25/11/2018

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு....


இதை நாம் முறையாகப் பின்பற்றினால் வைத்தியரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை...

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ச(ஜ)வ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்...

உலகத்திலேயே மூத்த மொழி தமிழ்.. மூத்த குடி தமிழன்.. அயல்கிரக வாசிகளின் ஆதாரம் இதோ…


பிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர்.

இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது.

மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர்.

உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது.

இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர்.

இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார்..

அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார்.

பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார்.

தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்..

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார்..

அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல..

அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது..

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ..

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்..

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்..

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்..

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு (தெலுங்கு), தா (இலத்தின்)].

5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல் (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை).

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்து கொண்டிருத்தல். [எ.கா: இல் (தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்)].

13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன].

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத் தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்...

பாஜக தீவிரவாதிகள் அரசு பேருந்துகளை உடைத்துள்ளனர்... இதற்கு அடிமை அதிமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது...


கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்...


பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர். முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி - அகத்தியர் குணபாடம்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்து விடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய:

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு:

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு:

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு:

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கி விடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்...

தன் சொந்த மண்ணில் ஒருத்தன் தன் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழக்கும் போது அங்கு அவன் மறைமுகமாக அழிக்கப்படுகிறான் ( இனப்படுகொலை ) என்று அர்த்தம்...


ஆனால் அதைத்தான் இங்கு வளர்ச்சி என கூறுகிறார்கள் படித்த அறிவாளிகள்..

சென்னை நண்பர்களே இதை புரிந்துக்கொள்ள முயலுங்கள்..

இது தமிழர்கள் அனைவருக்கும் பொருந்தும்...

கொள்ளைபோன கொள்ளேகால்...


தமிழகத்தின் வடக்கெல்லை என்றாலே எல்லாரும் வெங்கடத்தைக் காட்டுவர். அது வடகிழக்கு எல்லை மட்டுமே. வட மத்திய எல்லை என்பது சங்ககாலத்தில் காடு. (பெரும்பாலை என்றும் குறிக்கப்படும்).

அக்காடுகளில் சிறு சிறு தமிழ் நாடுகள் இருந்தன. (அவர்கள் தற்போது பழங்குடிகளாக, தனி மொழி பேசும் இனங்களாகத் திரிந்துவிட்டனர்).

பிறகு காடுகளுக்கு அந்தப் பக்கம் கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.

பிறகு தமிழர்கள் கன்னடரை விரட்டிவிட்டு தாம் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.

பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.

இன்றும் தென் கர்நாடகத்தில் முக்கிய நகரங்களில் தமிழர் கணிசமாக உண்டு.

இதனாலேயே இப்பகுதி பற்றிய இலக்கியச் சான்றுகள் தமிழருக்கு சாதகமாகவும்,

முதல் குடியேற்ற சான்றுகள் கன்னடருக்கு சாதகமாகவும்,

கோவில் கல்வெட்டுகள் மற்றும் நகரங்களின் பெயர்கள் மற்றும் மையநகர நிலவுடைமை தமிழருக்கு சாதகமாகவும்,

புறநகர் நிலவுடைமை மற்றும் தற்போதைய மக்கட்தொகைப் பெரும்பான்மை கன்னடவருக்கு சாதகமாகவும் உள்ளன.

இவ்வாறாக வடக்கெல்லையில் மத்திய பகுதி இழுபறியில் உள்ளது.

கர்நாடகா அமைந்த பிறகு அப்பகுதி தமிழ்க் கல்வெட்டுகளை அழித்தும் மறைத்தும் வந்துள்ளது.

இதனால் நமக்கான சான்றுகள் அழிந்துவிட்டன.

நம்மிடம் இருக்கும் மண்மீட்பு சான்றுகள் பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில் வெளிக்கொணரப் பட்டவையே ஆகும்.

இத்தோடு கன்னடருக்கு சாதகமான சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது.

கல்வெட்டு தலைமையகம் மற்றும் வைப்பகம் மைசூரிலேயே இருப்பது இதற்கு காரணம்.

தமிழகதிற்கு தனியே கல்வெட்டு தலைமையகமும் வைப்பகமும் தராத ஹிந்திய நடுவணரசு தமிழகத்து அகழ்வாராய்ச்சி துறைக்கு தமிழரை தலைவராக நியமிக்காமலும் நிதி ஒதுக்காமலும் காலி பணியிடங்களை நிரப்பாமலும் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்துவருகிறது.

வரலாற்றில் நமது பகுதியாக இருந்த இடங்கள் நம் கையை விட்டு போனதைக்கூட தாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழர் 90% வாழ்ந்த சில பகுதிகளும் அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டன.

ஆந்திராவிடம் உள்ள இன்றைய சித்தூர் தென்பாதி, கேரளாவிடம் உள்ள பாலக்காடு கிழக்குபாதி போல 1956 இல் அன்றைய  பெரும்பான்மை தமிழர் வசம் இருந்தும் அநியாயமாக கர்நாடகாவுக்கு கொடுக்கப்பட்டது சாம்ராஜ்நகர் கிழக்கான கொள்ளேகாலம்.

தமிழர் செறிந்து வாழ்ந்த இப்பகுதிகளை அண்டை மாநிலங்கள் தமது எல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் இதேபோல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 95% தமிழர் வாழ்ந்த இடுக்கி மாவட்டம் கேரளாவிலேயே இருக்கிறது.

தமிழர் நடத்திய மண்மீட்பு போராட்டங்கள் கன்னியாகுமரி மற்றும் திருப்பதி நோக்கியே இருந்தன.

இரண்டிலும் பெரும்பாடு பட்டு பாதி வெற்றியே அடைந்தோம்.

கன்னியாகுமரி போராட்டத்தில் கேட்ட 9 தாலுகாக்களில் நான்கரை தாலுகாக்கள் கிடைத்தன.

திருப்பதி வரை கிடைக்காவிட்டாலும் திருத்தணி வரை கிடைத்தது.

கொள்ளேகால் பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.

பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த,

வீரப்பனார் பிறந்த பகுதியான இது கன்னடரிடம் உள்ளது...

மருத்துவ மாப்பியா உண்மைகள்...


லாபத்துக்காக மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள்,
லாபத்துக்காக மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள், எப்படி மக்களை நடைப்பிணங்களாக மாற்றுகிறார்கள் என்பதை தோலுரித்துள்ளார் டாக்டர் ஜான் ரென்ஜென்.

Pharmaceutical companies that target children...

https://www.vikatan.com/news/health/139934-drug-companies-are-targeting-kids-with-comic.html

https://www.vikatan.com/news/health/139934-drug-companies-are-targeting-kids-with-comic.html

தமிழர்களின் தாம்பூலம் தரிப்பதில் உள்ள உண்மைகள்...


பழந்தமிழர் மரம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விசயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோசங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, சா(ஜா)திபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விசயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது...

தன்னம்பிக்கையும் - வெற்றியும் - ஆரோக்கியமும்...


உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில் போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது நியதி.

இதில் தன்னம்பிக்கை ஒன்றுதான் நம்மை வாழவைக்கும். உறவு பணம் பலம் எல்லாம் இரண்டாம் பட்சமே .

உன்னுள் இருக்கும் உன்னை நம்பினால் உன்னாலும் வெற்றிபெற முடியும்.

நான் ஜெயிப்பேன் என்ற சொல்லும். என்னால் முடியாது என்ற சொல்லும் உன்னிடம் இருந்து தான் வருகிறது . உன் மனம் உறுதி பட்டால் உடல் தன்னால் ஒத்துழைக்கப்போகிறது பிறகு வெற்றி நிச்சயம்.

நீ எதை கண்டும் பயந்து போகாதே . உன்னை சோர்வடைய எப்பொழுதும் அனுமதிக்காதே.

உனக்குள் ஒரு லட்சியத்தை வை அதற்க்காக பாடுபடு . பல தடைகள் வரத்தான் செய்யும் தடைகளை உடைத்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை தடைகளை எளிதாக தாண்டிச்செல் .முன்னேறு முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு.

ஒரு வெற்றிகிடைத்தால் அடுத்த வெற்றிக்கு உடனே ஆயுத்தமாகிவிடு.

யாராவது தனக்கு உதவுவார்களா என எதிர்பார்க்காதே . நீச்சல் தெறியாதவன் தண்ணீரில் விழுந்தால் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன முயற்ச்சி செய்வானோ அதை நீ செய்.

மற்றவர் உண்னை வெற்றிக்கொள்ள பார்க்கிறார்கள் நீ அவர்களை முந்திச்செல்.

உன் தன்னம்பிக்கையை விட சிறந்த தோழன் யாருமே இல்லை.  தன்னம்பிக்கை இருந்தால் தான் இறைசக்தியும் வேலைசெய்யும் என்பதை நினைத்து பார்.  தன்னம்பிக்கை சக்தி எவ்வளவு வலிமையானது என்று உனக்கே புரியும்.

மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையை வை அது ஆயிரமாயிரம் தைரியத்தை உன்னுள் சேர்க்கும் . முயன்று பார் தெறியும் . முடங்கிவிடாதே.

உன் இறப்பு இப்போதைக்கு இல்லை அதுவரையில் வாழத்தான் போகிறாய் தன்னம்பிக்கையின் துனண கொண்டு வெற்றியை பதிவிட்டுச் செல்லேன்.

வெறுமனே சாவது ஒரு வாழ்க்கையா?  வாழ்க்கையை தோல்வியோடு முடிப்பதை விட கடைசி வரை வெற்றிக்காக போராடி மடிவதே மேல்.  மடிவது குற்றமல்ல. அது போர்க்களமாக இருக்கட்டும்...

உலகின் மிக பெரிய மலர் rafflesia...


இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மலைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது..

இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது..

ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு..

அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்...

இப்பூவின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும்..

முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை இருக்கும்..

5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக் கொள்ள முடியும்..

இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு..

இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன..

மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ இதன் வேர்கள் நிலை கொள்கின்றன..

மற்ற தாவரங்களின் ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன..

இத்தாவரம் இறந்த பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும்..


யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும் போது, காலில் ஒட்டிக் கொள்ளும் விதைகள் இடம் பெயர்கின்றன..

ஒட்டியுள்ள வேண்டா பொருளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும் போது, இவ்விதைகள் வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத் தொடங்குகின்றன.

அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்...

திராவிடன் நன்றி கேட்டவன்... தமிழா இனியாவது விழித்துக்கொள்...


இலுமினாட்டி - இப்படிக்கு ரோஸ்...


எல்லாருக்கும் ஸ்டார் விஜய் தொலைக் காட்சியில் பணியாற்றிய இப்படிக்கு ரோஸ் தெரியும் என நம்புகிறேன்..

இவங்க ஓர் திருநங்கை. விஜய் டிவியால் வெளியேற்றப்பட்ட ரோஸ் விஜய் டிவியின் உண்மையை தோல் உரிக்கிறார்..

மேலும் இதைப்பற்றி ஆராய்ந்த அவர்கள் ஸ்டார் குரூப்ஸ் பற்றி பேச ஆரம்பிக்கிறார்..

நமக்கு தெரியும் ஸ்டார் பல தொலைக் காட்சிகளை தருகிறது.

விஜய் டீவி எவ்வாறு தமிழகத்தில் இளைஞர்களின் மனநிலை சீரழித்ததில் முதல் பங்கு வகிக்கிறது என்பதை கூறுகிறார்.

பின்பு இலுமிணாட்டி விஜய் டீவி தொடர்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார்..

ஸ்டார் குரூப்ஸ் அமைப்பானது ஃபாக்ஸ் நெட்வொர்க்கின் கீழ் இயங்குகிறது..

இதன் தலைவர் ரூபர்ட் முர்டாக்..

இவனுக்கு கீழ் மேலும் பல தொலைக்காட்சிகள் இயங்குகின்றன.

இது அமெரிக்காவில் அமைந்துள்ளது.

இதன் பிறகு ரூபர்ட் முர்டாக் உலக ராயல் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டவன்.
பின் உலக நிறுவனங்களின் தந்திரங்களையும் வெளிப்படுத்துகிறார்.

உயர் மட்டத்தில் உள்ள பார்ப்பனர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இயேசு சபை குருக்கள் பற்றியும் கூறுகிறார்..

(குறிப்பு: ரோஸ் முகப்பூச்சி செய்ய வில்லை)

https://www.youtube.com/watch?v=2Br74oTjVGA

சின்ன வீடியோ தான் பாருங்க. விழித்தெழுங்கள்..

நாம் விருப்பபட்டு எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. எப்படி அடுத்த பதிவில் பார்ப்போம்...

ஏன் தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும்..?


திமுக தெலுங்கர் கருணாநிதியும் தமிழின அழிப்பும் : மறைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...


(16.5.96)கர்நாடகா தேவ கௌடாவை தலைமையமைச்சராக்க எப்படி ஆதரிக்கலாம் என்ற பா.ம.க வின் கேள்விக்கு..

திமுக தலைவர் கருணாநிதி தேவ கௌடா தென்னாட்டுக்காரர் பின்தங்கிய குமூகத்தைச் சேர்ந்தவர் என பாமக’வுக்கு தெரியவில்லை போலும் என்று பதில் அளித்துள்ளார்,

அதாவது தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதுனு பாலத்துல குத்தவச்சு உட்கார்ந்திருந்த, தேவ கௌடாவை தென்னாடு பின்தங்கிய குமூகம் என சப்பைக்கட்டு கட்டி ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வாயடைத்துள்ளார் கருணாநிதி.

இவருடைய ஆட்சிக்காலத்தில் தான்(18.5.96) காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கித்தரனும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்க..


காவிரி வறண்டு கிடக்கிறது மழைப்பெய்து நீர்மட்டம் ஏறியவுடன் தண்ணீர் வாங்கித் தருகிறேன் என்று மடையடைக்கும் சமயத்தில்,

காவிரியின் பிறப்பிடமான குடகில் நாளெல்லாம் மழைப்பெய்து அணை நிரம்பியிருந்தது..

இவ்வாறாக தான் அனைத்து விடயங்களிலும் திமுக கருணாநிதியின்  செயல்பாடு இருந்துள்ளது...

வெத்து பலூனுனா கூட பரவாயில்லை ஓட்டை பலூனை எவ்வளவு நாள் தான் டா ஊதுவீங்க...?


மாந்திரீகம்...


நம் பகைபவரால் நம்மை வீழ்த்த மறைமுகமாக பயன்படுத்தபடுபவை...

பில்லி - ஒருவரை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல் ரீதியிலும், ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயல்லாற்ற வைப்பது.

சூனியம் - சூனியம் என்றால் வெறுமை என்று அர்த்தம். அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்ப்பாட்டிலும்,  பொருளாதார  ரீதியிலும் ஒன்றும் இல்லாதவன் ஆக்குவது.

ஏவல் - எமது விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களை செயற்பட வைப்பது.

செய்வினை - தனது சொந்த வினைப்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரிக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி அவனை அழிந்து போக வைப்பது ஆகும்.

வசியம் - நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல். (அட நமக்கெல்லாம் இது ரொம்ப தேவைப்படுதே ).

மோகனம் - நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல். (அட இதுவும் தேவைப்படுதே ).

ஆக்ருஷனம் - எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். (அட இதுவும் நல்லா இருக்கே காந்தம் மாதிரி கவருமாம் ).

ஸ்தம்பனம் - தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

பேதனம் - கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

வித்வேஷனம் - ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

உச்சாடனம் - எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

மாரணம் - மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )...

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து, 15 பேர் பலி...


மதிய உணவு திட்ட ஊழல்: அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்: வருமான வரித்துறை தகவல்...


சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த ஜுலை மாதம் நடத்திய ரெய்டில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கு அந்த நிறுவனம் ரூ.2,400 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாக வருமான வரித்துறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவுத்திட்டம்...

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை விநியோகம் செய்து வருகிறது.

இதுபோல், சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவையும் ஒப்பந்த அடிப்படையில் விநியோகிக்கிறது. இவை தவிர, பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

வரிஏய்ப்பு புகார், சோதனை...

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை விநியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஜூலை 5-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான குடோன்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதுபோல், திருச்செங்கோடு வட்டூரில் உள்ள நிறுவன உரிமையாளர் வீடு, நிறுவன ஆடிட்டர்கள் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில், ரூ.17 கோடி வரை பணம், 10 கிலோ தங்க நகைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சொத்து ஆவணங்கள், சந்தேகத்துக்குரிய பினாமிகளின் பெயர்களில் சொத்துக்கள், ஆவணங்கள், பென்டிரைவ்கள், உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்பட்டது.

வருமான வரித்துறை கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்பட்டது.

ஆவணங்கள் பறிமுதல்...

இந்நிலையில் வருமானவரித்துறை கைப்பற்றிச் சென்ற ஆவணங்களில் பென் டிரைவ், ஆணவங்களில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், முக்கிய பதவியில் உள்ள அரசியல்வாதிகள், மூத்த உயர் அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

ரூ.2,400 கோடி லஞ்சம்...

வருமானவரித்துறையின் மிக உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், “ தமிழக அரசின் சமூகநலத்துறையின் கீழ் வரும் சத்துணவுத் திட்டத்துக்கு பாமாயில், பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்துள்ளதில் நடந்த ஊழல் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடத்தினோம்.

அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கடந்த சில ஆண்டுகளில் அந்த நிறுவனம் மூத்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.

விரைவில் சம்மன்...

அந்த அதிகாரிகளுக்குச் சம்மன் கொடுக்கும் பணியை வருமானவரித்துறை தொடங்கிவிட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும், சந்தேகத்துக்கு உரிய வகையில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகள், ஆவணங்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்வது குறித்த திட்டங்கள் போன்றவையும் அந்த ஆவணங்களில் உள்ளன.

பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் பலருக்கும், துறையில் உள்ள பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கிறிஸ்டி நிறுவனம் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வந்துள்ளது. இவை பெரும்பாலும் அடையாள வார்த்தைகளில் இருக்கின்றன.

மேலும், முக்கிய அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் பெயரும் அந்தஆவணங்களில் இடம் பெற்றுள்ளது. பலகோடிக்கணக்கான ரூபாய்கள் ஆன்-லைன் மூலம் அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.2,400 கோடி இருக்கும்” என்று பெயர்வெளியிட விரும்பாத அந்த விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

விசாரணை தீவிரம்...

வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், சந்தேகத்துக்கு உரிய அரசு உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கிறிஸ்டி நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து வருமானவரித்துறை விசாரித்து வருகின்றனர். தங்களுக்கு டெண்டர் அளிப்பதற்காகவா அல்லது பில் தொகையை விரைவாக அளிப்பதற்காக என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த ஊழல் தொடர்பான தகவல்கள், விவரங்கள் குறித்து தமிழக அரசுக்கும், மற்ற மத்திய விசாரணை முகமைகளுக்கும் வருமான வரித்துறை தெரிவித்து கடிதம் எழுத உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வரிஏய்ப்பு...

வருமானவரி தாக்கல் செய்வதில் கோடிக்கணக்கில் வருமானத்தை மறைத்து ரிட்டன்களை கிறிஸ்டி நிறுவனம் தாக்கல் செய்துள்ளது என்றும், நாமக்கல்லில் உள்ள தேசிய வங்கிகளில் பெற்ற வங்கிக்கடனுக்கும் அதற்கான ஆவணங்களுக்கும் முரண்பாடு இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

வங்கிக்கணக்குகள் முடக்கம்...

வருமானவரித்துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மேலும் கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 12-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் நடத்தியதாகச் சந்தேகப்படுகிறோம். இதன் மூலம் பணத்தை அந்தப் போலி நிறுவனங்களில் டெபாசிட் செய்திருக்கிறது. அந்த நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளை முட்கிக இருக்கிறோம்.

வருமானவரித்துறையின் நடவடிக்கைக்குத் தடை கேட்டு, நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் எனத் தெரிவித்தனர்...

மக்களின் வரியும் வாக்கும் கேட்டு வாங்கும் அரசு அவர்களின் வலிக்கு செவிசாய்காமல் இருப்பதன் காரணம் என்ன? மக்கள் பணம் மக்களுக்கே என்பதை மறந்தது ஏன்?


ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..


எதைச் செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால் தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வாய்கிழிய பேசுபவர்களிடம், வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள்.

அப்படி இருக்கக்கூடாது. என்ன நோய்க்கு, என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக முதல்-உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது.. நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்...

ஆஸ்த்துமா:

கடினமான மூச்சு, சத்தத்துடன் சுவாசம் விடுதல். மூச்சிழப்பு ஏற்படுதல், இருமல் வரலாம். மார்பு இருக்கமடைந்து சுவாசம் கடினமாதல், பேச முடியாமை, உதடு, முகம்-நீல நிறமாதல்.

சிகிச்சை:

சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீது முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். அவரிடம் உறிஞ்சும் மருந்து இருந்தால் ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி-வாயில் வைத்த 3 அல்லது 4 முறை உள்ளே உறியச் சொல்லவும்.  மருந்து ஏதும் இல்லையெனில் அல்லது மேற்சொன்ன முறையில் பலனில்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்..

மின்சாரம் தாக்குதல்:

சுவாசமும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு சுய நினைவு இழத்தல். மின்சாரம் நுழைந்த - வெளிப்பட்ட இடங்களில் தீக்காயங்கள்.

சிகிச்சை:

சுவிட்ச் தெரிந்தால் - அணைத்து விடவும். இல்லையெனில் மரக்கட்டை போன்ற மின்சாரம் புகாத பொருள்கொண்டு மின் இணைப்பிலிருந்து அவரைத் தொடாமல் அப்புறப்படுத்தவும். சுய நினைவு இழந்திருந்தால் - சுவாசமும் ரத்த ஓட்டமும் உள்ளதா? என்று கண்டறிந்து உடனே சி.பி.ஆர். கொடுக்க தயாராக இருக்கவும்.

தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை 10 நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால் மூடி கட்டுப் போடவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

நீரில் மூழ்குதல்:

சுவாசத்தடையும், உடல் குளிர்ந்து போதலாலும் உயிரிழக்க நேரிடும். தக்க பாதுகாப்பு முறைகளை கையாண்டு நீரில் மூழ்கியவரை வெளியில் கொண்டு வரவும். தரையில் இரண்டு கால்களுக்கு இடையில் குப்புற படுக்க வைக்கவும். உங்கள் இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில் தூக்கவும்.

இரண்டு, மூன்று தடவைகள் அவ்வாறு தூக்கி இறக்கினால் நீரும் தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும். பிறகு அவரை மல்லாந்து படுக்க வைத்து, வாய், நாசிதுவாரங்களை சுத்தம் செய்து, சி.பி.ஆர். முறையைக் கையாளவும். அருகில் உள்ளவர்கள் ஈரத்துணிகளை கழற்றி எடுத்து விட்டு உலர்ந்த துணியால் கீழும் மேலும் முழு உடலையும் சுற்றி வைக்கவும்.

மூச்சுக் குழாய் வழியாக நீர் செல்லும்போது அவை பாதிக்கப்பட்டு வீக்கமடைந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பிறகு, சுவாசக் குழாயை அடைத்து தடையை உண்டாக்கும். ஆகவே அவரை மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்தப் பின் சேர்க்க வேண்டும். நீரில் மூழ்கி சுயநினைவு இழந்தவர்கள் அவசியம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும்.

எலும்பு முறிவு:

பாதிக்கப்பட்ட இடத்தில் வலி (முக்கியமாக அசை ஏற்பட்டால்) சில நேரங்களில் உருமாறி, வீக்கமும் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு உண்டாகியிருக்கும். அசைவுகள் பாதிக்கப்பட்டு, எலும்பு அசைந்தால் தாங்க முடியாத வலி உண்டாகும்.

சிகிச்சை :

அசைவு கொடுக்காமல் இருக்கச் சொல்லவும். உடைந்த எலும்புக்கு மேலும் கீழும் உள்ள மூட்டுகள் அசையா வண்ணம் ஆதரவு கொடுத்து கட்டு போடவும். மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும்.

கீழ்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் சிம்புகள் வைத்து கட்டு போடவும். முக்கியமாக இரு கால்களையும் பாதங்களையும் சேர்த்து வைத்து 8 வடிவகட்டு போடவும்.

சுளுக்கும் - சதை பிடிப்பும்:

வலி, மூட்டின் அசைவுகள் குறைந்தும், வீக்கம், ரத்தக்கட்டு ஏற்படும்.

சிகிச்சை:

ஆர்.ஐ.சி.இ. ஆர்-ஓய்வு, ஐ-பனிக்கட்டி, ஈரத்துணி, சி-அழுத்தமான கட்டு, இ-உயர்த்திப் பிடித்தல். பாதிக்கப்பட்ட இடத்திலுள் இருக்கமான ஆடை, காலணிகள் எடுத்து விடவும். அந்த இடத்தின் மீது அதிக பளுவு தாங்கும்படியாக வைக்க வேண்டாம். ஓய்வு கொடுக்க வேண்டும்.

பனிக்கட்டி ஒரு துணியில் சுற்றியோ அல்லது ஈரத் துணியோ வீக்கத்தின் மீது வைத்து இறுகக்கட்டு போடவும். அதிகமாக இறுக்க வேண்டாம். உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும்.

மருத்துவ உதவிக்கு நாடவும். கை, கால் வலிப்பு (காக்காய் வலிப்பு):

கை, கால்கள், உடலும் முறுக்கினால் போல் இருக்கும். குழப்பம், கை கால்கள் வலிப்புடன் அசைந்து காணப்படும், சுவாசம் முரடாக இருக்கும்; பற்களை கடித்துக் கொண்டு சில நேரங்களில் நாக்கும் கடிபட்டு இரத்தம் சேர்ந்து நுரை கலந்த எச்சில் வெளிப்படும்; சுயநினைவு இழந்தும் காணப்படுவார்கள்.

சிகிச்சை:

கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த தலையில் அடிபடாமல் படுக்க வைக்கவும். தலைக்கடியில், கை, கால்கள் அசையும் போது தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்படாமல் இருக்க துணிகளைப் போடவும். அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள் படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவைகளை அப்புறப்படுத்தவும். கை, கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம்.
கழுத்தில் மார்பில் உள்ள துணிகளை தளர்த்தி விடவும். வலி நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து, சுவாசமும் இரத்த ஓட்டமும் இருந்தால் அவர்களை மீட்பு நிலையில் படுக்க வைக்கவும் பற்களுக்கு இடையில் எதையும் வைக்க முயல வேண்டாம்.

பக்கவாதம்:

மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டாலோ அல்லது ரத்தம் அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் பரவி அமுக்குதல் ஏற்படும். முகத்தில் வலுவிழந்த நிலை (சிரிக்க முடியாமை), கை, கால்களில் சோர்வு, நாக்கு குழறுதல்-பேச்சில் குழப்பம், தள்ளாட்டமுடன் நடை, கண்களில் பார்வை பாதிப்பு, தாங்க முடியாத தலைவலி, போன்றவை ஏற்படும்.

சிகிச்சை:

இந்த அறிகுறிகள்- தெரிந்தவுடன்-நேரத்தை குறித்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். வாயில் வரும் எச்சில் போன்றவற்றை துடைத்து விட்டு தலையை உயர்த்தி தலையணை மீது படுக்கவைக்கவும். டோலியில் எடுத்துச் செல்லவும்.

இதயக் கோளாறுகள் மார்பு வலி:

மார்பின் அடிபாகத்தில் பிழிவது போன்ற வலி எடுத்து அது மேல் நோக்கி பரவுது போல் தெரியும்- தாடை- கைகள் வழியாக வலி, நடுக்கம் கைகளில் எடுக்கும். சுவாசமும் கடினமாகும். திடீரென்று வலு விழந்தது போல் தோன்றும். மேல் மூச்சு வாங்கும்.

சிகிச்சை: உடனே உட்கார வைத்து கழுத்து மார்பு, இடுப்பிலுள்ள துணிகளை தளர்ச்சி நிதானமாக ஆழ்ந்த மூச்சு வாங்கும்படி சொல்லவும். தைரியம் சொல்லி ஆசுவாசப்படுத்தவும். அவரிடம் ஏதாவது மாத்திரை இருந்தால் நாக்குக்கு அடியில் வைத்து சாரினை உறிஞ்சும் படி சொல்லவும்.

அல்லது ஆவியாக இரசாயன கலவை இருந்தால் அதனை உறிஞ்சச் சொல்லவும். ஓய்வுக்குப் பின் வலிகுறைந்தால் அவர் செய்து கொண்டிருந்த வேலைகளை நிதானமாக செய்யச் சொல்லவும். மறுபடியும் வலி உண்டானால் மருத்துவரை நாடவும்.

இதயத்தில் திடீரென்று கோளாறு:

அடிப்பாகத்தில் பிழிவது போன்று எடுக்கும் வலி நேரமாக அதிகரித்துக் கொண்டே போகும். இடது தாடை-இடது கை, சில நேரங்களில் வலது பக்கமாக ஓடுவது போல் தோன்றும். மார்பு இறுக்கமடைந்து சுவாசம் விடுவது கடினமாகும். மயக்கமும் தலைசுற்றலும் ஏற்படும். தனக்கு ஏதோ ஆபத்து நிகழ இருக்கென்ற அச்சம் உண்டாகும். முகம் வெளுத்து, உதடுகள் நீலமாக காணப்படும். வழுவிழுந்த, ஒழுங்கீனமான வேகமான நாடி; அதிக அளவு வியர்த்து கொட்டுதல்; காற்றுக்கு கதறுவது போல் ஆழ்ந்த சுவாசம், குழப்பம்-கை, கால், விரல்களிலிருந்து குளிர்ந்து கொண்டே இதயம் நோக்கி வரும். குமட்டல், வாந்தி உண்டாகும் கைகள் நடுங்கும்.

சிகிச்சை:

மருத்துவ ஊர்திக்கு அழைப்பு கொடு; அவரிடம் ஏதாவது மருந்து இருந்தால் உடனே கொடுக்கவும். தைரியம் சொல்லி ஊக்கம் அளிக்கவும் ஓய்வு எடுக்கச் சொல்லவும்.

பின்புறமாக சாய்ந்து உட்கார வைத்து கழுத்து, மார்பில் உள்ள துணிகளை தளர்த்தவும், முட்டியை மடக்கி தொடைகளுக்கு அடியில் தலையணைகளை வைக்கவும். மருந்து ஏதும் இல்லையெனில் ஒரு ஆஸ்பிரின் (300கிராம்) மாத்திரை அவர் நாக்குக்கு அடியில் வைத்து உறிஞ்சி சாரை விழுங்கச் சொல்லவும். ஊர்திக்கு செல்ல நடக்காமல் உட்கார வைத்து எடுத்துச் செல்லவும். ஊர்தியினுள் சாய்ந்து உட்கார்ந்தபடியே அழைத்துச் செல்லவும்.

நாய்கடி:

வெறி நாய் எச்சலில் "ரேபிஸ்'' என்ற மிகச் சிறிய கிருமிகள் மனித நரம்பு மண்டலத்தையும் மூளையினையும் தாக்கி உயிரை போக்கக் கூடிய சக்தி கொண்டது.

சிகிச்சை:

கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த காயங்கள் இருந்தால் அதன் மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவும்.

நாயை கால் நடை மருத்துவமனையில் ஒப்படைத்தால் அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன் மூளையை சோதித்து "ரேபிஸ்'' தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும்.

நாசியிலிருந்து ரத்த ஒழுகல்:

வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல் உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற காரணங்களினால் மூக்கின் முன் பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும்.

சிகிச்சை:

உடனே உட்கார வைத்து தலையை முன்பக்கமாக குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். பேசுவது, விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மூக்கெலும்பின் கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10 நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். மீண்டு ஒழுகல் ஏற்பட்டால் மருத்துவரை நாடவும்.

நீரிழிவு வியாதி :

சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி.

சிகிச்சை:

மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்.

சர்க்கரை குறைந்து விட்டால்:

வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம்.

சிகிச்சை:

உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம்...

மக்களுக்கு உதவுவதில் ஆதாயம் தேடாத ஒரே கட்சி பாமக மட்டும் தான்...


நாதக தான் மாற்றாம்...


உண்மை தான்... திராவிட கட்சி கலரில் ஸ்டிக்கர் ஒட்டும்... நாதக கருப்பு வெள்ளையில் ஸ்டிக்கர் ஒட்டுது....

இப்படி ஸ்டிக்கர் ஒட்டின காசுக்கு மண்ணென்னை வாங்கி கொடுத்திருக்கலாம்....

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இங்கு உள்ளவை வரைபடக்கலை தந்திரமல்ல. வேண்டுமென்றால் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்து தேசங்களில் அவரை தேடிப் பாருங்கள். இயேசு யூதராயிருந்தார். படங்களில் உள்ளபடி, வேறுபட்ட கலாச்சாரங்களும் இனங்களும் பெரும்பாலும் இயேசுவை தங்கள் பைபிளிலிருந்தே சித்தரித்துள்ளனர். இது உலகின் எல்லா தேசங்களுக்கும் இயேசு வந்ததை அடையாளப்படுத்துவதையே காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளாக கிறித்துவம் பெரும்பாலும் ஐரோப்பாவில் இருந்து வந்தது என்பதால், இந்த முக்கிய இரட்சிப்பின் வரலாறு பெரும்பாலும் வெள்ளை ஐரோப்பியர்கள் என சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கலாச்சாரங்கள் தங்கள் சொந்த தோற்றத்தின்படி அவர்களை சித்தரித்து உள்ளனர்.

உண்மையிலேயே அவர் ஒரு கருப்பர்...

மனிதர்கள் மட்டுமே கேள்வியும் கேட்கிறார்கள் பதிலும் தருகிறார்கள் கேள்வியும் அர்த்தமற்றது பதிலும் அர்த்தமற்றது...


மனிதனை தவிர எதுவும் கேள்விகள் கேட்பது கிடையாது பதிலும் தருவது கிடையாது.

இப்பிரபஞ்சத்திற்க்கு நோக்கம் எதுவும் இல்லை அதை விளையாட்டு என்கிறோம்.

இப்பிரபஞ்சத்திற்க்கு நிறைவேற்றுவதற்கான எந்த குறிகோளும் இல்லை.

அது எதை நோக்கியும் செல்லவில்லை
ஆனாலும் அது போய்க் கொண்டிருக்கிறது.

நிறையவே போய்க் கொண்டிருக்கிறது
ஆனால் அது விளையாட்டாகத்தான் இருக்க வேண்டும்

இது கடலின் அலைகள் போலதான் ஆரம்பம் இல்லை முடிவும் இல்லை

எல்லா அலையின் பின்னாலும் அலையிருக்கிறது எல்லா அலைகளின் முன்னாலும் ஏதோ இருக்கிறது. ஆக கடல் முழுவதும் அலைகளாக இருக்கிறது. அந்த அலைகள் ஆதி அந்தத்திற்க்கு அப்பாற்பட்டது.

மனித மனதின் கேள்விகள் மனித மனதின் பதில்கள் என்று பெரும் குழப்பத்தை நாம் இந்த கேள்வி பதில்களால் உருவாக்கியிருக்கிறோம்.

மரத்தில் இருக்கும் இலைகள் போல, அல்லது வானத்தில் இருக்கும் மேகங்கள் போல, கடலில் இருக்கும் அலைகள் போல, கேள்வியும் பதிலும் இல்லாமல் வாழுங்கள்...

போங்கடா டூபாக்கூர் களா...