26/01/2021
ரெய்கி : Reiki and Pranic Healing...
ரெய்கி என்றால் என்ன? அது ஒரு வகையான சிகிச்சை முறை. இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.
நமக்குக் கண்ணுக்குத் தெரிவது எலும்பு, சதை, ரத்தம், நரம்புகளால் ஆன உடல் மட்டுமே. நம் ஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் சூட்சும உடல் ஒன்று இருக்கிறது. அது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
பொதுவாகப் பொருள் என்பது Solid, Liquid அல்லது Gas நிலையில் இருக்கும். இந்தச் சூட்சும உடம்பானது Plasma என்னும் நேர் மற்றும் எதிர்மறை அயனிகளால் (Positive and Negative Ions) ஆன ஒரு (நான்காம்) நிலையில் உள்ளது. உடல் திசுக்களின் செல்களில் இருக்கும் அந்த ப்ளாஸ்மா வேறு; இது வேறு. இந்தச் சூட்சும உடம்பிற்கு Etheric body, Energy body, Bio-Plasmic body எனப் பல பெயர்களை வைத்து வழங்குகின்றனர்.
நம் உடலில் இருக்கும் ரத்த நாளங்களைப் போல இந்த energy body-யிலும் ஆற்றல் பாதைகள் (energy channels or meridians) இருக்கும்.
இந்தச் சூட்சும உடம்பானது நமது மெய்யுடலைச் சுற்றி ஒரு 4-5 inches கவர்ந்தவாறு கோழி முட்டை வடிவில் இருக்கும். நம் உடலின் எந்தப் பாகத்தில் நோய் வருவதாக இருந்தாலும் இந்த energy body-யை முதலில் தாக்கிவிட்டு அதன் பின்னர் தான் நம் உடலில் தாக்கத்தைக் காட்டும்.
அதே போல, நம் உடலில் வெட்டு போன்ற காயங்கள் ஏற்படும் போது இந்த energy body-யிலும் மாற்றங்கள் தெரியும். எனவே இந்த energy body-க்கு ஆற்றல் கொடுப்பதன் மூலம் நோயிற்கான சிகிச்சையை நாம் துரிதப்படுத்த முடியும்.
சரி, இந்த ஆற்றலை நாம் எங்கிருந்து பெறுவது? இதென்னடா வேண்டாத வேலை.. பெட்ரோல் டீசல், CNG (fuel) மாதிரி இதற்கும் ஆற்றல் தேவையா என்று பயப்பட வேண்டாம். இந்த ஆற்றலை (energy) நாம் இயற்கையிடமிருந்தே பெறலாம். அதாவது பிரபஞ்சத்திடமிருந்து. சூரியன், காற்று, மரங்கள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அலைகளைப் பெற்று உடம்பில் சிகிச்சை தேவைப்படும் இடத்துக்குச் செலுத்துவது தான் இக்கலை. சரி இதற்கு ஏதேனும் கருவி தேவையா? இல்லை. இதெற்கென மருந்து? இல்லை. சிகிச்சை அளிப்பவர் ஒருவர் இருந்தால் மட்டும் போதும். உலகின் எந்த மூலையில் இருப்பவரும் எந்த மூலையில் இருப்பவருக்கும் Distant Healing முறையில் கூட சிகிச்சை அளிக்கலாம்.
இவ்வளோ நேரம் சீரியஸா கேட்டுட்டு இருந்தோம்.. இப்போ தான் தெரியுது இது ஒரு கப்சானு என்று சொல்பவர்கள் இப்பொழுதே அப்பீட் ஆகிக் கொள்ளலாம். மாறாக இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு அதிசயமாக இதை எண்ணுபவர்களும் தீராத நோயினால் அவதிப்படுபவர்களும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் இருப்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம்.
Common Cold, Fever, Headache, Diabetes, High BP, High Cholestrol, Heart Problems, Thyroid போன்ற Hormone Problems, Kidney Problems, Migraine, Tonsillitis, Sinusitis, STD, Leprosy, Cancer போன்ற எல்லா விதமான நோய்களுக்கும் தனியாகவோ, மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து supplement ஆகவோ Pranic Healing சிகிச்சை செய்யலாம்.
இது சிகிச்சை முறையைத் துரிதப்படுத்தும் catalyst (ஊக்கி) ஆகப் பயன்படுகிறது.
Rei என்றால் Universal; Ki என்றால் Life Energy or Prana (நம்முடைய மொழியில்). இதைத் தான் Reiki என்றும் Pranic Healing என்றும் சொல்கின்றனர். இரண்டு கலைகளும் ஒன்று தான்.
ஆனால் இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் சில minor வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
Reiki-இல் ஆற்றல் அளிப்பதை (energizing) மட்டுமே முக்கியமாகக் கொள்கின்றனர்.
Pranic Healing-இல் முதலில் ஆற்றல் மையங்களைச் (Energy Chakras) சுத்தம் செய்வது (Cleansing), பின் ஆற்றல் அளிப்பது, சிகிச்சை அளிப்பவர் சிகிச்சை பெறுபவரிடம் இருந்து நோய் (அ) தீய ஆற்றல் தனக்குப் பரவாமல் பார்த்துக் கொள்வது போன்ற வரிசை முறையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர்...
பாஜக வை பற்றி தெரிந்து கொள்வோம்....
1) இந்திரா காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.
2) ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.
3) தீவிரவாதி ஆசாராம் பாபு வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி.
4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த வாரன் ஆன்டர்சனின் வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
5) ஊழல் பெருச்சாலி லலித் மோடி யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில முதல்வர் வசுந்தரா ராஜி யின் கணவனும், மகளும்.
6) வொடபோன் வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
7) தீவிரவாதி அப்சல் குரு விற்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.
8) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
9) கடத்தல் மன்னன் அலேமோ வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.
10) சஹாரா ஸ்கேன் ஊழல் குற்றவாளி சுப்ராத் ராய் வழக்கறிஞர் யார் - BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
இந்தியாவின் முக்கிய வழக்குகளில் பணத்துக்காக குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு தேச பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்...
பிரபஞ்ச இரகசியம்...
உங்கள் பெயர் உங்களுக்கு சொந்தம் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துள்ளதுப் போல், உங்கள் தேவையான விருப்பமும் உங்களுக்கு சொந்தம் என்பதை அறியும் வரை உணர்வுப்பூர்வமாக அகக்காட்சியாக கற்பனை செய்யுங்கள்.
உங்களை இயக்கிக் கொண்டுயிருக்கும் அப்பேராற்றல் பிரபஞ்சத்தில் உள்ள அந்த நுண்ணிய காந்த களத்துடன் தொடர்புக் கொண்டு நீங்கள் விரும்பியதை உங்கள் முன் தோற்றுவிக்கும்.
இதற்க்கு தேவை உங்கள் உள்யிருக்கும் இப்பேராற்றல் மீது நீங்கள் விஸ்வாத்துடான வைக்கும் முழு நம்பிக்கையே..
அவ்வளவுதான் எப்படிப்பட்ட வாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை உணர்வுப்பூர்வமாக அகக்காட்சியில் பாவனை செய்யுங்கள்..
இம்முறையில் நீங்கள் எல்லாம் வல்ல இறைவனையும் உணரலாம் பாவனை ஒன்றே போதுமே பரமநிலை ஏய்துவதற்க்கே என்று பாரதியாரே கூறியுள்ளார்..
அப்பேர்ப்பட்ட பேராற்றல் நம்முள் உள்ளது அதை அன்போடு பயன்படுத்துவோம்...
இதையே இன்று ஆல்பா தியானம் என்று பயிற்சியும் அளிக்கப்படுகிறது...
தந்தி டிவி விபச்சார தொழிலை தொடங்கிட்டன் 😁
கட்சியே தொடங்காத ரஜினிக்கு 7% விகிதமாம்...
அடேய் எப்போதோ பணம் வாங்கிட்டு தயார் பண்ண டூபாக்கூர் கணிப்பு இது என்று எல்லாருக்கும் புரியும் டா...
Who will cry when you die? - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...
அதாவது, நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும் என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே..
ஆணவம் ஆயுளை குறைக்கும்...
மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி, ஆனந்தமாக வாழுங்கள்...
நகம்...
நகம் என்பது நமது தோலின் ஒரு பகுதி.. ஆனால் தோலைவிடக் கடினமானது..
கெரட்டின் எனும் புரதப்பொருள் தான் நகத்தின் கடினத் தன்மைக்குக் காரணம்..
அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..
நகம் வெளிறிப் போயிருந்தால் - இரத்தசோகை..
மஞ்சள் நிறத்தில் இருந்தால் - மஞ்சள் காமாலை..
நீல நிறத்தில் இருந்தால் - இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவு..
வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் - கால்சியம் சத்துக் குறைவு..
சுற்றிக் கரும்புள்ளிகள் தோன்றினால் - B12சத்துக் குறைவு..
நத்தைக்கூடு மாதிரி வீங்கினால் - காச நோய்,கல்லீரல்நோய்..
ஸ்பூன் மாதிரி மத்தியில் குழி விழுந்தால் - இரும்புச்சத்து குறைவு...
அரைஞாண் கயிறு இடுப்பில் கட்டுவதன் அவசியம்... மருத்துவ ரகசியம்...
அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.
எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..
உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?
நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்...
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது.
ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு..
அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.
பிறகு அக்கயிறு வெள்ளிக் கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.
உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள்.
இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.
இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி, தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான்.. அது பகட்டுக்கு..
சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.
நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...
சுருக்கமான வழி சொல்லவா?
விடுதலை பெறுவது அத்தனை எளிமையன்று..
அதுவும் ஒரு பழமையான இனம் அதன் சொந்த மண்ணில் விடுதலை பெற உலக சிறு-பெரு ஆதிக்கங்கள் விடவேவிடாது..
உலகமே எதிர்த்து வரும்.
ஆனால், தமிழினம் விடுதலை பெற ஒரு சுருக்கமான வழி உள்ளது..
தமிழர்கள் குறைந்த சேதத்துடன் விரைவாக விடுதலை அடைய வேண்டுமேயானால், தமது விடுதலையை எதிர்த்து நிற்கும் கூட்டத்தில் எவனெல்லாம் தமிழனோ அந்த தமிழனையெல்லாம் முதலில் ஒழித்து கட்டிவிட வேண்டும்.
எதிரணியில் நமக்கு சவாலாக அமையப் போகிறவன் தமிழன் தான்.
அது நடக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்..
அது ஒன்றும் கடினமில்லை..
தமிழினவுணர்வு பெற்றுவிட்ட ஒரு தமிழனின் முன்னாள்...
தமிழினவுணர்வு பெறாத ஒரு தமிழனால் தாக்குப்பிடிக்கவே முடியாது...
ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா.? எலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்...
எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும்.
ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.
செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்துவந்தால், சரி செய்து விடலாம்.
வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும், செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.
இந்த எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால், அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து, தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.
எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பது தான்.
அதுமட்டுமின்றி, அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.
பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
இந்த எலுமிச்சை கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்,
எலுமிச்சை ரசம் செய்முறை...
ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டுபிசைந்து கொள்ளவும்.
பூண்டு, மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு, அரைத்த மசாலா மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்புசேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான தீயில் அடுப்பைவைக்கவும்.
ரசம் நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கி மூடி விடவும். எலுமிச்சை சாறு ஊற்றியவுடன் கொதிக்கவிடக்கூடாது.
சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.
ரசம் அதிகம் கொதித்து விட்டால் கசந்துவிடும்...
அரை வேக்காடு (Half Boil) முட்டையில் இம்புட்டு ரகசியம் இருக்குதா?
அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது.
பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.
அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை.
பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.
அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும் மற்றும் 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.
அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது.
வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும்.
நாம் பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்...
புனர் ஜென்மம் என்பது உண்மையா?
இதோ உங்களிடம் வெளிப்படும் அறிகுறிகள்..
ஒருபக்கம் புனர் ஜென்மம் என்பது உண்மை, பொய் என பல விவாதங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஆனால், நமது நிஜ வாழ்க்கையில், முதன் முறையாக சிலரை பார்க்கும் போது, எங்கோ, எப்போதோ, நீண்ட நாட்கள் பழகியது போன்ற உணர்வு வரும். இது போன்ற உணர்வு தோன்றுவதன் காரணம் என்ன?
அப்போது நிஜமாகவே புனர் ஜென்மம் என்பது இருக்கிறதா?
நாம் இறந்து பிறகு உடல் தானே அழுகி போகிறது உயிரும், எண்ணங்களும் என்ன ஆகிறது?
என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில்கள் ஏதும் இல்லை.
ஒரு நபரிடம் பேசும் போது, உங்களிடம் தோன்றும் இந்த நான்கு அறிகுறிகளை வைத்து அவர் புனர் ஜென்மத்தில் உங்களோடு பழகிய நபர் என்பதை அறியலாம் என கருதப்படுகிறது.
தொலையுணர்வு! முதன்முறை கண்டாலும் கூட, உங்கள் இருவரின் மனதின் எண்ணங்கள் படிக்கும் திறன் பெற்றிருப்பீர்கள். அவர்கள் கூற வருவதை, நினைப்பதை நீங்கள் கூறுவீர்கள். உங்கள் இருவரின் கணிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஃப்ளாஷ்பேக்! ஒருவரை முதல் முறை காணும் போது, என்றோ எப்போதோ பழகியது போன்று ஃப்ளாஷ்பேக் நினைவுகள் வருகிறது எனில், அவர் உங்களோடு புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம்.
மேலும், இது போன்ற மாயையான ஃப்ளாஷ்பேக் நிகழ்வுகள் தோன்றும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும், உங்களது உணர்ச்சிப்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
கண்கள்! அவர்களது கண்களை பார்த்தவுடன் இருவர் மத்தியிலும் ஒரே மாதிரியான எண்ணம் தோன்றுவது, ஒரே மாதிரி பேசுவது, அனைத்தையும் தாண்டி எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் பழகுவது, அவர் உங்களுடன் புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.
உணர்ச்சி, அவரை பார்த்த முதல் நொடியே உங்களுக்குள் ஓர் உணர்ச்சி பிழம்பு வெளிப்படும். அந்த உணர்ச்சி மிகவும் இறுக்கமானதாக, உறுதியானதாக இருக்கும். அது உங்கள் இருவரியில் மன ரீதியாக பிரியவிடாமல் தடுக்கும்.
அந்த வேளையில் உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால், புனர் ஜென்மத்தில் நீங்கள் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், நேர்மறை எண்ணங்கள் தோன்றினால் நண்பர், குடும்ப நபர், துணை போன்றும் எடுத்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இதுப்போன்று, ஒருவரை முதல் முறை காணும் போது ஏற்படும் உறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்...
புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை...
தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.
இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...
எண்ணமின் அலைகளின் பயணம்..
நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.
எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.
அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.
அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.
அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.
அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.
எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.
அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
எழுத்து வடிவத்தில் இதை விளக்குவது சற்று கடினம் என்பதால் முடிந்தவரை விளக்கியுள்ளேன். கூடிய விரைவில் இதனை காட்சிகளாக காண்பிக்கிறேன்...