02/05/2018

இந்தி படிச்சா வேலை கிடைக்குமாம்....



என்ன வேலைனு கேட்க கூடாது
தமிழ்நாட்டில் மூளை சலவை செய்யப்பட்ட முட்டாள்களின் பார்வைக்கு....

அவனுங்க தரம் அவ்வளவு தான்...

இஸ்ரேல் - ஈரான் போர் மூளும் அபாயம்...


இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க...


இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்...

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….

சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

கிராம சபை பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை...


கேரளாவைப் போல் தமிழகத்திலும் போலீசுக்கு 8 மணி நேர பணியை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்?


குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் காவல்துறையினரை மனிதர்களாக கருதுவதில்லை : சென்னை உயர் நீதிமன்றம்.

காவலர்களின் மன அழுத்தத்தை போக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம் : சென்னை உயர்நீதிமன்றம்...

திமுக vs அதிமுக கலாட்டா...


பிரபஞ்ச நியதி...


எதுவுமே இங்கு நிரந்தரம் இல்லை.

காரணம் இல்லாமல் ஒன்றுமே நடக்காது.

ஏற்றத் தாழ்வே என் இயக்கத்திற்கு காரணம்.

இன்பமும் துன்பமும் இல்லாமல் வாழ்கை நகராது.

எல்லாமே இங்கு ஆற்றல் பரிமாற்றம் தான்.

வெறும் பிரச்சனை மட்டுமே தொடரந்து இருக்க முடியாது.

எதை நினைத்தும் கலங்காதே, எல்லாமே என் மாய விளையாட்டு தான்.

இந்த வாழ்கையில் எல்லா அனுபவங்களையும் பெற்றுவிட்டு என்னிடம் வா.

எப்போது நீ வந்த வேலையை முடிக்கிறாயோ அப்போதே என்னோடு கலந்து விடுவாய்.

உனக்கு துணையாக பல கோடி ஜீவராசிகளை படைத்திருக்கிறேன்.

அவற்றோடு அன்பால் இணைந்து அனுபவங்களை பெறு.

உன் பின்னால் இருந்து மறைமுகமாக நான் தான் செயல்படுகிறேன்.

எதுவுமே உன் கையில் இல்லை, எப்போதும் மகிழ்ச்சியாகவே இரு.

இடுக்கன் வருங்கால் நகுக-- துன்பத்திலும் சிரிக்க பழகு.

அப்போது என்னால் உனக்கு பிரச்சனைகளை கொடுக்க முடியாது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளிகள் திருவண்ணாமலையில் விஸ்வரூபம்...


கடந்த வாரம் உலக சாதனை செய்து, இப்போது கல்வியில் புரட்சி செய்கின்றனர். 

இப்போதாவது நம் பிள்ளைகளை சேர்ப்போமா?

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் நவீன கொள்ளை...


எடை குறைய நடக்கவும் வேண்டாம் ஓடவும் வேண்டாம், நின்றால் போதும்...


பிரித்தானிய Loughborough பல்கலைக்கழகத்தில் உடல் நடவடிக்கைகளுக்கும் ஆரோக்கியத்திற்குமான (Physical Activity & Health) பேராசிரியர் கலாநிதி Stuart Biddle எடை குறைவதற்குச் செய்ய வேண்டியவை தொடர்பாக செய்த ஆய்வில் ஒரு புதிய கண்டு பிடிப்பைச் செய்துள்ளார்.

கலாநிதி Stuart Biddleஇன் புதிய சுலோகம் "அசைவதை அதிகரிக்கவும், உட்காருவதைக் குறைக்கவும்" ("move more and sit less") என்பதாகும். நின்று கொண்டு சமையல் பாத்திரங்களை கழுவுதல், நின்று கொண்டு வீட்டுத் தோட்டத்தில் நீர் ஊற்றுதல் போன்ற சிறு வேலைகள் உடலுக்கு அதிக பயனளிக்கும் என்கிறார் அவர்.

நாளொன்றிற்கு அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஐந்து நிமிடங்கள் நிற்பதும் சிறிது நடப்பதும் நல்ல தேகப் பயிற்ச்சி என்கிறார் கலாநிதி Stuart Biddle. இப்படிப்பட்ட நிற்பதும் நடப்பதும் நடவடிக்கைகள் மூலம் மாதம் ஒன்றிற்கு 2500 கலோரிகளை எரிக்க முடியும் என்கிறார் கலாநிதி Stuart Biddle.

நல்ல உணவுப் பழக்கமும் அதிகரித்த தேகப்பயிற்சியும் மேலதிக பயன் தரும் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் அடிக்கடி நின்று கொண்டு சிறு வேலைகள் செய்வது நல்ல பயன் தரும்.

நாளொன்றிற்கு மூன்று மணி நேரம் இருக்கும் பெண்களிலும் பார்க்க நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் இருக்கும் பெண்கள் மாரடைப்பால் இறப்பதற்கான சாத்தியங்கள் 40% அதிகம் என்கிறார் கலாநிதி Stuart Biddle...

திசை திருப்பல், மறதி, சூழ்ச்சி, என்ன செய்யப் போகிறோம்...?


ஜம் ஜம் கிணறு.. [உலகில் இது ஒன்று தான் மெய்யான அற்புதமாகும்] உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...


5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மெக்காவிற்கு புனித பயணம் செய்யும் உலகில் பல தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் இந்த கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர் எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.

அப்படி பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.

இறை தூதர் இப்ராஹிம்-ஹாஜரா தம்பதி தங்களது குழந்தை இஸ்மாயிலுடன் பயணித்தனர். தற்போது மெக்காவில் காபா அமைந்துள்ள இடத்தில், இறைவனின் கட்டளை என்பதால், இருவரையும் தனியாக விட்டு விட்டு இப்ராஹிம் நபி சென்றார்கள்.

அப்போது தாகத்தால் குழந்தை இஸ்மாயில் அழுதார்கள், குழந்தை குடிப்பதற்கு பாலோ தண்ணீரே இல்லாத நிலையில் தண்ணீரை தேடி பல இடங்களுக்கு தாய் ஹாஜரா அலைந்தார்கள்.

இறைவனிடம் பிராத்தனை செய்தார்கள், அப்போழுது தன்னந்தனியாக கிடந்த குழந்தை இஸ்மாயில், தன் பிஞ்சுக்கால்களை தரையில் உதைத்து அழுதபோது அந்த இடத்தில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அதை வழிந்தோடவிடாமல் சுற்றிலும் மேடெழுப்பி நீரை தேக்கி வைத்தார்கள். அதுவே 'ஜம் ஜம்' கிணறு என்று அழைக்கப்படுகிறது.

ஜம் ஜம் என்றால் நில் நில் என்றும் அதிகம் என்று அர்த்தம்.

சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்த கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.

இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவின ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும், பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது.

ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் 'ஜம் ஜம்' கிணற்றில் இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தும், அப்போதும் இதன் அளவு குறைவதில்லை. சுவையும் மாறியதில்லை.

ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.

எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.

ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது 'ஜம் ஜம்' நீர் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது.

கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம்.

மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது.

அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.

ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும்.

இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...

நியூஸ் 7 உரிமையாளர் வி.வி. மினரல்ஸ் உரிமையாளருமான வைகுண்டராஜன்.. தமிழக வளத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறார்...


தாயின் சடலத்துடன் உறங்கிய மகன்.. மனதை பதற வைக்கும் சம்பவம்...


ஐதராபாத்தில் அம்மா இறந்தது தெரியாமல் அவர்களுடனே மகன் தூங்கிய சம்பவம் நடந்துள்ளது. ஐதராபாத்தின் கடேடன் பகுதியை சேர்ந்தவர் சமீனா சுல்தானா(வயது 36), இவருக்கு 6 வயதில் சோயிப் என்ற மகன் உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து மகனுடன் தனியாக வசித்து வந்த நிலையில், சமீனாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மகன் சோயிப்புடன் ஓஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

இதனை அறியாத மகன் தாயின் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளான், இந்நிலையில் சில மணிநேரம் கழித்து மருத்துவர்கள் வந்து பரிசோதித்த போது தான் சமீனா இறந்தது தெரியவந்தது...

ஓட்டுக்கு காசு வாங்கியதின் பலனை இப்போது அனுபவிக்கிறோம்... நிலமை கைமீறி போவதற்க்குள் ஏதாவது செய்ய வேண்டும்...


இந்தபடத்தில் உள்ள 20--20 போலி உரமூடை...


தூத்துக்குடிமாவட்டத்தில் அதிகமாக விற்பனைக்கு வந் துள்ளது...

விவசாயிகளே நம் இனத்தை அழித்து
நமது பூமியை பாழக்கி கெடுப்பதற்க்காகவே இந்த போலி உரம் என்ற மாயை...

இந்த உரம் என்பது வெறும் மண் பசை
சேர்க்கப்பட்டுள்ளது..

உரக்கடைகள் என்ற பெயரில் விவசாயிகளின் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களிடம் உரம் வாங்கிய விவசாயிகள் தலையில் கை வைத்து கடனாளியாகிறார்கள்.

இதுதான் இன்றைய விவசாயின் நிலை?

வேளாண்மைத் துறை என்ன செய்கிறது

இந்த உரக்கடைக்காரர்கள் கொடுக்கும் சன்மானத்தை பெற்றுக் கொண்டு தன் மானத்தை விற்க்கிறார்கள்.

இப்படித்தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

விவசாயிகளை சுரண்டி வாழும் உரக்கடைக்காரர். மாடிவீடு கட்டி வாழ்கிறார்.

விவசாயி மட்டும் மண்னில் வீழ்கிறான்..

விவசாயிகளே பொறுத்தது போதும்
பொங்கி எழுவோம்...

இனி விவசாயத்திற்கு தேவையான உரம்
பூச்சி மருந்துகள். வேளாண்மைதுறை கிடங்குகளில் தான் விற்ப்பனை செய்ய வேண்டும்.

தனியார் கடைகளை தடை செய்ய வேண்டும்.

விரைவில் இதற்க்கான போராட்டம்...
இவண்.
OA.நாராயணசாமி
தலைவர்
தமிழ் விவசாயிகள் சங்கம்...

தமிழின விரோதி பாஜக மோடி பதில் உண்டா..?


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய பாஜக அரசிற்கு எச்சரிக்கை...


மே 3ல் காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வரவில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்; குறிப்பாக டெல்லி செல்லும் வழிகள் முடக்கப்படும் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...

ஆர்.கே. நகரில் தினகரனுக்கு எதிராக 20 காட்டியது எடப்பாடி ஏற்பாடு என்பது அம்பலம்...


இந்திய இராணுவப்படையே திரும்பி போ - சீமான்...


சென்னை வெள்ளத்தில் இறந்தபொழுது காப்பாற்ற வராத இராணுவப்படை.

ஓகி புயலில் தொலைந்த பொழுது காப்பாற்ற வராத இராணுவப்படை.

குரங்கிணி தீயில் கருகிய பொழுது காப்பாற்ற வராத இராணுவப்படை.

இப்பொழுது தஞ்சை டெல்டா மாவட்டத்தில் வந்திறங்க என்ன காரணம்?

நாசகாரத்திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை அச்சுறுத்த அவர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி ஒடுக்க வந்து இறங்கியிருக்கிறது.

தமிழகத்தை இன்னொரு நாகலாந்தாக, இன்னொரு மணிப்பூராக்க, இன்னொரு காஸ்மீராக மாற்றவே துணை இராணுவப்படை குவிப்பு.

இந்திய அரசே!
உடனடியாக இராணுவத்தை திரும்பப்பெறு...

மே18 தமிழன படுகொலை நாள்...


உடலின் ஏழு சக்ராக்கள் - குண்டலினி...


நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை சக்ரா என்றழைத்தார்கள்.

அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர்.

இந்த சக்ராக்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள்.

ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள்.

ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது.

குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.

இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்.

1) மூலாதார சக்ரா : இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது ”லா” என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.

2) ஸ்வாதிஷ்டானா சக்ரா : இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.

3) மணிபுரா சக்ரா : இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

4) அனாஹதா சக்ரா : இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா : இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.

6) ஆஜனா சக்ரா : இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.

7) சஹஸ்ரரா சக்ரா : இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.

இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள்...

மூன்றாம் உலகப் போரின் பிறகு.. மேற்கு இந்தியாவுடன் பாக்கிஸ்தான் இனையும்...


நடக்கவே நடக்காது என்று சொன்னவர்கள் நகர்வுகளை கவனியுங்கள் உங்கள் மீது என்றுமே கோபம் இல்லை மாறாக அறியாமை கண்டு வருந்துகிறோம் யாம்... தொடர்ந்து தோலுறிப்போம்...

பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்யும் இழிபிறவிகளுக்கு...


நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களை நெகிழவைத்த பாகிஸ்தான் கடற்படை வீரர்கள்..

கடந்த 9 நாள்களாக, படகு பழுது காரணமாக நடுக்கடலில் தவித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை மீட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஏமன் அருகே ஏடன் வளைகுடா பகுதியில், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் அலாம்கிர், நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, இந்தியாவின் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வந்த புனித மேரி என்ற பெயர்கொண்ட படகு, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் சோதனையிட்டபோது, இன்ஜின் பழுது காரணமாக மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பது தெரியவந்தது.

உணவு, குடிநீர் தீர்ந்துபோனதால் படகில் இருந்த 12 மீனவர்களும் பசியால் வாடியுள்ளனர். உடனடியாக அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டதோடு, படகின் இன்ஜினும் பழுதுபார்க்கப்பட்டது.

உதவி கேட்டு இந்தியாவுக்குத் தகவல் அனுப்பியும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் கடற்படை, மனித நேய அடிப்படையில் இந்த உதவியைச் செய்துள்ளது.

எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, கடலுக்குள் மனித நேய அடிப்படையில் உதவிகள் செய்வதில் பாகிஸ்தான் கடற்படை  முன் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

பாஜக முதல்வர்னா சும்மாவா... என்னா அறிவுடா...


மனிதனும் உண்மைகளும்...


ஆத்மா அழிவதில்லை, ஆத்மாவுக்கு வயதாவது இல்லை...

உடலுக்கு உடை எப்படியோ.. அதே போல் தான் ஆத்மாவுக்கு உடலும்...

உடல் சக்தி இழந்து முடியாத சூழ்நிலையில் இருக்கும் பொழுது ஆத்மாவாகியது வெளியேறி மீண்டும் தனக்கான உடலை அதவாது புதிய பிறப்பை அடைகிறது...

நாம் அனைவரும் ஆத்மாவே.. நம் உடல் வெறும் உடையே...

இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கும் பாஜக மோடி...


புதுக்கோட்டை பழையபேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையில் தனியாக ஒரு பெண் உண்ணாவிரத போராட்டம்…


புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் இந்த சகோதரி வாங்கிய நகை கடனுக்கா அவரது காரை எடுத்து சென்று உள்ளனர் ...

அந்த காரையிம் சகோதரி கவனத்திற்கு வராமல் ஏலம் விட்டு மோசடி செய்து உள்ளார்.

தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இந்திய ஓவர்சீஸ் வங்கி மேலாளரை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்…

சேலம் கலெட்டர் ரோகினி மீது செருப்பு வீச முயன்ற முதியவர் கைது...


வேற்று கிரக வாசிகள் பற்றிய அபூர்வ தகவல்கள்...


வேற்று கிரக வாசிகள் எனப்படும்
ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும்
புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது.

இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.

கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ
தன்மை கொண்ட ஆர்சனிக் என்ற நச்சு பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள்
வாழ்வது என்பது அரிதான ஒன்று என கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர்.

இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை
எடுத்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் விஞ்ஞானிகள் பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களில் சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள்
வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 செப்டம்பர் மாதம் வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான:கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில்
இருப்பது போல் வளிமண்டலம்
புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது .

இதற்கு கிளீஸ் ஜி என பெயரிட்டுள்ளனர். இது ஏறத்தாழ 118,000,000,000 ,000 மைல்கள் அளவிற்கு
தூரம் இருக்கும்.

மேலும் இதிலிருந்து வெளிப்படும்
ஒளியானது பூமியை வந்தடைய 20
வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர்.

இதனையடுத்து வேற்று கிரகத்தில்
உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும்
வலுவடைந்துள்ளது. அது தொடர்பான
விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.

இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ்
முதல் மனிதன் வரை அனைத்து
உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால்
உருவானவை..

இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ வில் பாஸ்பரஸ் இல்லை. அதன் டி.என்.ஏ
வில் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக்
என்ற ரசாயனம் தான் உள்ளது.

ஆர்சனிக் பாக்டீரியா கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம் உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது...

மனித மூளையை பற்றிய உண்மைகள்...


சித்தர் ஆவது எப்படி ? - 19...


பிறவி தாண்டிய அனுபவத்திற்கு சுவாச ஒழுங்கு மட்டுமே...

பிறவி தாண்டிய நிலை என்பது என்ன ?

மனிதன் பிறக்கும் சமயத்தில் பிரபஞ்சத்தின் பூரண ஆசியோடு குழந்தையாக இருக்கும் சமயம் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற விதியில் அவன் தெய்வநிலைக்கு நிகராக இருக்கிறான்..

பின் உலகியல் பல்வேறு தொடர்பால் ஒழுங்கின்மை என்ற நோய் கவ்வி, தெய்வ நிலையிலிருந்து தேய்ந்து தேய்ந்து ஒய்ந்து போய் பின் செயல் இழந்த நிலையான மரணத்தை தழுவுகின்றான்...

மரணம் என்பது எந்த செயலும் அற்ற ஒரு அமைதி நிலை.. அமைதி என்பது ஒரு ஒழுங்கு நிலை.. அந்த ஒழுங்கு நிலையில் ஒழுங்கு தன்மை வாய்ந்த பிரபஞ்ச ஆற்றல் இசைந்து கொள்கிறது..

இப்படி இசைந்து கொள்வதை தான் Law of attraction என்ற தலைப்பில் மேலை நாட்டில் பல கோணங்களில் கருத்துக்கள் எழுந்து உள்ளன..

ஒரு மனிதன் அமைதி என்ற ஒழுங்கு தன்மைக்கு செல்லும் போது அதற்கு ஒத்த ஒன்று அதோடு இணையும் செய்கையை இசைதல் எனப்படுகிறது..

மரணத்திற்கு பின் மட்டுமே இந்த பிரபஞ்ச ஆற்றலின் இசைதல் செயல் பாடு நடக்கிறது...

ஆனால் அந்த இசைதலில் அனுபவ பட தேகமும் மனமும் இல்லையாதலால் அந்த இசைதல் என்ற செயல் பாட்டின் அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவ பட முடியாமேலே போய் விடுகிறது..

ஆகவே மிக முக்கியமான அந்த அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவப் பட தேகத்தில் உயிர் உள்ள போதே அந்த பேரமைதி என்ற எந்த செயலும் அற்ற அந்த தோன்றா நிலையை நாம் அனுபவப் படுகின்ற போது, அந்த பிரபஞ்ச ஆற்றல் நம்மோடு இசைய தொடங்கி அதன் ஆற்றலின் வரவு வர தொடங்குகிறது.... அதனால் அளவற்ற ஆற்றலை பெற தொடங்குகிறோம்....

இந்த இசைதல் என்ற Law of attraction மூலம் பிர பஞ்ச சக்தியை பெற மரணத்தை ஒத்த அந்த தோன்றா நிலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஆகிறது... அந்த தோன்றா நிலை என்பது ஒரு அனுபவம்.. அதுவே பிறவி தாண்டிய அனுபவநிலை..

பிறவி தாண்டிய நிலை என்பது மரணத்தை மட்டுமே குறிக்கும்.. பிறவி தாண்டிய அனுபவநிலை என்பது தோன்றா நிலை அனுபவத்தைக் குறிப்பது...

இதன் மூலம் பிறவி தாண்டிய நிலையான மரணத்திற்கும், பிறவி தாண்டிய அனுபவ நிலையான தோன்றா நிலை அனுபவத்திற்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம் நமக்கு தெரிய வேண்டும்...

பல் வேறு ஒழுங்கின்மை காரணத்தால் பிறவி தாண்டிய நிலையான மரணத்தையே தழுவி தழுவி எண்ணிக்கை இல்லா பிறவிகளை அடைகின்றோம்...

ஆனால் பிறவி தாண்டிய அனுபவ நிலையை அடைகின்ற போது அங்கே பிரபஞ்ச ஆற்றல் தொடர்பால் நாம் மரணத்தை வெல்லுகின்றோம்...

இதை நாம் உற்று கவனித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும்..

வலுவான பஞ்ச பூதங்களோடு நாம் பிறவி தாண்டிய அனுபவநிலையான தோன்றா நிலைக்கு செல்லும் போது, பிரபஞ்ச ஆற்றலின் பெரும் வரவால் பஞ்ச பூதங்கள் மேலும் மேலும் வலுவடைந்து, மரணம் என்பது தொலைந்து போய் விடுகிறது..

பஞ்சபூதங்களில் ஒன்றான அறிவும் பலப் படுவதால், மரணத்தை வெல்லும் உபாயத்தையும் அறிவு, அறிந்து கொள்கிறது..

அமைதியின் மறு பக்கம் ஒழுங்கு.. பிரபஞ்சம் என்பது பேர் ஒழுங்கு.. ஒழுங்கோடு ஒழுங்கு இணைவதையே இசைதல் என்பதாகும்..

பஞ்ச பூதங்களிலே அமைதியற்ற மனம் அமைதியுடன் இருக்கும் போது, மனம் சுத்த மனம் என்ற ஒழுங்கு தன்மை அடையும் போது, சுத்த மனத்தால், இசைவதால் இணைகின்ற பிரபஞ்ச ஆற்றலால், பஞ்ச பூதங்களும் வலு பெற தொடங்குகின்றன...

இந்த ஒழுங்கு என்ற நிலையை வேறு எந்த வழிகளிலும் உபாயங்கள் மூலமாக நாம் கற்று அடைவதைக் காட்டிலும் ஜீவ சக்தியால் இயல்பாக நடக்கின்ற சுவாசத்தில் நாம் அந்த ஒழுங்கு முறையை மிக மிக விரைவாக கற்று அதுவாகவே ஆகி அமைதி நிலைக்கு விரைவாக செல்ல முடிவதால், அதன் மூலம் பிரபஞ்ச பேராற்றலை பெற முடிவதால், சுவாச ஒழுங்கு என்ற நிலை பாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது.. ஆனாலும் ஜென்ம ஜென்மமாக ஒழுங்கின்மையில் வாழ்ந்த மனித குலம் தான் வாழும் காலத்தில் தன் ஜீவ ஆற்றலாக விளங்கும் சுவாசத்தில் ஒழுங்கு தன்மையோடு இருக்க மிகவும் சிரமப் படுகிறது...

எல்லா சவால்களையும் சந்திக்கும் மனம் இந்த சுவாச ஒழுங்கிற்கான சவால்களை சந்திக்க முடியாமல் இருப்பதற்கு காரணம், இந்த சுவாச ஒழுங்கு என்பது பயிற்சி அல்ல என்பதாலும் அது ஜீவ ஆற்றலின் ஒழுங்கு நிலை எனபதாலும் அதற்கு மனம் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது.. அது உதவி செய்வதாக இருந்தால் இடைஞ்சலாகத் தான் இருக்கும்...

ஆகவே மனம் சுத்த மனம் ஆகும் வரை ஒழுங்கற்ற சாதாரண மனம் சுவாச ஒழுங்கிற்கு ஒத்து வராது..

இந்த நிலையில் ஒழுங்கின்மையை அடையாளம் காட்டி மனதை ஆதிக்க செலுத்தி மீண்டும் ஒழுங்கிற்கு வரும் போது, மனதை வெல்லும் புத்தி செயல் பட தொடங்குகிறது..

இந்த சுவாச ஒழுங்கின் எளிமையான நிலைப் பாட்டில் மிக பெரிய ஆன்மா இலாபம் என்னவென்றால் புத்தி பலப் படுவதற்கான ஒரு சீரான வலுவான அளவற்ற சந்தர்ப்பங்கள் கிடைகின்றன..

வேறு எந்த பயிற்சியிலே இது போன்ற மேன்மையான புத்தியை பலப் படுத்துவதற்கான வழி முறைகள் இல்லை.. இல்லவே இல்லை என்று உறுதியாக சொல்லலாம்...

ஆகவே சேரும் நிலை அறிந்து சேர்ந்து சித்தராக முனைவோமாக...

இந்தியா தமிழகத்தின் மீது போர் தொடக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.. விழித்துக்கொள் தமிழா...


மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத் தேவையில்லை...


பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது.

மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்...

சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்...

கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.

கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.

வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.

வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.

15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.

ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.

சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.

செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.

சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.

மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.

அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.

நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.

பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை...

சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை...

அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்...

தமிழகத்தை சிரியா வை போல் மாற்ற துடிக்கும் பாஜக மோடி...


இலுமினாட்டி யும்.. தனி ஒருவன் திரைப்படமும்...


எல்லாரும் தனி ஒருவன் திரைப்படம் பார்த்தீர்களா?

பாக்கவில்லை என்றால் உடனே பார்த்து விடுங்கள்...

தனி ஒருவன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நபரே தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்திற்கும் காரணமானவராகவும் மறைமுகமாக மாநிலத்தை அவரே ஆள்வதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது..

சந்தேகப்பட முடியாத அந்தஸ்த்து உள்ள ஓர் நபர் அனைத்து தப்புகளுக்கும் காரணம்.

மூன்று பினாமிகளை கொண்டு அனைத்தையும் நிகழ்த்துவதாகவும் ஊடகங்கள் இவருக்கு சார்பாக செயல்படுவதாகவும் குறிப்பாக உலகையே ஏமாற்றி கொண்டிருக்கும் மருத்துவ துறை எவ்வாறு அவனால் நடப்பிக்க படுகிறது என்பதையும் இந்திய அழகியை தேர்ந்தெடுக்க கூடிய அதிகாரம் படைத்தவனாகவும் அவனை சித்தரித்து படம் நகர்கிறது..

இப்போது நாம் கதைக்கு வருவோம்.

இவை அனைத்தும் நிகழக்கூடியவையே என்பதை உணர்கிறீர்களா?

இதைப் போலவே அனைத்து நாடுகளும் சிலரால் ஆளப்படுகிறது. அவர்களே அனைத்தையும் முடிவெடுக்கிறார்கள்.

நாம் என்ன வாங்குவது என்ன படிப்பது என்ன ஆடை அணிவது எப்போது எதை செய்வது எல்லாம் இவர்களாளேயே கட்டுப்படுத்தப்பபடுகிறது..

தமிழர்களே விழித்தெழுவோம்..

தற்பொழுது இந்த படத்தின் இயக்குனர் அதிக விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு படங்களை இயக்க தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும் கேள்விபட்டேன்...