11/12/2018

பாஜக தமிழிசை யை வச்சி செய்து இருக்கிறார்கள்...


பயம் ஒரு பயணம்...


இன்று... டிசம்பர் 11... 1882 -கவிஞர் சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாள்..


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இன்று நம்மில் பலர் எழுத
காரணமாக இருக்கும்
நம் கவிஞன் பாரதிக்கு
வாழ்த்து சொல்வோம்...

பாரதியே நின் புகழ் வாழ்க
வாழ்க வாழ்க வாழியவே....

எது எதற்கோ நேரம் ஒதுக்குகிறோம்
தமிழ் உணர்வை ஊட்டிய
விடுதலை கவிஞனுக்கு
வாழ்த்து சொல்ல
ஒரு நிமிடம் ஒதுக்குவோம்..

மகா கவியே..
மீண்டும் ஒரு முறை
பிறந்து வா..

நாம் இருவரும் கை கோர்த்து
தமிழனுக்கான சுதந்திரத்தை
வென்றிடுவோம்...

இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை...


வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு குவளை தண்ணீர் விட்டு, ஒரு குவளை அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை குவளை வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப் போக்கவும் பயன்படுகிறது...

பாஜக கூட்டணி வாக்கு எந்திரமும் தேர்தல் ஆணையம் ஆச்சே... அதான் அடிச்சு சொல்றார்...


ஆசான் திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்...


1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. இரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல் - 100 பாக்கள்
8. வைத்திய சூத்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூத்திரம் - 30 பாக்கள்
11. வாத சூத்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்

இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக்கிடைக்கிறது.

ஆனால் அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள்.....

விழித்துக்கொள் எம் தமிழினமே...


தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றிய சுவாரஸ்யமான முக்கிய குறிப்புக்கள்..


அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில் வைத்த பெயர்.

ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள்.

பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை.

பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்.

1.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். “போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, “எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

2.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டு வைத்திருந்தார்.

3.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக் கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது.

4. ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்? என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.

5.“பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்.

6.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை.

7.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை.

8.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்.

9.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப் பார்.

10.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்.

11.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்.

12.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்.

13.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். “தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்.

14.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

15.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்.

16.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்.

17.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்.

18.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்.

19.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்.

20.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டு வருவேன்” “ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்று அடக்க மாகச் சொல்வார்.

21.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்.

22. தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்...

பாஜக வும் ஏமாற்று வேலைகளும்...


https://www.worldbank.org/en/news/press-release/2018/05/31/government-india-world-bank-sign-usd500-million-additional-financing-project-for-all-weather-rural-roads-using-green-technologies

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை விற்பனை : 3 பேர் கைது...


திருச்சி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறந்த பெண் குழந்தையை விற்றதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே, செல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரேமா. கர்ப்பமாக இருந்த இவர், திருச்சி மாவட்டம், உப்பிலிய புரத்தில் உள்ள, உறவினர் வெள்ளையம்மாள் என்பவர் வீட்டுக்கு, பிரசவத்துக்காக வந்திருந்தார்.

ஒரு லட்சம்...

உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பிரேமாவுக்கு, சில நாட்களுக்கு முன், பெண் குழந்தை பிறந்துள்ளது.பிரேமாவின் உறவினர் வெள்ளையம்மாள், கிராம சுகாதார செவிலியரின் உதவியாளர், சுசீலாதேவி ஆகியோர், துறையூர் அருகே, அமுதசுரபி நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் சகுந்தலா தம்பதிக்கு, குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்று உள்ளனர்.

மீட்டனர்...

இது குறித்து தகவல் அறிந்த, திருச்சியில் உள்ள குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த, தியாகராஜன் என்பவர், கடந்த, 7 ம் தேதி, உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்படி விசாரணை நடத்திய, முசிறி போலீசார், சகுந்தலாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக, வெள்ளையம்மாள், சுசீலாதேவி மற்றும் சகுந்தலா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்...

பாஜக மோடிக்கு மாமா வேலை பார்க்கும் ஊடகங்கள்...


தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்...


சென்னை: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ என்னும் இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தில்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல், உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிற்கு வரும் புகார்களை சேவை மையத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் முறையாக பதிவு செய்து வைக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த சேவை மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க இது ஏதுவாக இருக்கும்.

இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் சேவையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைக்கிறார்....

அதிகார வர்க்கம்...


ராமர் கோவில்… பாஜக வின் விஹெச்பி வலியுறுத்தல்...


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உடனடியாக சட்டம் கொண்டு வரவேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. டெல்லி ராம் லீலா மாதானத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில், இதனை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர்...

நோய்களில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்...


ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்..

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில் தான்..

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்
மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு..

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது..

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்..

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது..

சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது..

உங்கள் மனம் தான் உங்கள் உலகம்
உங்கள் மனம் தான் உங்கள் ஆரோக்கியம்..

உங்கள் மனம்தான் உங்கள் நோய்..

நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்..

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்..

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது..

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது..

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை..

உடலும் மனமும் இரண்டல்ல..

உடலின் உள்பகுதி தான் மனம்..

உடல் மனத்தின் வெளிப்பகுதி
உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும்.

அது மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்...

ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்...


மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது... வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும்.

இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.

ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும்.

ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும்.

மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது.

வாதநோய் தொடர்பாக நரம்புக் கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.

இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன.

வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.

இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும்
பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல... அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்....

அதாவது பழைய சோறு.... அந்த உணவு..

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.

2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.

3.உடல் சோர்வை போக்குகிறது.

4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.

5.உடல் சூட்டை தணிக்கிறது.

6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.

7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.

8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்…..

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் HOW to MAKE PALAYA SORU ?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
பழையதை பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…

சரி... பழைய சோற்றை எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்..

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….

ஆகா…. இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்..

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்…

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்... உடல் நலத்தை காப்போம்...

பாஜக பொன். ராதாகிருஷ்ணன் 2000 கோடி ஊழல்...


ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா.....?


நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

சமீபத்தில் எற்பட்ட கஜாபுயலை பயன்படுத்தி புயலில் சாய்ந்த சில சாயாத மரங்களையும் ஆட்சியரின் துணையுடன் வெட்டி லாரி லாரியாய் ஏற்றுமதி செய்வதில் சில மரக் கொள்ளையர்கள் ஈடுப்பட்டுள்ளதாக மன்னார்குடி மக்கள் புலம்புகிறார்கள்...


அடக்க நினைக்கும் ஸ்டெர்லைட்.. அடங்க மறுக்கும் தூத்துக்குடி...


ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நிலைகளில் பாதிப்புகளை உணர்ந்த தூத்துக்குடி மக்கள் அதனை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை கொண்டு உள்ள நிலையில் அதனை திறப்பதற்காக/ ஆரம்பிப்பதற்காக அந்நிறுவனத்தோடு இணைந்து போராட்ட மக்களையும், தூத்துக்குடி மக்களையும் ஒன்றிணையாதிருக்க பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருகிறது.

பொய்வழக்கு, மிரட்டல்கள், கையூட்டல்கள், பொய் பரப்புரை, அடக்குமுறை, அரசுத்துறை அச்சுறுத்தல் என பல வித செயல்பாடுகள் மூலம் மக்களை அடக்கிவிடலாம் என கணக்கிட்டு வருகிறது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம். அடங்க மறுப்பதே தூத்துக்குடி மக்களின் அடையாளம் என்பதை காட்ட புரட்சிகவி பாரதியின் உணர்வுகளின் ஒரு வரி துளி கவிதை போதும்.

காயங்கள் ஆறினாலும் தழும்புகள் மாறாதிருக்கும் இத்தருணத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் எனில் அன்றைய மே மாத புரட்சி போல் அல்லாது பலநூறு மடங்காக மீண்டும் ஜனவரி புரட்சியாக மக்கள் கூட்டம்  வெகுண்டெழும் என்பதில் மாற்றில்லை.

பல வழி காவலிட்டு ஸ்டெர்லைட்டை இயக்க நினைத்தாலும், பல ஆயிரம் பேரிட்டு கண்காணிக்க நினைத்தாலும் இறுதியொருவன் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியை விட்டு விரட்டப்படும் என்பதில் ஐயமில்லை.

தூத்துக்குடி மக்கள் அறியாதிருப்பர் ஆனால் அறிவார்ந்து இருப்பர் என்பதற்கு பல வரலாறு உண்டு எம் தூத்துக்குடி மண்ணில்...

இவையெல்லாம் வெறும் எழுத்துக்கள் அல்ல எதிராளிகளை வீழ்த்தப்போகும் கணையாணிகள் என்பதை  உணரும் நிலை  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் எட்டாதிருப்பதே வேதனை.

மீண்டும் தயாராவோம்.
ஒன்றுப்பட்டு தூத்துக்குடி மண்ணை காக்க....

இரண்டு படம் எடுத்துட்டு... சாதி ஒழிப்பு பேரில் சுற்றிக் கொண்டிருக்கும் சாதி வெறியன் பா. ரஞ்சித்...


செல்ஃபோன் கதிர்வீச்சின் அபாயம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுவதால், அத்துறையில் இருப்பவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்...


செல்ஃபோன் கம்பெனிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அலைக்கற்றையை (Frequency band / Spectrum) அதிகரிக்க முடியாது. ஆனால் Radiating power ஐ அதிகரிக்க முடியும்.

ஒரு செல்ஃபோன் டவரில் (BTS) இருந்து வரும் Radiating power standard உலக அளவில் 12 வாட்ஸ். இந்திய அளவில் 15 முதல் 18 வாட்ஸ். இந்த அளவில் இருந்தால் பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

சில தனியார் நிறுவனங்கள் 60 வாட்ஸ் வரை வைத்திருப்பதாகக் கேள்வி. (TRAI விதிமுறைப்படி இதற்கு அனுமதியில்லை என்றாலும், நம் நாட்டில் விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிந்தது தான்)

இதனால் பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் காது, மூளை ஆகியவையும் பாதிப்படையும். இது நீண்ட கால அடிப்படையிலானது என்பதால் இன்னும் முழுதாக நிரூபிக்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல். நினைத்தாலும் இப்படி தனியார் போல வேண்டுமென்ற power radiationஐ அதிகப்படுத்திக்கொள்ள முடியாது. காரணம், தொழிலில் இலாபம் வரும் என்றாலும், ஓர் அரசு நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பான, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களைச் செய்யமுடியாது, செய்யக்கூடாது.

அதனால் தான் தனியார் செல்ஃபோன் சிக்னல், கண்ணாடி அறை, அண்டர்கிரவுண்ட் குடோன் என்று நீக்கமற எங்கும் துல்லியமாகக் கிடைக்கிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். செல்லுக்கு அழைப்பு வந்தால் செல்லை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு ஓடவேண்டி இருக்கிறது.

இதைத் தான் இத்தனை நாள், xxxxxxx சிக்னல் கக்கூஸில் கூட கிளியரா கிடைக்கும், பி.எஸ்.என்.எல். வேஸ்ட் என்று நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

மற்ற நாடுகளில் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்றால், செல்ஃபோன் என்பது வெளியிடங்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. வீட்டுக்கு வந்துவிட்டால் லேண்ட்லைன் தான் என்ற புரிதல் அவர்களிடம் இருக்கிறது.

லேண்ட்லைனில், தரைவழி கம்பிகள் வழியாக இணைப்பு கொடுப்பதால், Radiation என்ற பேச்சே அதில் கிடையாது.

என் செல்ஃபோனுக்குத் தான் அழைப்பு வரும். ஒவ்வொருமுறையும் லேண்ட்லைனுக்கு மாற்றி அழைக்கச் சொல்லமுடியாது என்றால், நீங்கள் வீட்டில் இருக்கும் போது, உங்கள் செல்லுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைனிற்கு 'கால் டைவர்ட்' செய்துகொள்ளலாம்.

செல்ஃபோன் Radiationக்கு தீர்வு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதல்ல. Radiation powerஐ, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் வைக்க வலியுறுத்துவதே. இதை பொதுமக்கள் நேரடியாகப் பார்த்து உணரமுடியாது என்பதால் கயவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் இருந்துகொண்டு, செல்ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள் என்று பயமுறுத்த மாட்டேன். ஆனால் உங்கள் தேர்வு எது என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

இன்னும் 2.0 பார்க்கவில்லை. அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாகத் தெரியவில்லை...

- பொதிகை சாரல்...

பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் திருவண்ணாமலையில் காலமானார்...


திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் காலமானார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் மூக்குப்பொடி சித்தரின் உயிர் பிரிந்தது....

1990 இல் தனித்தமிழ்நாடு மாநாடு...


தமிழகத்தில் தமிழ்தேசிய எழுச்சி ஏற்படும் போதெல்லாம் தமிழ்பேசும் வந்தேறிகள் திராவிடம் என்ற பெயரில் உள்ளே புகுந்து பார்ப்பன வெறுப்பைத் தூண்டி எப்படியெல்லாம் குழப்பி மடைமாற்றுவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மேலும்,28 ஆண்டுகளுக்கு முன்பே சுப.வீ திராவிடம் தான் தமிழ்தேசிய உணர்வை மழுங்கடித்து வந்துள்ளது என்பதை தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

இப்போது அப்படியே தலைகீழாக மாறி நிற்கிறார்.

என்னவொரு பச்சோந்தித்தனம்?

படம்: துக்ளக் 15.03.1990
தலைப்பு: இலக்கு - பிரிவினை; வழி - வன்முறை...

வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்...


இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விசயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விசயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிருமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்...

தெலுங்கர் வைகோ நாயூடு கலாட்டா...


வாழ்வின் இலட்சியம்...


நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இலட்சியம் என்ன என்று அறிந்தால் தான் அது சார்ந்த அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்ய முடியும்.

பயணம் எங்கே என்று முடிவானால் தான் ரயிலிலா, பேருந்திலா, நடந்தா என்று முடிவு செய்ய முடியும்.

அதனால் முதலில் உங்களுடைய இலட்சியத்தை முடிவு செய்யுங்கள்.

அதன் பின் உங்களுடைய ஒட்டு மொத்தக் கவனத்தையும், ஒட்டு மொத்த நேரத்தையும், ஒட்டு மொத்த பயணத்தையும் அதை அடைவதில் செலவிடுங்கள்.

இதுவே மிக மிக முக்கியமான அடிப்படையான மந்திரச் சொல்.

இந்தச் சொல்லைத் தெரிந்திருந்திருந்தால் தான் பிற மந்திரச் சொற்கள் உங்களுக்கு அர்த்தம் கொடுப்பவையாக இருக்கும்...

விவசாயம் காப்போம்...


பற்பசையில் விஷம்...


பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது.

ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.

ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும் போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது.

பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது.

இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும்.

ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தேநீர், கோழி சூப், எலும்பு உணவு,  பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...

உண்மையான மக்கள் புரட்சி எப்படி நிகழும்...


மனிதன் மனம்...


மனிதனை தவிர எந்த உயிரினங்களும் நடிப்பது கிடையாது...

உன்மையாக இருங்கள்..
அன்பாக இருங்கள்..
மகிழ்ந்து இருங்கள்..

மிக பெரிய நடிகன் மனிதர்களின் மனது...

கவுசல்யாவின் இரண்டாவது கணவர் சக்தி மீது பாலியல் புகார், அதிர்ச்சி தகவல்கள்...


கவுசல்யாவின் இரண்டாவது கணவர் சக்தி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார் அவரின் தோழர் ஜெ.ஜீவானந்தம்...

தமிழ் பிராமி...


ஆதி தமிழ் நாட்டில் எழுத்து வடிவங்களை எழுதுவதற்கு பயன் படுத்தப் பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சி தான் பல்வ வட்டேழுத்து என்றும் கூறுவார்கள்..

முன்பு இந்த வரிவடிவங்கள் சேர நாட்டில் தமிழ் எழுத்துக்கள் எழுதுவதற்கும் இன்றைய கேரள நாட்டில் பழைய மலையாளமும் இன்றைய நவின மலையாளமும் இந்த வரிவடிவங்களில் தான் இருந்துள்ளது...

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுது போக்கில் மூழ்கி, மற்ற நாட்களிலும் நாடகங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் என ஊடகங்களால் மூழ்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறாய்...


நீ, எல்லாவற்றையும் கடந்து வெளியே வந்து பார் உன்னை சுற்றி இங்கு குழி தோண்டபட்டுக் கொண்டிருக்கிறது...

மனித மூளையும் அதன் செயல்திறனும்...


1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டு செல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்...

பணம்...


பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல...

வாழ்க்கையில் ஒரு சிறு பகுதி பணம்...

பணத்தின் பின்னால் ஓடி
வாழ்க்கையை இழக்காதே...

மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட இறக்கை உடைய உயிரினம்...


ஒரு சிறிய மனித போன்ற பறக்கக் கூடிய மர்மமான உயிரினம் மெக்சிகோவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை வழியாக கண்டு பிடிக்கப்பட்டது. உயிரினம்  80% தீ காயங்களுடன் இறந்துகிடந்ததாகவும் கூறுகிறார்கள் .

அந்த உயிரினத்தை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்திய போது, அது மனிதர்களைப் போலவே இருப்பதாக, உயிரினத்தின் டி.என்.ஏ  மூலக்கூறு நிபுணரான ரிக்கார்டோ ரேங்கல் கூறுகிறார். 98.5% சதவீதம் மனிதர்களைப் போலவே இருப்பதாகவும், X- கதிர்கள் உயிரினத்தின் அனைத்து பாகங்களிலும் ஊடுருவி, ஒரு முழு மனிதனை ஒத்த எலும்புக்கூடு அமைப்பு இருப்பதை உறுதிசெய்தது,

மேலும், எக்ஸ்ரேகள் அந்த உயிரினத்தின் கால்கள் ஒரு முறை உடைந்து சிகிச்சை பெற்றது என்பதைக் காட்டியது. எக்ஸ்ரேயில் பல குழப்பமான வெள்ளை புள்ளிகள் காணப்படுவதாகவும், எனினும், அவைகள் சமச்சீரற்றதாக இருப்பதாகவும் இது மேலும் குழப்பத்தை உண்டாகுவதாக கூறுகிறார்.

விஞ்ஞானம் தற்போது அறிந்த எந்தவொரு விலங்குக்கும் எந்த ஒற்றுமையையும் தாங்கிக் கொள்ளாத இந்த விந்தையான உயிரினம் என்ன என்றும்?

அது ஒரு தேவதையா? வேற்றுகிரக உயிரா? அல்லது வெளிப்படுத்துதல் 9-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி அது "வெட்டுக்கிளியாக" இருக்கலாமா?

வெட்டுக்கிளிகளின் வடிவம் போருக்கு தயாரான குதிரைகளைப் போலிருந்தது. தங்களுடைய தலைகளில் பொன்னாலான கிரீடத்தைப்போல் இருந்தது, அவர்களுடைய முகங்கள் மனுஷரின் முகங்களைப்போல இருந்தது.

ஸ்திரீகளின் முடியைப்போல முடிகள் இருந்தது, அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போல இருந்தது. அவை இரும்பின் மார்புகளைப்போல் மார்பகங்களைக் கொண்டிருந்தன, அவற்றின் இறகுகள் ஒலிக்கு ஓடுகிற பல குதிரைகளுடன் இருந்த இரதங்களின் ஒலி போல் இருந்தது. 

அவர்கள் தேள்களிலும் வால்களிலும் வால்களிலும் வாள்கள் இருந்தது. அவர்களது அதிகாரம் ஐந்து மாதங்களுக்கு ஆண்களை காயப்படுத்துவதாக இருந்தது.         

அவர்கள் எபிரெயு பாபிலோன் என்னும் அபேகோன் என்னும் பெயருடைய மேகஸ்தம்பத்தை அவர்கள்மேல் ராஜாவாக வைத்திருந்தார்கள்; கிரேக்க நாட்டிலே அவருடைய பெயர் அபோகான்.

 --வெளிப்படுத்துதல் 9-ம் அதிகாரம்.

இந்த மர்மமான உயிரினம்,
வெளிப்படுத்துதல் 9-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள "வெட்டுக்கிளிகள்" என்ற மர்மமான சிருஷ்டிக்கு சில ஒற்றுமைகள் இருப்பதாக அநேகர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்:

இது மிகவும் ஒத்துப்போகிறது. ஒருவேளை, அது மற்றொரு சாம்ராஜ்யத்திலிருந்து வந்திருக்க வேண்டும். இல்லை, நாம் சோதனையைத் தொடர வேண்டும், மேலும் சிலவற்றை சோதிக்க வேண்டும்.

மற்ற ஆராய்ச்சியாளர்களும் இதை சோதிக்க முடியும் என்று நம்புகிறேன். மீண்டும் மீண்டும் முடிகிறது.
ஒரு நாள், அதற்கு ஒரு நிரூபிக்கக்கூடிய விஞ்ஞான ரீதியான நியாயத்தை கண்டுபிடித்துவிடலாம், மேலும் நம் சோதனை முடிந்தவரை முற்றிலும் கடுமையானதாக இருப்பதை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். என்று டாக்டர். ரிக்கார்டோ ரேங்கல் கூறுகிறார்...

சாதி வெறியன் பா. ரஞ்சித்தின் சாதி ஒழிப்பு...


மூலிகைகளும், தீரும் நோய்களும்...


1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.

2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.

3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.

4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.

5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.

6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.

8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.

9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.

10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.

11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.

12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.

13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.

14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.

15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.

16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்.

17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு.

18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.

19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.

20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.

21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.

22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.

23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்.

24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).

25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.

26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.

27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.

28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.

29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்.

30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.

31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.

32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்.

33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்...