17/03/2018

விவசாய நிலங்களைப் பற்றி கவலைப்படாமல் அதே இடத்தில் கெயில் திட்டத்தை தொடங்கச் சொல்லும் நீதிமன்றம்...


நீதிமன்றங்கள் மக்களுக்காகவா அல்லது அரசியல்வாதி மற்றும் கார்பரேட்களுக்காகவா..?

MSP - Minimum Support Price அதாவது குறைந்தபட்ச ஆதாரவிலை - இது விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதற்கு ஓர் அடிப்படை கணக்கீடு ஆகும்.

பிப்ரவரி 1-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு, உற்பத்தி செலவுடன் 50% லாபமும் சேர்த்து ஏற்கனவே ராபி பருவ விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறினார்.

இது உண்மைக்கு புறம்பானது என்பது விவசாய முன்னணிகளுக்குத் தெரியும்.

நாட்டின் பல பகுதி விவசாயிகளிடம் தற்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட MSP ஐ கூட விவசாயிகள் பெறவில்லை என்பதை விளக்குவதற்காகவும் நேரிடையாக மண்டிக்குச் சென்று இது எந்த அளவுக்கு அவர்களுடைய பொருளாதார நிலையைப் பாதித்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காகவும் சுயராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் தோழர் யோகேந்திர யாதவும், சுயஆட்சி இயக்கத்தின் வாழ்க விவசாய இயக்கமும் கர்நாடகாவில் AIKSCCயில் உள்ள ராஜ்ய ரியாது சங்கமும் விவசாயிகளை சந்திக்கின்ற MSP  சத்தியாகிரஹாவைத் தொடங்கி இருக்கின்றனர்.

ஒவ்வொரு மண்டிக்கும் செல்லுகிற இந்த சத்தியாக்கிரகம் வாழ்க விவசாயி இயக்கத்தின் சுயராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் மார்ச் 14ம் தேதி  கர்நாடகா மாநிலம் யாதகிரியில் தொடங்கப்பட்டு  அந்தந்த மாநிலங்களில் உள்ள AIKSCCயில் உறுப்பு இயக்கங்களும்  அந்தந்த பகுதியிலுள்ள பல விவசாய சங்கங்களும், அமைப்புகளும் இணைந்து பல மாநிலங்களுக்குச் செல்லுகின்றன.

யோகேந்திரயாதவ் முன்னெடுக்கும் இந்த MSP சத்தியாகிரஹத்தின் மூலம் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் உற்பத்தி செலவு, MSP விலை, சந்தைவிலை, விவசாயிகளின் இழப்பு என அனைத்தும் கள ஆய்வில் கேட்டறியப்பட்டு விவசாயிகள் எந்த அளவுக்கு சுரண்டப்படுகிறார்கள் என்பது இந்திய மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

ஒவ்வொரு மண்டியாக செல்லும் இந்த MSP சத்தியாக்கிரகத்திற்கு அரசு அதிகாரிகளுக்கும், பகுதியின் பிரபலங்களுக்கும், ஊடகங்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

சத்தியாக்கிரகம் முதல் கட்டமாக நடைபெறும் இடங்கள்...

The schedule of Phase I of MSP Satyagraha is:

14th March - Yadgir (Karnataka) 

15th March - Kurnool (Andhra) 

16th March - Suryapet and Kodad (Telangana) 

18th-19th March - Sri Ganganagar (Rajasthan)

20th March - Rewari (Haryana) 

21st March - Alwar (Rajasthan)

22nd March - Nuh (Haryana)

25th March - Rudrapur (Uttarakhand)

26th March - Pratapgarh (Uttar Pradesh) 

K. Balakrishnan
Tamilnadu Convenor 'வாழ்க விவசாயி இயக்கம்' (Jai Kisan Andolan)
Tamilnadu: 'சுயஆட்சி இயக்கம்' (Swaraj Abhiyan). Cell: 9444627827...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.