எதுவுமே இங்கு நிரந்தரம் இல்லை.
காரணம் இல்லாமல் ஒன்றுமே நடக்காது.
ஏற்றத் தாழ்வே என் இயக்கத்திற்கு காரணம்.
இன்பமும் துன்பமும் இல்லாமல் வாழ்கை நகராது.
எல்லாமே இங்கு ஆற்றல் பரிமாற்றம் தான்.
வெறும் பிரச்சனை மட்டுமே தொடரந்து இருக்க முடியாது.
எதை நினைத்தும் கலங்காதே, எல்லாமே என் மாய விளையாட்டு தான்.
இந்த வாழ்கையில் எல்லா அனுபவங்களையும் பெற்றுவிட்டு என்னிடம் வா.
எப்போது நீ வந்த வேலையை முடிக்கிறாயோ அப்போதே என்னோடு கலந்து விடுவாய்.
உனக்கு துணையாக பல கோடி ஜீவராசிகளை படைத்திருக்கிறேன்.
அவற்றோடு அன்பால் இணைந்து அனுபவங்களை பெறு.
உன் பின்னால் இருந்து மறைமுகமாக நான் தான் செயல்படுகிறேன்.
எதுவுமே உன் கையில் இல்லை, எப்போதும் மகிழ்ச்சியாகவே இரு.
இடுக்கன் வருங்கால் நகுக-- துன்பத்திலும் சிரிக்க பழகு.
அப்போது என்னால் உனக்கு பிரச்சனைகளை கொடுக்க முடியாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.