ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நிலைகளில் பாதிப்புகளை உணர்ந்த தூத்துக்குடி மக்கள் அதனை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை கொண்டு உள்ள நிலையில் அதனை திறப்பதற்காக/ ஆரம்பிப்பதற்காக அந்நிறுவனத்தோடு இணைந்து போராட்ட மக்களையும், தூத்துக்குடி மக்களையும் ஒன்றிணையாதிருக்க பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருகிறது.
பொய்வழக்கு, மிரட்டல்கள், கையூட்டல்கள், பொய் பரப்புரை, அடக்குமுறை, அரசுத்துறை அச்சுறுத்தல் என பல வித செயல்பாடுகள் மூலம் மக்களை அடக்கிவிடலாம் என கணக்கிட்டு வருகிறது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம். அடங்க மறுப்பதே தூத்துக்குடி மக்களின் அடையாளம் என்பதை காட்ட புரட்சிகவி பாரதியின் உணர்வுகளின் ஒரு வரி துளி கவிதை போதும்.
காயங்கள் ஆறினாலும் தழும்புகள் மாறாதிருக்கும் இத்தருணத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் எனில் அன்றைய மே மாத புரட்சி போல் அல்லாது பலநூறு மடங்காக மீண்டும் ஜனவரி புரட்சியாக மக்கள் கூட்டம் வெகுண்டெழும் என்பதில் மாற்றில்லை.
பல வழி காவலிட்டு ஸ்டெர்லைட்டை இயக்க நினைத்தாலும், பல ஆயிரம் பேரிட்டு கண்காணிக்க நினைத்தாலும் இறுதியொருவன் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியை விட்டு விரட்டப்படும் என்பதில் ஐயமில்லை.
தூத்துக்குடி மக்கள் அறியாதிருப்பர் ஆனால் அறிவார்ந்து இருப்பர் என்பதற்கு பல வரலாறு உண்டு எம் தூத்துக்குடி மண்ணில்...
இவையெல்லாம் வெறும் எழுத்துக்கள் அல்ல எதிராளிகளை வீழ்த்தப்போகும் கணையாணிகள் என்பதை உணரும் நிலை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் எட்டாதிருப்பதே வேதனை.
மீண்டும் தயாராவோம்.
ஒன்றுப்பட்டு தூத்துக்குடி மண்ணை காக்க....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.