02/05/2018

பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்யும் இழிபிறவிகளுக்கு...


நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களை நெகிழவைத்த பாகிஸ்தான் கடற்படை வீரர்கள்..

கடந்த 9 நாள்களாக, படகு பழுது காரணமாக நடுக்கடலில் தவித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை மீட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஏமன் அருகே ஏடன் வளைகுடா பகுதியில், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் அலாம்கிர், நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, இந்தியாவின் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வந்த புனித மேரி என்ற பெயர்கொண்ட படகு, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் சோதனையிட்டபோது, இன்ஜின் பழுது காரணமாக மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பது தெரியவந்தது.

உணவு, குடிநீர் தீர்ந்துபோனதால் படகில் இருந்த 12 மீனவர்களும் பசியால் வாடியுள்ளனர். உடனடியாக அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டதோடு, படகின் இன்ஜினும் பழுதுபார்க்கப்பட்டது.

உதவி கேட்டு இந்தியாவுக்குத் தகவல் அனுப்பியும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் கடற்படை, மனித நேய அடிப்படையில் இந்த உதவியைச் செய்துள்ளது.

எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, கடலுக்குள் மனித நேய அடிப்படையில் உதவிகள் செய்வதில் பாகிஸ்தான் கடற்படை  முன் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.