13/03/2019

எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன..?


எறும்புகள் ஒருவிதமான வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன.

சமூகமாகக்கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசளைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன.

சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பத்ல்லை. வாசனையை இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உடவுகின்றன.

சாரண எறும்புகள் உணவு இருக்கும் இடத்தை தேடிக் கண்டிபிடித்தவுடன் கூட்டுக்குத் திரும்புகின்றன. திரும்பும்போது இவை சும்மா திரும்பாது. வழி முழுவதும் வேதிப்பொருளைக் கசியவிட்டுக்கொண்டுதான் வரும்.

இந்த வேதிப்பொருளின் பெயர் பெரோமோன் எறும்புகளின் வயிற்ரின் பெரோமோன் சுறக்கிறது. இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டுகிறது. எறும்புகள் வாசனையையும், சுவையையும் தங்களின் ஒரே உறுப்பால்தான் அறிந்துகொள்கின்றன.

வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் ஆகியவையும் தங்கள் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. சில இனத்தைச் சேர்ந்த எறும்புகள் அடையாளங்களை நினைவு வைத்துக்கொண்டுதான் வழி கண்டுபிடிக்கின்றன.

அவ்வகையான எறும்புகள் சுற்றுப் பகுதியில் ஓடியலைந்து தேடித்தான் உணவைக் கண்டுபிடிக்கும். இவளவு சிறிய எறும்பு எவளவு செய்கிறது பார்த்திர்களா.

படைபினங்களில் சிறந்த படைப்பு மனித படைப்பு தான் அப்போது நாம் செய்யவேண்டிய நல்ல விசயங்கள் நிறைய இருக்கிறது.

மனிதகுலம் உணவைச் செமிப்பதிலை, நிலத்தடி நீரைச் சேமிப்பதில்லை, கழிவுகளை உரியமுறையில் அகற்றுவதில்லை என்று நீண்ட பட்டியலை  கூறலாம், நாம் எவற்றைக் கூறினாலும் எந்த ஒரு மனித இனமும் "தனிமனித ஒழுக்கத்தை"ப் பேணாதவரை உலகில் எந்தவொரு உதாரணத்தைச் சொல்லி மாற்றங்களை ஏற்படுத்த முடியாது...

உதய சூரியன் சின்னம் வேண்டாம்... திமுக வுக்கு விசிக திருமா கொடுத்த ஷாக்...


https://youtu.be/YsKFZ30Em6k

Subscribe The Channel For More News...

தமிழனை அழிக்க தோன்றியதே திராவிடம்...


இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்.

இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று 'திராவிடரிடம்' செல்வது வடிகட்டிய முட்டாள்தனம்.

ஏனெனில் தமிழனை வீழ்த்தி, அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் நாயக்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்...

இதெல்லாம் சரியா விசாரிக்க மாட்டாங்க; ஆனா, மத்த கட்டிங் விஷயத்துல சிறப்பா செயல்படும் நம்ம தமிழக போலீஸ்...


அதிருது திருவண்ணாமலை...


பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தூக்கில் போட கோரி திருவண்ணாமலையில் மாணவ, மாணவிகள் 1000 பேர் ஆர்ப்பாட்டம்...

பாஜக - காங்கிரஸ் இரண்டும் ஒன்றே...


கடலில் மூழ்கிய கண்டம் - ஒரு வரலாற்று ஆய்வு -1...


கடலினுள் கண்டங்கள் மூழ்கி உள்ளனவா… மக்கள் வாழ்ந்து இருந்த மாபெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளையிட்டுக் கொண்டு சென்று விட்டதா? என்றக் கேள்விக்கு ஆம் என்கின்றனர் கிரேக்க ஞானிகளான பிளாடோவும் (Plato) ஓமரும் (Homer) , நம் இளங்கோவடிகளும்.

ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

ஆனால் இவர்களின் கூற்று அந்தச் செய்தியினை கூறுவதோடு மட்டும் நின்று விடுகின்றது. அந்த கண்டம் எங்கே இருந்தது, அதில் இருந்த மக்கள் யார் என்ற செய்திகள் அவர்களின் கூற்றுகளில் தெளிவாக இல்லை. எனவே இவர்களின் கூற்றுகள் வெறும் கதைகளாக மாறிப் போகின்றன.

மேற்குலக அறிவியலாளர்களும், இவர்களின் கூற்றினை அடிப்படையாக கொண்டே ஒரு அழிந்தக் கண்டதினை உலகம் முழுவதிலும் தேடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் முடிவு கிட்டியப் பாடில்லை.

அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒவ்வொரு இடத்தினைக் குறிப்பதாகவே அமைந்து வருகின்றன.

ஒரு சமயம் அட்டுலாண்டிசு அமெரிக்காவிற்கும் ஐரோபியாவிற்கும் இடையில் உள்ளது என்கின்றனர்.

மறு சமயம் அது சப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருப்பதாக சொல்லுகின்றனர்.

மற்றொரு சமயம் ‘பெர்முடா முக்கோணம்’ இருக்கும் இடத்தில் தான் இந்தக் கண்டம் இருந்து இருக்கலாம் என்கின்றனர்.

இத்தகைய முரண்பாடான தகவல்கள் மூலம் அட்டுலாண்டிசு என்னும் கண்டம் தனியே இருந்ததா இல்லை வேறேனும் ஒரு மூழ்கிய கண்டத்தினைப் பற்றிய தகவல்கள் அட்டுலாண்டிசு என்னும் பெயரின் மூலம் கதையாக வெளியாகி உள்ளதா என்று எண்ணும் எண்ணம் வருகின்றது.

அப்படி வேறோரு கண்டத்தினைப் பற்றி ஐரோப்பிய அறிவியலாளர்கள் இன்னும் அவர்களின் தேடலை ஆரம்பிக்கவில்லை. பிரச்சனை இல்லை நாம் ஆரம்பிப்போம்.

தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒருத் தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது. கடலில் மூழ்கிய இந்தக் கண்டத்தினைப் பற்றி கதைகளாகவோ, இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ நாம் நிச்சயம் அறிந்து இருப்போம். அட்டுலாண்டிசு என்றக் கண்டத்தினைப் போல் விவரங்கள் தெளிவாக இல்லாத நிலை போல் அல்லாது குமரிகண்டதினைப் பற்றிய விவரங்கள் தெளிவாக கிடைகின்றன. தமிழ் சங்க இலக்கிய பாடல்களிலும், சிலப்பதிகாரத்திலும் குமரிக்கண்டதினைப் பற்றியக் குறிப்புகள் தெளிவாக இருக்கின்றன.

இந்த இடத்தில் இந்த நிலையில் தான் குமரிக் கண்டம் இருந்தது என்று அந்த நூல்கள் உறுதிப்படக் கூறுகின்றன. நாம் முன்னரே கண்டது போல் நம்முடைய நூல்கள் எந்த இடத்தில் குமரிக்கண்டம் இருந்தது என்றுக் கூறுகின்றனவோ அதே இடத்தில் தான் உயிரினம் தோன்றி இருக்க வேண்டும் என்று அறிவியலும் கருதுகின்றது.

மேலும் தமிழர்களின் சில பழக்க வழக்கங்களும் சமகாலத்தில் நடந்த சம்பவங்களும் குமரிக்கண்டம் என்ற ஒன்று இந்த மண்ணில் இருந்தது என்றும் கூற்றுக்கு ஆதாரங்களாக இருந்துக் கொண்டு இருக்கின்றன. குமரிக் கண்டதினையும் அதன் வழி மனிதனின் வரலாற்றினையும் பார்க்கும் முன் நாம் அந்த விடயங்களைப் பார்த்து விடுவது நல்லது.

௧) குமரிக் கண்டத்தினைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுவது என்ன..

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள….

மேலே உள்ள இந்தக் கூற்றின் படி பல மலைகளுடன் குமரிக்கண்டமும் கடலினுள் சென்றது என்ற செய்தி நமக்கு தெரிகின்றது.

௨) ஆடு மேய்ச்சான் பாறை…

தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று வழங்குகின்றனர். காரணம் என்னவெனில் ஒருக் காலம் அந்தப் பாறை இருந்த இடம் தரையாக இருந்தது அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்த்து இருக்கின்றனர்.

ஆனால் காலத்தில் கடல் அந்த இடத்தினைக் கொள்ளைக் கொள்ளவே மக்கள் அவ்விடம் விட்டு நகர்ந்து வந்து விட்டனர். ஆனால் ஆடு மேய்த்த பாறை என்ற பெயர் மட்டும் அங்கேயே தங்கி விட்டது.

இதன் மூலம் தமிழர்கள் வாழ்ந்து இருந்த இடம் இன்று கடலுக்கு அடியினில் மூழ்கி உள்ளது என்று நாம் அறிய முடிகின்றது.

௩) காவேரிப்பூம்பட்டினம்…

பூம்புகார் என்றுப் பெயர் பெற்ற இந்த மாபெரும் நகரமும் கடலினுள் மூழ்கி விட்டது. காலத்தில் பூம்புகார் நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினை விட முந்தியது என்பது அறிஞர்களின் கருத்து.

௪) தனுசுக்கோடி…

இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுசுக்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது.

எனவே கடலில் நம் நகரங்கள் மறைந்து உள்ளன என்னும் செய்திகள் பொய்யல்ல என்பது புலனாகிறது.
இன்னும் பல சங்க இலக்கியங்கள் மூலமாகவும்,

தெற்கு திசையில் உள்ள தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வாயிலாகவும், ஒரு பெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளைக் கொண்டு போய் உள்ளது என்னும் செய்தியினை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் அந்த நிலப்பரப்பினில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம் என்றால் நிச்சயம் புலனாகும். ஆனால் இந்திய அரசோ அத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாது இருக்கின்றது. அத்தகைய ஆராய்ச்சிகளை மற்றவர்கள் மேற்கொள்ளவும் ஆதரிக்காது இருக்கின்றது” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏன் இந்தியா ஆராய்ச்சியினை மேற்கொள்ளாது இருக்கின்றது என்ற கேள்வியோடு சேர்த்து நாம் இது வரை பார்த்து இருந்த கேள்விகளுக்கும் விடையினைக் காண முயல்வோம்….

ஆனால் அதற்கு எல்லாம் அடிப்படையாக நாம் தெளிவாக குமரிக்கண்டதினைப் பற்றி அறிய வேண்டும்...

குமரிக்கண்டம் உண்மையா அல்லது கற்பனையா என்பதனை அடுத்தப் பதிவில் காண்போம்...

திமுக ஸ்டாலினை அவர் குரு ஈ.வே.ரா வே அயோக்கியனு திட்டி இருக்கார்...


குமரிக்கண்டம் …உண்மையா?… கற்பனையா?- ஒரு வரலாற்று ஆய்வு...


இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே.

ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது.

இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம்.

குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்…

௧) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.

௨) ஆசுதிரேலிய பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).

௩) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

௪) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

௫) தனுசுக்கோடி மற்றும் காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கிய வரலாறு.

௬) ஆடு மேய்ச்சான் பாறை என்று பெயர் கொண்ட பாறை கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி கடலின் நடுவில் இருக்கும் செய்தி.

ஆனால் குமரிக்கண்டம் என்பது கற்பனையே என்றுக் கூறுவோர் கூறும் காரணங்கள்…

௧) இதை அறிவியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

௨) இக் கதைகள் சங்க இலக்கிய செய்திகளில் மட்டுமே இருப்பதினால் இவை வரலாறாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இவை புராணங்களே.

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…

அறிவியல் குமரிக்கண்டதினை மறுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை… ஏனெனில் அறிவியல் அங்கே இன்னும் சென்று ஆராய்ந்தே பார்க்க வில்லை. ஆராய்ந்து தெளிவு படுத்தாத விடயங்களை அறிவியல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அறிவியலின் உதவி தற்போது குமரிக்கண்டதினைப் பற்றிய விடயத்தில் நமக்கு கிட்டவில்லை.

எனவே இப்பொழுது நாம் மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்றுப் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப்படி,

மனிதன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்.முதல் மனிதன் - தமிழன்.முதல் மொழி - தமிழ். குமரிக்கண்டதினில் தோன்றிய மனிதனே வடக்கே பயணித்து சென்று அங்கே சில நாகரீகங்களை நிறுவி பின் உலகம் முழுவதும் பரவுகின்றான். இதற்கு சான்றாக அவர்கள் பல விடயங்களை தருகின்றார்கள்.

உதாரணமாக “பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.”

இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்.

இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

“அப்படி எவ்வாறு கூறுகின்றீர்கள்… வடக்கில் இருந்தும் அவன் தெற்கே வந்து பெயரிட்டு இருக்கலாம் அல்லவா?” என்று கூறுகின்றீர்களா.

சரி தான். அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் மொழியறிஞர்கள் ஏன் அப்பெயர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்றன என்று கூறுகின்றனர் என்பதனை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது, ஒரு நாகரீத்தில் இருந்து மற்றொரு நாகரீகத்திற்கு பெயர்கள் கொண்டு செல்லப் பட்டு இருக்கின்றன என்றால் முதலில் தோன்றிய நாகரீகம் காலத்தில் இரண்டாவது நாகரீகத்திற்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும். எனவே வடக்கில் இருந்து இந்த பெயர்கள் தெற்கே வந்தன என்றால் வடக்கில் உள்ள நாகரீகம் காலத்தில் தெற்கு நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரீகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலேயோ அல்லது மேசபோடமியாவிலேயோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரீகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. இந்நிலையில் தான் நாம் ஒரு ஆங்கிலேய ஆய்வாளரைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவர் பெயர் கிரகாம் கான்காக் (Graham Hancock). உலகமே சுமேரியாவையும் மேசொபோடமியாவையும் சிந்து சமவெளியையும் ஆராய்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் இந்தியாவில் தெற்கினை நோக்கி தன் ஆராய்ச்சியினை தொடங்குகின்றார்.

அவரின் ஆராய்ச்சி பிரம்மிப்பூட்டும் பல தகவல்களை வெளி இடுகின்றது. உதாரணமாக சிந்து சமவெளிக்கும்  3000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் ஒன்று குசராத் மாநிலத்தில் கடலோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாகரீகதினைத் தொடர்ந்து அவர் மீண்டும் தெற்கே நோக்கி நகர்கின்றார்.

அங்கே குசராத் நாகரீகத்தினை விட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு மாபெரும் நாகரீகத்தினை அவர் கண்டுப்பிடிக்கின்றார்….
 தமிழகத்தினில்!!! அந்த இடம் பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினம். அவரின் கூற்றுப் படி இந்த நாகரீகம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்த நாகரீகம் கடற் கோள்களால் அழிந்தது என்றும் (400 அடி உயர் அலைகளால் என்றும் குறிப்பிடுகின்றார்) கூறுகின்றார். மேலும் அந்த இடங்களை நன்றாக ஆராய்ந்தோம் என்றால் பல உண்மைகள் வெளி வரும் என்றும் ‘அந்த இடத்தினை ஏன் ஆராயாது இது வரை விட்டு வைத்து இருக்கின்றார்கள் என்பது தமக்கு வியப்பளிப்பதாகவும்’ அவர் கூறுகின்றார். இவருடைய இந்தக் கருத்தினை இங்கிலாந்தில் உள்ள துர்கம் பல்கலைக்கழகமும் (Durham university) ஏற்று உள்ளது.

ஆனால் அந்த ஆராய்ச்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு மேற்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் பூம்புகார் பற்றிய இந்தத் தகவல்கள் மக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.

இவ்வாராய்ச்சிகள் மொழியறிஞர்கள் சொல்லும் கூற்றினை, அதாவது நாகரீகம் தெற்கில் தோன்றி பின்னர் வடக்கே நோக்கி சென்று இருக்கின்றது என்பதனை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றன. தொடர்ந்து இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டால் உண்மைகள் வெளிப்படும். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளை தானும் மேற்கொள்ளாது மற்றவர்கள் மேற்கொண்டாலும் அதற்கு தடங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா?உண்மை வெளிப்படுமா?

சிந்திப்போம்…

சில நண்பர்கள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்களை பகிருமாறு கேட்டுக்கொண்டார்கள். இதோ சில ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்கள்…

மா.சோ.விக்டர் - இவர் மொழியியல் அறிஞர். உலகின் தாய் மொழி தமிழ் தான் என்றும் மற்ற மொழிகள் அனைத்தும் தமிழின் திரிபுகளே என்றும் அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகின்றார். பல புத்தகங்களை இவர் மொழி தொடர்பாகவும் குமரிக்கண்டம் மற்றும் தமிழர்கள் தொடர்பாகவும் எழுதி உள்ளார். உதா… ‘குமரிக் கண்டம்’ ‘எபிரேயத்தின் தாய் மொழி தமிழே’ ‘அ’….

தேவநேயப் பாவாணர் - இவரும் ஒரு மொழி அறிஞர். தமிழ் மொழியில் இருந்தே வடமொழி போன்ற அனைத்து மொழிகளும் தோன்றின என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை நிரூபித்தவர். இவரும் பல புத்தகங்களை மொழி தொடர்பாகவும் தமிழர் வரலாறு தொடர்பாகவும் எழுதியுள்ளார். உதா… தமிழர் வரலாறு.

மாத்தளை சோமு - இவர் ஒரு ஆய்வாளர். உலகம் முழுவதும் சென்று அங்கு வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் இடங்கள் போன்றவற்றை ஆராய்பவர். இவருடைய நூல்கள் பல அவற்றுள் நான் எடுத்துக் கொண்ட நூல் ‘வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்’.

மறைமலைஅடிகள் - இவரும் ஒரு தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் இயக்கத்தினை தோற்றுவித்து தமிழை வளர்த்தவர். தமிழ் தொடர்பாகவும், ஆரியர் திராவிடர் போன்ற கூறுகளைப் பற்றியும் பல நூல்களை எழுதி உள்ளார். உதா… தமிழர் மதம்.

தெய்வநாயகம் - இவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர். தமிழிலேயே அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ மற்றும் ஆன்மீகக் கருத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அனைத்து மதங்களும் அடக்குமுறைகளில் இருந்தும் பகைமையில் இருந்தும் விடுபட்டு மக்களின் நலனுக்காக மாறுவதற்குரிய வழி தமிழில் இருக்கின்றது என்னும் கருத்தினை உடையவர். சைவ வைணவ சமயங்கள், கிருத்துவ சமயம் மற்றும் இசுலாமிய சமயங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இவரும் பல நூல்களை எழுதி உள்ளார்.

சரி... குமரிக்கண்டதினைப் பற்றி பார்த்தாயிற்று.. மேலும் விவிலியம், அசோகர், சமணம்...புத்தம், பக்தி இயக்கம் போன்றியவற்றை பற்றியும் பார்த்து இருக்கின்றோம். ஆனால் அந்த அனைத்துச் செய்திகளும் கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே இருக்கின்றன... உலகின் வரலாறினை அறிய அந்த முத்துக்கள் கோர்க்கப்பட வேண்டும்.

கோர்ப்போம்... உலகின் வரலாறு காத்து இருக்கின்றது...

பொள்ளாச்சி பாலியல் பயங்கர குற்றவாளிகளை காக்கும் காவல்துறை - பியூஸ் மானுஷ்....


https://youtu.be/73fz_v4yJfc

Subscribe The Channel For More News...

தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்...


பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை...

நான் ஒரு தமிழன்.
எனது தாய்மொழி தமிழ்.
தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை.
அதே போல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.

தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.
அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.

ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.

தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும்,
வந்து போகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.

கடந்த தேர்தலின் போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்து போகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.
தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.
தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள். எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்.

இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.
அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.
 
இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல் கொடுத்த தூய தமிழன் தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.

அதேபோல "இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டியது தானே?" என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள் தான். ..

எதற்காக அக்காலத்தில் தமிழர்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை பேணிப் பாதுகாத்து வாழ்ந்தனர்?


கூட்டு குடும்பம் சொர்க்கம். ஏன்?

மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
 
தங்கைக்காக எதையும் விட்டுகொடுப்பது அண்ணனின் பாசம்.

அண்ணனின் தவறுக்கு தாயியிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.

வாழ்க்கையை சொர்க்கமாக வாழக் கூடுக்குடும்பமே சிறந்தது....

அதனால் தான் தமிழர்கள் கூட்டு குடும்ப வாழ்க்கையை பெரிதும் போற்றிப் பேணிக் காத்தனர்...

டேய் அடிமை அரசாங்கமே உங்ககிட்ட அதிகாரம் இருக்குனுதாண்டா இவ்ளோ பண்றீங்க...


உழைக்கிற மக்களோடு அதிகாரத்தையும், எங்களோடு கோபத்தையும் ஒருநாள் நீங்க பார்க்கதாண்டா போறீங்க...

கொடூரமான மணம் வீசும் வினோத பூ...


பொதுவாக பூக்கள் என்றால் மணமானது என்று தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இங்கு காணப்படும் பூவின் மணம் இறந்த உயிரினத்தின் உடல் அழுகும் பொழுது ஏற்படும் துர்நாற்றத்தைப் போன்று காணப்படும்.

Corpse flower, Amorphophallus titanium என்றழைக்கப்படும் இப்பூவின் விசேட அம்சம் என்னவென்றால் வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே பூக்கின்றது என்பது தான்.

மேலும் பூ இனங்களில் உள்ள பெரிய இன பூக்களில் இதுவும் ஒன்றாகும். யேர்மனியின் Kiel என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு மூன்று முறை பூக்கும் பூ என்பதால் இதன் மணத்தைக் கூட பொருட்படுத்த பார்வையாளர்கள் பெருமளவில் கண்டு மகிழ்கின்றனர்...

Gold winner எண்ணை உண்மைகள்...


குப்பைமேனி செடியின் மருத்துவ குணங்கள்...


தோல் நோய் நீக்கும் குப்பைமேனி! மாற்று அடுக்கில் பல அளவுகளில் இலைகளைக் கொண்டது குப்பைமேனி. இலைக் காம்பின் பின் இடுக்குகளில் அமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி இனமாகும்.

செடியின் முழுப் பகுதியுமே மருத்துவக் குணம் உடையது. இலை வாந்தி உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலம் இளக்கப் பயன்படும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.

வேறு பெயர்கள்...

அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. ஆங்கிலத்தில்: Acalypha indica; linn; Euphor biaceae.

மருத்துவ குணங்கள்...

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி நசியமிட தலைவலி நீங்கும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.

மற்ற மருத்துவ முறையினால் கைவிடப்பட்ட பவுத்திரத்துக்கு மட்டும் ஒரு வாரம் 2 வேளை 50 மில்லியளவு அவுரியிலை குடிநீரைக் (ஒரு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.) குடித்துவந்து அதன் பிறகு மேற்கண்ட மருந்தைத் தொடர்ந்து 90 நாள்கள் சாப்பிட்டுவர பவுத்திர நோய் குணமாகும்.

குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். (இது பேதியை ஏற்படுத்தி பூச்சி, புழுக்கள் வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதி அளவு கொடுக்கலாம்)

குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும்.

வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.

குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும்.

இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.

குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)

குப்பைமேனித் தைலத்தை 50 மில்லியளவு எடுத்து மணப்பாகில் கலந்து கொடுக்க, உடலிலுள்ள கிருமிகள் வெளியேறும். இத்தைலத்தை வாத நோய்களுக்கு வெளிப்புறமாகத் தடவி வர குணமாகும்...

நாகலோகத்திற்கு செல்லும் பாதாள வழி...


 https://youtu.be/oQL_AdM_rjU

Subscribe The Channel For More News...

கற்பூரவள்ளி மருத்துவ குணங்கள்...


கற்பூரவள்ளிக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?

கற்பூரவள்ளி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விசக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகை யான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப் படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்பூரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு கரண்டி அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும்.

இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். சுவாச காசநோய்க்கு (Asthma)இது நல்ல மருந்து.

குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது சுவாச காச நோய், காசநோயாக கூட மாற நேரிடும்.

இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, இலகுவாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும். கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விசப் பூச்சிகளிலிருந்து காக்கின்றது...

அதிமுக அரசின் சாதனை...


மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள்...


மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும்  மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு புதுடில்லி  “மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது: மஞ்சளில், மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள, ”கர்குமின்’ (விதையில் உள்ள இரசாயன பொருள்) எனப்படும் ஒரு கலவை.

அதில் இரசாயன சத்து உள்ளது. உணவில் சேர்த்து சாப்பிடும் போது, மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது; புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது; இரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது; கிருமிகளின் தாக்குதலை முறியடிக்கிறது.

மஞ்சளில் உள்ள “கர்குமின்’ இரசாயனம், உடலில் உள்ள கலங்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இதயத்தில் இரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரதம் உற்பத்தியாவது தான் காரணம். அதை இந்த இரசாயனம் தடுக்கிறது.

"மரபணு"க்களில் உள்ள நிறவுருக்களில் கோளாறு இருந்தால் தான், இதய மடிப்பு கதவுகள் (Valve) பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை,மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது.

எங்களின் முதல் கட்ட சோதனையில், எலிகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். ஆனால், மஞ்சளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது. எந்த அளவு வரை பயன்படுத்தலாம் என்பதை இப்போது ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.கனடா நிபுணர்களுக்கு முன்பே, மைசூரில் உள்ள, மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள், மஞ்சள் மகிமை பற்றி ஆராய்ந்து, இதே உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், “உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க மஞ்சள் பயன்படுகிறது; இதை நாங்கள் ஏற்கனவே சோதனை செய்து விட்டோம்.

மஞ்சள் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள அடர்த்தி குறைந்த உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து விட்டது தெரிய வந்தது’ என்று தெரிவித்தனர்...

கார்ப்பரேட் கைகூலி அரசுகள்...


பதினென் பருவமும், மனோநிலையும்...


பொதுவாக அலைபாயும் வயது என்பது பதினென் பருவத்தில் ஆண்,பெண் இருபாலருக்கும் இருக்கும். இந்தக் காலக் கட்டம் இரு பாலருக்குமே மிகவும் முக்கியமான காலம் ஆகும்.

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி முதல் காதல், இனக்கவர்ச்சி, அதிகமான விசயங்களைக் கற்றுக் கொள்தல் அல்லது கற்றுக்கொள்ளத் துடித்தல், தேடல் ஆர்வம் போன்றவை 11 வயது தொடங்கி 22 வயதுக்குள் வரும்.

பெண்கள் எனில் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வும் 11 வயதுக்குப் பிறகே நிகழக்கூடியது. மனோவலிமை குறித்த விசயத்தைப் பொருத்தவரை பெண்கள், ஆண்களைக் காட்டிலும் முதிர்ச்சியடைந்தவராக இருக்கிறார்கள்.

20 வயதுடைய ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடுகையில், ஆண்களை விடவும் பெண்கள் தெளிவான- உறுதியான மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனதளவில் முதிர்ச்சி பெறும் வயது 11 – 20 என்பதால், பெற்றோர் இந்த வயதுடைய குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பராமரித்தல் அவசியம்.

"தனிமையில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்களா என்பதை அறியவும். கூடிய வரை தனிமையில் இருப்பதை அனுமதிக்க வேண்டாம்".

பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்கள் உற்சாகமாக – மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அறியவும். என்னதான் நெருங்கிய நண்பர்கள் – குடும்ப நண்பர்கள் என்றாலும், இந்த வயதுடைய பெண் குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பில் விட்டு வெளியில் செல்லாதீர்கள்.

முடிந்தால் உடன் அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவர்களை தனியாகவே செயல்பட அனுமதியுங்கள். இப்படிச் செய்வதால், அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து, படிப்பு மற்றும் வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கி விடுவார்கள்.

எனவே மனோநிலை முதிர்ச்சி என்பது பதினென் பருவத்தில் மிகமிக குறிப்பிடத்தக்கது என்பதை அறிந்து செயலாற்றுங்கள்...

திமுக ஸ்டாலின் கலாட்டா...


கீழாநெல்லி செடியின் மருத்துவ குணங்கள்....


இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர்.

பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். இதன் பயன்கள்...

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறைகள்...

1. கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

2. கீழ்காய் நெல்லி சமூலம் - சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

3. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

4. கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

5. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

6. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

7. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

8. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

9. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

10. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம்,

நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.

11.கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ளமாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

12.கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப்பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும்.

13.கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.

14.இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுகபார்வை கோளாறு தீரும்.

15.கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்...

பாஜக மோடி எனும் கார்ப்ரேட் கைகூலி...


ஒன்பது வகை வெளிப்பாடுகள்...



நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.

அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது. உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது” என்று சர்ச்சில் சொன்னார்.

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை...

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.

5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி. உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.

7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.

ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்...

இன்னைக்கு கருவில இருக்குற குழந்தையை கொல்ற அளவுக்கு சமுதாயம் போய்க்கிட்டு இருக்கு...


என்னை கவர்ந்த உண்மையான எதார்த்த வசனம்...

அதிசயமான பாடும் பறவை....


லைரே பறவை (Lyrebirds) பல் குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம். லைரே பறவை (Lyrebirds) மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் விகடம் (mimicry) செய்யும் ஆற்றல் படைத்தது.

இந்த பறவையினம் உலகிலேயே அவுசுத்தி(ஸ்)ரெலியாவின் கிழக்கு பகுதியில் தான் காணப்படுகின்றது (படத்தில் சிவப்பு மை பகுதி).

இந்த பறவைகள் மைலின் தோகையினையும் குயிலின் உடலினை ஒத்தும் காணப்படுகின்றன. இந்த பறவை வெப்ப பிரதேசங்களிலுள்ள ஈரவலைய அடர் காடுகளில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பறவையின் முக்கிய உணவாக உக்கிய மரப்பாகங்களில் காணப்படும் புழுக்களையும் , மற்றும் பூச்சிகளையும் உண்கின்றது.

மேலும் இந்த பல் குரல் பாடும் சக்தி ஆண் லைரே பறவைக்கு மட்டுமே உள்ளதுடன் இது தனது பெண் இனத்தினை கவருவதற்காக இந்த பல் குரல் விநோதம் செய்வது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த பறவையின் பெயர் ஒரு பழைமையான இசைக்கருவி லைரே (Lyre) காரணமாக சூட்டப்பட்டது இன்னுமொரு சிறப்பம்சமாகும்...

Tamil History / தமிழர் வரலாறு - பகுதி 2 / ஐயா ஒரிசா பாலு...


https://youtu.be/EoPG9RwGW4o

Subscribe The Channel For More News...

நம் வாழ்வியலுக்கே தேவையில்லாத ஒவ்வாத சில விடையங்களை திணிப்பதே வணிகம் இதே தான் வேலைக்காரன் படத்திலும் சொல்லியிருப்பார்கள்...


இனி அரசாங்கம் "தரகு நிறுவனம்" என்றே அழைக்கப்படும்.. நமது தரகு நிறுவனம் வணிகத்திற்காகனது...

50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?


கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம்..

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.

உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன.

எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது.

தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.

கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான்.

பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

நீங்கள் 9, 18, 27 எண்ணில் பிறந்தவரா... தவறாமல் பாருங்க...


https://youtu.be/xs20OgVvIvM

Subscribe The Channel For more News...

ஏழு கட்ட தேர்தலின் டைம் டேபிள் பார்த்தால் ஏகப்பட்ட சந்தேகங்கள் கிளம்புகின்றன...


1 ) உ.பி, மே.வங்கம், பிகார் மூன்றுக்கும் ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது. 80 தொகுதிகள் உ.பி என்பதால் (அதுவே benefit of doubt தான்) ஏற்றுக் கொள்ளலாம். மே. வங்கம், பீகாருக்கு எதற்கு ஏழு அடுக்குகள்? பீகார் (40), மே. வங்கம் (42) அதிக பட்சம் 2 அல்லது 3 அடுக்குகளுக்கு மேல் இங்கே என்ன தேவை இருக்கிறது?

2 ) தென் மாநிலங்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு தடவையாக தேர்தல் நடக்கிறது - கர்நாடகா தவிர. கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்கு வங்கி இருப்பதால் மட்டுமே இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறதா? அப்போது தான் மோடி பிரச்சாரத்துக்கு வந்து விட்டு போக முடியுமா? 39 தொகுதிகள் இருக்கக் கூடிய தமிழகம்,  25 தொகுதிகள் இருக்கக் கூடிய சீமாந்திரா என ஒரே கட்டத்தில் தேர்தல் நடக்கும் போது 28 தொகுதிகள் இருக்கும் கர்நாடகாவிற்கு மட்டும் எதற்கு இரண்டு கட்ட தேர்தல்?

3 ) காங்கிரஸ் சமீபத்தில் வென்ற மூன்று மாநிலங்களிலும் (ம.பி, ராஜஸ்தான், சத்திஸ்கர்) பல கட்ட தேர்தல்கள் நடக்கின்றன.
சத்தீஸ்கர் - 3 கட்டம்
மத்திய பிரதேசம் - 4 கட்டம்
ராஜஸ்தான் - 2 கட்டம்

இத்தனைக்கும் உ.பி, பீகார் அளவிற்கு கூட இங்கெல்லாம் தொகுதிகள் கிடையாது. என்ன லாஜிக் இது?

4 ) ஜம்மு & கஷ்மீரில் ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆனால் இடைத்தேர்தலை தமிழ்நாட்டில் அறிவிக்கும் தேர்தல் ஆணையம், ஜம்மு & கஷ்மீரின் மாநிலத் தேர்தலை நிராகரிக்கிறது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் என்ன சொல்ல வருகிறது? ஜம்மு & கஷ்மீர் மக்கள் எம்.பிக்களை தேர்ந்தெடுப்பார்கள், ஆனால் எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்க தகுதியற்றவர்களா?

5 ) 48 தொகுதிகள் இருக்கும் மகாராஷ்ட்ராவுக்கும், 21 தொகுதிகள் இருக்கும் ஒடிசாவுக்கும் ஒரே மாதிரியான 4 கட்ட தேர்தல்கள். மலைவாழ் பிரதேசங்களில் பல்வேறு கட்ட தேர்தல்கள் என்பதில் நியாயமிருக்கிறது (அசாம் 3 / ஜார்கண்ட் 4) மகாராஷ்ட்ராவில் நான்கு கட்ட தேர்தல் நடத்த வேண்டிய அவசியமென்ன??

எதிர்க்கட்சிகளும், பாஜக எதிரணிகளும் மிக கவனமாக அணுக வேண்டிய தேர்தல் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நேரம் குறைவு. வேலைகள் அதிகம். பாசிட்டிவாய் அணுகி, பாசிசத்தை வீழ்த்துவோம்...

தமிழ் தேர்வு எழுத மாட்டோம் என்று ஆம்பூர் இஸ்லாமிய பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குத் தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்...


http://www.gukkuu.com/tamil-urdu-islamic-students-struggle-vellore-pe-maniarasan-interview/

நமக்கு இயற்கையாகவே இங்கு அனைத்தும் கிடைக்கிறது..


ஆனால் நாம் செயற்கையாக கொடுப்பதே சிறந்தது என அதை வாங்கி கொள்கிறோம்..

இயற்கை அற்புதமான ஒன்று.. அதை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்...

செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி..


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு"

உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள்.

எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

சரி...!!! ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்துக் கொண்டேன்.

ஆம்!!! தற்போது உலகத்தில் அதிகமாக பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், மண்டாரின் (Mandarin) பிரன்ச்சு (French) ரசிய மொழி, செர்மன், சுபாநிசு (spanish) ஆகிய மொழிகளிலும் இந்த மொழிகளுக்கு எல்லாம் மூலமான இலத்தின் (Latin) மற்றும் கிரேக்க மொழிகளிலும் கூட அகரம் ('A') என்னும் எழுத்தே முதல் எழுத்தாக உள்ளது.

உலகின் மற்றப் பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கே அகரம் முதல் எழுத்தாக இருக்கும் பொழுது, இந்திய நாட்டு மொழிகளுக்கு மட்டும் அது வேறு படவா போகின்றது. இந்திய நாட்டு மொழிகள் அனைத்திற்கும் அகரமே முதல் எழுத்தாக திகழ்கின்றது.

எனவே 'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது சரி தான். இப்பொழுது அந்த அகரத்தை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பிக்கின்றது என்பதினைப் பார்ப்போம்.

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாத உறவுகள் தமிழில் அகரத்தை முதன்மையாக வைத்தே அழைக்கப் பெறுகின்றன.

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அத்தை, அம்மாயி, அம்மான் முதலிய பல உறவுகள் அகரத்தால் தொடங்கப்பெறும் வார்தைகளினாலையே அழைக்கப் பெறுகின்றன.

மேலும், ஒரு மனிதன் இந்த உலகினில் வாழும் பொழுது அவன் கடைப்பிடிக்க கூடிய தன்மைகள் மற்றும் அவனைச் சூழ்ந்து இருக்கும் முக்கியமான பொருட்கள் ஆகியவனவும் அகரத்தை முதன்மையாகக் கொண்டே அழைக்கப்பட்டன.

அண்டம், அன்பு, அடக்கம், அமைதி, அன்னம், அறிவு, அழகு, அரசு போன்ற வார்த்தைகளைக் கண்டாலே நாம் அதை உணர்ந்துக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள வேறு எந்த மொழியாவது தன்னுடைய முதல் எழுத்தை இவ்வளவு சிறப்பித்து இருக்குமா என்பது சந்தேகமே..

உலகில் மனிதன் தோன்றுவதற்கு அம்மா அப்பா எவ்வாறு முக்கியமோ, அதேப் போல் அகரமும் தமிழுக்கு முக்கியம்.

எனவே தான் குழந்தைகளுக்கு 'அ' என்றால் 'அம்மா' என்றே நமது தமிழ் மொழி கற்பிக்கின்றது.

இவ்வாறு வாழ்க்கைக்கு இன்றியமையாத விசயங்களை ஒரு மொழியின் முதல் எழுத்தின் மூலமே பெயரிட்டு வழங்குவதும் ஒரு வகை அறிவியலே ஆகும்...

மார்வாடி கையில் தமிழ்நாடு... விழித்துக்கொள் தமிழினமே...


https://youtu.be/MHUckE8X0Tg

Subscribe The Channel For More News...

ஆத்மா...



இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆத்மா என்பது உண்டு, அப்படிப்பட்ட ஆத்மா பிறக்கும் இடம், காலம் அனைத்தும் பூர்வ புன்னியத்தை அடிப்படையாக கொண்டது.

கடவுள் பாதி மிருகம் பாதி என்பவன் தான் மனிதன், இதில் கடவுள் என்பது ஆத்மா, மிருகம் என்பது மனிதமனம்.

நாம் ஒரு காரியத்தை செய்யும் போது கடவுள் ஆகிய ஆத்மா நமக்கு சரியான திசையை காண்பிக்கும்.

ஆனால் மனிதமனம் ஆன மிருகம் நம்மை தவறான வழியில் நம்மை இழுத்துச் செல்லும்.

அப்படி இழுத்துச் செல்லும் மனம் என்ற மிருகத்தை நம் ஆத்ம பலத்தால் கட்டுப்படுத்தி சரியான திசையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனம் என்ற மிருகத்தை எப்படி ஆத்மாவை வைத்து கட்டுப்படுத்த முடியும்? ஆத்ம பலத்தை எப்படி பெறுவது?

ஆத்ம பலம் பெற குருவின் துணை அல்லது அருள் வேண்டும்.

ஞானம் இரண்டு வகைப்படும் ஒன்று தெய்வீக ஞானம் மற்றொன்று பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானம் என்று கூறலாம்.

தெய்வீக ஞானம் நமது கர்ம வினையின் அடிப்படையில் கிடைக்கும் அதாவது நமது பூர்வ புண்ணிய கா்மா சரியாக இருந்தால் தெய்வீக ஞானம் இயற்கையிலேயே கிடைத்து விடும். அல்லது நாம் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவையைக் கொண்டு உண்டாகும்.

தெய்வீக ஞானத்தின் அடுத்த நிலை தான் ஆத்மா ஞானம் அல்லது பிரம்ம ஞானம், ஆத்ம ஞானம் அல்லது பிரம்ம ஞானம் பெற கட்டாயம் குருவின் அருள் அல்லது துணை தேவை. குருவருள் இன்றி நாம் பிரம்ம ஞானத்தின் வாசலில் தான் நிற்க வேண்டும்.

குருவருள் எப்படி கிடைக்கும்?

நாம் குருவை தேட வேண்டாம், எப்படி நாம் கடவுளை (பரபிரம்மத்தை) தேடுகின்றோமோ அதே போல கடவுளும் தன்னுடைய குழந்தையை மீட்டு தன்னிடம் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது.

அப்படி அழைத்துச் செல்ல பிரம்மம் நேராக வருவதில்லை தனக்கு பதிலாக குருவை அனுப்பி வைகின்றார்கள். நமது செயலும், நமது என்னமும், நமது பூர்வ புண்ணிய கா்மாவும் சரியாக இருந்தால் குரு நம்மை தேடி வருகின்றனர்.

அப்படி வந்த அல்லது கிடைத்த குருவை சிறிதும் ஐயம் இன்றி ஆத்மார்த்தமாக நாம் ஏற்றுக் கொண்டு அவர் வழி நடந்தால் பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானத்தின் கதவுகள் திறக்க படும்.

அப்படி திறக்கப்பட்ட பின்பு நம் ஆத்மவானது பரமாத்மாவை (நமது உண்மையான பெற்றோர்களை) சென்று அடைகிறது.

சரியான குரு இவர் தானா என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும், என்ற கேள்வி எழுவது சகஜம் தான், நீங்கள் அதைப் பற்றிய கவலை கொள்ள வேண்டியது இல்லை பிரம்மம் (நமது உண்மையான பெற்றோர்கள்) பார்த்து கொள்ளும்.

நாம் வணங்கும் கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து குருவின் வழி சென்றால் நிச்சயம் இறவா நிலை மீண்டும் பிறவா நிலையை அடைவோம்.

தக்க சமயத்தில் உங்களுக்கு கொடுக்க வேண்டியதை உங்கள் குருவானவர் தருவார் அதை விட்டு விட்டு நம் உடலை காயகல்பம் ஆக்க வேண்டும், அப்படி செய்தால் தான் பிரம்மத்தை அடைய முடியும் என்று நினைக்க வேண்டாம்.

எது எப்போது எப்படி எங்கே நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்...

திமுக ஸ்டாலினின் டூபாக்கூர் வேலைகள்...


பெருமை எனும் போதை → வணிகத்தின் ஆயுதம்...


நாம் அனைவரும் ஆளுபவர்களால் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தவன் தன்னை அடிமை என்று ஒத்துக்கொள்கிறான், அவன் மட்டுமே தனக்கு என்ன தேவை என்பதை தேடத் தொடங்குகிறான்…

எப்படி நாம் இயக்கப்படுகிறோம் என்று புரியாத அளவிற்கு உங்களுக்கு அதுவும் வாழ்க்கைக்கு தேவையில்லாத விசயங்களை பெருமை பேசி போதை ஏற்றுகிறார்கள், இந்த போதைகளுக்கு அடிமையாகமால் பயணிப்பவர்களுக்கு ஏளனமே மிஞ்சுகிறது..

சரி ஒவ்வொரு போதைகளை (பெருமைகளை) பார்ககலாம்..

சாதி: எல்லோரும் அறிந்ததே இந்த சாதிப்பெருமை, ஆண்ட பரம்பரை, நாங்கள்தான் இங்கு அனைத்தையும் உருவாக்கினோம் என்று பெருமை பேசினால் ஏனைய சாதி மக்களிடம் வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும்.. சாதி என்பது அடையாளம் அது உனது குடும்ப வரலாற்றை அறிவதற்கு உள்ள ஊடகம்… இப்படி அடித்துக் கொள்வதனால் 3 ஆம் மனிதன் உள்ளே நுழைகிறான்!

மதம்: நன்றாக பாருங்கள் இங்கே ஏறத்தாழ பாதி விடயங்கள் இந்த மதங்களைபற்றியே நடக்கின்றன… இந்த மதங்கள் மக்களை நல்வழிபடுத்த ஆரம்பித்திருந்தால் (உருவாக்கப்பட்டது தான், அதுவும் ஒவ்வொரு மத்ததிற்கு முலகாரணமாக இருந்தவர்களால் உருவாக்கப்படவில்லை) ஏன் இவ்வளவு விவாதங்கள்… விவாதப்பொருளாக இருக்கும் ஒரு விடயம் எப்படி சரியாக இருக்க முடியும்.. இந்த மாதிரி விடயங்களை பேசாத மனிதர்களே இல்லை… உன் மதம் சரியாக இருந்திருந்தால் அதை உணர்ந்திருந்தால் விவாதம் தேவையில்லை என்று கடந்து போகமுடியும்… மொத்ததில் இந்த மதங்கள் நம்மை நல்வழிபடுத்தல்ல மக்கள் அடித்துக்கொள்வதற்காக அரைகுறையாக வடிவமைக்கப்பட்ட கோட்பாடுகள்… இந்த மதங்களை உருவாக்கியவனை தேடுவதே கிடையாது!

இந்தியம்: இந்தியம் என்ற மாயை, இங்கே இந்தியா/பாரதம் என்ற அமைப்பே ஆங்கிலேயர்கள் எளிதாக ஆளுவதற்கு கட்டமைக்கப்பற்ற ஒன்று.. அது சுதந்திரத்துக்கு பிறகு வெளியிலிருந்து ஆளவேண்டும் என்பதே நோக்கம்… இந்திய ஒன்றியத்தில் நிறைய இனவழி(மொழிவழி) இருக்கின்றன அவற்றின் உரிமைகளை பரிக்காமல் கூட்டாட்சி தத்துவம் என்று ஒன்று உள்ளது அதை பெயரளவில் வைத்துவிட்டு ஒற்றை ஆட்சி அமைக்க முயல்கிறார்கள்.. இதற்காகவே ஒவ்வொரு இனத்தினை அவரவர் நிலத்திலிருந்து பிரிக்கிறார்கள் அப்போதுதான் உன் நிலத்திற்காக போராட மாட்டாய்.. இப்போது நிலத்தை விட்டு வேறு இனமக்களின் நிலத்தில் வாழும்போது உனக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது அதுதான் இந்தியம், இங்குதான் உன் முதலில் உன் அடையாளத்தை அழிக்கிறார்கள்… இதில் நிலத்தை விட்டு வராமலே இருக்கிறவனையும் பெருமை பேசி ஆட்கொள்ளுகிறார்கள்.. பெரும்பாலும் பூர்விகத்தை (இன பண்பாட்டை) இழந்தவர்களின் ஆயுதம் தேசப்பற்று..!! இதைமாதிரி மண்ணிற்கு சம்பந்தமில்லாத கோட்பாடுகள் பெருமைகளாக பேசப்படுகின்றன!

இராணுவம்: இராணுவம் என்ற கட்டமைப்பு மக்களை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது எனறு சொல்வார்கள் ஆனால் அதற்கானது அல்ல என்பது வரலாற்றில் என்னென்ன காரணத்திற்காக போர்கள் நடந்தன என்பதை அறிந்தவர்களுக்கு புரியும். இந்த இராணுவ அமைப்பு வணிக எல்லைகளை நிர்ணயிப்பது தேவையெனில் வணிக எல்லை விரிவாக்கம் .. அப்படி மக்களுக்கானது என்றால் அதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் இது எந்த நாட்டிலும் கடைபிடிப்பதில்லை அது எந்த வகையான நாடாக இருந்தாலும்… இதில் மிகப்பெரிய வணிக சந்தை… இந்திய பட்ஜெட்டில் 16% இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது ஆனால் 700+ மீனவர்கள் இலங்கை இராணுவம் கொன்றிருக்கிறது அதை நிப்பாட்ட முடியவில்லை.. ஆனால் பெருமை பேசுவதற்கென்றே (தினிப்பதற்கு) மட்டும் வேலைகள் நடக்கின்றன… நமது செலவில் 6 இல் 1 பங்கு ஆனால் நமக்கு பயனில்லை என்ற விவாதங்கூட வைக்கமுடியாத அளவிற்கு நம்மை தேச விரோதிகளாக காமிக்கும் பெருமை பேசுபவர்கள்..

தமிழன்: இத்த பெருமை கடந்த நூற்றாண்டுகாலமாக கையாளப்படுகிறது இந்த மண்ணில், பெருமை பேச வைத்து ஆள்பவன் தமிழனே இல்லை, சரி இவ்வளவு பெருமை பேசுகிறார்களே என்று எப்படி தமிழன் வாழ்வியலை தேடினால் இந்த பெருமைகளாக பேசப்படுபவைகள் அனைத்துமே ஒரு காலத்தில் இங்கு இருந்த மக்களை மோசமாக வைத்திருந்ததின் சுவடுகள், அதையே இப்போது பெருமையாக பேசி அடிமைபடுத்துகிறார்கள்.. அவ்வளவுதான் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் செய்வது..

தமிழ்மொழி: இந்த மொழியை வைத்து எவ்வளவு விடயங்கள் அரங்கேறியிருக்கன, அரங்கேறி கொண்டு இருக்கின்றன.. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 150 வருடமாகத்தான் எழுத்தறிவு அனைத்து மக்களையும் சென்றடைந்தது.. அப்ப நமக்கு கிடைத்த அத்தனை வரலாற்று ஆவணங்களும் ஒரு குறிப்பிட்ட குழுக்கள் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லது மேலடுக்கில் உள்ள மக்கள் மட்டும்.. இதை வைத்துக்கொண்டு அனைத்தை மக்களின் வாழ்வியலை விளக்கிவிட முடியுமா, முடியாது என்பதே நிதர்சனமான உண்மை… இதில் வேறு சான்ஸ்கிரிட்டிலிருந்து வந்தது தமிழ் என்றும் இல்லை தமிழிலிருந்து வந்தது சான்ஸ்கிரிட்டிலிருந்து வந்தது தமிழ் என்றும் இல்லை தமிழிலிருந்து வந்தது சான்ஸ்கிரிட் என்ற விவாதங்கள்… அதைவிட பெரிய விடயம் என்னவெனில் பாலி மொழியிலிருந்துதான் தமிழும் மற்றும் சான்ஸ்கிரிட் வந்தது என்ற பெருமைகள்… இந்த பெருமைகளால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் ஆளுபவனுக்கு சாதகமே.. இரண்டே இரண்டு விடயங்கள் வரலாறு வென்றவனால் எழுதப்பட்டது, மேலும் அதிகமாக மதம் சம்பந்தப்பட்ட நூல்களே கடத்திவரப்பட்டிருக்கின்றன...இந்த பெருமைகளுக்கும் சாதாரண குடிகளுக்கும் எந்த சம்பந்தமில்லை இருந்தாலும் பெருமை பேச வைக்கப்பபடுகிறார்கள்

சினிமா: கலை பார்தது ரசிக்கலாம் மற்றும் கருத்துகளை பரப்புவதற்காகவே இதுகாறும் பயன்படுத்தப்பட்டது இப்போது அதுவும் அளவுக்குமீறி அதில் வரும் நாயகர்களே நம்மை காப்பாற்றுவார்கள் என்ற பிரம்மையை மக்களிடம் விதைத்து விவாதம் செய்ய வைக்கிறார்கள்… இதுவும் தமிழ்நாட்டு அரசியலில் 50 வருடத்திற்குமேல் ஆட்கொண்டுள்ளது.. இப்ப மக்களின் போராட்டங்களை பற்றி அறியாதவர்கள்கூட சினிமா புகழ் இருந்தால் போதும் கட்சி ஆரம்பித்துவிடலாம் என்கிற நம்பிக்கை.. தமிழ்நாட்டில் இப்போது அதிகமாக ஊடகங்களில் விவாதிப்படுவதே இந்த சினிமாவும் சினிமா சம்பந்தபட்ட அரசியல்களும்.. இந்த சினிமாவினால் எவ்வளவு நாட்டு புற கலைகள் அழிந்தன அழிந்து கொண்டு இலுக்கின்றன.. இந்த நாட்டுபுற கலைகள் நமது பண்பாட்டை எப்படி கடத்தி வந்தன…

விளையாட்டு (கிரிக்கெட்): இங்கு விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்று மனதில் பதியவைத்துவிட்டார்கள்.. மற்ற விளையாட்டுகளை இந்த விளையாட்டு எப்படி சிதைத்தது இது ஒரு மோசமான விளையாட்டு ஆனால் சிறப்பான விளையாட்டுகளை இந்த மண்ணிலிருந்து அகற்றுகிறது.. கிரிக்கெட் பற்றி தெரியவில்லையெனில் அது அவமானம்.. தனியார் நிறுவனமாக இயங்கும் கிரிக்கெட்டை இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக பார்ககவைக்கப்பட்டு, அதைபற்றி பேசுவதே பெரிய பெருமையாக நினைப்பது.. கவனியுங்கள் இளைஞர்கள், அலுவலக இடைவேளை நேரங்களில் பொதுவான விவாதமாக கிரிக்கெட் இருக்கிறது..

அரசியல்: இது அனைத்தையும் இயக்க முடியுமென்ற போதை , அரசியலின் அடிப்படை த்தத்துவத்திற்கு எதிராக பயணிக்கிறது.. மக்கள் தனக்கு என்ன தேவை என்பதை உணர்த்த வேண்டும், அரசியல்வாதிகள் அவற்றை உள்வாங்கி செயல்படவேண்டும் இங்கு அப்படியாக நடக்கிறது அரசியல்வாதி விடுக்கும் அறிக்கைகளை வைத்து மக்கள் விவாதிக்கிறார்கள் நேர் எதிர் மறையாக செயல்படுகிறார்கள்.. தலைவனை விமர்சனம் செய்தவனிடம் சண்டைக்கு போவது அதில் உண்மையோ அல்லது போய்யோ அதைபற்றி கவலை இல்லை.. அரசியல் சாக்கடை என்று போகாதவனும் இருக்கிறான் தலைவனுக்காக தற்கொலை செய்கிறவனும் இருக்கிறான்.. ஆனால் மக்களுக்கான அரசியல் இல்லை.. இதில் அரசியல் கோட்பாடு, கொள்கை, தலைவர்கள் என்ற பெருமைகளே பேசப்படுகிறது நடைமுறைபடுத்துவது கிடையாது!!

வளர்ச்சி: இந்த பெருமை போதை தான் இப்போது ஆளும் வர்ககத்தின் மந்திரம்… வளர்ச்சி என்பது வளத்தை கொள்ளையடிப்பதின் வணிகச்சொல் அவ்வளவே.. பெருந்திரள் உற்பத்தி (mass production) என்பது இயற்கைக்கு எதிரானது அது மருதநில நெல் உற்பத்தியானாலும், மகிழுந்து (கார்) உற்பத்தியானாலும் சரி வளச்சுரண்டல்களே!! வளர்ச்சி என்ற பெயரில் அனைத்தும் வணிகமயமாக்குவதில் மொத்த சுதந்திரமும் பறி போகிறது என்பதை அறியாமலே பெருமை பேசுவது..

கல்வி: இது அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்த ஒன்று! தன் குழந்தை ஆங்கிலம் பேசினால் பெருமையென்றும், அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை இந்த கல்வியினால் கிடைத்த பெருமிதம்.. படிப்பு என்கிற பெயரில் மதிப்பெண் களின் பெருமைகள் வேறு (மனப்பாடத்தினை பொருமையாம நினைப்பது)... இதில் வெளிநாடுகளில் முக்கிய நிறுவனங்களில் வேலை செய்பவரில் இவ்வளவு பேர் இங்கு படித்தவர்கள் என்பது… இங்குள்ள வளத்தை பயன்படுத்தி படித்துவிட்டு இந்த மண்ணிற்கு உழைக்கமாட்டேன் வெளிநாட்டு அடிமை வாழ்ககைக்கு புகழாரம் சூட்டுவது..

இவையில்லாமல் இன்னும் நிறைய பெருமை போதைகள் இருக்கலாம் அவற்றை நான் இன்னும் அறியவில்லை என்று கொள்ளலாம்.

இந்தப் போதைகளில் மதம், சாதி மற்றும் இராணுவ போதைகளைத்தவிர்தது அனைத்திலும் பெருமை பேசி இருந்தவனில் நானும் ஒருவன்தான், கடைசியில் நாம் எங்கு வீழ்ந்தோம் என்று தேடினால் இந்தப்பெருமைகளினால் பலன் அடைபவர்கள் வணிகத்தைச் சார்நதவர்களே..

ஆனால் இந்த வணிகத்தை எதிர்பபதில் ஒரு சிலரே அவர்களிலும் அதற்கு எதிராக வணிகத்தையே எடுப்பது மிகவும் கேள்விக்குரியானது..

இவ்வளவு காலம் இவ்வளவு விசயங்களை வைத்து நமதை திசைதிருப்பியவன் நம்மை மாதிரி எத்தனை வணிகத்தை கையில் எடுப்பவர்களை பார்ததிருப்பான்…

இதில் நாம் சார்ந்து இருக்க வேண்டியது இயற்கையையே ஆனால் அப்படி இயற்கையைபற்றி பேசினால் ஏளனம் பேசி அவர்களை அழிப்பது இல்லையெனில் வாழும் காலத்தை விட்டு விட்டு அவர் மறைந்தபிறகு அவரது பெருமைகளை பேசுவது.. சிறந்த எடுத்துக்காட்டு நம்மாழ்வார்..

நிகழ்கால அரசியல் தலைவர் நல்லக்கண்ணு ஆனால் அவரை இதுவரை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.. இன்னும் நிறையபேர் கத்திக்கொண்டும். போராடிக் கொண்டும் தான் இருக்கிறார்கள் அவர்களை நமக்கு தெரிவதேயில்லை..

இதில் அடுத்த அறிவார்ந்த கேள்வியெனில் வணிகமில்லாமல் வாழ முடியுமா என்று.

கொஞ்சம் 100 ஆண்டுகள் பின்னோக்கி போய் பாருங்கள், கிராமங்களில் எப்படி தற்சார்பாக வாழ்ந்தார்கள் என்று ஏன் இன்னமும் அதே மாதிரி கிராமங்கள் நிறைய இருக்கின்றன… சுரண்டல்கள் அப்போதும் இருந்தன ஆனாலும் தற்சார்பு நிலை இருந்தது.

நாகரீகம் வணிக அடிமைத்தனம் என்றும்
தற்சார்பை சுதந்திரம் என்றும் அறியாதவரை இங்கு எதுவும் நிகழப்போவதில்லை..

இவ்வளவு பெருமை(வணிக அடிமை) ஆகிப்போனவனை மீட்டெடுக்கலாம் என்றால் இதில் ஏதாவது ஒன்றில் மிகவும் ஊறிப்போயிருக்கிறான்..

இந்த பெருமைகளை ஒவ்வொன்றாக உடைப்பவர்களை எவ்வாறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதும் அதுவும் மக்களிடமிருந்தே.

காலம் என்னையும் முழு அடிமையாக்குமா அல்லது இந்த தற்சார்பு சிந்தனையுள்ளவர்களால் ஒன்று சேர்ந்து மீட்கப்படுமா?

தமிழன் எப்படி சிறுபான்மை ஆணோம் - ஐயா பெ. மணியரசன்...


https://youtu.be/JCsi8rATMPM

Subscribe The Channel For More News...

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் : ஆராய்ச்சியாளர்கள் தகவல்...


சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தெரியவந்துள்ளதாக பிரபல சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் கூறிள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து சுபாஷ் சந்திர போஸ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 25,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ் எழுத்துக்கள், சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்த எழுத்துகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களே என்றார்.

தமிழகத்தில் பாறை ஓவியங்கள், குறியீடுகள், எழுத்துகள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பலர் உள்ளதாகக் கூறிய சுபாஷ் சந்திர போஸ், அவர்களை கொண்ட குழு அமைத்து கீழடி பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/10/3/2018/tamil-used-communicate-indus-valley-says-researchers

விழித்துக்கொள் எம் தமிழினமே...


தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டது - அம்பேத்கர்...


நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம்...

திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்பதாகும்.

தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்த போது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது.

பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது.

திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.

நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.

மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம்.

நூல்: தீண்டப்படாதவர்கள் யார்? - டாக்டர். அம்பேத்கர். தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94...

மாமா தோழில் செய்யும் எச்ச பத்திரிகை...


எட்கார் கேஸ்...


எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி.

அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.

"ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்..."

பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார். விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.

அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் "ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.

உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.

நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.

இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?

பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் "யோக சூத்திரங்களி"ல் எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?