12/04/2019

கற்ப மூலிகை வேப்பிலை...


உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.

நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.

இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.

கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது..

1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory).

2. வீக்க உருக்கி (anti inflammatory).

3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic).

4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer).

5. மலேரியா போக்கி (Anti malarial).

6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal).

7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial).

8. வைரஸ் அகற்றி (Anti viral).

9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant).

10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous).

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

வேப்பிலையை பயன்படுத்தும் முறை...

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்...

வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்...

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்
சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச் சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

காளான் நோய்களான டிரைக் கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக் கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்...

திமுக ஸ்டாலின் சபதம். தர்மபுரியில் பாமக அன்புமணி ராமதாஸ் வெற்றி பெறவே கூடாது.. தோற்றே ஆக வேண்டும்...


 https://youtu.be/j4jEHrAixEs

Subscribe The Channel For More News...

பெற்றோர்கள் சம்மதிக்காததால் காதலியுடன் விஷம் குடித்த மணமகன் கும்பகோணம் அருகே பரபரப்பு...



தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அரித்துவாரமங்கலம் அருகே உள்ள மருவத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆசைமணி. இவரது மகள் ஈஸ்வரி(27). பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த மணி மகன் அருண்குமார்(28). கூலி தொழிலாளி. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்நிலையில் அருண்குமார், ஆசைமணி வீட்டுக்கு சென்று ஈஸ்வரியை பெண் கேட்டுள்ளார். அவர்கள் பெண் தர மறுத்து விட்டனர். இந்நிலையில் அருண்குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். நாளை அருண்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் அருண்குமாருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அருண்குமாரும், ஈஸ்வரியும் சந்தித்து பேசினர். அப்போது விரக்தியில் இருந்த இருவரும் திடீரென விஷம் குடித்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காதலர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் பாஜக பினாமி நிறுவனங்கள்...


பாசிட்டிவ் எனர்ஜி...


உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன் போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும் போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது.

சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள் தான்.

நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.

பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளி தான் நெகட்டிவ் எனர்ஜி.

அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது.

ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக் கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது?

மனிதனின் சிந்தனை அறை தான்...

இரு சக்திகளும் ஒரே அறையில் தான் வித்தாக விழ்கிறது.

அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலி தான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார்.

இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர்.

எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும்.

நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும்..

எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர்.

இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும்.

எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும்.

உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக் கொள்வோம்.

திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது.

அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.

ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.
மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.
இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டு மொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு.

ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும் போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத் தானே திரும்பவும் கிடைக்கும்.

அதற்காக அப்படி நடந்து கொள்வாராம் அம்மனிதர்.

சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளி வருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

எனவே வாழும் வீட்டில், சமூகத்தில், நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்...

மிராக்கல் மைக்.. தலை வெட்டப்பட்டு 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்...


https://youtu.be/c_BuHLjIpW0

Subscribe The Channel For More News...

இந்தி எதிர்ப்பை சமாளிக்க வாய்ப்பூட்டுச் சட்டம் போடச் சொன்ன பெரியார் (எ) கன்னட ஈ.வெ.ரா...


தென்மொழி ஏடு கண்டனம்...

1965ஆம் ஆண்டு இந்திமொழி  எதிர்ப்புப் போரில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி ஏடு மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியது. இதன் காரணமாக பேராயக்கட்சியின் ஒடுக்குமுறையை கடுமையாக எதிர் கொண்டது.

அப்போது பேராயக்கட்சியின் ஒடுக்குமுறையை ஆதரித்தும், ஒடுக்குவதற்கான வழிமுறைகளை பேராயக்கட்சிக்கு (காங்கிரசு) அறிவுறுத்தியும் பெரியார் தனது விடுதலை ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்டித்து “தென்மொழி” ஏடு பெரியாருக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தது. “மொழி ஞாயிறு” தேவநேயப்பாவாணர்
அவ்வேட்டின் சிறப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் மற்றவர்களின் கருத்துகளை மதிக்கும் சிறந்த பண்பாளர் என்றும்,  அவரைப் போன்ற சனநாயகவாதி எவரும் இல்லையென்றும்  தற்போது வரையிலும் புளங்காகிதம் கொண்டு பேசிவருகின்றனர்  பெரியாரியவாதிகள் அது உண்மையல்ல, என்பதை எடுத்துரைக்கும் வகையில் “வாய்ப்பூட்டு சட்டம் ” கொண்டு வரச் சொன்ன பெரியாரை தென்மொழி ஏடு அன்றே தோலுரித்தது.

அது பின்வருமாறு...

இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சமாளிக்க நாடெங்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் கொணர்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப் பற்றி யாரையும் பேசவிடல் கூடாது. எல்லாச் செய்தித்தாள்களையும் தடை செய்தல் வேண்டும். -ஈ.வெ.ரா.

பதில்: கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்னும் பகுத்தறிவாளரின் (Rationalist) கூற்றா இது. இந்திக்குப் பாடை தூக்கியாக இருந்த இவரே , இந்திக்குப் பல்லக்குத் தூக்கியாக இப்பொழுது இருக்கின்றாரே என்பதால் நமக்கு வருத்தமோ, இழப்போ துளியும் இல்லை. ஆனால் கருத்துக்கும் பகுத்தறிவுக்கும் மதிப்பளிக்க வேண்டிய இவரா, கருத்துகளுக்கும், செய்தித்தாள்களுக்கும் தடை போடச் சொல்கின்றார் என்பதே நம் வியப்பிற்குரியது.

இவரின் நிலை இரங்கத்தக்கது.

கொள்கை நிலையில்  இவர்க்கு அரசியலில் தான் வீழ்ச்சி என்றிருந்தோம் இப்பொழுது அறிவிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பெரியவர்க்கு ,
இனி இவர்செல்லாக்காசு,

அணைந்த தீப்பந்தம்;

சப்பிய பனங்கொட்டை ;

துப்பிய வெற்றிலைத் தாம்பூலம்;

பிழிந்த கருப்பஞ் சாறு;

வெடித்த வாணவெடி,

இனி இவரால் தமிழர்க்கு  கேடில்லை. பிறர்க்கும் பயனில்லை;
இவர் கருத்துப் பற்றி எவரும் கவலை வேண்டுவதில்லை.

(“அரசியல் பட்டடை” என்னும் தலைப்பில் “சம்மட்டி” பெயரில் தென்மொழி ஏட்டில் வெளிவந்தது. பக்கம்12, மீனம் -பங்குனி தி.பி.1996, மார்ச்1965)...

பழனியிலும் திருட்டு திமுக வுக்கு ஊஊஊ...


நோய்களிலிருந்து காப்பாற்றும் க்ரீன் டீ....


க்ரீன் டீ இப்போது அனைத்து தரப்பினரும் பருகும் டீ. இந்த கிரீன் டீ மகத்துவம் பற்றிக் கூறுகிறார் சித்தவைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.

பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, ctc டீ என்று இருவகை உண்டு. ctc டீ தான் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானது. ஆனால் சீன மக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வருவது க்ரீன் டீ. அதன் மருத்துவ குணத்தால், இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்றுவருகிறது என அவர் கூறுகிறார்.

இதோ மேலும் க்ரீன் டீ பற்றி மேலும் விளக்கிக் கூறுகிறார்.

C.T.C Tea...

(Cut turn and crush tea ஐ தான் CTC Tea என்கிறார்கள். இது பதப்படுத்தப் பட்ட டீ. இதுதான் நாம் அன்றாடம் குடித்து பழகி வரும் டீ.

க்ரீன் டீ என்றால்?

பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப் படுத்தப் படும் தேயிலைதான் க்ரீன் டீ.

க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?

கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்.

கேன்சருக்கு மிக நல்லது...

பொதுவாகவே கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேசன் தெரபிதான் மெயின். இந்த ரேடியேசன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால் இந்த க்ரீன் கேன்சர் செல்களை மட்டுமே கொல்கிறது. காரணம் இதன் கேட்சின் கொலிபெனல்ஸ் தான். என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்ட் ஆக மருத்துவர்கள் க்ரீன் டீயைப் பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடும் காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.

சீன மக்களின் ஸ்லிம் ரகசியம்...

காலம் காலமாக சீன மக்கள் விரும்பி குடிக்கும் டீ இந்த க்ரீன் டீ. சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். கொசுறு கொசுறாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் சீனர்கள் தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கம் இருப்பதால் இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.

ரத்த நாளங்களின் அடைப்பை நீக்கும்...

பொதுவாகவே நாம் சாப்பிடும் சமோசா, பீட்சா, வடை, சிக்கன் 65 போன்ற எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது மாரடைப்பு (Heart Attack) வரை கூட கொண்டு போய் விட்டுவிடும். இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ.

தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால் மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன.

சளி, ஜுரம் வராது...

அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடக் கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்பு சக்தி.

உடல் நடுக்கம்...

சிலருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது க்ரீன் டீ.

எடை குறைக்க விரும்புகிறீர்களா?

க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis எனும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சீன மக்களின் உணவுப் பழக்கப் படி அவர்கள் உடல் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஸ்லிமாக இருப்பதற்கு அவர்கள் அடிக்கடிப் பருகும் க்ரீன் டீ தான் காரணம்.

சர்க்கரை நோயாளியா நீங்கள்?

நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீ பருகி வந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும் செரிமானத்துக்குப் பின் குளுகோஸ் ஆக மாறி ரத்தத்தில் சேராத படி க்ரீன் டீ தடுக்கிறது.

க்ரீன் டீக்கு நிகரில்லை...

என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ, போன்ற ஜீரண சக்தி பொருட்களை சேர்த்திருந்தாலும் உணவுக்கு பின் க்ரீன் டீ பருகுவதற்கு நிகர் வேறெதுவும் இல்லை. ஜீரண சக்தியை அந்த அளவுக்கு தூண்டிவிடும், மேலும் உடனடியாக கெட்ட கொழுப்பையும் நீக்கும் என்று முடிக்கிறார் சித்த வைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.

EXTRA...

1 டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். (2 - 3 நிமிடங்கள்) அடுப்பை நிறுத்தவும். 1/2 ஸ்பூன் டீத்தூள் போடவும். 3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

அவ்வளவுதான். க்ரீன் டீ ரெடி.. குடிக்கலாம்.

குறிப்பு...

Green Tea யில் நிறம், சுவை கிடயாது. Lite green colour ல தான் இருக்கும்

அதிக நேரம் அடுப்பில் கொதிக்க வைத்தால் தான் கசக்கும். அது உடம்புக்கு கெடுதல்.

அடுப்பை off செய்து விட்டு தான் இலைகளை போட வேண்டும்.

அதிக நேரம் தண்ணீரில் போட்டு வைத்தால் தான் Dark colour ல இருக்கும். அது உடம்புக்கு கெடுதல்.

இதையே 3 முறை பயன்படுத்தலாம்.

முதல் முறை போடுவதை பெரியவங்களுக்கு (சுகர், பிரசர் இருக்குறவங்க) குடுக்கலாம். 2nd, 3rd முறை போடுவதை சுகர், பிரசர் இல்லாதவங்க குடிக்கலாம்...

திமுக துரைமுருகனை அடுத்து சிக்கிய முக்கிய புள்ளி... வருமான வரித்துறை அதிரடி...


https://youtu.be/8_zapwzMS4w

Subscribe The Channel For More News...

பாமக கோரிக்கை ஏற்று.. எட்டு வழி சாலை வழக்கில், மேல் முறையீடு இல்லை.. தமிழக முதல்வர்...


இந்த 200 ரூபாய்க்கு கூவும் உபிக்கள்... வலைதளத்தில் பொய் பிரச்சாரம் செய்யும் கூமட்டைகள்.. எல்லாம் கோமாவிற்கு சென்று விடுவார்கள்..

தினமும் சானத்தில் முக்கிய செருப்பால் அடி வாங்குவதே இந்த

காவிரி உரிமையை விட்டுக் கொடுத்த,
நீட் கொண்டு வந்த,
மீத்தேன் கொண்டு வந்த,
செடிரிலைட் நிறுவனம் திறந்த, கட்டத்தீவை தாரை வாழ்ந்த,
175000 உயிர்களை கொன்ற
காளைகளை பட்டியலில் சேர்த்து சல்லிக்கட்டிற்கு தடை ஏற்படுத்திய

திருட்டு திமுக விற்கு வேலையாய் போய்விட்டது...

திருட்டு திமுக எ.வ.வேலு சிக்கினார்...


அல்சர், ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யும் பீட்ரூட்...


பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்...

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்..

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்..

3. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்..

4. பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்..

5. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்..

6. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்...

திமுக ஸ்டாலினுக்கு சிக்கலை உண்டாக்கும் பிரசன்னா... என்ன பிரச்சனை தெரியலையே...


https://youtu.be/e43wNnloy5o

Subscribe The Channel For More News...

தவிர்க்க கூடாத ஒன்பது உணவுகள்...


நம் உடல் பாதுகாப்பாக இயங்க ஒன்பது சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்த ஒன்பது சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் : பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி : நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி : சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்து விடும்...

தூத்துக்குடியில் திருட்டு திமுக கனிமொழிக்கு ஊஊஊஊ....


நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும்...


எல்லோருக்கும் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் கலந்தே வருகிறது...

இதில் கெட்ட எண்ணங்களை எடுத்து செயல்படுத்துபவர்களுக்கே பிரச்சனை ஏற்படுகிறது...

உதாரணமாக உங்கள் உயிர் நண்பர் நீங்கள் செய்த தவறுக்காக உங்களை அடித்து விடுகிறார்.

தவறு உங்கள் மீது இருந்தாலும் உங்களுக்கு கோபம் என்ற உணர்வு மூலம் அவரை திருப்பி கடுமையாக தாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

அந்த தீயெண்ணத்தை எடுத்து செயல்படுத்தி விட்டீர்கள் எனில், ஓர் நல்ல நட்பை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

அதே சமயத்தில் வந்த தீய எண்ணத்தை கண்டுகாமல் விட்டுவிட்டு அமைதியாக இருந்து விட்டால் அந்த பிரச்சனை பாதிப்பு இல்லாமல் முடிந்து விடும் அல்லவா.

அதனால் முடிந்தவரை தீய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்காதீர்.

பெரும்பாலும் நல்லெண்ணங்களை எடுத்து செயல்படுத்தி சாமர்த்தியத்துடன் வாழ்பவனே. நிம்மதியை அடைகிறான். மற்றவர்கள் துன்பத்தில் திலைக்கிறார்கள்.

எண்ணங்கள் கடலில் உண்டாகும் அலைகளை போன்றது. அதை தடுக்கவோ கட்டுபடுத்தவோ முடியாது.

ஆனால் எண்ணத்தை எடுக்கும் உரிமை நம்முடையது தான். எனவே பார்த்து எடுங்கள். மகிழ்சியாக வாழங்கள்...

Isis தீவிரவாத அமைப்பை உருவாக்கியது அமெரிக்கா தான்...


உலகத்தில் குண்டுவெடிப்பு எங்கு நடந்தாலும்,

உடனே விபச்சார ஊடகங்களில் அது ஒரு மதம் சார்ந்தே காட்டப்படுகிறது..

மக்களும் அதே மனநிலையில் தான் உளவியல் ரீதியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறார்கள்..

ஒரு உயிரை கொல்லும் இடத்தில் மனிதமே இல்லாத போது,

அங்கு எப்படி மதம் வந்தது என இதுவரை யாரும் யோசித்தது இல்லை...

யாரை எல்லாம் ஆட்டி படைக்க போகிறதோ.. சனி விட்டாலும் இராகு விடாது.. 4 கிரகங்களுக்கு நிச்சயம் பேரழிவு...


https://youtu.be/D88RKHe6oIM

Subscribe The Channel For More News...

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?


எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டு விடும்.

எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப் போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதே போன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்...

1. தியானம் : தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை : கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள் : முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல் : சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள் : உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள் : எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது : தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும் போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள் : உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள் : நன்றி கூறுவதை விட சிறந்த நேர்மறை உணர்வு இருக்க முடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள் : தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதே போன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.

உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.

உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.

உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.

உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்...

தமிழர் கெட்டது யாரால்?


தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசுகிறவன் அனைவரும் தமிழர்கள் என்று தமிழர்களே நினைத்து கொள்வார்கள்...

தான் யார் என்பதும் தன் இனம் எது என்பதும் தெரியாதபடி சிந்தனை மழுங்கி இருக்கிறான்..

அதனால்தான் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்கிறவன் எல்லாம் மிக நுட்பமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை ஏமாற்றுகின்றனர்...

தமிழர்களிலே இன்னமும் தான் திராவிடன் தான் என்று நினைத்து வாழ்கின்றனர், அதனால் தான் வந்தேறி கூட்டம் எல்லாம் தமிழனை ஏமாற்றி வாழ்கின்றனர்.

இனமான உணர்வு இல்லாத தமிழர்களிடம் எப்படி புரிய வைப்பது முத்துகுமரன் உள்ளிட்டோர் நெருப்பில் மாண்டனர், அவர்களின் மூலம் படிப்பினை பெற்றிருக்க வேண்டும் . அதை உணராமல் ஆளுகிறவர்களின் எண்ணத்திற்கேற்ப தமிழர்கள் குழம்பி விட்டனர்..

தமிழர்களின் நாட்டை தாசி வீடாக கருதிவிட்ட வந்தேறிகளின் அடிமையாக படித்த தமிழர்களே இருகின்றனர்...

சும்மா இருந்தால் சொறிநாய் கூட நம் மீது சிறுநீர்  பெய்து விட்டு தான் செல்லும்..

தமிழா சிந்தித்து விழுத்தெழு...

உபி.யில் பரபரப்பு.. நமோ உணவு பார்சல்.. போலீஸே விநியோகம் செய்த கொடுமை...


https://youtu.be/-QB48ksQ_7Y

Subscribe The Channel For More News...

கொள்ளை முயற்சியில் கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகன்...


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரக்கோணம் சாலையில் உள்ள பீ.டி.புதூரை சேர்ந்தவர் வனபெருமாள் (வயது 50). இவர் திருத்தணி அருகே இச்சிபுத்தூரில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி வீரலட்சுமி (45). இவர் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு பவித்ரா (25) என்ற மகளும், போதிராஜா (10) என்ற மகனும் இருந்தனர். மகள் பவித்ரா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் போதிராஜா அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் வனபெருமாள் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் வீரலட்சுமியும், மகன் போதிராஜாவும் இருந்தனர். வேலை முடிந்தவுடன் நேற்று காலை வனபெருமாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு ரத்தவெள்ளத்தில் மனைவி வீரலட்சுமி இறந்து கிடந்தார். மகனும் இறந்து கிடந்தான். உடனே அவர் கதறி அழுதார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருத்தணி துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. அப்போது சத்தம் கேட்டு வீரலட்சுமி எழுந்துள்ளார். அவர் தடுக்க முயன்றபோது, வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து வீரலட்சுமியின் கழுத்தில் வெட்டினர். பின்னர் இரும்பு ஆயுதம் கொண்டு தாக்கி அவரை கொடூரமாக கொலை செய்தனர்.

சத்தம் கேட்டு எழுந்த சிறுவன் போதிராஜாவை இஸ் திரிபெட்டியின் வயரால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 21 பவுன் தங்கநகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு மர்மகும்பல் தப்பி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு திருவள்ளூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிதுதூரம் ஓடி சென்று, பின்னர் நின்று விட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மகும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்...

டிடிவி தினகரனுக்கு தூது அனுப்பிய பாஜக பொன்.ராதாவால் அதிரும் அதிமுக...


https://youtu.be/oxohsfYyafE

Subscribe The Channel For More News...

கள்ள நோட்டு மாற்ற முயன்ற இளைஞர் கைது...


சென்னை எழும்பூர் கென்னட் லேனில் உள்ள பிரபல லாட்ஜில் அறை எண் 304-ல் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுடன் வாலிபர் ஒருவர் தங்கி இருப்பதாக தலைமைச்செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த லாட்ஜில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவர்களை பிடிக்க கூடுதல் கமிஷனர் மகேஷ் அகர்வால், இணை கமிஷனர் ஜெயகவுரி, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று லாட்ஜை சுற்றி வளைத்தனர். பின்னர் ஒரு போலீஸ்காரர் மட்டும் அந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். அங்கிருந்த வாலிபரிடம் தான் கள்ளநோட்டு வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார். அதற்கு அந்த வாலிபர் ரூ.5 லட்சம் பணம் தந்தால், ரூ.10 லட்சத்துக்கு கள்ள நோட்டுகள் தருவதாக தெரிவித்தார்.

அதற்கு போலீஸ்காரர் பணம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். நீங்கள் பணத்துடன் கீழே நில்லுங்கள் நான் கள்ளநோட்டுகளை எடுத்து வருகிறேன் என அந்த வாலிபர் கூறினார். பின்னர் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் வந்தார். அவர் மாறுவேடத்தில் போலீசார் நின்றதை அறிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை விரட்டிச்சென்று துப்பாக்கி முனையில் பிடித்தனர். பின்னர் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு ஒரு பையில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் இருந்தது.

அதை எண்ணி பார்த்தபோது ரூ.40 லட்சம் இருந்தது. அந்த நோட்டுகளையும் அந்த வாலிபர் கையில் வைத்திருந்த ரூ.10 லட்சம் நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த மலையரசன் என்பதும், மும்பையில் இருந்து கள்ளநோட்டுகள் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், மும்பையில் இட்லிக்கடை நடத்தி வரும் மலையரசன், அங்கு தனது அக்காள் கணவருடன் சேர்ந்து கள்ளநோட்டுகள் மாற்றி வந்துள்ளார். அவரது அக்காள் கணவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. மலையரசன் மும்பையில் இருந்து கோயம்புத்தூரை சேர்ந்த தன்ராஜ் என்பவருடன் சேர்ந்து கள்ளநோட்டுகளை ரெயிலில் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மலையரசனை கைதுசெய்த போலீசார், கோயம்புத்தூர் சென்ற தன்ராஜை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். கள்ளநோட்டுகளை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது...

கொங்கு மண்டலத்தின் உள்ளே வராதே.. சாதி வெறி பிடித்த திருமா.. திமுக வின் உச்சகட்ட சாதி தீண்டாமை...


https://youtu.be/y3ONVo7HrKs

Subscribe The Channel For More News...

அடுத்தடுத்த நாளில் பெற்றோர் இறந்ததால், ஆதரவற்று நிற்கும் இரண்டு குழந்தைகள்...


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உலகாணியை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவரது மனைவி செல்லம்மாள் (40). நூறுநாள் வேலை தொழிலாளி. இவர்களுக்கு ஜெயச்சந்திரன் (15), ஜெயந்தி (13) என 2 குழந்தைகள் உள்ளனர். ஜெயச்சந்திரன் 9ம் வகுப்பு, ஜெயந்தி 7ம் வகுப்பு படித்து வருகின்றனர். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். மனைவியின் மீது அதிக பாசம் வைத்திருந்த சந்தானம்,

அவரது பிரிவை தாங்கமுடியாமல் மனவேதனையில் இருந்தார். சர்க்கரை நோயாளியான இவர் மனைவி உயிரிழந்த சோகத்திலேயே 6ம் தேதி மரணமடைந்தார். இதனால் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களது பாட்டி, தாத்தா தான் (செல்லம்மாளின் பெற்றோர்) தற்போது குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். வயதான இவர்கள் குழந்தைகளின் கல்விச்செலவு உள்பட அனைத்து பராமரிப்பு செலவுகளையும் எப்படி கவனிப்பது என தெரியாமல் சோகத்தில் நிற்கின்றனர். குழந்தைகளின் தாய்மாமன் தவசி கூறுகையில், ‘‘அடுத்தடுத்த நாளில் எனது தங்கையும், அவரது கணவரும் உயிரிழந்து விட்டனர். தற்போது குழந்தைகளை நானும் எனது பெற்றோரும் பராமரித்து வருகிறோம். நான் சாதாரண விவசாய கூலி. எங்களால் குழந்தைகளின் எதிர்கால செலவுகளை செய்வது சிரமம். எனவே நல்ல உள்ளம் கொண்டோர் பொருளுதவி செய்தால் அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல முடியும்’’ என்றார்.

உதவும் மனம் கொண்டவரா நீங்கள்?

பெற்றோரை இழந்த ஜெயசந்திரன், ஜெயந்தி கூறுகையில், ‘‘பெற்றோரை இழந்த எங்களால் விடுதியில் சேர்ந்து தனித்தனியாக வாழ இயலாது. அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் இருந்தே கல்வியை தொடர விரும்புகிறோம். மேல்படிப்பு படிக்க ஆசை’’ என்றனர். நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் உதவ நினைத்தால் குழந்தைகளின் தாய்மாமா தவசியை 99449 78432 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்....