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

அரசாங்கம் எப்படிப்பட்டது என்று அனைவரும் அறிந்ததே ஆகயால் நாம் ஒவ்வொருவரும் தண்ணீரின் அவசியத்தை புரிந்து செயலாற்ற முன் வர வேண்டும்...

இசைத் தோற்றம்...


ஓசையுலகம் : கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்க பெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை: மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்து கொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு: இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு: இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்...

அன்பு...


அன்பும் மகிழ்ச்சியும் தான் இந்த உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது...

ஏனெனில் அன்பு செலுத்த பணமோ இனமோ தேவை இல்லை...

உண்மையான அன்பின் உணர்வின்  முன்...

உங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்...


பலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன.

இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு அழிக்க ஆரம்பிக்கும்.

அதற்கு முதலில் ஒருவர் தங்களில் உடலில் புழுக்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு ஒருவரது உடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும் வாய்வுத் தொல்லை, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும். ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தும், உங்களுக்கு இப்பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வாழ்ந்து, எரிச்சல், அழற்சி மற்றும் வலியை உண்டாக்கும். மேலும் புழுக்கள் கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு அடிவயிற்று வலி அதிகமானால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இது அனைவருக்கும் தெரிந்த ஓர் அறிகுறி தான். அது மலப்புழையில் அரிப்பு, குடைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுவது. குறிப்பாக இம்மாதிரியான அரிப்பு இரவில் ஏற்படும் போது தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு, மறுநாள் மிகுந்த களைப்பை அடையக்கூடும்.

வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால், அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, உடலை பலவீனமாக்கிவிடும். உடல் பலவீனமானால், சோர்வு அதிகரித்து, நினைக்கும் வேலையை கூட செய்ய முடியாமல் டென்சன் அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு ஒருமுறை வயிற்றுப் புழுக்களை கொல்லும் முறையை மேற்கொள்ளுங்கள்.

பசியின்மை அதிகரிப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால், வயிற்றில் புழுக்கள் உள்ளது என்று அர்த்தம். அதிலும் அதிகமான அளவில் புழுக்கள் உடலில் பெருகியுள்ளது என்று அர்த்தம். எனவே இங்மமாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

உடலில் புழுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், மன இறுக்கம், மன நிலையில் ஏற்றத்தாழ்வு போன்றவை ஏற்படும். அதோடு செரிமான பிரச்சனையும் இருந்தால், இருமடங்கு மன வேதனையை சந்திக்கக்கூடும். ஆகவே திடீரென்று எக்காரணமும் இல்லாமல் மன இறுக்கமாக இருப்பது போல் உணர்ந்தால், அதற்கு காரணம் வயிற்றுப் புழுக்கள் தான்.

புழுக்கள் உடலில் அதிகம் இருந்தால், பற்களை கொறிப்போம். ஏனெனில் உடலில் அதிகரித்த புழுக்களின் பெருக்கத்தால் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும், சோர்வும் அதிகரிக்கும். அதனால் தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களைக் கொறிக்கின்றனர்.

உருளைப்புழுக்கள், பென்சில்வேனியா போன்றவை உடலில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவற்றை உறிஞ்சி, இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை வந்தால், முதலில் உடலில் உள்ள புழுக்களை அழிக்கும் மருந்துகளை உட்கொண்டு, உடலை சுத்தப்படுத்துங்கள்.

உடலினுள் ஒட்டுண்ணிகள் அதிகம் இருப்பின், சரும பிரச்சனைகளான அரிப்புகள், எரிச்சல், பல வகையான அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, இந்த புழுக்கள் வெளியேற்றும் கழிவுகளால், இரத்தத்தில் ஈயோசினோபில்கள் அதிகரித்து, இதனால் புண்கள், உறுப்புக் கோளாறு, மூட்டு வீக்கம் மற்றும் அல்சர் போன்றவை ஏற்படும். ஆகவே உங்களுக்கு எவ்வித காரணமும் தெரியாமல் திடீரென்று சரும பிரச்சனைகளை சந்தித்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.

ஒரு குறிப்பிட்ட ஒட்டுண்ணிகள், மூட்டு மற்றும் தசைகளின் மென்மையான திசுக்களை சிதைவுறச் செய்து, எரிச்சலையும், வலியையும் உண்டாக்கும். பலரும் மூட்டுக்களில் வலி ஏற்படும் போது ஆர்த்ரிடிஸ் ஆக இருக்கக்கூடும் என தவறாக நினைக்கின்றனர். உடலில் புழுக்கள் அதிகம் இருந்தாலும், இம்மாதிரியான வலியை மூட்டுக்களில் சந்திக்க நேரிடும்...

அதிமுக, திமுக கூட்டணிக்கு பாமக தயார் - பாமக மருத்துவர் அய்யா அவர்கள்...


அதிமுகவிற்கு 3 தொகுதியும் திமுகவிற்கு 2 தொகுதியும், குறிப்பாக இரண்டு கட்சிகளும். மாம்பழ சின்னத்தில் தான் போட்டியிடனும்...

கார்டோன்களில் வாழும் யாழ்...


பண்ணியாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வழொஅதி
தெண்ணிலா மதியம் பொழில் சேருந் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே இருவர்க்கு நின்கழல் காட்சியாரழல்
அண்ணலாஅ எம்மான் அடைந்தார்க்கருளாயே

- திருஞான சம்பந்தர்..

விளக்கம்:

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்களர் எனும் திருப்பதியில் கோயில் கொண்டு எழிந்தருளியுள்ள பெருமானே!
யாழைத் திருத்திய சுரம் அமையப் பண்ணிப் பாடி ஆடும் மங்கையர் நிறைந்த திருப்பதியாகிய திருக்களருள்ளும், அன்பர்கள் உள்ளத்திளும் நீங்காது நின்றருளும் ஒப்பற்றவனே...

தமிழிசையில் மூத்த இசைக்கருவியாகத் திகழும் யாழ் இப்பதிகத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது...

மேலும், திருஞானசம்பந்தர் அருளிய தேவார பாடல்களுக்கு யாழ் இசையை மீட்டியவர் நீலகண்ட யாழ்பாணர் என்பது குறிப்பிடத்தக்கது...

தாழ்ந்த குலத்தில் பிறந்தும் திருஞானசம்பந்தரின் பாடல் பதிகங்களுக்கு யாழிசை மீட்டும் பாக்கியம் கிடைத்தது நீலகண்ட யாழ்பாணருக்கு...

இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவரின மக்களின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள வேண்டினார்..

அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார் திருஞானசம்பந்தர்.

சரியாக யாழ் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு...

யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம்...

பழம்பெரும் தமிழிசைக்கருவி யாழ் நம் கைவிட்டு போய் விட்டது... 

நான் சிறுவனாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு.

வழக்கத்தில் இவ்விசைக்கருவியை கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு...

பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழ் கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்து கொண்டேன்...

இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது.

யாழ் மட்டுமல்ல... இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே...

வங்கியும் வட்டியும் எவ்வளவு கொடியது என்ற உண்மையை என் தமிழ்சமூகம் விரைவில் உணரும்...


உணர்வுகள்...


குழந்தை பருவத்தில் தாய் தந்தை அரவனைப்பின் உணர்வு..

நண்பர்களின் பாசத்தில் உங்களை மறந்து சிரித்த உணர்வு..

தனிமையில் தன்நிலை மறந்து  இயற்கையில் உணர்ந்த உணர்வு..

கவிதை எழுதுவது  , ஓவியம் வரைவது  , நடனம் ஆடுவது  , பாடல் எழுதுவது, பாடுவது , இசை, இவை அனைத்தும் உங்கள் ஆழ்மனதின் உணர்வுகள்..

ஓவ்வொரு இடத்திலும் அன்பில் கலந்தும், சிரிப்புடன் கலந்தும், மகிழ்ச்சியில் கலந்தும், இருக்கும் போது உங்களிடம் ஏற்படும் சில நிமிட  உணர்வுதான் உங்களின் இயற்கை தன்மை உணர்வு..

ஆழ்மனது உணர்வில்  இருக்கும் போது
நீங்கள் கவனித்தது உண்டா உங்களின் உணர்வுகளை..

மேலோட்ட உணர்வுகள்...

கோபம், வெறுப்பு, காழ்புணர்ச்சி, கொலை, பேராசை, கவலை, துன்பம் முக்கியமாக சுயம் இவை ஏதும் இல்லாமல் உங்கள்  இயற்கை தன்மையில் இருப்பதை உணர்வீர்கள்

தேடல் பயணம் தொடரும்...

3 ஆண்டுகளில் ரூ.10,391 கோடி வசூல்: வங்கிகளின் கொள்ளைக்கு முடிவு கட்டுக - அறிக்கை...


நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது, பிற வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களைப் பயன்படுத்தியது ஆகியவற்றுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.10,391 கோடியை வசூலித்துள்ளன. இது வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் நடத்திய அதிகாரப்பூர்வக் கொள்ளை என்பதில் சந்தேகமில்லை.

பொதுத்துறை வங்கிகளில் தனிநபர் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக மட்டும் ரூ.6,246 கோடி தண்டம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கியில் கணக்கு  வைத்திருப்பவர்கள் மற்றொரு வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தியதற்காக ரூ.4145 கோடி தண்டம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வசூலிக்கப்பட்ட தண்டத்தில் 46.33 விழுக்காடும், தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களை பயன்படுத்தியதற்காக வசூலிக்கப்பட்ட தொகையில் 37.47 விழுக்காடும் பாரத ஸ்டேட் வங்கியால் வசூலிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காகவும், பிற வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களை பயன்படுத்தியதற்காகவும் அபராதம் விதிப்பதே அபத்தமான கொள்கை ஆகும். இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கான பயன்களை வங்கிக் கணக்குகள் மூலம் வழங்குவதன் மூலம் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கலாம் என்பதாலும் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் வங்கிச் சேவை என்பது கிட்டத்தட்ட கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவற்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? அதிலும் பாரத ஸ்டேட் வங்கியில் நகர்ப்புறக் கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.5000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உறுதி செய்யப்பட்ட வருவாய் கிடையாது. அத்தகைய சூழலில் அவர்கள் அவசரத் தேவைக்காக வங்கிக் கணக்கில் உள்ள குறைந்தபட்ச இருப்புத்தொகையிலிருந்து தான் எடுக்க வேண்டும். அதற்காக தண்டம் விதிப்பது மனிதநேயமற்ற செயலாகும். பலரின் வங்கிக் கணக்குகளில் இத்தகைய தண்டத்தொகை பிடித்தம் செய்யப்பட்டதால், கணக்கில் இருந்த முழுத் தொகையும் பறிபோயிருக்கிறது. இது சேமிக்கும் பழக்கத்தை மட்டுமின்றி, வங்கிக்கணக்கை பராமரிக்கும் வழக்கத்தையும் அடியோடு ஒழித்து விடும்.

பிற வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் மையங்களில் பணம் எடுப்பதற்காக தண்டம் விதிப்பதும் கண்டிக்கத்தக்கது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எந்த மையத்தில் வேண்டுமானாலும் பணம்  எடுக்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது வங்கிகளின் கடமையும், வாடிக்கையாளர்களின் உரிமையும் ஆகும். சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு அதிகபட்சமாக 4% மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. நடப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. இந்தப் பணத்தைதான் வங்கிகள் அதிகபட்சமாக 15% வரை வட்டிக்குக் கொடுத்து இலாபம் ஈட்டுகின்றன. வங்கிகளின் மூலதனத்தைவிட சேமிப்புக்கணக்கு மற்றும் நடப்புக்கணக்கில் உள்ள தொகை பலமடங்கு அதிகமாகும். வங்கிகள் லாபம் ஈட்ட அடிப்படைக் காரணமாக விளங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதை விட்டுவிட்டு தண்டம் விதித்து தண்டிப்பது நல்ல அணுகுமுறை அல்ல.

இதில் குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கிகள் வசூலிக்கும் இந்த தண்டத்தால் ஒரே ஒரு விழுக்காடு கூட பணக்காரர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்; இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகளாகத் தான் இருப்பார்கள். சலுகைகள் அனைத்தும் பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்; தண்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்பதும் வளர்ச்சிக்கான பொருளாதார சிந்தனையாக இருக்காது; மாறாக கொடூரமான பொருளாதார சிந்தனையாகவே இருக்கும்.

வங்கிகளின் அனைத்துச் செயல்பாடுகளையும் முறைப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி, குறைந்தபட்ச இருப்புத் தொகை, தானியங்கி பணம் வழங்கும் கட்டணம் ஆகியவற்றை மட்டும் வங்கிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது வங்கிகளின் கொள்ளைக்கு வாசல் திறக்கும் வேலையாகும். இந்த அநீதியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்த சேவைக்கும் கட்டணமோ, தண்டமோ விதிக்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்...

அடேய் திருட்டு சாதி ஒழிப்பு டூபாக்கூர்களா...


கொலையாளிகள் இருவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள்...

இந்த மன்மதன்களை காதலிக்க மறுத்ததால் கொலையாம்?

பரஞ்சித்.. எவிடன்ஸ் கதிர் திருமாவளவன்..  உள்ளிட்ட பெரும் போராளிகள் மேடைக்கு வரவும்
பிணத்துக்கு கூட ஜாதி பார்த்து தான் வாய்ஸ் கொடுப்பாளா...?

திருவனந்தபுரம் தமிழர் நகரம்...


1750 வரை திருவனந்தபுரம் மலையாளிகள் கைக்குப் போகவில்லை..

இதைக் கைப்பற்றிய மார்த்தாண்ட வர்மா தமிழ் அரச பரம்பரையான வேணாடு அரசர் குலத்தவன். அதாவது முழுத் தமிழன் இல்லையென்றாலும் அவனை மலையாளி என்று கூறமுடியாது.

இந்த வேணாட்டு அரசர்கள் காலங்காலமாக பாண்டிய நாட்டின் கீழ் ஆண்டு வந்தனர்.

சேரநாட்டின் பகுதியாகக் கூட என்றுமே இருந்ததில்லை.

1950 களில் மார்சல் நேசமணி திருவனந்தபுரம் இருக்கும் நெய்யாற்றின்கரை தாலுகாவில் தமிழர் பெரும்பான்மையை சான்றுகளோடு நிறுவி அப்பகுதியை தமிழகத்துடன் இணைக்க எவ்வளவோ போராடினார்.

30 தமிழர்கள் சுடப்பட்டு இறந்தனர்.
400 பேர் வரை கைதானார்கள்.
3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

நேசமணி திருவனந்தபுரம் கிடைக்க தமிழர்கள் 60% வரை வாழ்ந்த நெடுமங்காடு தாலுகாவை விட்டுக் கொடுக்கவும் செய்தார்.

ஆனால் அவரால் கன்னியாகுமரியை மட்டுமே மீட்க முடிந்தது. (கேட்டதில் பாதிக்கும் குறைவு).

மலையாள மொழியானது 500 ஆண்டுகளுக்கு முன்னே உருவாகிய மொழி ஆகும்.

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல்..

அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1650 எழுத்தச்சன் பச்சமலையாளம் என்ற மொழி உருவாக்கினார். இது செந்தமிழே.

1860 முதல் மலையாள இலக்கண நூல் எழுதப்பட்டது.

1900 வரை மலையாளிகள் தமிழும் படித்தனர்.

(பாவாணர், திராவிடத்தாய் நூலில்).

எடக்கல் எனுமிடத்தில் பழைய தமிழ் (பிராமி) எழுத்தில் 'ஓ பழமி' என்று எழுதியிருந்ததை மலையாளிகள் 'இ பழம' என்று மலையாளத்தில் எழுதியிருப்பதாக எவ்வளவோ திரிக்க முயன்றனர்.

இதற்கு ஐராவதம் மகாதேவன் உடந்தையாக இருந்தார்.

நல்லவேளையாக நடன காசிநாதன் அது தமிழே என்றும் அது தமிழ் தெய்வம் பழையோள் என்றும் நிறுவினார்.

ஆக மலையாளிகள் எந்த வகையிலும் தமிழரிடமுள்ள சான்றுகளுடன் போட்டி போட முடியாது...

சிலை கடத்தல் பிரிவு பொன்.மாணிக்கவேல் பாஜக என்று உறுதியானது...


சினிமா டிக்கெட்களுக்கு குறைகிறது ஜி.எஸ்.டி வரி...


கணினி மானிட்டர்கள், தொலைக்காட்சிகள், டயர்கள், பவர் பேங்க்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28% இருந்து 18% ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்படவுள்ளது.

ரூ. 100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18% இருந்து 12% ஆகவும், ரூ. 100க்கு மேல் உள்ள டிக்கெட்களுக்கான வரி  28% இருந்து 18 ஆகவும் குறைக்கப்படவுள்ளது.

லக்‌ஷுரி பொருட்கள் என்கிற பிரிவில் உள்ள 34 பொருட்கள் 28% வரி விதிப்பிலேயே தொடரும். இதற்கான அறிவிப்பை 31வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளார்...

ஆவினில் பெண் ஊழியருடன் அதிமுக நிர்வாகிகள் உல்லாசம்...


தனி ஒருவன் பாணியில் மத்திய அரசு.. இனி அந்தரங்கம் என்பதே இருக்காது.. அதிரடி உத்தரவு...


மக்களின் போன் மற்றும் கணினிகளை கண்காணிக்க மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்களின் போன் மற்றும் கணினிகளை கண்காணிக்க மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு மற்றும் அரசு சாரா 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை நேற்றுதான் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது.

நாட்டில் அனைத்து லேப்டாப், போன்களையும் கண்காணிக்கலாம்.. 10 அமைப்புகளுக்கு அரசு அனுமதி.. அதிர்ச்சி...

இப்படி அனுமதி
மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு இந்த அனுமதியை வழங்கி உள்ளது.
1. சிபிஐ
2.உளவுத்துறை
3.அமலாக்க துறை
4.மத்திய நேரடி வரிகள் வாரியம்
5.வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
6.தேசிய புலனாய்வு அமைப்பு
7.ரா
8.சிக்னல் புலனாய்வு இயக்குநரகம்
9.டெல்லி கமிஷ்னர் அலுவலகம்
10. போதை பொருள் தடுப்பு பிரிவு

எப்படி எல்லாம் செய்ய முடியும்...

மத்திய அரசு வழங்கி இருக்கும் புதிய அனுமதியின் மூலம் மக்கள் அவர்களுக்கு தெரியாமலே கண்காணிக்கப்படுவார்கள். மத்திய அரசு வழங்கி இருக்கும் அனுமதி ஆணையில் ''இன்டர்செப்ட் மற்றும் மானிட்டர்'' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நம்முடைய கணினியை நமக்கே தெரியாமல் அரசு இயக்க முடியும். போன்களையும் கூட அரசு இப்படி இயக்க முடியும்.

இனி என்ன செய்வார்கள்...

இந்த அமைப்புகளால் நம்முடைய லேப்டாப்பில் உள்ள புகைப்படங்களை சோதனை செய்ய முடியும், நம்முடைய போன்களில் உள்ள மெயில்களை படிக்க முடியும், ஆவணங்களை சோதனை செய்ய முடியும், நாம் எங்கே செல்கிறோம் என்று ஜிபிஎஸ் மூலம் சோதனை செய்ய முடியும். அதாவது ஹாலிவுட் படங்களில் வருவது போல அரசு நினைத்ததை எல்லாம் இனி செய்ய முடியும்.

எல்லோரும் கண்காணிப்பில்...

இதில் யாருக்கு எல்லாம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு விளக்கவில்லை. இப்போதுவரை வந்துள்ள ஆணையின்படி ராகுல் காந்தி தொடங்கி மு.க ஸ்டாலின் வரை யாருடைய கணினியையும் இந்த 10 அமைப்புகள் கண்காணிக்க முடியும். இதனால் சாதாரண எளிய மக்களும் அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

பெரிய ஆபத்து...

இது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த தகவல்கள் தவறாக எங்காவது வெளியே செல்லவும் வாய்ப்புள்ளது. அதேபோல் நம்முடைய தனிப்பட்ட அந்தரங்கமும் இதனால் பறிபோக வாய்ப்புள்ளது. இதற்கு எதிராக மக்கள் இப்போதுதான் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

யக்கா பேசாம இதுக்கு நீ தொங்கிடலாம்....


நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அனைத்து கட்சிகள் கடையடைப்பு, மக்கள் முழு ஆதரவு...


கடையநல்லூர் தாலுகா அலுவலகம் தனி நபர் லாபத்திற்காக பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத காசிதர்மம் காட்டு பகுதிக்குள் கொண்டு செல்வதை கண்டித்து கடையநல்லூர் மற்றும் புளியங்குடியில் கடைகள் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டுள்ளது...

தேடல்...


காலங்கள் மாறுகிறது,
காட்சிகள் மாறுகிறது,

ஆனால் மையம் மட்டும் மாறவில்லை
மையத்தை நோக்கி ஓர் தேடல் பயணம்...

சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?


கிராமங்களில் உள்ள சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும் சொடக்கு தக்காளியை, சிறுவர்கள் உடைத்து விளையாடுவது வாடிக்கை.

அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களை சிறுவர்கள் பறித்து சாப்பிடுவார்கள்.

அது, வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

மருந்து தயாரிக்கும் தேவையான பொருட்கள் : சொடக்கு தக்காளி செடியின் இலை, மஞ்சள் தூள்.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் நறுக்கிய இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, குடித்து வந்தால், உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாகும்.

அதே போன்று புற்று நோய் இருப்பவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால், புற்று நோய் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும், சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனைத் தரும்.

இது மனக்கத் தக்காளி வகையை சேர்ந்தது என்பதால், அதில் உள்ள அனைத்து மருத்துவ குணங்களும் இந்த சொடக்கு தக்காளிக்கும் உள்ளது...

சிலைக்கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்.மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன் - நீதிபதி கேள்வி...?


இதையே இப்போ தான் கண்டு பிடிச்சு கேட்குறீங்களா யூவர் ஆனர்...

உளவியலில் இருந்து... இலட்சியவாதி எப்படி இருப்பார் ?


தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்க்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்...

ஆடை: உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிகையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.

வேகநடை: வேகநடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.

நிமிர்ந்த நிலை: எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணி விடுவர். நிமிர்ந்து நிற்பது. தலையை தொங்கப் போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்துப் பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும்.

கேட்பது: நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -60 நொடிக்குள் உங்கள் லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்ட வேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.

நன்றி: உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும் அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.

மனதார பாராட்டுங்கள்: நம்மை நாமே “நெகட்டிவ்” வாக நினைக்கும் போது மற்றவர்கள் பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடல்வாகு: நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும், அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்...

உலகை உற்று நோக்குங்கள்...


தீய விதைகள்: மான்சாண்டோ மற்றும் மரபணு பொறியியல்...


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயிகள் ஒரு விவசாய பருவத்தில் இருந்து மற்றொரு விவசாயம் விதைகளை சேமித்தனர் ஆனால் மான்சாண்டோ மரபணு மாற்றப்பட்ட (gm) விதைகள், அதன் சொந்த களைக்கொல்லி மறுக்க, கிளைபோசேட்டு சார்ந்த சுற்றிவரலில், அது விதைகளை patented.

ஐக்கிய நாடுகள் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரையின் அலுவலகம், அதன் வரலாறு அனைத்தும், விதைகள் மீது patents வழங்க மறுத்து, பல மாறிகள் பார்க்கும். எனினும் 1980 ஆம் ஆண்டில் 5-4 ஆம் ஆண்டில் விதை விதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி. இது உலகளாவிய உணவு சப்ளை கட்டுப்பாட்டை பிரபலமடைந்து ஆரம்பம் பல பேரூராட்சி.

விதைகள் patenting உணவு, விவசாயம், மற்றும் உங்கள் எதிர்கால உடல் நலத்தை பாதிக்கும் வகையில் மான்சாண்டோ வேறு ஒன்று மட்டுமே.

லாபம் மற்றும் ஆதிக்கம் விதைகள்...

கடந்த 15 ஆண்டுகள் அல்லது எனவே, ஐந்து ராட்சத பயோடெக் பேரூராட்சி ஒரு தொகுப்பு - மான்சாண்டோ, syngenta, பேயர், டௌசேர், மற்றும் டுபோண்ட் - 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாங்கி, அவற்றை விதைகள் அணுக அனுமதிக்க வேண்டும்.

மான்சாண்டோ மரபணு பொறியியல் பொறியியல் உலக தலைவர் ஆனார், 674 பயோடெக்னாலஜி patents வெற்றி, வேறு எந்த நிறுவனத்தை விட அதிகமாக உள்ளது. நீங்கள் ஒரு விவசாயி என்றால் அதன் சுற்றிவரலில் தயார் விதைகள், நீங்கள் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட வேண்டும் ஒவ்வொரு அறுவடை மீண்டும் பிறகு விதை. மற்ற விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்து இருந்து தடை செய்து உள்ளீர்கள். சுருக்கமாக, ஒவ்வொரு வருடமும் புதிய விதைகள் வாங்க வேண்டும்.

ஏனெனில் விதைகள் காப்புரிமை காப்புரிமை கருதப்படும், gm விதைகளை யார் செய்யும், அவற்றை மீண்டும் sow ஒரு லைசன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த முடிவுகள் அதிக விலையில் மற்றும் தயாரிப்பு விருப்பங்களை குறைத்து, சரி மற்றும் herbicides தேவையான gm பயிர்கள் தேவை.

மாஃபியா-போன்ற உத்தியோகம்?

அவர்களின் தற்போதைய சக்திகளை கொடுத்த, மான்சாண்டோ விவசாயிகள், விவசாயி coops, விதை டீலர்கள், மற்றும் யாராவது சந்தேக அதன் விதை patents தரமிறக்கப்பட்டிருப்பதாகவோ. இது பின்வரும் மூலம் மூலம் செய்கிறது:

இது தனியார் விசாரணை மற்றும் முகவர்கள் ரகசியமாக புகைப்படம் மற்றும் videotape விவசாயிகள், கோ-ஓபிஎஸ் மற்றும் ஸ்டோர் உரிமையாளர்கள்.

அதன் தனியார் விசாரணை infiltrate சமூக கூட்டங்கள் மற்றும் விவசாயம் செயல்பாடுகள் பற்றிய செய்திகளை ஒன்று.

அதன் முகவர்கள் அளவையர் இருக்க வேண்டும் என்று பாசாங்கு.

அதன் முகவர்கள் தங்கள் நிலத்தில் விவசாயிகளை அவர்கள்மீது, அவர்களின் தனிப்பட்ட பதிவுகளுக்கு மான்சாண்டோ அணுகலை வழங்கும் பேப்பர் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

இந்த மான்சாண்டோ ஏஜெண்டுகள் மற்றும் விசாரணைகள் விவசாயிகள் மூலம் " விதை போலீஸ் " என்று என்று, " gestapo " மற்றும் " மாஃபியா " போன்ற உத்தியோகம் அமர்த்துங்கள் சொன்னது.

விவசாயி தற்கொலை...

விவசாயிகள் இழந்த நிலையில் பிடித்து பிடித்து. அவர்கள் ஒரு அதிக விலை உயர்ந்த பயிர் செய்ய வேண்டும் என்று, வழக்கமான பயிர்களை விட மிக அடிக்கடி தோல்வி, விலங்குகள் மற்றும் மனிதர்கள் அவர்களை பொருட்களை மிகவும் ஆபத்தானது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிலிப் ஹோவர்ட், ecologist மேற்கோளிடப்பட்ட, விதை நிறுவனங்களின் அதிகரித்து வரும் சக்தி "பொருத்தமில்லா" விவசாய நடைமுறைகள் மூலம், அவர்களின் கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கான ஒரு தீர்வு, விதைகள், செடிகள், (நடைமுறை தடை செய்ய வேண்டும். மற்றும் மரபணுக்கள்.

மாற்றம் தேவை என்று ஒரு மிக எச்சரிக்கையானது பதிவு இப்போது இந்தியாவில் விவசாயி தற்கொலை என்ற அலை தான். இந்திய விவசாயி தற்கொலை விகிதம் 2002. ஆம் ஆண்டில் ஆனால்.

நியூ யார்க் பல்கலைக்கழக பள்ளியில் இருந்து ஒரு பதிப்பகம், 2009 தனியாக, 17,638 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து, ஒவ்வொரு 30 நிமிடங்கள் ஒரு விவசாயிக்கு அவசர. அந்த பாதிக்கப்பட்ட ஒரு சிறந்த எண்ணிக்கை பண பயிர் விவசாயிகள், பருத்தி விவசாயிகள் குறிப்பாக.

" மனித வரலாற்றில் தற்கொலைகள் மிகப்பெரிய அலை " என்று டப் இந்த grim நிதர்சனம் பங்களிப்பு எண்ணிக்கை உள்ளன"

ge விதைகள் பாரம்பரிய விதைகளை ஒப்பிடும் போது மிகவும் விலை, ஒவ்வொரு நடும் சீசன் repurchased வேண்டும்

ge பயிர்கள் வளர அதிக தண்ணீர் தேவை, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி க்கு அதிக அதிக தேவைகள் உள்ளன, மேலும் அதிக அன்றியும் வழங்க வேண்டாம்

1960 களின் "பசுமை புரட்சி" 1970 s மற்றும் 1970 s விட்டது பணம் பணம் / peasant வகுப்புகள்.

விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி, மற்றும் இதர பண்ணை பொருட்கள், பண்ணை விலை சேர்ந்து விலை. தருணத் moneylenders இருந்து உயர் வட்டி கடன்களை எடுக்க இந்த லீட் விவசாயிகள்.

polyculture விவசாயம் (பல பயிர்கள்) monoculture விவசாயம் (முதன்மையாகப் பருத்தி) மண் குறைவு, பயிர் ஊடுருவிய, குறைந்த நீர் பொருட்கள், கால வறட்சி, குறைந்து வரும் பருவ மழை மழை, மற்றும் ஏழை அணு பாசன அணுகல்.

அரசு ஆதரவு பற்றாக்குறை, கணக்குப் அளித்துள்ளார் அரசு நிவாரண திட்டங்கள், மற்றும் வேட்டையாடும் விற்பனையாளர்கள்.

Ge, ge பயிர்கள் ஒரு சோதனை மைதானம் என்று இந்தியாவை பயன்படுத்த அதன் நோக்கம் இரக்கமற்ற, ge விதை விதை.

இந்த ஏற்கனவே உள்ள விவசாய பிரச்சனைகள் உங்கள் உணவு மற்றும் ஆரோக்கியம் பற்றிய ge தொழில்நுட்ப விளைவுகள், ஆர்கானிக் பயிர் வகைகள் மற்றும் களைக்கொல்லி-எதிர்ப்பு superweeds வளர்ச்சி உட்பட, மரபணு பொறியியல் மூலம் வேறு சிக்கல்கள் உள்ளன. காற்று மற்றும் மழை மாதிரிகள் கிளைபோசேட்டு தொற்றுபரவுதல், விவசாய பகுதிகளில் வழிப் ஒரு ge பூச்சி-கொலை புரதம் தொற்றுபரவுதல். நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று மனித மற்றும் விலங்கு சுகாதார விளைவுகள் உள்ளன. இந்த ge பயிர்கள் மீது நீண்ட கால பாதுகாப்பு ஆய்வுகள் எதுவும் இல்லை. Biotech giants such as monsanto impose strict regulations when it comes to studying and evaluating their ge crops, which are protected under copyright and proprietary information laws. Ge பயிர்கள் மீதான ஒழுங்குமுறை மதிப்பீடுகள் இந்த பேரூராட்சி மட்டுமே வரும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். செய்துகொண்டதன் பற்றி ஆய்வுகள் நடத்த நீங்கள் ஒரு சுதந்திர ஆய்வு aiming என்றால், நீங்கள் ஆய்வு செய்ய விரும்பும் மிகவும் பயிர்களை பயன்படுத்த தடை. மோசமான, உங்கள் வேலை "flawed மற்றும் insubstantial" என விமர்சிக்க. இது ஒரு அவசர நிலை நிலை, மரபணு மாற்றப்பட்ட உணவுகளின் சுகாதார தாக்கம் அலுவலகத்தில் ஆராய்ச்சி தொகையை கொடுத்த. உணவு ஒவ்வாமை dramatically அதிகரித்து, கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் குழந்தைகளுடன் இன்று துன்பம். Morgellon நோய் என்ற கேட்டேன்? பிப்ரவரி 2007, 10,000 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் - உலகம் முழுவதும் 15 நாடுகளில் இருந்து வருகிறது, அனைத்து 50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட - இந்த மர்ம நோய் அறக்கட்டளை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2006 ல் இந்த நோய் 2,000 அறிக்கைகள் மட்டுமே இருந்தன. Morgellon நோய் உள்ள தனிநபர்கள் தங்கள் தோல் வண்டுகள் அல்லது ஒட்டுண்ணிகள் scuttling, திறந்து, கருப்பு, கருப்பு, அல்லது வெள்ளை மில்லிமீட்டர்-நீண்ட ஃபைபர்ஸ். இந்த ஃபைபர்ஸ் pliable பிளாஸ்டிக் போன்று தோன்றும்; அவர்கள் சிலந்தி பட்டு நன்றாக இருக்க முடியும். மேலும், இழுத்து போது, வலிகள் வலிகள். Morgellon நோய் ge உணவுக்கு இணைக்கப்பட்டுள்ளது. ஓக்லஹோமா மாநில பல்கலைக் கழகத்தில் இருந்து ஒரு ஆய்வு குழு டாக்டர் ராண்டி wymore led அனுப்பி அனுப்பி சில படித்த படித்தார். வெவ்வேறு தனிநபர்கள் ஃபைபர்ஸ் ஃபைபர்ஸ் பொதுவான. விட்டலி citovsky, பேராசிரியர் உயிர்வேதியியல் மற்றும் செல் உயிரியல், நியூயார்க் புரூக் பல்கலைக்கழகத்தில், ஃபைபர்ஸ் இருக்க இருக்க, மரபணு இருக்க, மரபணு உருவத்தில் திட்டங்கள், மனித ரகம், மனித செல்வங்கள் உட்பட. அது உங்களை சிந்திக்க வைக்கும்: நாம் மிகவும் ஆரம்பம் இருந்து பயம் ge உணவு பேரிடர் கட்டடத்தை? எப்போது மான்சாண்டோ மற்றும் பிற பயோடெக் நிறுவனங்கள், அவர்களின் ஆய்வக படைப்புகளின் பாதுகாப்புக்கு வரும்போது இருண்ட நம்மை தொடர்ந்து? செய்துகொண்டதன் மற்றும் மருந்து வணிகம்

மான்சாண்டோ என்பது வளரும் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் (செய்துகொண்டதன்) என்பது மட்டுமல்லாமல், மருந்து துறையில் ஒரு ஆழமான entrenchment உள்ளது. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2000 ஆம் தேதி pharmacia கழகம் & மற்றும் upjohn நிறுவனம்.

சில தனிநபர்கள் மருந்துகள் பயிர்கள் இணைத்து இணைத்து, ஆனால் இருவரும் உங்கள் எதிர்கால ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க சவால்களை போஸ்.

மருந்து தொழில் என்பது பாரம்பரிய கருத்தோட்டம் முதன்மை டிரைவிங் படைகள் உள்ளது, இது பேண்ட்-எய்ட்ஸ், அறிகுறிகள் நடத்த &, இது உங்களை sicker மற்றும் sicker செய்கிறது. இது அதிக விலை, சுய சேவை மருந்து "தீர்வுகள்" உங்கள் அறிகுறிகளை முகவரி செய்ய வேண்டும். போட்டு செய்துகொண்டதன் மற்றும் மருந்துகள் ஒன்றாக சேர்ந்து (ஒன்று ஊட்டிய லாபம் ஊட்டிய), நீங்கள் ஒரு அவசர கவலை கிடைக்கும்.

உங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

உணவு சங்கிலியில் ge உணவுகள் மிகவும் ubiquitous ஆகிவிட்டது. மளிகை கடை. ஒரு packaged பொருளை அபிஷேகம், 75 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு 10 செயலாக்கப்படும் உணவுகள் ஏழு வெளியே மரபணு கட்டமைத்த.

ஆனால் உங்களால் முடிந்த அளவு gm உணவுகளை உங்கள் நுகர்வு குறைக்க வழிகள் உள்ளன.

உங்கள் உணவில் உள்ள செயலாக்கப்படும் உணவுகளை குறைக்கவும் அல்லது அகற்ற 75 சதவீதம் செயலாக்கப்படும் உணவுகள் உள்ளன. ge மூலப்பொருட்கள், நீங்கள் ஒரு முழு உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்...

சித்தர்களைப் பற்றி...


சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா?

இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான்.

ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை.

ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே...

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

"மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா";

"மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே"

என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது?

வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது?

யார் உதவுவார்கள்?

ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி.

அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன.

சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?.

யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே..

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.

ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும். சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.

ஆத்மா என்பது தான் என்ன?

மனித உடலில் அதன் இருப்பிடம் யாது?

மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது?

தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்?

ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன?

மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?

தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?

இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்.

ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்...

பாஜக மோடியின் திருட்டு அரசியல்...


அழிவின் விளிம்பில் நீலகிரி வரையாடுகள்: கவனிக்குமா அரசு?


தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக வன உயிர் கூட்டமைப்பின் இந்திய பிரிவு (WWF-Inida)தெரிவித்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் தமிழக - கேரள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் இப்போது 2500 வரையாடுகள் மட்டுமே இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழக மற்றும் கேரள வனத்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அதில் 3122 வரையாடுகள் வரை இருப்பதாக தெரியவந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வேகமாக அவை தொடர்ந்து அழிவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளத்தில் மட்டும், அம்மாநில அரசு மேற்கொண்ட கணக்கெடுப்பில் சுமார் 1,420 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. அவற்றில் சுமார் 664 வரையாடுகள், எரவிக்குளம் தேசியப் பூங்காவில் மட்டுமே தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி வரையாடு அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. இந்த நீலகிரி வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் வேறெங்கும் காணப்படுவதில்லை.

மேலும், தமிழின் சங்க இலக்கியப் பாடல்களில் வரையாடு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. வரையாடுகள் கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயரம் உள்ள மலையில் புற்கள் அடர்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் வசிப்பவை. பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் இவை உணவாக்கி கொள்ளும். முதிர்ந்த ஆண் வரையாடு சராசரியாக 100 கிலோ எடையும் 110 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாடு சராசரியாக 50 கிலோ எடையும் 80 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாட்டின் கொம்பு ஆண் வரையாட்டின் கொம்பைவிடக் குட்டையாகவும் பின்னோக்கிச் சரிவாகவும் அமைந்திருக்கும்.

ஆண் வரையாடு அடர் பழுப்பும் மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருக்கும். பெண், சாம்பல் நிறத்தில் காணப்படும். ஆண் வரையாடுகள் தனியாகவும், பெண் வரையாடுகள் கூட்டமாகவும் வசிக்கும். ஆண் வரையாடுகளில் யார் தலைவன் என்ற போட்டி அதற்குள் சண்டை சாகும்வரை நடைபெறும். வரையாடுகள் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையாகும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியைச் சுமக்கும் இவற்றின் ஆயுள்காலம் 5 முதல் 6 ஆண்டுகள்.

இவைகளை எங்கெல்லாம் பார்க்கலாம்?
களக்காடு அருகே முத்துக்குளி வயல், மேகமலை ஹைவேவிஸ், ஆனைமலை, நீலகிரி மலை, வால்பாறை, கேரளத்திலுள்ள அமைதி பள்ளத்தாக்கு, பரம்பிக்குளம், ரண்ணி வனப்பகுதிகளில் வரையாடுகள் நடமாட்டத்தை பார்க்கலாம்.

அச்சுறுத்தல்கள் என்ன ?
வரையாடுகளுக்கு இயற்கையான எதிரி சிறுத்தை, புலிகள் மற்றும் மனிதனே ஆவான். வரையாடுகளுக்கு புல்வெளிகள் நிறைய வேண்டும். அதுவும் உயரமான மலைகளில் இருக்க வேண்டும். மேலும் காடுகளின் பரப்பளவுகள் சுருங்கிக் கொண்டு வருவதால் வரையாடுகளுக்கு தேவையான உணவு கிடைக்காததால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருகிறது.

இவை காலையும், மாலையும் மட்டுமே மேய்ச்சலுக்கு செல்லும். பகல் பொழுதில் ஓய்வெடுத்துக் கொள்ளும். இரவில் வரையாடுகளுக்கு பார்வை தெரியாது. அதிகமான மழைப்பொழிவு, செழிப்பான பிரதேசங்களில் மட்டுமே இவை வசிக்கின்றன....

பாஜக வின் டிஜிட்டல் இந்தியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்...


கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரும்... இந்தி எதிர்ப்பும்...


இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள்...

ஈ.வே.ரா எழுதுகிறார்...

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.

எதற்காக சட்டம்?
எதற்காக போலீஸ்?
எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?
முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?
இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்.

நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா..

மேற்கண்டது இந்தியெதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்..

இந்தி எதிர்ப்பு நடந்த போது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்...

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - 16.1.1965.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - 28.1.1965.

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - 10.2.1965.

போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - 4.3.1965.

பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - 13.2.1965.

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும்...

நாதக வின் தமிழ் (திராவிட) தேசியம்...


இந்தோனேசியா சுனாமி பேரழிவு - பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு...


இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே நேற்று ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. பேரிடரில் சிக்கியதில் 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும், 30 பேரை காணவில்லை எனவும் தேசிய பேரிடர் மேலான்மை அதிகாரி டோப்போ புரோ நுக்ரஹோ தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சுனாமி பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் சாலையில் மரங்கள் சாய்ந்து கிடப்பதாலும், வீடுகள் இடிந்து காணப்படுவதாலும் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுக்கு வந்துள்ளதால் அவர்களது நிலைமை குறித்த எந்த தகவல்களும் கிடைக்க பெறவில்லை என பெண்டேகிலாங் நகரின் பேரிடர் மேலான்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுனாமியை அடுத்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் வருகிற டிச.,25 வரை கடற்கரை பகுதிக்கு எவரும் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்...

பாமக அன்புமணி அசைக்க முடியாத சத்தி...