02/05/2018

இந்தபடத்தில் உள்ள 20--20 போலி உரமூடை...


தூத்துக்குடிமாவட்டத்தில் அதிகமாக விற்பனைக்கு வந் துள்ளது...

விவசாயிகளே நம் இனத்தை அழித்து
நமது பூமியை பாழக்கி கெடுப்பதற்க்காகவே இந்த போலி உரம் என்ற மாயை...

இந்த உரம் என்பது வெறும் மண் பசை
சேர்க்கப்பட்டுள்ளது..

உரக்கடைகள் என்ற பெயரில் விவசாயிகளின் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களிடம் உரம் வாங்கிய விவசாயிகள் தலையில் கை வைத்து கடனாளியாகிறார்கள்.

இதுதான் இன்றைய விவசாயின் நிலை?

வேளாண்மைத் துறை என்ன செய்கிறது

இந்த உரக்கடைக்காரர்கள் கொடுக்கும் சன்மானத்தை பெற்றுக் கொண்டு தன் மானத்தை விற்க்கிறார்கள்.

இப்படித்தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

விவசாயிகளை சுரண்டி வாழும் உரக்கடைக்காரர். மாடிவீடு கட்டி வாழ்கிறார்.

விவசாயி மட்டும் மண்னில் வீழ்கிறான்..

விவசாயிகளே பொறுத்தது போதும்
பொங்கி எழுவோம்...

இனி விவசாயத்திற்கு தேவையான உரம்
பூச்சி மருந்துகள். வேளாண்மைதுறை கிடங்குகளில் தான் விற்ப்பனை செய்ய வேண்டும்.

தனியார் கடைகளை தடை செய்ய வேண்டும்.

விரைவில் இதற்க்கான போராட்டம்...
இவண்.
OA.நாராயணசாமி
தலைவர்
தமிழ் விவசாயிகள் சங்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.