01/04/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 1...

உண்மைகள் உறங்குவதில்லை அது மக்கள் மத்தியில் ஒருநாள் வெளிச்சமாக வெளிவரும் என்ற நமது கூற்றின்படி நமது தீர்க்க தரினங்கள் யாவும் மெய்படும் காலமாக தற்போது சத்திய யுகம் தீர்க்கதரிசனப் பகுதிகள் இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.


சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக வெளிப்படுத்தப்படும் தீர்க்க தரிசனம் என்னவெனில் நாட்டின் தலையெழுத்தை தான் மாற்றப் போவதாக கூறிக்கொண்டு வெளிவரும் எந்த ஒரு நபராலும் இந்த நாட்டின் தலையெழுத்தை நிச்சயம் மாற்ற முடியாது என்றும்... மக்கள் ஏமாறும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும் முதல் தீர்க்க தரிசனம் ஒரு உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.



நாடாளும் மன்னன் ஒருவனின் மரணச் செய்தியினை உலக மக்கள் கண்டு அச்சப்படும் மகாபாதகச் செயல் ஒன்று தற்சமயம் நடைபெற உள்ளதாகவும். இது இறைவனின் நீயாயத் தீர்ப்பு அந்த நாட்டின் மீது இறங்க உள்ளதற்கான முன்அறிவிப்பாக இது இருக்கும் என தீர்க்க தரிசனம் இங்கு கூறுகிறது.


மக்களால் நான், மக்களுக்காக நான்  என்ற தாரக மந்திரத்தின் உண்மைகள் சிறைச்சாலையிலிருந்து வெளிவர உள்ளதாகவும், தமிழக அரசியலில் இது பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று முதல் தீர்க்க தரிசனப் பகுதிகளில் இடம்பெறும் செய்திக் குறிப்புகள் நமக்கு சில உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுவதாக அமைய உள்ளது.


நாடு முழுவதும் பல அபாயகரமான நிகழ்வுகள் ஆலயங்களில் நடக்க உள்ளதாகவும், இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்து கொண்டே இருக்கும் என்று தீர்க்க தரிசனச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


காவேரி ஆற்றின் கரை உடைந்து பல துக்க நிகழ்வுகள் நடக்க உள்ளதாகவும், அது அந்த மாநிலத்தின் மீது இறைவன் வழங்கும் நீயாயத் தீர்ப்பாக அமைய உள்ளதாக சத்திய யுக தீர்க்க தரிசனப் பகுதியானது இங்கு கூறும் ஒரு உண்மைக் கூற்றாகும்.


மாற்றான் ஒருவனின் அம்பலம் ஒரு ஆன்மீகத்தலத்தில் வெட்ட வெளிச்சமாகும் என்றும், இது தமிழகத்திற்கு ஒரு அவப்பெயராக தற்போது அமைய உள்ளதாக தீர்க்க தரிசனங்கள் தெரிவிக்கின்றன.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் வெளிவந்த 7-ம் தீர்க்க தரிசனத்தை மக்கள் நினைவில் கொள்ள வேண்டுமென தீர்க்க தரிசனப் பகுதியானது நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.



தமிழகத்திற்கு ஒரு மாபெரும் புயல் ஒன்று தற்போது ஏற்பட உள்ளதாகவும், அது பல பலத்த சேதங்களை ஏற்படுத்த உள்ளதாகவும், சத்திய யுக தீர்க்க தரிசனத்தின் முதல் பகுதி நமக்கு தெரிவிக்கும் உண்மை நிகழ்வாகும்.


காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை படைக்க இறைவனின் சேனைகள் யாவும் வானத்திலிருந்து இறங்க உள்ளதாகவும், இது உலகம் முழுவதும் பரந்து நடக்க உள்ளதாகவும் செய்திக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.


குமரிக்கண்டம் தற்போது நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அங்கு உருவாகும்  பெரும்புயலால் மக்கள் பலத்த சேதங்களை காண்பார்கள் என்றும், இது வரலாற்றில் இடம்பெற உள்ளதாக சத்தியயுக  தீர்க்க தரிசனப் பகுதியில் இடம்பெறும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


ஐரோப்பா கண்டம் முழுவதும் பல பயங்கரவாத செயல்கள் நடைபெற இருப்பதாகவும், அதன் பேரிழப்புகளை கண்டு உலக மக்கள் அச்சம் அடைவார்கள் என்று முதலாம் தீர்க்க தரிசனப் பகுதிகள் நமக்கு சில குறிப்புகளை தருகின்றன.


தேசத்தந்தை வாழ்ந்த ஊரிலிருந்து வெளிவரும் ஒரு குழு நாட்டின் பெரும் மதிப்பை பற்றி குறை கூறுவார்கள் என்றும், அச்சமயத்தில் “ஆன்மீக புரட்சி“ ஒன்று இந்தியாவில் தலைவிரிக்க ஆரம்பிக்கும் என்றும், அப்பொழுது இந்திய தேசத்தின் வடமாநில எல்லையில் இறைவன் சார்ந்த ஒரு அதிசய நிகழ்வு நடக்கும் என்றும், அது “சத்திய யுகத்தின்“ நிகழ்காலத்தை சுட்டிக் காட்டுவதாக அமையும் என்று தீர்க்க தரிசனங்கள் மெய்பட கூறுகின்றன.

உண்மைகளின் தோற்றம் இனி வெளிச்சமிட ஆரம்பித்து விட்டதாகவும், அவை சத்திய யுகத்தின் நிகழ்வுகளை மக்களுக்கு படம் பிடித்து காட்டுவதாக அமையும் என்றும், அதுவே உண்மையின் உண்மையாக மக்கள் மனதில் நிச்சயம் வலம் வரும்.

வாருங்கள் ஒருங்கினணந்து இறை வருகைக்காக காத்திருப்போம். உலகம் முழுவதும் இறை ஆட்சி வருகிறது. அதுவே “சத்திய யுகம்“ என்பதை அறிவோம்.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

மகாபாரதம் பாகம் - 3...


யார் கிருஷ்ணன், யார் கெளரவர்கள்..?












கன்னட பலிஜா ஈ.வே. ராவின் திருமணத்தை எதிர்த்த அண்ணாதுரை...


ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இரண்டாவது திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாதுரை மிக முக்கியமானவர்.

இந்த திருமணம் தங்களுடைய இயக்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்ட திருமணமாகும் என்று கருதிய காரணத்தாலேயே அண்ணாதுரை அதைக் கடுமையாக எதிர்த்தார். ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திருமணத்தை எதிர்த்து அண்ணாத்துரை எழுதிய கட்டுரையில் அந்தத் திருமணம் எப்படி தங்கள் கொள்கைக்கு முரண்பட்டது என்று கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை நழுவலை தோலுரித்துக் காட்டுகிறார்.

இதோ அந்தக் கட்டுரை.

சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.

இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் - இல்லை - அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார்.

இந்தத் திருமதிக்கு வயது 26.

அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர்.

பெரியாருக்கு வயது 72.

மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்..

அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான்.

இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.

பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் - நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.

பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் - வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது - எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே - பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா - காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”எம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.

சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே - கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே1 பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக்கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் - கதறிக்கொண்டேயிருக்கிறோம் - கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் - சேதி தெரிந்தது முதல்.

வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண!

வேதனைப்படுகிறோம் தனிமையிலே!

ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் - துடிக்கிறோம் -நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால்.

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் - எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார் - நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!

இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்!

கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு.

அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்.

புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் - பதிவுத் திருமணம்!

இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணங்கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் - வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் - கேட்டோம் - களித்தோம்!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.

அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா?
என்று உலகம் கேட்கிறது.

அன்புள்ள
சி. என். அண்ணாதுரை
(திராவிட நாடு 3-7-49)...

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடியில் மருத்துவ மாணவிகள்..


இனிதே தொடங்கியது காவேரி உரிமைகாண போராட்டம். இடம் வடுவூர் பேருந்து நிலையம்...


தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார் - பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன்சாமி...


காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான் -  சுப்ரபிமணியன்சாமி...

அனைத்து ஆண்ட்டி இந்தியன் சார்பாக பாஜக மோடிக்கு..... மோடி தின வாழ்த்துக்கள்...


இங்கு பெண் சுதந்திரம் என்பது தவறாக கற்பிக்கப்படுகிறது...


ஆண்களுக்கு நிகராக வளர்வது அல்ல பெண்சுதந்திரம், பெண்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்து அனைத்து பெண்களும் சமமாக இருப்பதே பெண் சுதந்திரம்..

இங்கு ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று எதுவுமில்லை..

உலக வல்லாதிக்கம் நம்மை அடிமையாக வைத்திருப்பதற்காக இயற்கையை நமக்கு எதிராக திருப்பிவிடப் பட்டதே இந்த ஆண், பெண் என்ற வித்தியாசம்..

ஏனெனில் இங்கு இயற்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் இயற்கையான வேலையை கொடுத்துள்ளது..

இயற்கையை சிதறடிப்பதே உலக வல்லாதிக்கத்தின் ஆகச்சிறந்த வேலை..

காவிரி சிக்கலில் 1974இலிருந்து திமுகவின் பங்கு...


சுயம் அறிந்து செயல்படு...


தமிழா விழித்து கொள்...


சென்னை ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நீர்நிலைகளை நாசமாக்கி மக்கள் கேன்சர் போன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றார்கள்.

அதனால் அங்கே உள்ள தொழிற்சாலைகளையும் மூட வேண்டும். அந்த பகுதியில் வாழும் பல லட்சம் பேர்களின் உயிர் போராட்டம் இது...

இனிய முட்டாள்கள் தினம் தமிழர்களே.. சிந்திப்போம்...


ஏப்ரல் 1இல் திறக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி - தமிழக மக்கள் தின வாழ்த்துக்கள்...


அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கை, மலேசியா, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை IndiaBetraysTamilnadu ட்விட்டர் பரப்புரையில் கலந்துகொள்ள அழைக்கிறோம்...


பரப்புரை நாள், நேரம் - இன்று  தமிழ்நாட்டு நேரம் காலை 9 மணி முதல், 24 மணி நேரத்துக்கு.

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு.
எல்லாத் திசைகளிலும் நதிநீர் தகராறு.

#IndiaBetraysTamilnadu

மனமிருந்திருந்தால் மார்க்கம் இருந்திருக்கும்.

முப்பது ஆண்டு காலமாக காவிரி பிரச்சினையை தில்லிப் பேரரசால்
ஏன் தீர்க்கமுடியவில்லை. தமிழர் விரோத போக்கே காரணமா?

#IndiaBetraysTamilnadu

வரியைக் கொடுத்தோம் வாரிக் கொடுத்தோம்.

வஞ்சித்தாய் எங்களை, விழிப்புற்றோம் நாங்கள்.

#IndiaBetraysTamilnadu

வடவர் ‘நம்மவரும் இல்லை, நல்லவரும் இல்லை’.

#IndiaBetraysTamilnad

நதியில் சதி – இது இந்திய விதி.

#IndiaBetraysTamilnadu

உன்னால் எங்களுக்கு என்ன லாபம்?
பீடித்தது எங்களை தில்லியின் சாபம்.

#IndiaBetraysTamilnadu

காவிரி மேலாண்மை வாரியம்,
அமைக்க மறுக்குது ஆரியம்.

#IndiaBetraysTamilnadu

மனமிருந்திருந்தால் மார்க்கம் இருந்திருக்கும்.

முப்பது ஆண்டு காலமாக காவிரி பிரச்சினையை தில்லிப் பேரரசால்
ஏன் தீர்க்கமுடியவில்லை. தமிழர் விரோத போக்கே காரணமா?

#IndiaBetraysTamilnadu

உங்கள் தேசிய மையநீரோட்டம்
காவிரியில் மட்டும் பாயாதது ஏன்?

#IndiaBetraysTamilnadu

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடிகளை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்...


உலகத்திலே கடலுக்கு பாதுகாப்பு போட்டு கொள்ளை காரன்களை தப்பிக்கவிடும் ஒரே துறை.. தமிழக காவல்துறை தான்...


காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் மெரினா கடற்கரை. 1000 போலீசார் குவிப்பு...

தமிழன் வரி பணத்தில் வயிறு வளர்க்கும் பிச்சைக்கார டிஜிட்டல் இந்தியாவே...


மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களைப் பிடிக்க குதிரை மேல் ஏறி போலீஸார் துரத்த அது கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த காமெடி நடந்துள்ளது...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்ட காலக்கெடு முடிந்த பின்னர் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு எழுச்சி போல் மீண்டும் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் பாதுகாப்பு மெரினாவில் அதிகப்படுத்தப்பட்டது.

ஆனாலும் சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்களுடன் போராட்டக்காரர்களும் ஊடுருவி வந்தனர். பின்னர் கடல் நீர் அருகே வரிசையாக நின்று பதாகைகள் ஏந்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோஷமிட்டனர்.

இதை முகநூலில் பலரும் ஷேர் செய்ததால் அது காட்டுத்தீயாய் பரவியது. இந்நிலையில் வெளியே சர்வீஸ் சாலையில் இருந்த போலீஸாருக்கு இந்த தகவல் தெரிந்து வேக வேகமாக மணற்பரப்பில் போராடும் இளைஞர்களைப் பிடிக்க ஓடி வந்தனர்.

சில போலீஸாரால் ஓட முடியவில்லை. போராட்டக்காரர்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள வாடகை குதிரைகளின் மீது ஏறி போராட்டக்காரர்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குதிரைக்காரர்களை அழைத்து குதிரை மேல் ஏற்றி கடல் அருகில் வேகமாக கொண்டு போ என்று கூறியுள்ளனர். அதற்கு குதிரை ஓட்டுபவர்கள் “சார் குதிரை ஒரு வட்டம் அடித்து பழக்கப்பட்டது. அதைத்தாண்டி போகாது” என்று கூறியுள்ளனர்.

அதிகாரி சொல்லும் போது மறுத்து பேசுகிறாயா டூ வாட் ஐ ஸே என்று கூறி குதிரையில் ஏறி போராட்டக்காரர்களை பிடிக்கக் கிளம்பியுள்ளனர். ஆனால் அது பழக்கப்பட்ட குதிரை என்பதால் ஒரு சுற்று சுற்றிவிட்டு கிளம்பிய இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டது. குதிரைக்கு காவிரி மேலாண்மை வாரியம் தெரியுமா? காவலர்களைப் பற்றித் தெரியுமா? யார் ஏறினாலும் ஒரு ரவுண்டு அவ்வளவுதான்.

அதன்படி கிளம்பிய இடத்திற்கே திரும்பிய குதிரையை மீண்டும் கடல் அருகே கொண்டு செல்ல போலீஸார் கேட்ட போது சார் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிட்டு இங்குதான் வரும் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள் இறங்கி நடந்து போய் பிடியுங்கள் என்று குதிரைக்காரர்கள் கூறியுள்ளனர்.

வடிவேல் காமெடி போல் நம்ம நிலை ஆகி விட்டதே என்று போலீஸாரும் மூச்சு வாங்க போராட்டக்காரர்களை பிடிக்க ஓடினர்...

உன் வளம் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது, இனி கொள்ளையடிக்க திட்டமும் போடப்பட்டு கொண்டு இருக்கிறது... விழித்தெழு தோழா...


வைகோ நாயுடு ஒரு திருந்தாத ஜென்மம்...


2014ல் பாஜக வுடன் கூட்டணி வைத்த போது மோடியை மற்ற கூட்டணி தலைவர்கள் புகழ்ந்ததை விட அதிகமா புகழ்ந்து கொள்கை பிறப்பு செயலராக மாறினார்..

2016ல் விஜயகாந்த் உடன் சேர்ந்த உடன் மக்கள் நல கூட்டணி என்ற பேரை கேப்டன் கூட்டணி என்று மற்ற தலைவர்களை கேட்காமல் அறிவித்து அதிர்ச்சி தந்தார்...

இப்போது ஸ்டாலின் உடன் சேர்ந்த பின் ஈழப்படுகொலை எல்லாம் மறந்து சொம்பு தூக்க ஆரம்பித்தாச்சு...

தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் போராட்டங்களுக்கு மூல காரணமே ஸ்டாலினும் கருணாநிதியும் தான்...

அவர்கள் போட்ட கையெழுத்திகு தான் இன்று விஸ்வரூபம் எடுத்து இருக்கு...

இது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது...


தமிழர்கள் புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?


நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன.

நீனும் அதை போலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே, வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்...

பாஜக பினாமி ஊழல் அடிமை அதிமுக அரசே...


அனுமதிக்கும் இடத்தில் தான் போராட்டம் பன்னவேண்டுமென்றால் வெள்ளைக்காரனே எங்களை ஆட்சி செய்திருக்கலாமே ?


தமிழா.. மக்கள் விரோத துறையான காவல்துறையை தனிமை படுத்துங்கள்...

அவர்களின் குடும்பத்தையும் ஒட்டு மொத்தமாக தனிமை படுத்துங்கள்..

பிறகு தெரியும் மக்களின் சக்தி என்னவென்று...

மக்கள் விரோத துறை எனும் காவல்துறையே...


ஏப்ரல் முட்டாள்கள் நாள்...


ஏப்ரல் 1 முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வரலாறு..

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது..

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.

பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது.

பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள்.

இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு.

அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது...

இந்திய உளவுத்துறை வேலையை தொடங்கி விட்டது...


முடிஞ்சா கை வைங்க நாளை முதல் உரிமை மீட்பு போராட்டம் நடக்கும்...


தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக நமது உரிமைகளை மீட்க கூடுவோம்...

ஸ்டெர்லைட் ஆலையிடம் வாங்கிய கூலிக்கு மாமா வேலை பார்க்கும் அதிமுக அரசு...


கடையடைப்பிற்கு ஆதரவு அதிகரிக்கிறது...


ஏப்ரல் 3ந் தேதியன்று நடக்கவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் முழு ஆதரவு...

அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்து கடைகள் அடைக்கபட்டிருக்கும் என்றும், அத்யவசிய மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுரை...