இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...
திரித்துவ மக்கள் பற்றி இன்று பலமார்க்கங்களில் உள்ளவர்கள் திரித்து சொல்கிறார்கள்.
எந்த மார்க்கமாக இருந்தாலும் இறுதி காட்சிகளை இறக்கி வைக்காமல் இல்லை.
அத்தனை மார்க்கங்களும் அடையாளம் காட்டி நிற்கும் ஒரே சபை திரித்துவ சபை இந்த சபையே இறைவன் பூமிக்கு வருகின்றபோது ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் உலகாண்டு நிற்கிறது.
உலகை ஆண்டு நிற்கின்ற இறைவனின் மக்கள் தான் இந்த திரித்து வமக்கள். ஆனால் இந்த திரித்துவ மக்கள் தற்போது இருக்கும் எந்த மார்க்கத்தையும் சாராதவர்கள். எந்த மார்க்கத்திலும் சேராதவர்கள்.
இப்படிபட்ட இறைமக்கள் தங்களுக்கென்று தனிஞானத்தையும் இறைவனுடைய வழிகாட்டுதலையும் இரண்டாம் வருகை இயேசுவின் தலைமையும் ஏற்றுக்கொள்பவர்கள்.
இவர்களுக்கும் இன்றைய கிருஸ்துவ சபைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
இறுதி நேர வெளிபாட்டிற்கு பிறகு எல்லா மதங்களும் தங்கள் வேதத்தை விடுத்து பின்பற்றும் வழிமுறைகளை விடுத்து புத்தம் புதிய ஏகாதிபத்திய இறை கொள்கையை கொண்ட மார்க்கத்திற்கு எல்லோரும் மாறுவர். மாறாதவர் யார் ?
இறைவன் இல்லை என்ற கோட்பாட்டை குடிக்கொண்டவர்கள் கூட தங்கள் கோட்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு, ஆண்டவனின் வருகையை அறிந்து ஆனந்தபட்டு நிற்பர்.
உலகம் அனைத்திற்கும் மார்க்க வழிகாட்டியாக, அரசியல் வழிகாட்டியாக நிற்பவர்கள் இந்த திரித்துவ மக்கள்.
இந்த திரித்துவத்தை ஏற்படுத்தும் மண் தென்னிந்தியா என்பதால் தானே பிரஞ்சு நாட்டு தீர்க்கதரிசி முக்கடல் சூழ்ந்த நாடு மதத்தின் பெயரால் கடலைக் கொண்ட நாடு.
அதிலே தான் இறையரசு ஏற்படுகிறது என சுட்டிக்காட்டி இருப்பதை மறந்து விட முடியமோ. இக்கருத்தை தமிழக சித்தர்கள் அம்மண் தமிழ்மண் என பண்பாடி நிற்கிறார்கள்.
இப்படிபட்ட தமிழ்மண் தன் தமிழ் என்ற வார்த்தையிலும் மூன்று எழுத்தைத்தவழ விட்டு நிற்கிறது.
வடலூர் வள்ளலார் அவர்களின் திருமுறையில் ஆறாம் திருமுறையில் அகப்பட்டு நிற்கும் கருத்துகள் எல்லாம் யுகப்பட்டு நிற்கப்போகும் இறுதிகால காட்சிகளை அருமையாய் இறக்கி வைக்கிறது.
அவருடைய கூற்றில் இறைவன் அரூபமானவன், ஜோதிமயமானவன், என்றெல்லாம் சொல்லியிருக்கும் அதே நேரத்தில், அவ் ஒளி இறுதியிலே வான்விட்டு இறங்கி மண் தொட்டு நிற்கிறது ஒரு திருச்சபையில்.
எனவே இறைவன் இருக்கும் திருச்சபையாய் இருக்கப் போகும் அந்த சபையில் விமலன் ஒருவர் இருப்பார் என்றும், அண்ட பிண்ட ஞானத்தை சொல்லும் அந்த அற்புதசபை இறந்தவர்களை எழுப்பும் என்றும், நியாயதீர்ப்பு செய்யும் என்றும், அகில உலக அரசை செங்கோல் கொண்டு செம்மையாய் நடத்தும் என்றும், ஊனம் ஒழித்து ஞானம் கொடுத்து, கானம்பாடி நிற்கும்.
இப்படிபட்ட தமிழ்த் திருச்சபை திரித்துவ திருச்சபை என என்னும்போது ஏனைய மார்க்கக் கருத்துக்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது உள்ளத்திலும் ஒரு வசந்தம் வீசுகிறது அல்லவா.
இப்படி அமையப்போகும் திருச்சபை எதற்கும் சொந்தமல்ல. இருக்கும் மார்க்கங்களில் எந்த மார்க்கத்திற்கும் சொந்தமானதல்ல என்று என்னும் போது இயேசுவின் புதிய வானம் புதிய பூமி என்ற வார்த்தையும் நினைவுக்கு வருகிறது அல்லவா.
தமிழ்ச் சித்தர்களுடைய வார்த்தைகளை கவனிக்கின்றபோது வானம் புதிது , பூமி புதிது, மனித மனம் புதிது, வாழ்க்கை புதிது, கலாச்சாரம் புதிது, காற்று புதிது, பறவை புதிது ,விலங்கு புதிது என சொல்லுகின்ற அளவிற்கு எல்லாம் புதியதாய் இருக்கும் என பாடும் சித்தர்கள் வார்த்தைகளையும் இத்தோடு மனம் அசைபோட்டுப் பார்க்கிறது அல்லவா.
பத்தோடு ஒன்றாய் பாடி நின்ற சித்தர்களும் சத்தோடு கருத்துகளை திரித்துவத்திற்கு ஏற்ப திரட்டிவைத்து உள்ளனர்.
புரட்டு மார்க்க கருத்துகளை எல்லாம் புரட்டிப் போட வந்த புதுமார்க்கம் அல்லது புதுவழி அல்லது புதுநெறி உலகை ஆட்கொண்டு நிற்கும் என்று சொல்லி நிற்கிறார்கள்.
தமிழ் தீர்க்கதரிசி முத்துகுட்டி அவர்களின் தீர்க்கதரிசன கருத்துகளை வாசனை செய்து பார்த்தால் இக்கருத்துகளே வசபட்டுநிற்கின்றன.
அகத்தியன் போகன் அருமை கருத்துகளும் திரித்துவ திருச்சபையை திவ்யமாய் எடுத்து சொல்கிறார்கள் கோரக்கரின் தீர்க்கதரிசனமும் இக்கருத்தையே கோடிட்டு காண்பிக்கிறது.
நபி அவர்களின் மறுமை கால கருத்துகள் இடையே புகுந்து மறைந்து நிற்கும் மறையின் ரகசியங்களும் இறுதி கால அரசாட்சி இறைவன் இரண்டாம் வருகை இயேசு , மஹதி என மகத்தான வார்த்தை கொண்டு வர்ணித்து நிற்கின்றது.
இப்படிபட்ட திரித்துவம் விளையும் பூமி தமிழ்நாடு என்பது தான் ஒட்டுமொத்த அனைவரின் கருத்தாய் இருக்கிறது.
இந்த திரித்துவத்தை தரணியிலே பூர்வாங்க புராணமாக சித்தரித்து நிற்கும் இந்து புராணம் மூவரை அடையாளபடுத்தி நின்றாலும் அவர்கள் இந்த திருச்சபைக்குரியவர்கள் இல்லை என்பதை காட்டுகிறது.
அப்படியானல் இறுதி திருச்சபை அவர்கள் சொல்லும் அடையாளங்களை வைத்து பார்க்கின்ற போது காலம் மிகநெருங்கிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
புராணத்தில் இறுதி காலத்தில் முருகபெருமானின் ஆன்மாவிடம் ஒருலட்சம் பேருக்கு மேல் வருவதாகவும், அவர்களை அவர் சகோதரராக ஏற்றுக் கொள்கிறார் என்றும் சொல்லப்படும்.
அதே நேரத்தில் பைபிளில் 144000 பேர்கள் அவரை நாடி வந்து நிற்கின்றனர் என்று சொல்லும்போது இந்த நாடி வருபவர்கள் யார்.?
முதன் முதலில் இந்த இறுதி கால திரித்துவ திருச்சபையை நோக்கி 12குலத்தவர்கள் 12×12000 =144000 இஸ்ரவேலர்கள் என்று கூறியிருப்பதை அலட்சியமாய் விட்டு விட முடியாது.
வெளிநாட்டு தீர்க்கதரசிகள் தங்களுடைய தீர்க்கதரிசன குறிப்புகளில் இறுதி கால இடங்களை குறிப்பிடும்போது தான் வாழுகின்ற பகுதியில் பெயர் காரணங்களை கொண்ட ஊர்களை போல் பெயர் காரணம் கொண்டு நிற்கும் இடங்களை உவமைபோல் அடையாளபடுத்த முயல்கின்றனர்.
உதாரணமாய் யோவானின் திருவெளிப்பாடு தீர்க்கதரிசனத்தில் எகிப்து என்றும் சோதாம் என்றும் உருவகமாய் ஊவமையாய் சொல்லப்படுவதை கவனிக்கும் பொழுது அந்த இடம் தமிழ்நாடு என தெள்ளத்தெளிவாய் தெரிகின்ற போது மேலும் நம் சிந்தனை கூர்மையாகிறது.
எனவே அவர்களின் தீர்க்க தரிசனங்களில் எகிப்து என்ற தமிழ்நாட்டையும் சோதாம் புதுவை மாநிலத்தையும் குறித்து நிற்கிறது.
வீழ்ந்தது வீழ்ந்தது பாபிலோன் என்று சொல்லுகின்ற வார்த்தையை வைத்து கொண்டு உவமையாக சொன்னது என உள்ளர்த்தம் தெரியாது கிருஸ்துவரான ஜார்ஜ் புஷ் யின் அறியாமையால் அழிந்து போனது ஈராக் என்ற பாபிலோன்.
ஆரம்பத்தில் அணு ஆயுதம் உள்ளது என குற்றம் சாட்டி போர்தொடுத்த அமெரிக்க பழைய ஜனாதிபதி புஷ் அந்நகரத்தை அழித்தபிறகு அணு ஆயுதம் துளிக்கூட இல்லாத நிலையில் ஏன் அழித்தீர்கள் என கேட்டதற்கு கடவுளுக்காக அழித்தேன். இயேசுவின் இரண்டாம் வருகைக்காக அழித்தேன் என்றார் .
இரண்டாம் வருகை இயேசுவும் சரி இறைவனும் சரி அவரை மன்னிக்க மாட்டார்கள்.
உண்மையில் இது நிகழப் போகும் இடம் தமிழ்நாடு என்பதால் பாபிலோன் என்ற வார்த்தைக்கு பொருள் என்ன எனபார்க்க வேண்டியிருக்கிறது .
மலையில் சிலை வழிபாடு செய்கின்ற நகரத்தை கொண்ட மாநிலம் அப்படியென்றால் அறுபடை வீடுகளைக் கொண்டு நிற்கும் தமிழ்நாட்டை குறிக்கிறது.
இப்போது புரிகிறதா மலைமீது உள்ள சிலை வழிபாடு உள்ள கோயிலை பெற்ற மாநிலத்தின் தலைநகர் சென்னையே பாபிலோன் என்று கருத வேண்டியிருக்கிறது.
இப்படி இடமே இடம்மாறி நிற்கின்ற பொழுது வாழும் மக்கள் இஸ்ரவேலரின் 12வகுப்பினர் என்ற வார்த்தையின் பொருளையும் சிந்தித்து பார்க்க வேண்டியதாய் இருக்கிறது.
பைபிளின் கூற்றுபடி இவர்கள் இறுதி கால சம்பவத்தில் இடம் பெற்று நிற்கும் அரசு வருவதற்கு தங்கள் கைகளை கறைப்படுத்தி கொள்ளாதவர்கள்.
எந்த கட்சிக்கும் ஒட்டு போடாத இந்த தமிழ்நாட்டு மக்கள் என யோசிக்கவைக்கிறது, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட கிட்டதட்ட.5.7கோடி வாக்காளர்களிலே 5.5லட்சம் வாக்காளர்கள் எதையும் ஆதரித்து ஒட்டுபோடவில்லை என்று எண்ணி பார்க்கின்ற போது அதை கண்டு பிடிக்க காலம் செய்த அற்புதம் நோட்டா.
நோட்டா வாக்கை எல்லோரும் நோட் பண்ண வேண்டியிருக்கிறது அப்படியென்றால் பைபிள் சொல்லும் 144000 பேரும் நோட்டாவிலிருந்து பிறப்பவர்களா ? நோட்டாவிலிருந்து வருபவர்களா ? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
இந்த கிருஸ்த்துவ தீர்க்கதரிசி சொன்ன 144000 பேரும் இறை ராஜ்ஜியத்தின் ஊழியர்களாக அமர்த்தபடுபவர்கள் என குறிப்பிடபட்டுள்ளது.
எனவே பாபிலோன் பற்றி யோவானின் தீர்க்கதரிசனம் தண்ணீரால் சூழ்ந்து சங்கடத்தை தரும் சூழ்நிலை அந்நகருக்கு தரும் முதல் எச்சரிக்கை என சொன்னதும் அது (சென்னையில்) அது நடந்ததும் பார்த்தால் சற்றே மனம் யோசிக்கிறது.
இப்படி திரித்துவ சபையைக் கொண்ட அமைப்பிலே எத்தனை பேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்ற ஒருகணிப்பை உற்று நோக்கினால் கணிதமேதை பித்தாகரஸ் தீர்க்கதரிசனத்தின் படியும் இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் படியும் வலையில் மாட்டிய மீன்களின் எண்ணிக்கை 153.
இரு பெரும் வட்டங்களை வெட்டச் செய்து வெட்டிக்கொள்ளும் அந்த பகுதி ஒருமீனின் உருவத்தை கொண்டு நிற்பதை பாருங்கள்.
அதன் அதிக அகலமும் அதிக உயரமும் தங்களுக்குள் ஒரு சரியான நிலையான கோட்பாட்டை கொண்ட விகிதாசாரத்தில் இருக்கின்றன.
அதாவது 153:265 எனவே எந்த இரு வட்டங்களை கொண்டும் வெட்டிகொள்ள வைத்து உருவாக்கப்படும் மீனின் நீள அகலம் 153:265 என்ற விகிதாசாரத்தில் இருக்கும் என்பது விந்தையாகும்.
யோனாவின் அடையாளத்தை இறுதி கால அடையாளமாய் அடையாளபடுத்திய இயேசுவும், இறுதிகால திருச்சபை இந்த 153பேரை கொண்டதாயிருக்கும் என்பதை உவமைபோல் உண்மையை கூறியுள்ளார்.
முத்துகுட்டி அவர்களின் தீர்க்க தரிசனத்தை கூர்மையாக கவனித்தால் இறைநகரின் (புதியஎருசலேம்) மண்டபங்களின் எண்ணிக்கை 112என்று குறிப்பிட்டு நிற்பதையும் கவனிக்கும் போது மீனின் உயரம் 265என்ற அளவை 153+112 என்று பிரித்துப் பாருங்கள்.
எனவே அகலம் 153திரித்துவ சபையின் மக்களின் எண்ணிக்கையை குறிக்கும் "நீளம் என்பது 153+112 =265 அதாவாது திரித்துவ சபை மக்களின் எண்ணிக்கை + அவர்கள் வாழ்வதற்கான மண்டபங்கள் (புதிய எருசலேம்).
இப்படி சொல்லப்பட்டு இருப்பதை நினைக்கின்ற போது வெறும் 153 பேர் தான் இறைமக்கள் என்ற திரித்துவ சபைமக்களாக நிற்கின்றனர் என எண்ணத் தோன்றுகிறது.
இந்த விகிதாச்சார அளவு நீளத்தை அகலத்தால் வகுத்தால் 1.7321அதாவது √3 (ரூட் த்ரீ) என்ற மதிப்பில் வருகிறது, எனவே 3 என்பது திரித்துவம் அதனுடைய வார்க்கமுலம் என்ற அமைப்பில் இவை அமைந்திருக்கின்றன.
எனவே திரித்துவத்தில் அடங்கியுள்ள மக்களில் √3இடம் பெறுவதை பார்க்கின்ற போது எண் மூன்றின் குணாதிசியத்தை பெற்றது அந்தத் திருச்சபை.
மூன்று என்பது குருவின் எண். மூன்று என்பது அரசாட்சி செய்யும் எண். மூன்று என்பது தர்மத்தின் எண். மூன்று என்பது அறத்தின் எண். ஒட்டுமொத்த அனைத்துச் சித்தர்களும் யோகிகளும் இறையாளர்களும் இறக்கி வைத்த தங்களுடைய கருத்துக்களில் ஒத்தக்கருத்து உள்ளவர்களாய் தெரிகின்ற போது, இந்த திரித்துவ மக்கள் இந்த திரித்துவ தமிழ்நாட்டில் மலர போகும் இறைவனின் திருச்சபையே திரித்துவ திருச்சபையாகும்.
153பேர் மட்டுமே இருக்கும் இந்த இறைசபைக்கு கோடானகோடி பேர்களை தன் மதத்திற்கு மாற்றம் செய்யத் துடிக்கும் நபர்களை பற்றி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது. சிரிப்பு தான் வருகிறது.
இப்படியிருக்க ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் உலகில் பிரசங்கிக்கப்படும் அப்போது முடிவு வரும் என்ற வார்த்தையை நினைத்து கிருஸ்தவர்கள் "மத்தேயு" "லூக்கா ""மாற்கு "யோவான் "சொன்னதையும் அதாவது முதலாம் வருகை இயேசு சொன்னவைகளை அந்த வாக்கியங்களை அப்படியே எடுத்து பிரசுரித்து அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து பரப்பிவருவதாக ஒருவருட காலத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்துவரும் மதவாதிகளை நினைத்தால் பரிதாபமாயிருக்கிறது.
ஏனென்றால் ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பது முதலாம் வருகை இயேசுவோடு சம்பந்தபட்டது அல்ல.
இறைராஜ்ஜியம் என்பது இறுதி காலத்தில் வரும் இரண்டாம் வருகை இயேசுவால் சொல்லப்படும் சுவிஷேசங்களே இதுவே ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்ற அந்தஸ்தை பெறும்.
இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் திரித்துவ திருச்சபை எனும் இறுதியில் இரண்டாம் வருகை இயேசுவின் திருச்சபை வெளியிடும் சுவிஷேசங்கள் தான் என்பதை கிருஸ்துவர்கள் எள் அளவும் உணரவில்லை.
புஷ் பைபிளை படித்து விட்டு ஈராக்கை அழித்தது போல் இவர்களும் பைபிளை படித்துவிட்டு பழைய சுவிஷேசங்களை அறிவித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேலையை இன்று இருப்பவர்கள் மட்டும் செய்யவில்லை 2000 ஆண்டுகளாக எல்லா நாட்டிலும் எல்லா மொழியிலும் எல்லா மக்களிடத்திலும் பரப்பும் வேலையில் பவுல் முதல் தொடங்கி இன்றைய போதகர்கள் வரை 2000 ஆண்டுகளுக்கு மேலாக அறிவிக்கப்பட்டு வருகிறது, இதனால் உலகத்தில் பெரிய மதம் கிருஸ்துவமதம் என்ற பெயரை பெற முடிந்ததே ஒழிய உலகத்தின் முடிவை எட்டிப் பிடிக்க முடியவில்லை.
காலத்திற்கேற்ற 2000ஆண்டுகளாக சுவிஷேசம் பரப்பும் விதம் வித்தியாசப்பட்டிருக்கிறதே தவிர பிரச்சாரம் செய்யப்படாமல் இல்லை.
இந்த கிருஸ்துவர்கள் முடிவை கண்டார்களா இயேசுவை கண்டார்களா இறையாட்சியை கண்டார்களா இல்லை.
தற்போது கூட தம்பட்டம் அடித்து கொண்டு சிலர் சுவிஷேசம் அறிவிக்கப்பட்டு வருடகணக்கு ஆகியும் அவர்கள் எண்ணப்படி ஒன்றும் நடக்கவில்லை.
இப்பொழுதாவது அவர்கள் உணர வேண்டும். பைபிளில் சொல்லப்பட்ட சுவிஷேச கருத்து இரண்டாம் வருகைக்கு உரியது அவர் திருச்சபைக்கு உரியது அவர் திரித்துவ மக்களுக்கு உரியது.
எனவே இவைகளை நன்கு விளங்கி கொள்ள தமிழ் சித்தர்களின் தீர்க்கதரிசன பாடல்கள் தெளிவாய் விளங்கிநிற்கிறது இது திரித்துவ சபைக்கு உரியது என்று இனிமேலாவது இறையச்சம் கொண்டவர்களாய் இவர்கள் தங்களுடைய பொய் புரட்டுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு தெளிவான சிந்தனையால் உண்மையான திரித்துவ சபையை நோக்கி அறிய சித்தம் கொண்டு எல்லாம் வல்ல இறைவனை எதிர் கொண்டு பணிய காத்திருப்பபீர்களாக.
அத்தோடு தாங்கள் ஒவ்வொருவரும் இயேசுவோடு பேசுகிறோம் என பிதற்றித் திரியும் பொய்யர்களாகவும் இருக்க வேண்டாம்.
இந்து மதத்தில் சாமியாடி குறிச் சொல்லும் நபர்களுக்கும் இயேசுவோடு பேசி அற்புதம் செய்வதாய் சொல்பவருக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. இரண்டும் ஒரே தன்மையாகத்தான் இருக்கிறது.
முதல் வருகை இயேசுவும் இதை விரும்புவதில்லை இரண்டாம் வருகை இயேசுவும் அதை விரும்பமாட்டார்.
எனவே இயேசு சொன்னப்படி கள்ளத் தீர்க்கதரசிகளாக இருப்பதை விட்டுவிட்டு நல்ல மனிதர்களாக வாழ்வதே மேல்.
எல்லா புகழும் இறைவனுக்கே எல்லா புகழும் இறைவனின் திரித்துவ திருச்சபைக்கே, ஏக இறைவன் கொண்டுநிற்கும் இந்த ஏகத்திருச்சபையே திரித்துவ திருச்சபை ஆகும்.
காத்திருப்போம் காலம் கனிந்து அது எழும் நாளை நோக்கி...