இந்தியா 1947ல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை.
இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதும்..
தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்பதும்..
இந்திய இறையாண்மை தமிழ் இனத்திற்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.
இந்த நிலையில் 'தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக் குரல் எழுப்புகிறவர்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத, தமிழர்க்கு எதிரான அந்நியர்கள் ஆவார்கள்..
இந்தியாவை வெள்ளையர் ஆளுவதற்கு முன்னர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்த தமிழரல்லாத அந்நியர்கள், தமிழ் நாட்டில் பெற்ற அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.
இந்தியா விடுதலையடைந்தவுடன் வெள்ளையராகிய வெளிநாட்டினரை இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டோம். ஆனால், தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்து, தமிழ் இனத்தை அடக்கி, நசுக்கி, இழிவுபடுத்தி ஆண்ட தமிழரல்லாத அந்நியர் வெளியேற்றப்படவில்லை.
இதனால், தமிழரல்லாத அந்நியர் தமிழ் நாட்டை ஆளும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று கோருவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது போன்ற மாயத் தோற்றத்தை இந்த அந்நியர்கள் உருவாக்கி வருகின்றனர்.
இந்தியாவின் மருமகளாகிய சோனியாகாந்தி இந்தியப் பிரதமராக ஆகும் படித் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவை ஆள முற்பட்டபொழுது, வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவை ஆளக் கூடாது; இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது.
அப்பொழுது, சோனியாகாந்தி கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டு, ஆட்சித் தலைமைக்கு ஓர் இந்தியருக்கு இடம் கொடுத்தார்.
அதைப் போன்று, தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாதார் தமிழரை ஆள விரும்பாமல், அவருடைய கட்சியைச் சேர்ந்த தமிழரை ஆட்சியில் அமர்த்தி விட்டு, கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்.
இதை விரும்பாதவர்கள், தமிழ் இனத்தை அடிமைப்படுத்தி அழிக்க விரும்பும் அந்நியர் ஆவார்கள். என்பதில் ஐயம் இல்லை.
தன்மானத் தமிழர்கள் அத்தகைய கட்சியில் இருக்க மாட்டார்கள்.
இந்தியா பல மொழி பேசும் மாநிலங்களாக இருக்கின்ற காரணத்தால், மற்ற மாநிலங்களில் தமிழர் அமைச்சராக்கப்பட்டிருந்தால், அந்த மாநிலத்தவர் இங்கும், அங்குள்ள எண்ணிக்கைக்கேற்ப அமைச்சராக்கப்படலாம்.
தமிழ்நாட்டில் இந்த நிலை இதுவரை எண்ணிப் பார்க்கப்பட வில்லை.
இதன் காரணமாகவே தமிழ் இனம் அந்நியர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.
அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம் - தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - தமிழர் சமயம் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்தக் காலத்தில் எழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
இதனால் தமிழர் அல்லாதவர்கள் தமிழ் இனத்தை ஆளுவது தமிழ் இனத்திற்கு இழிவு ஆவதுடன், அழிவையும் கொடுப்பது ஆகும்.
இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்பதும் எப்படி சரியானதோ..
அதைப் போன்றே..
தமிழ் நாட்டைத் தமிழரே ஆளவேண்டும் என்பதும், நியாயமானதும் இந்திய இறையாண்மைக்கு ஏற்றதும் தமிழர்களின் அடிப்படை உரிமையுமாகும்.
இதைக் குறை கூறுவோர் தமிழ் இனத்தை அடக்கி ஆள விரும்பும் அந்நியரும் அந்நியர்களின் கைக் கூலிகளுமேயாவர்.
இதனால் தமிழ் இனத்தை அடக்கி, இழிவுபடுத்தி, அழிக்க விரும்பும் அந்நியர்களிடமிருந்து தமிழ் நாட்டை விடுவிக்க வேண்டிய பிறவிக் கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள தன்மானத் தமிழர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
இது இந்திய இறையாண்மை தமிழ் இன மக்களுக்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.
இதனால் கட்சிக்குத் தலைமை தாங்குவதுடன் ஆட்சிக்கும் தலைமை தாங்க விரும்பும் அந்நியர்களின் தலைமையிலுள்ள (திராவிட & தேசிய) கட்சிகளில் தன்மானத் தமிழர் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம்...