24/12/2018

இந்தோனேசியா சுனாமி பேரழிவு - பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு...


இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே நேற்று ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. பேரிடரில் சிக்கியதில் 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும், 30 பேரை காணவில்லை எனவும் தேசிய பேரிடர் மேலான்மை அதிகாரி டோப்போ புரோ நுக்ரஹோ தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சுனாமி பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் சாலையில் மரங்கள் சாய்ந்து கிடப்பதாலும், வீடுகள் இடிந்து காணப்படுவதாலும் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுக்கு வந்துள்ளதால் அவர்களது நிலைமை குறித்த எந்த தகவல்களும் கிடைக்க பெறவில்லை என பெண்டேகிலாங் நகரின் பேரிடர் மேலான்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுனாமியை அடுத்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் வருகிற டிச.,25 வரை கடற்கரை பகுதிக்கு எவரும் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.