15/02/2021

தமிழினத்தின் தலைவர் மேதகு. வே. பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று சொன்ன அண்ணன் சீமான் மாமனார் காளிமுத்து...

 


ஐயா காளிமுத்து அவர்கள் மொழிப்போராட்ட தியாகி என்ற அடிப்படையில் நாங்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம் -  இடும்பாவனம் கார்த்திக்...

அண்ணன் சீமானின் மாமனார் என்ற ஒரே காரணத்திற்காக பல முறை தமிழினத் துரோகியை காளிமுத்துவை போராளியாக்க முயற்சித்து கொண்டிருக்கிறது நாதக...

சிறிது நாள் கழித்து ஐயா கலைஞருக்கு  வீர வணக்கம் வைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை...

ஆவிகளின் சேட்டைகள் 😁


 

நாதசுவரம்...

 


தென்ஆப்பிரிக்கா உலக கோப்பை போட்டியில், உவுசலா என்ற இசைக்கருவியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இக்கருவி நாதசுவரம் போன்று இருக்கும். உவுசலா பிளாஸ்டிக்கால் ஆனது. நீல்வான் சால்விக் என்ற 37 வயது தென்ஆப்பிரிக்கக்காரர், 15 வருடங்களுக்கு முன் விளையாட்டாக கண்டு பிடித்த நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி நாதசுவரம் போன்ற இருக்கும்.  நாதசுவரம் வாசிக்க ஞானம் வேண்டும். உவுசலாவுக்கு அதெல்லாம் தேவை இல்லை.

நம்முடைய அனைத்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் முறையாக கற்றுக் கொண்டு ஸாதகம் செய்தால் மட்டுமே வாசிக்க முடியும். நாம் திருமணம், திருவிழா போன்ற இடங்களில் மிகவும் பரவலாக காணும் ஓர் இசைக்கருவி நாதசுவரம். தவுலும் நாதசுவரமும் ஒன்றாகச் சேர்த்து வாசிப்பர்.

நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். இதனை நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. மிகவும் இனிமையான இசையைத் தரவல்லது இக்கருவி.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலகரமான இசைக்கருவியாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலன கோவில்களில் இந்தக் கருவி வாசிக்கப்படுவதுண்டு. நேரடியாக இசைக்காவிட்டாலும் பல ஆலயங்களில் இவ்விசைப் பதிவு செய்யப்பட்ட குருந்தட்டுகளைப் வழிபாட்டின் போது ஒலிபரப்புச் செய்கின்றனர்.

இதைத்தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.

இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது.

நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு, உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல் , உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு) அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.  உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள்.

நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.

நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.

பெரியமேளம்நாதஸ்வரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல் படுவது வழக்கம். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.

நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்...

தமிழின துரோகி ஊழல் மன்னனன் பாஜக அடிமை அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...

 


திமுக வை அழிக்க வைகோ இருக்க.. எனக்கென்ன கவலை...

 


தமிழர் நிலத்தை விற்ற திமுக தெலுங்கர் கருணாநிதி...

 


மாதுளையின் மகத்துவம்...

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...

உலகின் நம்பர் 1 டூபாக்கூர் பாஜக மோடி கலாட்டா...

 


திமுக ரவுடிகளின் தலைவன் தெலுங்கன் ஸ்டாலின்...

 


பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...

 


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்.

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை. அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும்.

நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி.

நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்.

"அன்ன மாவே மண்ணொடு கிளியே

இல்லிக் குடமா டெருமை நெய்யரி

அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக் கொள்வர்.

பசுவானது கிடைக்கும் போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அது அந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்.

நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

சாராய வியாபாரி திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


அம்பானி மகிழ்ச்சியா இருக்க இந்திய மக்கள் செத்தா கவலையில்லை பாஜக மோடி...

 


சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய்...

 


சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.

இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.

இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம்.

தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.

1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகப் பட்டு இருக்கிறது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது.

சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.

MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது.

இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று.

2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது?

இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).

ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...

அப்பறம் என்னப்பா திமுக படுதோல்வின்னு அறிவிச்சிடலாமா?

 


வந்தேறி தெலுங்கர்கள் வரலாறு...

 


திருட்டு திராவிடமே தமிழர் நிலம் 70,000 ச.கி.மீட்டர் பறிபோனது யாரால்?

இன்று அப்பகுதியில் நாடற்றவர்களை போல கோடிக்கோடி தமிழர் வாழ வேண்டிய நிலையை உருவாக்கியது யார்?

மூன்று முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் பறிபோனது யாரால்?

முக்கிய தமிழரின் வழிப்பாட்டுத் தலங்களை பறித்துக் கொண்டு இன்று, அத்தலங்களுக்கு செல்லும் தமிழர் மீது சுடுதண்ணீர் ஊற்றி விரட்டும் நிலையை உருவாக்கியது யார்?

ஒருங்கிணைய இருந்த தமிழரை கன்னடன் மலையாளி என துண்டாடி பிரித்தெடுத்தது யார்?

தமிழ் மூவேந்தரையும் தூக்கி தலையில் வைக்க வேண்டிய தமிழனை.. தூற்ற வைத்து, தூற்ற வேண்டிய இனப்பகையினரை தலையில் தூக்கி வைத்து ஆடும் நிலையை உருவாக்கியது யார்?

2009ல் மாபெரும் ஈழ இன அழிப்பை நடத்தியும் இன்னும் உணர்வற்று கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?

20 தமிழரை துன்புறுத்தி சுட்டுக்கொன்ற பின்னரும் குருதி கொதிக்காமல் முடங்கிக்கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?

இது போக இன்னும் ஏராளம் உள்ளது..

தமிழின அழிப்பை துளியும் அஞ்சாமல் திறம்பட செய்து, மாய பிம்பத்தால் பொய்யாக நின்று இன்றும் தமிழர் குடியை அழித்திட துணைபோகும், வடுக இனவெறியன் கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமியை அரவணைத்து தமிழர் இன விடுதலை காண்போம் என்பது கானல்நீரே...

நடக்கும் சூழ்ச்சியை அறியாமல் , வருங்காலத்தை பற்றி சிந்திக்காமல் , முழு நேரமும் பொழுது போக்கில் மூழ்கி கிடக்கும் இந்த சமூகம் எப்படி பிழைக்க போகிறது?

 


நாம் காணும் கனவுகள்...

ஓர் சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் இரவில் 4 முதல் 6, ஆகவே ஒரு வருடத்தில் 1.460 முதல் 2.190 கனவுகளை காண்கிறான்.

அதிலும் ஒரு கனவு 5 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும்.

இப்போ நீங்கள் யோசிக்கலாம் இது என்னடா… காலையில் எழும்பும் போது ஒரு கனவே நினைவில் இல்லையாம் அப்படி என்றால் எப்படி 6 கனவுகள் காண்கிறோம் என்று.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இது தான்..

நீங்கள் 95% முதல் 99% ஆகிய அனைத்து கனவுகளையும் உடனடியாக மறந்து விடுவீர்கள்..

ஏன் என்றால், நீங்கள் காணும் எல்லாக் கனவுகளுமே உங்களுக்கு சுவாரசியமாக இருப்பது இல்லை..

ஆகவே அவை அனைத்துமே மறந்து விடுகின்றீர்கள்.

மேலும் பார்ப்போம்…

நீங்கள் கனவுகளில் காணும் அடையாளம் தெரியாத நபர்கள் கூட உண்மையில் நீங்கள் எப்போதாவது சந்தித்த ஒருவராகத் தான் இருக்கும்.

அவர் பக்கத்து ஊர் McDonald’s இல் வேலை செய்யும் ஒருவராக அல்லது தெருவில் தற்செயலாக பார்த்த ஒருவராகத் தான் இருப்பார்.

கற்பனையிலேயே ஒரு புது முகத்தை நமது மூளை தயாரிப்பதில்லை.

நமது வாழ்நாளில் நாம் பார்த்த விஷயங்களை வைத்துத்தான் நமது மூளை கனவுகளை உருவாக்கின்றது.

சரி, கனவில் நடப்பதை நீங்கள் விரும்பும்படி மாற்றி அமைக்க முடியும் என்றால் நல்லா இருக்கும் அல்லவா?

உண்மை சொல்லப் போனால் அது கூட முடியும்..

Lucid Dreaming என குறிக்கப்படும் முறையை கற்றுக் கொண்டால் உங்கள் கனவுகளுக்கு நீங்களே கதை, வசனம், இயக்கம் மட்டும் செய்யாமல், நீங்களே கதாநாயகனாக திரிசா, நயன்தாரா, அசின், தமன்னா என்று எல்லோருடனுமே கனவில் ஒரு திரைப்படம் எடுக்கலாம்…

இப்போ நீங்கள் மட்டுமே காணக்கூடிய உங்கள் கனவுகளை எதிர்காலத்தில் YouTube இல் கூட upload பண்ணலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது.

University of California Berkeleyயில் இது தொடர்புடைய ஆராய்ச்சி நடை பெறுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…?

12 சதவீதமானவர்கள் தமது கனவுகளை Black & White இல் தான் காண்கிறார்கள்…

நீங்க என்ன மாதிரி.. Color கனவா Black & White கனவா காண்கிறீங்க...

சிந்தியுங்கள் மக்களே.. ஒன்றிணைந்து அதிகார வர்க்கத்தை நோக்கி நகருங்கள்..

 


Gobackmodi #TnRejectmodi

 


மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை...

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள்...

கார்ப்பரேட்களின் இந்திய தரகர் பாஜக மோடி...

 


அரசு அதிகாரிகளை கேள்விகளால் செருப்பால் அடித்த சிறுமி...

 


தமிழிசைச் சிறப்பு..

 


இசை பலவகை. அதில் தமிழிசை ஒருவகை.

இரண்டெழுத்துள்ள இச்சொல் பொருள் அமைதியுடையது.

சுதி, பாட்டு, பண், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகிய அனைத்தும் இசைந்தால் தான் அதற்கு இசை என்று பெயர். இல்லையேல் அது ‘இரைச்சல் என்றாகி விடும்’. இசைக்கு ‘புகழ்’ என்றும் பெயர் உண்டு. ‘ஈதல் இசைப்பட வாழ்தல்’ என்ற சொற்றொடரும் இதனை மெய்பிக்கும்.

இசையென்னும் எச்சம் பெறாவிடின் வசையென்ப வையத்தார்க் கொல்லாம் என்பதும் , வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கைப் பொறுத்த நிலம் என்பதும், வசைய்யொழிய வாழ்வாரே வாழாதவர் என்பதும் வள்ளுவர் வாக்கு.

இதிலிருந்து வசைக்கு எதிர்மறை இசை என்பதை நன்கறியலாம்.

அக்காலத்து மன்னர்களை பாணரும் புலவரும் இசையின் மூலமே புகழ்ந்ததால், இப்பொருள் வந்தது போலும். (தமிழின் சிறப்பு கி.ஆ.பெ. விசுவநாதம்).

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள்.

ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர்.

இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமில் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

தமிழிசைத் தோன்றிய காலம், தமிழ் மொழி தோன்றிய காலமே. தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன.

அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல.

இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல... கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும்...

அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும்.

இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு.

மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன...

பாஜக மோடி அரசின் பெட்ரோல் ஊழலும்... 2 ரூவா சங்கிகள் நிலையும்...

 


மதிமுக தெலுங்கர் வைகோ நாயுடு கலாட்டா...

 


பித்தத்தைப் போக்கும் கிராம்பு...

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.

பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்...

பாஜக மோடி அரசின் நீதித்துறை லட்சணம்...

 


கணவன் அனுமதியும் தேவையில்லை இதை சொல்ல மறந்துட்டீங்க நீதிபதி...

 


வருஷ வருஷம் இதே தொல்லையா போச்சு 😒

 


அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி - மறைக்கப் பட்ட உண்மைகள்...

வரலாறு என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா?

அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்?

சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.

அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான்.

இந்தியாவின் மிகச்சிறந்த, பெரிய பேரரசர். பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது.

பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார், இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது,

ஆனால் அசோகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது.

அது திட்டமிட்டே அனைத்து சரித்திர புத்தகங்களிலும், வரலாற்றிலிருந்தும் மறைக்கப் பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இந்திய அரசும் மற்றும் புத்த அமைப்புக்களும்..

அது என்னவெனில் பேரரசர் அசோகர் பார்ப்பதற்கு மிகவும் அவ லட்சனமாகவும், கரிய நிறமாகவும் அழகற்றவராகவும் இருந்தார்,

ஒருமுறை அவர் அந்தப்புரத்திற்கு சென்றபோது அவரை மற்ற பெண்கள் அனைவரும் கேலி செய்துவிட்டனர், அதனால் அவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்களை கழுவில் ஏற்றி கொடுமை செய்து கொன்று விட்டார்.

அவர் ஒரு ஆண் மகனாக இருந்திருந்தால் தனது ஆண்மையை அந்த பெண்களிடம் அவர் நிரூபித்திருக்க வேண்டும்,

அதனை விட்டு அவர் தனது அதிகாரத்தினால் அனைவரையும் கொடுமை செய்து கொலை செய்வது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

மேலும் அவர் எப்படி அரியணை ஏறினார் என்பதை அனைத்து நூல்களும் தனது தமையனுடன் போரிட்டுவென்றார் என்றே கூறுகிறது.

ஆனால் அவர் தனது சகோதரர்கள் 99 பேரை வஞ்சகமான முறையில் கொன்றே அவர் ஆட்சி பீடத்தில் ஏறினார்.

ஏனோ தெரியவில்லை அவர் திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை.

மேலும் இவன் தனது அரண்மனையில் அந்தப்புரத்துடன் ஒரு சித்தரவதைக் கூடாரத்தைம் நிறுவி எதிர்ப்போரை சித்தரவதை செய்து கொன்றுல்லான்.

அரச பதவி ரத்த சொந்தம் அறியாது என்று கூறுவார்கள்" இதற்க்கு எடுத்துக் காட்டாக அனைவரும் ஔரங்கசீப்பை மட்டுமே கூறுகின்றனர்.

ஏனெனில் அவர் தனது நான்கு சகோதரர்களை கொன்றிப்பார்.

ஆனால் தனது 99 சகோதரர்களைக் கொன்ற இந்த அசோகனை எங்கே, எதில் சேர்ப்பது?

வரலாறு எப்போதுமே உண்மையை கூற மறுக்கிறது, அது எழுதுபவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் விருப்பம், இனம், மொழி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு அரசர்களின் வரலாறும் எழுதப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி.

அதிலும் நியாயம், தர்மமே இல்லாத அரசனின் படைப்பில் இருக்கும் சக்கரத்தை தர்ம சக்கரமாக கூறி, இந்திய தேசியக் கொடியில் போட்டிருப்பது மிகப் பெரியக் கேவலமாகவும் உள்ளது..

அதை தான் இந்தியன் என்று நெஞ்சில் குத்திக் கொண்டு திரிகிறார்கள்...

இந்த வாயில தமிழே ஒழுங்கா வரல இதுல எங்க இருந்து விடியல் வர போகுது...


 

பிராடு பாஜக நிர்மலா சீதாராமனின் ஏமாற்று வேலைகள்...