23/10/2020

பெரம்பலூரில் அதிசயம்.. ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு...

 


பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் உள்ள குன்னம் கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கட்டான் குளத்தில் வண்டல் மண் எடுத்த போது, இவைகள் கிடைத்தன. மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் , கடல் ஆமை, கடல் நத்தை, கடல் சங்கு, உள்ளிட் ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கல் மரங்கள் படிமங்கள் இடம் பெற்றுள்ளன.

டைனோசர் முட்டைகள், சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.