ஐதராபாத்தில் அம்மா இறந்தது தெரியாமல் அவர்களுடனே மகன் தூங்கிய சம்பவம் நடந்துள்ளது. ஐதராபாத்தின் கடேடன் பகுதியை சேர்ந்தவர் சமீனா சுல்தானா(வயது 36), இவருக்கு 6 வயதில் சோயிப் என்ற மகன் உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து மகனுடன் தனியாக வசித்து வந்த நிலையில், சமீனாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மகன் சோயிப்புடன் ஓஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
இதனை அறியாத மகன் தாயின் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளான், இந்நிலையில் சில மணிநேரம் கழித்து மருத்துவர்கள் வந்து பரிசோதித்த போது தான் சமீனா இறந்தது தெரியவந்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.