20/05/2021

திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...

 


திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை.

அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்.

அவர் எழுதிய நூல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இல்லை,

திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம் என்பதே.

திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...

பிரபலங்கள் போடும் தடுப்பூசி இப்படி தான்...

 


இது என்னடா கொரோனாவுக்கு வந்த பரிதாபம்...

 


கம்யூனிசம் என்றால் என்ன.?

 


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்..

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது.   இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.

லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பது இல்லை,

'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்த தமிழகம் - திமுக ஸ்டாலின் சாதனை...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


பஞ்ச நந்திகள்...

 


போக நந்தி - ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.

பிரம்ம நந்தி - பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் உள்ளது.

ஆன்ம நந்தி - பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.

மால்விடை - மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

தரும நந்தி - இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி...

பிராடு பாஜக உ.பி யோகி அரசின் லட்சணம்...

 


கன்னட பிராமண கமலின் மநீம ஜோலி மொத்தமாக முடிந்தது...