29/01/2019

கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள்...


நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் உயிர்ச்சத்து ஏ மற்றும் உயிர்ச்சத்து சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் உயிர்ச்சத்து பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு salad மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

உயிர்ச்சத்து ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.

உயிர்ச்சத்து ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். கேரட்டில் அதிகமான உயிர்ச்சத்து ஏ உள்ளது.

உயிர்ச்சத்து ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் உயிர்ச்சத்து ஏ உள்ளது.

தக்காளி, பசலை, ஈரல், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

உடலில் அதிகமாக சுரக்கும் கொடுடி முந்திரிப் பழச் சர்க்கரையினால் (glucose) கண்வில்லை (eye lens) சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன.

அரிசி, பட்டாணி, போஞ்சி, அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன...

பாஜக - அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


10YearChallenge -னா இது தான்...

அதே மதுரை தோப்பூர் அதே எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டுவிழா...

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்...


வரலாற்று ஆய்வாளர் H.G.Wells என்பவர் உலகில் மாந்தர் பரவல் பற்றிய தமது கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறார்...

"For thousands of years, from 15,000 to 10,000 BC., such a heliolithic Neolithic culture and its brownish possessors may have been oozing round the globe through the warmer regions of the word, drifting by canoes often across wide stretches of sea"

"கி.மு 15,000 முதல் கி.மு. 10,000 வரையான புதிய கற்கால (அல்லது கதிரவக் கற்கால) காலகட்டத்தில் பழுப்பு மேனியுடையோர் சிறிய ரக படகுகள் மூலம் கடலில் துடுப்பாட்டியே வெப்பநாட்டிலிருந்து உலகெங்கும் பரவினார்கள்"

அத்தோடு நில்லாமல் இந்த பழுப்பு மனிதர்கள் இந்தியா முதல் எகிப்து மற்றும் ஸ்பெயின் வரை தொடர்ச்சியாக வாழ்ந்ததாக பிற ஆய்வாளரும் கருதுவதாகக் கூறியுள்ளார்,

"Wilfred scaven Blunt says that huxley had a long suspected a common origin of Egyptians and Dravidians of india, perhaps along belt of brown skinned men from india to spain in very early days"

Book: The outline of History
Page: 138 & 140

(கால்டுவெல் காலத்திற்கு முந்தைய ஆய்வாளர்கள் 'தமிழிய' என்று அழைத்தனர். அவர் காலத்திற்கு பிறகே 'திராவிட' எனும் பொருத்தமற்ற பெயர் நம்மீது திணிக்கப்பட்டு அதுவே மேலைநாட்டார் வழக்கத்திலும் உள்ளது)

நன்றி: பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ.நெடுமாறன்...

மரம் வளர்ப்போம்...


பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும், சித்தர்களின் கண்டுபிடிப்பும்...


பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு செயற்கைக்கோளாலும் (satellite) முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?.

அணுகுண்டைச் சுற்றி வெங்காயச் சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச் சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிசி...

தமிழக எம்.எல்.ஏ சம்பளம் விபரம்...


அதிகத் தூக்கமும் ஆபத்து தான்...


சரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் 'தூக்கப் பிரச்னை’ என்று நினைப்பது தவறு.  அதிகமாகத் தூக்கம் வந்தாலும் அது பிரச்னைதான். என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இரவுத் தூக்கத்தின்போது தூக்கத்தில் மூச்சுத்திணறலினால் (Sleep apnea), மூளைக்கு சரியான அளவில் பிராணவாயு செல்லாமல் ஏற்படும் பக்கவிளைவுகள் சங்கிலித் தொடராக நீள்கின்றன.

இதனால், கோபம், தலைவலி, சக்தி இல்லாமை, மறதி போன்ற பிரச்னைகளோடு தாம்பத்ய ஈடுபாடும் குறைந்துபோகக் கூடும். இன்னும் அழுத்தமாகச் சொல்வதானால், பகலில் வாகனம் ஓட்டுகிற முக்கியமான தருணத்தில்கூட தூக்கம் வரக் கூடிய அபாயமும் உள்ளது.

இது மட்டும் அல்ல... தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்னைக்குச் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாத போது, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை என்று அடுத்தடுத்தப் பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன...

அதிரடி உத்தரவு பிறப்பிப்பு...


அதிமுக வின் ஏமாற்று வேலைகள்.?


அடிச்சான் பார் appointment order 3 மற்றும் 5 வது நிபந்தனை 3 வெளியே போ னு சொன்னதும் போகனும் 5 நிதி ஒதுக்கிய பின்னரே  சம்பளம் தரப்படும் அவர்களுக்கும் பட்டை நாமம்தானா?

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?


இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.

அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.

இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனல் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம். வேறு ஏதாவது வழிகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

Hair grow remedy / முடி வளர்ச்சி குறிப்பீக்கள்...




Subscribe the channel for more tips..

பிஜி தீவு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்ட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது...


இதனையடுத்து மேலும் ஒரு சிறிய அளவிலான நில அதிர்வும் உணரப்பட்டது. அது 5.2 ஆக பதிவாகியுள்ளது.

பிஜி மற்றும் தோங்கா தீவுகளுக்கு தெற்கே  500 கி.மீ ஆழத்தில் நிலைக்கொண்டுள்ள இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை...

அதிமுக ஜெயக்குமார் அவர்களே தயாரா.?


நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும்...


எல்லோருக்கும் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் கலந்தே வருகிறது...

இதில் கெட்ட எண்ணங்களை எடுத்து செயல்படுத்துபவர்களுக்கே பிரச்சனை ஏற்படுகிறது...

உதாரணமாக உங்கள் உயிர் நண்பர் நீங்கள் செய்த தவறுக்காக உங்களை அடித்து விடுகிறார்.

தவறு உங்கள் மீது இருந்தாலும் உங்களுக்கு கோபம் என்ற உணர்வு மூலம் அவரை திருப்பி கடுமையாக தாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

அந்த தீயெண்ணத்தை எடுத்து செயல்படுத்தி விட்டீர்கள் எனில், ஓர் நல்ல நட்பை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

அதே சமயத்தில் வந்த தீய எண்ணத்தை கண்டுகாமல் விட்டுவிட்டு அமைதியாக இருந்து விட்டால் அந்த பிரச்சனை பாதிப்பு இல்லாமல் முடிந்து விடும் அல்லவா.

அதனால் முடிந்தவரை தீய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்காதீர்.

பெரும்பாலும் நல்லெண்ணங்களை எடுத்து செயல்படுத்தி சாமர்த்தியத்துடன் வாழ்பவனே. நிம்மதியை அடைகிறான். மற்றவர்கள் துன்பத்தில் திலைக்கிறார்கள்.

எண்ணங்கள் கடலில் உண்டாகும் அலைகளை போன்றது. அதை தடுக்கவோ கட்டுபடுத்தவோ முடியாது.

ஆனால் எண்ணத்தை எடுக்கும் உரிமை நம்முடையது தான். எனவே பார்த்து எடுங்கள். மகிழ்சியாக வாழங்கள்...

தமிழை காப்போம் / Save Tamil....




Subscribe the channel for news...

தமிழர் கெட்டது யாரால்?


தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசுகிறவன் அனைவரும் தமிழர்கள் என்று தமிழர்களே நினைத்து கொள்வார்கள்...

தான் யார் என்பதும் தன் இனம் எது என்பதும் தெரியாதபடி சிந்தனை மழுங்கி இருக்கிறான்..

அதனால்தான் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்கிறவன் எல்லாம் மிக நுட்பமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை ஏமாற்றுகின்றனர்...

தமிழர்களிலே இன்னமும் தான் திராவிடன் தான் என்று நினைத்து வாழ்கின்றனர், அதனால் தான் வந்தேறி கூட்டம் எல்லாம் தமிழனை ஏமாற்றி வாழ்கின்றனர்.

இனமான உணர்வு இல்லாத தமிழர்களிடம் எப்படி புரிய வைப்பது முத்துகுமரன் உள்ளிட்டோர் நெருப்பில் மாண்டனர், அவர்களின் மூலம் படிப்பினை பெற்றிருக்க வேண்டும் . அதை உணராமல் ஆளுகிறவர்களின் எண்ணத்திற்கேற்ப தமிழர்கள் குழம்பி விட்டனர்..

தமிழர்களின் நாட்டை தாசி வீடாக கருதிவிட்ட வந்தேறிகளின் அடிமையாக படித்த தமிழர்களே இருகின்றனர்...

சும்மா இருந்தால் சொறிநாய் கூட நம் மீது சிறுநீர்  பெய்து விட்டு தான் செல்லும்..

தமிழா சிந்தித்து விழுத்தெழு...

பாஜக மோடி கலாட்டா...


அல்சர், ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யும் பீட்ரூட்...


பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்...

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்..

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்..

3. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்..

4. பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்..

5. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்..

6. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்...

மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்றலாம் வாங்க...



அப்படியே மறக்காம channel subscribe பண்ணிடுங்க...

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?


எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டு விடும்.

எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப் போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதே போன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்...

1. தியானம் : தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை : கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள் : முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல் : சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள் : உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள் : எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது : தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும் போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள் : உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள் : நன்றி கூறுவதை விட சிறந்த நேர்மறை உணர்வு இருக்க முடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள் : தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதே போன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.

உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.

உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.

உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.

உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்...

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்.?


இரயில் நிலையங்களிலோ, வங்கிகளிலோ, அரசு அலுவலகங்களிலோ தமிழில் சேவை வழங்க மறுத்தால் அதை எளிதாக கடந்து செல்பவரா நீங்கள்...


தமிழில் படித்தவனுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு என போராடாமல் ‘தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா’ என உங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைக்கும் நபரா நீங்கள்..

அப்படியானால் நம் தாய்த் தமிழ் மொழியை காக்க தமிழை ஆட்சி அரியனை ஏற்ற தன்னுயிரையே ஈகம் செய்த மொழிப் போர் ஈகியர்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை...

நாளை என்னுடைய மொழி சாகும் என்றால்...அதற்கு முன் நான் இன்றே செத்து விடுகின்றேன்.. என்று தீக்கு இறையான நம் முன்னோர்கள் இவர்கள்...

இந்தியா என்பது நாடல்ல.. ஒன்றியம்...


தவிர்க்க கூடாத ஒன்பது உணவுகள்...


நம் உடல் பாதுகாப்பாக இயங்க ஒன்பது சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்த ஒன்பது சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் : பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி : நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி : சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்து விடும்...

கிரிக்கெட் வீரர்களை விலை பொருள் ஆகி விட்டனர் நாம் ஆதை கண்டு அடிமையாகி விட்டோம்...


நமக்கு என்ன கொடுத்தால் அடிமையாகி இருப்போம் என்பதை நம்மை விட கார்ப்பரேட்டீர்க்கு நன்கு தெரியும்...

உங்களுக்கு தெரியுமா?


உலகத்தின் பழமையான கல் ஆயுதம் 5,00,000 வருடம் முன் செய்யப்பட்டது.

அந்த கல் ஆயுதம் திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தில் உள்ளது என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

தமிழனின் புகழ் உலகுஅரிய பகிருங்கள்...

Multhani matti uses / முல்தானி மட்டி உபயோகங்கள்...



Subscribe the channel for more tips...

எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்...


எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.

இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பட்டை - 2 அங்குலம்
இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)
கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 2 துண்டுகள்
புதினா - 5-6 இலைகள்
தேன் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...

ஹீலிங்...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் .

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம். இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் 'இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது' என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும்.

அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.
சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.
நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே "NO" என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப் பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்...

சேலம் அருகே தகாத உறவு காரணமாக தான் பெற்ற 4 வயது பெண் குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்த பிரியங்கா என்ற பெண் கைது...


ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...


ஸ்ரீ கருணாநிதி பக்த பஜனை சபா அங்கத்தினர்கள் தங்கள் வாத்திய கோஷடிகளுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இவண்
ஸ்ரீ கருணாநிதி பக்த பரிபாலன டிரஸ்ட்...

தொப்பையை குறைக்க எளிய வழி...




Subscribe the channel for more tips...

ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும்...


விண்வெளி ஆராய்ச்சியாளரா 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழன் மணிவாசகர்...


உலகம் உருண்டை தான் என்று நிரூபிக்கவே இந்த நவீன அறிவியல் திக்குமுக்காடியது என்பதே உண்மை.

அதன் பிறகே எல்லா கோள்களும் உருண்டை தான் என்றும், சூரிய குடம்பம் என்றும், பல சூரியன் உண்டென்றும், எந்த அண்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் பல நவீன இயந்திரங்களின் உதவியோடு அதுவும் எந்த தெளிவும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒரு யுகமாம்வே கூறிவருகிறது இன்றைய நவீன அறிவியலும் அதை சார்ந்த ஆய்வுகளும்.

இன்றைய நிலைமையே இப்படி இருக்க, 9 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழன் இந்த அண்டம் உருண்டை தான் என்றும், நூறு கோடிக்கும் மேலான கோள்களும், விண்மீன்களும் உள்ளன என்றும் அடித்து கூறியுள்ளான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..

ஆம்.. இப்படியான பல அறிவியல் உண்மைகளை பற்பல நூறாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் இனத்தின் மூத்தோர்கள் தெளிவுற உரைத்துச் சென்றுவிட்டனர்.

சரி அந்த 9 நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் யார்? அவர் என்னதான் சொன்னார்? சற்றே பொறுமையாக படியுங்கள்.

அவர் பெயர் மணிவாசகர், திருவாசகம் இயற்றியவர். இவர் தான் பாடிய திருவாசகத்தில் திரு அண்டம் என்னும் பகுதியில் இந்த அண்டத்தின் வடிவம் பற்றியும் அவற்றில் நிறைந்திருக்கும் கோள்கள் பற்றியும் மிக விளக்கமாக கூறுவதை காண்போம்.

manivasagar

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன

இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய

சிறியவாகப் பெரியோன் தெரியின்”

விளக்கம்:

இந்த அண்டம் உருண்டையாகவே பிறந்துள்ளது, மேலும் இந்த அண்டத்தில் நூற்றியொரு கோடிக்கும் மேலான கோள்களும், விண்மீன்களும், சூரியன்களும்,சந்திரன்களும், பூமிகளும் நிறைந்து பறந்து விரிந்து கிடக்கிறது என்றும். இந்த கோள்கள் ஒவ்வொன்றும் ஒன்றுகொன்று தம் ஒளியை பகிர்ந்து கொள்கின்றன அதாவது ஒளியற்ற கோள்கள் கூட சூரியனின் அணுக்கதிர்களை உள்வாங்குவதால் ஒளியை சூடிக்கொள்கின்றன என்றும் கூறுகிறார்.

பூமியும், சூரியனும், சந்திரனும் மட்டும் அல்லாமல் இந்த அண்டமே உருண்டை தான் என்றும் அதில் நூறு கோடி விண்மீன்களும் கோள்களும் சிதறிக்கிடக்கிறது என்றும் இந்த மணிவாசகர் எந்த டெலஸ்கோப் வைத்து இதையெல்லாம் ஆய்ந்தார் என்பது தெரியவில்லை.

இப்படியாக ஒவ்வொரு தமிழனும் உலகம் வியக்கும் பலவற்றை வகுத்து தொகுத்து வழங்கி சென்றிருக்கிறான்.

ஆனால் இன்றைய நமது சமூகமோ, தமிழன் மூடன் என்றும் தமிழனுக்கு சுய அறிவு இல்லை என்றும் கூறிக் கொண்டுத் திரியும் மூடர் கூடமாகவே இருக்கிறது என்பதை எண்ணி நாம் நம்மையே கடிந்து தான் கொள்ள வேண்டும்...