06/06/2021

குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...

 


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...

காதலின் ஏமாற்றம்...

 


காலத்தின் கோலம் என்பதை விட காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்..

நாம் சேர்ந்தது காலத்தின் கோலம்.. 

நம் பிரிவு இறைவனால் எழுதி

கட்டாயமாக்கப்பட்டு விட்டது..

இனியும் நீ எனக்கா? 

கிடைப்பாயா? சேர்வோமா?

சந்தோசமாய் வாழ்வோமா?

இவை கேள்விகள் அல்ல,

என் எதிர்பார்ப்புக்கள், 

ஆசைகள்... ஆதங்கங்கள்...

நிறைவேறாத காதலுடன்,

உன் நினைவுகளுடன்

என் உயிரும், நாம் சேர்வோம்

என்ற நம்பிக்கைகளும்

கொஞ்சம் கொஞ்சமாய்

என் உடலை விட்டு பிரிகின்றன..

இதற்கா நீ ஆசை கொண்டு

காதலித்து ஏமாற்றினாய்...

பாஜக மோடியின் Gst எனும் வரி கொள்ளை...

 


100 கோடியை ஆட்டையை போட்ட இந்தியன் வங்கி...

 


பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...

 


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடி மறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சியோ அல்லது ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் மற்றும் தலித் கட்சிகள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

மனித குலத்திற்கே எதிரி பாஜக மோடி அரசு...

 


திமுக ஸ்டாலினின் நமக்கு நாமே 😂

 


நியூட்டன் விதியும் கர்மவினையும்...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.

வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.

நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.

மனதின் கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.

எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.

ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில் தான் கர்மாவே செயல்படுகிறது.

ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி, வாழ்க வளமுடன்...

திமுக பிரமுகர் எஸ். என்.ஆர் நாகராஜன் மது கடத்தி வந்த போது கைது...

 


Benz காரில் சரக்கு கடத்தும் ௮ளவுக்கு விடியல் பிறந்துவிட்டது...

தலைவன் மட்டும் ௮ல்ல தொண்டனும் சிக்ஸர் ௮டிப்பான்...

ஜூன் 04, கும்முடிப்பூண்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பென்ஸ் சொகுசு காரில் 234 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது சோதனையில் தெரியவந்தது. மதுபாட்டில்களை காருடன் பறிமுதல்செய்தனர்...

பிராடு பாஜக தெலுங்கு முருகா..


முடக்கத்தான் கீரை...

 


Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது...

சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை...

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌து தான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச் சென்று விடும். இதுபோல் எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்...

உலகமே காரி துப்பும் பிரதமர் பாஜக மோடி...

 


தமிழர்களுக்கெதிரான இத்தொடரை தடுத்து நிறுத்துவோம்! - சீமான்...

 


தொட்டாற் சுருங்கி செடி...

 


சிறுபிள்ளைகளாக இருக்கும் சமயம் இந்த செடியைப் பார்த்தால் தொட்டு விளையாடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விளையாட்டு, ஆச்சர்யமும் கூட...

இப்போதும் இந்த அதிசயச் செடியின் மருத்துவ குணங்களைப் படித்தாலே அதே ஆச்சர்யம் அடைவீர்கள்...

மருத்துவ குணங்கள்...

தொட்டாற்சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும்..

இதன் வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி சலித்து வைக்க வேண்டும். இந்த சூரணத்தை 10 கிராம் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க சிறுநீர் கடுப்பு நோய்கள், ஆசனக்கடுப்பு, மூலச்சூடு தீரும்.

உடல் சூடுபிடித்தால் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதை குணமாக்க 10 கிராம் தொட்டாற் சுருங்கி இலையை தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 நாட்கள் சாப்பிட்டால் அந்த எரிச்சல் குணமாகும்.

ஆண்மை பெருக இரவில் 15 கிராம் இலையை பசும்பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.

இதன் இலையை ஒருபிடி அரைத்து எலுமிச்சை பழம் அளவு மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

ஒரு பங்கு இலைக்கு 10 பங்கு கொதிக்கிற தண்ணீர் ஊற்றி ஆறின பின் வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை குடித்து வந்தால் நீர் அடைப்பு, கல்லடைப்பு சரியாகும்.

இலை மற்றும் வேரை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பசுவின் பாலில் போட்டு குடித்துவர மூலம் குணமாகும்.

இதன் இலைச்சாற்றை மூல பவுத்திர ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறிவிடும்.

தொட்டாற் சுருங்கியின் இலையை மெழுகு போல அரைத்து விரை வாதம் மற்றும் கை கால் மூட்டுகளின் வீக்கம் இவைகளுக்கு வைத்து கட்ட குணமாகும்.

இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.

இதன் இலையை ஒரு பெரிய மண் பானையில் போட்டுச் தண்ணீர் விட்டு வேக வைத்து மிதமான சூட்டில் இடுப்பிற்கு ஊற்றி நீவி விட இடுப்பு வலி நீங்கும்...

அதிமுக எடப்பாடி அலசு செய்த ஊழல்...

 


நல்ல திட்டம்...