16/03/2019

ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு நாட்டில்...


இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும் நாட்டில்...

மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும் வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக் குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.

இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும் குறைவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும் தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.

இங்கு தமிழும் சைவமும் தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன் இன்றும் கூறுகிறார்கள்.

கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும் நடைபெறுகின்றன.

முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து லூயிஸ் துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன் கோயிலும் கிளெமென்சியாவில் அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும் நிர்மாணிக்கப்பட்டன.

இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில் காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள் எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும் இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

சமயமே தமிழர்களை இணைப்பதும் ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

நமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும் சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்...

நீங்கள் இந்த ராசியில் பிறந்தவரா.? அப்போ இதை படிங்க...


https://youtu.be/jW71vmKubSA

Subscribe The Channel For More News...

புரட்சியே தமிழனைத் தலை நிமிர வைக்கும்...


நூறு ஆண்டுகள் கடந்தாலும் இந்திய மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருப்பார்கள். குறிப்பாக தமிழ் இனம் பின் தள்ளப்பட்ட இனமாகவே இருப்பார்கள். தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தி தமிழர் தேசங்களில் சூறையாட முனையும் பல ஆரிய மற்றும்  திராவிடரே முன்னோக்கி செல்வார்கள்.

தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் அவர்கள் பொருளாதரத்தில் உயர்வு பெற வேண்டும்.

இவைகள் இடம்பெற வேண்டுமாயின் அவர்களுக்குள் புரட்சி வந்தாலே ஒழிய அவர்களின் பொருளாதார நிலமையை யாராலும் மாற்ற முடியாது. 

அப்படியாயின் எப்படி வறுமையின் கீழ் வாழும் பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களை மாற்ற முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

தமது அன்றாட வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்கள் அடுத்த நூறு ஆண்டுகளில் அவர்களின் வம்சாவளிக்கு என்ன நடக்கும் என்பதை அவர்கள் கடுகளவும் சிந்திக்க முடியாதவர்கள்.

தமிழ் நாட்டு ஊடகங்களோ அவர்களின் ஊடகங்கள் மூலமாக எப்படி பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற கொள்கையுடன் செயலாற்றுகின்றார்கள். சில ஊடகங்கள் சமூக மாற்றத்துக்காக வெளிவந்தாலும் அவைகள் பின்னாளில் தோல்வியைத் தழுவுகின்றன.

குறிப்பாக இந்த நிறுவனங்கள் மூடி விடும் அளவு பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். திரையுலக விமர்சனைங்களையும் மற்றும் கோமாளி அரசியலையும் மக்கள் முன் கொண்டு செல்லும் ஊடகங்களைத் தான் பல கோடி மக்கள் ஆதரித்து பணத்தை அள்ளி வீசுகின்றார்கள்.

ஆக ஊடகத் தர்மம் என்பது காசோலையால் மூடி மறைக்கப்பட்டு விட்டதென்பது தான் மறைக்க முடியாத உண்மை.

இப்படியான ஒரு நிலையிலேயே தமிழினம் இந்தியாவில் இன்று இருந்து கொண்டிருக்கின்றது.

இந்திய மத்திய சர்க்காரோ மக்கள் எவ்வளவு அறியாமையாக இருக்கின்றார்களோ அந்தளவுக்கு அவர்களில் செல்வாக்கு புது டெல்லியில் உயரும் என்று கணக்குப் போட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இது போதாதென்று தமிழ் நாட்டை ஆளும் தான் ஒரு பச்சைத் திராவிடன் என்று பறைசாற்றும் கருணாநிதியோ தனது சுய லாபத்திற்கும் குறிப்பாக தனது குடும்பத்தை எப்படி அடுத்த பல நூறாண்டுகள் இந்தியாவை ஆளும் வர்க்கமாக ஆக்க வேண்டும் என்று இந்த தள்ளாடும் வயதிலும் போராடும் கருணாநிதியே சிந்திக்கும் போது எப்படி பாமர தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் இனம் பற்றி சிந்தித்து செயலாற்றுவார்கள் என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி.

இருப்பினும் இந்த மக்கள் குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து செயலாற்றுவார்களேயானால் இப்படியான சுயநலவாதிகள் நிச்சயம் மக்களால் இனம் காணப்படுவார்கள்.

ஆக இவைகள் அனைத்துக்கும் ஒரே வழி அமைதி வழியில் உருவாகும் மாபெரும் எழுச்சியே.

ஈழத் தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத வழியில் போராடி பல இன்னல்களை சந்தித்தவேளை தமிழ் நாட்டு மக்களோ தாமும் தமது குடும்பமும் என்றே வாழ்க்கையை நடத்திவந்தார்கள்.

சில நூறு தமிழ் நாட்டு மக்களைத் தவிர மற்றவர்கள் சுய லாபத்திற்காக ஈழத்தமிழரின் விடுதலைப் பயணத்தைக் கையாண்டார்கள்.

வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களிடம் ஈழத் தமிழரின் உண்மையான பிரச்சனை எடுத்துச் செல்லப்படவில்லை.

உண்மையிலையே ஈழத் தமிழரின் துன்பத்தை ஒவ்வொரு சந்து பொந்துகளுக்கும் தமிழ் நாட்டில் எடுத்துச் செல்லப்பட்டிருக்குமாயின் நிச்சயம் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழரையும் தமிழருக்கு என்ற ஒரு தனியான நாடு அமைய வேண்டும் என்ற தாகத்துடன் ஈழம் காணப் புறப்பட்ட முப்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞரையும் காப்பாற்றி இருந்திருக்கலாம்.

பல சுயநலவாதிகள் இவைகளைச் செய்யாமல் தமது வளர்ச்சியிலையே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

ஒரு சோறு சாண் வயிற்றிற்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் நாட்டுத் தமிழர் நிச்சயம் ஒரு புரட்சி கொண்டவர்களாக இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்து இந்திய நடுவண் அரசையும் ஏன் முழு உலகையும் ஈழம் பால் கவர்ந்து சிறிலங்காவின் கொடுங்கோல் தேசத்தை பயங்கரவாதிகளாகக் காட்டியிருக்க முடியும்.

ஆனால் நடந்தது என்ன?

இவர்களின் சோம்பேறித்தனமும் தமது அன்றாட வாழ்க்கையிலும் பாழாய்ப் போன திரையுலகமும் இந்த மக்களை முடமாக்கி இன்று தமிழன் பல இன்னல்களை பல நாடுகளில் சந்தித்து கொண்டுள்ளான். ஏன், இந்தியாவிற்குள் இருக்கும் தமிழனுக்கே பாதுகாப்பில்லை.

இவைகள் அனைத்துக்கும் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்றால் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஓன்று திரண்டு புரட்சி நடாத்தினால் பல மாற்றங்களை காண முடியும்...

திமுக எனும் ஆரியக் கட்சி...


ஏரி & கல்வி கொள்ளையன் பச்சமுத்துக்கு நீதிமன்றம் செருப்படி...


புதிய தலைமுறை தொலைக்காட்சியில் "பாட்டாளி மக்கள் கட்சி, அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்து அவதூறு மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடக் கூடாது" என வன்மையாக கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் தடை...

போடா ஏரி திருடா...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


தூதுவளை....


பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை. சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும் தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும்.

இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.

தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம்.

இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம்.

தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது...

அறவழியில் போராடிய புதுக்கோட்டை கல்லூரி மாணவ மாணவியர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்திய காவல்துறை...


https://youtu.be/2iO00T4xdY4

Subscribe The Channel For More News...

குறிக்கோள்கள் எவ்வாறு வெற்றியை தீர்மானிக்கின்றன...


குறிக்கோள்கள் இல்லாத வாழ்க்கைப் பயணம் என்பது இலக்கை நிர்ணயிக்காமல் எய்த அம்பினைப் போன்றது.

நீங்கள் இப்போழுது கிரிக்கெட் விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது என்று முடிவெடுத்துவிட்டீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் ஆர்வம் எந்தத் துறையில் உள்ளது பேட்டிங்,பவுலிங் அல்லது இரண்டிலுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இங்கே தான் நம்மில் பலர் தவறு செய்கின்றனர் இலக்குகள் வெற்றியினைத் தீர்மானிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால் பலர் நான் சச்சின் டெண்டுல்கர் போல மிக சிறந்த பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என்று தனது இலக்கிணை தீர்மானிக்கின்றனர்.

நாம் சச்சினைப் போல சிறந்த ஆட்டக்காரராக வரவேண்டும் என்ற இலக்கிணை நிர்ணயிக்கும் போது வெற்றியை நோக்கி நமது இலக்கிணை தீர்மானிக்கின்றோம்.

அது நம்மை தோல்விப் பாதைக்கே அழைத்துச் செல்லும்.

அவ்வாறு இல்லமால் நம்முடைய இலக்கிணை நம்முடைய செயலில் அதாவது இங்கே கிரிக்கெட் ஆட்டத்தில் வைக்க வேண்டும்.

இலக்கிணை செயலில் எவ்வாறு நிர்ணயிப்பது?

முதலில் இலக்கு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் அது மாறிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு தொடர் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு மலையினை முழுவதுமாக உடைக்க எண்ணினால் அந்த மலையையே இலக்காக வைத்து செயல்பட்டால் அது உங்களுக்கு மிகவும் பெரிதாக தோன்றி பயத்தினை ஏற்படுத்தும்...

மாறாக நீங்கள் அந்த மலையை கற்களாகவும், சிறு சிறு பகுதிகளாகவும்  இலக்கிணை நிர்ணயித்து உடைதுவந்தால் உங்களால் அந்த முழு மலையையும் உடைக்க முடியும்.

உதாரணமாக உங்களுக்கு பிடித்த செயலான கிரிக்கெட்டில் நீங்கள் இலக்கிணை எவ்வாறு தீர்மானிப்பது என்று பார்போம்.

முதலில் நீங்கள் சிறந்த பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் அதிகம் விளையாட வேண்டும்.

அதிக நேரம் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

பல மாறுபட்ட சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்த்து பயிற்சி செய்ய வேண்டும்.

பல்வேறு தன்மை கொண்ட ஆடுகளங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

உடலினை வலிமையாக ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் இப்படி உங்களின் இலக்குகள் முழுவதும் உங்களின் செயலினைத் தொடர்ந்தே இருக்க வேண்டும்.

இலக்கை நோக்கி பயணிக்கும் போது சிலசமயங்களில் சிலரின் எதிர்மறை எண்ணங்கள், அல்லது சிறு தோல்விகள் உங்களை சோர்வடைய செய்யலாம்...

காவல்துறையை ஏவி விட்டு மாணவர்களை தாக்கி மீண்டும் அதிமுக அராஜகம்...


சீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள்...


உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.

இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.

சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது.

இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.

இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது.

பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.

பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

உலக மக்கள் தொகையில் முத்லிடத்தை பிடித்த சீனாவின் கிழக்கில்ஷான்ஹாயில் தொடங்கி லோப்நூர் வழியாக மேற்க்கில் சென்று தெற்க்கெ மங்கோலியாவின் உட்ப்பகுதிவரை செல்கிறது சீனப்பெருஞ்சுவர்.

வானுயர்ந்த மலைகள் மணல் பாலைவனங்கள் பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் சுவரின் நீளம் 6400கிலோமீட்டர்கள்,எந்தவொரு தொழில்நுட்ப்பமும் இல்லாத இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்படுள்ளது மிகப்பெரும் அதிசயம்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீனவிற்க்கு அச்சுறுத்தல்கள் அதிகம் திடீர் திடீரென்று அண்டை நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்தன இது சீன அரசர்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வந்தது.

இதை எப்படி தீர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்து இறுதியாக சீனாவின் எல்லைப்பகுதியில் மாபெரும் சுவர் ஒன்றை கட்டுவது என்று முடிவெடுத்து உடனடியாக வேலையில் இறங்கினார்கள், அதாவது கி.பி 206 இல் முதல் சின்வம்சத் அரசன் இதை கட்டத்தொடங்கினான் பதினைந்து வருடங்கள் இந்த பெருஞ்சுவரை கட்டினார்கள்.

குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் 70 % பேர் இப்பணியில் ஈடுபட்டனர், கி.பி 221ல் 5000 கிலொமீட்டர் தூரம்வரை கட்டினர் இதற்க்கு வான்-லி-குவான்ங்-கெங் என்று பெயர் வைத்தனர்.

4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இதன் அகலம் இருந்தது, இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் ஏனோ அவர்களுக்கு திருப்தி ஏற்ப்படவில்லை, சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்து.

கி.பி 1368 லிருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள், மொத்தம் 6400 கிலொமீட்டர் வரை கட்டினார்கள், பின்பு இந்த சுவரில் மறு சீரமைப்பு பணியை தொடங்கினார்கள்.

இதுவெ 200 ஆண்டுகள் வரை நீடித்தது , சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்க்கும் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுவதற்க்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன, ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகை போட்டு படை வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.

கி.பி1987ல் சீனப்பெருஞ்சுவர், உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது,மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடம்சீனப்பெருஞ்சுவர். இந்த சுவர் சீனாவின் அடையாளமாக உள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கிலொமீட்டர் தொலைவில் இருக்கும் சைமைதாயு மற்றும் மடியான்யு என்ற இரண்டு இடங்களில் மட்டும் இப்போது சுற்றுலாப் பயணிகள் சுவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

சீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்

சீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?

சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளத்தைக் கண்டுபிடிக்க, ஏப்ரல் திங்களில் பிரம்மாண்ட அளவீட்டுப் பணி தொடங்கியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்று, சீனப் பெருஞ்சுவர். பகைவர்களின் படை எடுப்பிலிருந்து சீனாவின் வட பகுதியைக் காப்பாற்ற, இந்த மாபெரும் பாதுகாப்பு அரண் கட்டப்பட்டது.

கி.மு. 220இல் தொடங்கிய இதன் கட்டுமானப் பணி இறுதியில், 1368-1644 வரையிலான மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தான் நிறைவடைந்தது.

இதன் நீளம்,10 ஆயிரம் லீ அதாவது 5000கிலோ மீட்டர் என்றும், அகலம் சராசரியாக 6 மீட்டர் என்றும் கூறப்படுகிறது. எனினும் இவை தோராயமான அளவுகள் தான்.

இதனால், பெருஞ்சுவர் பற்றிய துல்லியமான புள்ளி விபரங்களைக் கண்டறிய வேண்டும் என்று சீன வரலாற்று அறிஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து,பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள், 1980ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால் இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தற்போது, தொழில் நுட்பத் துறையில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் பணியை மீண்டும் தொடங்கச் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த மாபெரும் அளவீட்டுப் பணி,4 ஆண்டு காலம் தொடரும். இதன் மூலம் சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளம், வரைபடம், தற்போதைய நிலை ஆகிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும்...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. அணுகுண்டை தூக்கிப் போடும் டிடிவி. தினகரன்...


https://youtu.be/_Q6665EvVFw

Subscribe The Channel For More News...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோக்களை இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ் பி மற்றும் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இந்த வீடியோக்கள் தூக்க மின்மையை தங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வீடியோக்களை பகிர்வது குற்றம் என அறிவிக்க வேண்டும்,

அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு, அரசாணையை திரும்ப பெற்று புதிய அரசானை வெளியிட வேண்டும்.

-  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை...

திமுக கூட்டணியை விட்டு வெளியேறுமா விசிக..


நின்னா உதயசூரியன் சின்னத்தில் நில்லு.. ஸ்டாலின் காட்டம்...

https://youtu.be/PHyG9ous5F8

Subscribe The Channel For More News...

திமுக கூட்டணிக்கு பாமக அன்புமணி ராமதாஸ் அவர்களின் வேண்டுகோள்....


பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்காதீர்கள்...

அதிமுக அரசை மன்னிக்க மாட்டோம்...


மீண்டும் காவல்துறையை ஏவி விட்டு மாணவர்கள் மீது தாக்குதல்...

பச்சைத் தமிழன் என்ற முகமூடி அணிந்துள்ள மராட்டிய ரஜினியின் குடும்ப வரலாறு...


ரசினியின் மகள் சவுந்தரியம் தன் தந்தை மராட்டியன், தன் தாய் அய்யங்கார் வகுப்பை சார்ந்தவர், தன்னை சவுந்தரியம் என்று அழைப்பதை விட 'சக்கு பாய் கெயிக்வாடு' என்று அழைப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டி (ஜன. 15, 2017)...

மராட்டியனுக்கும், கன்னட அய்யங்காருக்கும் பிறந்த 'சக்கு பாய்' பச்சை தமிழச்சியாகி, கலைமாமணி விருதெல்லாம் வென்ற வரலாறு தான் இதுவரையான தமிழினம் வீழ்ந்த சுருக்கமான ஒருவரிக் கதை..

எல்லா புகழும் திராவிட அரசியலுக்கே. ராம்சாமி பூமிடா, தமிழன் வாயில மண்ணுடா...

எதுக்கு காக்கி சட்டை போட்ருக்கீங்க, வெக்கமா இல்ல உங்களுக்கெல்லாம்... போலீசை பொளந்து கட்டிய சட்டக்கல்லூரி மாணவி...


https://youtu.be/69D-78KVWZ8

Subscribe The Channel For More News...

3-வது நாளாக தமிழகமெங்கும் தொடரும் மாணவிகள் போராட்டம்...


பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட கோரி புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது...


இந்த பொய்யாக கட்டமைக்கப்பட்ட அமைப்பின் உண்மைத்தன்மை எது தெரியுமா..?


மக்கள் உண்மையை தேடுவதிலும், கேட்பதிலும், அதை ஆராய்வதிலும் ஈடுபாடு காட்டுவதில்லை, ஏனென்றால் இங்கு பணம் என்ற ஒன்றை வைத்து கட்டமைத்த மாயை நிறைந்த அமைப்பில் தங்களின் பணம் சார்ந்த கனவுகள் சிதைவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.. அதனாலேயே உண்மையை கேட்பதில்லை...

ஆரியர்களின் பூர்வீக நாடு எது?


யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது.

தென்னாடு உடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

தென்னிந்தியரின் /திராவிடரின் / சிவனடியாரின் பரந்த மனப்போக்கினை தெரிவிக்கின்றது.

இத்தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உருவாக்கியது வேதமதம். இந்த  மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்ததால் கொடுந்தண்டனை. வேதமதத்தில் ஆரியர்களே முதல் வர்ணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும். ஆரியர்களின் கடவுள்களுக்கு ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய ஆரியர்களால் இந்தியர்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன்னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலம்.

அய்ரோப்பிய வரலாற்று ஆசிரியரின் நூல்...

ஆடம் ஹார்ட் டேவிஸ் என்று வரலாற்றாளர், “History” என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரும் இவரது நண்பர் நாத்திகர் டாக்டர் சூசன்பிளாக்மோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினார். (விடுதலை நாளிதழ் 4.2.2012) இவர்கள் இருவரும் பகுத்தறிவுவாதிகள்.

ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூலில் எவ்வாறு ஆப்பிரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், இந்தியர்கள், அமெரிக்கர்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை விரிவாகக் கூறியுள்ளார்.

அடிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதையும் விவரிக்கிறார். அந்த நூலில் ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“The origin of (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vidic gods who feature in Vedas, the 3000 years old scaret texts, that are central to the development of Hinduism.” The religion evolved to focus on senior deity called Brahma, Vishnu creator and Shiva the destroyer along with their consorts or sakthis From 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana (கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணலில் நாள்: 02.09.2011 சொல்லியவை)

மேலே கண்ட வரிகளில் தெரிவிப்பது கீழ்வருமாறு. ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுளையும், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (சிவன்) போன்ற உபக்கடவுள்களையும், அவர்களின் மனைவிகளையும் உள் அடக்கிய பல்வேறு கடவுள்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள், இந்த கடவுள்களின் உதவியால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி இருந்தது...

பாரசீக மொழியில் இருந்து மதக்கடவுள்கள்...

சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் _ Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish, Not available (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல், குறித்த பாரசீக சொற்களை தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.

பாரசீக மொழியும் ஆரியரும்...

வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் அய்ரோப்பிய மொழி குடும்பத்தை சார்ந்தது எனக் கண்டறிந்தார் மற்றும் அதன் உட்பிரிவான இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்றும் கண்டறிந்தார். ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழியான பாரசீக மொழி ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப்பற்றியும் பல சுவையான வரலாற்று செய்திகள் தருகின்றன.
அவைகள் கீழே தரப்பட்டுள்ளன. (பாரசீக சொற்கள் தொகுப்பு பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது).

1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு.1500இல் நடந்தது. இதன்பின் இஸ்லாமிய மதம் தோன்றி இந்தியாவுக்கு கி.பி.800இல் பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுதது வந்தார். இறுதியாக தில்லியில் டில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி.1206-_1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் வந்தனர். முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரை குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமளவில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈராணியரின் தொண்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.

3. வேத கால கடவுள்களான இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றோர்களும், ரிஷிகளான வஷிஷ்டா, அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.

4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.மு.1600அய்ச் சார்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு.1400 சேர்ந்த மித்தாணி கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்கள் பெயரும் ஒத்துப் போகின்றன.

5. ஆரியர்கள், யாகங்கள் செய்தனர். தீயை வணங்கினர். பசுவை வணங்கினர். குதிரையை வணங்கினர். காமதேணு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் தீயைப்பற்றி பல சொற்கள், யாகங்களைப்பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.

6. இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

7. பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டியில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள், காலம், பருவம் (Time) (Season) ஆகும். பஞ்ச என்ற சொல், அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கின்றது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது. பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.

8. Gowpathi Sha = (கௌபதி+ஷா) = கௌபதி + ஷா = பசுபதி + மன்னன் (அ) அரசன். இந்த Pathi என்ற சொல் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.

9. Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.

10. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.

11. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது.  இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

12. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja” இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில், வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் என்று அழைக்கப்படுகின்ற Stepi Culture என்று வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங்கியது. இந்த “Airyana Vaeja” என்ற இடம் பாரசீக மொழியில், நிணீஹ்ணீ/கயா வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.

13. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில் கங்கைக்கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனிததலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர்கள் துர்க்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.

14. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை,  முகாம் (Camp) படைவீடு, சந்தை (மார்க்கெட்) என்று பொருள். இதன் அடிப்படையில் ஹுமாயுன் / முகலாயர் காலத்தல் படைவீரர்கள் சந்தையில் பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில் Campu Language என்று அழைக்கப்பட்டன. (Camp = உருது) (Camp=  பாசறை).

15. பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.
16. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.

முடிவுரை:

1. துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த NDA அரசில் அமைச்சராக இருந்த திருமதி. மேனகா காந்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளதால், இந்த நூலில் ஆரியர் பற்றி சொல்லப்படும் செய்திகள் மற்றும் விளக்கங்கள் சிறப்புப் பெறுகின்றன.

2. பாரசீகத்திலிருந்து வந்த வேதகால கடவுள்கள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தியாவில் பிராமணீயத்தை வளர்க்க உதவியதாக வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூல் “History” இல் தெரிவிக்கின்றார்.

3. கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

4. Helena Petroun Blavatsky தனது “Secret Doctrine” (1888) இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாம்_அய் சார்ந்தவர்கள். Abraham x-brham (பிரம்மன்=பிராமணர்) கிதீக்ஷீலீணீனீ பிராமணனின் எதிர்பதம்.

5. பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகயை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டு தோற்கடித்தன.

6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைபிடித்ததால் “The American Hertage Dictionary of English Language” என்ற அகராதியில் ஆரியர் என்பவருக்கு கீழ்கண்ட விளக்கம் தந்துள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany. Originally it referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”

7. ஆரியர்கள் துர்கிஸ்தான் (துர்க்மேனிஸ்தான்) இருந்து வந்தார்கள் என்று அகராதி உருவாக்கிய மேனகா காந்தியும், ஆரியர்கள் நாசிகள் (NAZI) நாசகாரர்கள் என்று அகராதி எழுதிய அமெரிக்கப் பண்பாட்டு கழகமும் போற்றுதலுக்குரியவர்கள்...

நன்றி- பொறியாளர் பி.கோவிந்தராசன்...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் பற்றி டிவிட்டரில் கமல் வெளியிட்டுள்ள வீடியோ...


https://youtu.be/b5sWm8Usshs

Subscribe The Channel For More News...

அரிசிகளின் இரகசியம்...


1. கருப்பு கவுணி அரிசி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும்.

17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும்.

20.சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும்....

அதிமுக வின் அட்டூழியம்...


ஓலைச் சுவடி.....


முற்காலத்திலிருந்து சமீபகாலம் வரை காகிதம் கண்டுபிடிக்கப்படும் வரை கல்வி சம்பந்தமான அனைத்துப் பயன்பாட்டுக்கும் பனையோலைச் சுவடிகள்தான் பயன்பாட்டில் இருந்தன.

இன்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் சங்க இலக்கியங்களும் சித்தர் பாடல்களும் கம்ப ராமாயணமம் திருக்குறளும் எல்லாம் இந்தப் பனையோலைச் சுவடிகளில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் தங்களை இருப்பாகக் கொண்டிருந்தன.

பனை பலவகையிலும் நமது வாழ்வாதாரமாகமட்டுமல்ல கல்வி, பண்பாடு. கலை இலக்கியத்துக்கும் ஆதாரத் தூணாக இருந்தது.

பனையும் நம் தாய்த் தமிழ் மொழியும் இணைபிரியாத இரட்டையர்கள்.

அந்தோ பரிதாபம்! காகிதம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பனைமரத்தின் பாரம்பரியத்தை மறந்தோம்.

பெற்றோர் மறைந்தாலும் அவர்களின் உருவப்படங்களைப் புனிமாகக் கருதி மதிக்கிறோம். ஆனால் அதற்கு ஈடாக மதிக்கவேண்டிய பனையைமட்டும் நன்றி கொன்றதனமாக மறந்துவிட்டோம்.

என் அனுபவத்தில் கண்ட ஒரு உண்மையைச் சொன்னால் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு கொலை வழக்குக்காக சம்பவ இடத்துக்குச்சென்ற காவலர்களுக்கு அங்கிருந்த வேலையாள் மரமேறி இளநீர்குலையைத் தள்ளி அவர்களுக்குச் சீவிக்கொடுத்து அவர்கள் குடித்தபின் அதனுள் இருந்த வழுக்கையை எல்லாம் வழித்துக் கொடுத்து உண்டு இளைப்பாறியபின்பு என்ன செய்தார்கள் தெரியுமா?

அந்த அப்பாவி மனிதரை அங்கிருந்த ஒரு தடியை எடுத்து அடித்து உதைத்து அவரையும் ஒரு எதிரியாக வழக்கில் சேர்த்து ஆயுள்தண்டனையம் வாங்கிக் கொடுத்தார்கள்.

அதுபோன்று பலவகையிலும் பனை நமக்குப் பயன்பட்டதையும் மறந்து துரோகத்தனமாக வெட்டி சூளையில் போட்டு எரித்துக்கொண்டு உள்ளோம்.

கொடுமை.. கொடுமை...

இந்தியாவில் இவ்வளவு கட்சிகளா.? அதிர்ச்சி தகவல்...


https://youtu.be/jR4qUWhz-g8

Subscribe The Channel For More News...

மாரடைப்பின்போது முதலுதவி....


உங்கள் மார்பு அல்லது இடப்புறத் தோள்பட்டை மிக அதிகமாக வலிப்பது, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடியாக ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்குங்கள்.

இது இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்த வல்லது. மேலும், உடனடியாகப் படுத்துக்கொள்வது நல்லது. வலுக்கட்டாயமாக இருமுங்கள்.

இது மருத்துவர்கள் மார்பில் குத்தி பிசைந்து இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முயலும் அதே அளவு தாக்கத்தைக் கொடுத்து உங்கள் இதயத்தை சாதாரண நிலைக்குக் கொண்டு வரக்கூடும்.

பிறருக்கு இந்த அறிகுறிகள் தோன்றுமாயின் மருத்துவ உதவி வரும் வரையில் மார்பில் குத்திக் கொண்டிருங்கள். ஆஸ்பிரின் மாத்திரையை எப்பொழுதும் உடனடியாக எடுக்கக்கூடிய இடத்தில் வைத்திருப்பது அவசியம்.

நெருக்கடி நிலையில் விரைந்து எடுக்கும் முதலுதவி நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க வல்லது.

வேகம் விவேகம் இரண்டையும் கடைப்பிடித்தால் எந்த விதமான சிரமத்தையும் எளிதில் சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை...

பாஜக வின் சாதி வெறி அரசியல்...


கொய்யாப்பழத்தின் பயன்கள்.....


கொய்யாப்பழம் எதற்கு எல்லாம் பயன்படுகிறது...

பழங்களிலேயே விலைகுறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதுமான கொய்யாப்பழத்தின். முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை, பட்டயை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள கொய்யாப் பழத்தில் அடங்கியுள்ளன.

கால்சியம் பாஸ்பரஸ் . இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் இதில் காணப்படுகின்றன. நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமான கொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும்.

கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன.

உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

மருத்துவ குணங்கள்...

கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.

கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும்,எலும்புகள் பலம்பெறவும் கொய்யாப்பழம் உதவும்...

திமுக கலாட்டா...


வானம் ஏன் நீல நிறத்தில் உள்ளது.?


குறைந்த அதிசிறந்த இக்கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்பாக ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிறக் கதிரானது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என ஏழு வகையான கதிர்களை உள்ளடக்கியதாகும்.

ஒவ்வொரு கதிருக்கும் வெவ்வேறு அலைநீளமும், அதிர்வெண்ணும் உண்டு. (இதெல்லாம் நீங்கள் சின்ன வயதில் படித்தது தான்!). சூரியக்கதிர்கள் அண்டத்தில் நேர்க் கோட்டில் பயணிக்கும். அப்படிப் பயணிக்கும் போது ஒரு மூலக்கூற்றையோ, தூசியையோ எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு அல்லவா? அத்தூசியின் தன்மையைப் பொறுத்து கதிர்களின் செயல்பாடு மாறுபடுகிறது.

சூரியக்கதிர்கள் நம் காற்று மண்டிலத்தின் தூசித்துகள்கள் மீது மோதும் பொழுது அவை பெரும்பாலும் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் வெள்ளை நிறத்திலேயே தோற்றமளிக்கும்.

இதற்குக் காரணம் தூசித் துகள்கள் கதிர்களை உட்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றன. எனவே கதிர்கள் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. ஆனால் காற்று மூலக்கூறுகள் மீது மோதும் பொழுது, இதற்கு நேர்மாறாகக் காற்று மூலக்கூறுகள் அதில் பெரும்பான்மையான கதிர்களை உட்கொள்கின்றன.

இதில் அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் (சிவப்பு) தப்பிப் போய் விடுகின்றன. ஆனால் குறைவான அலைநீளம் கொண்ட கதிர்களை (நீலம்) காற்று மூலக்கூறுகள் விடாமல் உட்கொள்கின்றன.

இவ்வாறு உட்கொள்ளப்பட்ட நீல நிறம் கதிர் வீச்சடைந்து பல திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. இதனால் தான் நமக்கு வானம் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது...

இங்கு மேடைதோறும் அரசியல் கட்சிகளையும், தலைவன்களையும் வசை பாடலாம்...


அதற்கு எல்லாம் மிஞ்சிப்போன காலை கைது மாலை விடுதலை என்பது மட்டுமே நடக்கும்..

ஆனால் இந்த அமைப்பின் அடித்தளத்தை மேடைதோறும் பேசினால், நீங்கள் இருப்பீர்களா என்பதே சந்தேகம் தான்..

உதாரணம் தற்போதைக்கு முகிலன்..

முகப்புத்தகத்தில் உவன் என்ன தான் கத்தினாலும், அது 500 பேருக்கு கூட போய் சேராது என்பது உவன் அறிந்ததே..

உவனின் களம் இங்கு ஒட்டுமொத்த அடித்தளத்தை எதிர்ப்பது..

அது முட்டாள்தனமாக கூட இருக்கலாம்..

வாக்களித்தால் மாற்றம் வரும் என நம்பும் முட்டாள்தனத்தை விடவா,

என் முட்டாள்தனம் இருக்கிறது...

களம் எப்படி இருக்க வேண்டுமென அடுத்த பதிவில் வரும்...

உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது?


முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும், அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது.

இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.

செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு, குருத்தெலும்பு, விலங்கு, காய்கறிப் பொருள்கள், ஆகியவை இந்த மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை.

ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும் தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது. உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர் (gastric juice) செறிவான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது.

இது சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.

இது ஏன் இரைப்பையைக் கரைப்பதில்லை? இரைப்பை அமிலத்தை மட்டும் கசியச் செய்யாமல் கடினத்தன்மையை எதிர்த்து நின்று சமப்படுத்தும் காரப் பொருளான (alkali) அமோனியா (ammonia)வையும் தரும்போது, சரிக்கட்டு இயக்கியாக (neutrazling agent) அமைவதால், அந்த அமிலம் இரைப்பையைக் கரைப்பதில்லை.

இந்தச் சக்தி வாய்ந்த இரைப்பை நீர் தடங்கல் செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவ்வாறு முட்டுக்கட்டையிடப்படும்போது இரைப்பையில் வலி விளைகிறது. இதனையே உணவு செரியா நிலை என அறிகிறோம்.

உணவூட்டக் கால்வாய்க் குழாய் உணவு பெறுவதற்காக தயாரிப்பை உணவுக்கு முன்பே முன்னேற்பாடு செய்து வைத்துக் கொள்கிறது. உணவுப் பொருளின் தோற்றம், மணம், உணவைப் பற்றிய எண்ணம் ஆகியவை வாயூறலையும், இரைப்பை நீர் சுரப்புத் தூண்டலையும் செய்யத் தொடங்கி விடுகின்றன.

அதே சமயத்தில் உணவை நோக்கி இரைப்பை, சுரப்பிகளை (glands)த் தொழில் செய்வதற்கேற்ப நுண்புழை நாளங்களை (capillaries) அகலப்படுத்தி உணவு செரிப்பதற்கான செய்கைகளைச் செய்வதற்குத் தேவையான அதிகக் குருதியைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கிறது.

ஆனால் பசியில்லாமல் உண்ணல், ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டு, கவலை, கோபம், பயம், நமைச்சலூட்டல் போன்ற உணர்ச்சிகள் இரைப்பையில் தயாரிப்பை நிறுத்தக்கூடும். இவை இரைப்பையை வெளிறச் செய்ய (pale)வும் கூடும். அதன் விளைவு உணவு செரியாமல் போகும்.

மிக விரைவாக உணவை வாயிலிட்டு அரைக்காமல் உண்பதும் செரிமானமாவதற்குத் துன்பமாக அதிக உணவை உண்பதும் பெருஞ்சுமையாகவும் ஒழுங்கைக் கெடுக்கும் தன்மையுடையதாகவும் செய்து நமக்கு உணவு செரியாத் தன்மையைக் கொடுக்கும்...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரமும்... சட்டமும்...


வெற்றி என்றால் என்ன?


வெற்றி என்பதற்கு தனியாக எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது.

எளிமையான முறையில் சொல்வதென்றால் நாம் நினைத்தது நமக்கு கிடைத்து விட்டால் நாம் நினைத்த இலக்கை நாம் அடைந்துவிட்டால், நாம் இருந்த நிலையை விட ஒரு நிலை மேலே அடைந்துவிட்டால் அதனை வெற்றி என்று போற்றுகின்றோம்.

சிலருக்கு பணம் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு புகழ் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு சேவை செய்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் வெற்றி, பிடித்த பெண் அல்லது பிடித்த ஆண் துணையாக கிடைத்தால் வெற்றி.

இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் இலக்கணம் வெவ்வேறாக இருக்கும்.

இப்படி வெற்றிக்கான இலக்கணம் ஒவ்வொருவருக்கும் மாறுபட காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே..

குறிப்பாக வெற்றி என்பதை ஒரு வரியில் விள்ளக்க வேண்டுமேயனால் மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி ஆகும்.

ஆனால் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதாலோ அல்லது குறிப்பிட்ட அல்லது பிடித்த அந்த இலக்கை அடைந்தாள் மட்டுமே வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

ஆகவே நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமேயானால் உங்களின் மனதிற்கு பிடித்த அந்த செயல் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்...

ழ தமிழர்களாகிய எங்கள் உயிர்...


கொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்...


முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.

ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும்,

நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று
மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.

இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.

மலச்சிக்கலால் பாதிக்கப் படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.

இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.

கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.

இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.

இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்...

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.

முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.

மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்  இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.

இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.

இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.

அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.

ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.

இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.

அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்...