18/09/2017

திமுக வும் ஜனநாயகமும்...


1972ல் திமுகவை விட்டு எம், ஜி, ஆர் விலகியபோது அவர் தொடங்கிய அதிமுகவில் சேர்ந்து விட்டார் ராகவானந்தம்.

அந்தக் கோபத்தில் திமுகவில் எம். எல். சி, யாக (சட்ட மேலவை) இருந்த ராகவானந்தம் தனது எம்.எல.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது.

ஆனால் தான் விலகல் கடிதத்தை எழுதவில்லை என்று ராகவானந்தம் மறுத்தார்.

கடிதம் தரப்பட்ட அன்று அவர் திருச்சியில் இருந்தார்.

ஆனால் அவர் கையெழுத்திட்ட விலகல் கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது, இது எப்படி என விவாதம் கிளம்பியது.

அப்போது தான் ராகவானந்தம் திமுக தலைவர் கருணாவின் தந்திரத்தை அம்பலப்படுத்தினார்..

திமுகவில் சட்டமன்றத்துக்கோ அல்லது மேலவைக்கோ ஒருவர் உறுப்பினராக நிறுத்தப்படும்போதே அவரிடம் வெள்ளைத் தாள் ஒன்றில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வாராம்.

அப்படி தன்னிடம் வாங்கி வைத்திருந்த தாள் தான் கையெழுத்திட்ட வெற்றுத்தாளில் எம்.எல்,சி பதவியில் இருந்து விலகியதாக எழுதி மேலவை உறுப்பினர் பதவி¨ பறித்துக் கொண்டனர்,

இந்தக் கண்ணியம் மிக்க தகவல் இன்றைய தலைமுறையினருக்குத தரியாது என்பதால் ஞாபகப் படுத்துகிறேன்.

திமுகவிலிருந்து உருவான அதிமுக வேறு எப்படி மாறுபட்டிருக்க முடியும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

கருணாவின் அறிவுக்கூர்மை மிக்க இச்செயலை ஸ்டாலினிடம் எந்த செய்தியாளராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்.

ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் இப்போது ஆரியர் பாதி திராவிடர் பாதி என்பதால் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள், நினைவுபடுத்த மாட்டார்கள்...

உலகின் மிகப் பெரிய பயங்கரவாதி பாஜக உபி முதல்வர் ஆதித்யநாத் யோகி...


அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் நாளேடு ஆதாரத்துடன் அம்பலமாக்கியது...

அடங்குனா அடங்குற ஆளா நீ?


நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா- ஆஸி பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில், நீட் தேர்வுக்கு எதிராக செல்போன் ஒளியடித்து போராட்டம்...

18 பேரை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் தற்காலிகமாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது எடப்பாடி-மோடி அரசு...


234-18-1 =215 சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

இதில் பாதி 108 (பெரும்பான்மைக்கு தேவை) .. அவர்களிடம் 109 பேர் உள்ளனர்...

தேர்தல் நடந்து திமுக 19 தொகுதியிலும் வென்றால் திமுக ஆட்சி அமைக்கும்.

ஆனால் மைய அரசு தேர்தல் நடத்த விடாதே..

ஏதாவது காரணம் சொல்லியும், நீதி மன்றத்தில் வழக்கை இழுத்தடித்தும் தேர்தலை 2019  நாடாளுமன்ற தேர்தல் வரை இழுக்கும்.

எப்படி பார்த்தாலும் 2019 வரை இந்த ஆட்சி மத்திய அரசின் உதவியுடன் நீடித்து நிற்கும்..

இதில் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்திருப்பது திமுக அல்ல..

தமிழ்நாட்டு மக்களே...

இனிமேலாவது 500/1000க்கு ஓட்டு போடாமல் , நல்லவர்கள் என்று நீங்கள் நினைப்பவருக்கு செலுத்துங்கள்...

இன்று...

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது- அன்று சிரிப்பவர் யார் ?அழுபவர் யார்? தெரியும் அப்போது..

கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் 18 பேர் இவர்கள் தான்...


அதிமுக 18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம்...


பாஜக ஆளுநர் என்னன்னா...

19 பேர் ஆரதவ ரத்துனு மனு கொடுத்ததுக்கு, 19 சட்ட மன்ற உறுப்பினர்களும் அதிமுகவிலேயே இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்திரவிட முடியாதுனு சொல்றாரு..

இன்னிக்கு கட்சி தாவல் தடை சட்டத்தின் பேரில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்..

எது உண்மை. அவர்கள் அதிமுகல இருக்காங்களா? இல்ல கட்சி தாவீட்டாங்களா?

அதிமுகல இருந்தா ஏன் தகுதி நீக்கம்?
இல்லேனா ஏன் பெரும்பாண்மையை நிரூபிக்க சொல்லல?

முட்டாள்கள் வாழும் நாட்டில் அயோக்கியர்களின் ஆட்சி இப்படித்தான் இருக்குமோ...

இந்த 7 விஷயங்கள் தெரிந்தால் நீங்களும் விவசாயி தான்...



இன்று உலகமே விவசாயத்தை நோக்கி தன் பார்வையை திருப்பி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் எனப் பலவற்றில் பணிபுரிந்து கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் கூட... சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை கொண்டிருக்கிறார்கள். அதனால், விவசாயம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித் தகவல் தேடலில் ஈடுபட்டுள்ளோருக்கான கட்டுரை இது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஏழு அம்சங்களைத் தெரிந்து கொண்டாலே போதும்... வெற்றிகரமான விவசாயியாக மாறி விடலாம்.

பட்டம்:

'பருவத்தே பயிர் செய்' என்று சொல்வார்கள். ஒவ்வொரு பயிருக்கும் விதைப்பதற்கான பருவம் அல்லது காலகட்டம் உண்டு. அதுதான் 'பட்டம்'. குறிப்பாக பட்டம் என்பது தமிழ் மாதத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்படும். பாரம்பர்ய விவசாயம் மற்றும் நாட்டு ரக விதைகளுக்கு பட்டம் முக்கியமானது. ஒவ்வொரு பட்டத்திலும் அதற்கான பயிரை மாற்றி மாற்றி சாகுபடி செய்து வரும்போது நிலத்தின் வளம் பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும். பொதுவாக ஆடிப்பட்டம் அனைத்து பயிர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

பருவம்:

பட்டத்துக்கும் பருவத்துக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. பருவமழை, குளிர்காலம், கோடைகாலம் போன்ற பருவங்களை அடிப்படையாக வைத்துதான் பட்டங்கள் கணக்கிடப்படுகின்றன. அதனால், பருவங்களையும் அதற்கேற்ற பயிர்களையும் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக பருவ மழைக்காலங்களை அறிந்திருக்க வேன்டும். நமக்கு தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று மூலம்தான் மழை கிடைக்கிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவக்காற்று வீசும். தென்மேற்குப் பருவக்காற்று, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீசும். இந்த மழைக்காலங்கள்தான் நமது விவசாயத்துக்கான முக்கிய காலங்கள்.

விதைநுட்பம்:

சாகுபடிக்கு முன்னர் விதைத்தேர்வு அதிமுக்கியமானது. பெரும்பாலும் நாட்டு விதைகளைத்தேர்வு செய்வது நல்லது. வீரிய ரக விதைகளை விதைப்பது தவறில்லை என்றாலும் நமது நாட்டின் அனைத்து சீதோஷ்ண நிலைகளையும் தாங்கி வளர்பவை நாட்டு விதைகளே. எந்த விதையாக இருந்தாலும் நம்பகமானவர்களிடமிருந்து தரமான விதைகளை வாங்க வேண்டும்.

இடுபொருட்கள் :

இன்றைய காலகட்டத்தில் இயற்கை விளைபொருட்களுக்குத் தேவை அதிகரித்து வருவதால், இயற்கை இடுபொருட்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம். அதிலும், நம் நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இடுபொருட்களைத் தயாரிப்பதுதான் தற்சார்பு விவசாயம். நாட்டு மாட்டு எரு, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, உயிர் உரங்கள், அமுதக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல் எனப் பல இடுபொருட்கள் உள்ளன. இவற்றைத் தயாரிக்கும் விதத்தையும் பயன்படுத்தும் விதத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டு மாடுகள்:

இயற்கை விவசாயத்துக்கு அவசியமானவை நாட்டு மாடுகள். நாட்டு மாடுகளின் சாணம்தான் சிறந்த உரம். தவிர,  நாட்டு மாட்டுப் பாலில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நாட்டு மாட்டுப் பாலை குடித்து வந்தால் பல நோய்கள் தவிர்க்கப்படும். நாட்டு மாட்டின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்களைத் தயாரிக்கலாம். காங்கேயம், உம்பளாச்சேரி, சிந்தி, தார்ப்பார்க்கர், சாஹிவால் எனப்பல நாட்டினங்கள் உண்டு.

சீசன் - சந்தை விலை:

எந்த சீசனில் எந்த பொருளுக்குத் தேவை அதிகம் என்பதை அறிந்து அதற்கேற்ப பயிரிட வேண்டும். அப்போதுதான் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அதனால், விலை நிலவரம், விளைபொருட்களின் தேவை ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.

மதிப்புக்கூட்டல்:

விளைபொருட்களை அப்படியே விற்பனை செய்யாமல், அவற்றை மதிப்புக் கூட்டும்போது நல்ல லாபம் பார்க்க முடியும். உதாரணமாக, விளைபொருட்களை தூசு தும்பு இல்லாமல் சுத்தப்படுத்தி சந்தைக்கு எடுத்துச்சென்றாலே கூடுதல் விலை கிடைக்கும். அவ்வற்றை பதப்படுத்தி மதிப்புக் கூட்டி பழச்சாறு, ஜாம் போன்ற பொருட்களைத் தயாரிக்கும்போது அதிக லாபம் கிடைக்கும். அதேபோல பாலாக விற்பனை செய்யாமல் வெண்ணெய், நெய், பனீர் எனத் தயாரித்து விற்பனை செய்யும்போது கூடுதல் லாபம் பார்க்கலாம். அதனால் மதிப்புக்கூட்டலையும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

விவசாயமும் ஒரு அறிவியல்தான். அதனால் அது குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு களம் இறங்கும்போது கண்டிப்பாக வெற்றி பெற முடியும்...

தமிழினமே விழித்தெழு...


கீழடியில் பூமிக்கு அடியில் 4.5 மீட்டர் ஆழத்தில் இருந்து கரியமில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும், ஆய்வு முடிவில் அவை கிறிஸ்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டு பழமையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4.5 மீட்டர் ஆழத்தில் இவ்வளவு பழைமையான பொருட்கள் எனில் அதற்கு கீழ்?

எதற்காக அதிகாரிகள் மாற்றப்பட்டனர்?

பூம்புகார் போன்று இதுவும் ஒதுக்கப்படுகிறதா?

இந்தியா முழுவதும் கார்ப்பரேட்மயம்...


நாம் அனைவரும் branded என்ற மாயையில் சிக்கியுள்ளோம்..

இதை வாங்கி பயன்படுத்தவதால் நாம் மேலும் அடிமையாக தான் இருப்போம்..

தவிர்ப்போம் தப்பிப்போம்..

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா என்பது அயோக்கியர்கள் ஆளும் தேசம்...


இலுமினாட்டி யூனிலிவர் நிறுவனம்.. நாகரிக அடிமைகளுக்கான பதிவு. நேரம் இருந்தால் படியுங்கள்...


யூனிலிவர். இது பல வருடங்களுக்கு முன்னர் உருவான நிறுவனம். 190 மேற்பட்ட நாடுகளில் வியாபாரம் செய்கிறது. 400-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இதற்கு சொந்தம். இது அதிகம் கவனம் செலுத்துவது 13 தயாரிப்புகளில் மட்டுமே.

பல நிறுவனங்கள் இதற்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள Hindustan Unilever இதன் துணை நிறுவனம்.

உணவு வகைகளில் இருந்து அழகு சாதனப் பொருட்கள் என பல தயாரிப்புகள் இதனுடையதே.

இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.

இதன் பிரபலமான தயாரிப்புகள்...

Annapurna salt and spices.

Bru coffeeBrooke Bond (3 Roses, Taj Mahal, Taaza, Red Label) tea.

Kissan squashes, ketchups, juices and jams.

Lipton tea.

Knorr soups & meal makers and soupy noodles.

Kwality Wall's frozen dessert.

Modern Bread, ready to eat chapattis and other bakery items(now sold to Everstone Capital).

Magnum (ice cream).

இவை வெறும் உணவுப் பொருட்களே..

இன்னும் வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், என பல உள்ளன..

close up நன்றாக இல்லை என்று pepsodent வாங்கினாலும் சரி, எந்த சோப்பு வாங்கினாலும் இவர்களுக்கு லாபமே.

தமிழ் நாட்டில் கொடைக்கானலில் கண்ணாடி தயாரிப்பதாகக் கூறி அரசிடம் அனுமதி பெற்று பாதரசம் தயாரித்தது இந்த நிறுவனம்.

17 ஆண்டுகளில், 135 டன் பாதரசம் பயன்படுத்தி உள்ளது.

சராசரியாக ஆண்டுக்கு 90 லட்சம் தெர்மா மீட்டர்கள்  தயாரித்துள்ளது. சராசரியாக 20 லட்சம் தெர்மா மீட்டர்கள் உடைந்து வீணாகியுள்ளன.

2000ல் பழனி மலை பாதுகாப்பு குழு  நடத்திய ஆய்வில்தான் பாதரச கழிவால் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

பின்னர் 289 டன் கண்ணாடி, பாதரசக் கழிவுகள் கப்பல் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது.

தொழிற்சாலை இயங்கிய 6.5 ஏக்கர் நிலத்திலும் அருகில் உள்ள காப்பு காடுகளிலும் பாதரசம் கலந்துள்ளது.

கொடைக்கானல் நீர்பிடிப்பு பகுதி என்பதால் அலட்சியப்படுத்தாமல் முறையாக சுத்திகரிக்க வேண்டும்.

ஒரு கிலோ மண்ணில் பாதரசத்தின் அளவு 10  மில்லி கிராம் அளவுக்குள் இருப்பது போல் சுத்திகரிக்க நிறுவனம் சம்மதம் தெரிவித்தது.

உலக அளவிலான தரத்தில் கூறுவது என்றால் ஒரு கிலோ  மண்ணில் பாதரசத்தின் அளவு 1 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும்.

இந்நிலையில், 10 மில்லி கிராம் என்ற அளவைவிட 25 மில்லி கிராம்  அளவாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்களை பயன்படுத்த வேண்டாம் என கூறவில்லை. எதைப் பற்றியும் தெரியாமல் இருக்காதீர்கள். தயவு செய்து பாரம்பரியத்தை மறக்காதிர்கள். நம் முன்னோர்கள் இதைப் பயன்படுத்தி வாழவில்லை.

அவர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமாகவே இல்லை. குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என்ற பெயரில் விஷத்தை வாங்கி தருகிறோம்.

இந்த பதிவால் நாங்கள் பணம் சம்பாதிக்க போவதில்லை. உங்களில் ஒருவர் மாறினாலும் போதும்.

சில மேதைகள் எங்களுக்கு மத சாயம் பூச முயற்சி செய்கிறீர்கள். வாழ்நாள் முழுவதும் ஜால்ரா தட்டி கொண்டே இருங்கள். எங்களை முட்டாள்கள் என்றும், பைத்தியம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. உலக அரசியல் தெரிந்தால் புரியும்.

எங்களை கோமாளிகள் என்று வைத்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஆட்டு மந்தையாக இருக்கு ஆசைப்படாதீர்கள்.

வாழ்நாள் முழுவதும் விளக்கை சுற்றும் விட்டில் பூச்சிகளாக இருக்கு வேண்டாம்.

உலகம் அது இல்லை. நாகரிகத்தின் மேல் ஆவல் கொண்ட முட்டாள்கள் இருக்கும் வரை எதுவும் மாறாதது.

நீ யார் என்று மறந்து விடாதே. எங்களை எவ்வாறு வேண்டுமானாலும் நினைத்து கொள்ளுங்கள். நாங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இது முதல் பதிவு. இன்னும் பல நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் தருகிறேன். இது ஆரம்பம் மட்டுமே...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


வைணவன் உண்டு,
சைவன் உண்டு,
கவுமாரன் உண்டு,
பவுத்தன் உண்டு,
சமணன் உண்டு,

ஆனால் இந்து என்று
எவனும் இல்லை...

அதே போல் தான்..

தெலுங்கன் உண்டு,
கன்னடன் உண்டு,
மலையாளி உண்டு,
தமிழன் உண்டு ,

ஆனால் திராவிடன் என்று
எவனும் இல்லை..

இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் இந்தியத்தின்... ஆரியத் திணிப்பு தான் திராவிடம் என்று...

சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவக் குணமா..?


சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்..

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்..

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்..

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்..

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்..

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்..

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்..

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது...

நதி இனைப்பு பிராடுகளுக்கு செருப்படி...


ரயிலில் பயணம் செய்வோர் இனி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு அனுமதி...


பகலில் உட்கார்வதற்கு இடம் தராமல் சிலர் தூங்குவதாக எழுந்த புகாரின் பேரில் ரயில்வே நடவடிக்கை...

நந்தியாவட்டை மருத்துவக் குணங்கள்...


நந்தியாவட்டை ஒரு செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக  இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.  இதன் பிறப்பிடம் வட இந்தியா.

இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகு பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இச்செடி 3, 5 அடி உயரத்திற்கு வளரக் கூடியவை.

இவை  முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன்படுகிறது.

நந்தியாவட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு,  வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது.

இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என 2 வகை உண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை.

கண்களில் உண்டான கொதிப்புக்கு  இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுத்தால், கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

 இதன் வேரை  மென்று துப்பினால் பல் வலி குணமாகும்...

ஈழவர்...


பலரும் கேரளாவில் தற்போது இருக்கும் ஈழவர் சாதி தமிழர் என்கின்றனர்.

நான் அவ்வாறு கூறமாட்டேன்.

அவர்கள் தமிழ் வம்சாவழி அவ்வளவுதான்.

நாம் விடுதலைக்காக போராடும் போது அவர்கள் மலையாளிகள் பக்கம் தான் சேர்வார்கள்.

இதை கவிமணி அவர்கள் முன்பே கூறி அறுபது ஆண்டுகள் முன்பு மண்மீட்பு போராட்டமும் இனவுணர்வும் உச்சத்தில் இருந்த போதும் கண்கூடாகக் கண்டோம்.

கேரள மக்கட்தொகையில் 21% வரை இருக்கும் இவர்கள் தற்போது தமிழ் பேசும் பகுதியில் இருந்து தொலைவில் இருக்கிறார்கள்.

தமிழையும் அறவே மறந்துவிட்டனர்.
 
அவர்களில் சிறிதளவு கூட தமிழ் தாய்நிலத்தில் வாழ்வதில்லை.

எனவே ஈழவர்கள் இனத்தால் தமிழர் தான் என்று புரியவைப்பதும் நமது இனத்திற்குள் சேர்த்துக் கொள்வதும் மிகவும் கடினம்.

கேரளாவில் நாயர் நம்பூதிரி தவிர பிறர் தமிழினத்தவர் என்றாலும், அது நடைமுறையில் அவ்வாறு இல்லை.

தமிழை அறவே மறந்த தமிழினத்தாரில் நாடார்கள் மட்டுமே விதிவிலக்கு.

மலையாளம் பேசினாலும் தம்மை மலையாளிகளாக அவர்கள் கருதுவதில்லை.

அதற்கு காரணம் அவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருப்பதும் தமிழகத்திற்கு அருகில் வாழ்வதுமே.

நான் சொல்வது சரிதானா என்பதை வருங்காலம் சொல்லும்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-18...


ஆழ்மன சக்தியின் தன்மை குறித்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சிகளுக்குப் போகும் முன், ஆழ்மன சக்திகள் இருப்பதை அவர்கள் அறிவியல் முறைப்படி உணர ஆரம்பித்தது எப்படி என்றறிந்து கொள்வது அந்த சக்திகள் பற்றி மேலும் தெளிவாய் அறிய உதவும் என்று நம்புகிறேன்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் குறித்து யோகிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே அறிந்திருந்தும், உபயோகித்தும் வந்தனர் என்றாலும் அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் தான். ஆழ்மன சக்தியால் உடல் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற உண்மையை அறிஞர்கள் உணர ஆரம்பித்தது அந்த சமயத்தில் தான்.

அந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னோடி ·ப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் (1734-1815) என்ற ஜெர்மானிய மருத்துவர். ஆரம்பத்தில் சாதாரண மருத்துவ முறையையே பாரிஸ் நகரத்தில் பின்பற்றி வந்த அவர் தன் ஆராய்ச்சிகளின் முடிவில் நோயாளியைக் குணப்படுத்த வேறு ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார். 1774ல் ஒரு பெண் நோயாளிக்கு இரும்புச் சத்து கலந்த திரவத்தைக் குடிக்கக் கொடுத்து அவள் உடம்பில் பல இடங்களில் காந்தங்களை வைக்க அந்தப் பெண்மணி தன் உடலெல்லாம் ஒரு விசித்திர திரவம் பயணிப்பதாக உணர்ந்தார். சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணின் உடல் உபாதை நீங்கி குணமடைந்தாள்.

மனித உடலில் ஒரு காந்த வகை திரவம் ஓடுகிறது என்றும் அது தடைப்படும் போது நோய்கள் உருவாகின்றன என்றும் அந்த திரவம் தங்கு தடையில்லாமல் செல்லும் போது நோய்கள் குணமடைகின்றன என்றும் அவர் நம்பினார். பின் உடலின் வெளிப்புறத்தில் காந்தங்கள் உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டார். தன்னிடம் உள்ள காந்த சக்தியாலேயே நோயாளியின் உடலில் உள்ள காந்த திரவ ஓட்டத்தில் தடைகளை நீக்குவதாக எண்ணி அதை செயல்படுத்தினார். நோயாளிகள் குணமடைந்தனர்.

பிரான்ஸ் அரசியின் உதவிப் பெண்களில் ஒருவர் பக்கவாதம் வந்து அவர் மெஸ்மரின் சிகிச்சையால் குணமாகி விட அந்தப் பெண்மணி அரண்மனையில் மெஸ்மரின் சிகிச்சைக்கு நடமாடும் உதாரணமாக மாறினார். இது போல் பல மேல்மட்ட பிரபுக்களும் சிகிச்சையால் பலனடைந்தார்கள். மெஸ்மரின் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரிடம் வரும் நோயாளிகளின் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கவே அவருடைய வீட்டில் சிகிச்சைக்கு இடம் போதவில்லை. ஒரு பெரிய ஓட்டலை ஆஸ்பத்திரியாக மாற்றி அங்கு சிகிச்சை செய்து வந்தார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்தார்.


அங்கும் தினமும் வர ஆரம்பித்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே தனித்தனியாக நோயாளிகளைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக கும்பல் கும்பலாக குணப்படுத்த ஆரம்பித்தார். அவர்களைப் பல வழிகளில் ஹிப்னாடிச உறக்க நிலைக்குக் கொண்டு வந்து குணப்படுத்திய முறையில் இசையையும் பயன்படுத்தினார். தொலைதூரத்தில் இருந்தும் பலர் அவரைத் தேடி வர ஆரம்பிக்க அது பல மருத்துவர்களின் பொறாமையை வளர்த்தது. அவர்கள் மெஸ்மர் பயன்படுத்தும் முறைகள் மருத்துவத் துறைக்குப் பொருந்தாதவை என்று குற்றம் சாட்டினார்கள். மதவாதிகள் அவர் சாத்தானை பயன்படுத்தி நோயாளிகளைக் குணப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.

பிரான்ஸ் அரசரான பதினாறாம் லூயி 1784ல் மெஸ்மரின் சிகிச்சை முறை குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்தார். அதில் அமெரிக்க விஞ்ஞானியான பெஞ்சமின் ·ப்ராங்க்ளினும் இடம் பெற்றிருந்தார். அந்தக் குழு மெஸ்மர் நோய்களைக் குணப்படுத்தினாரா இல்லையா என்பதை விட அவர் சொன்னபடி மனித உடலில் அது வரை அறிந்திராத ஒரு வகை காந்த திரவம் ஓடுகிறதா என்பதில் கவனம் செலுத்தியது. கடைசியில் மெஸ்மர் சொன்னபடி மனித உடலில் அப்படியொரு காந்த திரவம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று கூறி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. எந்த காந்த திரவ ஓட்டத்தை சமன்படுத்தி அவர் நோய்களைக் குணப்படுத்துவதாகச் சொன்னாரோ அந்த காந்த திரவமே இல்லை என்று ஆனதால் அவரது சிகிச்சை முறை கேள்விக்குறியாகியது. ஏராளமானோர் சிகிச்சையில் குணமாகியிருந்த போதும் அது விசாரணையாளர்களின் விஞ்ஞான அணுகுமுறைக்கு பதிலாகவில்லை. 1785ல் மெஸ்மர் நாட்டையே விட்டு வெளியேறினார். பின் அவர் வாழ்ந்த முப்பதாண்டுகள் பற்றி பெரிய செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

(முன்பே குறிப்பிட்டது போல இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் ஆழ்மனதைக் குறித்து ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த யோகிகள் மெஸ்மர் வாழ்ந்த காலத்திலேயே இருந்த போதிலும், மேலைநாடுகளில் மனம் ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. பதினேழாம் நூற்றாண்டில் டெஸ்கார்ட்டிஸ் என்ற ஞானியின் வரவிற்குப் பின்பு தான் அங்கு மனம், சிந்தனை ஆகியவை ஒரு அந்தஸ்தைப் பெற ஆரம்பித்திருந்தது. எனவே மெஸ்மர் தன் சிகிச்சையில் ஆழ்மனதை உபயோகித்தும் கூட அதன் பங்கை உணராமலிருந்தார். ஆரம்ப காலத்தில் செய்த சிகிச்சைகளால் மனித உடலில் காந்த திரவம் என்ற பெயரை அவர் நம்ப, பெயரை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் விளைவை துரதிர்ஷ்டவசமாகப் புறக்கணித்தனர்.).

மெஸ்மர் தன் சிகிச்சை முறைகளில் ஓய்வு பெற்றும் கூட மெஸ்மரின் சீடர்களில் ஒருவரான மார்கி டி புய்செகுர் என்ற நிலப்பிரபு அவருடைய முறைகளைப் பின்பற்றி சிகிச்சை செய்தும், ஆராய்ச்சி செய்தும் வந்தார். அவர் ஒரு முறை விக்டர் ரேஸ் என்ற தன்னிடம் வேலை பார்க்கும் குடியானவனை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்திய போது சாதாரணமாக எஜமானிடம் பேசத் தயங்கும் விஷயத்தை எல்லாம் அவன் பேசினான். ஆனால் விழித்த போது தான் முன்பு பேசியது எதுவும் விக்டர் ரேசுக்கு நினைவிருக்கவில்லை. ஒரு முறை அவன் ஆழ்மன உறக்கத்தில் தன் சகோதரியிடம் இட்ட சண்டையைப் பற்றி சொல்ல மார்கி டி புய்செகுர் சகோதரியிடம் சமாதானமாகப் போகும் படி கட்டளையிட விழித்து எழுந்த விக்டர் ரேஸ் அவர் சொன்னது நினைவில்லாத போதும் அவர் சொன்னபடியே செய்து விட்டு வந்தது ஆழ்மன சக்தியை புய்செகுருக்கு அறிமுகப்படுத்தியது.


அவர் மெஸ்மரின் சிகிச்சை முறையிலிருந்து ஒருபடி முன்னேறி காந்த சிகிச்சை செய்பவர் சக்தியை விட சிகிச்சை பெறுபவரின் நம்பிக்கையான மனநிலை தான் சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அந்த ஆழ்மன உறக்கத்தில் அந்த நம்பிக்கையை சிகிச்சை பெறுபவருக்கு சிகிச்சை தருபவர் ஏற்படுத்த முடிந்தால் அது பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்றும் கூறினார்.

இப்படி சிறிது சிறிதாக மெஸ்மரின் சிகிச்சை முறை காந்த சிகிச்சையுடன், ஆழ்மன சிகிச்சையுமாக சேர்ந்து உலகமெங்கும் பரவ ஆரம்பித்து 1834ல் ஜேம்ஸ் பெய்ர்டு என்ற மருத்துவரின் காலத்தில் ஹிப்னாடிசமாக உருவெடுத்தது. அவர் தன் ஆராய்ச்சிகளில் இந்த சிகிச்சையால் ஆழ்மன உறக்கத்தில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு வித்தியாசமான மாறுபாடே உடலில் நோய்கள் குணமாகக் காரணமாக இருக்கிறது என்று கண்டு பிடித்தார். அவர் ஆராய்ச்சியில் காந்த சிகிச்சை பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆழ்மன உறக்க நிலை முக்கிய இடத்தை பிடித்தது. அது வரை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்தும் முறைக்கு 'மெஸ்மெரிசம்' என்ற இருந்த பெயர் போய் வித்தியாசப்படுத்திக் காட்ட ஜேம்ஸ் பெய்ர்டு 'ஹிப்னாடிசம்' என்ற பெயரை சூட்டினார்.

தவறான கருத்து ஒன்றால் அங்கீகாரம் மறுக்கப்பட்ட மெஸ்மர் ஆழ்மன ஆராய்ச்சிக்குப் போட்ட பிள்ளையார் சுழி பின் பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி செய்ய இப்படி வழி வகுத்தது. ஹிப்னாடிசம் மூலம் ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி உடல் நோய்களில் பலவற்றை குணப்படுத்தலாம் என்ற கண்டுபிடிப்புக்கு இப்படி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எட்டினார்கள். இது ஒரு பெரிய மைல் கல்லாய் அமைந்தது.

(நாம் முந்தைய அத்தியாயங்களில் கண்ட அபூர்வ மனிதர்கள் எட்கார் கேஸ் முதலானோர் ஆழ்மன உறக்கத்தின் போதே தங்களின் அபூர்வ சக்தியை வெளிப்படுத்தினார்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்)..

மேலும் பயணிப்போம்.....

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்...


உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அத்தகைய பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அதனை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

அதிலும் பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும். இதுப்போன்று இன்னும் நிறைய நன்மைகள் பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் கிடைக்கும்.

கல்லீரல் செயல்பாடு..

பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

இரத்தணுக்கள் அதிகரிக்கும்..

 பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள். முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.

அழற்சியினால் ஏற்படும் வீக்கம் குறையும்..

கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் அழற்சி ஏற்பட்டு வீங்க ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதனைத் தடுக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்..

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று புற்றுநோய செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பது. மேலும் ஆய்வுகளிலும் பீட்ருட்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் சுத்தமாகும்..

உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அத்தகைய டாக்ஸின்களை பீட்ரூட்டில் உள்ள பீட்டாலயின் என்னும் பொருள் வெளியேற்றச் செய்யும். உங்களுக்கு உடலை சுத்தம் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாகும்.

ஸ்டாமினா அதிகரிக்கும்..

பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்..

 பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ரைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள்...

வரலாற்றில் சூனியக்காரிகளின் வேட்டை 1...


ஆரம்ப காலகட்டத்தில் தி விச் ஹண்ட் என்று சொல்லக்கூடிய சூனியக்காரிகளை உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் ஏராளம்..

அக்காலகட்டத்தில் உள்ள மூட நம்பிக்கையின் படி கடலில் ஏற்படும் சீற்றங்களுக்கும் புயலுக்கு சூனியக்காரிகளே காரணம் பல கப்பல்களை கவிழ்த்து மனித காவு வாங்கிக் கொள்கின்றனர் என்று நம்பப்பட்டது..

இதற்கான தீர்வை இன்றைய அயர்லாந்து ஸ்காட்லாண்ட் இங்கிலாந்தும் சேர்ந்த பிரதேசங்களை உள்ளடக்கி ஆட்சி செய்த மன்னரான கிங் ஜேம்ஸ் ஆட்சி காலத்தில் தான் முதன் முதலில் சூனியக்காரர்களை வேட்டையாடும் வழக்கம் ஏற்பட்டது..

இவர்கள் சூனியக்காரர்கள் என்று அறியப்பட்டால் அவர்களின் வீட்டில் ஒரு கருப்பு துணியை கட்டிவிட்டு வந்து விடுவார்கள் அரச பாதுகாப்பு படையினர்.

பொதுவாக அக்காலகட்டத்தில் நம்பக்கூடிய நம்பிக்கை கருப்பு என்பது சாத்தானின் அடையாளம்..

[ஆனால் இந்த சூனியக்காரிகள் என்று சொல்லக்கூடிய பெண்கள் அதை எடுத்து ஆடையாகவே அணிந்து கொள்வார்கள் அவர்களுக்கு பயம் இல்லை]..

பின்னர் அவ்வூர் மக்கள் அந்த கருப்பு துணி கட்டிய வீட்டை ஒதுக்குவார்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக அந்த பெண்ணை அப்புறப்படுத்துவார்கள் ..

பின்னால் ஒரு நாளில் அரசாங்க அதிகாரிகள் வந்து உயிருடன் மக்கள் மத்தியில் சூனியக்காரி என்று சொல்லக் கூடிய பெண்ணை  எரித்து விடுவார்கள்..

உண்மையில் சூனியக்காரிகள் என்றால் யார் ?

இவர்களால் எரித்து கொல்லப்பட்ட சூனியக்காரிகள் என்பவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்..

அவர்கள் உண்மையில் யார் ?

பேசுவோம்.. அதிர்வு தகவலுடன்.. அடுத்த பதிவில் சந்திப்போம்...

உலகிலேயே மிக கேவலமான இழிபிறப்புகள் என்றால் அதிமுகவில் உள்ளவனுங்க தான்...


பதவிக்காக எப்படி வேணாலும், யாரை வேணாலும் கூட்டி-காட்டி கொடுப்பானுங்க..

பொண்டாட்டி பிள்ளையை கூட காட்டி கொடுப்பானுங்க என்பதற்கு இவன் உதாரணம்...

சென்ற Feb - என் பிள்ளைகள் மேல் சத்தியமா சசிகலாவிற்கும் ஜெயலலிதா மரணத்திற்கும் சம்மந்தம் இல்லை.. நான் ஜெயலலிதாவை பார்த்தேன், ஸ்வீட் கொடுத்தாங்க என்று சொன்னவன்...

இன்று - ஜெயலலிதாவை கொன்றது சசிகலா குடும்பம் அதனால் தான் கட்சியை விட்டு நீக்கினோம் என்கிறான்...

முடியலடா அடிமைகளா...

தமிழகமெங்கும் விவசாயிகள் வறட்சி நிதி போராடி கேட்டுக் கொண்டிருக்கும் சூழலில்...


கடன் நெருக்கடியில்  தன் மக்களை வறட்சி நிதி கேட்க வைக்காத பொன்விளையும் பூமி சிவரக்கோட்டை. கால்நடை வளர்ப்பு அம்மக்களின் இன்னுமொரு பிரதான தொழிலாகும்.

குதிரைவாலி, சோளம், கம்பு, வரகு, தினை, கேழ்வரகு, எள்ளு கொள்ளு, பாசிப்பயிறு, துவரை, உளுந்து, மொச்சை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் விளையும் மானாவாரி பூமி. மக்கள் - இடையர்;  உணவு - சாமை, வரகு; நீர்நிலை - காட்டாறு; விலங்குகள் - மான், முயல், பசு; தொழில் - தவசம் விளைவித்தல், கால்நடை மேய்த்தல் என சங்க இலக்கியம் காட்டும் முல்லை திணையின் கருப்பொருட்கள் இன்றளவும் உயிர்ப்பாக உள்ள தொன்மையான ஊர் சிவரக்கோட்டை தான்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை, தரிசு நிலம் என சொல்லி சிப்காட்டிற்கு (SIPCOT) கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

பல ஆண்டுகளாக அவ்வூர் விவசாயிகளும், பொதுமக்களும் அரசின் இந்த பேரழிப்பு திட்டத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

மீண்டும், மீண்டும் அரசுக்கு இது தரிசு நிலமல்ல, பொன்விளையும் பூமி என உரக்க சொல்ல வருகிற 18.09.2017 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சிவரக்கோட்டை பகுதியை பாதுகாக்கப்பட்ட மானாவாரி வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுப்போம். அனைவரும் வருக.

தமிழக அரசே..

கள்ளிக்குடி சிவரக்கோட்டை பகுதியை பாதுகாக்கபட்ட மானாவாரி வேளாண் மண்டலமாக அறிவித்திடு..

சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவாசாயிகளை அழிக்காதே.

மதுரை மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம்
நாணல் நண்பர்கள் இயக்கம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா சாதனை...


கர்நாடக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு, காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்பட்டது...


பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் வாஜுபாய் வாலா இந்தப் பதக்கத்தை ரூபாவுக்கு அணிவித்தார்...

உன் குடும்ப உறுப்பினர்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்று சொல்லுடா...


56 ஆண்டு திட்டம் எனில் இதை கொண்டு வந்தது காங்கிரஸ்?


காங்கிரஸ் ஆட்சியில் பல வருடங்கள் நடந்த திட்டத்தை திறந்து வைத்துவிட்டு காங்கிரஸை நோக்கி கேள்வி கேட்பார் 60 ஆண்டுகளில் காங்கிரஸ் நாட்டுக்கு செய்தது என்னவென்று?

மோடி பெறும் நவீன பிறந்த நாள் செருப்படி... .


மோடியின் 66 வது பிறந்த நாளில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்நூல் ஜில்லாவின்  விவசாயிகள் ரூ 0.68 நயா பைசாவுக்கான ஆயிரக்கணக்கான காசோலைகள் பரிசாக மோடிக்கு அனுப்பி இருக்கிறார்கள்...

Source:

LINK : http://www.deccanchronicle.com/nation/current-affairs/160917/farmers-of-kurnool-district-send-rs-068-to-pm-modi.html

தமிழர் கட்சியான பாமக விற்கு தமிழர்களின் ஆதரவுகள் அதிகமாகி கொண்டே போகிறது...


ஆரியம் - திராவிடம் - கம்யூனிசம் - தலித்தியம் எல்லாம் தேய்ந்துக் கொண்டே போகிறது...

இரட்டைமலை சீனிவாசன்...


பிறப்பு : 07.07.1859
இறப்பு : 18.09.1945
இடம் : சென்னை மாகாணம்
பணி : வழக்கறிஞர் - பத்திரிகையாளர்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்...

இந்திய அளவிலான தலித் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே இங்கே இருந்தனர். இவ்வாறு செயல்பட்ட தலைவர்களுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945).

இந்தியர்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் இருந்த சிற்சில தடைகள் 1835-ம் ஆண்டு முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்பு, இங்கு சுயமாய்ப் பத்திரிகைகள் நடத்தும் முயற்சிகள் எழுந்தன.

இந்த வகையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பத்திரிகைகளைத் தொடங்கினார்கள்.

பஞ்சமன், பூலோக வியாசன், சூரியோதயம், மகாவிகடதூதன், திராவிட பாண்டியன் போன்றவை முன்னோடி இதழ்களாகும்.

இந்த நிலையில்தான் தாங்கள் எப்பெயரால் ஒடுக்கப் படுகிறோமோ அப்பெயராலேயே சுதந்திரம் பாராட்ட வேண்டும் என்னும் அறிவிப்போடு ‘பறையன்’ என்னும் இதழை இரட்டைமலை சீனிவாசன் 1893-ம் ஆண்டு தொடங்கினார்.

முதலில் மாத இதழாகவும், பின்னர் வார இதழாகவும் 1900-ம் ஆண்டு வரை இந்த இதழ் தவறாமல் வெளியானது.

கிராமங்களில் நடைபெற்ற சமூகப் பிரச்சினைகள்கூட இந்த இதழுக்கு எழுதி அனுப்பப்பட்டன. அவற்றுள் பல்வேறு விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே அரசியல் உரையாடலைக் கட்டமைப்பதில் இவ்விதழ் பங்காற்றியது.

அது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக இரட்டைமலை சீனிவாசன் தலையீடு செய்து வந்தார்.

எடுத்துக்காட்டாக, ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தபோது, அதை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்திய தேசியவாதத் தலைவர்கள் கோரினார்கள். அது தொடர்பான கோரிக்கை விண்ணப்பம்கூட சில நூறு கையொப்பங்களோடு அரசிடம் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவில் நடத்தினால் உயர் வகுப்பினர் பங்குபெற்று தங்கள் மீது சாதிபேதம் பாராட்டுவார்கள் என்பதால், அந்தத் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு ஒடுக்கப்பட்ட குழுவினரும் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்கள்.

இதில், இரட்டை மலை சீனிவாசனின் பங்கு முக்கியமானது. 1894-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் 3,412 பேரின் கையொப்பங்களோடு இங்கிலாந்துக்கு எதிர் விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

இது தொடர் பாகத் தனிநூலாக எழுதக்கூடிய அளவுக்கு இந்தப் போராட்டங்கள் விரிந்திருந்தன. 1923-க்குப் பின்னர், சென்னை மாகாணச் சட்டப்பேரவை உறுப்பினராகவும் மேலவை உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியமானவை.

சட்டப்பேரவையில் அவரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் தொடர்பாக அவர் சிறு வெளியீடுகளை வெளியிட்டு வந்தார். அவ்வாறு அவரால் வெளியிடப்பட்டு, இன்றைக்குக் கிடைக்கும் பிரசுரங்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை.

முரண்களை ஒதுக்கும் வரலாறு..

வரலாற்றை எழுதும்போது சம்பந்தப்பட்ட காலத்தின் வெவ்வேறு குரல்கள், முரண்கள் போன்றவற்றை மௌனமாக ஆக்கிவிட்டு ஒற்றை வரலாற்றைக் கட்டியெழுப்பும் முயற்சிகளே பெரும்பாலும் நடக்கின்றன. உடனடி அரசியல் நோக்கங்களுக்காக வரலாறு எழுதப்படுவதால் வரும் தீமைகள் இவை. தலித் அரசியல் வரலாற்றியலிலும் இது போன்ற தருணங்கள் உண்டு.

ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு, வரலாறு பற்றி வெவ்வேறு கருத்து நிலை கொண்ட குழுவினர் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளனர். இரட்டைமலை சீனிவாசனைப் பற்றித் தேடும்போது இந்த அம்சம் பளிச்சிடுகிறது.

மாறுபட்ட அணுகுமுறை..

இரட்டைமலை சீனிவாசனின் அரசியல் பயணத்தைக் கவனிக்கிறபோது அவர் பல்வேறு நிலைப்பாடுகள், ஆளுமைகள் சார்ந்து ஊடாடிவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார்.

அயோத்தி தாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடி வந்த போதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை.

பின்னர், அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்த போதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை.

ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்த போது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார்.

திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

1900-ல் சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அவர் இந்தியாவில் இல்லாத காலத்திலும் அவர் தொடங்கி விட்டுச்சென்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு அவருக்கு இருந்தது.

பூனா ஒப்பந்தமும் காந்தியுடனான உறவும்..

தாழ்த்தப்பட்டோர் தரப்பிலிருந்து இந்திய தேசியவாத அரசியல் சந்தித்த முக்கிய அழுத்தம் என்றால், இரட்டை வாக்குரிமையும் அதைத் தொடர்ந்த பூனா ஒப்பந்தமும்தான். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பாக அம்பேத்கரோடு சேர்ந்து சீனிவாசனும் பங்கேற்றார். இது பற்றிய சிறு பிரசுரம் ஒன்றையும் நாடு திரும்பியதும் வெளியிட்டார்.

பிறகு, 1932 செப்டம்பர் 24-ல் காந்தியின் உண்ணா விரதத்தால் இரட்டை வாக்குரிமை கோரிக்கை கைவிடப் பட்டு ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்தில் சீனிவாசனும் கையெழுத்திட்டார். காந்தியோடு இணக்கம் கொண்டிருந்த சுவாமி சகஜானந்தர் போன்றோர்கூட இந்தக் கோரிக்கை தொடர்பாக அம்பேத்கரை ஆதரித்த உணர்வு பூர்வமான தருணம் அது. அந்தத் தருணத்தில் மற்றொரு தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி. ராஜா, காந்தி சார்பாக நின்றபோது சீனிவாசன் அம்பேத்கர் ஆதரவாக இருந்தார். பின்னாளில் காந்தியோடும் தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக சீனிவாசன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே 1906 முதலே காந்தியோடு தொடர்பு கொண்டிருந்த அவர், 1930-களில் ஹரிஜன சேவா சங்கத்தை காந்தி தொடங்கிச் செயல்பட்டு வந்த போது, அவரோடு தலித் மேம்பாடு சார்ந்த உரையாடலை மேற்கொண்டிருந்தார். தன்னுடைய அரசியல் கருத்து நிலை பிறழாமலேயே அரசியல் இணக்கத்தை சீனிவாசன் பேணிய பண்பை இந்த உரையாடலில் அறிய முடிகிறது. காந்தியிடமும் இதற்கான இடம் இருந்தது. காந்தியோடு சீனிவாசன் கொண்டிருந்த இந்தத் தொடர்பு, இன்னும் அதிகம் ஆராயப்படாத ஒன்றாக இருக்கிறது.

இதே போல, ஒடுக்கப்பட்டோருக்காக 1930-களின் இறுதியில் சீனிவாசன் உருவாக்க விரும்பிய அமைப்புபற்றிய தகவல்கள் மங்கலாகவே கிடைக்கின்றன. இவ்வாறு பல்வேறு அரசியல் நிலைப்பாட்டினரோடு ஒடுக்கப்பட்டோரின் மேம்பாடு சார்ந்து உரையாடக் கூடிய வெளி அவருக்கு இருந்தது.

இவ்வளவு இருந்தும், மொத்தமாக மதிப்பிட இரட்டைமலை சீனிவாசன் பற்றிய முழு வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை.

1938-ல் அவரே எழுதிய ‘ஜீவிய சரித்திரச் சுருக்கம்’ என்ற சிறு வரலாற்றுக் குறிப்பு நூல், சிறு பிரசுரங்கள் தவிர, வேறெதுவும் கிடைக்கவில்லை. அவர் நடத்திய பத்திரிகையின் ஒரு பிரதிகூடக் கிடைக்கவில்லை.

அவரது இருபதாண்டு கால தென்னாப்பிரிக்க வாழ்க்கை பற்றிய பதிவுகள் கிடைக்கவில்லை.

இப்படியாக, அவருடைய வாழ்க்கை வரலாறு முழுமை கொள்ளாமலே இருக்கிறது.

இவ்வாறான ஆதாரங்களைத் திரட்டிப் பார்த்தால் தான் அவர் மேற்கொண்ட பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளுக்கு இடையேயான இணக்கத்தையும் தொடர்ச்சியையும் முரண்களையும் கண்டறிய முடியும். அவ்வாறு அறியும் போது தான் ஒடுக்கப்பட்டோர் அரசியலின் இடைவெளிகளை நிரப்ப முடியும்...