1. உங்கள் நம்பிக்கைகள் மற்றும் வலிமையான உணர்வுகள் மூல உங்கள் உடலுக்கு நீங்கள் தொடர்ந்து சதை கொடுக்கிறீர்களோ அதைத்தான் நீங்கள் திரும்ப பெறுகிறீர்கள்.
2. நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் ஒட்டுமொத்த உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுக்களையும் உறுப்புகளையும் நிரப்புகிறது.
3. நீங்கள் ஒரு ராஜ்யத்தை ஆள்பவர். உங்களைக் கேள்வி கேட்காமல் உங்களுக்கு பணிவிடை செய்யும் மிக நம்பிக்கையான சேவகர்கள் உங்கள் உயிரனுக்கள் தான்.
4. நீங்கள் உணர்வுபூர்வமாக எதை சிந்தித்தாலும் அது உங்கள் ராஜ்யத்தின் விதியாக மாறும். உங்கள் உடலின் விதியாக மாறும்.
5. உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை பற்றி எதிர்மறையான சிந்தனைகளையும் , உணர்வுகளையும் நீங்கள் வெளிப்படுத்தும்போது , உங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தின் ஆற்றல் குறைகிறது.
6. ஒரு நல்ல இதமான நாள் , புதிய வீடு , நண்பர்கள் , அல்லது பதவி உயர்வு ஆகிய எதைக் குறித்தும் நீங்கள் மகிழ்ச்சியான நல்ல உணர்வைக் கொண்டிருக்கும் போது , உங்கள் உடல் முழு ஆற்றலுடனான ஆரோக்கியத்தைப் பெறுகிறது.
7. அனைத்தையும் பன்மடங்கில் பெருக்குவது நன்றியுனர்வு தான்.
8. எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் ஆரோக்கியத்திற்காக நன்றி கூறுங்கள்.
9. உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து இதயபூர்வமாக “ நன்றி” என்று கூறுங்கள். உங்கள் உடலில் உங்களுக்கு பிடிக்கதவற்றைப் பற்றி கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.
10. உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகாமான நேரம் அன்பை வெளிபடுத்டுவது தான்.
11. நீங்கள் நோயுற்றிருந்தால் , உங்கள் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் அதைச் சொந்தம் கொண்டாடாமல் இருப்பதற்கு முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.மாறாக ஆரோக்கியத்திற்கு அன்பை வெளிப்படுத்தி , அதை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.
12. கச்சிதமான எடை, கச்சிதமான உடல் , கச்சிதமான ஆரோக்கியத்தைக் கொண்ட ஊர் உறுப்பு ஆகியவை குறித்து அன்பை வெளிப்படுத்தி , அவற்றை பெற்றிருப்பது போல் கற்பனை செய்யுங்கள். நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றியுடன் இருங்கள்.
13. உங்களுக்கு வயது ஏறிக்கொண்டே போகும் போது உங்கள் உடல் சீர்குலையும் என்று நீங்கள் நம்பினால் , நீங்கள் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள். அப்போது ஈர்பபுவிதி அப்படிப்பட்ட சூழல்களை உங்களிடம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.
14. இளமையாக உணருங்கள். உங்கள் வயதைப்பற்றி உணர்வதை நிறுத்துங்கள்.
15. நீங்கள் கொண்டிருக்கும் அன்பு மற்றும் நன்றியுணர்வின் மூலமாக நீங்கள் விரும்பும் எதுவாகவும் உங்கள் உடல் மாறும்.
அனைத்து அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் பின்னால் அன்பு என்னும் மாபெரும் சக்தி உள்ளது..
படியுங்கள்.. உள்வாங்குங்கள்.. உணருங்கள்...
உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...