28/09/2017

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை. (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...

திராவிட கன்னடன் இதுவரை தமிழனுக்கு செய்த கொடுமைகள்...


தமிழகத்திற்கு சேர வேண்டிய, ஈழம் போல இருமடங்கு பெரிய (42,250 ச.கி.மீ பரப்பளவு) நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளான்.

இது கர்நாடகத்தில் கால்வாசி ஆகும்.

மைசூர், பெங்களூர், மாண்டியா, கோலார், சாம்ராஜ் நகர் போன்றவை அடங்கும்..

காவிரி நீரை தேக்கிவைத்து வீணாக்கி தமிழக விவசாயம் 40% அழிய முக்கிய காரணமானான்..

1982 தமிழை பாடத்திலிருந்து நீக்கியதைக் கண்டித்து போராடிய 4 கோலார் தமிழர்களைச் சுட்டுக் கொன்றான்.. மேலும் 15 பேரை பிடித்துக் கொண்டு போய் கொன்று காணாமல் ஆக்கினான்..

1991 காவிரிப் படுகொலை நடத்தி பல தமிழர்களைக் கொன்று ஒரு லட்சம் பேரை அகதியாக தமிழகத்திற்கு விரட்டினான்..

ஆங்கிலேயன் காலத்திலேயே மைசூர் சமஸ்தானம் மூலமாக பாலாறை சட்டத்திற்குப் புறம்பாக மறித்து பாதி நீரை எடுத்துக் கொண்டு மீதியையே தமிழகத்திற்கு விட்டான்..

இவனை பின்பற்றியே தெலுங்கன் மீதி தண்ணீரையும் மறித்து பாலாற்றின் தண்ணீரே வரவிடாமல் தடுத்தான்..

தமிழகத்தின் சொத்தான கோலார் தங்கச் சுரங்கம் முழுவதையும் தோண்டி தங்கம் அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.

வீரப்பனார் தேடுதல் என்ற பெயரில் 57 தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தான்.
89 பேரைக் கொலை செய்தான்.
270 பேரை ஊனமாக்கினான்.

1999 ல் மத்திய அரசு பணிக்கு முறைப்படி தேர்வான 26 தமிழர்களை கர்நாடகத்தில் பணிசெய்ய விடாமல் ஏ.ஜி.ஓ என்ற நாற்பது நாட்கள் போராட்டம் நடத்தி விரட்டியடித்தான்..

திருவள்ளுவர் சிலையைத் திறக்க விடாமல் செய்து அதன் சுற்றுப்புறத்தை மலம் கழிக்கும் இடம் ஆக்கினான்..

கோயில்களில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகளை அழித்துவிட்டான்..

கல்வெட்டுத் துறையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தமிழ் கல்வெட்டுகளைக் கொடுக்காமல் தொடர்ந்து பராமரிப்பில்லாமல் போட்டு அழிக்கிறான். இதுவரை 500 க்கும் மேற்பட்டவை அழிந்துவிட்டன.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழகத்தை அளிக்க மறுப்பதுடன் ஒகேனக்கல்லே எங்களுடையது என்று பிரச்சனை செய்கிறான்..

267 தமிழ்ப் பள்ளிகளில் 147 பள்ளிகளை மூடிவிட்டான்..

இன்று பெங்களூர் திருக்குறள் மன்ற நூலகத்தை சூறையாடியுள்ளான்..

ஆனால் தமிழன் மட்டும் திராவிடனாக எண்ணி அனைத்து உரிமையையும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்...

ஏனெனில் தமிழன் முட்டாள்...

மனம் என்றால் என்ன்.?


மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது.
 
ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.

இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

ஓர் அறிவாய் இருக்கின்ற போது உணர்வை பெறுகிறது.

ஈரறிவாய் இருக்கின்ற போது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

3வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

4வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

5வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

6வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது.

ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.

இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது.

ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும்.

மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான்.

ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது.

இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப் பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான்.

ஆகவே தான் மனிதப் பிறவியில் அதே நிலையில் இருப்பதால் தான் இறைத் தன்மையை அறிய முடியாமல் தவிக்கிறது...

இலுமினாட்டி - வங்கிகளின் உண்மை நிலை...


நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?
வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?

காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து,  மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா...

எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணிணியா?

உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே.

சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்?

அப்படியா யார் அந்த எல்லாரும். இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான். அப்போ யாருக்காக இந்த மலுப்பல்.

கணிணி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்.

ஏன் இப்படி இருக்க கூடாது கணிணியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு. உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன். அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?

இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும்.  எது இதை மாற்றியது. பொய். மாயை.

நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது. அது அரசர்களின் கைகளுக்கு மாறியது.  தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.

இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது.

பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர். அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம். அவர்கள் சொல்வதை நம்புகிறோம். அவர்கள் சொல்வதையே செய்கிறோம் பொதுவாக.

இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர்   Imperial Bank Of India,British . தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India.

பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை...

இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைமை இடம் ஈரானில் உள்ளது.

மேலும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி யின் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன. அவை இந்திய  தனியார் வங்கிகள் போல தோன்றும் ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான்.

பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது. இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.

முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே.  அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே.

வங்கிகளின் மோசடி...

ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும். இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது. மீதி அனைத்தும் கணிணியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது..

நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.

புரியும் என்று நம்புகிறேன் நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம். ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை.  அர்த்தமும் இல்லை.

நாம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம்...

ஆவிகள் - பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான்...


ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர்.

ஒருவருக்கு துர்மரணம் நேர்ந்தாலோ, அல்லது ஒருவர் மரணித்த பின்பு, அவருடைய ஆன்மா, மனித உலகத்தை விட்டு போகாமல், இருந்தாலோ அவர்களை நாம்  பேய் என்று அழைப்போம்.

இந்த  பேய்களில் பல வகை உண்டு. இப்படி மரணித்த பின்பும் மனித உலகில் வாழும் ஆன்மாக்கள், வஞ்சம் தீர்ப்பதற்காகவும், சிலரை சொந்தமாக்கி கொள்வதற்காகவும், மனிதர்களை பாடாய்படுத்தும்.

அவ்வாறு அருகில் அமானுஷ்ய சக்திகள் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படும்.

திடீரென காரணமே இல்லாமல் உடல் நடுங்கினலோ அல்லது பதட்டம் ஏற்பட்டாலோ, அங்கு ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யலாம்.

இரவில், அமைதியான இடத்தை கடக்கும் போது, விசித்திரமான சத்தத்தை கேட்டாலோ, அல்லது பெயரை சொல்லி அழைத்தாலோ, சட்டென்று திரும்பி பார்க்க கூடாது.

காரணம் அது பேய்கள் நம்முடன் வருவதற்கு நாமே அழைப்பு விடுப்பது போன்று ஆகிவிடும்.

நம்மை சுற்றி விசித்திரமான விஷயங்கள் நடந்தால் நமது 6வது அறிவு செயல்படும். நம்மை யாராவது உற்று பார்ப்பது போல் இருந்து, அங்கு யாரும் இல்லை என்று புரிந்தால் அங்கிருந்து உடனே சென்றுவிட வேண்டும்.

இருளில்  சிகப்பு நிற உடையிலோ, அல்லது வெள்ளை நிற உடையிலோ யாராவது தென்பட்டால், அது நிச்சயம் அமானுஷ்யம் தான். அதை மோகினி ,  காட்டேரி என்று சொல்வர்.

ஆகையால் இளம் ஆண்கள் அவ்வாறு எதையாவது பார்த்தால் அங்கருந்து உடனடியாகசென்றுவிட வேண்டும்.

பெரும்பாலும் நீர்வீழ்ச்சி அருகே மோகினி பிசாசை உணர முடியும் என்று பலர் கூறுகின்றனர். இவைகளை மந்திரவாதிகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமாம்.

மோகினி பிசாசுகள், மற்றும்  ரத்த காட்டேரிகள்  காற்றில் உலாவுமாம். இவை அருகில் இருப்பதை ஒரு வகை துர்நாற்றத்தால் அறியலாம். இவை  வீட்டின் அறையில் நம் அருகிலேயே கூட இருக்குமாம்.

அப்படி சம்பந்தம் இல்லாமல் வீட்டில் ஏதேனும் கெட்ட துர்நாற்றம் வந்தால் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை அறியலாம்...

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)...


பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்தர்கள் சத்தியவாக்கு.

மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...

எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவிற்கு கூட்டம் சேர்க்க பள்ளி மாணவர்களை அழைத்து செல்லக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்...


குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இது குறித்து முறையான விதிமுறைகள் வகுக்கும் வரை பள்ளி குழந்தைகளை பள்ளி சாரா நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் குறிப்பாக சேலத்தில் நடைபெறவுள்ள எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்து செல்ல தடை விதித்துள்ளது...

பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளைப் போக்க சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்...


பல பெண்களுக்கு பாதங்கள் வறண்டு போவது, பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுவது ஆகிய பிரச்சனைகள் உள்ளன. இது அவர்களின் கவனக்குறைவைக் காட்டும் அடையாளமாகும். நாம் நமது கைகளையும் கால்களையும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள தேவையானவற்றைச் செய்கிறோம், ஆனால் நமது பாதங்களின் தேவைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமது பாதங்கள் பல்வேறு வகையான பரப்புகளைத் தொடுகின்றன, தொட்டுக் கடக்கின்றன, பல்வேறு வானிலைகளை எதிர்கொள்கின்றன, ஆகவே அவற்றுக்கு அதிகமான கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஸ்பா செல்வதும் அழகு நிலையங்களுக்குச் சென்று பாதப் பராமரிப்பு செய்துகொள்ளவும் அதிக செலவாகும், பலருக்கு அதற்கெல்லாம் நேரமும் கிடைப்பது கடினமாக இருக்கலாம். பாதங்களின் வெடிப்புகளைப் போக்கவும், பாதங்களை மென்மையாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

காய்கறி எண்ணெய் மாஸ்க் (Vegetable oil mask)..

காய்கறி எண்ணெய்கள் எளிதில் கிடைக்கின்றன, இவை பாதங்களின் வெடிப்புகளைச் சரிசெய்ய மிகவும் உதவக்கூடியவை. பாதங்களுக்கு ஈரப்பதத்தை அளிக்க, வழக்கமான மாய்ஸ்டுரைஸர்களுக்குப் பதிலாக, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அவை இன்னும் சிறப்பாக வேலை செய்யும். இவற்றைப் பயன்படுத்தும் முறை எளிதானது - இவற்றில் நீங்கள் விரும்பும் எண்ணெயை பாதத்தில் ஊற்றித் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரவு படுக்கச் செல்லும் முன்பு இதனைச் செய்யுங்கள். இதை ஒரு சில வாரங்கள் செய்தால் வியத்தகு பலன்களைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். இதனைப் பயன்படுத்தும் முன்பு பாதங்களைக் கழுவி நன்றாக சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

கிளிசரின் மாஸ்க் (Glycerine mask)..

கிளிசரின் மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்கும். அத்துடன் பன்னீரைச் சேர்த்துக்கொண்டால், பாதங்களில் வெடிப்புகளை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன் கிடைக்கும். கிளிசரின் சருமத்தை மென்மையாக்குகிறது, பன்னீர் பாதத்தின் சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் அதற்குத் தேவையான வைட்டமின்களையும் அளிக்கிறது. இரவு தூங்கச் செல்லும் முன்பு, பன்னீரையும் கிளிசரினையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, கலந்து பாதங்களின் வெடிப்புகளின் மீது தேய்த்து பாதம் முழுதும் மசாஜ் செய்து கொண்டு தூங்கச் செல்லுங்கள்.
எலுமிச்சைச் சாறு (Lemon juice)

எலுமிச்சை சாறு இறந்த செல்களை அகற்ற மிகவும் உதவக்கூடியது, மேலும் இதில் அமிலத் தன்மை இருப்பதால் அது வெடிப்பு உண்டாகிய பாதங்களில் இருந்து உலர்ந்த சருமத்தை அகற்ற உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்தாள், களைப்படைந்த பாதங்கள் விரைவில் புத்துணர்வு பெறும். மேலும், ஒரு ஸ்கரப்பரைப் பயன்படுத்தித் தேய்ப்பதன் மூலம் பாதங்களின் சருமத்தில் இருந்து இறந்த செல்களை அகற்றலாம். இதில் பன்னீரையும் சேர்த்துக்கொள்ளலாம். அது வெடிப்புகளை குணப்படுத்த இன்னும் உதவியாக இருக்கும். எலுமிச்சைச் சாற்றுடன், கிளிசரின், பன்னீர் ஆகியவற்றையும் சேர்த்தும் வெடிப்புகளில் பூசலாம்.

தேங்காய் எண்ணெய் (Coconut Oil)..

தேங்காய் எண்ணெயை கிட்டத்தட்ட அனைத்துக்கும் பயன்படுத்தலாம். வெடிப்புண்டான பாதங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதைப் பயன்படுத்தலாம். தூங்கச் செல்லும் முன்பு, பாதங்களில் சிறிது தேங்காய் எண்ணெயைப் பூசிக்கொண்டால் போதும். தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்டுரைசராகச் செயல்படுகிறது, அது பாத வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் சருமத்தின் பல அடுக்குகளையும் ஊடுருவிச் சென்று ஒட்டுமொத்த சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் வித்தியாசத்தை கண்கூடாகக் காண்பீர்கள்.

இவை உங்கள் பாதங்களை மென்மையாக்கி வெடிப்புகளை சில நாட்களில் சரிசெய்யக் கூடியவை. பயன்படுத்திப் பலன் பெறுங்கள்...

பீட்சா வரலாறு...


பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது .

ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.

தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா.

பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்..

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார்.

சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார்.

இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது.

ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள்.

பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர்.

அவ்வளவு தான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.

விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன.

பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது...

என் தமிழினத்திற்கான என் கனவு...


ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான (ஆழம் குறைந்த) கடலை மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும்..

அதில் கடல் அடைபட்டுக் கிடக்காமலிருக்க மண் பரப்பில் நீரோட்டத்திற்கு ஓடை போன்று வழி விட்டு அதன்மேல் பாலம் கட்ட வேண்டும்..

தென்னிந்திய நிலப்பரப்பில் குறுகிய பகுதியில் ஒரு நேர்க்கோடு வரைந்து அதனை வடக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும்..

அதாவது தற்போதைய கர்நாடகாவின் Kondapura என்ற ஊருக்கு சற்று மேல் கடல் உள்வாங்கியுள்ள இடத்திலிருந்து சற்று சாய்வாக மேல்நோக்கி செல்லும் நேர்கோடு...

தற்போதைய ஆந்திராவின் Singarayakonda அருகே கடல் உள்வாங்கியுள்ள இடம் வரை வரையவேண்டும்..

இந்த கோடு நீளம் குறைவானதாகவும் ஏற்ற இறக்கம் அதிகம் இல்லாமலும் இருப்பதால் இதனை பாதுகாப்பது எளிது..

அதற்குத் தெற்கே இருக்கும் அனைத்தும் நமக்கு உரித்தானது.

இந்த பரந்த நிலத்தினை தனி நாடாக்கி, எவருக்கும் பணியாமல் முப்படையுடன் தமிழர் தம் சொந்த பலத்தினால் ஆள்தல்..

இதுதான் அகன்ற தமிழர்நாடு சங்ககாலத் தமிழகத்தின் மறு நிறுவல்..

வரலாற்றினை ஆராயாமல்
நியாய - அநியாயம் பற்றி சிந்திக்காமல் இத்தீர்வினை நோக்கி முன்னேறுதல்...

இது தான் நாம் அழிந்து போவதிலிருந்து தப்பிப் பிழைக்க ஒரே வழி...

அர்த்த சாஸ்திரம் மதுவும்... டாஸ்மாக் மதுவும்...



இன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும்.

ஆனால், அதுதான் உண்மை..

சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று  சாஸ்திரங்கள் ஏற்றன.

ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம்.

இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம்.

மூன்று,  குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம்.

இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப் பட்டிருப்பதால் தான்  காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும். குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது  என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார்.

எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக  பயன்படுத்த முடிவு செய்தார்.

அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்..

இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது.  அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.

அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது.

இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம்  கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது.

சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது..

அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?

மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு  கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும்  மது விற்கக் கூடாது.

அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர்  அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.

மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு  உரியவர்கள்.

அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை  செய்ய வேண்டும்.

திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி  பெறாமல் காய்ச்சக் கூடாது...

அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின..

விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து  பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன.

அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும்,  குடிக்கு உரியதுதான்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது  வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன..

இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள்  வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28  ஆயிரமாக அதிகரித்தது.

1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த  அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது..

அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான்..

இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக  ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர்.

மையப்படுத்தப்பட்ட மது உற்பத்தி சாலைகளை ஏல முறையில் ‘மரியாதையும் மூலதனமும் உள்ள  பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது,  அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப்  பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர்.

இதனை அடுத்து  பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின்  ஏகபோகத்தை அளித்தார்கள்.

தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது.

இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா  - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார்.

இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில்  உருவாக்கப்பட்டனர்.

1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்தபடியாக குடி மூலமான  வருவாயே இந்தியாவில் இருந்தது.

இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட.

குடி மூலமாக வருவாயை பெருக்குவதும்,  மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணிதிரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான்,  டாஸ்மாக்கின் நோக்கம்..

இதுவேதான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்..

இராஜேந்திரனின் கல்லறை...


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம்..

நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர்..

இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் ஒரு செங்கல் கோபுர நுழைவாயிலின் எதிரில் இரண்டடுக்குக் கோபுரம் கொண்ட ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது..

பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்தக் கோயில் கட்டடம் கவனிப்பின்றிக் கிடக்கிறது..

கைவிடப்பட்ட அநாதையைப் போல் நின்று கொண்டிருக்கிறது..

அந்தக் கோயில் கட்டடம் சாதாரணமான ஒன்றல்ல.. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது..

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் மகன், ‘கங்கை கொண்ட சோழன்’ ‘கடாரம் கொண்டான்’ என்றெல்லாம் புகழப்பட்ட ராஜேந்திரனின் கல்லறை தான் அந்தக் கட்டடம்..

தற்போது அந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டறிந்துள்ள இந்திய ஒன்றியத்தின் தொல்பொருள் துறை அதை அழிக்கத் திட்டமிடுகிறது..

ராஜேந்திர சோழன் கல்லறை குறித்து நாட்டேரி கிராம மக்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதை ‘மடவலத்துக் கோயில்’ என்றுதான் சொல்கிறார்கள்..

சிலர் கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போனாங்களே அந்தக் கோயிலா என்று அடையாளப்படுத்துகிறார்கள்..

சிலர் இதைச் சந்திர மௌலீஸ்வரர் கோயில் என்கிறார்கள்..

மிக அரிதாக யாரேனும் ஒருவர் தான் ராஜேந்திர சோழனின் சமாதி என்று சொல்கிறார்கள்..

ராஜேந்திர சோழன் தன்னுடைய எண்பதாவது வயதில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்தபோது இங்கே இறந்து விட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்..

இந்த இடத்தைத் தொல்பொருள் துறை கையகப்படுத்தியிருந்தாலும் அதைப் பாதுகாப்பதற்கான முறையான ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது..

தொல்பொருள் பாதுகாப்புத் துறையிடம் சிலர் கேட்கலாம் என்று சென்றால், இங்குள்ள தொல்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலகம் பெரும்பாலும் மூடியே தான் கிடக்கிறதாம்..

தமிழர் அல்லாதவர்கள் எப்படி தமிழர்களின் தொன்மையை பாதுகாப்பார்கள்?

தமிழினத்தையே அழிக்கத் துடிக்கும் தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் தமிழர்களின் வரலாற்று சின்னங்கலையா விட்டு வைப்பார்கள்?

ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசை ஆண்டவன்; தன் தந்தையுடன் பல களங்களில் பங்கேற்றவன். பல போர்களில் வெற்றி வாகை சூடியவன். ‘பண்டித சோழன்’ என்றெல்லாம் வரலாற்றில் புகழப்பட்டவன்..

இத்தனை பெருமைகள் பெற்ற ராஜேந்திரனின் கல்லறையை, அதைச் சுற்றி வாழும் கிராமத்து மக்களாலேயே அடையாளம் காண முடியாமல் அநாதையாகக் கிடக்கிறது..

இதைப் பார்க்கும்போது மன்னவன் ஆனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் மண்ணில் பிறந்தால் ஒரு நாள் மண்ணுக்கிரைதானே… என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

எவ்வளவு சிறப்பான வாழ்க்கை என்றாலும் தனிமனித வாழ்வு என்பது எல்லைக்குட்பட்டது..

ஆனால் வரலாறு அப்படி அல்ல..

ராஜேந்திர சோழன் வரலாற்றில் தடம் பதித்தவன். அவன் நினைவைப் போற்றுவது வரலாற்றை நினைவு கொள்வதாகவே அமையும்..

அரசு நிர்வாகமும் சமூகமும் இதை மனதில் கொள்ள வேண்டும்...

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? - கன்னட ஈ.வே. ரா ஆவேசம்...


தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால்
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி..

சன் டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்கு முறைகளையும் மறந்து விட்டீர்களா?


இதோ.. உங்களின் கவனத்திற்கு...

சன் டிவிக்கு லைசன்ஸ் வழங்க பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அழித்துக்கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தின் தீவிரவாத மத்திய அரசு அனுமதி மறுப்பு விவகாரம்..

ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக தெலுங்கர் தட்சிணாமூர்த்தி (மு.கருனாநிதி), ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (தமிழின அழிப்பின் ஆணிவேர் தெலுங்கு கன்னட கலப்பினம் ஈ.வே.ராவின் பேரன்), தெலுங்கர் வைகோபால் சாமி நாய்டு, இ.கம்யுனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் சன் டிவிக்கு ஆதரவாக கருத்து..

ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே..!

1. கன்னட வந்தேரி ஜெயாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை முதல் கழிவறை வரை படம் பிடித்தது யார் ?

2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கப்பட்டது யாரால் ?

3. தமிழகத்தில் 75% இருந்த “ஹாத்வே” கேபிள் டிவி நிறுவனத்தை அழிந்து யார் ?

4. தமிழ்திரை (தமிழர் யாருமில்லை, அணைத்து மாநில திரைதுரைகளும் கன்னட மலையாள தெலுங்கு திரைத்துறை என்ற பெயரில் இருக்கும்போது தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் ஆளும் தமிழ்நாட்டில் மட்டும் இது தென்னிந்திய திரைத்துறையாக உள்ளது) துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த விலையில் வாங்கி குவித்தது யார் ?

5. “ராஜ்” டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது யார் ?

6. தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடையாக இருந்தது யார் ?

7. “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது யார் ?

8. “விஜய்” தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கி கொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது யார் ?

9. தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது யார் ?

10. “சன்” டிடிஎச் விவகாரத்தில் “ரத்தன்” டாடா -வை மிரட்டியது யார் ?

11. மெகாத்தொடர் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருப்பது யார் ?

ஆண்களை மதுவுக்கும் பெண்களை கீழ்த்தரமான மெகாத்தொடர் நிகழ்சிகளுக்கும் அடிமைகளாக வைத்துள்ளது யார்?

12. “ஜெயா” தொலைக்காட்சி குழுமத்தில் “ஜெயா ப்ளஸ்” தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது யாரால் ?

வந்தேரிகளுக்குள்ளான சண்டை தமிழர்களை யார் அடக்கி ஆள்வதென்று!

13. இரண்டு ரூபாயில் சினிமா பார்த்த சாமானியன் இன்று ரூ.500 வரை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இவர்களால்தான் .

இதற்கு முதலில் பதில் கூறுங்கள்…

நம்ப முடியாத உண்மைகள்...


சித்தர் ஆவது எப்படி - 4...


வெளிச்சத்தின் விரையத்தில் மனிதன்...

கனல் ஒன்றே உயிர் ஆற்றல்.. ஆன்மா முழுமைக்கும் தூய கனலாக உள்ளது...

இந்த கனல் பூமியில் படும் பொழுது பஞ்சபூதங்கள் கனலை பெறுவதில் உள்ள வேறு பாட்டினால் பல்வேறு உயிர் இனங்கள் தோன்றுகின்றன.

மனித தேகத்தில் மட்டும் காற்று ஆகாயம் என்ற பூதங்கள் கனலை அதிகமாக பெற்று இருக்கின்றன...

மனம் என்ற பூதம் மிக அதிக பட்ச கனலை பெற்று இருக்கின்றது...

அப்படி கனலை பெற்ற மனம், வலுவான பூதமான சித்தத்திற்கு அடிமையாகி உள்ளதால், மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது...

மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது... இதுதான் மனிதனின் மிக பெரிய ஆன்மீக தடை...

சித்தத்தின் தன்மையே மனதை வசப்படுத்துவது தான்..

சித்தம் என்ற நீர் பூதம் நீரின் தன்மை போல் ஓடி ஓடி பள்ளத்தில் தங்க முயலுவது போல் மனம் என்ற பாத்திரத்திரமான பள்ளத்தை நோக்கியே சித்தம் போய் கொண்டு இருக்கும்..

சித்தத்திற்கு மனதை விட்டால் வேறு புகலிடம் இல்லை..

அது மேல் நோக்கி நகர முடியாததால் கீழ் நோக்கி செல்லும் பொழுது, மண்ணின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டே நகர தொடங்குவதால், மனதை சதா காலமும் சித்தம் மண் என்ற பூதத்தின் பக்கமே இழுத்து செல்லும்...

மண் அம்சமான ஆணவ குணம் சதா காலமும் ஒடுக்கத்தை நோக்கியே நோக்கியே போய் கொண்டு இருக்கும்...

அதனால் தான் மனம் முழுமைக்கும் சித்தத்தின் எண்ண ஆதிக்கமாகவே இருக்கும்..

குறுகிய வட்டமாகிய ஆணவத்தில் சதா காலமும் மனம் சிக்குண்டதாகவே இருக்கும்..

பழைய பதிவுகளான சித்தத்தின் எண்ண ஆதிக்கம் பழைய வாழ்க்கையே வாழ தொடங்குவதால் அது பழக்கமாகவும், குணமாகவும், இயல்பாகவும் மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு புதிய நிகழ் காலத்தில் மனதை ஈடு பட விடாது..

இறந்த கால வாழ்க்கையை வாழும் மனிதன் செத்தாரை போன்று இருக்கின்றான்.. நிகழ் காலத்தில் இந்த உலகில் உள்ள புதுமைகளில், மனம் மலர இந்த சித்தம் விடுவதில்லை...

நிகழ் காலத்தின் ஈடுபாட்டையே ' சி ' என்ற உயிர் மெய் எழுத்து குறிக்கிறது... அதில் வன்மையாக பொருந்தி இணைந்து கொள்வதையே வம் என்ற சொல்..

இறந்த கால எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நிகழ் காலத்தில் இணைவதையே சிவம் என்றனர்.. சிவத்தை கைகொண்டால் சிவன் ஆகலாம்..

சிவன் பெற்ற அத்தனை சக்திகளையும் நிகழ்கால இணைப்பால் பெறலாம் என்பதே உண்மை அறிந்தோரின் சத்திய வாக்கு.. ஆனால் கனலாக அனுபவக்கூடிய சிவம் இன்று மதத்தில் சடங்காக மாறி வெளிச்சமாக விரையமாகி விட்டதே..

சடங்கு என்பதே ச் + அடங்கு என்பதாகும்..

நிகழ் கால இணைப்பு அதாவது சிவ கலப்பு இன்று அடங்கி போய் விட்டதே..

அதை விட மிக பெரிய கொடுமை என்றும் எங்கும் நீக்கமற உள்ள இறைவனையே இன்று இல்லாதது போலும் நாளை தீர்ப்பு நாளில் வருவார் என்று இறைவனையே நிகழ் காலத்திலேயே சவமாக்கி விட்டார்களே...

கனல் ஒளியை போன்றது.. ஒளிக்கும் வெளிச்சத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..

தேவையான ஒன்றிலே ஒன்றித்து பயிலுவது ஒளி ஆகும்.. அது தேவையை நிறை வேற்ற ஆற்றலை கொடுத்து தேவையை முடித்து வைக்கும்...

தேவை எது என்று தெரியாமல், குறிக்கோள் அற்று, சும்மா இருக்க முடியாமல், எதையாவது தேடி, வெளியே உள்ள பொருள்களில் ஆற்றலை சிதறி போக செய்து, பின் வாழ்வின் தேவை என்று ஒன்று வரும் போது அதை நிறை வேற்ற ஆற்றலற்று போய் தோல்வி அடைவது வெளிச்சம்...

ஒளி வாழ்வையும் உயர்வையும் கொடுக்கும்.. வெளிச்சமோ தாழ்வையும் பலவீனத்தை கொடுக்கும்..

ஒளி என்பது 'ஒ' (ஒன்றித்தல்) + 'ளி' ( பயிலல் ) ஆகும்.. வெளிச்சம் என்பது வெளி ( வெளியே உள்ள அனைத்தும் ) + எச்சம் ( மலம் விரையம் ) என்பதாகும்...

உணர்வு என்பது ஒளி தன்மை உடையது.. எண்ணம் சிதறு போகும் தன்மையால் வெளிச்சமாக உள்ளது.. மனம் இரண்டாக பிரிந்து இருக்கிறது.. உணர்வு என்ற ஒளியால் மேல் நிலை பூதங்களான காற்று, ஆகாயம் புலப்படுகிறது..

நினைத்தல் என்ற வெளிச்சத்தால் உருவ அமைப்புகளான கீழ் நிலைபூதங்களான நீர் மண் புலப்படுகிறது.. உணர்வால் மனிதன், மேல் நிலையும் நினைத்தலால் மனிதன் கீழ் நிலையும் அடைகிறான்..
இன்றைய மனிதன் நிலை என்ன ?

பூர்வீக ஜென்மங்களின் உணர்வுகளை தாங்கி நிற்கும் வல்லமை உடைய சித்தம் என்ற பூதம், இந்த பிறவியில் காலையில் உண்ட உணவின் சுவையின் உணர்வினை, மதியத்திற்குள் ஏன் இழந்து விடுகிறது ?

கோவிலில் இறைவனை தொழும் போது ஏற்பட்ட பக்தி உணர்வு, கோவில் வாசலை தாண்டும் முன்பே ஏன் காணாமல் போய் விடுகிறது?.. அன்பு பாசம் போன்ற உணர்வுகள் குறுகிய கால அளவிலே மறைந்து போக என்ன காரணம்?

முதியோர் இல்லங்களிலும் நடு தெருவிலும் தாய் தந்தையரை அநாதையாக விட்ட மகனின் பாச உணர்வு எப்படி காணாமல் போய் விட்டது ?.. வல்லமை வாய்ந்த சித்தம் எதனால் பலவீனம் அடைந்தது ?..

பயன்தூய்ப்பில் நிறைவு பெறாமலே மனிதன் மீண்டும் மீண்டும் ஏன் தேடுதலையே தொழிலாக கொண்டுள்ளான் ?..

இறைவனே நேரில் காட்சி அளித்தாலும் அவனால் உணர்வில் ஏன் நிறைவு கொள்ள முடியாத நிலையில் உள்ளான்?..

சொர்க்கமே கிடைத்தாலும் அதனுடைய அனுபவ உணர்வுகள் விரைவில் தொலைத்து விட்டு சொர்க்கமே கசந்து போகும் நிலை ஏன் அடைகிறான் ?..

எந்த சுகத்தையும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் அனுபவிக்கும் தகுதியை ஏன் இழக்கிறான்?..

இந்த பிரபஞ்சத்தில் எந்த அற்புதம் கிடைத்தாலும் அது மனிதனின் மன நிலையில் விரைவில் அது தன் மகத்துவத்தை ஏன் இழந்து விடுகிறது?..

நினைவு பதிவுகளமான கலங்கிய சித்தத்தில் எந்த உணர்வும் நிலைப்பதில்லை.. அது வெளிச்சமாக இருப்பதால் பெற்ற உணர்வை வெளிச்சமாக விரையம் செய்கிறது.. அதுவே காரணம்...

அப்படி விரையம் செய்யாமல் தடுத்து, சித்தத்தை கனலால் நிரப்பும் பயிற்சியான கனல் தீட்சை நயன தீட்சை திருவடி தீட்சை என பயிற்சிகளை பயின்றார்கள் நம் சித்தர் பெருமக்கள்..

இந்த மூன்றும் ஒன்றே.. வெளிச்சத்தை எவ்வாறு தடுப்பது, கனலால் உணர்வால் எப்படி நிரப்புவது என்பதை வரும் பகுதிகளில் காணலாம்... சித்தர் ஆவதில் சிரமம் ஒன்றும் இல்லை...

எனது நிறம் காவியாக இருக்காது ஆனால் கறுப்புக்குள் காவியும் அடங்கும் - இலுமினாட்டி கமல்ஹாசன்...


குவியும் வரி வருவாய்...


ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய  அரசுக்கு ரூ.90,670 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஜூலை மாதம் ரூ. 95,000 கோடி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது...

மக்களிடம் கொள்ளை அடித்து சேர்த்து உலகை சுற்றுவதே வெற்றி...

பாஜக அருண் ஜெட்டிலும் ஏமாற்று வேலையும்...


திராவிடம் சாதி வளர்த்த கதை...


தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை அமலில் உள்ள
து. சாதிய ரவுடி ஒருவரின் நினைவு நாளை முன்னிட்டு இந்த தடை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு சாதிய நிகழ்வாக மட்டும் தெரியும். அந்த சாதிவெறிக்கு பின்னால் திராவிடம் ஒளிந்து கிடப்பது பலருக்குத் தெரியாது.

ஜெயாவின் ஆட்சியில் வெங்கடேச பண்ணையார் என்னும் ரவுடி என்கவுண்டரில் கொல்லப்படுகிறார். அப்போது நாடார் சாதியை அதிமுகவுக்கு எதிராக திருப்பும் வேலையை சூத்திர(திராவிட) முன்னேற்ற கழகம் திறம்பட செய்தது.

ரவுடியின் மனைவி ராதிகாசெல்வி உடனே திமுகவில் சேர்க்கப்படுகிறார். அடுத்த தேர்தலில் அவருக்கு எம்பி சீட் கொடுத்து சாதி வெறியை வலுப்படுத்தி வெற்றி பெறுகிறது திமுக.

சாதியத்தின் மூலம் தங்கள் காரியம் முடிந்த பிறகு சாதியவாதிகளை விலக்கி வைப்பதுதான் திராவிட அரசியல். அப்பதான் முற்போக்கு அடையாளம் கொடுக்க திக, திவிக, தபெதிக போன்ற சூத்திர(திராவிட) இயக்கங்கள் தயாராவார்கள். தலித் வாக்குகளையும் பெறலாம்.

ராதிகாசெல்வி தற்போது திமுகவில் தடம் காணாமல் போய் விட்டார். ஆனால் அன்று திமுக கொளுத்திப்போட்ட சாதிவெறி இன்றும் எரிகிறது.
குருபூஜை, ரிப்பன் கட்டுதல், சாதிய முழக்கங்கள், போஸ்டர்கள் என நாடார் சாதி இளைஞர்களைப் பின்னோக்கி நகர்த்துகிறார்கள். மற்றொரு பக்கம் காவி கும்பல் நாடார் சாதியில் ஆள் எடுத்துக் கொண்டிருக்கிறது.

வலதுசாரி/இடதுசாரி தமிழ்த்தேசியம் என வகைப்படுத்தும் புதிய பெரியார் பக்தர்கள் கூட இந்த "திராவிட சாதிவெறி அரசியல்" குறித்து பேச மாட்டார்கள். திராவிட புனிதம் கெட்டுவிடக் கூடாதல்லவா..

புரிந்தவன் பிழைத்துக் கொள்வான்.
புரியாதவன் ஆரிய மற்றும் திராவிட சாதிய அரசியலுக்கு பலியாவான்...

4G நெட்டும் உண்மைகளும்...


ஏர்டெல் - இதில் 4G LTE செட்டிங்கில் Calling incoming & outgoing வசதி இல்லை.. நீங்கள் Call செய்ய வேண்டுமானால் செட்டிங்கில் சென்று (LTE/WDCMA/GSM) auto வில் வைத்தால் மட்டுமே Incoming & outgoing வேலை செய்யும்.. ஆனால் 3G/2G நெட் தான் வேலை செய்யும்..

ஏர்செல் - இதில் 4G நெட்டே இல்லை.

ஐடியா - இதில் 4G என்று 2G நெட்டே கொடுக்கிறார்கள்.. அதுவும் உபயோகம் ஆகாது.. டவர் இருக்காது..

வோடப்போன் - இதில் 4G ஒரளவு பரவாயில்லை..

ஜியோ - இதில் 4G நன்றாக இருக்கிறது. ஆனால் வோல்ட் பயன்பாடு உள்ள கைபேசியில் மட்டுமே உபயோகிக்க கூடியது.. மற்ற கைபேசியில் உபயோகிக்க வேண்டுமானால்.. ஜியோ ஆப் பபதிவிறக்கம் செய்து நெட் ஆன் செய்தே இருக்க வேண்டும்..

குறிப்பு : இந்தியாவில் 4G அங்கிகாரம் வைத்துள்ளது ஜியோ மட்டுமே...

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் B படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை உண்மைத்தன்மை பற்றி அக்.6ல் தேர்தல் ஆணைய செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...


யாருடா மகாத்மா.. கொய்யால உங்க காந்தி துரோகி டா...


ஒரு தேசத்தின் உண்மையான சரித்திரத்தை மறைப்பதற்கு எவருக்குமே உரிமையில்லை.

ஆனால் நடந்த உண்மையான சரித்திரத்தைவிட மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, உரைக்கப்பட்ட சரித்திரம்தான் இன்று எம்மிடையே அதிகமாக உள்ளது.

நடந்த சரித்திரத்தை மறைக்கின்ற வழமைதான் இன்றுவரை சரித்திரமாகத் தொடர்கின்றது.

கத்தியின்றி, இரத்தமின்றிக் கிடைக்கப்பெற்ற சுதந்திரம் என்று இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து இப்போதும் பலர் கூறி வந்தாலும், ‘அது திரிக்கப்பட்ட வரலாறு என்பதனை எதிர்காலம் கூறுமோ’ என்ற எண்ணமும் இப்போது வலுப்பட்டு வருகின்றது...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸில் இருந்து எத்தனையோ ஆயிரம் புரட்சிவீரர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போர் புரிந்தார்கள். உண்மையில் ஆங்கிலேய ஆதிக்கத்தின் அடித்தளத்தை இப்புரட்சி வீரர்களின் போராட்டம் தான் ஆடவைத்தது.

1857ம் ஆண்டு நடைபெற்ற, ‘சிப்பாய்க்கலகம்’ என்று ஆங்கில அரசு பெயரிட்டழைத்த கலகம், உண்மையில் ஆயுதம் தாங்கிய சுதந்திரப் போராட்டம் தான்.!

சரியாக 74 ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 25ந்திகதி – மகாத்மா காந்தி, கராச்சி நகருக்குச் செல்கின்றார். இலட்சக்கணக்கில் மக்கள் வெள்ளம் அலைபுரண்டு ஓடுகின்றது.

எதற்கு? காந்தியாரை வரவேற்கவா? இல்லை! கூட்டத்திலிருந்து இவ்வாறு தான் குரல்கள் எழும்புகின்றன. தலைவர்களே! திரும்பிச் செல்லுங்கள்!: காந்தி-ஏர்வின் (Erwin) ஒப்பந்தத்தை தூக்கி எறியுங்கள். பகத்சிங்கை கொன்ற பேர்வழி எங்கே? என்றெல்லாம் மக்கள் கதறுகின்றார்கள்.

அன்று மாலையில் நடந்த பெருங்கூட்டத்தில், ‘காந்தி எங்களுக்கு எதற்கு? அவர் ஒழியட்டும்’ என்று மக்கள்-அதிலும் குறிப்பாக இளைஞர்கள்-குரல் எழுப்புகின்றார்கள். ஏன்? என்ன காரணம்?

காரணம் என்னவென்றால், இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான், அதாவது 1931ம்ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதியன்றுதான், இந்திய சுதந்திரப் போராட்டவீரன் பகத்சிங் அவர்களை அவரது இரண்டு போராளி நண்பர்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோருடன் ஆங்கில அரசு தூக்கிலிட்டுக் கொன்றிருந்தது.

இந்தியச் சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங்கின் முழுமையான தியாக வரலாறு மறைக்கப்பட்டு வந்துள்ளமை குறித்தும் பரவலாக வெளிவந்திராத சம்பவங்கள் குறித்தும் ஆதாரபூர்வமாகத் தர்க்கிப்பதுவே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

வெகுசனப் பிரச்சாரச் சாதனங்களை முழுமையாகத் தங்கள் கைகளில் வைத்திருந்த மேல்த்தட்டு இந்திய அரசியல்வாதிகள், பகத்சிங் போன்ற போராளிகளின் பங்களிப்புக்களை இயலுமானவரை மூடிமறைத்தே வந்துள்ளார்கள் என்பதற்கு இப்போது ஆவணச் சான்றுகளுடன் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இவை எல்லாவற்றையும்விட, ‘பகத்சிங் அவர்களின் தூக்குத்தண்டனையை எப்போது நிறைவேற்றவேண்டும்’ என்று ஆங்கில அரசிற்கு ஆலோசனை அளித்தவரே, மகாத்மா காந்திதான்என்ற விபரமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை குறித்துப் பின்னர் கவனிப்போம்.

1907ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ந்திகதியன்று பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் நகருக்கு அருகிலுள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் பகத்சிங் பிறந்தார். அவர் 12 வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் ஆங்கிலேய ஜெனரலான டயர் என்பவன் நடாத்திய படுகொலைகள் சம்பவம் பகத்சிங் மனத்தில் விடுதலை வேட்கையை ஊட்டியது. பல புரட்சி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதற்குரிய பணிகளில் பகத்சிங் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘இந்திய சமதர்மக் குடியரசு இராணுவம்’ (H.S.R.A.) என்ற அமைப்பு ஒன்று 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பின் மத்தியகுழு உறுப்பினராக
பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அமைப்பின் முதல் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளில் பகத்சிங் முக்கிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். ஒன்று, பொலிஸ் அதிகாரி சான்டர்ஸ் என்பவரைக் கொல்வது, மற்றது சட்டசபையில் குண்டு வீசுவது.

1928ம் ஆண்டு டிசம்பர் 17ந்திகதி பொலிஸ் அதிகாரி சான்டர்ஸ் சுடப்பட்ட சம்பவத்தின் பின்னர் பகத்சிங்கின் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பமாயிற்று. நான்கு மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் கட்சியின் முடிவுப்படி 8-4-1929 அன்று சட்டசபையில் குண்டுவீசும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதில் படுதுணிகரமான, அதேவேளை வித்தியாசமான, முடிவொன்றை பகத்சிங் எடுத்தார். அதனை எமது நேயர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடுவதைக் காட்டிலும் தாங்களே கைதாகச் சம்மதித்து, பிறகு நீதிமன்றங்களைத் தமது கொள்கை பரப்பும் மேடைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் - என்று பகத்சிங் முன்வைத்த கருத்தை ர்.ளு.சு.யு ன் மத்தியகுழு ஏற்றுக்கொண்டது.

பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத் என்பவரும் திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் மாதம் 8ம் திகதியன்று சட்டசபையில் குண்டுகளை வீசிவிட்டு, ‘இ;ன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் இந்த முழக்கம் அன்றுதான் முதல்முறையாகக் கேட்டது. பின்னர் கையிலிருந்த துப்பாக்கியால் மேல்நோக்கிச் சுட்டுவிட்டு, ர்.ளு.சு.யு யின் துண்டறிக்கைகளை வீசி எறிந்தார்கள். பிறகு தாங்களாகவே முன்வந்து கைதாகினார்கள்.

இன்று பகத்சிங்கைப் புகழ்ந்து எழுதுகின்ற ஆனந்தவிகடன் பத்திரிகை அன்று பகத்சிங்கின் இந்த நடவடிக்கை குறித்து என்ன எழுதியது தெரியுமா?

நேயர்களே, 1929ம் ஆண்டு (அப்போது மாத இதழாக வெளிவந்த ஆனந்த விகடனின்) மே மாத இதழில், பகத்சிங்கின் செய்கையைக் கண்டித்தும், கேலி செய்தும் வெளியான அக்கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.

“இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு, கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச்சிகாமணிகள்’ என்ற பட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகாரவர்க்கத்தை வெங்காய வெடியினாலும், ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம். . . இந்திய குடியரசின் சேனாதிபதி என்பதாகக் கையொப்பமிட்டு, சிரிப்பதற்கு விடயம் தந்ததின் பொருட்டு விகடன் மிகவும் நன்றி செலுத்துகின்றான்.
(ஆனந்தவிகடன்-1929 மே இதழ்)
ஆனால் பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத் அவர்களும் கொடுத்த வாக்குமூலத்தைக் கேளுங்கள் நேயர்களே..

“நாங்கள் வெடிகுண்டு எறிந்தோம். எந்தத் தனிநபரையும் நோக்கி நாங்கள் வெடிகுண்டு போடவில்லை. சட்டசபை பயனற்றது என்று கருதி அதன்மீது போட்டோம். சட்டசபை இருந்து என்ன பயன்? மக்கள் பிரதிநிதிகளின் முறைப்பாடுகள் அசட்டை செய்யப்படுகின்றன. சட்டசபையினால் யாதொரு நன்மையும் கிடையாது. ஏழைமக்கள் படும்துயர் சொல்லி முடியாது. இங்கிலாந்தைக் கனவிலிருந்து தட்டி எழுப்ப வேண்டுமென்றால் வெடிகுண்டு போடவேண்டியதுதான். . . கொலை செய்யவேண்டும் என்று
எண்ணியிருந்தால் அவ்விதமே செய்திருப்போம். அநீதியாக உள்ள தற்கால சமூகவாழ்வையும், அரசியலையும் போக்குவதே புரட்சியாகும. ஒரு மனிதனின் நலத்தை, மற்றொருவன் பறிப்பதும் ஒரு தேசத்தின் நலத்தை மற்றொரு தேசம் பறிப்பதும் ஒழிய வேண்டும்.. . . நாங்கள் எச்சரிக்கை செய்துள்ளோம். இந்த எச்சரிக்கை மதிக்கப்படாமல் போனால், தேசத்தில் பெரிய புரட்சி தோன்றும். அக்காலத்தை, நாம் எதிர்பார்க்கின்றோம். புரட்சி என்ற பலிபீடத்தில் எங்களது இளமையை நாங்கள் அர்ப்பணிக்கின்றோம். எத்தகைய கஷ்ட நஷ்டம் நேரினும் சரி, அதனை அனுபவிக்க நாங்கள்
தயார்.

‘புரட்சி ஓங்குக, புரட்சி ஓங்குக’

எவ்வளவு தெளிவாக, தீர்க்கமான, வீரமான வாக்குமூலம்.

இந்த வீரமிகு செயலைத்தான் ஆனந்தவிகடன் பத்திரிகை கிண்டல் செய்து எழுதியது.

இந்த வழக்கின் விசாரணை 1929ம் ஆண்டு ஜீலை மாதம் 10ம் திகதி தொடங்கிற்று. பகத்சிங் உட்ட இந்த வழக்கில் எதிரிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொகை 32. ஆங்கில அரசுக்கு ஆதரவாக
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களின் தொகை 607. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவதற்கென்று ஒரு வழக்கறிஞர் கூட இல்லை. ஆங்கில அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல வந்தவர்களை அரச தரப்பு குறுக்கு விசாரணை செய்யாமல் அவர்களதுசாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

1930ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி தீர்ப்புக் கூறப்பட்டது.

பகத்சிங், சுகதேவர், ராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.

ஏழுபேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையும், இன்னும் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டன.

7-10-1930 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் படி பகத்சிங் முதலான மூவருக்கும் 17-10-1930 அன்றே தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், ஆங்கிலேய அரசோ இவர்களை 23-3-1931 அன்று தான்(5 மாதங்கள் கழித்து ப-ர்) தூக்கிலிட்டது.

இவ்வளவு காலமும் தண்டனையை நிறைவேற்றாமல் ஆங்கில அரசு இழுத்தடித்ததற்குக் காரணம், வெளிப்படையானதுதான்.

பகத்சிங் முதலானவர்களைத் தூக்கிலிட்டால், இந்தியா முழுவதும் எழுந்து நின்று ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் கலவரங்களில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் அன்று அவர்களுக்கு இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் அந்த அச்சம் அகன்றதற்கு காரணம் யார்? அதை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்? என்பதற்கு இன்று ஆவணங்கள் சாட்சி சொல்கின்றன.

இதன் பின்னணியைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் வலுவோடு நடந்து கொண்டிருந்தது. அந்த வேளையில் அப்போராட்டத்தை நிறுத்துவதற்காக
பல முயற்சிகளை ஆங்கில அரசு மேற்கொண்டு வந்தது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆங்கில அரசுக்குமிடையே ஒரு சமரச உடன்பாடு உருவானது. அது காந்தி-எர்வின் உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்காரர்களே குரல் எழுப்பினார்கள்.

காரணம், இந்த உடன்பாடு புரட்சிகரத் தோழர்களுக்கும் இயக்கங்களுக்கும் எதிரான பல செய்திகளைத் தன்னுள் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசின் கை ஓங்கியதும், புரட்சிகர நடவடிக்கைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டதும் இந்த உடன்பாட்டிற்குப் பின்புதான்.

இந்த காந்தி-எர்வின் உடன்பாடு காங்கிரசின் பல தலைவர்களுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. இந்த உடன்பாட்டில் மற்ற அனைவரையும் விட காந்திதான் அதிக ஆர்வம் காட்டினார் என்று காந்தியின் சீடரான பட்டாபி சீதாராமையா (வுhந ர்ளைவழசல ழக ஐனெயைn யேவழையெட ஊழபெசநளள)  என்ற நூலின் முதலாவது பாகம்-பக்கம் 437ல்-எழுதியுள்ளார். “இந்த உடன்பாட்டில் உள்ள நிலச்சீர்திருத்தக் கொள்கை குறித்து வல்லபாய் பட்டேலுக்குத் திருப்தியில்லை என்றும், சட்டம் பற்றிய பகுதியில், ஜவகர்லால் நேருவுக்குத் திருப்தியில்லை என்றும், சிறைக்கைதிகளின் விடுதலை பற்றிய பகுதியில் யாருக்குமே திருப்தியில்லை!” என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாருக்குமே திருப்தி தராத அந்தப்பகுதி காந்தி-எர்வின் உடன்படிக்கையின் (ii)ம் பகுதியாகும்.

அப்பகுதி வருமாறு:

“ Soldiers and police convicted of offences involving disobedience of orders. (in the very few cases that have occurred) will not come within the scope of amnesty.”

அதாவது காங்கிரசால் நடாத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற மிகச் சில பொலிசார் மீதும், ராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தால் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை, இந்த உடன்படிக்கை கட்டுப்படுத்தாது என்பதே இப்பகுதி உணர்த்தும் பொருளாகும்.

இந்த ஒப்பந்தம் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 5ந்திகதி கையெழுத்திடப்பட்ட பின்பு 28ம் திகதியளவில் கராச்சியில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற இருந்தது. இந்த இடைவெளியில் திரைமறைவில் நடைபெற்ற விடயங்களை இப்போது பார்ப்போம்.

1929ம் ஆண்டு ஏப்பிரல் 8ம் திகதியன்று சட்டசபை வெடிகுண்டுச் சம்பவம் நடைபெற்றபோது பகத்சிங் மக்களிடையே புகழ்பெற்றவராக இல்லை. ஆனால் 1931ம் ஆண்டுக்குள் பகத்சிங்கின் புகழ் உச்சநிலையை அடைந்தது. இந்தியா முழுவதும் பாமர மக்களிடையே கூட பகத்சிங் பற்றிய வீரக்கதைகள் பேசப்பட்டன. அந்த நேரத்தில் காந்தியின் புகழ் அளவிற்கு பகத்சிங் இணையாக புகழ் பெற்றிருந்தார் என்று காங்கிரஸ்கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்று ஆசிரியரான பட்டாபி சீதாராமையா,

The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம், 456வது
பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில் பகத்சிங்கின் புகழைக் கண்டு ஆங்கில அரசாங்கமே கலங்கி நின்றது. பகத்சிங்கின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்தவேளையில்தான் காந்தி -எர்வின் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது. காந்தி-எர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டாலும் ‘பகத்சிங்கின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தாலேயன்றி, மார்ச் மாத இறுதியில் கராச்சியில் கூடவிருக்கும் காங்கிரஸ் மாநாடு ஒப்பந்தத்தை ஏற்காமல் போகும் வாய்ப்புகள் தென்படுகின்றன’ என்று இரகசியப் புலனாய்வுத் துறை, எர்வின் பிரபுவின் செயலாளரான எமர்சன் என்பவருக்கு குறிப்பு அனுப்பியது.
ஆதாரம்; NAI –File No. Home/Poll/4/21/1931 (P.27(I)

இந்தச்சூழலை நன்கு விளக்கி எர்வின் பிரபுவின் செயலாளரான எமர்சன் 15-3-1931 அன்று காந்திக்கு ஒரு கடிதத்தை எழுதுகின்றார். பகத்சிங்கை, கராச்சி காங்கிரசுக்கு முன்பாகவே தூக்கில் போட்டு விடுவது குறித்து அக்கடிதத்தில் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. ஆதாரம்: ஐடீசுனு (IBRD (Page 28))

இங்குதான் இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு பெரிய மாற்றம் நடைபெற்றுள்ளது பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, இந்தத் தண்டனையை எப்போது நிறைவேற்றலாம் என்றுதான் மகாத்மா காந்தி ஆங்கில அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ள விடயம், அரசாங்க கோப்பில் உள்ளது. – The Tribune, 09-04-1931.

பட்டாபி சீதாராமையாவும் இதனை ஒப்புக் கொள்ளுகின்றார். கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கூட்டம் முடியும்வரை பகத்சிங் முதலானோரது தூக்குத்தண்டனையை ஒத்திப்போடுவதற்கு ஆங்கிலேய அரசு தயாராக இருந்த போதிலும், காந்தியாரோ அந்த இளைஞர்களை காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரேயே தூக்கிலிடுவதுதான் நல்லது என்று உறுதியாக கூறிவிட்டதாகவும் சீதாராமையா எழுதியுள்ளார். அந்த வரிகளை அப்படியே தருகின்றோம்.:

"Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.”

அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து எமர்சன் 20-03-1931 அன்று காந்திக்கு எழுதிய கடிதத்தில், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி. . . என்று தொடங்குகின்றார்.

அக்கடிதத்தில், அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அக்கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் பெரும் உணர்ச்சியைத் தூண்டக்கூடும் என்பதனால், அதனை எப்படி ஒதுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திற்குக் காந்தி உடனடியாகப் பதில் அளிக்கின்றார்.

அதன் தமிழாக்கம் வருமாறு: திகதி மார்ச் 20, 1931..

என் அருமை எமர்சன்,

சற்று நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்துக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்ட அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னால் இயன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன், என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகின்றேன். . . என்று மேலும் எழுதி, எம்.கே. காந்தி என்று கையொப்பம் இட்டுள்ளார்.

இதேவேளை, பகத்சிங்கின் தந்தையான கிஷன்சிங், தாளாத பாசத்தின் காரணமாக ஆங்கிலேய அரசிற்கு கருணைமனு ஒன்றைக் கொடுத்து, பகத்சிங்கை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தார்.

இதனைக் கேள்வியுற்ற பகத்சிங் மிகவும் கோபமடைந்தார். அவர் தனது தந்தைக்கு எழுதிய நீண்ட, கடுமையான பதில் கடிதம் அவருடைய தியாகத்தையும், துணிவையும் காட்டுகின்றது. அக்கடிதத்தில் ஓரிடத்தில் அவர் இவ்வாறு எழுதுகின்றார்.

“நான் எனது முதுகில் குத்தப்பட்டதாக உணருகின்றேன். இதே காரியத்தை வேறு யாரேனும் செய்திருந்தால் அது துரோகத்திற்குச் சற்றும் குறைவானதல்ல என்றே கருதியிருப்பேன். ஆனால் உங்களைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான பலவீனம் என்றே சொல்லுகின்றேன்.”

23-3-1931 அன்று இரவு 7-33 மணிக்குச் சாவைச் சந்தித்த கடைசி நிமிடம்வரை பகத்சிங்கும் அவரது தோழர்களும் உற்சாகமாகவே இருந்தார்கள். இறுதி நேரத்திலும் பகத்சிங், மங்கிய வெளிச்சத்தில், மங்காத ஆர்வத்துடன் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். அது தடை செய்யப்பட்ட ஒரு சிவப்புப் புத்தகம்.- லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்.”

அந்த இறுதிநேரம் வந்தது. தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்து கதவைத் தட்டுகிறார்கள். அவர்கள் பக்கம் திரும்பி பகத்சிங் கேட்கின்றார்., “இன்னும் இரண்டு பக்கங்கள் தான் பாக்கி இருக்கின்றன. படித்துக்கொள்ளட்டுமா?’

பிரமித்து நிற்கிறார்கள் காவலர்கள். எப்படிப்பட்ட மனிதன் இவர்? லெனினின் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு, தூக்குமேடையை நோக்கி நடந்து செல்கின்றார் பகத்சிங்.

மாஜிஸ்ரேட், சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், போன்ற உத்தியோகத்தர்கள் முன்புறமுள்ள பெரிய வாயில்வழியாக வராமல் விசேட விசாரணைக்கோட்டுக்குப் போகும் வழியாக உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்த பகத்சிங்,‘நீங்கள் பாக்கியசாலிகள்! இந்திய மண்ணின் வீரர்கள், தங்கள் நாட்டின் விடுதலைக்காக புன்னகையோடு சாவைத்தழுவும் காட்சியை நேரில் பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு
கிடைத்திருக்கிறது’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

தூக்குமேடையில் பகத்சிங் நடுவில் நின்றார். ராஜகுரு அவருக்கு வலது பக்கத்திலும், சுகதேவ் அவருக்கு இடது பக்கத்திலும் நின்றார்கள். சுருக்குக் கயிறு அவர்கள் மீது மாட்டப்பட்டபோது அவர்கள் அதை முத்தமிட்டார்கள். மூவரும் ஒருவரையொருவர் கடைசித் தடவையாக தழுவிக் கொண்டு தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். பேசத் தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள் தூக்குப்பலகை தட்டி விடப்பட்டது. பகத்சிங் ஒரு கணத்தில் உயிர் இழந்தார். அவரைவிட மெலிந்திருந்த மற்ற இருவரும் மரணமடைய மேலும் இரண்டொரு விநாடிகளாயின.

இத்தகைய உயரிய விடுதலை வீரனுக்கும், அவனது தோழர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்

அன்புக்குரிய நேயர்களே..

இந்தக் கட்டுரையில் தரப்பட்ட கருத்துக்கள் பல ஆய்வு நூல்களிலிருந்தும், உண்மையான ஆவணங்களிலிருந்தும் சம்பந்தப் பட்டவர்களின் கடிதங்களிலிருந்தும் பெறப்பட்டவையாகும். கிட்டத்தட்ட 24 தமிழ் நூல்களும், 22 ஆங்கில நூல்களும், 130 அடிக்குறிப்புக்களும் அடித்தளமாக அமைந்தன. முழுமையாகத் தொகுத்து அளிப்பதற்கு ‘பகத்சிங்கும் இந்திய அரசியலும்’ என்ற நூலும் 1931ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘வீரத்தியாகி சர்தார் பகத்சிங்’ என்ற நூலும் பேருதவி புரிந்தன. பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியற் தலைவர்கள், ஆங்கில அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் போன்றவர்களின் குறிப்புக்களும், கடிதங்களும் எமக்குப் பல விடயங்களைப் புரிய வைக்க உதவின.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்...

தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்றால், அனிதா, தன்னை பிவிஎஸ்சி படிக்க தயார்படுத்திக் கொண்டிருந்துள்ளார். அப்படியிருந்த சூழலில் அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது மர்மமாக உள்ளது... அனிதாவிற்கு வெளியில் இருந்து ஏதோ ஒரு சக்தி அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தூண்டியுள்ளதாகவே நான் சந்தேகப்படுகிறேன்- தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் முருகன் பரபரப்பு பேட்டி...


யார் யாரெல்லாம் வதந்தி பற்றி பேசணும்னு ஒரு வரைமுறை இல்லாமல் போச்சு...


நாங்கள் முந்தி தரோம்னு வதந்தியை கிளப்பி விடுற (வ)ந்தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே வதந்திக்கு விளக்க உரை கொடுக்கிறான்...

என்ன கொடுமை சார் இது...

மூணு வருசமா பீலா மன்னன் பாஜக மோடி செஞ்சது, இப்படி பேரை மாற்றி வெட்டி பந்தா செய்தது மட்டும் தான்...


பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்..


லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது.

மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது.

இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

(காந்தி இர்வின் ஒப்பந்தம்)

இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள்’ எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது.

ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது.

அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர்.

அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை.

காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை..

பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?” என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது” எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்.

“முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்…

இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே.

காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.” ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லைதான்!

காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர்.

கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன.

ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். “பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர்.

மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்” என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். “மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of Birhenhead P.305)

மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும்.

1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.

- காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு என்ற நூலின் ஒரு பகுதி.

கீழைக்காற்று வெளியீட்டகம்,

10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15

இலங்கை வித்தியா படுகொலை , 7 பேருக்கு மரண தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...


உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு...


சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் தங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி, இரண்டையுமே தங்களுடைய தோளில் ஏந்திக் கொள்கிறார்கள்.

சாமானியர்கள் வெற்றிகள் வந்தால் ஏந்திக் கொள்ள தங்கள் தோள்களைத் தயாராக்குகிறார்கள். தோல்வி நெருங்கும் போதோ சுண்டுவிரலைத் தயாராக்குகிறார்கள், அடுத்தவர் மீது பழியைப் போட..

நமது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது கடினமான வேலை. அதற்கு தளராத மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும்.

நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும்போது தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது. ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனும் வேட்கையும், தவறி விழுந்தால் உடனே எழவேண்டும் எனும் உந்துதலும் அப்போதுதான் உருவாகும்.

இதுதான் வெற்றியாளர்களை உருவாக்குகிறது!
இதுதான் சாதனையாளர்களைச் சம்பாதிக்கிறது!

கொஞ்ச நேரம் உங்கள் அலுவல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு உறவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? உங்கள் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்?

அடுத்தவர்களை குறை கூறும் முன், 'நானும் இதற்கு ஒரு காரணமா?' என ஒரு நிமிடம் நிதானித்துப் பாருங்கள்.

இதுவரை உங்கள் மனதிற்குத் தெரியாத ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவரும்! உங்கள் மனதின் கண் சட்டென இமை விரிக்கும்.

பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன் என்போம், கோபத்துக்குக் காரணம் தோழி என்போம், ஏமாற்றத்துக்குக் காரணம் மேலாளர் என்போம்.

நமக்கு வெளியே இருப்பவைதான் நம்மை இயக்குகின்றன, நமது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்று நாம் கருதிக் கொள்வதே இதன் காரணம்.

நமக்குள்ளே நாம் மூழ்கி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் துவங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது ஈகோவோ, பொறுமையின்மையோ, திறமையின்மையோ ஏதோ ஒன்று இதன் காரணமாக இருக்கும்.

காரணங்கள் நமக்குள்ளேயே இருப்பது நல்லது. நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! பிறரிடமோ, சூழ்நிலையிடமோ நமது வெற்றி தோல்விக்கான சுக்கான் இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.

'டைமே இல்லை... இருந்திருந்தா நல்லா எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பேன்' என பலரும் சொல்வதுண்டு. உடற்பயிற்சி செய்யாத சோம்பேறித் தனத்தையும், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடாத கட்டுப்பாடற்ற மனதையும் தப்ப வைப்பதற்காகச் சொல்லப்படும் பொய்- `டைம் இல்லை'.

அந்த சிந்தனையை மாற்றி, 'நாம்தான் அதன் காரணம்' என யோசித்துப் பாருங்களேன்! அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது, வேலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, நடப்பது, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவது... என செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் தோன்றும்.

'நானே பிரச்சினை' என புரிந்து கொள்பவர்கள் 'என்னால்தான் தீர்வு' என்பதையும் அறிந்து கொள்வார்கள்.

தோல்விகளில் மட்டுமல்ல, வெற்றிகளிலும் இப்படியே நடந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒரு வெற்றி வந்தால் அதற்குக் காரணமும் நீங்களே என உங்கள் மனதைப் பாராட்டுங்கள். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வரும். வெற்றிகளில் கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியம். அதே நேரம் வெற்றிக்குக் காரணமான உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியதும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

உங்கள் செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கு எஜமானன் என்பதைப் போல. 'என்னால் முடியும்' எனும் தன்னம்பிக்கையின் வேர் அது. அது உங்களுக்கு நீங்களே தரும் சுதந்திரம். உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளும் கிரீடம்.

'என் செயல்களுக்கு நான் காரணம் அல்ல' என்பவர்கள் அடிமை மனநிலையினர். எப்போதுமே ஏதோ ஒன்றின் அடிமையாய் இருப்பதிலேயே பழகிப் போகின்ற மனநிலைமை. இவர்கள் எக்காலத்திலும் உயரிய இருக்கைகளுக்கு வந்தமர முடியாது.

சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா? 'நானும் காரணம்தான், ஆனா நானே முழுக் காரணமல்ல'. இது நம்முடைய வெற்றி தோல்விக்கு இன்னொருவனையும் கூட இழுத்துக் கொள்வது.

'இருட்டில் நடக்கப் பயமாய் இருந்தால் கூடவே ஒரு நண்பனையும் இழுத்துக் கொண்டு போவது போல'. இது தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடு, அச்சத்தின் வெளிப்பாடு, தோற்றுப் போய்விடுவோமோ எனும் தடுமாற்றத்தின் விளைவு.

நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டால், இதுவே தருணம். இப்போது அந்த சிந்தனைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையுங்கள்.

'உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம்' என்கிறார் ரால்ப் மார்ஸ்டன்.

தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் `யாரைக் குறை சொல்லலாம்' என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வெற்றிகளில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தோல்விகளில்தான் கற்றுக் கொள்வீர்கள்.

கூடைப்பந்து விளையாட்டுப் பிரியர்களுக்கெல்லாம் பிரமிப்பைத் தரும் பெயர் மைக்கேல் ஜோர்டன். அவர் தனது வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'இருபத்து ஆறு விளையாட்டுகளில் என்னிடம் தரப்பட்ட கடைசி வாய்ப்பில் தோல்வியடைந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருந்ததால் தான் என்னால் வெற்றியாளனாய் மாற முடிந்தது. காரணம் எனது தோல்விக்கான காரணம் நான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்கிறார்.

தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்பவர்கள் பாசிடிவ் மனநிலையினர். வாழ்க்கையை எதிர்மறையாய் அணுகுபவர்களே அடுத்தவர்களை நோக்கிக் குறை சொல்கிறார்கள் என்கிறது தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஆராய்ச்சி ஒன்று.

அடுத்தவர்கள் மேல் பழி போட்டு ஹாயாக பொய்களின் மேல் படுத்துறங்குபவர்களின் பட்டியலில் மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு. தங்களுடைய 'இமேஜ்' போய் விடக் கூடாது என்பதற்காக பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் தைரியமான தலைவர்களோ தங்களுடைய தவறுக்கு தாங்களே பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்யும் வழியை யோசிப்பார்கள். பிறர் மேல் பழி போடாத தலைவர்களைக் கொண்ட நிறுவனம் உயரங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், 'இப்படித் தான் நீ சிந்திக்க வேண்டும்', 'உன்னுடைய உணர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் யாராச்சும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியுமா?

உங்களுடைய சிந்தனைகளும், உணர்வுகளும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது, செயல்கள் மட்டும் உங்களிடம் இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எந்த ஒரு செயலையும் நமது மனம்தான் தீர்மானிக்கிறது. சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பதைக் கூட நாமேதான் தீர்மானிக்கிறோம். ஒருவரை திட்ட வேண்டுமா, பாராட்ட வேண்டுமா என்பதையும் நாமேதான் தீர்மானிக்கிறோம்.

காலையில் அவசரமாக காரோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே ஒருவன் வந்தால் திட்டுகிறோம். `டிராபிக்கில் சட்டென குறுக்கே வந்ததால் திட்டிட்டேன்' என பழியைத் தூக்கி வெளியே போடுகிறோம்.

எப்போதாவது 'என்னோட கோபத்தால் திட்டிட்டேன்' என்று சொன்னதுண்டா?

சின்னச் சின்ன செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதானே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் முதல் படி?

உங்களுடைய திறமைகளின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காதபோது தான் அடுத்தவர் களையோ, விதியையோ, சூழலையோ குற்றம் சுமத்த முயல்கிறீர்கள். 'தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதவர்கள் மரியாதை குறைவானவர்களாகவும், அதிகம் கற்க முடியாதவர்களாகவும், பிறரை போல திறமையாக செயல்படாதவர்களாகவும் மாறிவிடுவார்கள்' என்கிறது ஆராய்ச்சி ஒன்று.

பயத்தைப் புறந்தள்ளி, தன்னம்பிக்கையைக் கையில் எடுத்து, தன்னையே நேசித்து, தாழ்மையைக் கைக்கொண்டு, தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது வெற்றிக்கான ரகசியம்.

உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு
உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு...