21/03/2019

உலகின் முதல் ஆய்வாளன் தமிழன்...


மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்...

கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவை காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்த கணக்கதிகரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புற பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்து பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால் 1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு).

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால் 50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல் 180 km/hr எனினும்.

இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது . 45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km) இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km ).

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினம் தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்...

வேட்பாளர் தொடர்பாக பரவி வரும் போன் ஆடியோ குறித்த கேள்விக்கு சீமான் பதில்...


மடக்கி மடக்கி கேட்ட பத்திரிக்கையாளர்கள் அசராமல் பதில் அளித்த சீமான்...

https://youtu.be/o5ajTaJy0w4

Subscribe The Channel For More News...

டைனோசர் பற்றி எப்படி அறிந்தனர்.?


அங்கோர் வாட் கோவில் கம்போடியாவில் சோழ அரசின் கட்டிட கலையை பிரதிபளிக்கும் சூரியவர்மனால் கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான அந்த கோவில் இன்று உலக நாடுகளை வியக்க வைக்கும் ஒன்றாக திகழ்கிறது.

அந்தகோவிலில் பல சிற்பங்கள் காணபடுகிறது அதில் மான் , கிளி , அன்னம் , குரங்கு , எருமை போன்ற விலங்கு மற்றும் பறவைகளின் சிறு சிலைகள் காணமுடியும் .

அதில் வியக்க தக்க ஒன்று என்னவெனில் டைனோசரஸ் வகையில் ஒன்றான ஸ்டாக்கோஸசரஸ் (Stegosaurus) இன் உருவம் பொறிக்க பட்டுள்ளது.

அதிசயம் என்னவெனில் முதன் முதலாக டைனோசர் 1842 ஆம் ஆண்டு சர். ரிச்சர்ட் ஓவென் என்பவரால் அறிமுகபடுத்தபட்டது.

அதுவரை மக்கள் மற்றும் அறிவியலாளர்கள் அதை பற்றி அறியாமல் தான் இருந்தனர்.

இப்படி இருக்க 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலில் எப்படி அந்த சிலை பொறித்தனர் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருகிறது...

பாஜக பொன். ராதா கிருஷ்ணன் ஏமாற்று வேலைகளின் மலரும் நினைவுகள்...


தோப்புக்கரணம் போடுவது ஏன்?


தோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பாடசாலைகளில் மிகச் சாதாரணமான நிகழ்வு. தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலும், ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போடவைப்பார்கள்.

பரீட்சை நேரத்தில் பக்தி அதிகரித்து சில மாணவர்கள் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவதும் உண்டு. ஆனால் இப்ப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை.அந்தப்பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

கடவுளின் முன்பு தோப்புகரணம் போடுபவர்கள் கூடமுளுமையாக போடுவதில்லை. காதுமடல்களைப் பிடிப்பதுமில்லை. அவசர உலகத்தில் தோப்புக்கரணம் கூட "அவசரக்காரண மாக மாறிவிட்டது.

ஆனால் தொப்புக்கரணத்தின் மகிமையை அமெரிக்கர்கள் புரிந்துகொண்டனர். தொப்புக்கரணத்தை ஆராய்ந்தநிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக் கொள்வதால். முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது. மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை கருவியின் உதவி கொண்டு ஆராய்ந்துள்ளனர். அதில் மூலையில் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன.

மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. "ஆட்டிசம்"போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தொப்புக்கரணத்தை அமெரிக்க வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தொப்புக்காரணப் பயிற்சியை தினமும் மூன்று நிமிடங்கள் செய்தால். வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே விநாயகர்வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது உடல்நலத்திற்கு ஏற்றது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

செய்யும் முறை...

நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

இரு கால்களுக்கும் நடுவே உங்கள் தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

இடது கையால் வலது காதுமடலை பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.

அதே போல் வலது கையால் இடது காதை பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

தலை நேராய் பார்த்த படியே முச்சு காற்றை விட்ட படியே உட்கார வேண்டும். சிரமம் இல்லாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்கார வேண்டும்.

முச்சை இழுத்துக்கொண்டே எழவேண்டும். வேகமாய் செய்யக் கூடாது பொறுமையாக செய்ய வேண்டும். முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்...

மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம்...


பேட்டரி டார்ச் லைட் சின்னத்திலேயே இந்திய குடியரசுக் கட்சி போட்டியிடும்...

- செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)...

திமுக கனிமொழி கலாட்டா...


அதிமுக தேர்தல் அறிக்கை கலாட்டா...


1. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

2. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

3. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

4. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

5. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

6. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

7. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

8. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

9. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

10. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

11. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

12. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

13. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

14. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

15. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

16. வலியுறுத்தப்படும் அழுத்தம் கொடுக்கபடும்.

தேர்தல் அறிக்கை முடிந்தது....

அதிமுக தேர்தல் அறிக்கை - மத்திய அரசை வலியுறுத்துவோம்.. அழுத்தம் கொடுப்போம்...

இது ஒரு அறிக்கை இதை வேற  வெளியிடுறாங்க...

தேனி மக்களே உஷார்...


கவனக் குறைவு உள்ள குழந்தைகளுக்கு...


குழந்தைகளுக்கான முகாம்கள் எங்கேனும் நடந்தால் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் முகாமில் அனைத்து பெற்றோர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுபடுத்தவே முடியவில்லை என்பது தான்.பெற்றோர்கள் கூறும் காரணங்கள்.

எப்போது புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிக்கும் போது சில மணி நேரங்களிலேயே எனக்கு மிகவும் பசிக்கிறது, முதலில் சாப்பாடு பின்பு தான் படிப்பு என்று தட்டி கழிப்பது.

படிக்கும் போது எப்பொழும் தன் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் அப்படி இப்படி அசைந்தால் போதும் படிப்பை நிறுத்தி விடுவது.

ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்ந்து படிப்பதே இல்லை.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்துக் கொள்வது. உங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், அவர்கள் எதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும் அவர்களை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம். சில பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் படி படி.. என்று வற்புறுத்துவார்கள், இவ்வாறு திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறும் பொழுது வெறுப்பு வர ஆரம்பித்து விடும். படிப்பு முடித்ததும் இதர பயிற்சிகளை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி விடுகின்றனர். எந்த ஒரு குழந்தையும் படிக்க ஆரம்பிக்கும் போதே நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். சில குழந்தைகள் விரைவில் படித்தும் விடும், சிலர் அதிக நேரம் எடுத்து கொள்வார்கள்.

இது நாளடைவில் சரியாகி விடும். பெற்றோர்கள் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் குழந்தைகளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்கலாம். குழந்தைகள் படிப்பை தவிர அதிக ஆர்வம் செலுத்துவது விளையாட்டுகளில் தான். படிக்க வைக்கும் நேரத்தில் படிக்க வைப்பதும் விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம்.

நவீன உலகில் குழந்தைகள் கணினி விளையாட்டை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர். குழந்தைகள் மூளையை உபயோகப்படுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். இதனால் குழந்தையின் மூளை சுறு சுறுப்பாகவும், சுயமாக சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

பெற்றோர்கள் கணினி விளையாட்டுகளை தவிர வினா விடை, குறுக்கெழுத்து போட்டி, கணிதத்தில் புதிர் போட்டி போன்ற விளையாட்டுகளை கற்று கொடுக்கலாம். இவ்வாறு குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடியுங்கள். பிறகு உங்கள் குழந்தை தான் சிறந்த குழந்தையாக திகழும்...

சபலத்தின் விலை ரூ 2 லட்சம்.. பாத்ரூமில் பூட்டி பணம், காரை எடுத்து சென்ற இளம்பெண்...


மருந்து கம்பெனி ஊழியரிடம், 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டக்கல்லைச் சேர்ந்தவர் சக்திவேல், 40; சென்னையில் மருந்து கம்பெனியில் பணியாற்றி வருகிறார். குடும்பத் தகராறால், மனைவி, 2016ல், குழந்தையுடன், தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.'உல்லாசமாக இருக்க பெண் தேவை' என, புரோக்கர் சீனு, 40, என்பவரை, சக்தி வேல் தொடர்பு கொண்டார்.

அவரது ஏற்பாட்டில், 10ம் தேதி சுவேதா, 25, என்ற பெண்ணுடன், வேலுார் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள, ஒரு விடுதியில், சக்திவேல் தனிமையில் இருந்து உள்ளார்.

அப்போது, குளிக்க சென்ற சக்திவேலை, குளியலறைக்குள் வைத்து பூட்டிய சுவேதா, சக்திவேல் வைத்திருந்த, 2 லட்சம் ரூபாயுடன், அவரது, மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் தப்பினாள்.

ஏலகிரி மலை போலீஸ் விசாரணையில், ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு சுவேதா தப்பிச் சென்றதும், புரோக்கர் சீனு உடந்தையாக இருந்ததும், தெரிந்தது. இருவரையும்,போலீசார் தேடி வருகின்றனர்...

பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்...


தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக...


திராவிடக்கொள்கை ஓர் வரலாற்று விளக்கம். அதனுடைய எதிர்மறையே ஆரியக்கொள்கை.

ஆடு மேய்க்க வந்த ஆரிய அநாகரிகர்கள் ஆண்டைகளாகி, தமிழரினத்தை அடிமைப்படுத்திச் சாதிகளையும், வர்ணங்களையும் அதன்மேல் சுமத்திக்கெடுத்து குட்டிச்சுவராக்கியதாலேயே திராவிடர்கள் வீழ்ந்தனர் என்பதும், அடிமைப்பட்டனர் என்பதுமே திராவிடக் கொள்கை.

ஆரியக்கொள்கையின் மறுபக்கமே திராவிடக் கொள்கை..

ஆரியமும் திராவிடமும் சியாமிய ஒட்டுப் பிறவிகள். ஆரியக்கொள்கை திராவிடக்கொள்கை ஆகிய இரண்டுமே இனவெறிக்கொள்கைகள் ஆகும்.

தமிழரில் அறிவரும் அரசியலாளரும் இந்தத் திராவிடக் கொள்கைக்கு ஏதோ ஒரு வகையில் ஆட்பட்டு நம்முடைய உண்மை வரலாற்றை நாம் மேலும் இழக்கவும் கெடுக்கவும் காரணமாயினர்.

கடைச்சங்க காலத்திலிருந்த மாலிக்காபூரின் படையெடுப்புக்கு முன்னால் வரை எந்த வடவரும் தமிழகத்தை வெற்றி கொண்டதும் இல்லை அதன் மீது படையெடுத்ததும் இல்லை. மாறாக தமிழ்ப் பேரரசர்களே வடக்கு நோக்கி படை செலுத்தி வெற்றிக்கொடி நாட்டிய வரலாறுகள் உண்டு.

ஆனால் வடஇந்தியாவில் விந்தியமலைக்கு மிகவும் அப்பால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்து அந்த வடஇந்திய வரலாற்றைச் சென்ற இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழக வரலாற்றின் மீது கண்மூடித் தனமாகத் திணிப்பது பெருந்தவறு.

தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஆரிய-திராவிடக் கொள்கை இங்குதான் தனது முதல் அடியை வாங்குகின்றது.

ஆரியர்களோ, தங்களை ஆரிய வழியினரெனச் சொல்லிக் கொண்ட வடவரோ தமிழகத்தின் மீது படைகொண்டு, படையெடுத்த வரலாறே இல்லை..

ஆனால், சைனம், பௌவுத்தம் ஆகிய ஆரிய மயமான சமயங்களின் வழியாக மட்டுமே ஆரியக் கொள்கையும், பண்பாடும் தமிழகத்தற்குள் புகுந்தன.

வள்ளுவத்திடமிருந்து வடவர்கள் செய்த அறிவுக் களவாடலின் விளைவாக வந்த சைனம், புத்தம் ஆகிய ஆரியச் சமய நெறிகள் வள்ளுவ மெய்யியலைக் கெடுத்துக் குறைபடுத்தி அழித்ததுடன் அதை தன்வயமாக்கிக் கொள்ளவும் செய்தனவென்பது வரலாறு.

ஆரிய மதங்களெனச் சொல்லி வந்த சைனமும், புத்தமும் பார்ப்பனியத்தை அவ்வப்போது எதிர்த்தனர் என்பது உண்மை.

ஆனால் பார்ப்பனியம் வேறு, ஆரியம் வேறு எனும் வேற்றுமை தெரியாத திராவிடக் கொள்கையர் அவ்விரண்டும் ஒன்றே எனக் கருதி மயங்கியது இங்கு பெரும் கேட்டை விளைவித்துள்ளது.

தென்னிந்திய மக்கள் கழகம் என்னும் பெயரில் பார்ப்பனரல்லாதாரின் முதல் அரசியல் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.

இதன் பெயர் தென்னிந்திய நலவுரிமைக் கழகம் எனத் திரிந்தது. இது 1917 பிப்ரவரி 16 தொடங்கி ஜஸ்டிஸ் என்னும் பெயரில் ஓர் ஆங்கில ஏட்டை நடத்திவந்தமையால் நயன்மைக் கட்சி அல்லது நீதிக்கட்சி என்றழைக்கப்பட்டுவந்தது.

இந் நயன்மைக் கட்சியின் முன்னோடியாக 1912 ஆம் ஆண்டில் டாக்டர்.சி. நடேசன் தொடங்கிய சென்னை திராவிடர் கழகம் இருந்தது.

பின்னர் இத்திராவிடக் கொள்கைக்குக் கடைவிரித்த தமிழர் யாவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, உண்மையான திராவிடர்களான தெலுங்கர்கள் முன்னுக்கு வந்தனர்.

நயன்மைக் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் இருவர். ஒருவர் பிட்டி தியாகராயச் செட்டியார் (1852 - 1925), மற்றவர் டி.எம் நாயர் எனும் மருத்துவர்.

இவர்களில் தியாகராய செட்டியார் தேவாங்குச் செட்டியார் சாதியைச் சேர்ந்த தெலுங்கரும் பெரு நிலவுடைமையாளரும் பெரிய முதலாளியும் ஆவார்.

வட்டித் தொழில், வைப்பகத் தொழில், கைத்தறித் தொழில் ஆகியவற்றில் முன்னணி வகித்து வந்தவர். தனி ஆந்திரம் கேட்டு பட்டிணி கிடந்து உயிர் நீத்திட்ட பொட்டி சீராமுலு இவருடைய மருமகனாவார்.

தெலுங்கரின் இனமீட்சியில் அயராத ஆர்வம் காட்டியவர் இத் தியாகராய செட்டியார். டாக்டர். டி.எம் நாயரோ ஒரு மலையாளி. சென்னைத் திருவல்லிக்கேணியில் பணிபுரிந்தவர். எல்லாவற்றிலும் ஆங்கில மயமாக்கத்தை போற்றி வந்தவர்.

1948 ல் சென்னை உயர் வழக்கு (நீதி) மன்றத்தின் ஆங்கிலேயரல்லா நடுவராக வந்திருக்க வேண்டியது ஒரு தமிழ்ப் பார்ப்பனரே.

ஆனால் தெலுங்கரான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் அமைச்சரவை பார்ப்பன எதிர்ப்புப் பூச்சாண்டி காட்டி தன் இனத்தவரான பி.வி. இராசமன்னார் எனும் தெலுங்கரை அப்பதவியில் அமர்த்தியது.

350 ஆண்டுகளுக்கும் மேலான சென்னை மாநகராட்சியின் தலைவர் (மேயர்) பதவிக்கு வந்த இந்தியரில் ஒரு சிலர் தவிர மற்ற எல்லோருமே தெலுங்கராவர்.
சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும். நயன்மைக் கட்சியின் உறுப்பினராகவும், திராவிட இயக்கத்தின் தோற்றுனருமான டாக்டர்.சி. நடேசன் தமிழர் என்னும் ஒரே காரணத்தினால் அவர் நகரத் தந்தையாக ஆகமுடியவில்லை. அம்மாநகராட்சியில் வந்தேறித் தெலுங்கர் நலன்கள் கோலோச்சியதே அதற்கான காரணமாகும்.

1920 ஆம் ஆண்டுத் தேர்தலில் பல ஆந்திரர்களும் தமிழகத் தெலுங்கர்களும் சென்னை மாகாணச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் 1921, 1922 என ஆண்டுக்கு ஒரு முறையாக ஆந்திரருக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் எனவும் என்.சூரியநாராயணர் எனும் தெலுங்கு பார்ப்பனரால் தனி ஆந்திரம் மாநிலம் வேண்டும் என்றும் பல தீர்மானங்களை சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் கொண்டு வந்தனர்.

அப்போதே நீதிக் கட்சி விற்றுவந்த பார்ப்பனரல்லாதாரின் ஒற்றுமை பின்னுக்குப் போய் தெலுங்கரின் தேசிய , இனநலன்களே மேலோங்கின.

1922 ஆம் ஆண்டில் ஆந்திரருக்கென தனிப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டத்தை முன் வைத்த போது, அன்றைய அரசின் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தெலுங்கருமான கூர்மவேங்கட ரெட்டி நாயுடு அதற்கு தெலுங்கு பல்கலைக்கழக வரைவுச் சட்டம் என பெயரை மாற்றி வைக்க வேண்டும் எனக் கூறினர்.

இதற்கு நேர்மாறாக நயன்மைக் கட்சியைச் சேர்ந்த தமிழரான டாக்டர்.நடேச முதலியார் அத் தனிப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டம்

பார்ப்பனரல்லாக் குமுகத்தின் உறுப்பினருக் கிடையே வேற்றுமை நெடியைக் கிளப்புகிறது என்றும், தெலுங்கர்களைத் தமிழர்களிடமிருந்து பிரிக்கவே முடியாது. நாம் திராவிடர்கள் நாம் பிரியவே மாட்டோம் எனச் சொல்லி ஒப்பாரி வைத்த தமிழனின் இளிச்சவாய்த் தனத்தை என்னவெனச் சொல்வது.

1916 ஆம் ஆண்டில் நீதிக் கட்சி துவங்கியது முதல் 1937 ஆம் ஆண்டில் அது மறைந்தது வரை இந்நீதிக்கட்சியின் தலைவராக தமிழர் ஒருவரும் வர முடியவில்லை.

பழைய சென்னை மாகாணத்தில் தமிழர் இழந்த தமிழ்ப் பகுதிகளில் மட்டுமே நீதிக் கட்சியால் வளர முடிந்தது.

கன்னட, ஆந்திர, மலையாளப் பகுதிகளிலோ பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனும் திராவிட அரசியலை கன்னடத், தெலுங்கு, மலையாளித் தலைவர்கள் வேண்டுமென்றே பரப்பவில்லை. அவர்கள் தமிழரை மட்டுமே ஒன்றுபட விடாமல் தடுத்தனர்.

தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.. உண்மையில் தமிழ்ப் பார்ப்பனரையெல்லாம் அரசுப் பதவிகளிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா தெலுங்கர்களும், மலையாளிகளும் அந்த இடங்களில் தாங்கள் போய் அமர்வதற்கான ஒரு நொணடிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.

இதனால் தங்களை திராவிடர் என்பதை ஒப்புக்குக் கூட ஏற்றுக் கொள்ளாத தமிழ் இனமும், தமிழ் நாடும் திராவிடரின் வேட்டைக் காடாகியது.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசி வந்த இருமொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி..

ஆந்திரர்களோ, மலையாளிகலோ, கன்னடர்களோ என்றுமே தங்களைத் திராவிடர்கள் என விரும்பி அழைத்துக் கொண்டதுமில்லை தங்களை திராவிடர்களாக கருதியதும் இல்லை.

ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்.

தெலுங்கர், மலையாளி,கன்னடர்கள் தேசிய இன உணர்வை முன்னால் வைத்து சாதி உணர்வைப் பின் வைத்து இனவழியில் ஒன்றுபட்டனர்.

தமிழரோ சாதியாலும் கட்சியாலும் சுக்குநூறாகினர்.

இத்திராவிடத்தால் தான் தமிழினம் இன்று சாதிக்கொரு மாநாடு நடத்தி கெட்டழிந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் மட்டுமே உணர்வாலும் செயலாலும் திராவிடர் ஆக்கப்பெற்றனர்.
தமிழ் பேசும் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ அவ்வாறு திராவிடராகவில்லை. அவர்கள் திராவிடர் என்னும் சொல்லைக் கூட ஆள்வதில்லை.

உதாரணமாக தென்னிந்திய நல உரிமைக் கழகம் 1917 பிப்ரவரி 16 அன்று ஜஸ்டிஸ் ஏட்டை தொடங்கியது. அது தமிழில் திராவிடன் எனும் ஏட்டை 1917க்கு இடையில் கொண்டு வந்தது.

ஆனால் தெலுங்கிலோ ஆந்திரப் பிரகாசிகா எனும் ஏட்டை வாங்கி அதை திராவிடன் எனும் பெயர் மாற்றாமலேயே ஆந்திரப் பெயர் ஒலிக்க அந்த ஏட்டை ஆந்திரப் பிரகாசிகா எனும் பெயரிலேயே நடத்தி வந்தது.

மலையாளிகளும் கேரள சஞ்சாரி. கேரளோதயம் மலையாளி எனும் பெயர்களில்தாம் ஏடுளை நடத்தினரேயன்றி திராவிடன் என்னும் பெயரை என்றும் சூட்டிக் கொண்டதேயில்லை.

இந் நயன்மை (நீதி) கட்சி தமிழில் கொணர்ந்த ஏட்டிற்கு மட்டுமே திராவிடன் எனப் பெயர் சூட்டியது.

ஏடுகளுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, கன்னட, மலையாள சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டு வந்த போதிலும் தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய நலிந்த சாதியினர் எனப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மட்டும் ஆதி தமிழர் ஆகாமல் ஆதிதிராவிடர் என்றழைக்கப்பட்டனர்.

ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் நலிந்தோர் யாரும் ஆதிதிராவிடர் என்னும் பட்டத்தை ஏற்க முன்வராததை அன்றைய மக்கள் கணக்கெடுப்பு அதிகாரியான ஈட்சு (M.W.M. Yeats) சுட்டிக் காட்டினார்.

ஆயினும் சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் 63,70,074 பேர் தொல்தமிழராக (தாழ்த்தப்பட்டோர்) இருந்தும் அவர்களில் 15,025 பேர் மட்டுமே ஆதிதிராவிடர் எனும் பெயரில் தங்களின் பெயர்களைப் பதிந்து கொள்ள முன்ந்தனர்.

தொல்தமிழரில் பெரும்பாலோர் அவர்களின் மீது திணிக்கப்பட்ட ஆதிதிராவிடர் என்னும் பெயரொட்டியை (இழிவை) ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டும்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் தலைவரான இரட்டை மலை சினிவாசனார் ஆதிதிராவிடர் எனும் பெயருக்கு மாற்றாக பழந்தமிழர் என்னும் பெயரையே பயன்படுத்தி வந்த நிலையில், அந்த ஆதி தமிழரை ஆதிதிராவிடர் என்றும் பார்ப்பனரல்லாத பிறரை (பிற்படுத்தப்பட்டோரை) சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும் சாதி இந்துக்கள் என்ற சொல்லை உருவாக்கி அறிமுகப்படுத்தியும், தமிழர்களைச் சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக் கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க.

இதன் விளைவாக தமிழர்கள் தாங்கள் ஓர் தனி இனம் எனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்..

தமிழர்கள் திராவிட மயமாக்கப் பட்டுவிட்டதனால் சாதிகளாய் கட்சிகளாய் பிரிந்து சொந்த இனப்பற்றும், இனநலனும், இனமானமும் இழந்து சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக...

தெலுங்கு திமுக ஸ்டாலின் கலாட்டா...


ஆழ்மனதின் எண்ணம் வண்ணமாவது திண்ணம்...


பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும்.

ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப் பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு விஷயம் தான் மாற்றம்.

அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை.

அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.

சூரியன் தன் ஈர்ப்புச் சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?

சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம் தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும்.

பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதி தான். நாம் உயிர் வாழும் பூமி.

இந்த பூமியை இயக்கிக் கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்தி தான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது.

இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம் தான் அறிவுமனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.

இதுவரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.

இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந்தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்.

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?

இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம்.

எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.

நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள் தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வது தான். அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது.

எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப்படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்...

திருட்டு திராடமும் தமிழ் பெண்கள் தாலி அறுப்பும் நாடகமும் - தயாரிப்பு திக கீ.வீரமணி...


தண்ணீர் திருடர்கள்...


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எடுக்கப்பட்ட 451 மாதிரிகளில் 38 இல் அதிக அளவாக குளோரைடு லிட்டருக்கு 1000 மிகி, புளோரைடு 1.5 மிகி மற்றும் 45 மிகி என கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிகரித்ததற்கு அதிக அளவு தண்ணீரை எடுத்ததே காரணம் என்கிறார்கள்.

இப்படி நிலத்தடி நீரை மாத்திரம் பயன்படுத்தும் மாவட்டங்களில் ஏற்படும் நோய்கள் அனைத்துமே உடல் உறுப்புகளை பாதிக்கும் நீண்ட கால நோய்களாகவே உள்ளன.

தமிழகத்தின் 17 க்கும் மேற்பட்ட இடங்களில் கோகோ கோலாவும், பெப்சியும் போட்டி போட்டு தண்ணீரை உறிஞ்ச அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நெல்லை போன்ற வாய்ப்புள்ள இடங்களில் ஆற்றையே அள்ளிக் கொடுத்துள்ளது.

சென்னைக்கருகில் ஓடிக்கொண்டிருந்த பாலாறு, கொசஸ்தலை ஆறு போன்றன இன்று காணாமலே போய் விட்டன.

இந்த ஆய்வில் நாமக்கல், கோவை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போயுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வில் உள்ள வேணந்தூர் கிராமத்தில் 1500 அடி (தோராயமாக அரை கிமீ) தோண்டினால் கூட தண்ணீர் கிடைப்பதில்லையாம். அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்துக்கு லாரி லாரியாக தண்ணீரை எடுத்துக் கொடுத்துதான் இந்த நிலைமை. கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ராட்சத பம்பு செட்களை முதலாளிகள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓடிக்கொண்டிருந்த நொய்யலாற்றை சாயப்பட்டறை கழிவுகளால் நிறைத்து விட்டு, நிலத்தடி நீரையும் காலி செய்யத் துவங்கி விட்டார்கள் அம்மாவட்டங்களின் முதலாளிகள்.

நைட்ரேட் அதிகரித்ததற்கு விவசாய உரங்களின் அதிக பயன்பாடு காரணம் என்கிறார்கள்.

தற்போது பல மாவட்டங்களில் விவசாயமே நடைபெறாவிட்டாலும், பசுமைப்புரட்சி காலகட்டம் துவங்கி பல ஆண்டுகளில் செயற்கை உரங்களை தேவையில்லாத அளவுக்கு விவசாயத்தில் திட்டமிட்டு அரசு இறக்கி விட்டதன் தொடர்ச்சியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.

சென்னை போன்ற நகரங்களில் இருப்பது போல குடிநீரை ஏரி, குளங்களில் இருந்து அரசு எடுத்து மக்களுக்கு தர வேண்டும். ஆனால் ரியல் எஸ்டேட் போன்றவற்றை வளர்த்து விட்ட உலகமயமாக்கலால் ஏரி குளங்களை எல்லாம் பிளாட் போட்டு விட்டார்கள்.

தண்ணீர் விற்பனைதான் நிலத்தடி நீரை மாசுபடுத்தியதில் முக்கிய பாத்திரமாற்றுகிறது. பெரு நகரங்களில் கேன் தண்ணீர் குடிக்குமாறு மக்களை கட்டாயத்திற்குள்ளாக்க வேண்டி அரசு குடிநீர் விநியோகத்தினை விரிவடையும் நகரத்திற்கேற்ப விரிவுபடுத்தவில்லை. இருக்கும் விநியோகத்தையும் அபகரிப்பதற்கு பெக்டெல் என்ற பிரெஞ்சு முதலாளி தயாராக சென்னையில் காத்திருக்கிறான்.

திருப்பூரில் ஏற்கெனவே அது தனியார் கைக்கு போய் விட்டது.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பொருளாதார பின்னடைவில் உள்ள உலக முதலாளியம் அனைத்தையும் விற்பனைப் பொருளாக மாற்றுகிறது. தண்ணீர், காற்று என அனைத்தையும் நயமான சரக்காக சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

நாம் குடிக்கும் கின்லே, அக்வாபீனா போன்றன எல்லாம் இதுபோன்ற நிலத்தடி நீரிலிருந்து தயாரிக்கப்படுபவை தான். ஆனால் ரிவர்ஸ் ஆஸமோசிஸ் சுத்தம், ஓசோனைஸ்டு தரம் என படித்த முட்டாள்களை ஏமாற்றுகிறார்கள் முதலாளிகள். சேவைத்துறையை தனியாருக்கு தரும் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்ட பிறகு நடக்கும் கல்வி தனியார்மயம், ரேசன் கடை அடைப்பு, மருத்துவமனை காப்பீட்டு திட்டம், அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் எலி பிடிக்க ஆள் போடுவது எனத் தொடரும் நிகழ்வில் தண்ணீர் தனியார்மயமும் உள்ளது.

ஆனால் உயிராதாரமான தண்ணீரை மாசுபடுத்திய பிறகு மனிதர்களால் அதனை சரி செய்ய இப்போது சாத்தியமா ? அதுவரை முதலாளிகளை சும்மா விடுவதா?

பெற்றோர்களின் கவனத்திற்கு...


தீபாவுடன் சேர்ந்து 234 தொகுதிகளையும் அப்பா கைப்பற்றுவார்.. குறளரசன் சர்ச்சை ட்விட்....


தேர்தல் நடக்கும் இருக்கும் நேரத்தில் பலரும் சிலரை முன்வைத்து அரசியலுக்கு அழைக்கிறார்கள்.

சமீபத்தில் இயக்குனர் சுசீந்திரன், அஜித்தை அரசியலுக்கு வாருங்கள் என டுவிட் போட்டிருந்தார். அந்த பதிவுக்கு கீழே குறளரசன் என்ற பெயரில், எங்க அப்பாதான் அடுத்த முதல்வர் என்று ட்வீட் வந்திருந்தது.

அதோடு தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய தி.மு.க 234 தொகுதிகளில் கைப்பற்றும் எனவும் ட்வீட்டுகள் வந்திருந்தன.

இதனால் அவர் கடும் சர்ச்சையில் சிக்க பிறகு தான் தெரிகிறது அவரது பெயரில் இருக்கும் போலி அக்கவுண்ட். இந்த பதிலையே அவர் இதுகுறித்து கேட்ட ஒரு பேட்டியிலும் கூறியிருக்கிறார்...

அனைத்து நோய்களுமே செயற்கையாக உருவாக்கப்படுகிறது...


கனிகளின் சிகரம் பப்பாளி....


கனிகளின் சிகரம் பப்பாளி. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மரம் இது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்களை வாரிவழங்கும் பழம் இது.

கருவை காக்கும் பழமாக இருப்பதைப் போலவே கருவை அழிக்கும் பழமாகவும் இது இருக்கிறது. பப்பாளிப்பழத்தில் இருபதுக்கும் அதிகமான சத்துக்கள் உள்ளன.

இதன் பழம், காய், பால், விதை அனைத்தும் மருத்துவப் பண்புகளைக்கொண்டது. வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த பழம் இது. மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு.

பப்பாளிக்காய்களை சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

பப்பாளியை பயிர்செய்வதற்கு தனியாக கவனம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. பப்பாளி மரங்களை கழிவுநீரில் வளர்த்தால் அதன் குணங்கள் குறையக்கூடும்.

கன்று வளர்ந்து ஒரு வருடத்தில் பழங்களைத்தரத்தொடங்கும். கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை பலன் கொடுக்கும்.

பப்பாளியில் மூன்று வகைகள் உண்டு. ஆண் மரம், பெண் மரம், அலிமரம். ஆண் மற்றும் அலிமரத்தின் பூக்கள் சிறிதாய் இருக்கும். ஆண் மரத்தின் பூக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

அலிமரத்தின் பூக்களால் எந்தப்பயனும் இல்லை. பெண்மரத்தின் மலர்கள் பெரியதாக இருக்கும்; காய்களும் பெரியதாக சுவை கூடியும் இருக்கும். செம்மண் பூமியில் நன்றாக வளரும் மரம் இது.

பப்பாளி மரத்தின் தண்டுகள் வலிமை குறைந்தவை. பப்பாளிப் பழங்களை சேதமில்லாமல் பறிக்க சற்று நிதானமும் எச்சரிக்கையும் தேவை...

ஸ்டெர்லைட் வேதாந்தா மற்றும் பாஜக மோடி இணைந்து இந்தியா முழுவதும் மக்களை கொலை செய்துக் கொண்டிருக்கின்றனர்...



மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்...


குளிர்ப் பகுதிகளில் வசிக்கும் சிலவகை எலிகள், கரடி, நரி, 13 கோடு அணில், மீன்கள், தவளைகள் போன்றவை உறைய வைக்கும் குளிரிலிருந்து தப்பிக்க நீண்ட தூக்கத்தை எடுத்துக் கொள்கின்றன.

இதுபோல் சுட்டெரிக்கும் கோடையிலிருந்து தப்பிக்க நத்தைகள், சில மீன்கள், பாலூட்டிகள் நீண்ட கோடைத் தூக்கத்தையும் எடுத்துக் கொள்கின்றன.

குளிர்காலம் தொடங்கி வெப்பம் குறைந்ததும் குளிர்ப்பகுதியில் வாழ்கும் சில விலங்குகள் வேகமாய் மண்ணுக்கு கீழே குடில் அமைத்து தூங்கப்போய் விடும்.

குடிலுக்குள் குளிர் நுழையாமல் இருக்க வாசலில் மண்போட்டு மூடிவிடும். சரியாக பிப்ரவரி 2 ம் நாள் நீண்ட தூக்கத்தை கலைத்து வெளியே வருமாம்.

வெளியே வந்து வெளியில் தன் நிழல் தெரிகிறதா என்று பார்க்கும். நிழல் தெரிந்து விட்டால் குளிர்காலம் மாறத்தொடங்குகிறது என்று அர்த்தம்.

தூக்கத்தை கலைத்து விட்டு வெளியே வந்துவிடலாம். நிழல் தெரியவில்லை என்றால் மறுபடியும் தூங்கப் போய் விடுமாம்...

தமிழர் வரலாறுகளை அழித்து மாற்றும் வேலைகள் நடக்கிறது...


திருக்குறள் காட்டும் ஒழுக்கம்...


திருவள்ளுவர் நம் வாழ்க்கைக்கு விட்டுச் சென்றுள்ள கருவூலம் திருக்குறள். அது, தமிழர்களின் வழிகாட்டி நூல்.

திருக்குறளுக்குப் பல அறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர்.

மாணவர்களுக்காகத் திருக்குறளை எளிமையாக விளக்கி எழுதிய அறிஞர்களுள் முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் (கி.ஆ.பெ) அவர்களுள் ஒருவர் ஆவார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறளில் உள்ள ‘உயிரினும்’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு அற்புதமான முறையில் விளக்கம் தருகின்றார் கி.ஆ.பெ. அவர்கள்

விழுப்பம் என்பதற்குக் குணம், நலன், புகழ், பெருமை, உயர்வு என்ற பல பொருள் உண்டு எனத் தெளிவாகக் கூறுகின்றார். இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை இரண்டு. ஒன்று ஒழுக்கம்; மற்றது உயிர். ஆதலால், ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர், போனால் திரும்ப வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறி இருப்பது போற்றத்தக்கது என்கிறார் கி.ஆ.பெ அவர்கள்.

‘உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை’ என்ற பலருடைய கருத்தைத் திருவள்ளுவர் மறுக்கின்றார். உண்மையில் உயிரைவிட மேலான ஒன்று உள்ளது. அஃது ஒழுக்கம் மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். இதைத்தான் ‘உயிரினும்’ எனும் ஒற்றைச் சொல் தெரிவிக்கின்றது என கி.ஆ.பெ விளக்கம் தருகின்றார்.

உயிருடைய எவரும் உயர்ந்தவராக்க் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஆதலின், உயிரைக் காப்பதைவிட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு என்பதைத்தான் திருக்குறளின் ‘உயிரினும்’ என்ற சொல், சொல்லாமல் சொல்வதாக மேலும் அவர் விளக்குகிறார்.

மானம் இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை ஏற்பட்டால் அந்த நிலையிலும் ‘மானத்தை இழவாதே’ மாறாக, உயிரை இழந்து விடு’ என்ற உயர்ந்த நெறியை வள்ளுவர் உயிரினும் என்ற சொல்லில் ஆணித்தரமாக உணர்த்துகின்றார்.

ஒருவன் உயிரை இழந்துவிட்டால் அதற்காக அழுது புலம்பும் துன்ப நிலை அவனுக்கு ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கே அந்நிலை ஏற்படுகின்றது. ஆனால், அவன் ஒழுக்கத்தை இழந்துவிட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை பிறருக்கு ஏற்படுவதில்லை. அந்நிலை அவனுக்கே ஏற்படும் என்ற சிறந்த கருத்தையும் வள்ளுவர் ‘உயிரினும்’ என்ற அருஞ்சொல்லில் புதைத்துள்ளார் என்று கி.ஆ.பெ விசுவநாதம் அழகுபடக் கூறுகின்றார்...

இமயமலை அமைதியில் மறைந்து போன மர்மங்கள்...


https://youtu.be/XthwfKAvJE4

Subscribe The Channel For More News...

ஆழ்மனதின் சக்தி விசித்திரமானது...


ஆழ்மனதின் சக்தி அபாரமானது. விசித்திரமானது. நீங்கள் நினைவு மனதில் எதை திரும்ப திரும்ப எதை எண்ணுகிறீர்களோ, எதை குறித்தே நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எந்த காட்சியை மனக்கண்ணில் அடிக்கடி விளம்பரம் போல் ஓட விட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் கிரகித்துக்கொண்டு நடைமுறையில் உங்கள் கண்ணெதிரே அதை நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது.

ஒரு காந்த சக்தி உள்ள இரும்புத்துண்டு தன் எடையை விட 12 மடங்கு எடையை ஈர்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அதிலிருக்கும் காந்த சக்தியை நீக்கி விட்டோமானால் அதனால் ஒரு பிளேடினை கூட ஈர்க்க முடியாது.

சமூகத்தில் ஒருவர் வெற்றி பெறுவதற்கும், ஆரோக்யமாக வாழ்வதற்கும், குடும்ப உறவுகளில் அன்னியோன்மாக இருப்பதற்கும், செல்வங்களில் கொழிப்பதற்கும், மற்றொருவர் தோல்வி அடையவும், விரக்தி நிலையிலும் எல்லாவற்றிலும் துன்பப்படவும் காரணம் இந்த காந்த வித்யாசம்தான்.

எல்லோரும் ஒரே மாதிரியான மனிதர்களாக படைக்கப்பட்டாலும், உள்ளுக்குள் தங்களுக்குள் மனிதர்கள் ஏற்றிக்கொள்ளும் எண்ணங்களை பொறுத்தே,  கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமைகிறது.

இதெல்லாம் நிறைய படிச்சாச்சு.. ஆனால் எனக்கு வேலை செய்வதில்லை என நினைக்கிறீர்களா...? உங்களுக்கும் உண்மையில் அது வேலை செய்துகொண்டுதான் இருக்கிறது.  இது நடந்துடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. அப்படியே நடந்துடுச்சு என நீங்கள் புலம்பும்படி எப்பொழுதாவது நடந்ததுண்டா...  உண்மையில் அந்த நடக்க வாய்ப்பில்லாமல் இருந்திருந்தாலும்   நீங்கள் திரும்ப திரும்ப அதையே நினைத்திருந்ததன் விளைவாக உங்கள் ஆழ்மனமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கும்.

 பல கனவுகள், பல ஆசைகள் கண்டிருப்போம் ஆனால் அவை எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளே இதுநாள் வரையில் தெரியாத நிலை இருக்கலாம். அந்த கனவுகளில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை விட இவை எல்லாம் நடக்குமா என்கிற சந்தேகத்தை அதிகம் மனதில் வைத்திருந்தோமானால் கண்டிப்பாக அந்த கனவுகள் பலிக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொருவரது ஆழ்மனமும் அலாவுதினின் அற்புத விளக்கை தேய்த்தால் "ஆணை இடுங்கள் எஜமான்" என வந்து நிற்கும் பூதம் போன்றது. அதற்கு சொந்தமாக அறிவு கிடையாது. சொந்தமாக முடிவுகளை எடுக்காது. ஆனால் எப்பொழுதும் அது உங்கள் ஆணையை நிறைவேற்ற காத்திருக்கும். நீங்கள் வெற்றியை விரும்பி கேட்டால் அதை கொடுக்கும். இது நடக்குமா என்கிற சந்தேகத்தையே கேட்டுக் கொண்டிருந்தால் அவ்வாறான சூழ்நிலைகளையே உங்களுக்கு பதிலாய் கொடுக்கும்.

என்ன கேட்பது, எப்படி கேட்பது என்பதை விட முதலில் ஏற்கனவே அந்த அற்புத பூதத்திடம் நம்மை அறியாமல் நாம் நிதமும் கேட்டுக்கொண்டிருக்கும் எதிர்மறை சாபங்களை எப்படி நிறுத்துவது என தெரிந்துக்கொள்வது மிக அவசியம்...

நடிகர் விஜய் திமுக ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. விஜய் மக்கள் இயக்கம் திமுக விற்கு ஆதரவா.?


https://youtu.be/aOwzBbwRGWI

Subscribe The Channel For More News...

இன அழிப்பு ஶ்ரீலங்காவுக்கு ஜெனிவாவில் சாதகமாக செயற்படவுள்ள இந்தியா: ஆங்கில ஊடகம் தகவல்...


ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் ஶ்ரீலங்கா தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் ஶ்ரீலங்காவுக்கு சாதகமான விதத்தில் இந்தியா தலையிட்டது என இந்தியாவின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஶ்ரீலங்காவின் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு சுவாசிப்பதற்கான சூழலை வழங்குவதற்கான இந்தியாவின் விருப்பத்திற்கு சர்வதேசசமூகம் ஆதரவாக செவிசாய்த்துள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டுவருடகாலஅவகாம் வழங்கப்படவுள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ஶ்ரீலங்கா தொடர்பான தீர்மானத்தை தயாரித்தவேளை அது குறித்து இந்தியாவிற்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்கிவந்தது என இந்த விடயம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன எனவும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

 ஶ்ரீலங்காவில் சமீபத்தில் உருவாகிய குழப்பமான அரசியல் சூழ்நிலை குறித்தும் இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான உறவுகளில் காணப்படும் பதட்டம் குறித்தும் அனைத்து நாடுகளிற்கும் தெரியும் என குறிப்பிட்ட வட்டாரங்கள் தெரிவித்தன எனவும்; இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தருணம் இதுவல்ல என்ற கருத்து நிலவியதாக இந்திய அதிகாரியொருவர் தெரிவித்தார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் சில நோர்டிக் நாடுகள் இறுக்கமான நிபந்தனைகளை கொண்ட தீர்மானத்தை கொண்டுவரமுயற்சித்தன இந்த தருணத்திலேயே இந்தியா தலையிட்டு ஶ்ரீலங்காவின் அரசியல் சூழ்நிலை குறித்து பணிவாக நினைவுபடுத்தியது எனவும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் பெருமளவு தலையீடுகளிற்கான அவசியம் இருக்கவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஶ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சுவாசிப்பதற்கான சூழலை வழங்கவேண்டும் என்பது குறித்து சர்வதேச சமூகத்தின் மத்தியில் கருத்து காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன.

நாங்கள் அதிகமாக எதனையும் செய்யவேண்டிய தேவையிருக்கவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்தார் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கவில்லை என்றால் வாக்கெடுப்பு அவசியமாகலாம் என ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்தியாவும் சர்வதேச சமூகமும் மறைமுக செய்தியொன்றை தெரிவித்தன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

வாக்கெடுப்பு இடம்பெற்றால் என்ன நடைபெறும் என தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள முக்கிய வட்டாரங்கள் வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேறும் என குறிப்பிட்டன எனவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி - www.thaarakam.com

இந்தியாவிற்கு சீனா சவால், முடிந்தால் எங்கள் நாட்டு பொருட்களை தடைச் செய்துப் பாருங்கள்...


https://youtu.be/fVjuI8dw-bQ

Subscribe The Channel For More News...

உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க...


உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும்.

பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது.

இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சரியான குடலியக்கத்திற்கு...

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

தொண்டை புண்ணை சரிசெய்ய...

எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

இளமையை தக்க வைக்க...

எலுமிச்சை அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...

எலுமிச்சையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

எலுமிச்சையில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்தவிதமான நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

கொழுப்பை குறைக்க...

எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

குமட்டலை போக்க...

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.

வாத நோயை சரிசெய்ய...

எலுமிச்சையில் நீர்ப்பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது.

புற்றுநோயை தடுக்க...

அனைவருக்குமே எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதேப் போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

தலைவலியை போக்க...

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.

நாடாப்புழுக்களை அழிக்க...

குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக்கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.

உணவை செரிப்பதற்கு...

அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகிவிடும்.

உடலை சுத்தப்படுத்த...

தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

பற்களை ஆரோக்கியமாக வைக்க...

எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

காயங்களை குணப்படுத்த...

உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.

முகப்பருவை போக்க...

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.

கல்லீரல் பிரச்சனைக்கு...

எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

பிறப்புறுப்பை சுத்தமாக்க...

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதா? அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொருளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருக்கும்.

கண் பிரச்சனையை போக்க...

எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உணவில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்யலாம்

சிறுநீரகக் கற்களை கரைக்க...

எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜூஸை அவ்வப்போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்துவிடும்...

அழகான வேட்பாளரை மிஸ் பண்ணிடாதீங்க - திமுக உதயநிதி...


நவ பாஷாணம் என்பது என்ன?


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்...

சாதிக் பாஷா மனைவி என்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று காவல்துறையில் புகார்...


https://youtu.be/9sXy8cH5QN8

Subscribe The Channel For More News...

சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளராக மது மஹாஜன் என்பவரை தமிழகத்திற்கு நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு...


ஐடி ஆப்பரேஷன்களில் இவர் திறம்பட செயல்பட்டவர் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

உளவுப் பிரிவு மற்றும் சிவிஜில் ஆப் மூலம் வரும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதை இவர் உறுதி செய்வார் கண்காணி்ப்பார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...

10 எம்பிகள் ஓபிஎஸ் மீது கொந்தளிப்பு நம்பி வந்த எங்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு தன் மகனுக்கு சீட்டா...


https://youtu.be/f2VIXhylmXY

Subscribe The Channel For More News...

பொய்யான வாக்குறுதிகளால் நாட்டு மக்களின் நம்பிக்கையை பாஜக இழந்து விட்டது, நாடு தான் முக்கியம்...


பாஜகவில் இருந்து விலகிய அருணாச்சல பிரதேச பாஜக பொதுச் செயலாளர் , 6 எம்எல்ஏ, அமைச்சர்கள் உள்ளிட்ட 25 பேர்...

குறிப்பு : 5 வருடமாக பதவியில் இருக்கும் போது இவர்கள் கோமாவில் இருந்தனர்...