21/03/2019

கவனக் குறைவு உள்ள குழந்தைகளுக்கு...


குழந்தைகளுக்கான முகாம்கள் எங்கேனும் நடந்தால் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் முகாமில் அனைத்து பெற்றோர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுபடுத்தவே முடியவில்லை என்பது தான்.பெற்றோர்கள் கூறும் காரணங்கள்.

எப்போது புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிக்கும் போது சில மணி நேரங்களிலேயே எனக்கு மிகவும் பசிக்கிறது, முதலில் சாப்பாடு பின்பு தான் படிப்பு என்று தட்டி கழிப்பது.

படிக்கும் போது எப்பொழும் தன் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் அப்படி இப்படி அசைந்தால் போதும் படிப்பை நிறுத்தி விடுவது.

ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்ந்து படிப்பதே இல்லை.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்துக் கொள்வது. உங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், அவர்கள் எதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும் அவர்களை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம். சில பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் படி படி.. என்று வற்புறுத்துவார்கள், இவ்வாறு திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறும் பொழுது வெறுப்பு வர ஆரம்பித்து விடும். படிப்பு முடித்ததும் இதர பயிற்சிகளை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி விடுகின்றனர். எந்த ஒரு குழந்தையும் படிக்க ஆரம்பிக்கும் போதே நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். சில குழந்தைகள் விரைவில் படித்தும் விடும், சிலர் அதிக நேரம் எடுத்து கொள்வார்கள்.

இது நாளடைவில் சரியாகி விடும். பெற்றோர்கள் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் குழந்தைகளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்கலாம். குழந்தைகள் படிப்பை தவிர அதிக ஆர்வம் செலுத்துவது விளையாட்டுகளில் தான். படிக்க வைக்கும் நேரத்தில் படிக்க வைப்பதும் விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம்.

நவீன உலகில் குழந்தைகள் கணினி விளையாட்டை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர். குழந்தைகள் மூளையை உபயோகப்படுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். இதனால் குழந்தையின் மூளை சுறு சுறுப்பாகவும், சுயமாக சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

பெற்றோர்கள் கணினி விளையாட்டுகளை தவிர வினா விடை, குறுக்கெழுத்து போட்டி, கணிதத்தில் புதிர் போட்டி போன்ற விளையாட்டுகளை கற்று கொடுக்கலாம். இவ்வாறு குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடியுங்கள். பிறகு உங்கள் குழந்தை தான் சிறந்த குழந்தையாக திகழும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.