லைரே பறவை (Lyrebirds) பல் குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம். லைரே பறவை (Lyrebirds) மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் விகடம் (mimicry) செய்யும் ஆற்றல் படைத்தது.
இந்த பறவையினம் உலகிலேயே அவுசுத்தி(ஸ்)ரெலியாவின் கிழக்கு பகுதியில் தான் காணப்படுகின்றது (படத்தில் சிவப்பு மை பகுதி).
இந்த பறவைகள் மைலின் தோகையினையும் குயிலின் உடலினை ஒத்தும் காணப்படுகின்றன. இந்த பறவை வெப்ப பிரதேசங்களிலுள்ள ஈரவலைய அடர் காடுகளில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பறவையின் முக்கிய உணவாக உக்கிய மரப்பாகங்களில் காணப்படும் புழுக்களையும் , மற்றும் பூச்சிகளையும் உண்கின்றது.
மேலும் இந்த பல் குரல் பாடும் சக்தி ஆண் லைரே பறவைக்கு மட்டுமே உள்ளதுடன் இது தனது பெண் இனத்தினை கவருவதற்காக இந்த பல் குரல் விநோதம் செய்வது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த பறவையின் பெயர் ஒரு பழைமையான இசைக்கருவி லைரே (Lyre) காரணமாக சூட்டப்பட்டது இன்னுமொரு சிறப்பம்சமாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.