01/12/2021

செம்பருத்திப் பூக்கள்...


இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள் தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன.

வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி தான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இந்த செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க...

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

பெண்களுக்கு...

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தலைமுடி நீண்டு வளர...

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கு நீங்க...

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.


இருதய நோய்க்கு...

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

திருட்டு திராவிடம்...

தமிழக மக்களின் நிலை...

என் பள்ளி பருவ நினைவுகளோடு மதிய வணக்கம்...

பிராடு பாஜக நரேந்திரசிங் தோமர் கலாட்டா...

கொரோனா தடுப்பூசி எதற்கு..?

பிராடு பாஜக - திருட்டு திமுக ஆட்சிகளின் சாதனை...

உங்களுக்கு குடிநீர் சரியில்லையா இனி கவலை வேண்டாம்...

 


எவ்வளவு  குடிநீர் தேவையோ [உதாரணமாக ] 1லிட்டர் எனில் ஒரு 5-6 உலர்திராட்சை பழங்களைப் போட்டு அந்தநீரில் ஊற விடுங்கள்.

நன்றாக ஊறியதும் குடிநீராகப் பயன்படுத்தலாம் பேருந்துப் பயணம், ரயில் பயணங்களில் உகந்தது இம்முறையில் நீரைப் பருகுவதால் உங்களுக்கு  குடிநீரும் ருசியாய் அமைகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகமாக்குகிறது.

உலர்ந்த திராட்சை பயன்படுத்தி  இரத்தத்தில்  உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து  ஆரோக்கியத்தைப் பேணிகாக்கலாமே....

கிறித்தவ பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட சிறுவர்கள் - செய்தியும் சிந்தனையும்..

 


1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

- பிபிசி செய்தி அறிக்கை

05.10.2021...

என்ன வாழ்க்கைடா இது...


ஒரு நாள் நம்ம வாழ்க்கை 

நமக்கு புடிச்ச மாதிரி மாரும்...

இந்த டயலாக் வச்சி தா நானும் ஒவ்வொரு வருசமும் ஓட்டிட்டு இருக்கேன்..

வருசம் மட்டும் தான் 

மாறிட்டு இருக்கு..

வெற ஒன்னும் மாறல..

அய்யோக்கிய பிராடு பயலுங்க...

இனிய உணவு வணக்கம்...

காலை வணக்கம்...

பாஜக மோடியின் கிளின் இந்தியா திட்டம்...

காரணம் தேவையில்லை...

 


மனம் என்பது மனிதனுக்கு சொந்தமானதன்று.

மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ள ஒன்று.

வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் செயல்பட எந்த காரணமும் தேவை இல்லை.

பிரபஞ்சத்திற்கு வெளியே காலமோ இடமோ கடவுளோ காரணமோ இல்லை.

அனைத்தும் பிரபஞ்சத்திற்கு உள்ளேதான்.

பாழ்வெளி - பிரம்மம் - மனம் - ஆகாயம் - நெருப்பு - நீர்- நிலம் - காற்று - உயிர்கள் - மனிதன்...

உண்மை...

அதிமுக எடப்பாடி கலாட்டா...


 

மூலிகை காபி செய்முறை...


இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால் தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.

காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை..

தேவையான மூலிகை பொருட்கள்...

1 - ஏலரிசி - 25-கிராம்.

2 - வால்மிளகு - 50 கிராம்.

3 - சீரகம் - 100 கிராம்.

4 - மிளகு - 200 கிராம்.

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும். இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.

உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்) ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்...

திருட்டு திமுக ஸ்டாலின் சொன்ன விடியல்...