23/10/2020

தமிழர் நாட்டில் மரவீடுகள்...

தமிழர்நாட்டில் வீடுகட்ட இன்று நாம் பயன்படுத்தும் மணல், இரும்பு, சுண்ணாம்பு போன்ற புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்தாமல் மரங்களை வைத்து வீடுகட்டவேண்டும்.

இரும்பு போல உறுதியான மர வகைகளும், தீயில் எரியாத மர வகைகளும்..

ஆச்சா போன்ற நீரில் மூழ்கும் மர வகைகளும் கூட உண்டு.

நாம் அனைத்து கட்டுமானங்களையும் பயன்பாட்டுப் பொருட்களையும் முடிந்த வரை மரத்தாலேயே செய்யவேண்டும்.

அதாவது பொம்மை, நாற்காலி, பாத்திரங்கள், கட்டில், அலமாரி, சிலைகள், அழகுப் பொருட்கள், செருப்பு, மின்னணு சாதனங்களின் உடல்பகுதி, வாகனங்களின் உடல் பகுதி, வேலி, வீடு, கூரை, தூண், பாலம், சாலை ஓர தடுப்புகள் போன்ற அனைத்தையும் மரத்தாலேயே செய்ய முயற்சிக்க வேண்டும்.

மரப்பொடியையும் மீண்டும் பசையில் குழப்பி அழுத்தி மீண்டும் பலைகை ஆக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுவரவேண்டும்.

அதற்கு முதலில் வனப்பகுதிகளைப் பாதுகாத்து அதனைப் பெருக்கி பிறகு அதன் எல்லையை விரிவாக்கி நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அடர்த்தியான காடுகளை உருவாக்க வேண்டும்.

(இது எல்லைப்பகுதியில் செய்யப்பட வேண்டும்).

பிறகும் நாம் நாடே காடாகும் அளவு சமூகக் காடுகளை வளர்க்கவும் வேண்டும்.

வானில் இருந்து பார்க்கும் போது பச்சையாக மட்டுமே தெரியுமளவு மரங்களை வளர்க்கவேண்டும்.

மரங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக செல்லும் போது வெட்ட ஆரம்பிக்க வேண்டும்.

அதுவரை மிகவும் குறைவாகவே மரம் வெட்டுதல் நடக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.