21/10/2017

இலுமினாட்டிகளின் தொடக்கம்...


இலுமினாட்டிகள், இவர்களின் தொடக்கம், இருப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் மதவரலாற்று ரீதியான தகவல்களை நான் ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஒன்று இலுமினாட்டிகள் என்ற எனது முதல் புத்தகத்தில் பதிவு செய்திருந்தேன்..

அதில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் மேலோட்டமாக இருப்பதாக சிலர் என்னிடம் கூறினார்.

உண்மைதான், சில முக்கியமான விஷயங்களை பற்றி அதில் விரிவாக கூற தவறிவிட்டேன்., அதற்காகத்தான் இந்த பதிவு., நான் அதில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான தகவல்களுக்கான மத ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாத்திய கூறுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

தொடக்கம்:

இலுமினாட்டிகள் என்ற இரகசிய குழு கி.பி. 1776 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்டதாக பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன., இந்த குறிப்புகள் முழுவதும் உண்மை என்று நம்பும் சிலர் இலுமினாட்டிகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தான் தோன்றினார்கள் என்றும் அதற்கு முன்பு வரை அவர்கள் இல்லை என்றும் தீர்க்கமாக நம்புகின்றனர்.

உண்மையில் இலுமினாட்டி குழுமம் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விட்டது., ஆனால் இந்த பெயர் இல்லை., சூழலுக்கு ஏற்றாற்போல் இவர்கள் தங்களது வெளிப்படுத்தும் பெயர்கள் மற்றும் அடையாளங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்., இந்தவகையில் தற்போது அவர்கள் வெளிப்படுத்தி நாம் அவர்களை அழைத்துக் கொண்டிருக்கும் பெயர் தான் இலுமினாட்டி., இந்த பெயரும் மாற்றப்படும்., கூடிய விரைவில் இவர்கள் தங்களை வேறு பெயரிலும் வெளிப்படுத்தலாம்.,

காபாலா, ஃப்ரீ-மேசன்ஸ், சியோனிஸ்ட், இன்னும் இதுபோன்ற பல பெயர்கள் இவர்களுக்கு உண்டு.,

தங்களது நிகழ்கால தேவைகளை நிறைவேற்றுவதற்காக இது போன்ற பெயர்களில் தங்களை வெளிப்படுத்தி இந்த குழுக்களை திரைக்கு பின்னால் இருந்து இயக்குவதும், தேவை நிறைவேறிய உடன் இந்த குழுக்களை தடை செய்வதும் கலைப்பதும் இவர்கள் தான்., இவர்களின் நிலையான இருப்பை நாம் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் கையாளும் யுக்திகளில் இதுவும் ஒன்று.

ஆனால் இந்த வேறுவேறான குழுக்களின் செயல்பாடுகள், நோக்கம் மற்றும் இறுதி இலக்கு இவற்றை ஒத்து நோக்கும் போது இவற்றை இயக்கும் ஒரு பொதுவான கூட்டம் இருக்கிறது என்ற இவர்களின் (இலுமினாட்டிகளின்) இருப்பு உறுதி செய்யப்படுகிறது.

1776க்கு முன்பிருந்தே இவர்கள் இருக்கிறார்கள்:

1. "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" (The protocols of the elders of Zion) இலுமினாட்டிகளை பற்றி தேடும் அனைவரும் இந்த புத்தகத்தை படித்திருப்போம்., இந்த புத்தகம் சுமார் 120 வருடங்களுக்கு முன் பேசப்பட்ட சில திட்டங்களை பற்றி எடுத்துரைக்கிறது., இந்த திட்டங்கள் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சியோனிஸ்ட்டுகளுக்கு இலுமினாட்டிகளால் இடப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு., 1897ல் விவாதிக்கப்பட்ட அந்த திட்டங்களை சற்று உன்னிப்பாக கவனிக்கும் பொது, அந்த திட்டங்கள் விவாதிக்கப்பட்ட விதம், அவற்றின் நுணுக்கம், அடுத்தடுத்து அவைகள் செயல்படுத்தபட்ட விதம் இவை அனைத்து இவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன் அதாவது 1776ல் தான் உருவானார்கள் என்ற கருத்தியலை உடைத்தெறிகிறது.

2. திருகுர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 90 முதல் 102 வரையிலான வசனங்கள் ஒரு யூத குழு பேரரசர் முஹம்மது(pbuh) அவர்களை சந்தித்து பேசிய சில விஷயங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இறக்கப்பட்டதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்., அந்த குழுவின் பெயர் எந்த விரிவுரையிலும்(தப்ஸீர்) குறிப்பிடப்படவில்லை., ஆனால் அந்த குழு முன் வைத்த வாதத்தை ஆராயும் போது அந்த குழு காபாலா என்று சொல்லப்படக் கூடிய ஃபிரீமேசன் குழு என்பது உறுதியாகிறது., ஃபிரீமேசன் என்பது 33° (33 படிநிலைகள்) கொண்ட ஒரு (இரகசிய) குழு., இவர்களை இலுமினாட்டிகளின் முதல் கட்ட அடிமைகள் என்று சொன்னால் அது மிகையாகாது., இந்த குழுவின் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களைத் தான் நாம் இலுமினாட்டிகள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்., இந்த உச்ச அதிகாரத்தில் இருக்கும் இலுமினாட்டிகள் தங்களது திட்டங்களை நிறைவேற்ற காபாலா என்ற சூனிய மந்திரம் பயன்படும் என்று நம்புகின்றனர், அதை பயன்படுத்தவும் செய்கின்றனர்., எனவே தான் இவர்களுக்கு காபாலாஸ் என்ற பெயரும் உண்டு.

பேரரசர் முஹம்மதிடம் (pbuh) இவர்கள் விவாதித்த விஷயங்கள்:

(பல விஷயங்கள் உண்டு தலைப்பிற்கு தேவையானதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்).

i) நாங்கள் எங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுகிறோம் என்பதால் எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள்.,(இங்கு எங்களுக்கு அருளப்பட்டதை என்று இவர்கள் குறிப்பிடுவது தவ்ராத்தையோ, சபூரையோ, இஞ்சீலையோ அல்ல, ஆதாரம் 2:91).

ii) பேரரசர் சாலமன்(pbuh) அவரே எங்கள் தலைவர், அவரே எங்களில் தலைசிறந்த சூனியக்காரர் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். (2:102வது வசனம் இவர்களின் இந்த கூற்றை அடியோடு மாறுகிறது, அதேவேளை இலுமினாட்டிகளின் தொடக்கத்தை பற்றியும் தெளிவாக பேசுகிறது.,).

iii) ஜிப்ரீல் எங்களுக்கு எதிரி, அவர் தான் உங்களுக்கு செய்தியை கொண்டு வருகிறார் என்றால் நாங்கள் உங்களை ஏற்கமாட்டோம்., (சிலர் இதை ஒட்டு மொத்த யூதர்களின் கருத்தாக பார்க்கின்றனர், ஆனால் அவர் ஒட்டுமொத்த யூதர்களுக்கும் எதிரியல்ல., பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி அதிகாரத்தை பார்த்து பொறாமை பட்டவர்களுக்கும், இயேசுவை (pbuh) கொல்ல முயற்சித்தவர்களுக்குமே இவரை எதிரியாக பார்த்தனர்.,)
இன்னும் சில.,

விவாதிக்கப்பட்ட இந்த விஷயங்கள் ஃபிரீமேசன்ஸ் 1400 வருடங்களுக்கு முன்பே இருந்தார்கள் என்பதை உறுதி செய்கிறது., இன்று நாம் யாரை இலுமினாட்டிகள் என்று அழைக்கிறோமோ அவர்களின் ஆரம்பகால பெயர் தான் இந்த காபாலா, ஃபிரீமேசன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

3. இயேசுவின் (pbuh) மீதான கொலை முயற்சி மற்றும் கிறிஸ்துவத்தின் உருவாக்கம், இது 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே இவர்கள் ஒரே நோக்கம் மற்றும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மற்றோரு ஆதாரம். இது பற்றி மிகத்தெளிவாக ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் இரண்டு நிழலின் நிஜங்கள் என்ற எனது இரண்டாவது புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

4. ஃபிரீமேசன் என்பது பேரரசர் சாலமானால் (pbuh) யூதர்களுக்கான முதல் ஆலயத்தை அதாவது பைத்துல் அல்அக்ஸாவை கட்டுவதற்காக இழுத்துவரப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டது., சிலர் இந்த குழு 1717ல் தான் உருவாக்கப்பட்டது என்று சொல்கின்றனர்., ஆனால் திருகுர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 102 இவர்கள் பேரரசர் சாலமன் (pbuh) காலத்திலேயே உருவானவர்கள் தான் என்பதை உறுதி செய்கிறது., இலுமினாட்டிகளுக்கு காபாலாவின் சூனிய மந்திரங்கள் எப்படி கிடைத்தது என்பதையும், பேரரசர் சாலமனை (pbuh) சூனியக்காரர் என்றும் தங்களின் தலைவர் என்றும் சொல்லிக்கொண்டிருந்த ஒரு கூட்டம் பேரரசர் சாலமனின் (pbuh) காலத்திலேயே உருவாக்கி விட்டது என்பதை விரிவுரையாளர்களின் குறிப்புகள் உறுதி செய்கின்றன.

இதுவே இலுமினாட்டிகள் 1776ல் உருவானவர்கள் அல்ல என்பதற்கும் அவர்கள் பேரரசர் சாலமனின்(pbuh) ஆட்சி காலத்தில் உருவானார்கள் என்பதற்கும் நான் தரும் ஆதாரம்.

தஜ்ஜாலின் பிறப்பு:

தஜ்ஜால் எந்த வருடம், எங்கு பிறந்தான் என்பதற்காகன நேரடியான எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை., ஆனாலும் கிடைத்திருக்கும் குறிப்புகளை வைத்து இவன் எங்கு எப்போது பிறந்திருப்பான் என்பதற்கான சாத்தியக்கூறுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

1. இலுமினாட்டிகள் தங்களது அரசனை பற்றி வெளிப்படுத்தும் அநேக இடங்களில் அவன் அரசர் தாவூத்தின் (pbuh) வம்சத்தை சேர்ந்தவன் என்றே குறிப்பிடுகின்றனர்., யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கையில் கூட இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பொறாமை கொண்டிருந்த யூதர்களில் ஒரு சாரார், அவர்கள் பாபிலோனில் தான் வசித்து வந்தனர்., பேரரசர் சாலமன் (pbuh) உயிரோடிருந்த காலத்தில் அவரால் சிறைபிடிக்கப்பட்டு அவரின் மரணத்திற்கு பின் விடுதலை பெற்ற ஜின் ஒன்று அவரது ஆட்சி குறிப்புகளை திருடி அந்த பாபிலோன் வாசிகளிடம் தான் கொடுத்தான்.

3. காபாலாஸ், ஃபிரீமேசன் இந்த குழுவின் அடித்தளம் பாபிலோனில் வைத்தே இடப்பட்டது.

4. சராசரிக்கு அதிகமாக மனித ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவனை சிறை பிடிக்க வேண்டும் என்றால், அது முழு மனித ஆற்றலை வெளிப்படுத்த கூடிய ஒருவரால் தான் முடியும்., அந்த வகையில் பார்த்தால் இது வரை வரலாற்றில் பேரரசர் சாலமன் (pbuh) வெளிப்படுத்திய அளவிற்கு மனித ஆற்றலை யாரும் வெளிப்படுத்தியதில்லை.

5. தஜ்ஜால் தனது ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே சிறைபிடிக்கப் பட்டுவிட்டான்., எனவே தான் அவனை பற்றிய எந்த குறிப்பும் (மதங்களுக்கு வெளியே உள்ள) வரலாற்றில் இல்லை.

6. அரசர் தாவூதுக்கு (pbuh) வழங்கப்பட்டதை விட மிக உயர்ந்த மற்றும் பலம் பொருந்திய அதிகாரம் மற்றும் ஆட்சி பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்டிருந்தது., இருந்தும் இவர்கள் அரசர் தாவூதுக்கு (pbuh) கொடுக்கும் முக்கியத்துவத்தை பேரரசர் சாலமனுக்கு கொடுப்பதில்லை., அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மீது கொண்ட பொறாமை, லூசிஃபரை சிறை வைத்ததினால் ஏற்பட்ட வன்மம், தஜ்ஜாலை சிறைவைத்ததினால் ஏற்பட்ட கோபம் இவைகளே இவர்கள் பேரரசர் சாலமனை(pbuh) புறக்கணிப்பதற்கும், அவரை சூனியக்காரர் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கும் காரணம்.

இவையெல்லாம் தஜ்ஜாலின் பிறப்பு பேரரசர் சாலமனின் (pbuh) காலத்தில் பாபிலோனில் வைத்து நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு நான் முன் வைக்கும் சாத்தியக்கூறுகள்.

தொடரும்.

இலுமினாட்டிகளின் இருப்பு மற்றும் நோக்கத்தை உறுதி செய்யும் மதரீதியான ஆதாரங்கள் அடுத்த பதிவில்...

பதிவு - musthafays

டெங்கு காய்ச்சல் பெயரில் இதுவரை ரூ 11 கோடி ரூபாய் அபராதம் வசூல் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்...


டெங்கு காய்ச்சல் பரவும் வண்ணம் நீர் தேங்கி இருக்கும் நிலையில் உள்ள கடைகள் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது...

மருத்துவ மாபியா வை உணர்ந்துக் கொள் தமிழா...


நிருபரின் கேள்வியும் பாஜக பிஹாரி எச்ச ராஜசர்மா பதிலும்...


நிருபர் கேள்வி : சார் மெர்சல் படத்துல சொன்னபடி GST யால மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதானே?

எச்ச : விஜய் ஒரு கிறிஸ்தவர்.

கேள்வி : இருந்துட்டு போகட்டும் GST யால தொழில்கள் முடங்கி இருப்பது உண்மையா இல்லையா?

எச்ச : நடிகர் விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய்.

கேள்வி : GST குறித்து மெர்சல் படத்துல சொன்னது பொய் என்றால், நீங்கள் உண்மையை மக்களுக்கு விளக்க வேண்டியது தானே?

எச்ச : ஜோசப் விஜய் ஒரு கிறித்தவ மிஷனரி கைக்கூலி.

{நிருபர் மனதிற்குள்} ஆக உன்கிட்ட பதில் இல்ல... அதை மூடி மறைக்க மதத்தை கையில் எடுத்து கலவரம் பண்ற...

அட அயோக்கிய பயலே......

குஜராத்தில் பொது மக்கள் பாஜக மோடிக்கு கொடுத்த செருப்படி...


விஜய் எவ்வளவோ பரவாயில்லை டிசன்ட்டா சொல்லி இருக்கிறார்...

பாஜக தமிழிசை , ராஜா போன்றவர்களின் கருத்தால் மெர்சல் படத்திற்கு முன்பை விட கூட்டம் அதிகரித்துள்ளது - திரையரங்கு உரிமையாளர்கள்...


இணையதள பக்கங்களில் ‘மெர்சல்’ படத்துக்கான லிங்கை வெளியிட்டு படத்தின் வசூலை பாதிக்க செய்ய வேண்டும் - இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு டாக்டர்களுக்கு வேண்டுகோள்...


மருத்துவ அயோக்கியத்தனம் வெளிப்படுத்தியதால்.. இனி இவர்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று உணர்ந்து இவர்களின் கீழ் தரமான செயல்களை பாருங்கள்...

மெர்சல் படத்தை எதிர்ப்பவனை எல்லாம் நன்றாக கவனியுங்கள்.. எல்லோரும் தனியார் துறையை சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள்...

பாஜக மோடியின் ஏமாற்று வேலையை இந்தியா முழுவதும் பரப்பிய பத்தாள்ஸ்...




தமிழ்நாட்டில் மட்டும் பார்த்துட்டு கடந்த போக வேண்டிய பிரச்னையை இந்திய முழுவதும் பேச வைத்து மோடி கொண்டு வந்த GST-demonetization நடவடிக்கைகளின் தோல்வியை  இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்து மோடிக்கு செருப்படி வாங்கிக் கொடுத்த பெருமை பரட்டை தமிழிசைக்கும், பொறி உருண்டைக்கும், ஹரிஹர எச்சை ராஜா சர்மாவையே சேரும்...

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு...


தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..! கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்..

கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.

அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.

தூர்வாரும் வேலை குறைந்து விடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது.

இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்''.
(வரி.26 - 28)

இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்" என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே''.
(புறம் - 18,28 - 30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.

இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ''.
(புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது.

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும்.

இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார்.

அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்''.
(83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை,

"யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்"

என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.

இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.

கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,
"
பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே''.
(25)

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு" என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை" என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''.
(1384 - 87)

என்கிறார். "சுருங்கை" என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும்.

அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு" என்பதாகும்.

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு" அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை" எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது" (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது.

அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.

பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...

குண்டலினி யின் ஏழு சக்கர நிலைகள்...


யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குண்டலினி வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றது தான்.

மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போது தான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

மூலாதாரம் - இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமானால் முதுகுத்தண்டின் பின் புறமாக அமைந்துள்ளது ஆசனவாய்க்கு இரண்டு இஞ்சு மேலே என்று சொல்லலாம், இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

சுவாதிஷ்டானம் - இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

மணிப்பூரகம் - இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

அனாகதம் - இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது.

விசுக்தி - இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும்.

ஆக்ஞை (அல்லது ஆக்கினை) - இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்) - இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப் பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். வெகு சிலர் தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும்.

பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு.

ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்கிறீர்களா?

நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, நான் ஏன் பிறந்தேன் என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா? கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும்.

ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை. பெரும்பான்மை மக்கள் பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன் என்றுதான் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை.

பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால் தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும்.

இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும்.

பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது.

நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத்தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம்.

உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம்.

உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம்.

உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.

இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூகத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம்.

இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை.

ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்...

மினரல் வாட்டர் கூட விஷம் தான்...


மஞ்சளின் மகிமை...


பெண்கள் திருமணம் முடிந்தபின், மஞ்சள் பூசுவதும், மாங்கல்ய கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதும், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தைத் திலகமிட்டுக் கொள்வதும், கணவன் இறக்கும்வரை ஒரு பண்பாட்டுச் செயலாக வாழ்வதும் எத்தனை புனிதமான இடத்தில் மஞ்சள் உள்ளது என்பதையே காட்டுகிறது.

இத்தனை சிறப்புப் பண்புகளைப் பெற்ற மஞ்சள், உணவுப் பொருளாகவும், உணவுப் பொருளுக்கு சுவை, மணம் தருவதுடன், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பும் தருகிறது. மஞ்சளை மருந்தாக ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப் படுத்தினார்கள். தேர்ந்த மருத்துவர்கள் மஞ்சள் கலந்த மருந்து மூலம் எத்தனை கொடிய நோய்களையும் போக்கி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும், சந்தேகமும் இல்லாமல் பயிற்சியும் இல்லாமல் மஞ்சள் மூலம் பல பிணிகளைப் போக்க முடியும்.

மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. கெடுதல் செய்யும் கிருமிகளையும் அழிக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கலுக்கு உள்ளுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.

மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.

மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

குடல் நோய் எதுவாக இருந்தாலும், மஞ்சள் சூரணம் உட்கொண்டால், விரைவாகவும், நிரந்தரமாகவும் நோய் தீரும்.

மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல், துர்நாற்றத்தைப் போக்கிவிடும். மேலும், வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர்களை வெளியேற்றி விடும்.

மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி துர்நாற்றத்தை நீக்கும்.

மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்துவிட்டால் அனைத்து வகையான வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்.

மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுப்பதால், தொற்றுக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேக ரணம், மேகப் படைகள், வட்டமான படைகள், விஷக்கடிகள் நீங்கும்.

தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும். மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக இழுத்தால், தலைவலி நீங்கும்.

மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, ரணங்களுக்கும் புண்களுக்கும் போட்டால், சீக்கிரத்தில் ஆறாத ரணங்கள் ஆறும்.

மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும். மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் போட, சீக்கிரம் புண்கள் ஆறிவிடும்.

மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும். அடிபட்ட வீக்கம், ரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போடுவதால், ரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைகிறது.

புகழ்பெற்ற, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புத்தூர் எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டுப்போடும் மருந்தில், மஞ்சள் முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.

மஞ்சள் மங்கலகரமானது. உணவு மூலம் சேர்ந்தால், பல பிணிகள் நீங்கிவிடுகின்றன.

மஞ்சளின் மருத்துவ குணத்தை உணர்ந்து, எளிய முறையில் பணச் செலவில்லாமல், வீட்டில் வைத்துக் கொண்டு உபயோகிப்பதால், அநேக நன்மைகளை அடையலாம்.

விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகாவது, மஞ்சளை மனதார ஏற்றுக்கொண்டு, பல பிணிகளை நீக்குங்கள். பணவிரயம், கால விரயம் இருக்காது.

மீண்டும் தமிழ் மருத்துவம் வருங்கால சந்ததியினருக்கு உதவட்டும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா என்பது கார்ப்ரேட் இந்தியா என்பதாகும்...


ஒரு நாள் பணம் மதிப்பில்லாமல் போகும் அப்போது உயிர்வாழ இயற்கையை தேடி அலைவோம்...


விபச்சாரம் மாமா தொழில் ஆனது எப்படி?


தெலுங்கர்களில் ஒரு சாதி உண்டு.
அவர்களின் குலத்தொழில் விபச்சாரம்.

உலகம் முழுவதும் ஆதிகாலம் தொட்டே விபச்சாரம் ஒரு தொழிலாக நடந்து வந்துள்ளது.

ஆனால் மேற்படி தெலுங்கு சாதி விபச்சாரத்தை குடும்பத்தொழிலாக செய்துவந்துள்ளது.

அதாவது தங்கள் வீட்டுப்பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி சம்பாதித்து வந்தனர்.

அந்த குடும்பத்து ஆண் தனது் அக்கா தங்கையை வைத்து விபச்சாரம் செய்து சம்பாதித்து, அவர்களுக்கு வயதான பிறகு அவர்களது மகளை வைத்து விபச்சாரம் செய்தனர்.

இதற்கு வசதியாக அக்காவின் மகளை திருமணம் செய்து கொள்வான்.

(அக்கா மகளை திருமணம் செய்வது தமிழர் வழக்கம் கிடையாது. தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் உறவு தந்தைக்கு அடுத்த நிலையில் வைக்கப்படுகிறது).

ஆக விபச்சாரியை இருட்டியபிறகு விளக்கு பிடித்தபடி அழைத்து வருவது பெரும்பாலும் அவளது தாய்மாமனாகத் தான் இருப்பான்.

கூட்டிக் கொடுத்து விட்டு வாசலில் காவல் காத்து விடிவதற்குள் விளக்கு பிடித்தபடி அழைத்துச் செல்வதும் அவனே.

ஆக விபச்சாரத் தொழில் மாமாத்தொழில் என்றாகி விட்டது.

மேற்படி சாதி சின்னமேளம் அல்லது மேளக்கார முதலி என்று அழைக்கப்பட்டது.

மேளக்காரர் என்ற இசை சார்ந்த தமிழ்ச் சாதிக்கும் இதற்கும் தொடர்பில்லை, பிறகு அது இசைவேளாளர் என்று கருணாநிதியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இசைக்கும் வேளாண்மைக்கும் என்ன சம்பந்தம்?

அதாவது மேற்படி சாதியார் தன் குடும்ப பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து அதற்கு பக்கவாத்தியம் வாசிப்பார்கள். மேளம் அடிப்பார்கள். ஒத்து ஊதுவார்கள்.

இந்த சாதி எப்படி உருவானது என்றால் கன்னட கோயில்களில் நடனம் ஆடும் பெண்களை வடுக அரசர்களும் வடுக பிராமணர்களும் தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

அந்தக் கோயிலின் பிராமணரே அந்த பெண்ணை இரண்டாவது மனைவி போல வைத்திருப்பார்.

இவர்கள் தேவதாசி என்றழைக்கப் பட்டனர்.

இவர்களின் வம்சாவழிகளே மேற்படி சாதியினர்.

தமிழகத்தில் கோயிலுக்கு அறப்பணிகள் செய்து சேவைபுரிந்து வந்த தேவ அடியார்கள் (ஆண்களும் உண்டு) மதிப்புடன் வாழ்ந்தார்கள்.

இந்த தேவரடியார் மேற்படி தேவதாசிகளுடன் குழப்பப்படுகிறார்கள்.

தாசி என்றால் அடிமை என்று பொருள்.

ஆனால் அடியார் என்பது புனிதமான சொல்.

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி பரவியதும் தேவரடியார் என்பது விபச்சாரியை குறிப்பதாகி இன்று அது ஒரு கெட்டவார்த்தை ஆகிவிட்டது.

தெலுங்கர் ஆட்சியில் பகலில் நடனம் இரவில் விபச்சாரம் என சின்னமேள சாதியினர் பெரிய பெரிய மனிதர்களுக்கு சேவை(?) செய்து பலன் பெற்று நல்ல வசதியாக வாழ்ந்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்திலும் வெள்ளைக்காரர்களுக்கு சேவகம் செய்துள்ளனர்.

காரியம் முடிந்தபிறகு தேவதாசியை வெள்ளைக்காரன் தன் வண்டியில் அழைத்து செல்வானாம். போகும் வழியில் எந்த இடத்திலாவது நிறுத்தச் சொல்லி தேவதாசி ஒரு கல்லை எடுத்து எறிவாளாம். அது போய் விழும் தூரம் உள்ள நிலம் அவளுக்கு கொடுக்கப்படுமாம்.

இந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அண்ணாதுரையும் கருணாநிதியும்.

அண்ணாதுரை தன் அக்கா மகளை வைத்து வியாபாரம் செய்ததை பாரதிதாசன் வெளிப்படையாகவே எழுதியுள்ளார்.

தன் சகோதரியையும் தன் மனைவியையும் விபச்சாரி ஆக்கி
கோவில்களை விபச்சார விடுதியாக்கி சம்பாதித்த ஒரு கூட்டம் உலகில் வேறு எங்காவது உண்டா?

இன்று தமிழகத்தில் அரசியலிலும் திரைப்படத் துறையிலும் இந்த மானங்கெட்ட வந்தேறி  சாதியின் ஆதிக்கம் பெருமளவு நிலவுகிறது.

குறிப்பு : 20 ஆண்டுகளான தென்னிந்தியா முழுவதும் நடிகைகளை வைத்து தனி விபச்சார சாம்ராஜ்யமே நடத்திய 'கன்னட பிரசாத்' என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

மெர்சல் படத்தில் அரசியல் கட்சி காட்சியை நீக்க சொல்வது கருத்துரிமைக்கு எதிரானது - தனிக்கை வாரியம்...


பாஜக மோடியின் சாதனை...


ராமநாதபுரம் திருவாடானை அருகே கிபி 1700 களில் உள்ள மன்னர் விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவரின் கல்வேட்டு கண்டுபிடிப்பு...



தமிழகத்தில் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு கடும் சரிவு...



தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை 60 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,000 கோடிக்கு நடைபெற்ற பட்டாசு விற்பனை இந்த ஆண்டு ரூ.400 கோடியாகக் குறைந்துள்ளது.
தீபாவளி பண்டியை முன்னிட்டு, இந்த ஆண்டு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட தாற்காலிக பட்டாசுக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. வெடி பொருள்கள் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றுவதாலும் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும் தகுதியான கடைகளுக்கு மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுக் திறக்க அனுமதிப்பட்டது.

சென்னை, புறநகர்ப் பகுதிகளில்... சென்னை தீவுத்திடலில் 60 கடைகள், ராயப்பேட்டையில் 5 கடைகள், நந்தம்பாக்கத்தில் 4, கோயம்பேட்டில் 15 கடைகள் உள்பட 200 கடைகளும் புறநகரில் 300 கடைகள் உள்பட 900-க்கும் அதிகமான கடைகளில் கடந்த 5-ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை நடைபெற்றது. தீபாவளிக்கு முந்தைய இரு நாள்களில் நள்ளிரவு ஒரு மணி வரை விற்பனை நடைபெற்றது.
பட்டாசு விற்பனை சரிவு: கடந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு நடந்த பட்டாசு விற்பனை 60 சதவீதம் வரை சரிந்து இந்த ஆண்டு ரூ.400 கோடிக்குத்தான் நடந்ததாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். கடைகள் எண்ணிக்கையும் மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்ததுதான் இதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறியது: தமிழகத்தில் கடந்த ஆண்டு பட்டாசு விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜி.எஸ்.டி.யால் விலை உயர்ந்து இருக்குமோ என்ற மக்கள் மத்தியில் எழுந்த அச்சம், பணப்புழக்கம் குறைவு, மழை ஆகியவை விற்பனை குறைவுக்கு முக்கியக் காரணம். கடந்த ஆண்டைக் காட்டிலும் பட்டாசு விலை குறைந்திருந்தாலும், மக்களிடம் வாங்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.

கடந்த ஆண்டு தீபாவளி, பட்டாசு விற்பனை முடிந்த பிறகே ரூபாய் மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவை நடைமுறைக்கு வந்ததால் பட்டாசு விற்பனையில் அவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால், இந்த ஆண்டு உயர்மதிப்பு ரூபாய் நோட்டு இழப்பு, ஜி.எஸ்.டி. நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களைப் பாதித்துள்ளது. இதுதான் பட்டாசு விற்பனை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். கடந்த ஆண்டு ரூ.50,000-த்துக்கு பட்டாசு வாங்கியவர் இந்த ஆண்டு ரூ.20,000-த்துக்குத்தான் பட்டாசு வாங்கினார். இதுபோலதான், பெரும்பாலான மக்கள் தங்கள் வாங்கும் சக்தி அளவைக் குறைத்துவிட்டனர் என்றனர் அவர்கள்.

தீவுத்திடலில் விற்பனை சரிவு: சென்னை தீவுத்திடலில் கடந்த ஆண்டு ரூ.15 ú காடி உள்பட மொத்தம் சென்னையில் ரூ.110 கோடி விற்பனை நடந்தது. இந்த ஆண்டு பாதிக்கு மேல் விற்பனை குறைந்து விட்டது. இருப்பினும் செலவு காரணமாக எல்லா வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு கடை அமைத்தல், ஊழியர்கள் சம்பளம் உள்பட ரூ.6 லட்சம் செலவாகும். ரூ.30 லட்சத்துக்கு பட்டாசு விற்பனை செய்தால்தான், செலவைச் சமாளிக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு விற்பனை மிகக் குறைவாக இருந்தது. இதனால், ஒவ்வொரு கடைக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தீவுத்திடலில் கடை அமைத்த வியாபாரிகளுக்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தீவுத்திடலில் கடை வாடகையை முறைப்படுத்த வேண்டும்.

தீவுத்திடலில் கடை வாடகை கட்டணத்தை தமிழக சுற்றுலாத் துறை ஆண்டுதோறும் 30 சதவீதம் வரை உயர்த்தி வருகிறது. இது, இங்கு கடை அமைக்கும் பட்டாசு வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2011-இல் கடை வாடகை ரூ.23,000 ஆக இருந்தது. இப்போது, ரூ.1.25 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 300 சதவீதம் வரை வாடகையை அதிகரித்துள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும் என்று பட்டாசு வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியது: தீவுத்திடலில் கடைகள் அமைக்க பட்டாசு விற்பனை சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீதம் வரை வாடகை தொகையை அதிகரிக்கின்றனர்.

பந்தர் தெரு, பத்திரியன் தெரு, மலையபெருமாள் தெரு , ஆன்டர்சன் தெரு ஆகிய இடங்களில் 40 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தோம். எங்களை திறந்தவெளியில் கடை அமைக்கக் கூறி, தீவுத்திடலுக்கு செல்ல உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், தீவுத்திடலில் கடை அமைத்து வருகிறோம். இதற்காக, டெண்டர் அடிப்படையில், பட்டாசுக் கடைகளை சுற்றுலாத் துறை ஒதுக்குகிறது. ஆனால், ஆண்டுதோறும் டெண்டர் தொகை உயர்த்தப்படுவதால், எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, வாடகைக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்...

டெலிபதி...


பலர் என்னிடம் டெலிபதி பற்றி அரிய ஆர்வம் உள்ளதாகவும் அதை கற்று கொடுக்கும் படியும் மேசேச் அனுப்பி உள்ளனர்.

உங்கள் ஆர்வத்தை மதித்து உங்களுக்கு எளிய முறையில் டெலிபதி கற்று தருகிறேன் தயவு செய்து இதை நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்...

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம்.

இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம்.

முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.

எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வராவிட்டால் விட்டு விடுங்கள்.
கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள்.

உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.
இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை.

இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள்.

ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்...

முதல்குடி மூத்தக்குடி எம் தமிழ்...


முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?


பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்...

உடல் எடை குறைய சித்தர்களின் வைத்தியம்...


1 கைப்பிடி பார்ஸி அல்லது மல்லி இலை..
1 எலுமிச்சை பழம்..
1 கப் தண்ணீர்...

நாகை மாவட்டம் பொறையாறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேற்கூரை அதிகாலை இடிந்து விபத்து. இதுவரை 8 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல்...


தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கிய மேலும் பலரை மீட்பதில் தீவிரம்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 37...


விபாசனா தியான முறை...

1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.

4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை “விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். ’உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.

5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.

6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.

7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?

8) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.

9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.

10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.

11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே “மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.

12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.

13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம்.

விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றன என்றாலும் நம் தற்போதைய குறிக்கோளுக்குத் தேவையான அளவு அறிந்து விட்டோம் என்பதால் இனி மற்ற தியானங்களுக்குச் செல்வோம்.

மேலும் பயணிப்போம்....

ஏ.டி.எம்.மிஷினை ஆட்டய போடலாம்ன்னு போனவனுங்க....


பாஸ்புக் பிரிண்ட் அடிக்கற மிஷினை ஆட்டயை போட்டுருக்கானுங்க...

இந்த லட்சணுத்துல நாங்க இந்தி வேற கத்துக்கணுமாம்...

போங்கடா அப்பரண்டிஸ்களா.....

தனியாக டியூசன் எடுத்து கட்டணம் வசூலிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கேரள கல்வித்துறை உத்தரவு...

         
அரசின் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, தனியாக டியூசன் எடுத்து கட்டணம் வசூலிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் அரசு–அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கட்டணம் பெற்றுக்கொண்டு தனியாக டியூசன் நடத்துவதால் பள்ளிக்கூடங்களில் அவர்கள் சரியாக பாடங்களை சொல்லிக்கொடுப்பதில்லை என்பது தொடர்பாக கேரள குழந்தைகள் உரிமை ஆணையத்திற்கு புகார்கள் வந்தது.

இதை தொடர்ந்து, கட்டணம் பெற்றுக்கொண்டு டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் குறித்தான விபரங்களை சேகரித்து, அவர்கள் மீது எடுக்கப்படும் துறை வாரியான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கேரள கல்வித்துறையிடம், குழந்தைகள் உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதனை தொடர்ந்து கேரள பொது கல்வித்துறை இயக்குனர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, அரசு மற்றும் தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக கட்டணம் பெற்றுக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் குறித்தான விபரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. மேலும், இவ்வாறு செயல்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது...

மெர்சல் பஞ்ச்...


மன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்...


தற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்..

இதனால் மன அழுத்ததால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

வேலை என்பது மட்டுமல்லாது உணவு பழக்கவழக்க முறை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இத்தகைய மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும்.

எனவே மன அழுத்தத்தை எளிய முறையில் குறைக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

தியானம்..

மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி தியானம்தான். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபடலாம்.

தூக்கம்..

மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே போதிய தூக்கமின்மை தான். தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது.

எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

நடைபயிற்சி..

நடைபயிற்சி மேற்கொள்ளுவது என்பது ஒரு எளிய உடற் பயிற்சியாகும். நடைபயிற்சி மேற்கொள்வது நம்மை உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளும்.

அதுமட்டுமல்லாது நடைபயிற்சியின் மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் மனதுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு பழக்கம்..

உணவுகளை நேரம் தவறி எடுத்து கொள்வது தான் பெரும்பாலான உபாதைகளுக்கு காரணம். எனவே சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.

அதுபோல் சத்தான உணவுகளாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாவல்பழம், சால்மன் மீன் மற்றும் பாதாம் போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

கால நிர்ணயம்..

எந்த வேலையையும் செய்வதற்கு முன்னால் கால நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்.

அதற்கு அந்த வேலையை முடித்தாக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இது தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்கும்.

அளவோடு வேலை செய்யுங்கள்..

முடியாது என சொல்ல பழகுங்கள். அளவுக்கு அதிகமான வேலையை இழுத்து போட்டு செய்வது என்பது எந்த வேலையையும் உருப்படியாக செய்யமுடியாமல் செய்து விடும்...

பித்ரு வழிபாடு கேள்வி - பதில்...


1. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு எது?

பித்ரு வழிபாடு..

2. பித்ரு வழிபாடு என்றால் என்ன?

இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்வதே பித்ரு வழிபாடு ஆகும்..

3. பித்ரு வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன?

எல்லா வழிபாடுகளுக்கும் முதன்மையானது பித்ரு வழிபாடு ஆகும். பித்ரு வழிபாடு முடிந்த பின்னரே மற்ற வழிபாடுகள் நடைபெற வேண்டும்..

4. பித்ரு வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்?

நம் நலனில் அக்கறை கொண்ட பித்ருக்கள் பசியில்லாமல் ஒளியுலகில் இன்புற்றிருக்க பித்ரு வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.

5. பித்ரு வழிபாட்டை யாரெல்லாம் செய்யலாம்?

இனம், மதம், மொழி, சாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு செய்யலாம்.

6. பித்ரு வழிபாட்டை தந்தை உயிரோடு இருக்கும் போது செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். இறந்த முன்னோர்கள் தன் பசியாற நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக நம் தாத்தா அவரது மகன் உணவளித்தால் தான் சாப்பிடுவாரா? இல்லையே. அவரது பேரப்பிள்ளைகள் நாம் உணவளித்தாலும் சாப்பிடுவார்.

7. பித்ரு வழிபாட்டை பெண்கள் செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். அமாவாசை முடிவதற்குள் ராமன் பித்ரு வழிபாடு செய்ய இயலவில்லை. அதற்குள் சீதாதேவி பித்ரு வழிபாட்டை செய்து முடித்தார். ராமன் மீண்டும் பித்ரு வழிபாடு செய்ய தொடங்க தசரதர் அசரீரீயாக தாம் சீதாதேவி கொடுத்த எள் நீரால் பசியாறி விட்டதாக கூறினாராம். இதனை ராமாயணம் உறுதி கூறுகிறது.

8. பித்ரு வழிபாட்டை எங்கே செய்வது சிறப்பு?

கோவில்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், கடற்கரைகள், புண்ணிய தீர்த்தங்கள், ஜீவ சமாதிகள் ஆகிய இடங்களில் செய்யலாம்.

9. பித்ரு வழிபாட்டை செய்ய சிறப்பான இடம் எது?

இவ்வுலகில் பித்ரு வழிபாடு செய்ய எத்தனையோ இடங்கள் இருப்பினும் திருவண்ணாமலையில் செய்யும் பித்ரு வழிபாடு 1000 மடங்கு பலன் தரக்கூடியது. பித்ரு வழிபாடு செய்ய திருவண்ணாமலையை விட சிறந்த இடம் உலகில் இல்லை.

அண்ணாமலையாரே வல்லாள மகாராசருக்கு பித்ரு கடன் தீர்த்த இடமான பள்ளிகொண்டாப்பட்டு (திருவண்ணாமலையிலிருந்து 5 கிமீ தொலைவில்) என்னும் ஊர் மிகவும் சிறப்பானது.

அண்ணாமலையாரே பித்ரு கடன் தீர்த்த இடத்தை விட சிறப்பான இடம் உலகில் இருக்க முடியாது. இது அகத்தியர் வாக்கு.

10. பித்ரு வழிபாட்டை எப்போது செய்யலாம்?

மாதப்பிறப்பு, அயன பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண காலங்கள், அமாவாசை திதி ஆகிய காலங்களில் பித்ரு வழிபாட்டை செய்யலாம். கோவில் தலங்களில் செய்யும் பொது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கோவில் தலங்களுக்கு காலவரையறை இல்லை.

11. பித்ரு வழிபாட்டில் இடம் பெற வேண்டிய பொருட்கள் யாவை?

தர்ப்பை, சுத்தமான நீர், கருப்பு எள் (ஆண்களுக்கு), வெள்ளை எள் (பெண்களுக்கு), ருத்திராட்சம், சங்கு ஆகியன.

12. பித்ரு வழிபாட்டில் எந்த மந்திரங்களை பயன்படுத்த வேண்டும்?

வடமொழி அல்லது தமிழ் மந்திரங்களை பயன்படுத்தலாம். தமிழ் மந்திரங்கள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் தமிழே மந்திரமொழி ஆகும்.

13. பித்ரு வழிபாடு முடிந்தவுடன் செய்ய வேண்டிய முக்கிய செயல் என்ன?

அன்னதானம் செய்ய வேண்டும்.

14. பித்ரு வழிபாட்டின் பயன்கள் யாவை?

திருமணம், வேலை கிடைத்தல், குழந்தை பாக்கியம், செல்வ செழிப்பு, குடும்ப முன்னேற்றம் இன்னும் பல.

15. பித்ரு வழிபாடு செய்யாவிடில் ஏற்படும் துன்பங்கள் யாவை?

பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் உண்டாகும்...

இந்த வந்தேறி முட்டாப்பயலுங்க தான் தமிழனுக்கு பகுத்தறிவு பாடம் கற்றுத் தருகிறார்களாம்... பிராடுகள்...


நான் சாதி வெறியன் தான். சந்தேகமே வேண்டாம்...


கோவில் கருவறை உள்ளே பூணூல் போட்டு மறையோதிய என் சகோதர இனம் (பறையனாக) தலித் பட்டத்தோடு தீண்டத்தகாதவனாய் கோவிலில் நுழையவும் தகுதியற்று இருக்க - தாசி வீட்டு திண்ணையில் பீப்பி ஊதறவன் உயர்குடியானது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்...

ஏரும் போரும் குலத்தொழிலாக வைத்த காரணத்தால எல்லா கோவில்களிலும் முதல் மரியாதை பெற்ற வரலாறை அறிந்த என் பள்ளர் சமுதாய சகோதரர்கள் தேவேந்திர குல வேளாளனாக (ஆனாநாயனம்  ஊதறவன் இசைவேளாளர்னு உயர்குடி) தாழ்த்தப்பட்டவர் பட்டியலை விட்டு வெளியே வருவதை ஆதரித்தால், நான் சாதி வெறியன் தான்..

போர் ஆரம்பம் ஆனதும் எதிரியின் பொருளாதாரத்தை அழித்து அவன் பலத்தை குறைக்கவும், போருக்கு பின் எதிரி மீண்டும் தலை தூக்காத அளவு அவன் வளத்தை கட்டுப்பாட்டில் வைத்த வீரம் மிக்க சகோதரன் கள்ளன் முத்திரை குத்தப்பட்டு குற்றப் பரம்பரையாக இருப்பதை ஏன் என்று கேள்வி கேட்கும், நான் சாதி வெறியன் தான்..

மக்களை காப்பாற்ற உயிரை கொடுக்க தயங்காத என்மறவன் சகோதரன் வஞ்சிக்கப் பட்டது ஏன் என்று கேட்கும் பொழுதும், நான் சாதி வெறியன் தான்..

போர் பயிற்சி கொடுத்த சான்றோர் குலம் சாணாராக மாறி தேரிக்காடுகளில் தீண்டத் தகாதவனாக வாழ வழியில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கு பனையேற அதுதான் பரம்பரை தொழில் என்று மாற்றப்பட்டது எப்படி என்று கேட்கும் பொழுது, நான் சாதி வெறியன் தான்..

1680 களில் களரிப்பயிற்சி கூடங்கள் 108க்கும் பொறுப்பாளராக, ஆயுதகிட்டங்கி பொறுப்பாளராக, திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாகியாக, திருவிதாங்கூர் சமஸ்தான தளவாயாக இருந்த தாணுமாலய நாடார்,

அவருக்கு பின் அவரது மகனாக மொத்த பொறுப்புகளுடன் அரண்மனை நிர்வாகத்தை ஏற்று மார்த்தாண்டனின் தளபதியாக 1741ல் நடந்த இந்தோ - டச்சு போரில் குளச்சலில் நடந்த டச்சுகாரனை தோற்கடித்து தளபதி டிலானியை கைது செய்த மாவீரனுக்கு.

ஏராளமான பரிசளித்து பெருமை படுத்தி அவர் நினைவாக "பத்மநாபபுரம் அரண்மனை" என பெயர்சூட்டி அழகு பார்த்த மார்த்தாண்டனின் தளபதி ஆனந்த பத்மநாபன் நாடாரின் சந்ததி அதே சமஸ்தானத்தில் மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்டு, முலைவரி கட்டி, செருப்பணிய அனுமதி மறுக்கப் பட்டு, பறையனை தொட்டா தீட்டு சாணானை பாத்தாலே தீட்டு என மாறியது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்..

போர்க்களத்தின் சுழல் கத்தி வீசி சண்டையிடும் போர்க்கள நாயகர் பட்டம் வாங்கியவர்கள் வன்னிக் காடுகளில் சுருக்கப் பட்டு தன் பட்டத்தை இழந்து வன்னியராய் மாறியது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

கையில குடு குடுப்பையுடன் வந்தவன் பரம்பரை, வெள்ளையனுக்கு காட்டியும் கூட்டியும் குடுத்து மாமா வேலை செஞ்ச நாய்கள் சம்பந்தமே இல்லாம "வீரபாண்டியன்" பட்டம்  வாங்கி செல்வாக்கோடு இருப்பது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

இமயமலை வரை போய் , மீன்கொடி நாட்டி கல் எடுத்து கண்ணகிக்கு கோவில் கட்டிய பாண்டியன் வாரிசுகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டது எப்படி என்று கேள்வி கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

வேட்டை நாய்களோடு ஆடுமேய்க்க வந்து அயலான் செருப்பு வாசல்படியில் இருந்தால் பத்திர பேப்பர்களுடன் புறவாசலில் நுழைகிறவன் ஆட்சி அதிகாரத்தோடு இருக்க, வெள்ளை தோலுக்கு மயங்கி சொத்தை பறிகொடுத்த தமிழன் அவன்கிட்ட அடிமையாக  இருக்குற வரலாறை பேசுவதால்.. நான் சாதி வெறியன் தான்..

நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன், போலி தமிழ்  தேசியம் பேசுபவனாகவே,  இருக்கிறேன்.. அதை பெருமையோடு பதிவு செய்கிறேன்..

இருக்கின்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்ட சூழலில் சாதியை வைத்தே என் தமிழின வரலாறை தேட முடியும், ஏற்றத்தாழ்வு அகலும் என்று அறிந்த நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன்...

காத்திரு பகையே...

தமிழ் சாதி வெறியனாக நம் தமிழர் குலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்ப்போம்..

சாதி பெருமைகள் அனைத்தும் தமிழர் பெருமைகள் என்று தெரிந்தே தான் தமிழர் குல அடையாளங்களை அழிந்துள்ளனர்..

ஒருவரை ஒருவர் சார்ந்தும் ஆதரித்தும் வாழ்ந்த தமிழ் குலங்களில் சாதி வேற்றுமையே வந்தேறி பகைவர்களால் தான் வந்தது என்பதை உணர்வோம்...

மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய 21 பாடங்கள்...


சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்...

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நாங்க சொல்லலைங்க..
சாணக்கியர் சொல்லியிருக்கார்...

தலைமுடி பேண சித்தவைத்திய முறை...


வழுக்கை தலையில் முடிவளர...

வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க..

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

ஆழ்மனம் இரகசியம்...


மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.

முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது.

visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்வது ஒன்றும் சிரமம் இல்லை.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.

ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள்.

ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்...

ஆதார் கார்டு இணைக்காததால், ரேசன் பொருட்கள் கிடைக்காமல், ஒரு குழந்தை புதிய இந்தியாவில் மடிந்துள்ளது...


அப்படிப்பட்ட ஆதார் கார்டு எனக்கு தேவையில்லை என கூறி ஆதார் கார்டை கொளுத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்த இளைஞர்...

தமிழகத்தை காக்க தயாராகுங்கள்...


முட்டை கோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்...



முட்டைகோஸ்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன.. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்… முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன.

எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்...

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு ஜெ வித்யாசாகர் ராவிற்கு தனது கைபட எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது...


இதில் ஜெ வின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது , மேலும் பெஸ்ட் விஷ்ஷஸ் என அவர் தனது கைப்பட எழுதியுள்ளார்.

இது ஜெயலலிதாவின் கையெழுத்து தானா உண்மை எனில் கடிதம் எழுதும் நிலையில் இருந்த ஜெயலலிதா கைநாட்டு வைக்கும் நிலைக்கு போனது ஏன்  என பல்வேறு கேள்விகள் இதனால் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே உள்ள சந்தேகங்களுக்கே விடை கிடைக்காத நிலையில் இந்த கடிதம் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது...

எலுமிச்சம் பழம் தீராத தலைவலியையும் தீர்த்து வைக்கும்...


கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை மனிதர்களுக்கு நோய் வராமலும், வந்தால் பேணிப் பாதுகாக்கவும் பயன்படும் ஓர் ஒப்புயர்வற்ற சக்திதான் எலுமிச்சம்பழம். இதன் மருத்துவ குணமும், உணவின் உபயோகமும் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விஷயமாகும். காலப் போக்கில் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு பல உண்மைகள் விஞ்ஞானிகளை வியப்பிலாழ்த்தி வருகிறது.

1875 ம் ஆண்டில் டாக்டர் ப்ளென் தனது ஆய்வின் முடிவில் எலுமிச்சம் பழம் ரத்தத்தைத் து}ய்மை செய்துள்ளதை உலகுக்கு உணர்த்தினார்.

சர் ராபர்ட் மைக்கேரியன் என்ற மருத்துவ அறிஞர் காய்ச்சலைப் போக்கும். தடுமன் வராமல் தடுக்கும் என்று வெளியிட்டார்.

இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட ரத்தத்தை உறையவைக்க வேண்டிய மிளாசத்தை எலுமிச்சம் பழத்தில் இருந்து எடுத்து காயங்களை எளிதில் ஆற்றினார்கள். இதன் பின் எலுமிச்சையின் சத்தினை அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது தெனரான் என்னும் இடத்தில் காகிதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தினார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தைக் கண்டுபிடித்த டென்சிங், ஹிலாரி ஆகிய இருவரும் தங்களுக்கு களைப்பு வரும் போதும் போதுமான பிராணவாயு கிடைக்காத போதும் எலுமிச்சம் பழத்தை உபயோகித்தார்களாம்.

குரங்குகளுக்கு நோய் கண்டால் எலுமிச்சம்பழத்தின் மூலம் டார்வின் சிகிச்சையளிப்பாராம். ஒரு முறை குரங்குகளுக்கு அதிகப்படியான மதுவினைக் குடிக்கச் செய்து சிறிது நேரம் கழித்து பல வகையான பழங்களைத் தின்பதற்கு வைத்தாராம். எந்தப் பழத்தையும் எடுக்காமல் எலுமிச்சம் பழத்தை மட்டிலும் கடித்து சாறு குடித்ததாம். டார்வின் ஆய்வு நு}லில் இவ்விதம் கூறப்படுகிறது.

அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு ஆகியவற்றின் கதிர் இயக்கப் பாதுகாப்புக்கு மருந்தாய்வு செய்கிறார்கள். இதில் பயோ ஃப்ளோவின் ஒரு முக்கியமான மருந்து. இந்த பயோ ஃப்ளோவின் என்ற மருந்து எலுமிச்சையின் தோலில் அதிகம் உள்ளது. இந்த மருந்தை எலிகளுக்குக் கொடுத்து மிகக்கடுமையான எக்ஸ்ரே கதிர்களை எலிகளின் மீது செலுத்தினார்கள். ஆனால் எலிகளுக்கு எந்தவிதபாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

புற்று நோய் உள்ளவர்களுக்கு பயோஃப்ளோ கலந்த மருந்தைச் செலுத்தி எக்ஸ்ரே கதிர் சிகிச்சையளித்தார்கள். எக்ஸ்ரே கதிர்கள் மனிதர்களை பாதிக்கவில்லை என்று கண்டுபிடித்தார்கள். நோயாளிகள் கதிர் இயக்கத்தை தாங்கிக் கொண்டார்கள்.

இனி வருங்காலத்தில், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள கதிர் இயக்கப் பாதுகாப்புக்கு மருந்துகள் வந்துவிடும். லெமன் பெக்டின் என்ற மருந்து காயங்களின் மேல் பூசினால் ரத்தப் பெருக்கு நிறுத்தப்படுவதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இதன் பயனாக ஹோமோ ஃபிலியா நோயாளிகளின் காயத்தால் ஏற்படும் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சிட்ரிக் ஆசிட்டின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக கிருமிகளைக் கொல்லக் கூடியது. லெமன் பெக்டேட் என்ற எலுமிச்சை உப்பு ஆழ்துளை மூலம் எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்பு பூமிக்கு அடியில் உள்ள கால்ஷியத்துடன் வினை புரிந்து எண்ணெய் வெளிவர உதவி செய்கிறது.

இரும்பு கடினமானது. மேலும் கடினமாக்குவதற்கு எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சத்துப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

நமது அன்றாட வாழ்வில் எலுமிச்சம் பழத்தை எப்படி பயன்படுத்தலாம்? புளிப்புச்சுவையான எலுமிச்சம் பழச்சாறு நாம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் காரத்தன்மையாக மாறிவிடும். பல நன்மைகள் ஏற்பட உதவும்.

எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி ஆகியவையும் எலுமிச்சம் பழத் தோலில் மாவுப்பொருள், புரதம், கொழுப்புப் பொருள் ஆகியவையும் இருக்கின்றன.

பெரிய மனிதர்களைச் சந்திக்க மகிழ்விக்க ஒரு எலுமிச்சம் பழம் போதுமானது. சுபகாரியங்களுக்கும், கோவில் அர்ச்சனைக்கும் மந்திரவாதிகளுக்கும் எலுமிச்சை தேவை. உணவுப்பொருளில் சேரும்போது இதன் சத்துப் பொருள் உணவில் சேர்வதோடு நல்ல மணமும் ருசியும் கிடைக்கிறது. லைம் ஜூஸ் கிளிசரின் தைலத்தை தேய்த்துக் குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். இதற்கு வெறும் எலுமிச்சம் பழச்சாறைக்கூட உபயோகிக்கலாம்.

கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு ஈடான பழங்களே இல்லை.

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீர் சமம் கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.500 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

பேதி மருந்து சாப்பிட்டு, பேதி நிற்காவிட்டால் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட வேண்டும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சம் பழத் துண்டை வைத்து தேய்த்தால் தேள் விஷம் குறையும். இதில் உள்ள டார்ட்டாரிக் அமிலச் சத்துதான் இதற்குக் காரணம்.

வெயிலில் வேலை செய்தல், இரவுப்பணியில் கண் விழித்தல் காரணமாக ஏற்படும் நீர்க்குத்தல், நீர் எரிச்சல் ஆகியவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து சாப்பிட்டாலே போதுமானது.

வெட்டைச் சு10டு தணிய அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு எலுமிச்சம்பழச் சாறும் சிறிய அளவு நீராகாரத் தண்ணீரில் கலந்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் நோய் நீங்கும்.

மலச்சிக்கல் நோய் ஆரம்ப நிலையில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது சோற்றுப்பு கலந்து பருகினால் போதுமானது. மூன்று நாட்கள் காலை வேளையில் சாப்பிட வேண்டும்.

வரட்டு இருமலுக்கு ஒரு எலுமிச்சம் பழச்சாறும் சமபாகம் தேனும் கலந்து, காலை மாலை சாப்பிட வேண்டும்.

பித்த மயக்கம் வருபவர்கள் இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றில் 25 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டால் பித்த மயக்கம் தீரும்.

மூத்திரப்பை சுத்தம் அடைய தினமும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீர், மோர், ரசம் இவற்றைச் சாப்பிட்டால் மூத்திரப்பைக் கோளாறுகள் அனைத்தும் விலகிவிடும். சிறுநீர் எரிச்சலை உடனே நிறுத்தும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் காட்டுச் சீரகம் என்ற மருந்தை நன்றாக மைபோல அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்தால் சாந்துப் பதம் வரும். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து தலை முழுகினால் தலையில் உள்ள பொட்டு, பொடுகு, பொருக்கு முதலானவை சிலமுறை உபயோகத்தில் மாறிவிடும்.

தலையில்பேன் உள்ளவர்கள் மயிர்க்கால் வரை நன்கு அழுத்தித்தேய்த்து நன்றாக ஊறிய பின் தலை முழுகினால் பேன்கள் இறந்துவிடும். தலைமயிர் சுத்தமாகும். எலுமிச்சம் பழச்சாற்றில், காட்டுச் சீரகத்தை சாந்துபோல் அரைத்து சொரி, சிரங்குகளுக்குப் போட்டால் நோய் நீங்கும். சொரி, சிரங்குகள் நீடித்த நாட்களாக இருப்பவர்கள் பழச்சாற்றில் சீனி கலந்து பகல் வேளையில் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தேமல் நோய் உள்ளவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறையும். உடலில் தேய்த்து 8மணி நேரம் வைத்திருந்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.

முகப்பரு உள்ளவர்கள் தினம் ஒரு எலுமிச்சம்பழச்சாறு உள்ளுக்குச் சாப்பிட்டு, இரவு படுக்கும் போது பழச்சாற்றை மேலுக்குப் பூசி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

திரிகடுகு சு10ரணத்தில் சற்றுக் கூடுதலாக எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு ஓரளவிற்கு சீனியும் சேர்த்து ஒரு மண் கலயத்திலிட்டு நன்றாக மூடி சீலை மண் செய்து ஒரு அடி ஆழத்தில் மண்ணில் புதைத்து ஆறுவாரங்கள் சென்ற பின் எடுத்து எலுமிச்சை நீரை மட்டும் வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் சாதாரண மருந்துகளுக்கு கட்டுப்படாத அஜீரணம், பசியின்மை, வாய்வு வலிகள், கை, கால் உளைச்சல் நரம்புத்தளர்ச்சி, ரத்த சோகை முதலிய வியாதிகளைப் போக்கிவிடும். இது கை கண்ட மருந்தாகும்.

இதோ ஒரு இனிப்பான செய்தி... எலுமிச்சையில் இருந்து ஸ்குவாஷ் செய்து தினம் சாப்பிடுங்கள்.

எலுமிச்சம் பழச்சாறு 1 கிலோ, சர்க்கரை 2 கிலோ இந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சம் சாற்றை வடிகட்டவேண்டும். சர்க்கரையை தண்ணீரில் பாகுபதம் வரும் வரை காய்ச்ச வேண்டும், அடுப்பை விட்டு எடுத்து பாகில் பழச்சாற்றைச் சேர்த்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிடலாம். நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் ஒரு கிலோ பழச்சாற்றுக்கு 700 மில்லி கிராம் பொட்டாசியம் பெட்டாபை சல்பேட் கலந்து வைத்துக் கொள்ளலாம்...