17/03/2018

தமிழர் சிற்பக்கலை...


சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் மண்ணீட்டாளர்கள் எனப்பட்டனர்.

அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள்.

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார்.

நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப் போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன.

மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார்.

நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்...

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - வெற்றி நிச்சயம்...


நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி – தோல்வியை அடைகிறது..

வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள்.

ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது.

மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனை தான் மனப்பான்மையாக மாறுகிறது.

வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை.

இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாக மாறுகிறது.

நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும்.

நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம்.

ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத் தரும் சக்தி உண்டு, ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது.

உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு..

” Positive thinking always ever success
Nagative thinking always never success”

எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக் கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப் போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும்.

ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு – தியானத்திற்கு அமர்வது போன்று – சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க.

இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும்.

ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும்.

நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும்.

ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும்.

நம் வாழ்க்கை என்பது நம் எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது.

எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே.

எணணம் – செயல் ஆகிறது,
செயல் – பழக்கம் ஆகிறது,
பழக்கம் – வழக்கமாகிறது.
வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது.

சிந்தனையிலிருந்து – செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம். எண்ணம் திண்ணம் பெறும் போது நினைத்ததை அடைய வெற்றியாக முடிகிறது.

ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் – தியானம் தவம் எனப்படுகிறது.

தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம்.

ஆழ்மன கட்டளை கொடுக்கும் போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள்.

உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது.

எனவே ஆழ்மன சிந்தனை – தியானம் மூலம் வெற்றி நிச்சயம்...

திமுக தான் இந்தியை எதிர்த்து போராடியது என்று ஆட்சியை பிடித்து தமிழின தலைவர் என்ற போர்வையில் 50 ஆண்டு ஏமாற்றியவர்கள்...


பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க...


கிராமப் பகுதியில் மாலை நேர விளையாட்டுகளில் இந்த பச்சைக்குதிரை விளையாட்டு நிச்சயம் இருக்கும், அதுவும் நிலா வெளிச்சத்தில் தான் அதிகம் விளையாடுவோம். பக்கத்து வீட்டு பசங்க, அவர்கள் உறம்பறை பசங்க என எல்லாரும் கூட்டமாக சேர்ந்து சின்ன பையனில் இருந்து பெரியவர் வரை வரிசையாக நின்று கொண்டு, அதில் ஒருவனை தேர்ந்தெடுத்து குனிய வைத்து வரிசையாக தாண்டுவதும், தாண்ட முடியாமல் கீழே விழுபவர்களைக் குனிய வைத்து விடுவோம்.

குனிந்து இருப்பவர் படிப்படியாக உயரம் அதிகரித்து குனிந்து நிற்பார், அப்போது தூரத்தில் இருந்து ஒடியாந்து குதித்து தாண்டும்போது சுற்றி இருப்பவர்களின் கரவோசம் மிக சந்தோசமாக இருக்கும், இதில் வெற்றி பெறுபவர்கள் 10 நாளைக்கு இந்த கதையவே சொல்லி சொல்லி மகிழ்வார்கள்...

இன்றைய குழந்தைகளிடம் பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க என்று சொல்லிப்பார்த்தால் பேந்த பேந்த விழிக்கின்றனர் இதைப்போன்ற பல விளையாட்டுக்களை அவர்கள் அறியாமலே இருக்கின்றனர் என்பது தான் மிக வருத்தமான செய்தி.

குழந்தைக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தாலும் பெற்றோர்கள் இது போன்ற பழைய விளையாட்டுக்களை சொல்லித்தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை..

நிச்சயம் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் நம் சிறார் வயதில் இந்த விளையாட்டை ரசித்து அனுபவத்து விளையாடி இருப்போம்.. நம் அனுபவத்தை அசைபோடுவோம்...

உனது அரசியல் உனது சிந்தனையில்...


வாகன தணிக்கையில் உரிமை கோரப்படாத மற்றும் திருட்டு வாகனங்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு...


மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு நடவடிக்கையின்போது 53 உரிமை கோரப்படாத வாகனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை செய்ததில், மேற்படி வாகனங்களின் உரிமையாளர்கள் விபரங்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் இணையதளம் மூலமாக பெறப்பட்டு, தகுந்த ஆவணங்கள் கொடுத்து வாகனத்தை பெற்றுக்கொள்ளும்படி வாகன உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் சரிபார்த்த பின் வாகன உரிமையாளர்களிடம் 15.03.2018 தேதியன்று மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் 53 வாகனங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

வாகனத்தை பறிகொடுத்து பல ஆண்டுகள் ஆனதால் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்த ஐந்து உரிமையாளர்களிடம்  வாகனங்கள்  8  வருடங்களுக்கு பின் ஒப்படைக்கப்பட்டது. இதனால் வாகன உரிமையாளர்கள் மதுரை மாநகர காவல்துறைக்கு தங்களது நன்றியையும், அளவுகடந்த மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

கடந்த 18.01.2018-ம் தேதியன்று 90 வாகனங்களை வாகன உரிமையாளர்களிடம் மதுரை மாநகர காவல்துறை ஒப்படைத்தது குறிப்பிடதக்கது...

கார்பரேட்களின்.. நாகரிகம் எனும் ஏமாற்று வியாபாரம்...


ஜப்பானீஸ் சைக்காலஜி...


உங்கள் பெயரில 3வது எழுத்து என்ன இருக்கிறதோ அது தான் உங்கள் கேரக்டர்...

A - GIFTED
B - LOVED BY ALL
C - INNOCENT
D - TALENTED
E - GOOD BUT HURTS
F - FEEL FOR OTHERS
G - LOGICAL THINKING
H - CALM
I - RESPECTED
J - ENJOY LIFE
K - LOVABLE
L - FUNNY
M - GREAT PERSON
N - PROUD
O - SPORTIVE
P - SMILING
Q - COOL
R - UNPREDICTABLE
S - CARING
T - GENUINE
U - PRACTICAL & GENIUS
V - ANGRY
W - TAKE IT EASY
X - INTELLIGENT
Y - ENJOYABLE
Z - JOVIAL...

மக்கள் ஒவ்வொருத்தன் மீதும் 45000 கடன்... அரசியல்வாதி ஒவ்வொருத்தனும் பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரன்...


வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்...


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் காணப்படுகின்றது.

பலாப்பழத்தின் மேற்புறம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.

இப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.

வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது.

அதாவது வயது முதிர்தலை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.

கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.

பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது...

இது தான் உங்களின் உலகமயமாக்கலின் வளர்ச்சியா..?


உயிரே போனாலும் குவாரி செயல்பட விடமாட்டோம் - நாம் தமிழர் கட்சியினர் கொந்தளிப்பு...


பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 20 ம் தேதி கல் குவாரிகள் ஏலம் விடப்படுமென மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் அளவுக்கு அதிகமான வெடி மருந்துகளை திணித்து பாறைகளைப் பிளப்பதால் ஏற்படும் கடுமையான நில அதிர்வு, அதனால் சுற்றுவட்டாரக் குடியிருப்புகளில் ஏற்படும் விரிசல், சுற்றுச்சூழல் மாசு, நுரையீரல் நோய்தாக்கம் போன்ற காரணங்களால் பல்வேறு கிராம மக்கள் கல்குவாரி ஏலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திடீரென 19-ம்தேதி மாலை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த கல்குவாரிகளுக்கான ஏலம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 34 கல்குவாரிகளுக்கு ஏலம் நடத்த மாவட்ட நிர்வாகம் டெண்டர் கோரியிருந்தது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் ஆளுங்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். இதனையறிந்து நாம்தமிழர் கட்சியினர் அதன் மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை 50-க்கும் மேற்பட்ட போலீஸாரை குவித்ததுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு அரசு அலுவலர்கள் தவிர யார் வந்தாலும் சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதித்தது.

இதனால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த நாம்தமிழர் கட்சியினர் பின்னர் புதுபஸ்டாண்டு சென்று அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், "மக்களை அழித்துவிட்டு யாரோ ஒருவர் சம்பாதிக்க இந்த அதிகாரிகள் துணை போகிறது மாவட்ட நிர்வாகம். எங்கள் உயிரே போனாலும் மக்கள் குவாரி செயல்பட விடமாட்டோம்" என்றனர். இதற்கிடையே, குவாரிக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் போரட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/119280-we-will-not-let-the-quarry-go-on-life-says-naam-tamzhilar.html

இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலங்களின் முதன்மை இடம் வகிக்கும் தமிழ்நாடு அரசு ஏன் கடன் வாங்கி அரசு நடத்த வேண்டும்?


பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்...


யோவ் ஜெகன் மோகன் ரெட்டி, இவனுங்கள எல்லாம் வைச்சிக்கிட்டு எப்படியா...

37 பேர் இங்க இருகாணுங்க... அப்படியே சொல்லுவானுங்க மோடி சிறப்பான ஆட்சி தருவதால் வெளியில் இருந்து ஆதரவு ன்னு...

ஏன்னா, இவனுங்களே மைனாரிட்டி தான்...

குடும்ப அரசியலை எதிர்க்கும் உத்தமர் ஓபிஎஸ் தர்மயுத்த அரசியல்...


அப்பன மாதிரியே மவனும் அல்பயா இருக்கான்...

அனைத்து டாக்டர்கள் சங்கங்களின் ஆர்ப்பாட்டம்....


நாள்: 22.03.18 வியாழன் , மாலை 4.00 மணி.

இடம்:
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,கடற்கரை இரயில்வே ஸ்டேஷன் எதிரில்,சென்னை.

கோரிக்கைகள்:

முதுநிலை மருத்துவக் கல்வியில், அகில இந்தியத் தொகுப்பில், இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

முது நிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரத்தையும், கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மத்திய- மாநில அரசுகளுக்கே வழங்கிடும் வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தத்தை செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசின் டாக்டர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு மற்றும் சலுகைகளை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு,தேசிய உரிமத் தேர்வை (NLME) திணிப்பதை கைவிட வேண்டும்.

அனைவரும் வருக..

ஆதரவு தருக..

இவண்,
சமூக சமத்துவத்திற்கான டாகடர்கள் சங்கம் (DASE).
அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம்(GADA).
அரசு மருத்துவர்கள் நலச் சங்கம்( SDWA).
DNB டாக்டர்கள் சங்கம்( DNBDA).
சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம்(IDPD).
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு(TNMSA).
IDPD - மருத்துவ மாணாக்கர் பிரிவு.

தொடர்புக்கு:
9940664343, 9444183776...

சோப்பும் கார்பரேட் வியாபாரமும்...


மக்களை ஏமாற்றும் கார்ப்பரேட் அதை நம்பி வாங்கும் சுய சிந்தனை இல்லா மக்கள்...

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்...


மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வருகிறது.

ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளார்.

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி விலகல் குறித்து ஒரு மணி நேரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது...

மாற்று அரசியல் வேண்டும். அது லஞ்சம் ஊழல் இல்லாத அரசியலாக வேண்டும்...


இலுமினாட்டி - உறுப்பு தான பதிவு அட்டை மோசடி...


உலகை ஆளும் இலுமினாட்டிகள் , நல்ல விசயங்கள் செய்வது போல் காட்டிக் கொண்டு , மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.. அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை...

இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப்பற்றி பெரிதளவு தெரியாது. திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது. விளைவாக நாம் அதைப்பற்றி அறிய ஆரம்பித்தோம்.

பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..

அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள். அது தான் உறுப்பு தான அட்டை (organ donor card).

ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக் கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை..

ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம்..

இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும். ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்... எப்படி என்கிறீர்களா ?

ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பைய்யன் , அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது , அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி ..

ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டு பிடித்து , அவரை விபத்துக்குள்ளாக்கி , மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி, அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம்..

இது இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம், ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள்.. பதியாதீர்கள்..

இதோ இன்று இந்த இரகசியம் வெளி வந்து விட்டது...

உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக் கொள்ளுங்கள்.. அறிவற்ற எந்த இனமும் வாழாது...

தமிழ் தேசிய அரசியல் மட்டுமே தமிழரை காக்கும்... இந்தியம், திராவிடம் இது இரண்டையும் நம்பி நம்பி ஏமார்ந்தது போதும்.. விழித்திடு தமிழா...


நிலத்தின் மீதான நம் உரிமையை நிலைநாட்ட நம் பலத்தை காட்டுவோம்...


விவசாய விளைநிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் எடுத்து செல்வதை எதிர்த்தும், தேசிய & மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் பூமிக்கடியில் கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டு செல்ல வலியுறுத்தியும்.. நாளை (17/03/18) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் பேருந்து நிலையம் அருகில் கொசவம்பாளையம் சாலையில் நடைபெறும் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு குடும்பத்தோடு பெருந்திரளாக உழவர்கள் அணிதிரண்டு பங்கேற்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

அனைத்து உழவர் இயக்கங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவோடு நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள உழவர்களும் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் அணிதிரண்டு உரக்க குரல் கொடுத்தால் தான் நம் நிலத்தின் மீதான நம் உரிமையை காப்பாற்ற முடியும்.

ஒன்று படுவோம்
வென்று காட்டுவோம்..

இவண்
N.S.P.வெற்றி
செயல் தலைவர்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்
&
ஏர்முனை இளைஞர் அணி...

பாஜக பினாமி அதிமுகவின் நீர்நிலை ஊழல்...


ஒன்றாம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை போராட்டத்தில் இறங்கிய தாய்...


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் சேதுபாண்டியை தனியார் பள்ளி ஆசிரியை  அடித்ததாக கூறி ஆத்திரம் அடைந்த சிறுவன் சேது பாண்டியின் தாயார் பள்ளி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்காததால் சாலை அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டதால் போலீசாரிடம் கடும் வாக்குவாதம்...

இயற்கையையும் விவசாயத்தையும் மீட்டெடுக்க வேண்டும்...


சிட்டுக் குருவிகள் அழிவுக்கு முக்கிய காரணங்கள் என்ன..?


1.வாழ்விடங்களின் அழிவு.. அடைக்கல குருவி எனப்படும் இந்த வகை சிட்டுக் குருவிக்கு மரங்களில் கூடு கட்டத் தெரியாது நமது வீடுகளில் உள்ள பொந்துகள் மற்றும் இடுக்குகளில் வைக்கோல் மற்றும் நார்களை திணித்து முட்டையிடும். நம்முடைய நவீன வீடுகளில் கொசு கூட நுழைய விடாமல் அடைத்து விடுகிறோம் இதில் குருவிக்கு இடம் ஏது.

ஆக குருவிகள் வாழ்விடங்களை இழந்தன.. நமது இல்லங்களை தமது வாழ்விடங்களாக்கி கூடு கட்டி குஞ்சு பொரித்து குதூகலித்து திரிந்த இந்த சின்னஞ்சிறு உயிரைப்பற்றி நாம் கவலையின்றி நாம் வீடுகளை வடிவமைத்து விட்டோம்.

2.உணவு தட்டுப்பாடு.. அன்று முற்றத்தில் காய வைத்திருக்கும் தானியங்களை குருவிகள் தின்று பசியாரும். முற்றத்தில் சிந்தியிருக்கும் நீரை குடித்து குளித்து கும்மாளமிட்டு செல்லும் இன்று அதற்கு வாய்ப்பே இல்லை தண்ணீர் குழாய் வழியே வந்து குழாய் வழியே பாதாள சாக்கடைக்கு செல்கிறது.ஆக வந்தது தட்டுப்பாடு உணவுக்கும் நீருக்கும்.

3.நவீன விவசாயம்.. குருவிகள் தானியங்களை மட்டும்தான் உணவாக உண்டாலும் குஞ்சு பொரித்திருக்கும் சமயம் குஞ்சுகளுக்க.காக பூச்சிகளை பிடித்துவரும்.நவீன விவசாயம் என்ற பெயரிவ் பூச்சிக்கொல்லி விஷங்களை அதிக அளவில் பயன்படுத்தியதால் குருவிகளின் உணவு சங்கிலி பாதிப்புக்கு உள்ளானது.

4. குருவிகள் பகல் பொழுதில் பெரிய வேட்டை பறவைகளிடமிருந்து தப்புவதற்கு அடர்ந்த மரங்கள் உதவின.
நாம் கட்டடங்கள் கட்டுவதற்காக மரங்களை வெட்டி விட்டோம்.

5. சுற்றுச்சூழல் பற்றி கவலையின்றி காற்றையும், நீரையும் மாசுபடுத்தியதன் காரணமாக குருவி போன்ற பல உயிரினங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டோம்.

இறுதியாக குருவிகளை அழிவில் இருந்து மீட்க என்ன செய்ய வேண்டும்...

1. குருவிகளுக்கு நஞ்சில்லா தானியங்களை Feeder மூலமாவோ அல்லது மண் தட்டுக்களிலோ வைக்க வேண்டும்.

2 தண்ணீர் சிறிய மண் தட்டுக்களில் வைக்க வேண்டும்.

3. குருவிகள் கூடு கட்ட வீடு தோறும் சிறு மரப்பெட்டிகள் அல்லது மண்ணால் ஆன கூடுகளை வைப்போம் (அட்டைப்பெட்டி வேண்டாம்).

இன்னும் காலம் கடந்துவிடவில்லை அழிவின் விளிம்பில் நிற்கும் குருவிகளை காப்பாற்றுவோம் வாருங்கள் நண்பர்களே...

தமிழா விழித்துக்கொள்...


விவசாய நிலங்களைப் பற்றி கவலைப்படாமல் அதே இடத்தில் கெயில் திட்டத்தை தொடங்கச் சொல்லும் நீதிமன்றம்...


நீதிமன்றங்கள் மக்களுக்காகவா அல்லது அரசியல்வாதி மற்றும் கார்பரேட்களுக்காகவா..?

MSP - Minimum Support Price அதாவது குறைந்தபட்ச ஆதாரவிலை - இது விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதற்கு ஓர் அடிப்படை கணக்கீடு ஆகும்.

பிப்ரவரி 1-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு, உற்பத்தி செலவுடன் 50% லாபமும் சேர்த்து ஏற்கனவே ராபி பருவ விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறினார்.

இது உண்மைக்கு புறம்பானது என்பது விவசாய முன்னணிகளுக்குத் தெரியும்.

நாட்டின் பல பகுதி விவசாயிகளிடம் தற்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட MSP ஐ கூட விவசாயிகள் பெறவில்லை என்பதை விளக்குவதற்காகவும் நேரிடையாக மண்டிக்குச் சென்று இது எந்த அளவுக்கு அவர்களுடைய பொருளாதார நிலையைப் பாதித்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காகவும் சுயராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் தோழர் யோகேந்திர யாதவும், சுயஆட்சி இயக்கத்தின் வாழ்க விவசாய இயக்கமும் கர்நாடகாவில் AIKSCCயில் உள்ள ராஜ்ய ரியாது சங்கமும் விவசாயிகளை சந்திக்கின்ற MSP  சத்தியாகிரஹாவைத் தொடங்கி இருக்கின்றனர்.

ஒவ்வொரு மண்டிக்கும் செல்லுகிற இந்த சத்தியாக்கிரகம் வாழ்க விவசாயி இயக்கத்தின் சுயராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் மார்ச் 14ம் தேதி  கர்நாடகா மாநிலம் யாதகிரியில் தொடங்கப்பட்டு  அந்தந்த மாநிலங்களில் உள்ள AIKSCCயில் உறுப்பு இயக்கங்களும்  அந்தந்த பகுதியிலுள்ள பல விவசாய சங்கங்களும், அமைப்புகளும் இணைந்து பல மாநிலங்களுக்குச் செல்லுகின்றன.

யோகேந்திரயாதவ் முன்னெடுக்கும் இந்த MSP சத்தியாகிரஹத்தின் மூலம் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் உற்பத்தி செலவு, MSP விலை, சந்தைவிலை, விவசாயிகளின் இழப்பு என அனைத்தும் கள ஆய்வில் கேட்டறியப்பட்டு விவசாயிகள் எந்த அளவுக்கு சுரண்டப்படுகிறார்கள் என்பது இந்திய மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

ஒவ்வொரு மண்டியாக செல்லும் இந்த MSP சத்தியாக்கிரகத்திற்கு அரசு அதிகாரிகளுக்கும், பகுதியின் பிரபலங்களுக்கும், ஊடகங்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

சத்தியாக்கிரகம் முதல் கட்டமாக நடைபெறும் இடங்கள்...

The schedule of Phase I of MSP Satyagraha is:

14th March - Yadgir (Karnataka) 

15th March - Kurnool (Andhra) 

16th March - Suryapet and Kodad (Telangana) 

18th-19th March - Sri Ganganagar (Rajasthan)

20th March - Rewari (Haryana) 

21st March - Alwar (Rajasthan)

22nd March - Nuh (Haryana)

25th March - Rudrapur (Uttarakhand)

26th March - Pratapgarh (Uttar Pradesh) 

K. Balakrishnan
Tamilnadu Convenor 'வாழ்க விவசாயி இயக்கம்' (Jai Kisan Andolan)
Tamilnadu: 'சுயஆட்சி இயக்கம்' (Swaraj Abhiyan). Cell: 9444627827...

தமிழனின் சிறப்பை சொல்லி கொடுத்து குழந்தைகளை வளருங்கள்...


துப்பாக்கி, பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்த நெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள்.

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்றபட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்?

இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.

இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.

இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான்.

டையிலும், செருப்பு (shoe) நீங்கள் ஆரம்பித்து வைக்கும் கலாசாரம் இறுதியில் ஒருவகை இசை நடனங்களிலும் (disco) குடித்து களிப்பாட்ட விடுதிகளிலும் (bar) முடிகிறது.

தமிழின் கழுத்தில் கயிரை சுற்றி, சுருக்கு போட்டு, தூக்கு மேடையில் ஏற்றி, எங்களிடம் கயிற்றை கொடுத்து இழுக்க சொல்லிவிட்டு நங்கள் இழுக்கும் நேரத்தில் கொல்கிறானே, கொல்கிறானே என வாயில் அடித்து கொள்வதில் என்ன பயன்.

ஒரு வகையில் ஆங்கிலமும் முழுதும் தெரியாமல் தமிழும் தெரியாமல் பல பேரை அரை வேக்காடுகளாக இரண்டும் கெட்டான்களாக அலையை விட்ட உங்களை அல்லவா நங்கள் குறை சொல்ல வேண்டும்.

பம்பாய் கதாநாயகிகள் போல் தமிழ் பேசும் சுத்த தமிழ் பெண்கள் எத்தனை பேர்.

இலண்டனிலிருந்து இப்பொழுது தான் இறங்கியவர்கள் போல் தமிழே வாயில் நுழையாத இளைஞர்கள் எத்தனை பேர்.

வள்ளுவனும், ஒளவையும் நல்ல வேளை இன்று இல்லை இருந்திருந்தால் அவர்களையும் இவர்கள் கெடுத்திருப்பார்கள்.

மொழி, நாடு, சமுதாயம் என்று உயிரை விட்ட பாரதியையே நாம் அவன் இறந்த 10,20 ஆண்டகளுக்கு பிறகு தானே புரிந்து கொண்டோம்.

காக்கையும், குருவியையுமே தன் இனம், தன் உறவு என்று முழங்கியவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவுகளே மொத்தம் 10 - 15 தானே.

இந்த பதிவை இதோடு நிறுத்தலாம் இனி சொல்ல என்ன இருக்கிறது...

ஆனால் அப்படி செய்தால் நானும் வெட்டியாக குறை கூறுவோர்களில் ஒருவனாகி விடுவேன்.

அதற்கு பதில் எனக்கு தெரிந்த வரை நாம் இதற்கு என்ன செய்யலாம் என கூறுகிறேன்.

முதலில் தமிழை பேசுவதால் மட்டுமே தமிழ் வளரும் என்ற எண்ணத்தை விடுத்து தமிழில் எழுதவும், படிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அப்படி நாம் தொட்டிலான பள்ளி முதலே தமிழை கற்று கொடுக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கு 5 வகுப்பு வரை தமிழ் கட்டாயம் படமாக இருக்க வேண்டும் என்று சட்டங்கள் இயற்றப் பட்டது.

நமது மெத்த படித்த மேதாவிகள் அன்று அதை எதிர்த்து ரத்து செய்தனர்.

அந்த சட்டம் மீண்டும் வர வேண்டும். தனியாக பிராத்மிக், மத்யமா என இந்தியும், தனியார் கல்வி நிறுவங்களில் பிரெஞ்சும், யேர்மனும் பயிலும் நீங்கள் தமிழ் படிக்க முடியாதா?

முன் சொன்னது போல் தமிழர்கள் உலகத்துக்கே முன்னோடிகளாய் எப்படி வாழ்ந்தனர் என்றும், மேற்க்கை விட தமிழும் தமிழ் கலாச்சாரமும் எவ்வளவு பழமையானது, உயர்ந்தது என்றும் சொல்லி வளர்க்க வேண்டும்.

சேக்சுப்(ஸ்)பியருக்கு நூறு மடங்கான வள்ளுவனும், கம்பனும்.... அலக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் எந்த விதத்திலும் குறையாத ராசா ராசனும், நரசிம்மனும் வாழ்ந்த பூமி இது என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

தான் எங்கிருந்து வருகிறோம், தனது பூர்வீகம் என்ன என்று தெரியாததால் தான் இளைஞர்கள் இப்படி இருக்கின்றனர். "பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனுக்கு இது போதும்" என்று என் நண்பன் அடிக்கடி சொல்லுவான். அப்படி குழந்தைகளை பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனாக வளர்க்காமல், சேக்சுப்பியர் பேரனாக விளைந்த கொடுமையே இது, இதை மாற்றி இனிமேலாவது சேக்சுப்பியர் பேரன்களாக குழந்தைகளை வளர்க்காமல் இருக்க வேண்டும்.

ஒரு மரத்தின் ஆயுளும், வலிமையும் அதன் கிளைகளிலே இல்லை அதன் வேரிலேயே இருக்கிறது.

அப்படிப்பட்ட வேரான பூர்விகதையும், பண்பாட்டையும் புகட்ட பெற்றோர்களும், சமுதாயமும், பள்ளிகளும் முன் வர வேண்டும்.

ஆங்கிலத்தை முற்றும் புறக்கணித்து தமிழ் வழி கல்வியை நாட சொல்லவில்லை, குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழி பாடமாகவாவது கற்று கொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

இப்படி இறந்து கொண்டிருக்கும் தமிழை பேசி படித்து வாழ வைக்க நினைப்பது மரண படுக்கையில் இருக்கும் ஒருவரின் வாயில் தண்ணீரை ஊற்றி பிழைக்க வைக்க முயற்சிப்பதை போன்றதாகும்.

எனக்கு தெரிந்து தமிழை பிழைக்க வைப்பதை விட எப்படி நாம் அதை செழித்து வாழ வைக்க போகிறோம் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும். அதில் தான் நமது வெற்றி இருக்கிறது.

மாறாக, தார் பூசுவதிலும், வள்ளுவனின் சிலை வைப்பதிலும், செம்மொழி மாநாடுகள் நடத்துவதிலும் பயன் இல்லை.

பாரதி கூறிய "போலி சுதேசிகள்" போன்று "போலி மொழி பற்றாளர்களாக" மேடைகளிலே மட்டும் தமிழ், தமிழ் என பேசுவதற்காக சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மற்றவரை குறை சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

அந்த பாரதியே ஆங்கில கவிஞன் செ(ஷெ)ல்லியின் பரம விசிறி என்பதையும் நாம் நினைக்க வேண்டும். கண்மூடித்தனமாக சமுதாய கட்டாயங்களை மனதில் கொள்ளாமல் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள்.

முடிவில், தமிழ் கண் போன்றது, ஆங்கிலம் கண்ணாடி போன்றது. சில நேரங்களில் கண்ணாடியும் அணிய வேண்டி இருக்கிறது. அதற்காக கண்ணாடியையே கண்ணாக என்னும் மூடமையும் அனுமதிக்காமல் இருப்போம்...

பாஜக எச்.ராஜா சர்மாவும் மோசடிகளும் - மலரும் நினைவுகள்...


சீட்டு கம்பெனி நடத்தி சொந்த கட்சி காரங்க பணத்தை எல்லாம் ஆட்டைய போட்ட எச்ச ராஜா சர்மா எல்லாம் தேசப் பத்தனாம்...

புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்...


புளிச்சக்கீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

புளிச்சக் கீரையில் வைட்டமின் “ஏ”யும் தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன.

இக்கீரை உடம்புக்கு குளிர்ச்சியையும் செரிமான சக்தியையும் தருவதுடன் பித்தத்தையும் தணிக்கிறது. குடற்புண், மூத்திர நீரை வெளியேற்றுதல், இதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்ப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மலத்தை இளக்குகிறது. இக்கீரையின் புளிப்புத் தன்மையால் சிணுக்கு இருமல், மந்தம் நீங்கி, காய சித்தியும், வீரிய சக்தியும் உண்டாக்குகிறது. மேலும் வாத நோய் ருசியின்மை, சீதளம், இரத்தப் பித்த ரோகம், கரப்பான் வீக்கம் முதலிய நோய்களையும் நீக்கும்.

இந்தப் பூக்களைப் பிழிந்த சாற்றுடன் மிளகும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட, அரோசிகம், பித்த வாந்தி முதலிய நோய்களை நீக்கலாம். இவ்விதையின் எண்ணெயை வீக்கங்களுக்கும் ஊமைக் காயங்களுக்கும் தடவ வலி நீங்கும்.

இந்தக் கீரையைத் துவையலாகவும், சட்டினியாகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பொரியல், மசியல், குழம்பு போன்ற வேறு முறைகளிலும் இதைச் சமைக்கலாம்...

ஒபிஎஸ் மீது உள்ள வழக்கால் மத்திய அரசிற்கு பயந்து என்னை நீக்கியுள்ளார்கள் - அதிமுக கேசி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி...


பன்னீர் செல்வம் தொண்டவர்களை விற்று விட்டு பணம் சம்பாதிக்கும் துறையை வாங்கிக் கொண்டு நல்லா சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார் -  கேசி பழனிச்சாமி தொடர் பேட்டியால் சந்திசிரிக்கும் அதிமுக..

காவிரிக்காக பேசியது தப்பா உங்கள் எஜமானரை (மோடி) சமாதானப்படுத்த என்னை நீக்குவதா ? கேசி பழனிச்சாமி கேள்வி..

அவரின் தனிப்பட்ட கருத்து என்றாவது சொல்லிவிட்டு போயிருக்கலாமே ? நேத்து வந்த பன்னீரும் எடப்பாடியும் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது -  கேசி பழனிச்சாமி..

காவிரிக்கா அம்மா உண்ணாவிரதம் இருந்தார்கள் இந்த ஒபிஎஸ் இபிஎஸ் அதை காப்பாற்றாமல் தங்கள் மீது உள்ள வழக்குகளால் பயப்படுகிறார்கள் என் மீது எந்த வழக்கும் இல்லை நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை -  கேசி பழனிச்சாமி...

திராவிடம் என்பது வந்தேறிகளின் கூடாரமே...


வட மொழி செய்த வினைகள்... வந்தாரை வாழவைக்கும் தமிழகமல்லவா?


தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும் தமிழர், கடினமான உச்சரிக்க முடியாத வடமொழிச் சொற்களையும் கூறி மகிழ்ந்தனர்.

மனம் என்பது தமிழ்ச்சொல்; வடமொழியில் "ஹ்ருதய" எனக்கூறப்படும். வடமொழியை உச்சரிப்பது மிகக் கடினமானதாகும். அதற்கு முயற்சி அதிகம் தேவை. வாய், உதட்டளவில் தமிழை உச்சரிக்கும் நாம் வடசொல்லை உச்சரித்தால் அடிவயிற்றிலிருந்து முயலல் வேண்டும்.

தொல்காப்பியர் நாட்டில் மக்கள் வழங்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தார். அவர் சொற்களை "இயற்சொலல்", "திரிசொல்", "திசைச்சொல்" எனப் பிரித்தார். வழங்கிய சொற்கள் பல இம்மூன்று பகுப்பில் அடங்கவில்லை. "வடசொல்" என்று நான்காவதாக ஒன்றை வகுத்தார்.

வடசொற்களைத் தமிழில் எவ்வாறு உச்சரிக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார், "வடமொழிச் சொற்களை வடமொழி எழுத்துக்களைக் கொண்டே ஒலிக்காதீர்கள்; வடமொழி எழுத்துக்களை நீக்கி இணையான தமிழ் எழுத்துக்களில் உச்சரியுங்கள்" என்கிறார் தொல்காப்பியர். "ஹ்ருதய" என்பதை "இதயம்" என்று கூறுங்கள். "பங்கஜம்" என்பதைப் "பங்கயம்" என்று கூறுங்கள் என்கிறார் தொல்காப்பியர்.
"வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே"
என்பது தொல்காப்பிய நூற்பா, அவருக்குப் பின்வந்த நன்னூலார், இரண்டு வடமொழிச் சொற்களை இணைத்து எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுத்தார்.

"இராமன் + அயனம் = இராமாயணம்" என்பன போன்ற "வடமொழிப்புணர்ச்சி" விதி கூறுகிறார் நன்னூலார் பவணந்தி முனிவர்! இலக்கியத்திலும் அம்மொழி புகுந்துவிட்டதே காரணம்.

தொல்காப்பியத்தைப் பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பாடம் நடத்தினர். உரையாசிரியருடைய மாணவர்கள் கேட்டனர்; "ஐயா, திசைச்சொல் என்றால் எல்லாத் திசைகளிலும் இருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் என்று கூறுனீர்கள். வடக்கும் ஒரு திசைதானே அப்படியானால் வடசொல் திசைச்சொல்லுக்குள்தானே அடக்க வேண்டும். வடசொல் எனத் தனியாகக் கூறியது தவறல்லவா?" என்பது மாணவன் வினா.

தொல்காப்பியர் "வடசொல்" என வகுத்துவிட்டனர். உரையாசிரியர் அதைத் தவறென்று எவ்வாறு கூறமுடியும். மாணாக்கனுக்கு உரையாசிரியர் வலிந்து பின்வருமாறு கூறுகிறார். அவரால் மாணாக்கன் கேட்டது தவறென்று கூற முடியவில்லை. அவருக்கும் அது தவறென்று தெரியும்!

"மாணாக்கனே! நீ சொல்வது முற்றிலும் சரி. வடசொற்களைத் திசைச்சொல்லில்தான் அடக்கியிருக்க வேண்டும். ஆனால் நமக்கெல்லாம் ஆசிரியராகிய தொல்காப்பியர் "வடசொல்" என்று தனியாக வகுத்தது ஏன் தெரியுமா?

1. வடக்கு ஒரு புண்ணிய திசை
2. வடமொழி தேவ பாசை
3. வடமொழி எல்லாத் தேசத்துக்கும் பொது

ஆகையால் வடசொல்லைத் திசைக் சொல்லில் அடக்காது "வடசொல்" எனத் தனியாக நம் ஆசிரியர் தெல்காப்பியர் வகுத்தார் என்று மாணாக்கனுக்கு ஆசிரியர் கூறினார். அதைத் தவறு என்று கூற ஆசிரியருக்குத் துணிவு இல்லை. இம்மூன்று பொய்யையும் வடவர் பரப்பியிருந்தனர்.

அங்கிங்கெனாதபடி எங்கும் வடமொழி ஆதிக்கம் புகுந்தது. "மன்னன் எவ்வழி; குடிமகள் அவ்வழி" என்பதறிந்து அரண்மனையை வடமொழி ஆழிப்பேரலை தாக்கியது. மன்னர்கள் அதற்கு ஆட்பட்டனர். மன்னர்களைத் தம்வசப்படுத்தப் பல குறுக்கு வழிகளையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

சோழரிடம் சென்று வடமொழியாளர் கதையளக்கத் தொடங்கினர், "சோழனே உனக்குத் தெரியுமா? உன் வம்சமே சூரியனிடமிருந்து தோன்றியது. உலககெலாம் ஒரு சூரியன்; உலகுக்கு நீயே ஒரு தனி மன்னன். சூரியன் மகன் மனு; அவன் நீ ஆட்சி செய்யத்தான் "மனு நீதியை" எழுதியுள்ளான்.

மனு உன் முன்னோர். இட்சுவாகு, புரஞ்சயன், காகுத்தன் என்று பல மாவீரர்கன் உன் வழியினர் உனக்குத் தெரியாதா? உன் புலிக்கொடியில் இருப்பது புலி அல்ல; தேவேந்திரன் என்றனர். நம் அரசர்கட்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. "ஆம்" என்று தலையாட்டி "ஆகா" என்று போற்றிப் புகழ்ந்தனர்.

அக்கரையிலிருந்து வந்த பச்சைப் பாம்பை பாம்பென உணராமல் "பசுமை" என்று கண்டு மகிழ்ந்தனர். தம் இலக்கியங்களிலும், மெய்க்கீர்த்திகளிலும் அப்புனை கதையை எழுதினர்.

அரசன் ஆதரவோடு வடமொழியாளர்கள் தங்கள் வரிசையைக் காட்டினர். பல புனைகதை புனைந்தனர். தஞ்சைக்குப் பக்கத்தில் "வெண்ணாறு" காவிரியின் பாசன ஆறு. "விண்ணை" என்ற சோழ அரசியல் தலைவன் உருவாக்கியதால் அது "விண்ணன் ஆறு" "விண்ணாறு" என்று கூறப்பட்டது. தமிழன் வெட்டிய ஆற்றுக்கு ஒரு கதை கட்டினர் வடமொழியாளர்கள்.

ஒருமுறை தென்திசை வந்த காமதேனு பாலாய்ச் சொரிந்தது. அந்தப்பால் தேங்கி, தயிராகி, வெண்ணை உண்டாகி அந்த வெண்ணைய் ஆறாய்ப் பெருகிறது. அதனால் அது "வெண்ணையாறு" ஆயிற்று. வெண்ணை வெண்ணையாக ஓடுவதால் இது "சுவேதநதி" ஆயிற்று. இதோ புராணத்தில் பாருங்கள்: என்று சில சுலோகங்களைக் கூறினர். ஆற்றின் வரலாற்றை மறந்த மக்கள் புராணப் பொய்யை நம்பினர்.

புறநானுறு பாடப்பட்ட காலத்திலேயே,
"நின் முன்னோர் எல்லாம்
பார்ப்போர் நோவன செய்யலர்"
"பார்ப்பார்க்கு அல்லது பண்பு அறிகிலையே"
என்று அரசரை வடவர் புகழ்ந்து பெற வேண்டியதைப் பெற்றனர்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று எண்ணிய தமிழரை,
"வேற்றுமை தெரிந்த நாற்பால்" என நம்ப வைத்தனர்.

பார்ப்பனரே முதல் வருணம். மேலான சாதி என்று பரப்பப்ட்டது. மற்ற அனைவரையும் "பிராமணர்க்கும் கீழ்ப்பட்ட மக்கள்" என்று கரந்தைக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்தணர் என்பதும் தாங்கள் தான் என்றனர். "அந்தணர் முதல் அரிப்பன் கடையாக" என்பதும் ஒரு கல்வெட்டுத் தொடர்.
தாராளமாக - ஏராளமாக நிலங்கள் பார்ப்பனர்கட்கு வழங்கப்பட்டன. அங்கு வசதியான வீடு கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தப்பட்டனர். தஞ்சையில் இருந்த சர்வசிவ பண்டித சைவாச்சாரியார் தாம் ஏராளமாகப் பெற்றது தவிர தன் சிடர்கட்கும், சிடருடைய சிடர்கட்கும் தஞ்சாவூரிலிருந்து ஆர்யதேசம், மத்ய தேசம், கௌடதேசம் ஆகிய நாட்டில் உள்ளார்க்கும் வருடம்தோறும் 2000 கல நெல் அனுப்பி வைத்தார்.

வடமொழிப் பார்ப்பனர்கள் தம்மை "சைவ புரந்தரச் சச்சரவர்த்தி" என்று அழைத்துக் கொண்டு அரசனுக்கு நிகர் என்றனர்.
"அகரப் பிரமதேயம், சதுர்வேதமங்கல்யம், பட்டவிருத்தி, சுரோத்திரியம், அத்யயனவிருத்தி, மாஸியம், சர்வமானியம், ஏகபோகம், கணபோகம்" என்று பல்வேறு பெயரிட்டுப் பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நில உடைமையாளர்களாக இருந்த வேளாளர்களின் நிலங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்கட்குக் கொடுக்கப்பட்டன.

சில இடங்களில் அதை எதிர்த்து வேளாளர்கள் கிளர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். நிலங்கள் பிராமணர்கட்கு "தானாதி வினிமய கிரய விக்கிரயங்களுக்கு யோக்கியமாய்
புத்திர பவுத்திர பாரம்பரியமாய் சந்திர சூரியர் உள்ளவரை அட்டபோகத்துடன் ஆண்டு அனுபவித்துக் கொள்ள" அளிக்கப்பட்டன.

அரசர்களுக்கு, வழிகாட்டவே "மனு" நீதி நூல் எழுதப்பட்டது என்று கூறக்கேட்ட மன்னர்கள் தாங்கள் "மனு ஆறு பெருக" "மனு நெறி தழைக்க" அரசாள்வதாகத் தங்கள் மெய்க்கீர்த்திகளில் கூறிக் கொண்டனர்.

ஆனால் ஒருசில இடங்களில் தமிழ்க் குறுநில மன்னர்கள் மிகச்சிலர் தங்கள் ஆவணங்களில் "வள்ளுவர் உரைத்த முப்பால் மொழியின்படி" அரசாண்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. அரசர்கள் ஆதரவு பெற்ற பார்ப்பனர் நடத்திய வடமொழிக் கல்லூரிகள் பற்றிப் பல ஆவணங்கள் கிடைத்துள்ளதே தவிர தமிழ்க்கல்வி பற்றி அரசு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்ப் புலவர் பெருமக்களே தமிழைக் கற்பித்தனர் காத்தனர்.

தமிழ் அமைப்பைப் பார்த்துத் திருத்திச் செய்யப்பட்டதே வடமொழி. "சமஸ்கிருதம்" என்பதற்கும் அதுதான் பொருள். சிலர் "வடு + அல்" மொழி எனப்பிரித்துக் குற்றமில்லாத மொழி வடமொழி என்று கூறுவது மிகப்பெரும் பிழையாகும். மொழியியல் படியும் அது தவறு.

தமிழ் ஊர்ப்பெயர்கட்கெல்லாம் இதுதான் மூலம் என்று மொழிபெயர்ந்து வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். "நட்டூர் - மத்யபுரி" ஆயிற்று; "கருவூர் -கெர்ப்பபுரம்" ஆயிற்று; "பேரூர் -ஆதிபுரி" எனப்பட்டது. ஊர்ப் பெயர்கட்குப் புராணக் கதைகளையும் படைத்தனர்.

தஞ்சாவூருக்கும் "தஞ்சன்" என்ற அரக்கனுக்கும் தொடர்புபடுத்தினர். சிராப்பள்ளியை (சமணப்பள்ளி) "திரிசிரா" மூன்று தலையுடைய அரக்கனோடு தொடர்புபடுத்தினர். இராசராச சோழன் கட்டிய பெருவுடையார் - பெரியநாயகி கோயிலை "பிரகதீசுவரர்" "பிரகந்நாயகி" என்று அழைத்தனர் அழைக்குமாறு கூறினர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி இரண்டு ஆறுகள் கூடும் இடம். அங்குள்ள இறைவன் பெயர் "நண்ணாவுடையார்" அம்மன் பெயர் "பண்ணாரி மொழியம்மை" என எல்லாக் கல்வெட்டு, செப்பேடு, ஆவணம் அனைத்திலும் இப்பெயரே காணப்படுகிறது. ஆனால் "சங்கமேசுவரர்" "வேதநாயகி" என்ற பெயரை "மார்க்கசகாயர்" என மாற்றியதுபோல் ஏராளமான பெயர்களை மொழி பெயர்த்தனர் அல்லது மாற்றினர்.

தமிழகக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் பழந்தமிழர் கட்டிய பல கோயில்களில் காணுகின்றோம். வடநாட்டுக் கட்டடக் கலை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ஆனால் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. தமிழில் உள்ளவைகளை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு தமிழ்நூல்களை அழித்து விட்டதை அல்லவா இது காட்டுகிறது.

"தமிழ் ஓலைச் சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும், கார்த்திகை தீபத்தன்ற நெருப்பிலும் இடுவது புண்ணியம்" என்ற செய்தியைப் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சுவடிகள் அழிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் வடமொழியாளர்கள்.

வடமொழியாக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களின் வடிவம் அருவருப்பையும் ஏற்படுத்திகின்றன. ஈரோடு என்பது இரண்டு ஓடைகளால் ஏற்பட்ட பெயர். ஈரோடை-ஈரோடு ஆயிற்று. ஆனால் அதை "ஈரஓடு" என்று பிரித்து தலையில் கங்கையாறு இருப்பதால் ஈரமான தலை ஓட்டையுடைய சிவபெருமான் இருக்கும் ஊர் என்று கூறி "ஆர்த்தரகபாலபுரிசுவரர்" ஆக்கி ஈரோடு என்ப€யும் "ஆர்த்தரகபாலபுரி" ஆக்கிவிட்டனர். அம்மன் பெயர் "வாரணி அம்மை" (வார்=கச்சு); இப்பெயரைப் பூசையின்போது "குஜமஸ்த குசும ஸ்தானாம்பிகை" என்று கூறுகின்றனர். இதன் பொருள் "தர்ப்பைப் புல்லால் இறுக்கிக் கட்டப்பட்ட தனங்களை உடைய பார்வதி" என்பதாகும்.

வடமொழி ஆதிக்கத்தால் செம்மேனியுடைய சிவன், "ருத்திரன்" ஆனார்; தமிழ் முருகன் "சுப்பிரமணியர்" ஆனார்; மால், திருமால், விஷ்ணு எனப்பட்டார். வழக்கில் இல்லாத "இந்து" என்ற பொதுச் சொல்லையும் உருவாக்கினர். "வேதநெறி தழைத்தோங்க" தமிழ் கோயிலை விட்டு அகன்றது.

பூவால் செய்யப்பட்ட வழிபாடே "பூசை" ஆயிற்று என்பது அறிஞர் துணிவு. ஏராளமான சொற்களை வடமொழியில் பெயர்த்து அதுவே மூலச்சொல் என்றனர்.

மொழி, இலக்கிய வரலாற்று ஆய்வுகளைத் தொடங்கியவர்கள் மேனாட்டினரே என்பதில் ஐயமில்லை. தமிழர்கள் உயர்கல்வி கற்க இயலாதிருந்ததால் கற்ற பார்ப்பனர் மேனாட்டினரை அண்டியிருந்ததால் அவர்கள் ஆய்வும் வடமொழிக்கே வாய்ப்பாக இருந்தது. இன்றும்கூட தமிழகப் பெரும் ஆய்வாளர்கள் வடமொழியாளர் வகுத்த பாதையிலேயே நடைபோடுகின்றனர்.

"செட்டு" என்பது வணிகத்தைக் குறிக்கும் சொல். பல இலக்கியங்களில் பயின்று வருகிறது. செட்டு செய்பவன் செட்டியார்; ஆனால் தமிழ் ஆய்வாளர் பலர் "சிரேஷ்டி" என்ற சொல்லே செட்டியார் ஆயிற்று என்று எழுதுகின்றனர். சிரேஷ்டி மூத்தவனே தவிர செட்டியார் அல்ல.

"கோடு" என்ற சொல் அடிப்படையாகப் பிறந்தது "கோட்டை" என்பது. கோஷ்டம்தான கோட்டை ஆயிற்று என்கிறார் இந்தியப் புகழ்பெற்ற ஒரு வரலாற்று ஆசிரியர்; அவர் தமிழர்; சிவபெருமான் சிரித்து (நகல்புரிந்து) முப்புரத்தை எரித்ததால் "நக்கன்" எனப்பட்டார். சிவன் அடியார்க்கும் அப்பெயர் உண்டு. ஆனால் "நக்ணன்" என்ற சொல்லே நக்கன் ஆயிற்று என்பார் ஒரு தமிழ்ப் பேராசிரியர். வடமொழிக்கு அடிமையான தமிழ்ப் பேராசிரியர்கள், வரலாற்றாசிரியர் இன்னும் உள்ளனர்.

பார்ப்பனர் தொடர்பு இருந்தால்தான் ஒருவன் அறிஞன் ஆக முடியும் என்பதால் தானே "ஆதி" என்ற தாழ்த்ப்பட்ட பெண்ணுக்கும் "பகவான்" என்று பார்ப்பனனுக்கும் பிறந்தவர்கள் திருவள்ளுவர் என்ற பொய்க் கதை உருவானது. இந்தப் பொய்யை மெய்யென்று நம்பிய ஒரு பேரறிஞர் தம் கவிதைகளில் திருவள்ளுவரை "ஆதிபகவன் மைந்தன்" என்று மேடையில் பாடினார். தவறென்று தெரிந்த அக்கவிதை அச்சாகும்போது அந்தத் தொடரை நீக்கிவிட்டார்.

வடமொழி ஆழிப்பேரலை ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாமல் உள்ளன. அண்மையில் ஒரு பெரும் கவிஞர் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" சிறு வடமொழித் தாக்கம் இருப்பதாக எழுதியுள்ளார் அங்கிங்கெனாதபடி எங்கும் காணப்படுகிறது. அதன் தாக்கம் "மறையாமல் நின்று பல வடிவங்களில் காட்சியளிப்பது கொடுமையிலும் கொடுமை".

அதன் தாக்கம் சிதம்பரம் சிற்றம்பலம் சன்னதியில், திருமுக்கூடல் குடமுழுக்கு விழாவில், கரூர் பசுபதிவரர் கோயிலில் இருப்பதை இன்றும் காண்கிறோம். இனிமேலாவது பேரலையைத் தடுத்து நிறுத்துவது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

புலவர் செ. இராசு அவர்கள் எழுதிய கட்டுரையை...

தென் மாநிலங்களை வஞ்சிக்கும் பாஜக மோடி அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என பேட்டியளித்த கே.சி.பி நீக்கம்...


கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்… அதிரடி முடிவெடுத்த நடிகர் பிரகாஷ்ராஜ்...


எந்த அரசியல் கட்சியில் இல்லை என்றாலும் கர்நாடக சட்டமன்றத் தேரிதலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ்ராஜ், பாஜகவுக்கு எதிராக கடுமையாக பேசினார்.

மேலும் தனது டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி குறித்து கடுமையாக பதிவிட்டார். இதற்கு பாஜகவினரும் மிகக்டுமையாக எதிர் வினையாற்றினர். அப்போதிருந்தே பாஜகவுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை பிரகாஷ்ராஜ் மேற்கொணடு வருகிறார்.

இந்நிலையில் மங்களூரு பிரஸ் கிளப்பில் செய்தியாள்ர்களிடம் பேசிய அவர், எதிர் வரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், பிரச்சாரம் செய்யப் போவதில்லை என தெரிவித்தார்.

ஆனால், வகுப்புவாதத்தை வளர்த்து தேசத்தை ஆபத்துக்கு உள்ளாக்கும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார்.

ஊழலைவிட பெரும் தீங்கு வகுப்புவாதம் என தெரிவித்த பிரகாஷ் ராஜ் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என கூறினார்.

எந்த கட்சியையும் சாராதவன் என்கிற முறையில் ஆட்சியில் இருப்போர்களிடம் கேள்வி கேட்கிறேன். ஆனால் எதிர்த்து கேள்வி கேட்போரை அவர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் ஆளாக முத்திரை குத்துகிறார்கள் என பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

ஒரு இந்து பெண்ணை கடத்தினால், 10 முஸ்லீம் பெண்களை கடத்திக் கொண்டுவர வேண்டும் என்று கூறும் யோகி ஆதித்யநாத்தையும், தலித்துகளை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவையும் தலைவர்களாக பார்க்க முடியாது என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்...

ரிப்பப்லிக் டிவி அர்னப் கோஸ்வாமி இவரின் இந்த சோக முகத்திற்கு காரணம் நேற்று வெளிவந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி என செய்திகள் வந்த போது அதை விவாதித்த போதுதான் மூஞ்சி இந்த போக்கு போனது...


இவர் நடுநிலை செய்தியாளராமா...

புதுச்சேரி கடலூர் மற்றும் சென்னையில் செயற்கை பதநீர் விற்பனை...


பெப்சி, கோக், 7அப் உள்ளிட்ட நச்சுத் தன்மை நிறைந்த வெளிநாட்டு குளிர்பானங்கள் குறித்த விழிப்புணர்வு சமீப காலங்களில் பொது மக்களிடம் அதிகரித்து வருவதால் மக்கள் இயற்கை பானங்களை தேடி சென்று அருந்த விருப்புகின்றனர்.

அதனால் இயற்கை பானங்களின் தேவையும் அதற்கு உண்டான விலையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பணம் பார்க்க விரும்பும் சில விஷமிகள் வியாபாரிகள் போல வேடம் அணிந்து இயற்கை முறையில் தயாரான பானங்கள் என்று கூறி போலி பானங்களை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

அவற்றுள் ஒன்றாக தற்பொழுது போலி பதநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறதாம்.

இந்த போலி பதநீரை தயார் செய்ய பிடிக்கும் நேரமும் செலவும் மிகவும் குறைவாம் அதனாலேயே இதனை  விற்பனை செய்வதில் விஷமிகளிடம் கடும் போட்டிகள் நிலவிவருகிறதாம்.

செயற்கை பதநீர் எப்படி தயார் செய்வார்கள் ?

செயற்கை பதநீர் தயார் செய்ய சாக்கரீன், கலர் போடி மற்றும்  தண்ணீர் போதுமானது.

இவற்றைக்கொண்டு இயற்கையான பதநீர் போலவே செயற்கை பதநீரை தயார் செய்து விட முடியும்.

போலி பதநீர் விற்பனை செய்வோர் அதனை தயாரிக்க அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் சுகாதாரமானது தானா என்பதும் கேள்விக்குறி தான்.

செயற்கை பதநீரை அருந்துவதால் என்ன என்ன பிரச்சனைகள் வரும் ?

செயற்கை பதநீரை அருந்துவதால் ஆரம்பத்தில் வயிற்றுப் போக்கு ,வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

அதனையே தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரக கோளாறுகள் ,தோல் தொடர்பான வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .

இந்த செயற்கை பதநீர் சென்னை , புதுச்சேரி ,கடலூரில் மட்டும் விற்கப்பட்டு வருகிறதா ?

இல்லை, தமிழகம் முழுவதும் இதைப்போன்ற போலி பொருட்களின் விற்பனை அதிகம் தான் ஆனால் தற்பொழுது மேற்குறிய இந்த நகரங்களில் தான் போலி பதநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.இதை இப்பொழுதே கண்டு கொள்ளாமல் விட்டால் தமிழகம் முழுவதும் செயற்கை பதநீர் விற்பனை அதிகரித்து விடும்.

செயற்கை பதநீர் விற்பனையை எப்படி தடுப்பது ?

இதை முற்றிலும் ஒழிக்க அரசு நினைத்தால் மட்டுமே முடியும்.

மற்றபடி நாம் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டியது தான்.

வெளியூருக்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது இளநீரை வாங்கி பருகி பதநீரை தவிர்ப்பது நல்லது.

இதைப்போன்ற விஷமிகள் செய்யும் வேலைகளால் பாதிப்புக்கு உள்ளாவது பொதுமக்கள்  முட்டுமின்றி நேர்மையான பதநீர் விற்பனையாளர்களும் தான்...